தென்றல் 25
“பேமானிங்க… எத்தினி தடவ சொல்லியும். ஜோலிய சுத்தமா செய்யாம… காச மட்டும் வாங்கின்னு போய்டானுங்க… நாளப்பின்னா கண்ணுல மாட்டாமலா போய்டுவானுங்க. ” என வாய்க்கு வந்ததை எல்லாம் புலம்பியபடி இருந்தாள் பாரதி.
ஏனெனில் பால்கனி கதவிற்கு பெயிண்டை முழுதாக தீட்டாது கிளம்பி சென்றுள்ளனர்.
Advertisement
“மொதல்லயே இத்த பாத்திருந்தேன்னா. அடிச்சி முடிச்சிட்டு போங்கடான்னு கதவ இழுத்து மூடிருப்பேன். டபாச்சிட்டானுங்க. போய் கவனிச்சிக்கிறேன். இப்ப இத்த என்ன பண்ண?” என யோசித்தவள் ஹாலில் வைத்துவிட்டு சென்ற வண்ண டப்பாவை ஓப்பன் செய்தாள்.
கையில் பிரஸ்ஸை எடுத்துக் கொண்டு பக்குவமாக தரையில் சிந்தி விடாதபடி வண்ணம் தீட்ட முயன்றாள். ஆனால் அது வெறும் முயற்சியாக மட்டுமே இருந்தது. சில நொடிகளில் அவள் திடுக்கிட்டு அதிர்ந்து திரும்ப, டப்பா கையை விட்டு கீழிறங்கி தரையில் ரங்கோலி கோலம் போட்டு கதவில் புள்ளியை வைத்துவிட்டது.
Advertisement
Advertisement
ஏன் டப்பாவை கீழே போட்டாள் என்றால் நம் பார்த்திபன் அவளின் பின்னால் நின்று கொண்டு ‘ப்பே…’ எனக் கத்தி பயங்காட்டியதால்.
“நாசமா போச்சு… அம்புட்டும் வீணாப் போச்சு.. யோவ் பார்த்திபா.. இன்னாத்துக்கு நீ இப்ப இங்க வந்த. உன்னய காணமோம்னு யாரும் தேடுனாங்களா. இம்மாம் பெரிய மாடாட்டம் வளர்ந்திட்டு இஸ்கூல் பையங்கணக்கா கண்ணாம்பூச்சி வெளாட்டு வெளாடி, என் சுவத்த பாழாக்கிட்டியேய்யா.. ” எனக் கூப்பாடு போட்டாள்.
Advertisement
“பாலா… யூ மீன் மில்க். எந்த ஊர்ல பாலு இந்த கலர்ல இருந்தது. ” என தரையில் சிந்திய பெயிண்ட்டை விரலால் எடுத்து காட்டி கேட்டதோடு, அதை அவளின் கன்னத்தில் பூச வர,
“யோவ்… கம்முன்னு கெட. என்னைத்தாயாது பேசிக்கின்னு வாய திறந்த…” என எரிந்து விழுந்தவள் தரையில் போட்ட கோலத்தை எதேதோ செய்து அழித்து விட்டாள். ஆனால் சுவரில் போட்டது போட்டதாகவே இருந்தது. அதைக் கவலையுடன் பார்த்தபடி நின்றவளிடம்,
“மைம்மா… நீ கவலப்படுற அளவுக்கு இது ஒரு பெரிய மேட்டரே இல்ல. இது புதுவகையான ஆர்ட்டுன்னு சொல்லு. இந்த ஆர்ட்ட வீட்டுல வரைஞ்சி வச்சா அதிஷ்டம்னு சொல்லு. எல்லாரும் நம்பிடுவாங்க. யாரு பெயிண்டருன்னு கேட்டு அவங்க வீட்டு கதவுலயும் இதே டிசைன்ன போடுவாங்கன்னா பாரேன். ” என்றவனை முறைத்தாள்.
