Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே… Final 3

 சுதாவை, ராமமூர்த்தியையும்   கூட ரிஷி ரெசார்ட்டிற்கு அழைக்க..



Advertisement

” நீ உன் பொண்டாட்டிய மட்டும் கூட்டிட்டு போ பேரபிள்ளைங்கள நான் பார்த்துக்கிறேன்” என்றார் சுதா.

 “அம்மா நீங்களும் அப்பாவும் கூட வாங்க” என்றான் ரிஷி மீண்டும்,

Advertisement

Advertisement

” டேய் நீ உன் பொண்டாட்டி பிள்ளை கூட போ, நான் என் புருஷன் கூட வெளியே போறேன், எங்களை கொஞ்சம் ப்பிரியா விடு,” என்று சுதா சொல்ல..

 ரிஷி  அம்மாவை பார்த்து சிரித்து விட்டு கிளம்பி விட்டான்..

Advertisement

 மொழி கூட ரிஷியிடம் சொன்னாள்.

 “பிள்ளைங்க வேணாம் அத்தை கூட  இருக்கட்டும், நாம தனியா போகலாம்” என்று.

“பரவாயில்லை பிள்ளைகள்   நம்ம கூட வரட்டும்” என்று அவன் காரை ஒட்டிக்கொண்டு இருந்தான்.

மொழி பின் சீட்டில்  பிள்ளைகளோடு அமர்ந்து பேசிக் கொண்டே வந்தாள்.

 பிள்ளைகள் சிறிது நேரம் கழித்து அவள்  மடியில்  தலை வைத்து இரண்டு பேரும் படுத்து தூங்கி விட.

 கண்ணாடி வழியே இதை பார்த்துக் கொண்டே வந்தான் ரிஷி ,  மொழி இரண்டு பேரையும் தட்டிக் கொடுத்தபடியே கண் மூடி இருந்தாள்.

 அவள்  முகம் அவ்வளவு அழகாய் இருந்தது,.

 ஆத்வீக்கையும் , சாத்வீக்கையும் அவளுக்கு அவ்வளவு பிடிக்குமோ.

  என்று அவர்களைப் பார்த்துக் கொண்டே தான் ரெசார்ட்  வந்து சேர்ந்தான்..

 ரெசார்ட் வந்ததிலிருந்து அவளின் கையை இரு குழந்தைகளும்  விடவே இல்லை  அவளுக்கு கஷ்டமாக   இருக்க..

  “ஆத்வீக் அப்பா கிட்ட வா” என்று ரிஷி அவனின்   கையை  பிடித்துக் கொண்டான்.

 நான்கு பேரும் ரெசார்ட்டை  சுத்தி பார்த்தார்கள்,  பார்க் சென்று விளையாடினார்கள், பின்பு பீச்சில் குளித்து விளையாடி, அறைக்கு வந்து குளித்து விட்டு, ஹோட்டல் சென்று உண்டு விட்டு ரூம்வர.

பிள்ளைகள் வந்தவுடனே  அசதியில் தூங்கி விட.

மொழி பிள்ளைகள் தூக்கியதும் கணவனை எதிர் பார்த்திருக்க..

அவனோ லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.

மொழி அவனை  பார்த்த படியே படுத்திருந்தவள்.

“வேலை இருக்க மச்சான் ” என்றாள்.

“ஆமாம் டா ஒரு டென் மினிட்ஸ்” என்றவன். ஒரு ஈமெயிலை பார்த்து , அதுக்கு ரிப்ளே பண்ணி விட்டு, லேப்டாப்பை மூடிவிட்டு மொழி அருகே  வந்தவன்..

“தூங்கு” என்று சொல்லி அவளின் நெத்தில் முத்தமிட்டு    விலகி செல்ல.

அவன் கையை பிடித்து இழுத்து நிறுத்தியவள்.

அவளை தூக்கு என்பது போல் அவள் இரண்டு  கையை அவன் முன் விரிக்க.

அவள் கை விரித்து தன்னை அழைத்தும்  சந்தோஷத்தில் சிரித்தவன்.

அவளை தூக்கி இடுப்பில் வைப்பது போல் அவளை  கட்டிக்கொண்டவன்..

அறையின் உள்ள லைட்டை ஆப் பண்ணிவிட்டு, மொழியை பால் கனிக்கு தூக்கி சென்றான்.

அங்கே கடலை பார்த்தவாறே, பெரிய ஊஞ்சல் இருக்க.

அவளை அணைத்து வாறே, ஊஞ்சலில் அமர்ந்தவன், மெதுவாக ஊஞ்சலை இயங்க.

மொழி ரிஷியை இன்னும் இறுக்கமாக அணைத்து கொண்டவள்..

“என் மேல கோபமா மச்சான்”, என்றாள்.

இல்லை என்று தலையாட்டியவன். “வருத்தம் மட்டும் தான், அதுவும் நீ மச்சான்னு கூப்டீயா, அதனால  அந்த வருத்தம் கூட காணாம போச்சு” என்றவன் அவளின் செவ்விதழில் முத்தமிட்டவாறே.

 மொழி பிள்ளைகளை  பத்தி ஏதோ சொல்ல வர.

அவளை  தன் இதழ் கொண்டு தடுத்தவன்.

“தானும், என் பிள்ளைகளும் உன்னை எப்பையும் விட மாட்டோம், நீதான் எங்க வாழ்க்கை, உலகம் எல்லாம், நீ இல்லாத வாழ்க்கை எங்களுக்கு கிடையாது, இப்போ புதுசா ஒரு பொக்கிஷம் வர போகுது “என்றவன்.

