Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 24.3

திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த பின்னே இதழில் முத்தமிட்டதிலிருந்தே இன்றிரவிற்கான படபடப்பு வந்துவிட்டது செல்வியினுள்.

தற்போது காரில் ஏறியதும் படபடப்பு அதிகமாகிட, அதனை அவளின் இமைகள் காண்பித்து கொடுக்க, “என்ன என்னவோ போல இருக்க?” என கிசுகிசுத்தான் குறுநகையோடு.

செல்வனின் கையை அழுத்தமாய் பிடித்து கண்ஜாடையில் டிரைவரை காண்பித்தாள்.

“டிரைவர் கஷ்டப்படுற அளவுக்கு என்ன கேட்டுட்டேன் உன்னை?” என மீண்டும் சிரிப்போடு வம்பிளுக்க, திரும்பிக்கொண்டாள் ஜன்னல்புறம்.



Advertisement

“நீ முகத்தை திருப்பிட்டு வரதுக்கா அம்மா, அண்ணன் வேற கார்ல போய்ட்டு நம்மளை தனியா விட்டாங்க?”

“கால் மணி நேரத்துல வீட்டுக்கு போகப்போறதுக்கு தனி காரு தேவையா? எல்லாரோடவும் வந்திருந்தாலாவது ஜாலியா இருந்திருக்கும்”

“இந்த கால்மணி நேரத்தோட வேல்யூ என் அம்மா அண்ணனுக்கு தெரிஞ்சிருக்கு, உனக்கு தெரியல”

Advertisement

இவள் தவிப்பாக பார்க்க, “நான் சின்னதா ஏமாந்துடக்கூடாது, ஆனா பிடிக்காத மாதிரியே ரியாக்ட் பண்றது. போடீ” என்றான் முறைப்பாக.

Advertisement

“பிடிக்கலனு யார் சொன்னா? டிரைவர் இருக்கானுதானே?” என கிசுகிசுக்க செல்வியின் உதட்டசைவில் சொக்கிப்போனான் பொற்செல்வன்.

இருவரும் வீட்டிற்கு வர, மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றாள் ராஜலஷ்மி.

பூஜையறையில் விளக்கேற்றி சோபாவில் வந்தமர்ந்த செல்வியிடம், “இப்போ ஸேரி கட்டுறது பழகிடுச்சு போல” என கண்ணிமைத்தாள் ராஜலஷ்மி.

Advertisement

“அக்கா” என வெக்கத்தோடு தலைகவிழ்ந்தாள் செல்வி.

“ஹம்… உங்களுக்கு தனிமை கொடுக்கவேண்டி இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாருக்கும் டையர்ட் ஆகிடும் பாரு, எனக்கும்தான்” என்று ராஜலஷ்மி சொல்ல,

“நேத்துலயிருந்து ஒரே அலைச்சல், நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன், என்று நவீனா சிரிப்போடு அவளறைக்கு செல்ல, அமிர்தவள்ளி புருஷோத்தமனும் அதை சொல்லியே அறைக்குள் சென்றனர்.

“பார்த்தியா? நான் சொன்ன மாதிரியே நடந்துச்சா? நானும் மனுஷிதானே? எனக்கு மட்டும் டையர்ட் ஆகாதா? நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க. உங்க ரூம்ல இல்ல, அந்த ரூம்ல” என குறும்பு சிரிப்போடு அவளறைக்கு சென்றாள் ராஜலஷ்மி.

“வா” என அழைத்து போனான் மாடியிலுள்ள அறைக்கு.

“ஏன் உங்க ரூம் என்னாச்சு?”

“அதை டெகரேட் பண்ணுவாங்களா இருக்கும்” என கண்ணிமைக்க, செல்வியின் இமைகள் படபடத்தது.

“நம்ம கல்யாணம் எப்படி இருந்தது? உனக்கு எதெல்லாம் ரொம்ப பிடிச்சிருந்தது? எதாவது பிடிக்காம இருந்ததா?”

“பிடிக்கலனு எதுவுமே இல்ல, எல்லாமே பிடிச்சிருந்தது, முக்கியமா என் அப்பா வராதது ரொம்ப பிடிச்சிருந்தது. என்ன சொல்லி ப்ளாக்மைல் பண்ணுனிங்க?”

