Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தென்றல் 26

“பார்த்திபன் நான் உங்ககிட்ட பேசணும்.” என்றாள் பூஜா.

“என்ன பேசப் போற பூஜா?” பார்த்திபனின் குரல் அல்ல, அவனின் தோளில் தொத்திக் கொண்டு இருந்த விஷாலினியின் குரல் அது. அதில் கடுப்பான பூஜா.



Advertisement

“ஏய் முந்திரிக்கொட்ட. உன்ட்ட நான் பேசல. பார்த்தி I want to talk to you.. alone… ” எனக் காட்டமாக சொல்ல, பார்த்திபன் ‘சரி வா.’ என அழைத்தான். அவனின் கரம் பற்றி நிறுத்திய விஷாலினி,

Advertisement

” இரு மாமா. எதுவா இருந்தாலும் நீ எம்முன்னாடியே மாமா கிட்ட பேசலாம். நீ தனியா கூட்டீட்டு போனாலும் என்ன பேசுனன்னு அடுத்த செக்கேன்டே வந்து மாமா எங்கிட்ட சொல்லிட போறாரு. எங்களுக்குள்ள எந்த சீக்ரெஸ்ட்ஸூம் இருந்தது இல்ல. சரிதான மாமா?” எனத் திரும்பி பார்த்திபனை பார்க்க, அவன் புன்னகையே அவளின் கூற்றை ஆமோதிப்பது போல் இருந்தது.

Advertisement

” உங்கூட ஃபோனல பேச ஆரம்பிச்சதுல இருந்து, ஹோட்டல்ல மீட் பண்ணது, நேத்து நைட் பன்னெண்டு மணி வர வாட்சப்ல பேசிட்டு இருந்தது எல்லாமே எனக்கு தெரியும். அதுனால தனியா அது இதுன்னு பொடி வைக்காம இங்கயே சொல்லு.” என்ற விஷாலினியின் கோபம் பார்த்திபன் பெயருடன் பூஜாவின் பெயரையும் சேர்த்து சொல்வதால் வந்தது.

Advertisement

தந்தை பார்த்திபனுக்கு திருமணம் என்று சொல்லும் போது கூட எதுவும் தோன்றவில்லை அவளுக்கு. ‘ ஐ கல்யாணமா.. ‘ என குதூகலித்தாள் அவள். எதையும் மனதிற்குள் ஒழித்து வைக்கத் தெரியாத சிறுமி அவள்.

ஆனால் திருமணத்திற்காக விடுப்பு எடுத்து வீட்டிற்கு வந்த போது அனைவரின் வாயில் இருந்தும் பூஜா… பூஜா என்ற பெயரே வந்தது. பார்த்திபன் கூட, பூஜா என்று சொல்லி ஃபோனில் பேசும் போது. கோபம் கோபமாக வந்தது அவளுக்கு.

“நீயே உ மாமன கல்யாணம் பண்ணிக்கிட்டா… உம்மாமெ கவனம் உன்ன விட்டு எங்கயும் போகாது. இந்த வீட்டு மருமகளா எல்லாரும் உன்ன தாங்குவாங்க. நீ தா உங்கம்மா பேச்ச கேட்டுட்டு விட்டுட்ட. ” என சண்முகம் வேறு போதனைகள் பல கூறி விஷாலியின் மனத்தில் ஆசையெனும் நாற்றை நட்டு வைத்தார்.

“இப்ப என்ன பண்றது ப்பா. எனக்கு பார்த்தி மாமா வேணும். ” என்றாள்.

‘அப்ப நான் சொல்வதை செய். பார்த்திபனை விட்டு நகராதே. அந்த பூஜாவை அவனிடம் நெருங்க விடாதே. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.’ என மகளுக்கு ஐடியாக்கள் சொல்ல, இதோ அவரின் ஐடியாக்களை செயல் படுத்த தொடங்கி விட்டாள் அவள்.

தன் மாமனின் கலைந்த கேசத்தை விரல்களால் சரி செய்தபடி விஷாலினி நிற்க, அதைக் கண்டு பொறாமையெல்லாம் படவில்லை பூஜா. எரிச்சலும் கோபமும் தான் வந்தது.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை கவனியாது அலட்சியமாய் பார்த்திபன் நிற்பது, அதை விட அதிக எரிச்சலை தந்தது.

“ச்ச…” என்றவள் திரும்பியும் பார்க்காது நடக்க, அவளின் கரம் பற்றியவன். ஏன் கோபம் எனக் கேட்டான்.

“நான் உங்ககிட்ட பேசணும்.”

