Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே.. 17 2

 ரிஷி  அவன் அறைக்கு வர.. ஃபேன் கூட  போடவில்லை மோழி,  ஏசி கூட ஆன் பண்ணவில்லை.. லைட்டும் போடமல் இருட்டில்  அப்படியே கட்டிலில் படுத்து கண் மூடி இருந்தாள் மொழி..

 அவன் பெல்டையும்,  டையையும் கழட்டி வைத்தவன்



Advertisement

மொழியை பின்னிருந்து  இறுக்கி அணைத்துக்கொள்ள.

Advertisement

 மெல்ல திரும்பி பார்த்தாள் மொழி.

Advertisement

 திரும்பியவளின்  கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவன் “தாங்யூ டி  பொண்டாட்டி” என்றான்.

Advertisement

 மொழி எதுவும் பேசவில்லை அமைதியாக படுத்திருந்தாள்.

, “என்னடா டயாடா இருக்க  உனக்கு” என்றான்,

 அவள்  பதில் பேசவில்லை.

 அவளை  அவன் முன்னே  திருப்பி  அணைத்து “ரொம்ப சந்தோஷம்'” என்றான்..

 மொழி அவனை அணைக்கவும் இல்லை, அவன் அணைப்பை தடுக்கவும் இல்லை அப்படியே பொம்மை போல்  படுத்து இருந்தாள்.

 சாத்விக்கும்,  ஆத்வீக்கும் “மம்மா” என்று கதவை தட்ட.

 “இதோ வரேன் டா ” என்ற மொழி

வேகமாக எழுந்து கொள்ள பார்க்க.

 “ஏய் மெல்லடி, நீ இரு  நான் போய் கதவைத்திருக்கிறேன் “என்று வேகமாக எழுந்தான் ரிஷி…

 சாத்விக்கும்,ஆத்விக்கும் வேகமாக வந்தவர்கள்.

 மொழியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு.

 “மம்மா  நாங்க ஹோம் வொர்க்  பண்ணிட்டோம் உங்க கூடவே இருக்கட்டுமா” என்று கேட்க.

 “அதை என்கிட்ட  கேட்கணுமாடா, என்  செல்லங்களா” என்றவள், தன் இரண்டு பிள்ளைகளின் கன்னத்தை தொட்டு முத்தமிட..

 இருவரும் அவள் மடி பக்கத்தில் அமர்ந்து கொண்டு “குட்டி பாப்பா எப்ப வருவாங்க அம்மா?  உங்க வயித்துல குட்டிப் பாப்பா இருக்கா? எங்கே இருக்கு பாப்பா” என்று கேள்விகள் கேட்க.

 மொழி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 ரிஷியும் அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் மூன்று பேரும் பேசுவதை கேட்டு ரசித்தபடி இருந்தான்.

 பிள்ளைகள் அவள் பக்கத்திலேயே உட்கார்ந்து உணவு உண்டு விட்டு அங்கேயே தூங்கி விட.

 சுதா பிள்ளைகளை  கீழே தூக்கி செல்ல பார்க்க..

” இங்கே இருக்கட்டும்”  என்று விட்டான் ரிஷி.

 சரி என்றவர் கிளம்பி விட.

 “உனக்கு ஏதாவது வேணுமா மொழி” என்றான்.

 “நான் உங்க கூட கொஞ்சம் பேசணும்” என்றால் மொழி.

 “நைட் டைம் ஆச்சு இப்ப பேச வேண்டாம் காலையில் பேசிக்கொள்ளலாம் பிள்ளைகள் இருக்காங்க” என்றான் ரிஷி.

 “இல்லை உன்கிட்ட பேசணுமே” என்றால்  மொழி தயங்கிய  படியே.

 “என்ன பேச போற” என்று பேசிக் கொண்டே  பிள்ளைகளுக்கு போத்தி விட்டு அவள் பக்கத்தில் வந்த அமர .

 “அது உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல”  என்றாள்.

 “அப்போ சொல்லாத படுத்து நிம்மதியா தூங்கு” என்றான்..

 “உங்க  கிட்ட சொன்னாலும், எனக்கு தூக்கம் வராது” என்றாள்.