“நான் ஏதும் ப்ளாக்மைல் பண்ணல, உனக்கு பிடிக்கலனு வராம இருந்திருப்பார். இளவரசனும் பேசியிருப்பான் போல”

“இல்ல, என் அண்ணா அம்மா சொன்னாலாம் அடங்கமாட்டார், நீங்க எதாவது சொல்லியிருப்பிங்க” என்றாள் உறுதியாக.

“நம்ம கல்யாணத்தை பத்தி பேசினா நீ உன் அப்பா பத்தி பேசுற?”

“ஆமால்ல? நாம வேற பேசுவோம், கல்யாணத்துல அவ்வளோ பேர் இருந்தாங்க, வீட்டுக்கு யாரும் வரலையா? நாம மட்டும் இருக்கோம்”

“நெருங்கின சொந்தம்லாம் பொள்ளாச்சிலதான் இருக்காங்க, எல்லாரும் நேத்து நைட் மண்டபத்துக்கு வந்துட்டாங்க, கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பிட்டாங்க, தேவாண்ணா கல்யாணத்துலயும் இப்படித்தான் நடந்தது, உனக்குதான் மறந்துடுச்சி” என்றான்.

பிறகு என்ன பேசவென்று தெரியவில்லை செல்விக்கு. பொற்செல்வன் செல்வியையே பார்த்திருக்க, “எப்போவும் பேச நிறைய இருக்கும், இன்னைக்கு பார்த்து ஏதும் தோணமாட்டேங்குது” என்றாள்.

பொற்செல்வன் சிரிக்க, “நிஜமாதான் சொல்றேன்” என்றாள்.

“நீ பொய் சொல்றேனு நான் சொல்லலையே, ஹம்… அதான் பேச ஏதும் இல்லைனு சொல்லிட்டியே, ரெஸ்ட் எடு, நைட் ஒர்க் இருக்கு” என்று படுத்து கண்மூடினான்.

“தூக்கம் வருதா?” என இரண்டு முறை கேட்டும் பதிலே சொல்லவில்லை பொற்செல்வன்.

செல்வியும் உறங்க முயன்று படுத்தாள். இன்றிரவிற்கான அவஸ்த்தை காலையிலிருந்தே இருக்க, தற்போது பொற்செல்வன் ஒர்க் இருக்கு என்று சொன்னபின்னே உறக்கம் அணுகவேயில்லை.

அவ்வப்போது செல்வியின் பார்வை பொற்செல்வனை தொட்டு மீள, அதிகாலையில் எழுந்ததால் உறங்கட்டும் என நினைத்தால் இவள் உறங்கமாட்டாள் போலவே என நினைத்திருந்தவன் முற்றிலும் கவிழ்ந்து படுத்தான்.

இரண்டு மணி நேரம் கழித்து கதவு தட்டப்பட, செல்வி வந்து கதவைத் திறந்தாள்.

“தூங்கலையா செல்வி?”

“இல்ல நவீனாக்கா, தூக்கம் வரல”

“சின்னவர்?”

“அவர் தூங்குறார்”

“சரி நீ வா, ஆறு மணிக்கு விளக்கேத்தனும், அரைமணி நேரம்தான் இருக்கு” என அழைத்துப் போனாள் தன்னறைக்கு.

“தேவா மாமா எங்கே?”

“உன்னை இங்க வச்சுதான் ரெடி பண்ணனும்னு சொன்னேன், வெளில போய்ட்டார்” என்றதும் சங்கடமாகிட, தலைகுனிந்தாள் செல்வி.

“இதுல சங்கடப்பட என்ன இருக்கு? சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா” என அவசரப்படுத்த, “ஹப்பா… இந்த பட்டு ஸேரிலயிருந்து தப்பிச்சேன்” என்று நவீனா கொடுத்த உடையை வாங்கிக்கொண்டு குளித்து வந்தாள்.

“திரும்பவும் பட்டு ஸேரியா?” என செல்வி அலுத்துக்கொள்ள, “பட்டு ஸேரின்னாலும் வெய்ட் இருக்காது. இன்னைக்கு நைட் கட்டுறதுக்காகவே ஸ்பெஷலா வாங்கின ஸேரி. ஏழு மணிக்கு நல்ல நேரம். கொஞ்ச நேரம்தான் கட்டிட்டிருக்கப்போற, ரூம்க்கு போனதும் ஸேரிக்கு வேலையில்ல” என்றபடி உள்ளே வந்தாள் ராஜலஷ்மி.

