Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 15 2

” ஹேய் எருமை வேகமா ஓட்டுனா உனக்கு வலிப்பு ஏதும் வந்துடுமா என்ன?? சீக்கிரம் போய்த்தொலை.. அங்க அடிவாங்குனவங்க எழுந்து வந்துருவாங்க நீ இப்படி ஊர்வலம் போய்கிட்டு இருந்தா” என்று முன்னிருக்கையில் அமர்ந்து அங்கு வண்டி ஓட்டிக்கொண்டிருந்த அஜயை வசைபாடிக் கொண்டிருந்தாள் கீதா.



Advertisement

” ரோட்டை போட சொன்னா ஆயா சுடுற வடை மாதிரி புல்லா ஓட்டையா போட்டு வச்சிருக்கீங்க.. இந்த ரோட்டுல இப்படித்தான் ஓட்ட முடியும்.. ஒழுங்கா வாயை மூடிட்டு வரதுன்னா வா.. இல்லை கதவை திறந்து உன்னை வெளிய தள்ளி விட்டுட்டு போய்ட்டே இருப்பேன்” என்று அவளுக்கு பதிலடி கொடுத்தவன் சாலையில் கவனமாய் இருந்தான்.

கோவிலில் இருந்து கிளம்பிய பின், தேனியில் உண்டான கலவரத்தை அறிந்து அதில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க கீதாவின் பேச்சை நம்பி இப்போது அவள் கூறிய மாற்றுப்பாதை ஒன்றின் வழியாக அவர்களின் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அந்தப்பாதை தார் சாலையாக இல்லாமல் மேடும் பள்ளமுமாய் இருக்க, அஜய் கவனமாய் வாகனத்தை மிதமான வேகத்தில் செலுத்தியதால் தான் அவனை போட்டு படுத்திக் கொண்டிருந்தாள் கீதா.

Advertisement

Advertisement

” கீதா உங்களுக்கு நிஜமாவே இந்த வழி தெரியும் தான?? ஏன்னா இது ரொம்ப நேரமா  போய்கிட்டே இருக்கு ஆனா ஒரு ஊரைக் கூட காணோம்” என்று அஸ்வத் சந்தேகத்துடன் கேட்க,

Advertisement

” என்னையே சந்தேகப்படுறீங்களா?? நான் இந்த தேனிகுள்ள போகாத இடமே இல்லை தெரியுமா? தேனி மேப்பில இல்லாத இடம் கூட எனக்கு அத்துப்படி..என்ன எலி என்னைப்பத்தி எதுவும் சொல்லலையா??” என்று கீதா தன்னைப்பற்றி பெருமையாக அளந்து விட,

“இங்க டவர் இல்லை நெட்ல மேப் போட்டு  உன் வண்டவாளத்தை கண்டுபிடிக்க மாட்டாங்க அப்படின்னு தையிரியத்துல தான கதை கட்டி விட்டுக்கிட்டு இருக்க அவதார் குட்டி.. மவளே எனக்கு தெரிஞ்சு இந்த பாதை காட்டுக்குள்ள கொண்டு போய் விட போகுது.. அப்போ உன்னை வச்சுக்கிறேன்” என்று கீதாவிடம் வம்பு செய்தான் அஜய்.

‘ என்ன கரெக்டா கண்டுபிடிச்சுட்டான் ‘ என்று கீதா மைண்ட் வாய்சில் பேச,

அஞ்சலியோ அஜய் சொன்னதில் பயந்து போய், ” என்னங்க சொல்றிங்க.. ஆல்ரெடி என் போன் சார்ஜ் இல்லாம ஸ்விட்ச் ஆஃப் ஆகி போய் இருக்கு.. அதுலயே அம்மா பயந்து போய் இருப்பாங்க.. ஒருவேளை இது நிஜமாவே தப்பான பாதையா இருந்தா என்ன பண்றது.. அவ்ளோதான் நான் செத்தேன்” என்று அழுதுவிடும் குரலில் கூற,

அவளை வித்தியாசமாக பார்த்த அஸ்வத், ” ஏம்மா அங்க அத்தனை பேரை போட்டு அடுத்த விஜயசாந்தி மாதிரி அந்த அடி அடிச்சிட்டு வந்து இப்போ பதினாறு வயதினிலே சப்பாணி மாதிரி ஆத்தா வையும் வீட்டுக்கு போகணும்னு பயந்துகிட்டு பேசுற.. உன் கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே” என்று அவன் கூற,

