மன்னவன் மஞ்சத்தில் 9
9.
மஞ்சம் – 9
என்ன தான் வீரமான ஆண் மகனாக இருந்தாலும் அவனுக்குள்ளும் இருப்பது இரத்தமும், சதையுமான இதயம் தானே. அந்த இதயத்துக்கும் உயிர் இருக்க தான் செய்கிறது. அதுவும் துடிக்க தானே செய்கிறது. அந்த துடிப்பில் தானே உயிர் வாழ்கிறான். அந்த இதயம் துடிப்பதே இவளுக்காக தானே. அப்படி பட்டவளை அவனே கை நீட்டி அடித்து முகம் வீங்க வைத்து விட்ட வலி அவன் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கி அவள் கன்னத்தில் பட்டு சிதறியது.
அந்த கண்ணீர் அவள் வலிகளை சுத்தம் செய்யுமா?
Advertisement
காலையில் இருந்து ஓடிக் கொண்டே இருந்தாள். தண்ணீர் குடித்தால் கூட வாந்தியாக வெளியே எடுத்தவள் இவனின் இரும்பு கைகள் வழங்கிய பரிசில் மொத்தமாக சுயநினைவை இழந்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.
மனம் விட்டு பேச கோடி ஆசை அவனுக்குள். ஆனால் அந்த பத்துக்கு, பத்து அறைக்குள் என்ன நடந்தாலும் ஹாலில் அமர்ந்து இருப்பவர்களுக்கு கேட்கும். தெரியும் என்பதால் பல்லை கடித்து தான் அழும் சத்தம் கூட வெளியே கேட்காமல் ஊமையாக அழுந்தான்.
அவளிடம் தன்னையே வெளிப்படுத்த முடியாத பாவியானான்.
Advertisement
அவன் பார்வை அவள் வயிற்றில் நிலைத்தது. துணியையும், கின்னத்தையும் தரைல வைத்தவன், கைகள் நடுங்க அவள் வயிற்றை நெருங்கியது.
Advertisement
பல நாள் ஆசை. அவளின் மேல் வயிற்றில் கை வைத்து வருடி கொடுத்தவன், ‘இன்னைக்கு தான் உன்னை தொட்டு பார்க்க முடியது.’ என் மனதிலேயே பேசிக் கொண்டான். அவனுக்குள் இருக்கும் ஆசைகளின் பட்டியல் மிகவும் நீளம். அந்த ஆசைகளை தூண்டி விட்டதே இவள் தானே?
பஞ்சு போன்ற மென்மையான அவள் வயிற்றை மயில் இறகு போல் வருடியவன், ‘நீங்க வெளியே வறதுகுள்ள நான் எல்லா பிரச்சனையும் சரி செஞ்சிடுவேன்.’ என்று பேசிக் கொண்டிருக்க, அவனை தேடி வந்த அவன் பாட்டி அந்த காட்சியை கண்டு உறைந்து போனார்.
அவருக்குள் சொல்லு முடியாத துயரம்.
Advertisement
பேரனை கண்கள் கலங்க பார்த்து விட்டு சென்றார்.
“அக்னி…” என்ற குரலில் அவன் கைகள் அப்படியே நின்று விட்டது.
அவனோ அவள் புடவையை சரி செய்து விட்டு வெளியே வந்தவன் “அக்னி கரும்புக்கு தண்ணி பாய்ச்சியாச்சு? ஆனா கரும்பு வழியாக நிறைய தண்ணி பக்கத்து தோட்டத்துக்கு போகுது. அந்த தோட்டக்காரன் வேற கத்திகிட்டு நிக்குறான்.” என்று அவர் கூற,
“அண்ணா நீங்க போங்க நான் வரேன்.” என அவரை அனுப்பி வைத்தவன், “பாட்டி நான் போயிட்டு வரேன். அவள் எழுந்ததும் அவளை தொந்தரவு பண்ணாதீங்க.” என தாயை தவிர்த்து பாட்டியிடம் கூறி விட்டு செல்ல, சூடாமணி பார்வை செல்லும் மகன் முதுகையே வெறித்தது.
அவர் பார்வையின் தாக்கத்தை அவனால் உணர முடிந்தது. ஆனால் அதற்காக அவன் மனம் கனிய வில்லை. அது விட அவன் வலி ஆழமானது.
அக்னி தன் வண்டியை கிளப்ப, “எல்லாரும் ஒரே மாதிரி தான். நிவேதா வை இந்த வீட்டுக்கு மருமகளா அனுப்புனதுக்கு அவளை கொன்னு இருக்கலாம். பாவம் அந்த பிள்ளை. இங்கேயும், அங்கேயும் மாட்டிகிட்டு தவிக்குது.” என அக்கம், பக்கம். நின்று பேசிக் கொண்டதை அவன் காதுகளில் விழுந்தது.
