தலையில் ஏற்பட்ட காயத்தால் உண்டான உதிரப்போக்கின் காரணமாக சுந்தர பாண்டியன் கண் விழிப்பதற்கே மதியம் இரண்டு மணி ஆகி விட்டது.
Advertisement
ஸ்கேன் அனைத்தும் எடுத்துப்பார்த்து விட்டு, அவருக்கு உடலில் வேறெந்த பிரச்சனையும் இல்லை என்று உறுதி செய்த பின்பே அவரைக் காண அனுமதி அளித்தனர் மருத்துவர்கள்.
அவர் கண்விழிக்கும் வரையில் அங்கும் இங்கும் அசையாமல் தவிப்புடன் காத்துக் கொண்டிருந்த சந்தனபாண்டியை முதலில் உள்ளே சென்று பார்த்து வரச்சொல்லி மீனாட்சி கூற,
Advertisement
Advertisement
“இல்லைத்தா நீ முதல்ல போய் பாரு.. அதான் சரியா இருக்கும்” என்று மறுத்தார் அவர்.
“இல்லை மாமா.. அவர் உங்களை பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாரு.. நீங்க போங்க” என்று வற்புருத்தி அவரை உள்ளே அனுப்பி வைத்தார் மீனாட்சி.
Advertisement
இத்தனை வருடங்கள் யார் முகத்தை பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாரோ, இன்று அதே முகத்தைக் காண மிகுந்த அவாவுடன் அந்த அறையினுள் காலெடுத்து வைத்தார் சந்தன பாண்டியன்.
அங்கு படுக்கையின் மீது தலையில் கட்டோடு, கண்களை மூடி படுத்திருந்த சுந்தர பாண்டியனைக் காண்கையில் அவருக்கு சொல்லாலண வலி இதயத்தில் ஏற்பட்டது, அதுதான் இரத்தப்பாசம் போலும்.
இருவரின் மனதிற்கான இடைவெளி நூலளவு கூட இல்லாத பொழுதில், இருவரின் உடல்களுக்கான அந்த சிறிய தூரத்தை கடப்பது அவருக்கு அவ்வளவு எளிதானதாக அல்ல.
நகர மறுத்த கால்களை முயன்று நகர்ந்தி முன்னேறி அந்த படுக்கையின் அருகில் சென்று ஒரு நிமிடம் தன் தம்பியின் முகத்தை ஆழப்பார்த்தார்.
இத்தனை வருடம் எதிர் எதிர் வீட்டில் வசித்தாலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்ட தருணம் மிக அரிது. அப்படியே நேருக்கு நேர் பார்த்துக்கொண்டாலும் இருவரின் கண்களும் வெளிப்படுத்துவது கோபத்தை மட்டும் தான்.
ஆனால் இப்போது சுந்தரபாண்டியனை சந்தனபாண்டி பார்த்த பார்வையில் இருந்தது அன்பு மட்டுமே.
சுந்தர பாண்டியன் இன்னும் கண்களை திறக்க முடியாமல் இமை மூடியே படுத்திருக்க,
நடுங்கும் கரங்களுடன் தன் தம்பியை எங்கே அவருக்கு வலித்துவிடுமோ என்று மிகவும் மென்மையாக தொட்டார் சந்தன பாண்டியன்.
அவரின் தொடுகையில் மிகவும் சிரமப்பட்டு இமைகளை பிரித்த சுந்தர பாண்டியன், அங்கு தன் முகத்திற்கு மிகவும் நெருக்கமாக தெரிந்த தன் தமையனின் முகத்தைக் கண்டு ஆனந்தமாய் அதிர்ந்தார்.
அதுவும் அவர் கண்களில் தெரிந்த கனிவு, சுந்தர பாண்டியனின் மனதில் தேனைவிட தித்திப்பாய் இறங்க, காய்ந்து போன அவரின் உதடுகள் மெல்லமாய் “அண்ணா” என்று முணுமுணுத்தது.
அவரின் கண்களில் தெரிந்த மகிழ்ச்சியே சொல்லாமல் சொல்லியது அவர் சந்தன பாண்டியனின் உறவை எந்த அளவிற்கு தேடியுள்ளார் என.