அதைக்கேட்டு சிரித்த கீதா, ” நம்ம எலிக்கு தைரியம் எல்லாம் வெளிய தான்.. வீட்டுக்குள்ள போனா பொட்டிப்பாம்பா அடங்கிருவா.. நாளைய கலெக்டர் தற்காப்பு கலையெல்லாம் கத்துக்கணும்னு எங்க பெரியப்பா அவளுக்கு சிலம்பம், கராத்தே, களரி, வாள்வீச்சு, குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல் இப்படின்னு இன்னும் நிறைய கத்துக் கொடுத்திருக்கிறாரு தெரியுமா…. அஞ்சலி வெளிய மட்டும் தான் புலி வீட்டுக்குள்ள எலி.. அப்படித்தானே எலி” என்று அஸ்வத்திற்கு பதில் சொல்லிக் கொண்டே தன் தமக்கையை வாரினாள்.

அதைக்கேட்டு அஸ்வத் வியப்பாய் புருவம் உயர்த்தி, ” அப்படியா?” என்பதைப் போல் தன்னவளைப் பார்க்க,

அவளோ அதில் நாணம் கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அப்போது அஜயோ கீதாவை பார்த்து, “அவங்க கலெக்டர் ஆக இதெல்லாம் அவங்க அப்பா கத்துக்குடுத்துருக்காரு ஓகே.. ஆனா நீ கண்டக்டரா கூட ஆக முடியாதே உனக்கு எதுக்கு என் மாமனார் இதெல்லாம் கத்துக் கொடுத்தாரு .. அவர் இந்த வேண்டாத வேலையெல்லாம் பண்ணாம இருந்திருந்தா நான் நிம்மதியா இருந்திருப்பேன்.. இப்போ பாரு பின்னாடி நமக்குள்ள சண்டை வந்தா என்னையும் எப்போ தூக்கி போட்டு மிதிப்பன்னு நான் பயந்துட்டே இருக்கணும்” என்று போலி வருத்தத்துடன் கூற,

கோபத்தில் புசு புசுவென மூச்சு விட்ட கீதா, ” டேய் டைனோசர் வாயா.. மரியாதையா வண்டி ஓட்டுற வேலையை மட்டும் பாரு.. தேவையில்லாம பேசி என்கிட்ட அடிவாங்கி சாகாத” என்று அஜயை எச்சரித்தாள்.

” அஜய் கீதாவோட லட்சியமே போலீஸ் ஆகணும்ன்றது தான்.. அதுக்காக தான் அவ எல்லாமே கத்துக்கிட்டா.. என்ன ஒன்னு படிப்பு தான் வரலை.. இருந்தாலும் யார்கிட்டயாச்சும் ரெக்கமெண்டேஷன் வாங்கி லஞ்சம் கொடுத்து கூட  போலீஸ் வேலையை வாங்கி கொடுங்கன்னு சித்தப்பா கூட ஒரே சண்டை.. அதான் சித்தப்பா இவ மேல ரொம்ப கோவமா இருக்காங்க.. சித்தப்பாக்கு எப்பயும் நேர்மையா இருக்கணும் அதுனால படிச்சு பாஸ் பண்ணி வேலைக்கு போக சொல்றாங்க..  ஆனா இவ என்ன தகிடுதத்தம் பண்ணியாச்சும் வேலையை வாங்கணும்னு இருக்கா.. அதான் ரெண்டு பேருக்கும் ஒத்தே வரலை..அதுக்காக தான் கல்யாணம் கூட வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கா” என்று தன் தங்கையின் கனவை அஜயிடம் பகிர்ந்தாள் அஞ்சலி.

அதைக்கேட்டு கடுப்பான கீதாவோ, ” இப்போ இதெல்லாம் அவன் கேட்டானா எலி?? எதுக்கு தேவையில்லாத வேலை பார்க்குற?? இவன் பெரிய இவன்னு இவன்கிட்ட போய் என்னைப்பத்தி எதுக்கு சொல்ற” என்று அவள் பொரிந்து தள்ள,

அஜயோ அவள் திட்டுக்களை பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் அஞ்சலி சொன்னதை மட்டும் மனதில் குறித்துக் கொண்டான்.

