“இந்த காபி குடித்துவிட்டு போ” என்று அவள் கையில் காப்பி டம்புளரை வைத்தார்
சுதாவை நன்றியோடு பார்த்தவள், காபியை குடித்து விட்டு, தன் பிள்ளைகள் எழுப்பச் சென்றாள்.
தன் செல்வங்களை முத்தம் கொடுத்து குட் மார்னிங் சொல்லி எழுப்பியவள் அவர்களை காலை கடனை முடிக்க வைத்து,பிரஷ் பண்ணி குளிக்கவைத்து டிரஸ் பண்ணி அழைத்து வர மணி ஏழரை ஆகி இருந்தது.
சுதா அனைத்தும் ரெடி பண்ணி வைத்திருக்க தன் பிள்ளைகளுக்கு தோசையை ஊட்டி விட்டாள்.
முதல் நாள் என்பதால் பிள்ளைகள் பள்ளிக்கு சந்தோஷமாக கிளம்பினார்கள்.
ராமமூர்த்தி வாக்கிங் சென்று வர அவரே பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதாக இரு பேரபிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றார்.
சுதா மருமகளின் களைப்பை பார்த்தவர்,, “மொழி நீ முதல்ல டிப்பன் சாப்பிடு” என்று சொல்ல.
“அத்தை அவர் வரட்டும் சேர்ந்து சாப்பிடுகிறேன்” என்றாள்.
“அவன் எழுந்து வரட்டும் நீ முதல்ல சாப்பிடு ” என்று ஒரு தட்டில் தோசையை வைத்துக் கொடுத்தார்..
.
மொழிக்கு ரிஷியை விட அவன் குடும்பத்தை அவளுக்கு மிகவும் பிடித்தது.
10 நாட்கள் சென்றிருந்தது வழக்கம் போல் அவளுக்கு அனைத்தும் பழகி இருந்தது..
அன்று காலையில் அதுபோல தான் பிள்ளைகளுக்கு லஞ்சும், ஸ்னாக்சும் பேக் செய்து கொண்டு இருந்தாள் மொழி.
ஸ்னாக்ஸ் பேக் செய்வதை பார்த்த சாத்விக் “மம்மா என் ஃப்ரெண்டு ஸ்நாக்ஸ் பேக்பண்ணி குடுங்க” என்று கேட்க.
“ஏன்டா உன் ஃப்ரெண்ட் ஸ்நேக்ஸ் கொண்டு வர மாட்டானா” என்று மொழி கேட்க.
“ஆமாம் மா என் ஃப்ரெண்டு தர்ஷன் இருக்கான்ல அவனுக்கு அம்மா கிடையாது, சித்தி மட்டும் தான் அதனால அவங்க சித்தி அவனுக்கு ஸ்னாக்ஸ் கொடுத்து மாட்டாங்க.
டெய்லி நான் தான் ஸ்னாக்ஸ் கொடுப்பேன் அதனால தான் நீங்க எனக்கு அதிகமா வைங்க இன்னொரு பாக்ஸ் வேணும் கொடுத்து விடுங்க” என்றான்.
“ஏண்டா அவங்க சித்தி ஸ்னாக்ஸ் கொடுத்து விட மாட்டாங்களா”?.
” அவங்க சித்தி அவனுக்கு ஸ்னாக்ஸ் கொடுக்க மாட்டாங்க, அவங்களுக்கு ஒரு குட்டி பாப்பா இருக்கு, அந்த பாப்பா எங்க ஸ்கூல்ல தான் படிக்குற, அந்த பாப்பாவுக்கு மட்டும் ஸ்னாக்ஸ் கொடுத்து விடுவாங்க.” என்றான் சாத்விக்..
மொழிக்கு ஒரு மாதிரியாக இருந்தது என்ன இது இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களா? என்றவள், சாத்வீக்கிடம் இரண்டு மூன்று கேள்விகள் கேட்க, அவன் சொன்ன பதிலில் ஆடிப் போனாள் மொழி.
சாத்வீக்கின் மனதில் சித்தி என்ற வார்த்தைக்கு இவ்வளவு பெரிய விளக்கமா, ஐயோ என்றவள், தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.
நான் அவர்கள் அம்மா இல்லை சித்தி என்று தெரிந்தால் பிள்ளைகள் என்ன நினைப்பார்கள், தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்ற பயம் அவளுக்கு வந்தவிட்டது…