Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா 22

அத்தியாயம் 22

​”அட நம்ம ஏகே சார்!” அஜய்யின் வருகையைக் கண்ட அவன் வயதையொற்றிய ஒருவன் அவனருகில் வந்தவாறு, “என்ன சார், இதான் வர டைமா? ஃபங்ஷன் ஸ்டார்ட் பண்ணி ஹாஃபனவருக்கு மேலாச்சு,” என்றான் செல்ல கோபத்துடன்…



Advertisement

​”வர்ற வழில ட்ராஃபிக் டா, அதான் கொஞ்சம் லேட்டாகிடுச்சு. அப்புறம் இந்த சார், மோர் என்கிற பேச்சை விட்டுட்டு அடக்க ஒடுக்கமா இரு,” என்றவன் புன்முறுவலுடன் தனது நண்பனான வினய்யை ஆரத் தழுவிக்கொண்டவன்,..

​”என்னடா,… எல்லாரும் வந்தாச்சா? நான் தான் லேட்டா?” என்று வினவ,.. அப்போது “ஹாய் அஜய்,” என்றவாறு அவ்விடத்திற்கு வருகை தந்தாள் ஒரு பெண்….

Advertisement

Advertisement

​டிசைனர் புடவையில் நேர்த்தியான அலங்காரத்துடன் வந்தவள், “என்ன இதான் வர்ற டைமா?” என்றாள் அவள்…

​”இப்போ தான் இவன்கிட்ட ரீசன் சொல்லி முடிச்சேன், அடுத்து நீயா?” என்றவன், ஸ்மிருதியிடம் திரும்பி, “ஸ்மிருதி இவன் தான் வினய், நான் சொன்னேன்ல,” என்றவன், “அண்ட்இது பிரியா,” என தனது நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தான்…

Advertisement

​”ஹாய்,” என்றாள் பிரியா ஸ்நேகமான சிரிப்புடன். ஸ்மிருதியும் பதிலுக்குச் சிநேகமாகச் சிரிக்க, “அஜய் உன் வொய்ஃப் செம கியூட், அண்ட் சைலண்ட் டைப்பா என்ன” என்றாள் இருவரையும் நோக்கி….

​”பின்ன உன்னை மாதிரி வாயாடின்னு நெனச்சியா?” எனப் பிரியாவின் தலையில் தட்டினான் வினய். “போடா,.. எரும, தலையில அடிக்காதன்னு எத்தனை தடவை சொல்றது? இருடா, நிவிகிட்ட மாட்டி விடுறேன்,” என்றாள் ப்ரியா….

​”நிவி, வினய்யோட வொய்ஃப், அதோட எங்க ஃபிரண்டும் கூட. ரெண்டு பேரும் லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க,” என்றான் அஜய் ஸ்மிருதியிடம்.

​”ஓகே ஓகே,… மாப்பிள்ளையும் பொண்ணையும் பார்க்க வேண்டாமா, வாங்க ஸ்மிருதி,” என்றாள் ப்ரியா…

​

​இருவரும் நண்பர்களுடன் மேடையை நோக்கி நடந்தனர். “என்னடா ரொம்ப சீக்கிரம் வந்துட்ட போல,” என்றான் அன்றைய நாளின் மாப்பிள்ளையான ரித்திக்…

​”கோவிச்சிக்காதடா, டிராஃபிக் அதான்,” என்றவன், தன் நண்பனை அணைத்துக் கொண்டான், ரித்திக் தனது மனைவியை அஜய்யிடம் அறிமுகம் செய்து வைக்க, அஜய்யும் ஸ்மிருதியை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்….

​”ஹேய் அஜய்,… எப்படி இருக்க, உன்னைப் பார்த்து எவ்ளோ மன்த்ஸ் ஆச்சு?” என்றாள் அஜய்யின் மற்றொரு தோழியான சிந்தியா. அவளும் நேர்த்தியான முறையில் பச்சை நிற பட்டுப் புடவை அணிந்திருந்தாள்…

​”ஐம் குட், நீ எப்படி இருக்க சிந்து? யார் உன் பையனா?” என்றவாறு அவள் கையில் இருந்த இரண்டு வயது குழந்தையைக் கையில் வாங்கிக்கொண்டான்…

​”ஐம் ஆல்சோ ஃபைன்,” என்றவளிடம், “எங்கே உன் ஹஸ்பண்ட்? இன்ட்ரோ பண்ண மாட்டியா?” என்றான் அஜய்…

​”இங்கே தானே இருந்தாரு,” என்றவள் தனது கணவரைப் பார்வையால் தேடியவள்,..