“சும்மா மொறைக்காத மைம்மா. நான் உனக்கு நல்ல ஐடியாதா குடுத்திருக்கேன். நேத்து என் சட்டைல நேத்ரா மைய கொட்டீட்டா. நான் ஒன்னும் உன்ன மாதிரி வருத்தப்படல. இது தா புது ட்ரெண்டுன்னு சொல்லி நாலு பேர் சட்டைல மைய ஊத்தி ஃபேஷன் டிசைனரா மாறிட்டேன் தெரியுமா.” எனப் பெருமையாக சொல்ல,
‘சட்டைல ஒண்டுன மையும் கதவு சிந்துன பெயிண்டும் ஒன்னா இவனுக்கு.. ‘ என்பது போல் பார்த்தவள்,
“இத்த சொல்லத்தா வந்தியா… ஆமா நீ எப்படி உள்ள வந்த? பைப் ஏறியா!” எனச் சந்தேகமாக கேட்டு கீழே எட்டிப் பார்த்தாள் பாரதி. உடன் அவனும் சேர்ந்து எட்டி பார்க்க, அங்கு நிறுத்தியிருந்த பெரிய கார் பொம்மை கார் போல் சின்னதாக தெரிந்தது.
‘இதென்ன இவளோ ஆழமா இருக்கு.. ‘ என தோள்களைக் குலுக்கியவன்,
“ச்சச்ச… பைப் ஏறி குதிக்கிற அளவுக்கு எனக்கு கொரலி வித்த தெரியாது. அத்தோட நான் குரங்கும் கிடையாது. எனக்கு உயரம்னா லைட்டா பயம்.”
“அப்றம் எப்படி வந்த? வாசல் தொறந்து இருக்குறப்ப ஏன் பால்கனில இருந்து குதிக்கிற?”
“அது… காலைல இருந்து நீ ஃபோன எடுக்கலயா. அதுனால உடனே உன்ன பாக்கலாம்னு இங்க வந்தேன். உ வீட்டு வாசல் வழியா உள்ள வரலாமுன்னு நினைக்கும் போதே, நம்ம பக்கத்தாத்து மாமி வாசல பாத்திட்டேன். அதுவும் திறந்து தா இருந்தது.
கூடவே, மாமி கடைக்கி போய்ட்டு அப்பதா கை நிறைய பைய வச்சிட்டு லிஃப்ட்ல இருந்து தூக்க முடியாம தூக்கிட்டு வந்தாங்க. உதவி பண்ணலாம்னு நாலு பைய தூக்கிட்டு போனேன்.
‘காபி சாப்பிடுறியா தம்பி..’ன்னு கேட்டுச்சி மாமி. அன்னைக்கி மாமி போட்ட காஃபி வாசம் மூக்குக்குள்ளயே இப்பவும் நிக்கிதா. அதா மாமிட்ட பேசிட்டே காஃபி குடிச்சிட்டு… அப்றமா உன்ன வந்து பாக்கலாம்ன்னு. பக்கத்து வீட்டுல செட்டில் ஆகிடேன். ” என்றவனை என்ன செய்வது?
“இப்பவும் நீ ஏன் பால்கனில இருந்து குதிச்சன்னு சொல்லவேயில்லை?” என இரு கரத்தையும் மடித்துக் கொண்டு காட்டமாக கேட்டாள்.
“அது நானும் மாமியும் டீவி சீரியல் பாத்துட்டே காபி சாப்டுட்டே உக்காந்திருந்தோம்மா… அப்பன்னு பாத்து வீரப்பன் என்ட்ரி குடுத்தாரு. எனக்கும் அவருக்கும் செட்டாகல. குறிப்பா அவரு முறுக்கு மீசைய பாக்கும் போது ரொம்ப பயங்கரமா இருக்கு. அதா நான் அவரு கண்ணுல மாட்டாம இருக்க அவங்க வீட்டு பால்கனிக்கு வந்தேன். உ வீட்டு பால்கனியும் அதுவும் பக்கத்துல பக்கத்துல இருக்குறதுனால வீரப்பன்ட்ட இருந்து தப்பிச்சி தாவி வந்திட்டேன். ” எனச் சொல்லி சிரித்தான்.
‘இது ரொம்ப புது கதையால்ல இருக்கு. ‘ என அவள் குழம்பி போய் நிற்கும்போதே, பார்த்திபன் சில பெயிண்ட் டப்பாக்களுடன் வந்தான். அதைத் திறந்து தன் கையில் வண்ணம் பூச,
“யோவ்… என்னய்யா பண்ற?”
” ஆர்ட்…”
“ம்ச்… கையெல்லாம் பெயிண்டு.. கிஸ்னாயில் வச்சித்தா கழுவணும்.. வாய்யா..”