அதை உணர்ந்து கொண்ட சந்தன பாண்டியனின் கண்களில் இருந்து இரு சொட்டுக் கண்ணீர் விழ, “என்னை மன்னிச்சிடு சுந்தரம்” என்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டு மன்றாடும் குரலில் கேட்க,
அதை மறுத்துவிட்ட சுந்தர பாண்டியன், “நீ என்னை ஏத்துக்கிட்டதே போதும் அண்ணே.. எங்க கடைசி வரைக்கும் என்னை பகையாளியாவே தள்ளி நிறுத்திருவியோன்னு எத்தனை நாள் மருகியிருப்பேன் தெரியுமா.. இப்போதான் சந்தோஷமா இருக்கு அண்ணா” என்று மிகவும் தடுமாற்றத்துடன் அவர் பேச,
அவரின் உடல்நிலையை உணர்ந்து கொண்ட சந்தனபாண்டியனும் அதற்கு மேல் இந்த பேச்சை வளர்க்க வேண்டாம் என தன் தம்பியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு முடிவெடுத்தவர்,
“இனி பழசை பத்தி பேச வேண்டாம் சுந்தரம்.. இத்தனை நாள் நடந்ததை ஒரு கெட்ட கனாவா நினைச்சு மறந்துபுடுவோம்.. இனி இருக்க வாழ்க்கையை ஒன்னு மன்னா இருந்து வாழ வேண்டி தான் என்ன நான் சொல்றது” என்று அவர் கேட்டுவிட்டு புன்னகைக்க,
அண்ணனின் வழியே தன் வழி என்று சுந்தர பாண்டியனும் அதை ஆமோதித்து புன்னகைத்தார்.
அதன் பின் ஒருவர் மாற்றி ஒருவராக உள்ளே வந்து அவரை பார்த்து நலம் விசாரித்துவிட்டு போக, அவரின் கண்களோ தன் மனையாளைத் தான் தேடியது.
அனைவரும் பார்த்துவிட்டு அகன்ற பின் கடைசியாக அறைக்குள் நுழைந்த மீனாட்சி, அறை வாயிலிலே நின்று அங்கு கட்டிலின் மேல் வேரறுந்த ஆலமரமாய் கிடந்த தன் கணவனைக் கண்டார்.
அங்கு கட்டிலில் கிடந்த சுந்தரபாண்டியனும் தன் மனைவியைக் கண்டு முகம் மலர்ந்து “வா” என்பதைப் போல் ஏக்கத்துடன் தலையசைக்க,
அடுத்த நொடி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் தன் கணவனின் மார்பில் சென்று தஞ்சம் அடைந்திருந்தார் மீனாட்சி.
அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை அனைத்தும் தனக்கான இடத்தை அடைந்ததும் மொத்தமாய் வெளிவந்து சுந்தர பாண்டியனின் மார்பை ஈரமாக்க, மீனாட்சியின் மனதில் உள்ள பாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கண்ணீராய் கரைந்து ஓடியது.
அவரின் மனநிலை புரிந்த சுந்தர பாண்டியனும் அழுதுவிடட்டும் என்று ஆதரவாய் அவர் முதுகை நீவி விட்டுக் கொடுத்தார்.
சற்று நேரம் கழித்து மீனாட்சியின் அழுகை குறைந்து விசும்பலாய் மாற, “கண்ணுக்குள்ள முல்லை பெரியாரை விட பெரிய டேம் வச்சிருப்ப போலையே மீனாம்மா.. இவ்ளோ தண்ணீர் வந்துட்டே இருக்கு” என்று தன் மனையாளைக் கிண்டல் செய்து அந்த சூழ்நிலையை இலகுவாக்கினார் சுந்தரம்.
அவரின் கிண்டலைக் கேட்டு பொய்க்கோபம் கொண்ட மீனாட்சி வேகமாக அவரின் மார்பில் இருந்து தலையை எடுத்து அவரை முறைத்துப் பார்க்க,
“அய்யோ பயமா இருக்கு” என்று போலியாக பயப்படுவது போல் பாவனை செய்தார் சுந்தர பாண்டியன்.