“அக்கா” என்றவளின் முகம் சிலிர்த்து சிவந்திட, சிரித்தபடி தயார் செய்து செல்வியை வெளியே அழைத்து வந்தாள் ராஜலஷ்மி.

பின்னே பொற்செல்வனும் வர, தெய்வ வழிபாடு செய்து, பெற்றோரிடம் ஆசிபெற்று தனதறைக்குள் சென்றுவிட்டான் பொற்செல்வன்.

“பால், டின்னர் எல்லாமும் ரூம்ல இருக்கு, பை பை” என கண்ணிமைத்தாள் ராஜலஷ்மி. நவீனாவும் வெக்கப் புன்னகை சிந்த, ‘அவரை ஃபேஸ் பண்றதை விட இவங்களை ஃபேஸ் பண்றது ரொம்ப கஷ்டம்டா சாமி’ என நினைத்தாள் செல்வி.

“போ போ… இல்லைனா உன் ஹஸ்பண்ட் நாங்க லேட் பண்ணுறோம்னு நினைப்பார்” என பொற்செல்வன் அறை நோக்கி கை காண்பிக்க, கால்கள் பின்னியது செல்விக்கு.

செல்வியின் மனநிலை புரிந்து நவீனா கைப்பிடித்து அழைத்துப் போய் அறைக்கதவை திறந்து விட, உள்ளே சென்றாள் செல்வி. கதவு மூடும் சத்தம் கேட்டு நிமிர, அறையை தாழிட்டான் பொற்செல்வன்.

“என்ன? பெரிய அண்ணி ரொம்ப கலாய்ச்சிட்டாங்களா?”

ஆமாம் என்பதாய் செல்வி தலையசைக்க, சிரித்தவன் தாழ்ந்திருந்த செல்வியின் தாடை தொட்டு நிமிர்த்திவிட்டான்.

பொற்செல்வன் அறைக்குள் சிலமுறை வந்திருக்கிறாள் ஆதலால், பொற்செல்வன் அறை எப்படியிருக்கும் என அறிவாள். செல்வி நினைத்தது போலல்லாமல் அறை மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மெத்தை ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

“இதுக்கு முன்னாடி இந்த ரூமை பார்த்ததேயில்லையா?” என கைப்பிடித்து அழைத்து போய் கட்டிலில் அமர வைத்தான்.

“பசிக்குதா? எதாவது சாப்பிடுறியா?”

“இல்ல பசிக்கல, மணி ஏழுதானே ஆகுது”

“காஃபி, டீ?”

“அதுவுமா இருக்கு?”

“அங்க பாரு” என காண்பிக்க, பழங்கள், இனிப்புகள், இரவு உணவு என அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

“ஒரு ஃப்ளாஸ்க்குல காபி, இன்னொனுல டீ, இன்னொனுல பால் இருக்கு, உனக்கு எது வேணும்?”

“டீ குடிக்கிறேன், பூஜை முடிஞ்சதும் உள்ள அனுப்பிட்டாங்க”

இவன் ஊற்றிக்கொடுக்க, “உங்களுக்கு?” என்றாள்.

“எனக்கு வேண்டாம், நீ குடி” என்று குடிக்கும் வரை காத்திருந்தவன், பின்னே செல்வியின் மடியில் படுத்து அவளின் கையை தனக்குள் வைத்தபடி, “குட் கேர்ள்” என்றான்.

எதற்கு பாராட்டுகிறான் எனப்புரியாமல் செல்வி விழிக்க, “இந்த சினிமா நாடகத்துலலாம் வர மாதிரி டைம் ஏது கேட்டுடுவியோனு பயந்துட்டிருந்தேன், ஆனா நீ அப்படியில்லனு புரிஞ்சது. இதை இப்படியே மெயின்டைன் பண்ணு” என்று கட்டிலில் படுத்து செல்வியிடம் தனது கையை நீட்டினான்.

தயக்கம் உடைத்து செல்வனின் கையை செல்வி பற்ற, தன்னருகே படுக்க வைத்தவன், “நானும் மதியம் தூங்கல” என்றான்.

“நான் முழிச்சிருக்கிறது தெரிஞ்சா நீ தூங்கமாட்டனு கண்ணை மூடிப்படுத்திருந்தேன், ஆனாலும் நீ தூங்கல. தூக்கம் வருதுனு மட்டும் சொல்லு… பிச்சுடறேன்” என்று கண்டிக்க, “சொல்லமாட்டேன்” என்றாள் சின்னக்குரலில்.