” மைம்மா உனக்கு என்னை பத்தி முழுசா தெரியாது. தெரிஞ்சிருந்தா. “
“நீ நடமாடும் மெண்டல் ஹாஸ்பிட்டல்ன்னு கண்டுபிடிச்சிருப்பேன்.”
“ம்ச்… நான் சகல வித்தைகளும் தெரிஞ்ச சகலகலா வல்லவன்.”
“ஓ.. யாரும் குடுக்க மாட்டாங்கன்னு.. உனக்கு நீயே பட்டம் குடுத்துக்கிட்டியா. ” என கேலி செய்தவள்,
“உனக்கு பெயிண்டு வேல தெரியுமா! வெட்டிய மூணு பேருக்கு கூலி குடுத்து வேலைக்கி வைச்சிட்டேன். முதல்லயே செல்லிருக்கலாம்ல. உங்கைல பிர்ஸ்ஸ குடுத்து ஒரு மாசத்துக்குள்ள வெள்ளை அடிச்சி குடுத்திடுன்னு சொல்லிருப்பேன். கூலி மிச்சமாகிருக்கும்.” என வருத்தபட,
“கலாய்க்கிற… பரவாயில்லை… கலாச்சிக்கோ. நீ தான மைம்மா. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். இப்ப நான் பண்ணப் போற மேஜிக்ல. இந்த கதவு புதுவிதமா மின்னப்போது.” என்றவன் சிந்திய துளிகளை ஒன்று சேர்ந்து செடிகளாக வரைந்து. தன் விரலைச் சுவரில் பதித்தெடுத்து பூக்களாக மாற்றி அச்சு பதித்தான்.
“ஹாங்… எப்படி… அம்சமா இருக்கா.. நீ பண்ண தப்ப சரி பண்றதே எனக்கு வேலையா போச்சி.” என்க, அதை புருவம் சுருக்கி இடையில் கை வைத்த படி யோசனையுடன் பார்த்தவள்,
“யோவ்… இது எந்த ஆங்கில் இருந்து பாத்தாலும், கை குழந்த அசிங்கம் பண்ணிட்டு அதையே இழுவி வச்ச மாதிரி இருக்கு.. ”
“உனக்கு உவமை சொல்றதுக்கு வேற எதுவும் கிடைக்கலயா மைம்மா. ” எனத் திட்டியவன் அவளின் விரலிலும் பெயிண்டை ஊற்றி அச்சு பதிக்க செய்தான். அவள் சொல்லச் சொல்ல கேட்காது, அவளின் கை ரேகையையும் சுவரில் பதித்தான்.
அந்த ஒரு கதவில் மட்டுமல்ல. வீட்டில் இருந்த எல்லா கதவுகளிலும் இருவரும் சேர்ந்து தங்களின் கை ரேகைகளைப் பதித்து பூக் கோலம் போட்டு வைத்திருந்தனர்.
சுவரில் இருவரின் கை ரேகைகளும் ஒன்றோடு ஒன்று உரசியபட இருக்க, நிஜத்திலும் அவன் அவளின் தோளை இடித்துக் கொண்டு, சிறு குழந்தைக்கு எழுத கற்றுத்தருவது போல் அவளின் விரலை பிடித்து கதவில் வரையத் தொடங்கினான்.
அவனின் மூச்சுக் காற்று பட்டுரசும் வெப்பத்திலும், அவனின் அருகாமையிலும் பெண்ணவளுக்குள் எதேதோ செய்தது.
இதுவரை கண்டிடாத புது உலகம் அவளின் கண்களுக்கு மட்டும் தெரிந்தது. அதில் பார்த்திபனையும் அவளையும் தவிர வேறு யாரும் இல்லை. சுற்றி இருக்கும் அனைத்தும் அவளுடன் சேர்ந்து காற்றில் மிதந்தது. அவளை அணைத்தபடி நின்றிருந்த பார்த்திபனின் கையில் ரேகையாக ஒட்டிக் கொண்டு மோன நிலையில் அவள் நின்றாள்.
‘என்ன! நாம இழுத்த இழுப்புக்கெல்லாம் வர்றா. என்னாச்சி?’ என அமைதியாக இருந்தவளின் முகம் பார்த்தவன், அவளின் நீள நயனங்களில் விழுந்து விட்டான்.