ஆனால் அஞ்சலி தான் ‘ எங்கே தவறாய் எடுத்துக் கொள்ளப்போகிறார்களோ ‘ என்கிற பயத்தில் சங்கடத்துடன் அஜயிடமும் அஸ்வத்திடமும் தன் தங்கைக்காக மன்னிப்பு வேண்டினாள்.

அஸ்வத்தோ அஜய் – கீதாவைப் பற்றி அறிந்ததால் அஞ்சலியிடம் அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுமாறு கூறியவன் பின் தொடர்ந்து கீதாவிடம், ” ஆமா கீதா கேட்கணும் அப்படின்னு நினைச்சேன்.. கோவில்லை உன்னை கொல்ல வந்தவங்க யாரு??” என்று ரொம்ப நேரமாய் தன் மண்டையை குடைந்து கொண்டிருந்த கேள்வியை கேட்க,

கீதாவோ சற்றும் அலட்டிக்கொள்ளாமல், ” யாருக்குத் தெரியும்” என்று தோள்களைக் குலுக்கினாள்.

” ஏதே யாருக்குத் தெரியுமா?? யாருனே தெரியாத அளவுக்கு அத்தனை பேர் உன்மேல கொலைவெறில இருக்காங்களா?? உன்னைக் கட்டிக்கிட்டா டெய்லி எவன் கொல்ல வருவான்னு பயந்துட்டே தான் வாழ்க்கையை ஓட்டணும் போலயே” என்று அஜய் கூற,

அவனை முறைத்த கீதா, ” இப்போ யாரு உன்னைக் கட்டிக்கிறேன்னு தவம் இருக்கா..வாயை மூடிட்டு வண்டி ஓட்டும் வேலையை மட்டும் பாரு” என்று அஜயை அடக்கியவள், அஸ்வத்திடம் திரும்பி, ” அப்பா நீதி நேர்மை நியாயம் அப்படின்னு பேசி பேசியே ஊர்ல உள்ள எல்லார் கூடவும் வம்பிழுத்து வச்சிருப்பாங்க மாம்ஸ் .. சோ அப்பாவை பழிவாங்க எவனாச்சும் இப்படி லூசுத்தனமா என்னைக் கொல்ல வருவாங்க.. இன்னைக்கு எந்த லூசு அனுப்பி வச்சதுன்னு தெரியலை.. இதெல்லாம் சகஜம் தான் ஃப்ரீயா விடுங்க” என்று சாதரணமாக கூறிவிட்டு அவள் வேடிக்கை பார்க்கத் தொடங்க,

ஆண்கள் இருவரும் தான் கீதா கூறியதைக் கேட்டு அவளின் இந்த தைரியத்தைக் கண்டு உள்ளுக்குள் அவளை மெச்சிக் கொண்டனர்.

பேசிக்கொண்டே வந்ததில் இவர்கள் ஒன்றரை மணி நேரமாக அந்த ஆளில்லாத சாலையில் தான் பயணித்துக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் போவதற்கு வழியில்லாமல் அஜய் சொன்னதைப் போல் ஒரு கானகத்திற்கு முன்பு போய் அந்த பாதை முடிந்தது.

அதைக்கண்டு மற்ற மூவரும் கீதாவை கொலைவெறியுடன் முறைக்க, அவளோ

 ” ஹிஹி முன்னாடி இங்க ஊரு தான் இருந்துச்சு..எந்த கேனைப்பயலோ இங்க இருந்த ஊரை மாத்திட்டு காட்டை இங்க நட்டுட்டு போய்ட்டான்” என்று சமாளிக்க,

பின் சீட்டில் அமர்ந்திருந்த அஞ்சலி கடுப்பாகி, அவள் முதுகிலே நான்கு அடியைப் போட்டாள்.

அப்போது “சரக்க்க்” என்ற ஒலியுடன் கார் அதன் கட்டுப்பாட்டை இழந்து ஓர் இடத்தில் குலுங்கி நின்றது.

அதில் அனைவரும் ஓர் நொடி பயந்து போய், பின் நிதானத்திற்கு வந்து என்னானாது என்று இறங்கி சென்று பார்க்க,

அங்கு அவர்களைப் பார்த்து விதி வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தது.

ஆம், பெரிய முள் ஒன்று கிழித்து வண்டியின் டையர் பஞ்சராகி இருந்தது.

உள்ளே மாற்றுவதற்கு ஸ்டெப்னி கூட இல்லாமல் போக, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நால்வரும் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டனர்.

– தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!