Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிவி அம்மு - மன்னவன் மஞ்சத்தில்

மன்னவன் மஞ்சத்தில் 2

2.

மஞ்சம் – 2

முத்தமிழ் அடங்காத கோபத்துடன் சென்று நின்றது தென்பாண்டி வீட்டின் முன்பு தான். அங்கு தான் நிவேதா அம்மாவும் இருக்கிறார்.

“அத்தை.. அத்தை…!”  வெளியே நின்றபடி கத்தி கூச்சலிட,



Advertisement

வைதேகி அவசரமாக வெளியே ஓடி வந்தார்.

“தமிழ்… என்னப்பா? எதுக்கு இவளோ கோவமா இருக்க?” பதறியது அவருக்கு.

“எதுக்கு நிவேதா வாழ்க்கையை திரும்ப, திரும்ப நாசம் பண்றீங்க? உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? அந்த பொண்ணு உணர்வு உள்ள மனுஷி. பந்து கிடையாது. மூளைக்கு, மூளை தூக்கி போட்டு உருட்டி விளையாட. எதுக்கு இப்படி பண்றீங்க?” என கத்தியவனை
இயலாமையுடன் பார்த்தார்.

Advertisement

எதை எங்கிருந்து சொல்வது என்று theriyasmK திணறி நின்றார்.

Advertisement

“தமிழ் உனக்கு இப்ப புரியாது. போக போக புரியும்.” தென்பாண்டி எதையோ சொல்ல நினைக்க, எனக்கு எதுவும் புரிய வேண்டாம்.
இனி புரிந்து என்ன ஆக போகுது? இதுக்கு முன்னாடி நிவேதா ஆசைக்கும், விருப்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் ஒரு கல்யாணம் பண்ணி வச்சீங்க. இப்போ அவள் உணர்வை மதிக்காமல் ஒரு கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க. உங்களை மாதிரி நேரத்துக்கும், சமயத்துக்கு மாறுற மனுஷங்களை பார்க்கவே முடியாது. ஆக மொத்தம் நிவேதா விருப்பு, வெறுப்பு எதுவும் முக்கியம் இல்லை. பெத்து பொண்ணு வாழ்க்கையை உங்க விருப்பத்துக்கு பந்தாடி நாசம் பண்ணிட்டீங்க. இனி அங்க அந்த அரக்கி கிட்ட மாட்டிகிட்டு நிவேதா வாழ்க்கை நரகத்தை விட மோசமா இருக்க போகுது.
நிம்மதியா இருங்க. உங்களை பார்க்கவே பிடிக்கல. தலை எழுத்து இங்க வந்து கத்தனும்.” என ஆத்திரம் கொஞ்சம் குறையும் வரை கத்தியவன் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கேட்க கூட நிதானம் இல்லாமல் சென்றான்.

“தமிழ்…” வைதேகி கத்தியது எதையும் அவன் கண்டு கொள்ளவில்லை. அவரோ அப்படியே வாசலில் மடங்கி விழுந்து அழுது கொண்டிருக்க,

“அழுது அழுது நீ பண்ற எல்லாத்தையும் மறைச்சிடுற. உன்னை யாரும் கேள்வி கேட்க கூடாதுன்னு அழுறியா? இந்த அழுகையால் தான் என் அக்காவுக்கு இவ்வளவு சிக்கல். ஆசைபட்டவனை கல்யாணம் பண்ணிக்க முடியல. கல்யாணம் பண்ணவன் கூட சந்தோஷமா வாழ முடியல. எல்லாத்தையும் விட எதுவுமே வேண்டாம். என் குழந்தை போதும்னு நிம்மதியா இருந்தவளுக்கு திரும்பவும் பிடிவாத கல்யாணம்.” ஆதினி அவள் பங்குக்கு கேள்வி கேட்க,

Advertisement

“ஆதி நீ கூட அம்மா வை புரிஞ்சிக்கலையா?”  ஆற்றாமையாக கேட்டார்.