“சும்மா விளையாடாதிங்க.. நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா??” என்று வருத்தத்துடன் கூறிய மீனாட்சி சலுகையாய் அவரின் தோளில் சாய்ந்து கொள்ள,
அவரின் தலை மீது தன் நாடியைப் பதித்த சுந்தரபாண்டியன், “எதுக்கு இந்த பயம் மீனாம்மா.. உன்னை கல்யாணம் பண்ணுறப்போ உனக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தை மறந்துட்டியா?? உன்னை என்னைக்கும் தனியா விட்டுட்டு போகவே மாட்டேன்.. அப்படியே போனா உன்னையும் வந்து கூட்டிட்டு போய்டுவேன்னு சொன்னேன்ல.. அப்பறம் என்ன பயம்?? என் மேல நம்பிக்கை இல்லையா??” என்று அவர் கேட்க,
“உங்களை நம்பாம யாரை நம்ப போறேன்ங்க.. நீங்க என்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டிங்கன்னு தெரியும் தான் .. இருந்தாலும் மனசு கேட்க மாட்டேங்குது.. ஆனா கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கும்னு சொல்ற மாதிரி, இப்போ மாமா நம்மளை மன்னிச்சு ஏத்துக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.. இத்தனை வருஷமா உங்களை உங்க குடும்பத்துல இருந்து பிரிச்சுட்டேன்னு நெஞ்சோரத்துல ஒரு குத்தல் இருந்துட்டே இருக்கும்.. இன்னைக்கு தான் நிம்மதியா இருக்கு” என்று மீனாட்சி மனது நிறைந்து கூற,
அதை ஆமோதித்த சுந்தர பாண்டியனும் ஒரு புன்னகையுடன் தன் மனைவியின் கைகளை பற்றிக்கொண்டு மருந்தின் வீரியத்தில் சிறிது நேரத்திலே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டார்.
மாலை நேர சிற்றுண்டி வகைகளை சமைத்துக் கொண்டிருந்த சீதாவிடம் வந்த மதுரம், “சீதா செல்லம் இன்னைக்கு எனக்கு ஆயில் ஃபுட் வேண்டாம் புரூட் சாலட் மட்டும் போதும்.. ஜும்பா கிளாஸ் முடிச்சுட்டு வந்து சாப்பிட்டுக்குறேன்” என்று கண்ணாடியை பார்த்து தன் முகத்தை டச்சப் செய்து கொண்டே மதுரம் கூற,
அப்போது அங்கு சமையலறையிலே அமர்ந்து கொண்டு சீதா சுட்டுத்தரும் மிளகாய் பஜ்ஜிகளை சுடச்சுட உள்ளே தள்ளிக் கொண்டிருந்த வினோத், “ஜும்பா கிளாஸ் போகிற வயசா கிழவி உனக்கு??” என்று அவரை வம்பிழுத்தான்.
அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காத மதுரமும் தன் மருமகளிடம் திரும்பி, “ஆமா அஜ்ஜுவும் அஷூவும் எங்க?? அவனுங்க வந்தா நைட் மொட்டை மாடியில மீட்டிங்க்னு சொல்லிடு” என்று அவருக்கு நினைவுபடுத்தினார்.
அப்போது தான் ஞாபகம் வந்தவராக சீதா தன் அத்தையிடம், “ஆமா அத்தை அன்னைக்கு அஞ்சலி அப்பாக்கிட்ட பொண்ணு கேட்க போனீங்களே.. அது என்னாச்சு?? நேத்து ஃபுல்லா உங்க மகன் பக்கத்துலயே இருந்ததுனால அதைப்பத்தி கேட்கவே மறந்துட்டேன்” என்று வினவினார்.
அதைக் கேட்டு பெரிதாய் புன்னகைத்த மதுரம், ” நான் சொன்னதும் அந்த மீசைக்கார குடும்பம் ஏதோ மின்சாரத்துல கையை வச்ச மாதிரி அம்புட்டு ஷாக் ஆகிட்டாங்க.. முதல்ல முடியவே முடியாதுன்னு சொன்னாரு.. ஆனா இந்த மதுரம் ஒரு விஷயத்தை கையில எடுத்தா முடிக்காம விடுவேனா?? பேசிப்பேசியே அவங்களை நல்லா குழப்பி விட்டுட்டேன்.. குழம்புன குட்டையில தான மீன் பிடிக்க முடியும்… கூடிய சீக்கிரமே பெரிய திமிங்கலமாவே பிடிக்கிறேன்.. நீ ஒன்னும் கவலைப்படாத அஸ்வத் கல்யாணம் கூடிய சீக்கிரம் அவன் விரும்புன பொண்ணோட நடக்கும்” என்று அவர் வாக்களிக்க,
மதிய உறக்கத்தை முடித்துவிட்டு அப்போது தான் உள்ளே நுழைந்த வாசுதேவர், அவர்கள் பேசியதை அரைகுறையாய் கேட்டுவிட்டு , ” என்ன மது டார்ஜிலிங்க் திமிங்கலத்தை பிடிக்கப் போறியா??” என்று வாயைப் பிழந்து கொண்டே வந்தார்.