 “மொழி கர்ப்பமா இருக்குறப்போ நல்லா தூங்கணும், தூங்கு “என்றவன் அவளுக்கு போத்தி விட்டு அவன் படுக்கப் போக.

 தூக்கம் வராது என்று நினைத்தவளுக்கு தூக்கம் வந்துவிட்டது ஆனால் ரிஷிக்கு தூக்கம் இல்லை.

 நாளை என்ன சொல்ல போகிறாள் இவள் என்ன சொன்னாலும் இவளை விடப் போவதில்லை

 இவள் பண்ண காரியத்துக்கு எனக்கு பதில் சொல்லிய ஆக வேண்டும் என்றிருந்தான்.

 அந்த  காலை அழகாக விடிந்தது மொழி நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள் ஆத்விக்கும் சாத்விக்கும் மெல்ல எழுப்பி கீழே அழைத்துச் சென்றான்  ரிஷி.

 காலை 7:30 மணியிலிருந்து  8 மணிக்குள்  கிளம்பி விடுவார்கள், பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு ராமமூர்த்தி தான் எப்போதும் அழைத்து செல்வார்.

 இன்று ரிஷி பிள்ளைகளை   அழைத்து செல்கிறேன் என்று அவர்களை  கிளப்பிக் கொண்டு போக ஆத்வீக்கும், சாத்வீக்கும் அவ்வளவு  சந்தோஷம்.

தகப்பனோடு  காரில் சென்றனர் இருவரும்.

 மொழி நன்றாக தூங்கி இருந்தாள்.

 விடிந்தும்  கூட  அவள் விழிக்கவில்லை அதற்கு காரணம் ரிஷி அவள் சாப்பிடும் சாப்பாட்டில் கொஞ்சமாக தூக்க மாத்திரை கலந்து இருந்தான்.

 அதன் தாக்கத்தில் எழுந்தும்கொள்ளாமல் அவள்  தூங்கிக் கொண்டிருக்க ,,.

மொழி கண்விழித்த போது காலை 8:30 மணி  ..

 வேகமாக எழுந்தவள் தன் தலை முடியை  சரி செய்து கொண்டு முகம் கழுவி கீழே வர.

வீடு அமைதியாக இருந்தது மணியை பார்த்தால் எட்டறை மணி,,பிள்ளைகள் கிளம்பி இருப்பார்களே என்று அவசரமாக சுதாவை போய் பார்க்க.

 “ஏன் மொழி இப்படி  அரக்க, பறக்க வர,  உன் பிள்ளைங்க ஸ்கூலுக்கு போயிட்டாங்க உன் புருஷன் தான் கூட்டிட்டு போய் இருக்கான்.. உன் புருஷன் கூட்டிட்டு போறேன்னு  சொன்னவுடனே உன் பிள்ளைகள் ரொம்ப ஜாலியா ஸ்கூல் போனாங்க” என்றார்..

 மொழிக்கு மிகவும் கஷ்டமாகி போனது இத்தனை நாள் அவள் பிள்ளைகளை கிளப்பி இருக்க. இன்று எப்படி இப்படி தூங்கினேன் நான் என்று  அவளுக்கே கஷ்டமாக இருந்தது.. இனிமே என் பிள்ளைகளை நான் இப்படித்தான் பார்ப்பேனோ,

சாத்வீக்  சொல்லியது  தப்பே இல்லை அவன் நண்பனுக்கு அவள் சித்தி  ஸ்நாக்ஸ் மட்டும் தான் தரவில்லை.

 நான் இன்று என் பிள்ளைகளை   கிளப்பவே வரவில்லையே.. பிள்ளைகளுக்கு ஊட்டி கூட விடவில்லையே ஐயோ குழந்தைகள் சரியாக,  உண்டார்களோ, இல்லையோ என்று வருந்தியவள்.

 குழந்தை உண்டான மறுநாளே இப்படி ஆகிவிட்டதே,  இனி குழந்தை  பிறந்து விட்டால் என் இரண்டு பிள்ளைகளை நான் பார்க்கவே முடியாது போலவே ஐயோ என்றவள் மாடி ஏறி இருந்தாள்.