“நல்லா புரிஞ்சுகிட்டேன். ரொம்ப நல்லா புரிஞ்சுகிட்டேன். உன்னுடைய இயலாமையை மறைக்க எங்க வாழ்க்கையை உன் விருப்பத்துக்கு உருட்டி விடுற.”

“ஆதி…” என கண்ணை மூடிக் கொண்டு கத்தியவர் “உன் அம்மா எனக்கு தெரியும் டி எது நல்லது எது கெட்டதுன்னு. நிவேதா பிள்ளையை வச்சுக்கிட்டு எப்படி தனியா வாழ்வாள். என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை வேணும்னு செஞ்சேன். உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுத்துட்டா நிம்மதியா கண்ணை மூடிடுவேன்.”

“நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுத்தியா? நரகத்தில் தள்ளி இருக்க. அப்படி அவளுக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சு இருந்தா முன்னாடியே பண்ணி இருப்ப. இனி என் அக்கா அத்தைகிட்ட பட போற கஷ்டத்தை நினைக்கும் போது நெஞ்சு அடைக்குது. நீ செஞ்ச செய்த காரியத்துக்கு இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மன்னிப்பு கிடைக்காது. அக்கா வாழ்க்கையை நாசம்
பண்ணிட்ட. அடுத்து என் வாழ்க்கையா?” மகள் கேள்வியில் துவண்டு போனார்.

“என் வாழ்க்கையை நான் பாத்துக்குறேன். நீ எங்களுக்கு நல்ல அம்மா தான். ஆனா அதுக்காக என் வாழ்க்கையை உன் கிட்ட விட முடியாது. தயவு செஞ்சு என் வாழ்க்கையை பற்றி யோசிக்காத.” முகத்தில் அடித்தாற் போல் கூறி சென்றாள்.

தாயை திட்டியதில் அவளுக்கும் வருத்தம் தான். ஆனால் அன்றே அக்கா இதே போல் கோபமாக பேசி இருந்தால் அவள் வாழ்வில் ஏற்பட்ட வேதனைகள் இல்லாமல் போய் இருக்கும். ஆசைப்பட்டவன் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருந்தது இருப்பா. அம்மாவுக்காக அவள் காதலை தியாகம் பண்ணி அவள் அனுபவித்த வேதனைகளை கண்ணாலே பார்த்த பிறகு எப்படி இவள் வாழ்வை பலி கொடுப்பாள். இவள் காதலுக்கும் அல்லவா பாடை கட்டி விட்டார் .

வைதேகி தன் அண்ணனை இயலாமையுடன் பார்த்தவர் அவர் கை பிடித்து கதறி அழ “வைதேகி ஆதி பேசிய எதையும் தப்பா எடுத்துக்காத. நிவேதா வாழ்க்கை கேள்வி குறியா நிக்க நான் தான் காரணம். அந்த கோபத்தில் தான் உன்னை திட்டிட்டு போறா.”

“அண்ணா என் பொண்ணு மேல எனக்கு எப்படி கோபம் வரும். பயமா இதுக்கு. அண்ணி என்ன பண்ணுவாங்களோ?” சொல்லும் போதே அவர் குரல் நடுங்கியது.

அவருக்கும் இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை.

முத்தமிழ் குளத்தங்கரையில் சோர்வாக அமர்ந்து இருந்தான். ‘நிவேதா நல்ல பெண். அதே சமயம் அக்னியும் நல்லவன் தான்.
கோபக்காரனாக இருந்தாலும் நல்லவன்.
ஆனால் இப்போ இவுங்க ரெண்டு பேர் மன நிலையும் சரியில்லையே. அதிலும் தென்பாண்டி, வைதேகி குடும்பத்து மேல தீராத பகையோடு இருந்தவங்க தான் இவுங்க. எல்லாத்தையும், எல்லா கோபத்தையும் நிவேதா மேல காட்டுவாங்க. சூடாமணி அம்மா சொல்லவே வேண்டாம் இனி காலில் சலங்கை கட்டிக்கிட்டு ஆடு வாங்க.’ அவர்களை பற்றியே யோசித்துக் கொண்டிருக்க,