அவளை கொஞ்சம் தூக்கி அவளின் மணி வயிற்றில் முத்தமிட்டவன், “இந்த பொக்கிஷத்தை அளிக்க உனக்கு எப்படி மனசு வந்துச்சு மொழி?..

இவ நம்ம வாழ்க்கைக்கு கிடச்ச கிப்ட்..

நீ எத பத்தியும் கவலை படாதா, எல்லாத்தையும் நான் பாத்துகிறேன், நாளைக்கே நம்ம பிள்ளைகளுக்கு நீ சித்தியின்னு தெரிஞ்சாலும், அவனுங்க உன்னை விட்டு  போக மாட்டானுங்க, உன்மேல உள்ள பாசம் தான் அதிகமாகும், அத நீ புரிஞ்சுக்கோ, மனசா போட்டு குழப்பிக்காதா,  நீ காட்டுற பாசத்த மாதிரி யாரும் என் பிள்ளைங்க மேல யாரும்  பாச காட்ட மாட்டாங்க, நீ தான் அவங்களுக்கு அம்மா,  நீ சித்தி இல்ல அவங்களுக்கு,,. அத உன் மனசுல பதிய வை நீ” என்றவன் ,  “புரிஞ்சதா” என்றான்.

அவள்  ஆம் என்று தலையாட்ட, அவளை தன் அணைப்பிலே வைத்திருந்தவன்..

அணைப்பை கூட்டி, “உள்ள போலாமா குளிரும் டி”?  என்றான் ரிஷி.

அவளோ வேண்டாம் என்றவள்.

“இங்கேயே நல்ல இருக்கு, இப்படியே இருக்கலாம்” என்றவள், குளிர்ந்த காற்று வீச ரிஷியை இன்னும் இறுக்கமாக அணைத்து கொள்ள.

ரிஷி அவளின் அணைப்பில்  கட்டுண்டன்..

அவளை தட்டிக்கொடுக்க.

இருவரும் அவர்களை மீறி தூங்கி இருந்தனர்..

நான்கு நாட்கள் ரெசார்டில் சந்தோஷமாக இருந்து விட்டே அழைத்து வந்தான் ரிஷி தன் குடும்பத்தை.

 குழந்தைகள் அறையை  மாடிக்கு மாற்றி விட்டான்.

 மொழியோடு பிள்ளைகள் அதிக நேரம்  இருக்குமாறு பார்த்துக்கொண்டான்.

 இரவில் பிள்ளைகள் தூங்கியதும்,,  மொழியை  பக்கத்து அறைக்கு தூக்கி செல்வான், அவள் ரிஷியை தவிற வேறு யோசிக்காத வாறு அன்பாக பார்த்துக்கொண்டான்.

 மொழியின் ஒவ்வொரு அசைவையும் கூட புரிந்து வைத்திருந்தான் ரிஷி.

 அவள் மனதை புரிந்து நடந்து கொண்டவன் மனதை விட்டு பேசி அவளுக்கு என்ன வேண்டும் எது வேண்டும் என்று கேட்டு அவளை நன்றாக பார்த்துக் கொண்டான்.

 மாதங்கள் கடந்தது, ஒன்பது மாதத்தில் மொழிக்கு  வளைகாப்பு போட்டு அவளை திருநெல்வேலி அழைத்துச் சென்றிருந்தான்..

 அவள் வேண்டாம் என்று சொல்லியும் ரிஷி  அடமாக இருந்து. திருநெல்வேலியில் உள்ள அவர்கள் செல்லம்மா பாட்டி வீட்டில் தான் அவளுக்கு டெலிவரி பார்த்தான்.

 அதே வீட்டில் மொழியின் பெற்றோர் தன் பெற்றோர், மொத்த குடும்பமே தங்கி  இருந்தது.

 அனைவரும் எப்பொழுது குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர் சரியாக 9 மாத முடிவில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்திருந்தாள் மொழி.

 அனைவருக்கும் சந்தோஷமே, ரிஷிக்கு கண்ணில் கண்ணீரே வந்து விட்டது பெண் குழந்தை என்றதும்.

 கண்கலங்கி நின்றவனை தோளோடு அணைத்துக் கொண்டார் ராமமூர்த்தி.

 சுதா  சந்தோஷத்தின் உச்சியில் இருந்தார்.

 அவருக்கும்   பையன், ரிஷிக்கும் இரண்டு பையன்கள்,  இப்போது பெண் குழந்தை பிறந்ததும் “மகாலட்சுமி பிறந்திருக்கா டா  நம்ம வீட்டுக்கு” என்று அவ்வளவு சந்தோஷப்பட்டார்.

 குகன் மனைவியோடு கிளம்பி வந்து இருந்தான்.

 குகன் மனைவிக்கு  இப்போது ஐந்து மாதம் நடந்து கொண்டிருந்தது..

 அனைவரும் சந்தோஷத்தில் இருந்தனர்.

 பிள்ளைகள் இருவரும் மாமன் பொறுப்பில் இருந்தனர்.

 அம்மாக்கு பாப்பா பிறந்தது என்று குகன் சொல்ல பிள்ளைகளுக்கு அவ்வளவு சந்தோஷம் “குட்டி பாப்பாவா மாமா” என்று கேட்க.

 ஆமாடா உங்களுக்கு குட்டி பாப்பா பொறந்திருக்கு என்று அனைவரும் சந்தோஷப்பட்டனர்.

 குழந்தைக்கு புத்தாடை அணிவித்து ஒரு அழகான டவலில் சுத்தி எடுத்து வந்து கொடுக்க போக..

 சுதா  ரிஷியை  வாங்க சொல்ல “நீங்க வாங்குங்கம்மா” என்று ரிஷி.

  ஆனந்த கண்ணீரில் தன் பேத்தியை வாங்கிக் கொண்டார் சுதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!