மைத்தீட்டா விட்டாலும் அதன் அழகு தனி. சற்று கீழே தன் விழிகளை இறக்கியவனுக்கு அவளின் சைனா மூக்கு கண்ணுக்கு தெரிய, தன் இரு விரல்களை மடக்கி கொக்கி போலாக்கி அவளின் மூக்கை பிடித்து இழுத்து. அவளின் மோன நிலையை கலைத்தான்.
“யோவ்… என்னய்யா பண்ற?” என கரத்தைத் தட்டி விட்டு நகர, அவளின் தோளைப் பிடித்து நகற விடாது தடுத்தவன்,
“மைம்மா. உன்னோட கன்னம் இவ்ளோ சாஃப்ட்டா… நீ மெக்கானிக். உன்னோட கை மட்டுமில்ல முகமும் ரப்பா இருக்கும்னு நினைச்சேன். பட்… இது ரொம்ப… ரொம்ப… ” என பெயிண்ட் இருந்த கரத்தால் அவளின் கன்னங்களை வருட, பெண்ணவளின் பெண்மை அதில் மயங்கி விழி மூடி நின்றது.
மலரை ஒத்த மென்மையுடன் இருந்த மங்கையின் கன்னம் தீண்டி விரல்கள் அனுபவித்த இதத்தை ஆடவனின் இதழ்கள் அனுபவிக்க எண்ணி, நெருங்கி செல்ல… பாவம் தரையில் விழுந்த விட்டான்.
பாரதி பிடித்து தள்ளி விட்டு விட்டாள். ” என்ன பண்ண இருந்த நீ?” என்றாள் ஆத்திரத்துடன்.
“அதா எதுவும் பண்ணலயே. பண்றதுக்கு முன்னாடி தள்ளி விட்டுடியே.. ” என் வருந்தி தரையில் குத்தினான்.
” யோவ்.. இனி பக்கத்துல வந்து பேசற வேல வச்சிக்காதா. வேணாம்.. இனி என்ன பாக்கவே வராத. போய்யா… ” எனக் கத்த,
“உன்ன பாக்க வரணுமா வேண்டாமான்னு நாந்தா முடிவு பண்ணுவேன். நீ சொன்னாலும் கேக்க மாட்டேன்..” என எழுந்து வந்தவன், மீண்டும் பெயிண்டில் கரத்தை விட்டு அவளின் கன்னத்தில் பூசி விட்டு சென்றான்.
“மைம்மா… You have smooth cheeks. நாளைக்கு பாக்கலாம். see you.” என மிகவும் மெதுவான குரலில் அவளின் செவி மடலில் உதடுகள் உரச சொல்லிச் சென்றான்.
‘நாளைக்கா…’ என அதிர்ந்தவளின் உடல் சிலிர்த்து அடங்கியது. கூடவே அவள் எடுத்த முடிவும் முன்னுக்கு வந்து நிற்க, எப்படி இவனைத் தவிர்ப்பது என யோசிக்கும் நிலைக்கு சென்றாள் பாரதி.
அழகிய ஷிபான் சேலை. உடலில் ஒட்ட மாட்டேன் என்பது போல் வழுக்கிக்கொண்டு செல்லும் அதை, ஆறு சேஃப்டி பின்களின் உதவியால் கட்டி இருப்பதே பெரிது. அதில் அதை ஒரு நாள் முழுவதும் அணிந்தே இருக்கச் சொல்வது பெரிய டாஸ்க்காக பட்டது பூஜாவிற்கு. அந்த டாஸ்க்கை நிறைவு செய்த திருப்தியில், நாற்காலியில் அமர்ந்து இரு கரத்தையும் கன்னத்தில் தாங்கியபடி அமர்ந்திருந்தாள் பூஜா. ஜவுளிக் கடை பொம்மை போல்.
” உனக்கு என்ன மர கலண்டு போச்சா பூஜா? பைத்தியக்காரி கூட உன்ன மாதிரி முட்டாளா இருக்க மாட்டா. இவ்ளோ பெருசா வளந்திருக்க. பட்டப்படிப்பிலாம் முடிச்சிருக்க. ஆனா ஒரு பிரயோஜனமும் இல்ல. முட்டா கழுத… முட்டா கழுத…” எனப் பாரதி வாய் ஓயாது திட்டிக் கொண்டே இருப்பதாள்.
முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள் பூஜா. அப்போது தான் பரிதாபம் பார்த்து திட்டுவதை விரைவில் விட்டு விடுவாள். இல்லையேல் ஒரு நாளுக்கு 24 மணி நேரம் பத்தாது அவளுக்கு.
“க்கா என்னக்கா இது? நல்ல நாள் அதுவுமா பூஜாக்காவ போய் திட்டிட்டு இருக்க. அது பாவம் அழுவுது பாரு. இன்னைக்கி நமக்கும் முக்கியமான நாளு. பூஜாக்காக்கும் முக்கியமான நாளு. கல்யாண பொண்ண அப்படி திட்டாதக்கா. ” எனப் பூர்ணி பூஜாவிற்கு ஆதரவாக வந்தாள்.
” யாரு கல்யாணம் பொண்ணு? ” பாரதி..
“இதோ… சேல கட்டி உக்காந்திருக்காங்களே. உள்ளூர் நயன்தாரா. நம்ம பூஜா… இந்தக்காக்கு தா.” எனப் பூர்ணி சொல்ல,
பூஜா, ‘சும்மா இரேன்டா குட்டி. நீ வரையும் அவ வாய மூடிடுவான்னு சந்தோஷப்பட்டேன். ஆனா நீ எதுக்கு திட்டுனாங்கிறத நியாபகப்படுத்திட்ட. இனி உங்கக்கா விட்ட இடத்துல இருந்து மறுபடியும் ஆரம்பிக்க போறா. பாரதி… ஸ்டாட்… ‘ என்பது போல் பூர்ணியிடம் தொடங்கி பாரதியிடம் முடித்தாள் தன் பார்வையை.
“கேட்டுக்க… அந்த சின்ன பொண்ணு கூட உன்ன கல்யாணப்பொண்ணா மதிக்கிறா. ஆனா நீ… உனக்கு கல்யாணங்கிறது விளையாட்டா போச்சில்ல.”
“நான் விளையாடல பாரதி. ஆனா விதி விளையாண்டுருச்சி.” என்றவளை, ‘நீ விளையாண்டுட்டு விதி மேல பழி போடுறியா?’ என்பது போல் இடையில் கை வைத்து முறைக்க,
“க்கா.. எதுக்கு திட்டுறன்னு சொல்லிட்டு திட்டுக்கா.”
“உ பூஜாக்கா கல்யாணம் நின்னு போச்சி. நிறுத்திட்டா. அதா திட்டீட்டு இருக்கேன்.”
“என்ன கல்யாணம் நின்னுடுச்சா! ஏன்? எப்படி?” எனப் பூர்ணி அதிர்ச்சியில் வாயை பிளந்தாள்.
ஏனெனில் கல்யாணத்திற்கு அணிந்து கொள்ள அவளுக்கு பட்டு பாவாடையும், ஜீன்ஸ் டீசர்ட்டும் வாங்கி தருவதாக பூஜா சொல்லி இருந்தாள். கல்யாணம் கேன்சல்ன்னா பாவாடையும் ஜீன்ஸ்ஸும் மட்டும் எப்படி கிடைக்கும். அதான் அதிர்ச்சி.
“பார்த்திபனுக்கு என்னடி கொற? எதுக்கு டி அவன வேண்டாம்னு சொல்ற. அவன மாதிரி நல்ல பையன நீ பாத்திருக்கியா.” என அவள் புகழ் மொழிகளை கேட்க அவன் இல்லை என்பதால் புகழ்ந்து தள்ளினாள். இருந்திருந்தால் அவனுக்கு இறக்கை முளைத்து பறக்க தொடங்கி இருப்பான்.
“அவெ நல்லவெந்தா. இல்லன்னு சொல்ல. பட் இவ்ளோ நல்லவனா இருக்க கூடாது. அப்பப்ப பொய் பேசணும். எல்லார்க்கிட்டயும் உண்மயா இருக்க கூடாது. கோபப்படணும். தப்பு செஞ்சா கண்டிக்கணும். கண்ணாடி மாதிரி மனச வச்சிருக்க கூடாது. ” என்றாள் பூஜா.
“என்னடி கண்ணாடி கிண்ணாடின்னு கத விடுற. என்ன நடந்தது இன்னைக்கி. முகூர்த்த பட்டு எடுக்கத்தான போனோம்.”