“என்ன பேசணும் சொல்லு பூஜா.. விஷா குட்டி இருக்கான்னு தயங்காத.” எனச் சொல்லி விஷாலியின் தலை கோதி விட, அதுவும் எரிச்சலாக வந்தது. அதை மறைக்காது.

” இவ முன்னாடி தா நாம பேசணுமா. நான் உங்க வைஃப்..”

“இன்னும் கல்யாணம் ஆகல. ” என்றவளைப் பார்வையாலேயே எறித்தாள்.

” அவ சின்ன பொண்ணு பூஜா.. ஏன் இவ்ளோ கோபப்படுற.” எனக் கனிவான குரலில் பேசி பூஜாவை சமாதானம் செய்ய முயன்றான்.

“உங்களுக்கு இந்த கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் இருக்கா இல்லையா?” என நேரடியாகவே கேட்டாள் பூஜா. விஷாலினி சிறு குழந்தை போல் வாயில் கை வைத்துக் கொண்டு சிரிக்க, பூஜாவின் முறைத்தாள். பார்த்திபன் அத்தை மகளை திரும்பி பார்த்தான்.

” இந்த கேள்வியெல்லாம் கல்யாணம் பேச ஆரம்பிக்கும் போதே கேக்க வேண்டியது. கல்யாணம் ஆக ஒரு மாசம் தா இருக்கு இப்ப போய் கேட்டாங்களா அதா சிரிப்பு வந்திடுச்சி மாமா.” என மழலை மொழியில் பேசியதை கேட்டு அவனுக்கும் சிரிப்பு வந்து விட்டது.

“அதான.. ” எனச் சொல்லி பெரிய ஜோக் கேட்டது போல் சிரிக்க, பூஜா வேகவேகமாக தன் அன்னையை பார்க்க சென்றாள். அங்கு மாலுவும் சண்முகமும் ரேணுகாவிடம் பார்த்திபனை திருமணம் செய்யப்போவதால் பூஜாவிற்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டத்தை பற்றி பெருமையாக பேசி ரேணுகாவை மட்டம் தட்டிக் கொண்டிருக்க,

“போதும் ம்மா.. வா போலாம்…”

“பட்டு டி.. “

“நடக்காத கல்யாணக்கு எதுக்கு பட்டெடுக்கணும். எனக்கு உங்க அதிஷ்டம் தேவையில்ல.” என்று கடையை விட்டு வெளிநடப்பு செய்தாள் பூஜா.

“என்ன அண்ணி இது? அசிங்கப்படுத்ததா எங்க கூட சம்மந்தம் பேச வந்திங்களா.” என்றார் மாலு.

” அப்படில்லாம் இல்ல மாலதி.. அவ ஏதோ தப்பா புரிஞ்சிட்டு பேசுறா. நான் போய் அவள கூட்டீட்டு வர்றேன்.” என ஜெயசீலன் நகர, ரேணுகா தடுத்தாள்.

“அதா அவளே வேண்டாம்னு சொல்லிட்டாள. இதுக்கப்புறமும் சமாதானம் பண்ணி சேத்து வைக்கணுமா? நல்ல காரியம் செஞ்சிருக்கா எம்பொண்ணு. இல்லன்னா இந்த பேய்ங்க கிட்ட வாக்கப்பட்டு சீரழிஞ்சி போயிருப்பா. இப்பவே இவ்ளோ பேச்சு பேசுறா. இனி மாமியாரா இவ என்னென்ன செய்வா. இந்த கல்யாணம் நடக்காமா இருக்குறது தா நல்லது. “

“என்னங்க இது? நிச்சயம் முடிஞ்சதுக்கு அப்றம் சொல்றிங்க. நிச்சயத்தப்ப நாங்க போட்ட நக, பண்ண செலவு. அதுக்கெல்லாம் என்ன பதில்?” எனச் சண்முகம் பேச, மாலு பேச, கடையில் நின்று கொண்டு குடும்பச் சண்டை நடந்தது. அப்படியே கல்யாணமும் நின்று போனது.

கோபமாக வெளியே வந்த பூஜா மாலதியைத் திட்டுக் கொண்டே திரும்ப,‌ தூரத்தில் பாரதி தெரிந்தாள். கூடவே வரலட்சுமியும்.

கடைக்குள் பார்த்திபன் பாரதியின் கரம் பிடித்து அழைத்து வந்து, ஒவ்வொரு புடவையையும் எடுத்து அவளின் மீது வைத்து அழகு பார்த்ததோடு மட்டுமில்லாது, விலை உயர்ந்த ஒரு புடவையை அவன் பில் போட்டு அவளிடம் நீட்டினான்.

“என்னாதுய்யா இது?”