 சுதா மருமகளை உண்ண அழைக்க குளித்துவிட்டு வரேன் அத்தை என்று மேலே சென்றாள்.

 ரிஷி உற்சாகமாக பிள்ளைகளை ஸ்கூலில் விட்டு வீடு வந்து சேர்ந்தான்..

 மகனைப் பார்த்த சுதா “மொழி கீழே வந்துட்டு இப்பதாண்டா போறா.

 பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பாம  தூங்கிட்டேன் ரொம்ப பீல் பண்ணுற, நீ போய் கொஞ்சம் சமாதானம் பண்ணு” என்றார்..

 “சரிமா நீங்களும் , அப்பாவும் சாப்பிடுங்க நானும்  அவளும் கொஞ்சம் வெளியே போக வேண்டியது இருக்கு சாப்பிட்டு போயிட்டு   வர்ரோம் “என்றான்..

“எங்கடா போறீங்க”?.

” ஹாஸ்பெட்டல் போயிட்டு வந்துடறேன்மா, ” என்றான்.

 “சரிடா பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வா, டிப்பன்  சாப்பிட்டு ஹாஸ்பெட்டல் போங்க. நானும்,  அப்பாவும் திருத்தணி கோவில் வரைக்கும் போயிட்டு வரோம் வர்ற ஈவினிங் ஆகும் குழந்தையை பிக் பண்ணி வீட்ல விட்டுடு, நாங்க  கோயிலுக்கு கிளம்புறோம்” என்றவர் ராமமூர்த்தியை  அழைத்து உண்டு விட்டு கோயில் கிளம்பி விட்டார்கள்..

 அவர்கள் கிளம்பியதும்   கதவை சாத்திவிட்டு மேலே வந்தான் ரிஷி..

 குளித்து விட்டு வந்து தலையை கூட  துவட்டாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்  மொழி.

 “மொழி என்ன இப்படி உட்கார்ந்து இருக்க” என்றான் ரிஷி..

 அவளோ அவனை நிமிர்ந்து பார்க்க அங்க இருந்து டவலை எடுத்து அவளுக்கு தலையை துவட்டி விட்டவன்.

 அவன் தலை துடைக்கவும் குலுங்கி குலுங்கி அழுதாள் மொழி.

 அவள் அழுவதை கண்டு கொள்ளாதவன் “அழுது முடிச்சிட்டியா சாப்பிடலாம் கீழே வா” என்றான்.

 “நான் அழுவது கூட உங்களுக்கு தெரியலையா ஏன் அழுகுறேன்னு கூட நீங்கள் கேட்க மாட்டீங்களா”? என்றாள்.

 “இங்கே நீ அழுகிற மாதிரி ஒன்னும் நடக்கல சந்தோஷப்படுற மாதிரி தான் விஷயம் நடந்திருக்கு,  நம்ம குடும்பமே சந்தோஷமா இருக்கு, நீ தான் தேவையில்லாம ஏதோ நினைச்சு அழுகிற அதுக்கெல்லாம், இப்போ டைம் இல்ல.

 சாப்பிட்டு கிளம்பு  ஹாஸ்பிடல் போய் செக் அப் பண்ணனும்” என்றான்.

 “நானும் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ரிஷி” என்றாள்.

 “நான் குளிச்சிட்டு வந்துருவேன் சாப்பிட்டு அப்புறமா நாம பேசலாம்” என்றான்.

 “இல்ல நாம இப்பவே பேசணும்” என்றாள், .

“குளித்து சாப்பிட்டு வந்து பேசுறேன்,  எவ்வளவு நேரம் வேணாலும் பேசலாம்,  வீட்டுல அப்பா, அம்மா இல்ல, திருத்தணி போய் இருக்காங்க ஈவினிங் தான் வருவாங்க அதனால நம்ம சவகாசமா பேசலாம்” என்றவன். குளித்துவிட்டு அவளை கீழே அழைத்து வந்து உணவு உண்ண வைக்க.

 அமைதியாக உண்டாள்  மொழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!