“நீ தான என்னை டிராப் பண்ண. “
“ம்… டிராப் பண்ணி சேலையெல்லாம் செலக்ட் பண்ணிட்டு தான வந்தேன். அப்றம் என்ன நடந்தது? ” என்க பூஜா ஃப்ளாஷ் பேக் ஓட்டினாள்.
இன்று காலையில் தான் பாரதியின் வீட்டில் புதுமனை புகுவிழா நடந்தது. இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து வந்த வீட்டிற்கும், ஆதரவு இல்லாத அவர்களுக்கு அடைக்கலம் தந்த ஏரியாவிற்கும் விடை கொடுத்து விட்டு வெளியேறி வந்ததுள்ளாள் பாரதி, அனைத்தையும் தூக்கிக் கொண்டு.
புது வீட்டில் நுழைந்ததும் ரத்னாவின் முகத்தில் சிறிய புன்னகையை காண முடிந்தது மகள்களால். எனெனில் ரத்னாவின் தாய் வீடு எப்படி இருக்குமோ அப்படியே இந்த வீடு இருக்க வேண்டும் எனப் பார்த்து பார்த்து பொருட்களை, வாங்குவதில் தொடங்கி எதெது எங்கெங்கு இருக்குமோ? அதெதை அதன் இடத்தில் வைத்து பெரிதாக இருந்த தன் சிறுவயது பாட்டியின் வீட்டை சிறிய அளவில் வடிவமைத்திருந்தாள் பாரதி.
ராமின் டிரெய்னிங் அப்படி. அவளுக்குள் தூங்கிக் கொண்டு இருந்த கலை திறமையை வெப் கேமரா மூலமா பேசி பேசி எழுப்பி விட்டுட்டான்.
“க்கா… அம்ம சிரிக்கிது.” எனப் பூர்ணி சொல்ல, இளைய மகளின் முகம் பார்த்தவர் கணவனின் நினைவு வந்து அறைக்குள் சென்று முடங்கி கொண்டார்.
பால் காய்ச்சி, அக்கம் பக்கம் என அப்பார்ட்மெண்ட் வாசிகள் பலரின் வீட்டைத் தட்டி ஐஸ்கிரீம் வேப்பரில் செய்யப்பட்ட பிஸ்கட் கப்பில் பாலை கொடுத்தாள் பாரதி.
பூஜா, அதிகாலையிலேயே பாரதியின் வீட்டிற்கு வந்து விட்டாள். “இன்னைக்கி முகூர்த்த பொடவ எடுக்கணும். நீ இல்லாம எப்படி எடுக்குறது. ” எனத் தடுத்த அன்னையிடம்,
“அவ வீடு இருக்குற ஏரியா சரியில்லன்னு சொல்லித்தான போகவிடாம பண்ணிங்க. இப்ப நல்ல அப்பார்ட்மெண்ட் வீட்டுல தா இருக்கா. இனி அவள பாக்க போக கூடாதுன்னு நீங்க சொல்ல முடியாது.” என்று விட்டு புடவையைக் கட்டிக் கொண்டு பாரதியைக் காண கிஃப்ட்டுடன் வந்து விட்டாள்.
விழா இனிதே முடிய, மதிய வேளையில் ரேணுகா பாரதிக்கு அழைத்தாள். ” கல்யாணத்துக்கு புடவ எடுக்கணும். மாப்ள வீட்டுல இருந்து ஆளுங்க வந்துட்டாங்க. மாப்ளயும் வந்திருக்காரு. நாங்க கடைல இருக்கோம். நீ அவள கூட்டீட்டு அரை மணி நேரத்துல வா.. ” என்றவர் கடையின் பெயரை சொல்ல, தோழியை பைக்கில் ஏற்றிக் கொண்டு பாரதி துணிக்கடைக்கு சென்றாள்.
அங்கு அவர்களை வரவேற்க எனப் பார்த்திபனே வாசலிலேயே நின்றான்.
” மைம்மா… இப்ப தான் கேள்வி பட்டேன். புது வீட்டுக்கு வந்திட்டியாமே. வாழ்த்துகள்… ” என கரம் குலுக்கி, பாரதியின் கரம் பற்றிய படியே உள்ளே அழைத்து சென்றவன் கண்களுக்கு பூஜா தெரியவே இல்லை போலும். சின்ன சிரிப்பு. அதைக் கூட அவள் பக்கம் வீச வில்லை அவன்.
