அவளை பெரிய மருத்துவ மனையில் சேர்த்திருந்தான் குகன்,.
அனைத்து கட்ட மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மொழிக்கு அன்று இரவு ஆப்ரேசன் என்று சொல்லி இருந்தார்கள்.
மொழிக்கு அவளின் கணுக்காலில் தான் ஆப்ரேசன், அவளுக்கு பல முறை கணுக்காலில் அடிப்பட்டதால் தான் இந்த ஆப்ரேசன்,.
அவளுக்கு கணுக்காலில் உள்ள ஜவ்வு விலகி, (Ankle) பகுதிகளில் அடி பட்டு இருக்க,
அவள் அந்த வலியிலும் காலில் பேண்டேஜ் கட்டிக்கொண்டு, மீண்டும் மேச் விளையாடி இருக்கிறாள்.
டாக்டர் சொல்லியும் அவள் கேட்க வில்லை,. அவளின் (liagment ) ஜவ்வு நன்றாக கிழிந்து, பலவீனமாக உள்ளது.
எனவே இப்போது சர்ஜரி நடந்துக்கொண்டிருக்கிறது..
சின்ன சர்ஜரி தான், இரண்டு நாளில் வீடு சொல்லாம், ஆனால் காலுக்கு இனி ப்பிசர் கொடுக்க கூடாது.
இரண்டு மாதம் தேவைக்கு மட்டும் நடக்க வேண்டும் என்று சொல்லி இருந்தனர்.
இதோ இரவு சர்ஜரி முடிந்து ரூம் வந்து விட்டாள் மொழி.
மொழியின் குடும்பத்தில் உள்ள அனைவரும் அங்கே தான் இருந்தனர்.
டாக்டர் சின்ன சர்ஜரி தான்,. கவலை பட வேண்டாம்,
இனி கிரிக்கெட் விளையாடுறது கொஞ்சம் கஷ்டம், முயற்சி பண்ண ஒரு வருஷம் கழிச்சி கால் சரியான உடன் விளையாடலாம், ஆனா மறுபடியும் இந்த பிரச்சனை வராமல் பாத்துக்கனும், என்று டாக்டர் சொல்லி செல்ல…
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.
ஆத்வீக்கும், சாத்வீக்கும் அம்மாவை பார்க்க வேண்டும் என்று குதிக்க.
முதலில் மொழியை பார்க்க அவர்களைத்தான் அழைத்துச் சென்றான் குகன்.
மொழி படுத்திருந்ததை பார்த்தவர்கள் அவள் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டு.
மொழியின் தலையை ஆத்வீக் வருடி விட.,.
அவளின் தோளை பித்து விட்டான் சாத்வீக்,..
மொழிக்கு மெல்ல விழிப்பு வந்து தன் பிள்ளைகளை பார்த்து சிரிக்க.
“ஆர் யூ ஓகே மம்மா” என்று ஆத்விக் கேட்க.
அவள் நன்றாக இருப்பதாக தலையாட்டினாள் ,.
சாத்வீக் அவளின் தோளை பிடித்துக் கொண்ட படியே அவளின் கன்னம் தொட்டு “வலிக்குதா மம்மா” என்று கேட்க.
“கொஞ்ச நேரம் முன்னாடி வலிச்சது என் பட்டுங்க, தொட்ட உடனே வலி எல்லாம் பறந்து போச்சு டா செல்லங்களா” என்றாள் மகன்களை பார்த்து,,
“போதும்டா மம்மா ரெஸ்ட் எடுக்கட்டும் வாங்க” என்று குகன் அவர்களை அழைத்து சொல்ல.
“சரி மாமா'” என்ற பிள்ளைகள் மொழியிடம் “அம்மா நாளைக்கு வீட்டுக்கு வந்துடுவீங்க தானே என்று கேட்க.
” நாளைக்கு நைட்டு வந்துருவேன் டா அம்மா, நீங்க தாத்தா பாட்டி கூட இருங்க அலைய வேண்டாம், ” என்றாள் மொழி.
சரி என்று பிள்ளைகள் கிளம்பி விட அடுத்து தேவகியும் ஐயப்பனும் பார்க்க வந்தனர் மகளை.
மொழி எழுந்து அமர்ந்திருக்க.
மகள் நன்றாக இருப்பதை பார்த்தபடியே வந்தனர் “எப்படி இருக்குடா” என்று கேட்க.
“நான் நல்லா இருக்கேன் பா நாளைக்கு வீட்டுக்கு வந்துடுவேன் நீங்க கல்யாண வேலையை பார்க்க திருநெல்வேலி கிளம்புங்க, நான் ஒன் வீக்குல அங்கே வந்துடுறேன்” என்றாள்.