அக்னி என்றாலே தனி மரியாதை எப்போதும் அந்த ஊரில் இருக்கும். அவன் தந்தைக்கு கூட அப்படி ஒரு மரியாதை கிடைத்தது கிடையாது. ஆனால் அவனுக்கு உண்டு. ஆனால் அதை இழந்து நிற்கிறான்.
அங்கிருந்த ஒவ்வொருவர் பார்வையும் அவன் மீது கோபமாக படிய அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறி சென்றான். வெட்கி போனான்.
கரும்பு தோட்டத்துக்கு சென்றவன், “அண்ணா தண்ணி எதுக்கு இவளோ ஓடி வருது? நீங்க அதிகமா கட்டுநீங்களா?
பாதி மடை வந்ததும் மாத்த வேண்டியது தானே?”
“அக்னி நான் நல்லா தான் கட்டினேன். நீயே பாரு மத்த எல்லா இடத்திலும் தண்ணி சரியா வந்து நிக்குது. இந்த இரண்டு மேலடை வழியா தான் நிறைய தண்ணி வருது.” என அவரும் விளக்கம் கொடுக்க,
அக்னி பொறுமையாக கவனித்தான். அவர் கூறியது போல இரண்டு மடையில் தான் தண்ணீர் அதிகமாக நின்றது.
“இருங்க நான் உள்ள போய் பாக்குறேன்.” தழைய, தழைய கூர்மையான வால் போல் நிலைத்து நிற்கும், இளம் கரும்பு செடிகளில் உள்ளே நுழைந்தான்.
தண்ணீரின் ஓட்டம் ஒரு இடத்தில் அதிகமாக இருப்பதை கண்டு அந்த பாதையில் செல்ல, ஒரு இடத்தில் பூமிக்குள் போட்டிருந்த பைப் உடைந்து தண்ணீர் வெளியே வந்து கொண்டிருந்தது.
அதனால் தான் இவளோ தண்ணீர்.
பக்கத்து தோட்டத்தில் அவனையே முறைத்து கொண்டிருந்தவரை பார்த்தவன், “அண்ணா பைப் உடைந்து இருக்கு. இன்னைக்கே சரி பண்ணிடுறேன்.” என்றான்.
“உன்னால என் பயிர் முழுக்க நாசமாகிடுச்சு. சீக்கிரம் சரி பண்ணு.” என விரட்டினார்.
அவருக்கு அக்னி மீது கொஞ்சம் பொறாமை. சிறு வயதில் அதிக விளைச்சல் பார்க்கிறான் என்று. அவன் வளர்ச்சியை கண்டு.
அவனோ அவரை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை.
அவன் கைகள் தானாக தமிழ் என்னை அழுத்தியது. எப்போதும் அவனுக்கு ஒரு தேவை என்றால் உடனே தமிழிடம் தான் சொல்வான். அவனும் தன் வேலைகள் அனைத்தையும் விட்டு விட்டு வந்து விடுவான்.
இன்றும் வழக்கம் போல் அவன் எண்ணை அழுத்தி விட, அவனுக்கு லைன் கிடைக்கவே இல்லை.
அக்னி கட்டாகும் போனையே பார்த்தவன், “நீ அவளோ சீக்கிரம் என் நம்பரை பிளாக் பண்ணிட்டியா? நான் வேணும்னு அம்மாவை தள்ளி விடுவேனா டா? நீ பதிலுக்கு என்னை நாலு அடி அடிச்சி இருக்கலாம் டா. எதுக்கு இப்படி பண்ண?” என வெறும் போனை பார்த்து பேசிக் கொண்டிருந்தவன், அவனே அவனுக்கு தேவையானவர்களை அழைத்து பேசினான்.
“அண்ணா தண்ணி நிக்கிற இடம் எல்லாத்தையும் வாய்க்காலில் மாத்தி விடுங்க. சீக்கிரம்.” என தானும் ஒரு மண்வெட்டி பிடித்து வேகமாக மடை மாற்ற தொடங்கினான்.
“அமர் பண்ணதை விட நீ பண்ணது தான் தப்பு சூடாமணி. அக்னி உன் மேல அளவுக்கு அதிகமான பாசம் வச்சிருக்கான். அந்த பாசத்தை தவறா பயன்படுத்தாத. அது உனக்கு நல்லது கிடையாது. என்ன வேணாலும் நடக்கட்டும் ஆனா அக்னி உன்னை ஒதுக்கி வைக்கிற மாதிரி நடந்துக்காத.” என பாட்டி தன் மகளை கண்டித்தார்.