‘அதான் டெய்லியும் வாட் ஆஃப்ல பேசிக்கிறோமே. வேறன்ன பண்ணணும்.. ‘ என நினைத்தவன் பாரதியைப் பல நாள் பார்க்காதவன் போல் விழுந்து விழுந்து கவனித்தான்.
அது பூஜாவிற்கு எதுவோ போல் ஆனது. சும்மாவே இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை என்ற கவலையில் இருந்தவள் பார்த்திபனுக்கு தான் ஸ்பெஷல் இல்லை, மற்றவர்களை போல் தான் என்று அவன் உணர்த்த, அவள் வெகுவாக யோசித்தாள். ‘இந்த கல்யாணத்த நாம பண்ணிக்கன்னு வேண்டாமா?’ என.
எல்லா பெண்களுக்கும் இருக்கும் பொதுவான ஆசை தான். தன்னை மட்டும் மணாளன் தனியாக சிறப்பா கவனிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. அது பொய்த்து போனது பார்த்திபனிடத்தில்.
உள்ளே வந்தும் பாரதியை அவன் விடவில்லை. ‘உனக்கு என்ன நிறம் பிடிக்கும்? இந்த புடவை ஓகே வா? அது..’ என ஒவ்வொரு புடவையாக அவளின் மீது வைத்து கண்ணாடியில் பார்த்து ரசிக்க, பூஜாவை காட்டிலும் காண்டானது அவளுடைய அம்மா ரேணுகா. இம்முறை காண்டு பாரதி மீது அல்ல. பார்த்திபன் மீது.
ஏனெனில் வந்ததில் இருந்து அவனைச் சுற்றி பெண்கள் பட்டாளம் இருந்து கொண்டே இருந்தது. போதாதற்கு சண்முகம் மகளுக்கு பார்த்திபனின் திருமண விசயத்தை சொல்ல, வீட்டில் அழுது புலம்பி விட்டாள் விஷாலினி. அவளைச் சமாதானம் செய்ய என நேற்று வெளியே அழைத்துச் சென்றான் அவன்.
இருவரும் பைக்கில் பேசி சிரித்தபடி சென்றதை ரேணுகா பார்க்க நேர்ந்தது. இப்போது கூட கடைக்கு வந்ததில் இருந்து ‘மாமா.. மாமா.. ‘ என அவனின் தோளில் தொங்கிக்கு கொண்டே அவனை விட்டு நகராது கோந்து போட்டது போல் ஒட்டிக் கொண்டே சுத்தி சுத்தி வருவதை பார்க்கையில், ‘பொண்ணு கல்யாணத்துல அவசரப்பட்டுட்டோமோ.’ என அவருக்கு தோன்ற ஆரம்பித்தது.
பார்த்திபன் அத்தை மகளை வம்பிழுப்பது, பின் பட்டு புடவை செக்ஷனில் இருந்த பாரதியிடம் வம்பிழுப்பதும், பின் அங்கிருக்கும் சேல்ஸ் கேர்ள்ஸ்க்கு உதவியாக புடவைகளை மடித்து வைப்பது என அவன் சேவைகளை செய்து கொண்டிருந்தான்.
ரேணுகாவின் கண்கள் பார்த்திபனை முறைப்பதை கண்ட சண்முகத்திற்கு ஏகப்பட்ட குஷி. ‘ஏற்கனவே அங்க தணல் மாதிரி அணல் வீசிட்டு தா இருக்கு. சின்ன தீக்குச்சி இருந்தா போதும். பத்த வைக்க கூட வேண்டியது இல்ல. பக்கத்துல கொண்டு போனா மட்டும் போதும்.’ என நினைத்தவர் ரேணுகாவின் அருகில் சென்று,
“எம்பொண்ணும் மாப்ளயும் இப்படி தா. நெருக்கமா பழகிப்பாங்க. சில நேரம் ஒரே ரூம்ல தா தங்கிக்கிவாங்க. கட்டிக்க வேண்டிய மொற தான்னு நாங்க யாரும் எதுவும் சொன்னது இல்ல. சொன்னாலும் மாப்ள விட மாட்டாரு. ஹாஸ்டல்ல தங்கியிருந்தாலும், வாரத்துக்கு ஒருக்க போய் பாத்து வெளில கூட்டு போவாரு. தடுத்தாலும் கேக்காம பைக்ல விடிய லிடிய ஊர் சுத்துவாங்க. அந்த அளவுக்கு எம்மகன்னா உசுரு அவருக்கு. ஹாங்… இனி கல்யாணத்துக்கு அப்பறம் இதேமாதிரி தா இருப்பாங்க. தப்பா எடுத்துக்காதீங்க. மாப்ள நாம சொல்ற கேக்க மாட்டாரு. அவரு இஷ்டப்படி தா எல்லாம்… ஹி…” என அசடு வழிய சிரித்தார் அவர்.