“தமிழ் என்னடா வீட்டு பக்கமே வரல. யார் மேல கோபம். நானும், அம்மாவும் ஏதாவது தப்பு பண்ணிட்டோமா?” அழுக்கு சட்டையோடு கேட்டுக் கொண்டு நின்று இருந்த தந்தையை கண்டவன்,

“அப்பா.. நீங்க எதுக்கு இங்க வந்தீங்க. உங்க மேல எனக்கு என்ன கோபம். வாங்க போகலாம்.” வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர் அப்படியே தேடி வந்திருக்கார் என்பதின் அடையாளமாக காலில் சேறு ஒட்டி இருந்தது.

“அப்புறம் யா தமிழ் காலையிலிருந்து சாப்பிடல. உனக்கு பிடிக்கும்னு அம்மா நெத்திலி மீன் வாங்கி குழம்பு வச்சிருக்கு. உன்னை காணும்னு போன் பண்ணி சொல்லவும் உன்னை தேடி வந்தேன். நீ சாப்பிடகலனு அம்மாவும் சாப்பிட. சாப்பிடாமல் எதுக்கு தமிழ் இருக்கணும்?.”
மகன் சாப்பிடவில்லையே என்ற பரிதவிப்பில் தந்தையாக அவர் பாசம் பரிபூரணமாக மகன் மீது இருந்தது.

தமிழ் குற்ற உணர்ச்சியாக உணர்ந்தான்.

“வீட்டுக்கு வாங்க சொல்றேன்.”

“தமிழ் உன் வண்டில கிளம்பு பா. நான் பின்னாடி வாரேன்.” என அவர் அவருடைய எக்ஸ்எல் ஐ உதைக்க, அவருக்கு பின்னால் அமர்ந்து கொண்டவன்,

“உன் கூடவே வரேன் ப்பா.” என்றான். தங்கசாமி சிரித்துக் கொண்டே மகன் வீட்டுக்கு வராத காரணத்தை கேட்டு தெரிந்து கொண்டார்.

அதற்குள் வீடு வந்து விட்டது. “தமிழ் நிவேதா பாவம். ஆனா அதுக்காக சூடாமணி பகை நமக்கு வேண்டாம். இது பயத்தால சொல்லல. அந்த அம்மா நாகரிகம் பார்க்காமல் பேசும். நீ ஒதுங்கியே இரு. எங்களுக்கு நீ ஒரே பிள்ளை.” தந்தைக்கே உரிய அக்கறையிலும், பயத்திலும் அவர் அறிவுரை கூறினார்.

“அப்பா நீங்க பயப்பட வேண்டாம். நான் பத்திரமா இருப்பேன்.” இருவரும் சேர்ந்து கை, கால் கழுவி விட்டு வீட்டுக்குள் செல்ல “தங்கம் எங்க போன? காலையிலிருந்து சாப்பிடல. ரொம்ப பயந்துட்டேன். அப்பாவும் இன்னும் சாப்பிடல.” பூவம்மா கவலையாக கேட்டார்.

“அம்மா சாரி. வாங்க சாப்பிடலாம்.” இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றான். “அம்மா உருண்டை பிடித்து கொடுங்க.” ஆசையாக கேட்டான்.

மகன் கேட்டதும் மூவருக்கும் ஒரே தட்டில் சாப்பாடு போட்டவர் பிசைந்து முதலில் மகனுக்கு தான் உருண்டை பிடித்து கொடுத்தார். வஞ்சிரம் மீன் வறுத்து வைத்திருந்தார். அதுவும் மகனுக்கு மட்டும் ஒரு துண்டு இருந்தது.

