‘வேண்டாம்’ என்று கத்தினாலும் செல்வனின் அணைப்பில் அடங்கி இருந்தாள் செல்வி. சாம்பவியின் குரல் கேட்டதும் விலக்கிவிட நினைத்தான். இந்த நேரத்தில் விலக்கிவிட்டால் வேதனைகொள்வாள் என்றே கதவை சாற்றினான்.
செல்வன் அணைப்பிலிருந்து விலகும் எண்ணமில்லாமல் நின்றிருந்தாள். ஜெயப்ரதாவோடான நிச்சயம் செல்வியை இந்தளவிற்கு பாதிக்கும் என்று நினைக்கவில்லை பொற்செல்வன்.
Advertisement
செல்வி எந்தளவிற்கு தன்னை நேசிக்கிறாளோ அதே அளவிற்கு வெறுக்கவும் செய்திருக்கிறாள். தன்னால் வேதனையும் அடைந்திருக்கிறாள். தன் மீது இத்தனை வருத்தம் இருந்தபோதும் தன்னை ஏற்றுக்கொண்டிருக்கிறாள் என்பதே பெரிய விசயம்.
நான் இவள் மீது வைத்திருக்கும் காதலை விட இவள் தன் மீது வைத்திருக்கும் காதல் நிச்சயம் மகத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, பெருமையோடு செல்வி முதுகை தட்டிக்கொடுத்து தேற்றிக்கொண்டிருந்தான்.
அரைமணி நேரத்திற்கு மேலாகிட, “செல்வி, ஆன்ட்டி என்னவோனு நினைப்பாங்க” என தன்னிலிருந்து விலக்க முயற்சிக்க, “எனக்கு தூக்கம் வருது” என முணகியபடி பொற்செல்வன் மீதே உறங்கிப்போனாள்.
Advertisement
“ஹேய் செல்வி” என மெத்தையில் படுக்க வைத்து முகத்தை பார்க்க, உண்மையில் உறங்கியிருந்தாள். உறங்குகிறாள் என்று சாதாரணமாக நினைக்க தோன்றவில்லை.
Advertisement
தூக்கம் வருது என்று சொன்ன நொடியே எப்படி இப்படி ஆழ்ந்த உறக்கத்திற்கு போக முடியும்? என்ற யோசனையோடு அவளின் கன்னத்தை பிடித்து ஆட்ட, சிறு அசைவுமின்றி உறங்கிக்கொண்டிருந்தாள்.
பொற்செல்வன் வெளியே வந்ததும் சாம்பவியும் இளவரசனும் வந்தனர்.
“அப்படியிருந்தா பிரச்சனையில்ல, ஆனா செக் பண்ணனும்” என்றான் மீண்டும்.
பொற்செல்வன் சொன்னபோதும் அந்தளவிற்கு ஏதும் இருக்காதென்றுதான் இளவரசனிற்கு தோன்றியது. அதனால் அவனுக்கு பதட்டமில்லை. செல்வன் யோசிக்காமல் ஏதும் சொல்லமாட்டான் என்று சாம்பவிக்குத்தான் பயம் வந்தது.
இளவரசன் கார் சாவியை கொடுக்க, “இல்ல வேண்டாம்” என்று வெளியேறியவன், செல்வி எழுந்தால் தன்னை கேட்பாள் என்று வெளியே செல்லவில்லை. மாடிக்கு சென்றிருந்தான்.
செக்கியுரிட்டிக்கு அழைத்து பேசி முடித்து, கடை ஓனரிடமும் பேசினான். “ராஜஸ்தான்லதான் இருக்கேன், ஆனா வர டைம் இல்ல, இந்த வாரத்துக்குள்ள வேற ஆள் அனுப்பி வைக்கிறேன், அவங்ககிட்ட பணத்தை கொடுத்துடுங்க” என்றான்.
அடுத்து குடும்ப மருத்துவருக்கு அழைத்தான். அழைப்பை ஏற்காத மருத்துவர் ஒரு மணி நேரம் கழித்து அழைத்தார். செல்வியின் இன்றைய நடத்தையை மட்டும் சொன்னான்.
“ஒரு விசயத்தை வச்சு நார்மலா அப்நார்மலானு சொல்ல முடியாது. நேர்ல பார்த்தாதான் சொல்ல முடியும்” என்றார் மருத்துவர்.