‘நல்லா விசாரிச்சி பாத்தா தெரிஞ்ருக்கும். பார்த்திபன் ஏன் ஹாஸ்டலுக்கு வாராவாரம் போறான்னு. நடந்தத முழுசா சொல்லாம. இவரா ஒன்னு சொல்லி அவரா ஒன்னு நினைச்சின்னு பிரச்சன முத்திடுச்சி. ‘
“அவ்ளோ நெருக்கம்னா உங்க மகள பார்த்திபனுக்கே கட்டி வச்சிருக்கலாம்ல. எதுக்கு எங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு வந்தீங்க.” என ரேணுகா காட்டமாக கேட்டார்.
“என்ன பண்றது! வீட்டுல இருக்குறவங்க ஒரு முடிவு எடுக்கும் போது சரின்னு கேட்டு தான ஆகணும். அத்தோட உங்க பொண்ணு பேர்ல தான் எல்லா சொத்தும் இருக்குது போலயே. எங்கிட்ட அந்த அளவுக்கு கிடையாது. ஊரு பக்கத்துல கொஞ்சோண்டு நிலம். கொஞ்சோண்டு சவரன். அது மட்டும் தா எம்மகளுக்குக்கிறப்ப பணம் பணத்தோட தான சேரணும். அத்தோட ஆஸ்திக்கு ஒருத்தி ஆசைக்கி பலன்னு இருக்குறது இந்த மாதிரி பணக்கார வீட்டுல சகஜம் தான. ” என்க, ரேணுகா அடுத்து சென்ற இடம் நம்ம மாலுவிடம் தான்.
“என்ன அண்ணி இது? வந்ததுல இருந்து உங்க வீட்டு பையன் யார் யார் கூடவோ பேசிட்டு இருக்கான். எம்பொண்ண கண்டுக்கவே இல்ல. எங்க சொத்த அபகரிக்க திட்ட போட்டு இந்த கல்யாணத்த நடத்த பாக்குறீங்களா. ” எனக் குரல் உயர்த்த,
என்ன!!! பொண்ணு வீட்டுக்காரங்க மாப்ள வீட்ட கேள்வி கேக்குறதா! புதுசால்ல இருக்கு இந்த பழக்கம். என மாலுவும், “எங்க கிட்ட இல்லாததா உங்க கிட்ட இருந்திட போது. சொல்லப்போன எங்க ஸ்டேட்டஸ்க்கு உங்கள மாதிரி பிச்சக்கார குடும்பத்துல இருந்து பொண்ணு எடுக்குறதே பெருசு.” என வாய்க்கு வந்ததை பேச, ரேணுகாவை பதிலுக்கு பேச விடாது ஜெயசீலன் கண்களால் அமைதி படுத்தினார்.
“நம்ம பொண்ணுக்கு அந்த பையன் பிடிச்சிருக்கு. அப்ப நாம அமைதியாத்தா இருக்கணும்.”என காதில் சொல்ல, மனதிற்குள் பொறுமிக் கொண்டு இருந்தார் ரேணுகா.
இது எதுவும் தெரியாது பூஜா பார்த்திபனை தனித்து அழைக்க, பார்த்திபனின் வலது கரத்தை முழுதாக தன் இரு கைகளாலும் இறுக்கி பிடித்தபடி, அவனை நகர விடாது நின்றாள் விஷாலினி.
அங்கு சண்முகம் தாயிடம் பற்ற வைத்தார் என்றால். இங்கு அவரின் மகள் பூஜாவை பற்ற வைத்துக் கொண்டிருந்தாள். இங்கு மூன்றாவதாக மற்றொரு மனமும் எரிந்து கொண்டு தான் இருந்தது. அது யார் என்று தெரியுமா?
பாரதி…
ஏனென்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…
தென்றல் வீசும்…