“இன்னைக்கி உன்னோட கனவு நினைவான நாள். உங்கம்மாவ ராணி மாதிரி ஒரு வீட்டுல உக்கார வச்ச நாள். அதுக்கான ஒரு கிஃப்ட். ” என கவரை நீட்ட, அதை வாங்காது நின்றாள் பாரதி.

“உனக்கு இல்ல மைம்மா. உங்கம்மாக்கு… அன்னைக்கி பாக்கும் போது உம்மேல இருந்த கடுப்புல எதுவும் பண்ணல… இது அவங்களுக்கு.” என்க, அதை மறுக்கவில்லை பாரதி. எனெனில் பார்த்திபன் அவ்வ போது வந்து ரத்னாவிடம் பேசுவான். அவன் பேச்சில் மயங்காதவர் யாரும் இல்ல என்பது போல் ரத்னாவும் பார்த்திபனுடன் பேசுவார்.

சில நேரம் கேண்டினில் இருந்து உணவு எடுத்து வந்து அவனுக்கு ஊட்டி கூட விடுவார். அந்த அளவுக்கு பார்த்திபன் நெருக்கமாக ரத்னாவிடம் பழகி இருந்தான். அதனால் நீட்டிய புடவையை வேண்டாம் என மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.

” எங்கம்மா ஏன் வாங்குனன்னு கேட்டுச்சின்னா கொண்டாந்து உங்கிட்டையே குடுத்திடுவேன். பரவாயில்லையா.”

“மாட்டாங்க… ரத்து கேக்க மாட்டாங்க.. நான் குடுத்தா வாங்கிக்கும் ரத்து.” எனச் செல்லப் பேர் வைத்து அழைக்க, அவன் அப்படி அழைக்கும் போது ரத்னாவின் முகத்தில் வரும் சிறு புன்னகை நினைவு வந்தது.

“அது ரத்துக்கு… இது உனக்கு…” என மற்றொரு கிஃப்ட்டை நீட்ட, அவள் புருவம் சுருக்கினாள்.

“இதுல என்ன இருக்கு?”

“ஃபோன் மைம்மா. ஐ ஃபோன். ஆக்சலி உன்னோட ஃபோன்ல வீடியோ கால் பேசுற வசதி கிடையாது. அது எனக்கு கொஞ்சம் கம்பர்டபுள்ளா இல்ல. இனி நாம வீடியோ கால்ல பேசிக்கலாம்ல. ” என்க, பாரதி பார்த்திபனை வண்டி வண்டியாக திட்டி விட்டு கிளம்பி விட்டாள்.

சென்றவளை, “மணிபாரதி.” என்ற குரல் தான் நிறுத்தியது. திரும்பி பார்த்தால் வரலெட்சுமி வேகமாக இவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

“உங்கிட்ட பேசணும். வா…” என அதிகாரமாக எதிரில் இருந்த கடைக்குள் கையை பிடித்து இழுத்து செல்ல, பாரதி ஏன் என்று புரியாது முழித்தாள்..

அங்கு நாற்காலியில் வேகமாக அமர்ந்தவர், பாரதி அமரும் முன்னே தன் கேள்விகளை அடுக்க தொடங்கினார். ‘ உனக்கு பார்த்திபனுக்கும் இடைல என்ன? நீயும் அவனும் காதலிக்கிறீர்களா? ‘என வரிசையாக கேட்க, பாரதி மறுத்தாள்.

“அப்றம் ஏன் அவெ உன்ன சுத்தி சுத்தி வர்றான்.”

“அது நீங்க அவங்கிட்ட கேக்க வேண்டிய கேள்வி. ஏங்கிட்ட கேட்டு என்ன பிரயோஜனம். நான் அவன வராதா வேண்டாம்னு எவ்ளவோ சொல்லியும் தெனோமும் வந்து காலைல மொறவாசல் செய்ற ஆளு கணக்கா கட வாசல் முன்னாடி வந்து வந்து நிக்கிறான். நானும் தொரத்தி தொரத்தி தா பாக்கறேன். உங்க வீட்டு பிள்ளைக்கி சூடு சொரணத்த இருக்குறது இல்ல. எதுக்கும் சோத்துல மட்டுமில்ல காபிலயும் உப்பு போட்டே குடுங்க.” என்று சுள்ளென்று சொல்லியவள், அவரின் முகம் வாடியிருப்பதை பார்த்தபடி எதிரில் அமர்ந்தாள்.

