Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே.. 16 1

நெஞ்சம் ஏங்குதே…

அத்தியாயம் -16



Advertisement

Advertisement

Advertisement

 மொழிக்கு ரிஷி தன் முகத்தை கூட பார்க்காமல் நின்றவனின் மேல் பயங்கர கோபம்.

Advertisement

அவன் கையை உதறி  விட்டு பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு  அவள் செல்ல போக.

அவளை பின்னிருந்து தூக்கியவன்,..

தன் தோளில்   போட்டுக்கொள்ள.

அவளோ அவனிடமிருந்து துள்ளினாள்,..

“விடுங்க ரிஷி” என்று.

“ஏய் கொஞ்ச நேரம் சும்மா இருடி”, என்றவன்.

குழந்தைகள் தூங்குவதை செக் பண்ணி பார்த்து  விட்டு..

மொழியை பக்கத்து அறைக்கு தூக்கி  சென்றான்,

“என்னை கீழ இறக்கி விடுங்க ரிஷி” என்றாள் கோபமாக.

“முடியாது” என்றவன் பக்கத்தில் இருந்த ஒரு  அறைக்கு அவளைதூக்கி வந்து பெட்டில் அவளை  விட்டவன் அவள் பக்கத்தில் அமர போக.

“நான் என் பசங்க கூட தூங்க போறேன்”. என்றவள் கதவை திறக்க போக.

அவளை கோழி அமுக்குவது போல்  அமுக்கி இழுந்து வந்தான் மீண்டும்.

“விடுங்க ரிஷி எதுக்கு என்னை இந்த ரூம்புக்கு தூக்கிட்டு வந்தீங்க”? என்றாள் கோபமாக..

“பொண்டாட்டியை எதுக்கு  தனியா தூக்கிட்டு வருவாங்க, சல்சா பண்ணத்தாண்டி”   என்றான் அவளை அணைத்த படியே..

“எனக்கு ஒரு சல்சாவும்  வேண்டாம் விடுங்க என்னை” என்றாள்.

அவனோ அவள் அணிந்திருந்த, இரவு ஊடைக்குள்  அவன் கையை விட்டவன், அவளின் இடுப்பை  இறுக்கமாக பிடித்து கொண்டவன்.

அவளின் கழுத்து வளைவில் முகத்தை புரட்ட.

“ரிஷி” என்றாள் கோபமாக.

“என்னடி உன் பிரச்சனை.

கிட்ட வரலன்னா கோச்சிட்டு போற.

உன் கிட்ட வந்தா. ஏன்னு  கேள்வி கேட்டு,  என்னை தள்ளி நிறுத்துற.

நான் என் தாண்டி பண்ணணும், சொல்லு பண்ணுறேன்”,..  என்றான் அவளின் வாசத்தை முகர்ந்தபடியே..

 “நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம் சாமி என்னை விடுங்க” என்றாள்.

“விடுறதுக்க உன்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து இருக்கேன்” என்றவன், அவளை அணைத்து படியே பேச..

“ரிஷி விடுங்க என்னை, நான் கோபமா இருக்கேன்”.,

“அந்த கோபத்தை குறைக்கத்தான் நான் வேலை பாத்துட்டு இருக்கேன் நீ அமைதியா இரு”..என்றான்.

 “நான்  ஜப்பான் வந்து எத்தனை நாளாச்சு, அப்போ  எல்லாம்  சும்மா இருந்துட்டு, நான் இன்னைக்கு என்னன்னு உங்க கைய புடிச்சு கேட்கவும் என்னை தூக்கிட்டு வரீங்க,  அப்படி ஒன்னும் நீங்க என்கிட்ட வர வேண்டாம் தள்ளி போங்க” என்றாள்

 “என்ன மொழி” என்றான்  ஏக்கமாக…

 “தள்ளிப் போங்க,  நீங்களா என் பக்கம்  வரல தானே, அப்போ நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க.

 நான் உங்களை தேடுவேன்னு உங்களுக்கு தெரியாதா,

 நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க என் பக்கத்துலே இருந்திங்க ஹக் பண்ணீங்க, கிஸ் பண்ணீங்க ஆனா கல்யாணம் முடிச்சதுக்கு அப்புறம் கண்டுக்கவே இல்ல

 எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்.

 நாம  வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டாம், அதுக்காக என் பக்கத்துல கூட இருக்க கூடாதா?  தள்ளி, தள்ளி போறீங்க,என் முகத்தைக் கூட  சரியா பாக்கல,  எனக்கு எவ்வளவு வேதனையா இருக்கும்” என்று கண் கலங்கியவளை.

 அணைத்து தன் கைகளில் வைத்துக் கொண்டவன்.

 “சாரிடி, சாரிடி நான் எதோ தப்பா நினைச்சுகிட்டு உன்கிட்ட  வர முடியல, மனசுல ஏதோ நெனச்சு  குழம்பிக்கிட்டு  உன் பக்கத்துல வரல, சாரிடி” என்றான்..

 “என்ன  குழம்பிட்டு இருக்கீங்க,  உங்களுக்கு என்கிட்ட வர  எது தடுக்குது, அஞ்சு வருஷம் போதாதா நம்ம தனியா இருந்தது.

