மொழிக்கு காலில் ஆபரேஷன் முடிந்து, மருந்துவமனையில் இருந்து வந்து இரண்டு நாட்கள் ஆனது.
Advertisement
ரிஷி அவன் அறையில்தான் அவளை தங்க வைத்திருந்தான்..
அவளுக்கான அனைத்து உதவியும் அவனே செய்தான்.
பிள்ளைகள் அடுத்த நாளிலிருந்து அவர்கள் அறையில் தான் தங்கினார்கள்.
ரிஷிக்கு மனது அவ்வளவு நிறைவாக இருந்தது மொழி, பிள்ளைகளோடு அந்த அறையில் இருப்பது.
அடுத்த நாளிலிருந்து பிசியோதெரபி வர ஆரம்பித்தார்கள் மொழிக்கு நடக்க பயிற்சி கொடுக்க.
மொழி மெல்ல மெல்ல ரிஷியை பிடித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்திருந்தாள்.
குகன் கல்யாணத்துக்கு நான்கு நாட்கள் முன்பே, திருநெல்வேலி அழைத்து வந்திருந்தான் தன் குடும்பத்தை ரிஷி..
மகள் குடும்பத்தோடு வந்ததும் சந்தோஷமாக இருந்தது ஐயப்பனுக்கும் தேவகிக்கும்.
மறுநாள் முகூர்த்தக்கால் நட்டு கல்யாண வேலைகள் நடந்து கொண்டிருந்தது..
மொழியை யாரும் எந்த வேலையும் சொல்லவில்லை அமர்ந்து கொண்டு அனைத்து வேலைகளையும் மேற்ப் பார்வைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மொழி.
தம்பிக்கு கல்யாணம் என்பதால் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாள் மொழி..
குகனுக்கு அதே ஊரை சேர்ந்த ஒரு டாக்டர் பெண்ணை தான் மணமகளாக தேர்ந்தெடுத்திருந்தார்கள் அவனின் பெற்றோர்,,. மணமகள் சென்னையில் டாக்டராக பணிபுரிவதால் அங்கேயே தங்கிக்கொள்ள முடிவு செய்திருந்தார்கள்..
கல்யாணம் மண்டபத்தில் கல்யாணவேலைகள் நடந்து கொண்டிருந்தது.
நிச்சயம் நடந்த அன்றும் இரவு ரிசப்ஷன் நடக்க அன்றும் அசைய விடவில்லை ரிஷி மொழியை.
கல்யாணத்துக்கும் அப்படி இருக்க முடியாது இல்லையா என்பதால் சிறு வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தாள் மொழி.
கல்யாண மேடையில் நின்று கொண்டு நடந்து கொண்டு ஏதோ சிறு சிறு வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவ்வப்போது சாத்விக்கும், ஆத்விக்கும் வந்து “அம்மா உட்காருங்க” என்று மொழியை உட்கார வைத்துவிட்டு செல்வார்கள் ரிஷியின் உத்தரவின் பெயரில்.
மொழி ரிஷியை பார்க்க,,.
அவளை முறைத்து பார்த்து உட்காரு என்பான் ரிஷி.
அவளோ மெல்ல சிரித்து உறவினர்களை பார்த்து பேசிக் கொண்டிருந்தாள்.
நல்ல நேரத்தில் குகன் டாக்டர் நித்யா என்ற பெண்ணை மணந்து கொண்டான்.
தம்பியின் கல்யாணத்தை கண் குளிர பார்த்தாள் மொழி..
கல்யாண நடந்த சிறிது நேரத்தில் மனைவியும் பிள்ளைகள் அழைத்துக் கொண்டு தன் வீடு வந்து விட்டான் ரிஷி.
மொழிக்கு காலின் வீக்கம் ஏற்பட்டு வலி வந்ததால் அனைவரிடம் சொல்லிவிட்டு அழைத்து வந்து விட்டான். சுதாவும் ராமமூர்த்தி மண்டபத்தில் தான் இருந்தார்கள்..
பிள்ளைகள் காலையில் எழுந்ததிருந்து விளையாடிக் கொண்டிருந்ததால் வந்த உடனே தூங்கிவிட.
மொழியின் காலுக்கு மசாஜ் செய்து கொண்டிருந்தான் ரிஷி.
மொழியோ வலியில் கண்களை மூடி படுத்திருக்க.
அவளுக்கு நன்றாக மசாஜ் செய்து வலியை குறைத்தான் ரிஷி.
மொழிக்கு இதமாக இருந்தது அப்படியே படுத்திருந்தாள்.
தன் கையை கழுவி வந்தவன் மொழியின் அருகில் வந்து படுக்க.
ரிஷியை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் மொழி.
என்ன மேடம் ரொம்ப நாள் கழிச்சு அணைச்சி இருக்கீங்க என்றான் ரிஷி.
“என் நந்துவை நான் அணைச்சிருக்கேன் உங்களுக்கு என்ன ரிஷி”? என்றாள்.
“அடியே நான் தாண்டி நந்து, நான் தாண்டி ரிஷி” என்றான் சிரித்துக் கொண்டேன்.
“எனக்கு கோபக்கார ரிஷியெல்லாம் வேண்டாம் என் அன்பு நந்து தான் எனக்கு வேணும்”, என்றாள் அணைப்பை கூட்டி.
ரிஷியும் அவளை அணைத்தபடியே “இந்த ரூம் ஞாபகம் இருக்க”?என்றான் அவளிள் தலைகோதி.
அப்பொழுதுதான் மொழி அந்த அறையை சுற்றி பார்த்தாள்.
“ஹே நந்து நம்ம மொத மொத மீட் பண்ண ரூம் தானே இது” என்றாள்.. அவனும் ஆமாம் என்று தலையாட்ட.