​”அவரை விடு, யார் இவங்க தான் உன் வொய்ஃபா?” என்றாள் அஜய்யின் அருகில் நின்ற ஸ்மிருதியைக் காட்டி…

​”ஆமா சிந்து,” என்றவன், “இது சிந்தியா,”

​”இது ஸ்மிருதி,” என இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைக்க, சிந்துவும் ஸ்மிருதியும் மெல்ல பேச்சை வளர்த்தனர்,..

​”ஹேய் அஜய்,…” என்றவாறு பிரகாசமான முகத்துடன் அவனை அணைத்துக் கொண்டான் அடுத்த நண்பனான சந்துரு…

​”உன்னை மீட் பண்ணி ஒன் இயர் இருக்குமாடா,” என்ற சந்துரு, “விஷயம் கேள்விப்பட்டேன்டா, ரொம்பப் பெரிய இழப்புடா உனக்கு, உனக்குப் போய் அந்தக் காட் இப்படியொரு கஷ்டத்தைக் கொடுத்துட்டாரே,” என்றான் சந்துரு.

​”டேய் சந்து,.. ஹேப்பியா இருக்க தான் எல்லாரும் ஒன்னு கூடி இருக்கோம், அவனை சேட் ஆக்குன உன்னைக் கொன்னுடுவேன் பார்த்துக்கோ,” என்றாள் சிந்து…

​”ஸாரி டா,” என்றவன், “ஏய் குள்ளச்சி, நீயும் இங்க தான் இருக்கியா? உன்னைக் கவனிக்கவே இல்லயே,” என்றான் சந்துருவே நிலையை மாற்றும் விதமாக….

​”போடா பனமரம், இன்னொரு தடவை குள்ளச்சின்னு சொன்ன என் பையன் கிட்ட சொல்லி கடிக்க விற்றுவேன்,” என்றாள் சிந்து.

​”யார் இந்தப் பொடியனா?” என்றவன், குழந்தையைக் கையில் வாங்கியபடி, “நீ என்னைக் கடிச்சி வைப்பியாடா?” என்றான் குழந்தையிடம். குழந்தைக்கு அது நன்றாகப் புரிந்துவிட, அவனின் கன்னத்தைக் கடித்து இழுத்தது.

​வலியில் சிறிது அலறியவன், “உன் பையன் உன்னை விட டேஞ்சரா இருப்பான் போலயே,” என்றவன் சொல்லில் சிந்து, அஜய் உட்பட, ஸ்மிருதியும் சிரித்தாள்….

​இத்தனை நேரம் அனைத்தையும் பார்வையாளராகவே இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஸ்மிருதிக்கு, ‘அஜய்க்கு இத்தனை தான் நண்பர்களா, இல்ல இன்னும் இருக்காங்களா?’ என பிரமித்து போனவள், சந்துரு சொன்னதையும் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்….

​நேரம் கடக்கக் கடக்க, இன்னும் சில நண்பர்கள், அஜய்யுடன் சேர்ந்து கொள்ள, அவர்களையும் ஸ்மிருதியிடம் அறிமுகம் செய்து வைத்தான். ‘இத்தனை ஃபிரண்ட்ஸா,’ என வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்மிருதி…

​அந்நேரம்… “வாங்க ஸ்மிருதி,.. நான் உங்களுக்கு மத்த ஃபிரண்ட்ஸ்ஸை இன்ட்ரோ பண்ணி வைக்கிறேன்,” என ஸ்மிருதியை அழைத்துச் சென்றாள் பிரியா…

​நண்பர்களின் மனைவிகள் என ஒரு பெண்கள் கூட்டமே கூடி இருந்தது அவ்விடத்தில், அவர்களுடன் ஸ்மிருதியும் சேர்ந்து கொண்டாள்…

​அந்த நேரம், “ஹாய் ஸ்மிருதி,” என்றவாறு ஸ்மிருதியின் அருகில் வந்தாள் ஒரு பெண். நெட்டினால் நெய்யப்பட்ட ஃபேன்சி புடவை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் என பார்க்கவே மாடலாகக் காட்சியளித்தாள்…

​”ஹாய்,” என்ற ஸ்மிருதி, அவளைப் புரியாத பார்வையுடன் பார்த்தாள்.

