அவருக்கு பயம் யாரவது எதாவது பிரச்சனை செய்து கல்யாணம் நடக்காமல் சென்று விடுமோ என்று இப்பவே கல்யாணத்தை நடத்திக் கொள்ள ஆசைப்பட்டார்.
Advertisement
ராமமூர்த்தி, குகன், மொழி, ரிஷி அனைவரும் குழந்தைகளை தூக்கிக்கொண்டு கோயில் வர.
ராதா வேகமாக சென்று மொழியின் கைய பிடித்துக் கொண்டார் “சாரிடா அத்தை தெரியாமல் பேசிட்டேன் “என்று.
Advertisement
Advertisement
மொழி “பரவால்ல அத்தை” என்று தலையாட்டி இருந்தாள்.
சுதா ரிஷியிடம் கேட்டார் “தேவகி மொழியை உனக்கு கல்யாணம் பண்ண கேக்குறாங்க கல்யாணம் பண்ணிக்கிறியா? இப்பவே உனக்கும், மொழிக்கு நம்ம குல தெய்வம் கோயில்ல வச்சு கல்யாணம் பண்ணலாம்” என்று சுதா கூற.
Advertisement
“வேண்டாம்மா வேண்டாம்” என்றான் ரிஷி.
“ஏண்டா வேண்டாம், நீ கூட நேத்து என்கிட்ட சொன்ன தானே, மொழியை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு இப்ப வேணாம்னு சொன்னா, என்ன அர்த்தம்” என்று சுதா கேட்க.
‘”இப்ப வேண்டாம்மா, மொழிக்கு இஷ்டம் இருந்தா பிறகு பார்க்கலாம் ஆனா இப்ப கட்டாயத்தின் பேர்ல மொழியை நம்ம பிளேம் பண்ண கூடாது அவள் பண்ணது ரொம்ப பெரிய விஷயம் மா,
அவ ரொம்ப வருத்தப்பட்டு இருக்க நானே அவளை ரொம்ப காயப்படுத்தி இருக்கேன் எல்லாரும் சேர்ந்து அவளை துன்பப்படுத்தி இருக்கோம் மறுபடி மறுபடி அவளை வேதனை பட வைக்க வேண்டாம்.
மொழிக்கு நல்ல எதிர்காலம் இருக்கு கொஞ்ச நாள் கழிச்சு பிள்ளையை நீங்க வளர்த்துக்கோங்க அவ கனவு ரொம்ப பெருசு அந்த கனவை தேடி அவ போகட்டும் பிறகு பார்க்கலாம் என்னை பிடிச்சாலும் சரி, இல்லா வேற யாரையாவது அவ கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் சரி..
அவ வாழ்க்கை அவ கையில, மொழி வாழ்க்கையை நம்ம யாரும் முடிவு பண்ணக்கூடாது அவ வாழ்க்கையை அவதான் சூஸ் பண்ணனும்,
அவ என் பிள்ளைகளை வளர்க்கணும்னு எந்த அவசியமே இல்லை..
அவ அக்கா செத்ததுக்கு வந்தவ எல்லாம் முடிஞ்சதும் உடனே கிளம்பி இருக்கலாம் அவ அப்படி கிளம்பல அவளோட கனவு கிரிக்கெட் அதை விட்டுட்டு என் பிள்ளைகளை வளர்த்துக் கொண்டு இருந்திருக்க.
அதனால பிள்ளைகளை கொஞ்ச நாள் கழிச்சு நீங்க வளர்த்துக்கோங்க அவ போகட்டும் கிரிக்கெட்டில் அவ சாதிக்கட்டும், பிறகு என்னை பிடிச்சிருந்தா திரும்ப வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கட்டும் அப்படி இல்லனாலும் எனக்கு பரவா இல்லை
அவ வேற யாரை வேணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம் அவ இஷ்டம் என்னவோ அதை செய்யட்டும், எல்லாரும் சேர்ந்து அவளை மீண்டும் கஷ்டப்படுத்த வேண்டாம்.
மொழிக்கு அழுகை பொங்கி, பொங்கி வந்தது ரிஷி பேசியதை கேட்டு.
அவளால் நம்ப முடியவில்லை இவனா இப்படி பேசுகிறான் கல்யாணம் என்றால் உடனே செய்து கொள்வான், இல்லை வேண்டாம், இவளை கட்டிக் கொள்ள மாட்டேன் என்று வம்பு பண்ணுவான் என்று நினைக்க அவன் பேசியதை கேட்டவளுக்கு அழுகை வர.
தேவகிக்கு சந்தோஷம் மகளை இப்படி எல்லாம் நினைக்குறா இவர் என்று ரிஷியை ஆச்சரியமாக பார்த்தார்.
ரிஷி தேவகியின் அருகில் வந்தவன் உங்க மகளை நான் கல்யாணம் பண்ணிக்கல என்று வருத்தப்படாதீங்க, அவ எவ்வளவு பெரிய ஆள் என்று உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.
மொழி பெரிய கிரிக்கெட் பிளேயர் அவ அதை எல்லாம் விட்டுட்டு எதுக்கு இங்க வந்திருக்க என் ரெண்டு பிள்ளைகளுக்காக, ஓரளவுக்கு பிள்ளைகளை வளர்த்துட்டா, இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு அவளுக்கு நீங்க சப்போர்ட் பண்ணுங்க அவ இன்னும் பெரிய ஆளா வருவா, கல்யாண என்ற பெயரில் அவளை நம்ம தண்டிக்க கூடாது.
அவ பெரிய தியாகம் பண்ணி இருக்கா.