“பார்த்தி எனக்கு பையன் மாதிரி. நான் வயித்துல சுமக்கலன்னாலும் அவெ எனக்கு மகன் தா. அவனோட சந்தோஷம் தா எனக்கு முக்கியம். அவனுக்கு உம்மேல லவ் இருந்தா. அவனுக்கு உன்ன கல்யாணம் பண்ணி வைக்கிறதுல எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல. அவெ மனசுல இருக்குற உன்ன அவெங்கைக்கு சேக்க வேண்டியது ஒரு அம்மாவா என்னோட கடம. சொல்லு நீயும் பார்த்திபனும் காதலிக்கிறீங்களா?” எனப் பார்த்திபனின் சந்தோஷத்தை முன் நிறுத்தி கண்களில் நீர் கோர்த்தபடி அவர் பேச, அவரின் பாசம் பாரதிக்கு வருத்தத்தை தந்தது. கூடவே இனம் புரியா ஒன்று அவளுள் தோன்ற, அவரின் கரம் பற்றியவள்,

“எனக்கு அவெ மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல. அவனும் எங்கிட்ட அப்படி பழகல. பூஜா அவனுக்கு ஏத்த ஜோடி.” என்றுவிட்டு எழுந்த சென்றாள்.

அதைத் தூர நின்று பார்த்துக் கொண்டிருந்த பூஜாவிற்கு, தன் தோழியின் முக பாவனைகளே சொல்லியது. அவளின் மனதில் பார்த்திபனுக்கு என ஒரு இடம் உள்ளதை. அதை உறுதி படுத்த எண்ணி அவளின் அப்பார்ட்மெண்ட்டிற்கு சென்றாள்.

தனக்கு முன்னே வந்து சேர்ந்த தோழியிடம் காரணம் கேட்க, “கல்யாணத்த நிறுத்திட்டேன்.” என்றாள் பூஜா.

அப்போது திட்ட தொடங்கியவள் தான். இப்போது வரை நிறுத்தவில்லை.

“பாரதி, ஒரு குடும்பத்துல இருக்குறவங்க சரியில்லன்னா கல்யாணம் பண்ணிக்கிறவன் பாத்துப்பான்னு கவலப்படாம கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா இங்க பார்த்திபனுக்கு எம்மேல எந்த ஒரு ஃபீலிங்கும் இல்ல. அப்படி இருக்கும் போது எங்களுக்குள்ள கல்யாணம் நடந்தா அது சரியா இருக்காது.” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னாள் பூஜா.

“ஆனாலும் பார்த்திபன் நல்ல ஜாய்ஸ் உனக்கு.”

“ஏன்? உனக்கு அவன பிடிச்சிருக்கா.. ” என அவளின் முகம் பார்த்து கேட்க. வேகமாக வந்தது பதில், “இல்ல.. ” என்று.

“சரி நேரமாச்சி… நீ உ வீட்டுக்கு கிளம்பு. நான் போய் ராத்திரிக்கி ஏதாவது செய்றேன்.” என்று எழ, சமையலறையில் இருந்து ரத்னா வந்து கொண்டிருந்தார்.

இரவு அவரின் கை வண்ணத்தில் உணவு. “அக்கா சூப்பரா இருக்குக்கா. அம்மா நல்லா சமைக்குமாக்கா? ” என ஏக்கமாக கேட்டு தட்டு நிறைய சாதத்தை போட்டு கொண்டு உண்டாள் பூர்ணி.

அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவள் அன்னையின் சமயலை உண்டது இல்லை. இது தான் முதல் முறை. வயிறு வெடித்தாலும் பரவாயில்லை என அள்ளி அள்ளி உண்டவள்,

“அம்மா ஊட்டி விட்டா நல்லா இருந்திருக்கும். ” என்று ஏக்கமாகச் சொல்ல, பாரதியுடைய கரம் நீண்டது.

“நானும் உனக்கு அம்மா தா.” என்க, தமக்கையின் கையால் உண்டாள் பூர்ணி. அவள் மட்டுமல்ல பூஜாவும் தான்.

“நீ இன்னும் போகலயா டி.”

“நானும் உங்கையால சோறு சாப்பிட்டு பல வர்ஷம் ஆச்சி. அதோட இன்னைக்கி நைட் உங்கூட தா இருக்க போறேன். “

“ஆண்டிக்கு தெரியுமா?”

“தெரிஞ்சாலும் இனி ஒன்னும் சொல்ல முடியாது. ம்.. சீக்கிரம் எடுத்து ஊட்டு..” என்க, மூவரும் சேர்ந்து பேசிக் கொண்டே உணவுண்டனர். அதை ரத்னா தூர நின்று பார்த்துக் கொண்டிருந்தார். நிறைவாக.

தென்றல் வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!