​”ஐம் நிவிதா,” என்றவள், “அங்கே இருக்கானே, அவனோட வொய்ஃப்,” என்றாள் நண்பர்களுடன் நின்ற வினய்யைக் காண்பித்து…

​”ஓஹ்…” எனச் புன்னகைத்தவள், ‘அப்போ இவங்க தான் அந்த மூணாவது கேர்ள் ஃபிரண்ட் போல,’ என நினைத்துக் கொண்டாள்.

​”கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் ப்ரி உன்னைப் பத்தி சொன்னா, நீ தான் அஜய்யோட வொய்ஃப்னு, அதான் இன்ட்ரோ ஆகிக்கலாம்னு வந்தேன்,” என்ற நிவி,.. ​”வாயேன்… அப்படி உட்கார்ந்து பேசலாம்,” டேபிளுடன் கூடிய அந்த நாற்காலியைக் காண்பித்து சொல்ல, சம்மதமாக அவளுடன் சென்று அமர்ந்தாள் ஸ்மிருதி…

​”மேட்சிங் கலர் ட்ரஸ்ஸஸ்,” என்றவளைப் புரியாமல் பார்த்தாள் ஸ்மிருதி…

​”நீயும் அஜய்யும் ஒரே கலர் ட்ரஸ்ல இருக்கீங்கல்ல, அதைத் தான் சொன்னேன்,” என்றாள்…

ஸ்மிருதிக்கு அந்தச் சமயம் அஜய்யைப் பார்க்கணும் போல் தோன்ற, தனது பார்வையைத் தனக்கு எதிர்த்திசையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த அஜய்யின் மீதி அவள் பார்வை படிந்தது, நண்பர்களுடன் சிரித்த முகமாக  நின்ற அவன் இன்றும் அவளைக் கவர்ந்தான்…

​அதைக் கவனித்த நிவி, “என்ன சைட்டிங்கா?” என்றாள்…

​வேகமாகப் பார்வையை நிவியின் புறம் திருப்பியவள், கூச்சத்தத்துடன் தலை குனிந்து கொண்டாள். “அஜய்யை நீ லவ் பண்ணுறியா ஸ்மிருதி?” என்றாள் நிவி…

​திகைப்புடனும் குழப்பத்துடனும் தன்னைப் பார்த்தவளிடம், “எனக்கு எல்லாம் தெரியும், இன்ஃபேக்ட் உனக்கும் அஜய்க்கும் இது செக்கேன்ட் மேரேஜ் அப்படிங்கிறதும் தெரியும். எனக்கு மட்டும் இல்ல, ஃபிரண்ட்ஸ் எல்லாருக்குமே இது தெரியும்,” என்றாள் நிவி…

​”உன்னைப் பார்த்தா ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி தெரியிற, இம்பார்டண்டான சில விஷயம் இருக்கு, அதை உன்கிட்ட சொல்லலாமா, வேண்டாமானு தான் தயக்கமா இருக்கு,” என்றாள் நிவி சோகமான முகத்துடன்…

​”என்ன ஆச்சு, எதைப் பத்தி சொல்றீங்க?” என்றாள் ஸ்மிருதி.

​”அஜய்யைப் பத்தி தான்,” என்றாள் நிவி…

​”ஏன்… அவருக்கு என்ன?” என்றாள் பதற்றமாக…

​”உன்கிட்ட சொல்லணும்னு தோணுது, பட் இதனால நீ ஹர்ட் ஆகிடுவியோனு பயமா இருக்கு,” என்றாள் நிவி….

​”என்ன சொல்றீங்க, அப்படி எதைப் பத்தி சொல்லப் போறீங்க, அவர் அவரைப் பற்றி அப்படி என்ன இம்பார்டண்டான விஷயம்?” என்றாள் குழப்பமாக…

​”எனக்கு உன்னைப் பார்க்க என் தங்கச்சியாட்டம் தோணுது, சோ நான் உன்கிட்ட மறைக்க விரும்பல,” என்றவள், “ஃபர்ஸ்ட் நான் கேட்கிறதுக்கு ஆன்சர் பண்ணு. நீங்க இப்போ ஒரே கலர்ல ட்ரஸ் பண்ணிருக்கீங்க, பட் இது உன்னோட ஐடியா தானே, அஜய்க்கு இதை பத்தித் தெரியாதுல,” என்றாள் நிவி…

​சிறிது தடுமாறியவள், “ஆமா,” என்றுவிட்டு, “உங்களுக்கு எப்படி இதைப் பத்தித் தெரியும்?” என்றாள் குழப்பமாக…