அவ மட்டும் என் பிள்ளைகளை பார்த்துக்கொள்ளலாம், இருந்தா நீங்களும் என் அம்மாவும் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீங்க,
இதுக்கு நாம அவளுக்கு என்ன செய்யப் போறோம்,, மொழிக்கு சப்போர்ட் பண்ணனும் கல்யாண என்ற பெயரில் அவளை நாம கஷ்டப்படுத்தக் கூடாது, கல்யாணம் சந்தோஷமா பண்ணிக்கணும், நிம்மதியா வாழ்றதுக்காக கல்யாணம் பண்ணிக்கணும் கஷ்டப்படுத்தி கட்டாயப்படுத்தி பண்ற கல்யாண வாழ்க்கை நல்லா இருக்குமா சொல்லுங்க..
அப்புறம் ஒரு விஷயம் உங்க கிட்ட தான் இதை நான் சொல்றேன்.., இது என் அம்மா, அப்பாவுக்கு கூட தெரியாது, .
என்றவன் மனதை திடப் படுத்திக் கொண்டு, ” நான் விரும்பினது உங்க பொண்ணு அருள் மொழியை.
ஆன நான் கல்யாணம் பண்ணது அருள்ஜோதியை”…
என்றதும் அனைவரும் அவனை அதிர்ச்சியாக பார்க்க.
“ஆமாம் நான் அருள் மொழியைத்தான் காதலித்து கல்யாணம் பண்ண ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு அருள்ஜோதிக்கும் அருள்மொழிக்கும் வித்தியாசம் தெரியலை அருள் என்ற பெயரை வைத்து தான் அருள்ஜோதியை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்,
கல்யாணம் பண்ணி கொஞ்ச நாள்ல தான் எனக்கு தெரிஞ்சது நான் விரும்பினது அருள் மொழியை என்று
உங்களுக்கு தெரிந்திருக்கும் நானும் அருள் ஜோதியும் கொஞ்ச நாள் பிரிந்து இருந்தோம்.
அதுக்கு காரணம் இதுதான். அருள்ஜோதியை என்னால ஏத்துக்கிட்டு வாழ முடியல. குற்ற உணர்வாய் இருந்தது நாமா ஏமாந்துட்டோம் என்று கோபத்தில் அவ கூட என்னால வாழ முடியல,
வாழனும்னு முடிவு பண்ணப்போ அவ என் கூட வாழ முடியாத இடத்துக்கு போயிட்டா.
எல்லாம் என் தலையெழுத்து விரும்பினது ஒருத்தியை கல்யாணம் பண்ணது இன்னொருத்தியை கல்யாணம் பண்ணி வாழ முடியாம போனத என்ன சொல்ல..
நீங்க மொழியை நினைத்துப் பாருங்கள். நான் பண்ண தப்பால அவ வாழ்க்கையே விட்டுட்டு, உங்களை விட்டு தனியா போய் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கா இப்பையும் வந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கா மேலும்,மேலும் அவளை நாம ரொம்ப கஷ்டப்படுத்துறோம். அவளை விட்டுடுங்க அவ இஷ்டப்படி கொஞ்ச நாள் இருக்கட்டும் ..
அவ பழைய மொழியா இருக்கணும் சந்தோஷமா”. என்றான்..
தேவகி மகளை பார்க்க.
வேகமாக ஓடி வந்தவள் தாயை அணைத்துக் கொண்டாள் “அம்மா சாரிமா அம்மா சாரிமா” என்று அவரை அணைத்துக் கொண்டு அழ.
“நீ ரிஷி மாப்பிள்ளையை விரும்பினியாடி” என்றார் ..
அவள் “ஆமாம்” என்று தலையாட்ட.
“அப்புறம் ஏண்டி என்கிட்ட சொல்லல” என்றார்.
“நான் வர்ததுகுள்ள அக்காவுக்கு கல்யாணம் பேசி எல்லாரும் முடிச்சுட்டீங்க நான் வந்து என்னன்னு சொல்லுவேன்.
“எல்லார் வாழ்க்கைக்காக உன் வாழ்க்கை கெடுத்துக் கிட்டியே டி”.
என்றவர் மகளை அணைத்து கொண்டு அழ.
சுதா மகனிடம் வந்து கையைப் பிடித்தார்.
” நீ என்னடா சொல்ற நீ இஷ்டப்பட்டது மொழியவா” என்றார்.
அவன் “ஆமாம்” என்று தலையாட்டினான்.
“அப்ப நாங்க தான் தப்பா ஜோதியை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டோமா”?.
“அப்படி இல்லம்மா நான் சொன்னது தப்பு மா, அருள் மொழியை அருள் என்று சொன்னது தப்பு தானே.
நீங்க அருள்னு தான போய் பொண்ணு கேட்டீங்க.,
எனக்கு அவங்க அக்கா தங்கச்சின்னு ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பாங்கன்னு எனக்கு தெரியாது மா அருள்மொழி ஒருத்தி தான்னு நெனச்சு சொன்னேன்..
ஏமாந்த போனது நானும்தான் உங்களை நான் குறை சொல்ல மாட்டேன்.
அருள்மொழி என்கிட்ட, என் பேரு அருள்மொழியின்னு சொல்லி இருந்தா இந்த பிரச்சனை நடந்திருக்காது, அவ என் கிட்ட, அவ பெயர் அருள் என்று சொன்னது தான் பெரிய தப்பா போச்சு.
நானும் அவள் முழு பெயரை கேட்கவில்லை அருள் என்று நினைச்சுகிட்டு இருந்திருக்கிறேன்.
ஒரு சின்ன தப்பால, இப்ப பெரிய தப்பா வந்து நிக்குது எல்லாம்.” என்றான்..
“அப்போ நீ இஷ்டப்பட்டு பொண்ணு தானடா மொழி அப்போ நீ கல்யாணம் பண்ணிக்கோ சந்தோஷமா வாழு” என்றார் சுதா.