“இன்னைக்கு அவளோட ஆட்டிட்டியூட் பார்த்ததால மட்டும் வந்த டௌட் இல்லைங்க டாக்டர்” என்று செல்வி தந்தையின் பின்புலம் சொல்லி, தற்போது பிரிந்திருப்பதையும் சொல்லி, “நான் என் அம்மா போல இருக்கமாட்டேனு என்கிட்ட சொல்றா. அதை சொல்லும்போது அவளோட பாவனையும், இப்போ தூங்கினதையும் நினைச்சாதான் பயமா இருக்கு” என்றான்.
“நேர்ல அழைச்சிட்டு வாங்க, செக் பண்ணிட்டு தேவைப்பட்டா ஸைக்யாட்ரிஸ்ட்கிட்ட கன்ஸல்ட் பண்ணலாம்” என்றார்.
செல்வியிடமிருந்து அழைப்பு வரவே, “ஓகே டாக்டர், நேர்ல அழைச்சிட்டு வரேன்” என்று இணைப்பை துண்டித்து, கீழே வந்தான்.
“பேசிட்டிருக்கும்போதே எப்படி தூக்கம் வரும்? நீ தூங்கிட்டு அவர் போய்ட்டார்னு கோபப்படுற?” என சாம்பவி அதட்ட, செல்வியின் முகம் மலர்ந்தது.
உனக்கு கோபம் வந்த பின்னாடிதான் என்ன செய்துருக்கேனு புரிஞ்சது. கோபம் மட்டும்னா நான் பண்ணினதுக்கு உன் கோபம் சரிதானு நினைச்சிருப்பேன், தாங்கியும் இருப்பேன்.
அடுத்த நாள்லயிருந்து வேலைக்கு வரல. நீ அவாய்ட் பண்றதை என்னால தாங்க முடியல. உன்னை வற்புறுத்தி திரும்ப கஷ்டப்பட வைக்கவும் மனசில்ல. அதேநேரம் உன்னை மறக்கவும் முடியல.
கல்யாணம் செய்துட்டா எனக்கு உன்மேல அப்படிப்பட்ட எண்ணம் குறையும்னு நினைச்சிதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். அது உன்னை இந்தளவுக்கு பாதிக்கும்னு நினைக்கல செல்வி. ரியலி வெரி சாரிடீ” என்றான்
செல்விக்கு அழுகை வர, “என் விருப்பத்தைப் பத்தி மட்டுமே யோசிச்சிருக்கேனு நினைக்காத செல்வி, உனக்கு என்னை பிடிக்கல, இந்த விசயத்துல வற்புறுத்துறது ரொம்ப தப்பு, மனசுக்கு பிடிச்ச பொண்ணை கஷ்டப்படுத்தக்கூடாதுனு நினைச்சுதான் ஜெயப்ரதா” எனும்போதே
“இனி இதைப்பத்தி பேசாதிங்க, எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு” என்றாள்.
“என்மேல கோபம் இருந்தா எதாவது செய்து அதை போக்கிடு செல்வி, இப்படி ஸ்ட்ரெஸ் ஆகிக்காத”
“நான் அப்படி சொன்னது உங்களுக்கு பிடிக்கலனா, இப்போ ப்ராப்பரா ப்ரப்போஸ் பண்றேன்”
“நான் கஷ்டபடுவேன்றதுக்காக எத்தனை யோசிக்கிற. என்மேலான உன் அக்கறை சொல்லாததா ஒரு ப்ரப்போஸல் சொல்லிடும்? ப்ரப்போஸ் ப்ராப்பரா பண்றது இல்ல, உணர்வுப்பூர்வமா சொல்றது.
ப்ரப்போஸ் பண்ணினாத்தான் உன்னை எனக்கு பிடிக்கும்னு இல்ல. என்மேல கோபப்பட்டாலும் இந்த செந்தமிழ்செல்வியை எனக்கு பிடிக்கும்” என்றான்.
செல்வி அமைதியாக இருக்க, அவளிடம் இன்னும் நெருங்கி அமர்ந்து இடையை வளைத்தவன், “நம்ம ஃப்ரண்ட்ஸிப்பை மறக்க முடியாம என்னை ஏத்துக்கிட்ட, உன்னோட லைஃப் பார்ட்னரா வர அளவுக்கு என்னை உனக்கு பிடிக்கலையோனு கவலையா இருக்குடீ” என்றான்.