அவரின் வாயில் ஒரு மிளகாய் பஜ்ஜியை திணித்த வினோத், “ஆமா அவங்க திமிங்கலம் பிடிக்க போறாங்க நீங்க போய் வலை பின்னிக் கொடுங்க.. குடும்பத்துல ஒருத்தராச்சும் தெளிவா இருக்கானா பாரு.. சரியான மெண்டல் குடும்பம்” என்று கடைசி வரியை மட்டும் மெதுவாய் கூறிக் கொண்டான்.
“டேய் நீ வெட்டிக்கதை பேசிட்டே இருக்காம போய் அந்த கீதா பொண்ணோட அப்பா எப்படி இருக்கார்?? அங்க என்ன நிலவரம்னு பார்த்துட்டு வா.. நாளைக்கு அடுத்த டிராமாவுக்கு ரெடி ஆகணும்” என்று மதுரம் பொடி வைத்துப் பேச,
“ஆமா இவங்க பெரிய முத்து பட ரெங்கநாயகி.. டெய்லி ஒரு நாடகத்துல நடிக்க ரிகர்சல் பார்க்க போறாங்க.. ” என்று அலுத்துக் கொண்ட வினோத், அடுத்து பாட்டி எதுவும் எடுத்து அவனை அடிக்கும் முன் அங்கிருந்து ஐந்தாறு மிளகாய் பஜ்ஜிகளை அள்ளிக்கொண்டு எஸ்கேப் ஆகியிருந்தான்.
அவன் செய்கையில் மற்றவர்களும் புன்னகையுடன் செல்லும் அவனையே பார்த்திருந்தனர்.
பட்சிகளும் பறவைகளும் தங்கள் இறையை தேடிக்கொண்டு தங்கள் கூட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த அந்த அந்திமாலை வேளையிலே, மொட்டை மாடியில் நின்று அந்த எல்லைகளற்ற வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் அஜய்.
அப்போது அவன் தோளில் ஒரு கரம் விழுந்தது.
அஸ்வத் தான் வந்திருந்தான்.
அவனைக் கண்டுவிட்டு எதுவும் பேசாமல் மீண்டும் அஜய் வானத்தை வெறிக்கத்துவங்க,
“என்னாச்சு அஜய்?? வாட் இஸ் ஈட்டிங்க் யூ?? மனசுல வச்சுட்டு இருந்தா இன்னும் டென்ஷன் தான் ஆகும்..அவுட் வித் இட்.. ” என்று அஸ்வத், அஜயின் மனதைப் படித்தவன் போல் கூற,
“எல்லாம் கீதா பிரச்சனை தான் அஷு” என்று உணர்ச்சிகளற்ற குரலில் கூறினான் அஜய்.
“ஏன் அஜ்ஜு என்னாச்சு?? கீதாக்கு உன்னை பிடிக்கும் டா அதை நினைச்சா ஃபீல் பண்ணிட்டு இருக்க?? ஆமா திடீர்னு இன்னைக்கு எதுக்கு சித்தப்பா கிட்ட வந்து அப்படி பேசுன?? அதான் பாட்டி கரெக்டான டைம் பார்த்து பேசிருப்பாங்கள்ள??இப்போ பாரு சித்தப்பா மறுபடியும் முருங்கை மரம் ஏறிட்டாரு” என்று அஸ்வத் ஆதங்கப்பட,
ஒரு வெற்றுப்புன்னகையை அவனிற்கு பதிலாக அளித்த அஜய், “யார் பேசிருந்தாலும், எப்போ பேசிருந்தாலும் அவர் அப்படித்தான் சொல்லுவாரு” என்று விட்டேற்றியாக பதிலளிக்க, அஸ்வத் அவனின் நடவடிக்கைகளைக் கண்டு குழப்பமடைந்தான்.