“சரிடா நானும் அம்மாவும் நைட் கிளம்புறோம் உடம்ப பாத்துக்கோ. குகன் இங்க தான் இருப்பான் உனக்கு துணையா சரியா”. என்று
“போடா போய் பேசு அந்த பொண்ணு எதிர்பார்க்கும் தானே” என்று தம்பியை தனியே அனுப்பி வைத்தாள் மொழி .
ஏனோ அவளுக்கு இன்று ரிஷியை பார்க்க வேண்டும் என்று தோன்றியது காலில் வலி பயங்கரமாக இருக்க.
வலியில் அழுகை வந்தது மொழிக்கு, கண்ணெல்லாம் கலங்கி இருந்தது, அழுது பல வருடங்கள் ஆகி இருந்தது.
அவள் இந்த ஐந்து வருடமாக ரிஷியை போட்டோவில் கூட அவள் பார்க்கவில்லை,, பிள்ளைகளிடம் அவன் வீடியோ காலில் பேசுவான் தான் இருந்தாலும் மொழி அவனை பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை..
இன்று ஏனோ அவனைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது பார்க்க முடியாது என்று நினைத்தவளுக்கு அது அழுகையை தர கண்ணிலிருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்க துடைத்தபடியே கண்ணை மூடி கையை முகத்தை மூடிய படியே படுத்திருந்தாள்..
“குகா எனக்கு சர்ஜரி நடந்தது உங்க அத்தானுக்கு தெரியுமா”? என்றால்.
அவன் பேசாமல் அமைதியாக இருக்க.
” ஒரு போனாவது போட்டு என்னை பத்தி கேட்டாரா?.
அவருக்கு என் நினைப்பே இல்லையாடா.
ஒரு போன் பேசி கூட எவ்வளவு வருஷம் ஆகுது என் போன் நம்பர் அவர்கிட்ட இருக்கும் தானே, ஒரு போன் பண்ண கூடாதா குகா,.
நான் எதிர்பார்ப்பேன்னு அவருக்கு தெரியாதா,.
என்னை மறந்துட்டாரா,,? ஆனா என்னால மறக்க முடியலயே , அவர பார்க்க என் நெஞ்சமெல்லாம் ஏங்குது டா.
அவருக்கு என் நினைப்பே இல்ல, நான் தான் அவர நெனச்சு புலம்புறேன், நீ உங்க அத்தான் மாதிரி இருக்காதா, உன்ன கட்டிகிற பொண்ண நல்லா பாத்துக்கோ, நல்லா பேசு, பழகு
வெளியில கூட்டிட்டு போ, அன்பா பாத்துக்கோ, என்ன மாதிரி புலம்ப விட்டுடாத,அந்த பொண்ணை, என்னை பாரு உங்க மாச்சானை நெனச்சு பைதியகாரி மாதிரி புலம்பிட்டு இருக்கேன்,.
அவரோ ஜப்பான் காரன்கிட்ட பிஸ்னஸ் பேசிட்டு இருப்பார்.
எனக்கு ஒரு உதவி பண்றியா அவரை எனக்கு பாக்கணும் போல இருக்கு, அவருக்கு வீடியோ கால் பண்ணி தரியா.
தள்ளி இருந்து பாத்துக்குறேன் நீ பேசு என்றாள்.
மொழி இவ்வளவு பேசியும் குகன் பேசாமல் இருக்க.
“ஏண்டா பேச மாட்டேங்கற என்றாள் கண்ணை திறந்தபடியே..
ரிஷி கதவில் சாய்ந்தபடியே கையை கட்டி அவளை பார்த்தபடியே நிற்க.
ரிஷியை பார்த்ததும் அப்படியே சம்பித்து விட்டாள் மொழி அப்படியே அவனை பார்த்தபடியே அவள் படுத்திருக்க.
கண்ணீல் கண்ணீர் கொட்டியது அது பெரிய தேம்பலாக வர.
“ஹே அழுகாத வாய மூடு” என்றான் ரிஷி.
அவன் அதட்டியதும் இன்னும் அழகை வர .
“ஏய் ஆப்பரேஷன் பண்ணி இருக்காங்க டி வாய மூடு” என்றான்..
அவன் திட்டியது இன்னும் அழுகையை வற குப்புற படுத்து கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள் மொழி.
“இப்ப எதுக்கு இப்படி நீ அழுகிற நீதான பாக்கணும்னு சொன்னா?.
நீ சொன்னவன் உன் முன்னாடி தானே நிக்கிறேன் பார்க்காமல் எதற்கு டி இந்த அழுகை” என்றான்.