இருவருக்கு ஞாபகம் பல வருடங்கள் முன் சென்றது.
அன்று ஊர் திருவிழாவிற்காக செல்லம்மா பாட்டியின் வீட்டில் முளைப்பாரி போடும் நாள்.
ஊரில் உள்ள அனைத்து பெண்களும் செல்லம்மா பாட்டி வீட்டில் தான் இருந்தார்கள்..
இது எப்பொழுதும் நடக்கும் நிகழ்வு செல்லம்மா பாட்டியின் வீட்டின் கீழே உள்ள அறைகளில் தான் முளைப்பாரி வளர்க்க வைப்பார்கள்.
செல்லம்மா பாட்டி ஊரின் பெரிய தலை கட்டு என்பதால் அவர்களுக்கு இருந்த உரிமை வழங்கப்பட்டது.
இரண்டு பெண்களை வேலைக்கு போட்டு செல்லம்மா பாட்டி அனைத்து பெண்களுக்கும் முளைப்பாரி வளர்த்துக் கொடுப்பார் அனைத்து செலவுகளுமே செல்லம்மா பாட்டி தான்.
முளைப்பாரி போட்டு மூன்று நாட்கள் ஆனது நன்றாக வளர்ந்து கொண்டிருந்தது முளைப்பாரி.
இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது முளைப்பாரி அம்மனுக்கு தூக்க.
அன்று அதேபோல தான் கும்மி அடிக்க வந்திருந்தாள் மொழி.
முளைப்பாரி போட்ட பெண்கள் வட்டமாக நின்று நடுவில் தண்ணீர் வைத்து சுற்றி நின்று பாட்டு பாடி கும்மியடிப்பார்கள், கும்மியடித்து அம்மன் பாடல் பாடி முடித்தபின் அந்த தண்ணீரை எடுத்து முளைப்பாரியின் மேல் ஊற்றினால் முளைப்பாரி நன்றாக வளரும் என்பது ஐதீகம்.
அதேபோல் கும்பி அடித்த பிறகு பிரசாதம் வழங்கப்படும்.
அனைத்து பெண்களும் சந்தோஷமாக இருந்தார்கள்.
அன்று ஏனோ செல்லம்மா பாட்டியின் முகம் சரியில்லை, ஏன் என்னாச்சு பாட்டிக்கு என்று மொழிக்கு தோன்ற..
“என்ன பாட்டி உங்க மூஞ்சி சரியில்லை” என்று மொழி அவரிடம் கேட்க.
“கொஞ்ச நேரம் பொறுடி” என்றவர் அனைவரும் சென்ற பின்.
” என் பேரன் வந்திருக்காண்டி மாடியில இருக்கான் உடம்பு சரியில்லை போல, எனக்கு மாடி ஏறி இறங்க முடியவில்லை. நேத்து வந்தவன் சரியாவே சாப்பிடல கொஞ்சம் என்னவென்று பார்த்துட்டு வரியா,”என்று மொழியிடம் சொல்ல.
” சரி பாட்டி “என்றவள் மேலே சென்றாள்.
அந்த அறையில் பெட்ஷீட்டை நன்றாக மூடி தூங்கிக் கொண்டிருந்தான் ரிஷி.
மொழி அவன் அருகே சென்று ‘ஹலோ ஹலோ ஹலோ சார்’ என்று பலமுறை அழைக்க.
அவன் விழித்துக் கொள்ள வில்லை நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.
மொழிக்கு அவன் எழுந்து கொள்வது போல் தெரியவில்லை என்றவள், மெல்லமாக அவனைத் தட்டி எழுப்ப..
அவன் அப்பொழுதும் எழுந்து கொள்ளவில்லை.
மெல்ல அவன் பெட்ஷீட் டை இழக்க.
வெளிச்சம் பட்டு கண் திறந்தான் ரிஷி.
பட்டுப்பவாடை தாவணியில் தன் முன் நின்ற பெண்ணை அவன் முறைத்துப் பார்க்க.
அவன் முறைத்துப் பார்த்ததை பார்த்தவள். “என்ன என்னை பார்த்து சைட் அடிக்கிறியா?” என்றாள் ரிஷியை பார்த்து.
அவனோ அவளை முறைத்துபார்த்து யார் என்பது போல் பார்க்க.
“உங்க பாட்டி தான் மேல அனுப்பிச்சாங்க உங்களுக்கு உடம்பு சரியில்லாமே” என்றவள் அவனின் கையை தொட்டு பார்க்க அதுவோ நெருப்பாக கொதித்தது
“ஹலோ பாஸ் இவ்வளவு சூடா இருக்கு” என்றவள்.
“பீவருக்கு மெடிசன் போட்டிங்களா” என்றாள்.
அவனோ இல்லை என்று தலையாட்ட.
கீழே சென்றவள் பாட்டியிடம் பீவருக்கு மருந்து கேட்க..
அவரோ இல்லையே என்று சொல்ல.
தன்வீடு சென்றவள் அவனுக்கு கஞ்சி வைத்து, மாத்திரை எடுத்துக் கொண்டு மாடி வந்தாள்..
அதை அவனிடம் தர “வேண்டாம்” என்று மறுத்தான்.
“ஹலோ பாஸ் எவ்வளவு சூடா இருக்கு. மெடிசன் போடுங்க ஃபீவர் அதிகமாயிடுச்சுன்னா ஜன்னி வந்துற போது, இங்க பெரிய ஹாஸ்பிடல் எதுவுமில்லை சொன்னா கேளுங்க மாத்திரை போடுங்க'” என்ற மொழி மாத்திரையை அவன் கையில் வைத்து, கஞ்சியை அவனை குடிக்க சொல்ல.