“பாட்டி நீங்க தப்பா யோசிக்கிறாங்க. அண்ணா உயிரோடு இருக்க வரைக்கும் அம்மாவை வெருக்கவே வெருக்காது. அதுக்கு சாட்சி இன்னைக்கு நடந்தது தான். அண்ணனுக்கு தகுதி இல்லாதவள் அண்ணன் வாழ்க்கையை விட்டு போகனும். இன்னொருத்தன் குழந்தைக்கு என் அண்ணன் அப்பாவா மாற கூடாது. அதுவும் அது யார் குழந்தை? எப்படி அந்த இரத்தம் நம்ம வீட்டுக்குள்ள வரலாம்? தகுதி தராதரம் வேண்டாம். எங்களுக்கு அண்ணன் நல்லா இருக்கணும். அதுக்காக எது செய்தாலும் தப்பு இல்லை. கண்டவன் குழந்தை பிறந்து நாளைக்கு நம்மை உறவு சொல்லி அழைக்கும் அதை நம்ப தலையில் தூக்கி வச்சு கொண்டாடனுமா?” என அமர் மூச்சு வாங்க பேசினான்.
அவனுக்கு அவன் காயத்துக்கு மருந்தாக அமைந்தது நிவேதிதா வாங்கிய அறை.
அதில் அவன் வலிகள் அனைத்தும் பூஸ்ட் சாப்பிட்டது போல் மறைந்து போனது.
பாட்டி அக்னியை நினைத்து தவித்தார்.
‘பேரன் வாழ்க்கை அலங்கோலமாக மாறாமல் இருந்தால் போதும் கடவுளே. அவன் எல்லா உண்மையும் தெரிந்தும் நிவேதிதா வை பொண்டாட்டியை ஏத்துகிட்டானா அதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கு. அவனால் வெளியே சொல்ல முடியல. அவன் அம்மாவுக்காக தயங்கி நிக்கிறான். இந்த பாசம் அவன் வாழ்க்கையை அழிச்சிட கூடாது. சூடாமணி சீக்கிரம் மகனை புறிஞ்சிக்கணும். தன்னால் மகன் வாழ்க்கை போய்டுச்சுன்னு அவளும் வருத்தப்பட கூடாது.’ என மனதளவில் அவரால் வேண்ட மட்டும் தான் முடிந்தது.
“தங்கம் நமக்கு இந்த ஊர் வேண்டாம். வேற எங்கேயாவது போய்டுவோம்.”
“அம்மா நான் இனி அக்னி விஷயத்தில் தலை இட மாட்டேன் மா. நீங்க கவலைப்பட வேண்டாம்.”
“அம்மா சொல்றது தான் சரி தமிழ். இத்தனை வருஷம் உன்னை ஆளாக்கணும்னு இந்த ஊரில் வாழ்ந்தோம். இனி உன் கூட இருக்கோம். நீ வெளி ஊரில் வேலை பார். தூரமாக போகலாம் நம்ப. அது தான் நமக்கு நல்லது. சூடாமணி சாதாரண ஆள் கிடையாது. நீ நிவேதா வுக்காக போட்ட சண்டையை உன் பக்கம் திசை திருப்பி விட்டுடுவால். இதனால் நிவேதா பெயரும் சேர்த்து கெட்டு போகும்.
நமக்கு அந்த பாவம் வேண்டாம். இனி இந்த ஊரும் வேண்டாம். ஓரளவுக்கு எல்லா பிரச்சனையும் தீர்ந்த பிறகு வரலாம். அப்படியும் ஏதாவது நல்லது கெட்டதுக்கு மட்டும் வரலாம்.” என அவன் தந்தையும் கூற, அவனால் எதிர்த்து பேச முடியவில்லை.
தன்னை தானே நொந்து கொண்டான்.
‘அனைவர் முன்னும் அக்னி என்னை அடித்ததை இவர்கள் அவமானமாக உணர்ந்து விரும்பி வாழும் பூமியை விட்டு செல்ல முடிவெடுப்பது நினைத்து வேதனையாக இருந்தது.
ஆனால் அவன் அப்பா சொன்னதில் ஒன்று உண்மை. நான் நிவிக்காக பேசியதை அவர்கள் தவறாக சித்தரிக்காமல் இருந்தால் போதும். அக்னி இப்போது நேர்மையாக இல்லாத போது, இனி என்ன செய்ய முடியும்?’ என அவனுக்கு வெளியே வேலைக்கு ஏற்பாடு செய்தான்.
அவனுக்கு நிறைய நண்பர்கள் இருந்ததால வேலை அன்றே கிடைத்து விட்டது.
நண்பன், ஊர் என சுற்றி திரிந்தவன் இனி அவனுக்கென்று புது உலகில் அடி எடுத்து வைக்க போகிறான்
தொடரும்…..