வேண்டாம் என்று மறுத்து விட்டால் மகன் இரவு சாப்பிடுவான் என அப்படியே வைத்து விடுவார்கள். அதனால் மீனை பிட்டு தாய்க்கு ஒரு வாய் தந்தைக்கு ஒரு வாய் ஊட்டி விட்டவன். தானும் சாப்பிட்டான்.

நான்கு வருடங்கள் குழந்தை இல்லாமல் பிறந்த பிள்ளை என்பதால் தமிழை இப்போது வரை சீராட்டி தான் வளர்க்கிறார்கள். மகன் சாப்பிடாமல் சாப்பிடுவது கிடையாது. மகன் இல்லாமல் தூங்குவது கிடையாது. தாங்கள் கஷ்டப்பட்டாலும் மகனுக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்து எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர். சுருக்கமாக சொல்ல போனால் இருவரும் உயிர் வாழ்வதே மகனுக்காக தான்.

தமிழும், தாய் தந்தை மீது உயிரையே வைத்திருக்கிறான். அவர்கள் உருவாக்கி கொடுக்கும் வசதியும், செல்லத்தையும், சுதந்திரத்தையும் எப்போதும் தவறாக பயன்படுத்தியது கிடையாது. படித்து முடித்து நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான்.

பேரன் பசி என்று சொன்னதும் அனைத்தும் மறந்து போனது அவருக்கு. அவசரம் அவசரமாக பாய் போட்டு சாப்பாட்டை கொண்டு வந்து வைத்தார்.

பேரன் வந்து அமர்ந்ததும் அவர் கைகள் வேக வேகமாக பரிமாறியது. அக்னி எதுவும் நடக்காதது போல் சாப்பாட்டில் கை வைக்க, சாப்பிடும் நேரத்தில் பேசுவது அக்னிக்கு பிடிக்காது என்பதால் பாட்டி அமைதியாக இருந்தார்.

மகன் மீது கடும் கோபத்தில் உள்ளே நுழைந்த சூடாமணி மகன் சாப்பாட்டில் கை வைக்கவும் தன் முழு கோபத்தையும் அடக்கி கொண்டு தரையில் ஒரு கால் மடக்கி, ஒரு கால் நீட்டி போட்டு அமர்ந்தார்.

அவர் அருகிலேயே அவரின் இன்னொரு மகனும் அமர்ந்து கொண்டான். அமர்வேந்தன்.

“அமர் வந்து சாப்பிடு.”

“அண்ணா எனக்கு பசிக்கல. நீ சாப்பிடு.”

அதன் பிறகு அந்த இடமே மயான அமைதியானது.

அவன் எப்போது சாப்பிட்டு கை கழுவுவான் என்று மூவரும் காத்திருந்தனர்.

அக்னி கை கழுவி வாய் துடைத்து மீசையை முறுக்கி விட்டுக் கொள்ள,

“அக்னி அவளை வெளியே தூக்கி நீ வீசுறியா? இல்லை நான் வீசவா?” அக்னி என்று மகனை அழைத்தவருக்குள் தான் அணையாத அக்னி எரிந்து கொண்டிருந்தது.

“வீசுவதற்கு அது பொருள் இல்ல. என் பொண்டாட்டி. இந்த வீட்டுக்கு நான் தான் தூக்கிட்டு வந்தேன்.” என்றான் பார்வையையே எங்கேயோ பார்த்தபடி.

“என்னவா வேணாலும் இருந்துட்டு போகட்டும். எனக்கு பிடிக்கல டா.” என்றவர் வேகமாக மகன் அறை நோக்கி செல்ல,

“அவளை வீட்டை விட்டு அனுப்புறது என்னையே வீட்டை விட்டு துரத்துவதற்கு சமம் அம்மா.” என்றான் கணீரென்ற குரலில்.

சூடாமணி கால்கள் அப்படியே ஆணி அடித்தார் போல் நின்று விட்டது. மகன் வார்த்தைகளை கேட்டு.

தொடரும்……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!