“ரொம்ப கன்ட்ரோல் பண்ணித்தான் பேசிட்டிருக்கேன், கன்ட்ரோலை விட்டுடட்டுமா?” என்று செல்வியை நெருங்கினான்.

“ம்” என்ற செல்வி செல்வனை அணைத்துக்கொள்ள, செல்வியை சூறையாடும் வேகம் செல்வனுள். வேகமாக நடந்தாலே சற்று தூரத்தில் மூச்சு வாங்க அமர்ந்திடும் செல்வியை நினைத்து தன்னை நிதானப்படுத்தி பின்னே “செல்வி…” என அணைத்தவன் நெற்றி முத்தம் வைக்க, அவனின் சூட்டில் படபடத்தாள் செல்வி.

படபடக்கும் இமைகளை ஸ்பரிசித்த செல்வனின் இதழ்கள் சில நொடிகளிலேயே செல்வியின் இதழ்களை ஆக்ரமித்தது. காலையில் அன்பாய் கொடுத்த இதழ் முத்தம் தற்போது இல்லற சுவையோடு இருக்க, இன்ப அவஸ்த்தைக்கு உள்ளானாள் செல்வி.

நீண்ட முத்தத்திற்கு பின்னே செல்வனின் கைகள் செல்வி உடலில் பயணிக்க, தனது சேலை அகற்றப்பட்டிருப்பதை சில நிமிடம் கழித்துதான் உணர்ந்தாள்.

செல்வன் தொட்ட இடமெல்லாம் புத்துயிர் பெற, தானாய் உண்டானது மெல்லிய அதிர்வு. ஆனாலும் எதற்கும் மறுக்கவில்லை செல்வி.

மனைவியின் ஒவ்வொரு பாகமும் பாவனையும் ஈர்த்தது கணவனை. கணவனின் பார்வையில் பேரவஸ்த்தை உண்டாகிட, “யோவ், லைட் ஆஃப் பண்ணுய்யா” என்றாள்.

செல்வியின் புது பாவனையை ரசித்தவன், “என்ன ஸ்லாங்டீ இது? இப்போதான் இன்னும் ஜிவ்வுனு ஆகுது, லைட்லாம் ஆஃப் பண்ண முடியாது, பார்க்க வேண்டாமா?” என்றான்.

“நீங்க பார்க்குறது பிரச்சனையில்லை, உங்க பார்வையை என்னால மீட் பண்ண முடியல, ப்ளீஸ் ஆஃப் பண்ணுங்க” என்றாள்.

புன்னகையோடு, “சரி கண்ணை பார்க்க பிடிக்கலனா பார்க்காத, பார்க்க வேற இல்லையா என்ன?” என்றதும் செல்வி அடிப்பதுபோல் பாவனை செய்ய, “நீ என்ன கொடுத்தாலும் வாங்கிக்கிற மூடுல இருக்கேன்” என்று விளக்கணைத்தான்.

செல்வன் நெருங்கியதும் செல்வியின் கண்கள் தன்போல் மூடிக்கொள்ள, “செல்வி, என்னை பாருடீ” என்றான்.

செல்வி கண்களை திறக்க, அறையின் மெல்லிய வெளிச்சத்தில் “ம்?” என செல்வன் அனுமதி கேட்க, செல்வி செல்வனின் கையைப் பற்ற, செல்விமேல் படர்ந்தான்.

செல்வனின் செய்கையில் மிரண்டு மறுக்கத் துடிக்கும் கரங்களை கட்டுப்படுத்தி செல்வன் முதுகைப் பற்றினாள். தனக்கு மறுக்காத செல்வியினுள் பள்ளத்தில் பாயும் நீர்போல் பரவினான் செல்வன்.

ஆசை மீறும் நேரம் செயற்கைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. செல்வனின் முத்தங்கள் செல்வியின் உடல் முழுதும் கடந்து போக, பழைய உடலில் புதிய உணர்வுகள் பூத்தது.

மனைவியின் தேகத்தில் சுகம் தராத பாகமே இல்லை. இன்பத்தின் தேடலுக்கு எல்லையில்லாமல் போக, செல்வியின் வெக்கங்கள் சிதறிப்போனது. ரகசியங்கள் எல்லாம் ரசனைகளின் காட்சியாகிட, இருவர் உடலும் இன்பத்தை பூசியது.

செல்வன் செல்வியினுள் மயங்கிக்கிடக்க செல்வியின் கண்கள் கிறங்கிக்கிடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!