 இன்னும்  என்னை தள்ளி வச்சு,  நீங்க என்னை  வேதனைப்படுத்துறீங்க ரிஷி” என்றாள்.

 “உன்னை தள்ளி எல்லாம் வைக்கல டி.

 ஏதோ மனசுல குழப்பம் எனக்கு கொஞ்சம் டைம் தேவைப்பட்டது,  கொஞ்சம் தள்ளி இருந்தேன் அதுக்காக  நீ இவ்ளோ ஃபீல் பண்ணுவேன்னு எனக்கு தெரியாது டி. சாரி இனிமே நான் உன்னை விட்டு தள்ளி இருக்க மாட்டேன் போதுமா”.

 “உங்க சாரியும்  வேணாம் பூரியும்  வேணாம் தள்ளிப் போங்க”‘ என்றாள், அவனை தள்ளிவிட்டபடியே.

 “ஏய் பொண்டாட்டி கொஞ்சம் கூல் ஆகுதுடி.

 மச்சான் நல்ல மூடுல இருக்கேன் ப்ளீஸ்” என்றான்.

 “ஆமாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இவருக்கு மூடு வரல நாங்க கைய புடிச்சு இழுத்து ஏன்னு கேட்டதும் இவருக்கு மூடு வந்துருச்சு போயா” என்றாள்.

 “என்னடி புருஷன மரியாதை இல்லாம பொயா, வாயா சொல்லுற”

 “போடா வாடான்னு  கூட சொல்வேன் அவ்வளவு கோவமா இருக்கேன் தள்ளிப் போங்க ரிஷி'”..

 “நீ கெட்ட வார்த்தையில் திட்டினாலும் கூட, நான் உன்னை விடமாட்டேன்”. என்றான் அவளை அணைத்தபடியே.

“ஆமா இவரு கல்யாணம் பண்ண அன்னைக்கே பொண்டாட்டியை அப்படியே கட்டி புடிச்சு முத்தம் கொடுத்து ஆசைல பேசுனாரு? கல்யாணம் முடிச்சு இத்தனை நாள் ஆச்சு இப்ப வந்து பாசமலையை பொழியிறாரு” என்றாள் அவனை முறைத்தபடியே..

 “வேற என்னடி உனக்கு பொழியனும் சொல்லு என் அன்பால  உன்னை பொலிய வைக்கிறேன்” என்று ஆசையாக பேசினான் ரிஷி .

 “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்றாள் முகத்தை  திருப்பிய படியே..

 “மொழி,மொழி மா இங்க பாருடி.

 மச்சானுக்கு வயசுக்கு ஏறிக் கிட்டே போகுதுடி.

 உன் கூட நல்லா வாழ்ந்து இன்னொரு பிள்ளை பெத்துக்கணும் என்று  ஆசையா இருக்கேன்டி, என் கனவா வேஸ்ட் பண்ணாதடி.”.

 “யாரு நாங்க வேஸ்ட் பண்ணுறோம் இருந்த டைம் எல்லாம் இவர் வேஸ்ட் பண்ணுவாராம் நாங்க இவர்  டைமா வேஸ்ட் பண்றோமோ போயா” என்றாள் கடுப்பாக.

 “பேசிப் பேசியே டைம் வேஸ்ட் பண்ணாதடி கூல் ஆகு, நாளைக்கு காலையில பேசு, மத்தியானம் பேசு கேட்கிறேன் இப்ப பேச வேண்டாமே”. என்றான் அவளிடம் சில்மிசம் பண்ணிக்கொண்டே.

 அவன் கையைத் தட்டி விட்டவள்

 ‘”நான் பேசுவேன் என மனசுகுள்ள அவ்வளவு வேதனை இருக்கு நான் பேசுவேன் அதை நீங்க கேட்டு தான் ஆகணும்”.

 “சரிடி நீ பேசுடி நான் கேட்கிறேன்'” என்றவன் அவளை விட்டு, விட்டு..

 அவள் முன் கை கட்டி நிற்க.

 “நீங்க ஏன் கல்யாணம் முடிச்சுது என் பக்கத்துல வரல” என்றாள்.

 “சாரி ஏதோ நினைச்சுக்கிட்டு உன்னை ஹர்ட்  பண்ணிட்டேன் ஐ அம் ரியலி சாரி” என்றான்.

 “சாரி கேட்டா எல்லாம்  சரியா போச்சா”.

 “ஒரு ஹக் இல்ல, உங்க கைய கொடுத்து இருக்கலாம் எவ்வளவு தேடினேன் உங்களை  தெரியுமா., உங்க கையபிடிச்சி கிட்டு கூட  நான் தூங்கி இருப்பேன்”  என்றவளுக்கு அழுகை வர.

 “அழாம பேசுடி, இல்ல உன்ன பேச விட மாட்டேன்,  என் வேலையா ஆரம்பிச்சிடுவேன்” என்றான்.

 ஆமா என்றவள்,  கோபித்துக் கொள்வது போல்  கோபித்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

” எனக்கு மட்டும் உங்க மேல ஆசை இல்லையா ரிஷி,  ஏதோ நீங்க மட்டும் தான் என்மேல் ஆசைப்படுற மாதிரி பேசுறீங்க”.

 மொழி பேசுவதை ரிஷி அமைதியாக கேட்டு கொண்டிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!