“அஜய் என்னாச்சு?? சித்தப்பா இப்போ வேண்டாம்னு சொல்றதுக்கு பின்னால வேற ஏதும் காரணம் இருக்கா என்ன?? சொல்லு அஜய்” என்று அஸ்வத் குழப்பமாகக் கேட்க,
” ஆமாம் ” என்பதைப் போல் தலையசைத்தான் அஜய்.
” அப்படி என்ன காரணம்??” என புரியாமல் அஸ்வத் கேட்டான்.
இப்போது வானத்தை விட்டுவிட்டு அவன் கண்களை நேராய் பார்த்த அஜய், ” நீ அஞ்சலியை உண்மையா லவ் பண்றியா அஸ்வத்??” என்று மனதில் ஏதோ வைத்துக் கொண்டு கேட்க,
“டேய் லூசு நான் என்ன கேட்டா நீ என்ன சம்பந்தமே இல்லாமல் பேசுற. நான் அஞ்சலியை லவ் பண்றதுக்கும் கீதாவை கல்யாணம் பண்ணி வைக்க சித்தப்பா தயங்குறதுக்கும் என்னடா சம்மந்தம்??” என்று கேட்டான் அஸ்வத்.
” சம்மந்தம் இருக்கோ இல்லையோ.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. அஞ்சலியை நீ உண்மையாவே லவ் பண்றியா??” என்று மீண்டும் அதே கேள்வியை கேட்டான் அஜய்,
“இதுல என்னடா உனக்கு டவுட்டு .. நான் அஞ்சலியை உண்மையா தான் டா விரும்புறேன்” என்று உளமாற கூறினான் அஸ்வத்.
” என்ன நடந்தாலும்.. இல்லை என்ன நடந்திருந்தாலும் அஞ்சலியை விட்டு போக மாட்ட தானே??” என்று கேட்ட அஜயின் குரலில் சற்று எதிர்பார்ப்பு இருந்ததோ ..
” டேய் என்னடா பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்க.. உன் பேச்சே சரியில்லை.. என்னாச்சுன்னு ஒழுங்கா சொல்லு.. அஞ்சலிக்கு என்ன??” என்று காதல் கொண்ட மனம் பதற அஸ்வத் வினவினான்.
” ஷ் அஸ்வத்.. நான் கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு.. அப்பறம் நான் சொல்றேன்” என்று அஜய் தனக்கு பதில் கிடைக்காமல் விட மாட்டேன் என நிற்க,
” என்னைப்பத்தி உனக்கு தெரியாதா அஜய்.. நான் போய் எப்படிடா அஞ்சலியை விட்டுட்டு போவேன் … என்ன நடந்திருந்தாலும் இனி என்ன நடந்தாலும் அவளை நான் விட்டு கொடுக்க மாட்டேன்.. அவ என் அஞ்சலி டா” என அஜய் தன்னை நம்பவில்லையே என்று இயலாமையுடன் வெளிவந்தது அஸ்வத்தின் குரல்.
” உன்னைப்பத்தி தெரிஞ்சதுனால தான் உன்கிட்ட இதை சொல்லணும்னு நினைச்சு கேட்டேன்.. இல்லைன்னா இந்த உண்மை கடைசி வரை என்னோடயே இருந்திருக்கும்” என்று அஜய் பீடிகை போட,
” அஜ்ஜு என்னன்னு இப்போ சொல்லப்போறியா இல்லையா?? டென்ஷன் ஏறுது டா.. அஞ்சலிக்கு என்னாச்சு.. அஞ்சலிக்கும் உன் கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்.. சித்தப்பா எதுக்கு கீதாவை ஏத்துக்க மாட்டேங்குறாரு.. எனக்கு மண்டை வெடிக்குற போல இருக்கு ” என்று கூறிய அஸ்வத் தலையைப் பிடித்துக் கொள்ள,
அஜயோ அவனை நிதானமாய் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே, ” அஞ்சலி ஒரு ரேப் விக்டிம் ( கற்பழிக்கப்பட்டவள் ) ” என்று மின்னாமல் முழங்காமல் அஸ்வத் இதயத்தில் மெதுவாய் இடியை இறக்கினான்.
அதைக்கேட்ட அஸ்வத் தன் செவிகளை நம்ப முடியாமல் அதிர்ந்து போய் நின்று விட்டான்.