“நான் கோபப்பட்டாலும் எப்படி உங்களுக்கு என்னை பிடிக்குமோ… அதோபோல நீங்க என்னை கஷ்டப்படுத்தினாலும் உங்களை எனக்கு பிடிக்கும். ஏன்னா… உங்களால மட்டும்தான் என்னை சந்தோசப்படுத்தவும் முடியும். எனக்கே ராஜஸ்தான் வந்த பின்னாடிதான் தெரிஞ்சது.
உங்களைத் தவிர வேற யாரையும் லைஃப் பார்ட்னரா யோசிக்க கூட முடியலை. இதுக்கு என்ன அர்த்தம்னு புரிஞ்சா உங்க கவலை தேவையில்லாததுனு புரியும்” என்றாள்.
இவளை கஷ்டப்படுத்துவேனு எப்படி நினைக்கிறா? என்று கோபம் வந்தபோதும், செல்வி மன அழுத்தத்தோடு இருக்கிறாள். இதற்கு மேல் இவ்விசயத்தை பற்றி வாதம் செய்ய வேண்டாம் என்று “அப்படியா?” என்று தனது சர்ட்டின் முதல் இரண்டு பட்டனை அவிழ்த்துவிட்டு செல்வியை அணைத்தபடி மெத்தையில் சரிந்தான்.
அமர்ந்தபடியும் நின்றபடியும் அணைத்த போதெல்லாம் வராத வெக்கம், மொத்தமாக செல்வன் மேல் படர்ந்திருக்கும்போது வர, சிவந்துபோனவள் இருவருக்கும் இடையே தனது கரங்களை நுழைக்க முயற்சித்தாள்.
சிரித்தபடி நெற்றி, கன்னம் என முத்தமிட்டு இதழை நெருங்க, செல்வியின் படபடப்பு அதிகமானது. இதழை விடுத்து அவளின் கண்களில் முத்தமிட்டவன், “இப்படி சிவந்தா ஆன்ட்டி என்னை தப்பா நினைப்பாங்க செல்வி” என்று அணைப்பை கூட்டினான்.
செல்வனின் ஒரு கை செல்வி இடையை அழுத்தமாய் பற்றியிருக்க, மற்றொரு கை இருவருக்கும் இடையில் உள்ள அவளின் கரங்களை விலக்கி விட, மொத்தமாய் செல்வன் மேல் படர்ந்திருந்தவள் திண்டாடிப்போனாள்.
“ம்… சுகமான சுமைனா என்னனு இன்னைக்குத்தான் புரியுது” என கண்ணிமைத்து, இதற்கு மேல் செல்வியை சோதித்தால் நாம் சோதனைக்குள்ளாவோம் என்று எழுந்தமர்ந்தவன், “போய் முகம் கழுவிட்டு வா” என்றான்.
செல்வி குளியலறைக்குள் செல்ல, ஏசியை அ ணைத்து கதவை திறந்து விட்டான். செல்வி வர, அவளின் முகத்தை துடைத்துவிட்டபடி “என்மேல எதாவது கோபம்னா எனக்குத்தான் போன் பண்ணனும், அதை விட்டுட்டு ஆன்ட்டிக்கிட்ட சண்டை போடுறது, அழறதுனு பண்ணக்கூடாது” என்றான் தன்மையாக.
சரி என்பதாக தலையசைத்தவள், “பட்டன் போட்டுக்காமலே கதவை திறந்திருக்கிங்க” என கடிய, “போட்டுவிடு” என்று நெருங்கி நின்றான்.
“அப்போ நான் கழட்டுறது எதையும் நீ போட்டுக்கமாட்ட? அப்படித்தான?” என்க, மொத்தமாய் சிவந்துபோனாள்.
சிரித்தபடி தனது உடையை சரி செய்து, “வா” என்று வெளியே வந்தான். மதிய உணவு உண்ட பின்னே “அப்பா காத்திட்டிருப்பார், கிளம்பறேன் ஆன்ட்டி, இளவரசன்கிட்ட சொல்லிடுங்க” என்றவன், “ரெஸ்ட் எடு, நாளைக்கு கால் பண்றேன்” என செல்வியிடம் சொல்லி கிளம்பினான்.