​”எனக்குத் தெரியும். அஜய் உனக்கு ஹஸ்பண்டா இருக்கலாம், பட் அவன் உனக்கு எப்போதுமே கிடைக்க மாட்டான்,” என்றாள் சோகமான முகத்துடன்…

​இதில் சற்றுத் திகைத்தவள், “என்ன சொல்றீங்க?” என்றாள்…

​”ரெண்டு மாசம் அவன் கூட இருக்க? உனக்குக் கொஞ்சம் கூட அவனோட ஆட்டிட்யூட் புரியலையா?” என்றவள், “அஜய் வேறொரு பொண்ணை விரும்புறான்,” என்றதும் ஏனோ தானாக ஸ்மிருதியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்த வார்த்தையை அவள் நம்பாவிட்டாலும் கூட அவளின் கண்களில் கண்ணீர் சுரந்தது…

​வேகமாகக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டவள்.., “நீங்க அவரோட ஃபர்ஸ்ட் வொய்ஃப் பத்தி சொல்றீங்களா, பட் அவங்களுக்குத் தான் டிவோர்ஸ் ஆகிடுச்சில்ல,” என்றாள் ஸ்மிருதி…

​இப்போது ஏனோ நிவியின் முகத்தில் அதிர்ச்சி தெரிய, சில நொடிகளில் அதை மறைத்துக்கொண்டவள், “நான் அவனோட ஃபர்ஸ்ட் வொய்ஃப் பத்தி சொல்லல, அவனோட பி.ஏ. பிரீத்தியைப் பத்தி சொல்றேன்,” என்றாள்…

​இந்த முறை ஸ்மிருதிக்கு அதிர்ச்சி ஒருபக்கமும் சந்தேகம் ஒரு பக்கமும் ஏற்பட்டது. அஜய்யைப் பற்றி ஏனோ தவறாக நினைக்க முடியவில்லை அவளால்…

​”நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிகிட்டிருக்கீங்க, அவர் அந்த மாதிரி டைப் இல்ல,” என்றதும் நிவி கிண்டலாக சிரித்தாள்….

​”இந்தளவுக்கு அப்பாவியா இருக்கியே ஸ்மிருதி, உன்னைப் பார்க்க எனக்குப் பாவமா இருக்கு,” என்றவள், “நான் சொல்றத நீ நம்புனாலும் ஓகே, நம்பலைனாலும் ஓகே, உன்கிட்ட இதைப் பத்தி சொல்லணும்னு தோணுச்சு அதான் சொன்னேன்,” என்றவள் மேலும், “நான் உன்கிட்ட பொய் சொல்லணும்னு அவசியம் இல்லை. அஜய், பிரீத்தி ரெண்டு பேரும் லவ் பண்ணுறாங்க. சில டைம் நெருக்கமா சந்தோசமா இருந்த நாட்களும் உண்டு. மீட்டிங்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் ஊர் சுத்துறதை நானே என் கண்ணால பார்த்திருக்கேன். ஒரு தடவை லாட்ஜ்ல கூட ஒன்னா இருந்ததா கேள்விப்பட்டேன்,” என அவள் பேசிக் கொண்டே போக, “போதும் நிறுத்துங்க,” என்றாள் ஸ்மிருதி கோபமாக….

​”இன்னும் ஒரு வார்த்தை என் ஹஸ்பண்டை பத்தித் தப்பா பேசுனீங்க, நல்லா இருக்காது சொல்லிட்டேன்” என்றாள் கோபக் குரலில்..

​இதனைச் சற்றும் பொருட்படுத்திக் கொள்ளாதவள், “இப்போ கூட உன்னைப் பார்க்க எனக்குப் பரிதாபமாகத் தான் இருக்கு ஸ்மிருதி. பட் நீ நினைக்கிற மாதிரி அஜய் நல்லவன் இல்ல. அவனுக்கு டிவோர்ஸ் ஆச்சுன்னு சொன்னியே, அதற்கான காரணம் உனக்குத் தெரியுமா? அஜய்யோட பிஹேவியர் பிடிக்காம தான் அவனோட ஃபர்ஸ்ட் வொய்ப் அவனை வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிட்டா,” என்றதும் ஸ்மிருதிக்கு இப்போது அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் அப்போதும் அஜய்யின் மீது சந்தேகம் எழவில்லை…

நிவிதா விடவில்லை,.. ​”நீயே கொஞ்சம் யோசிச்சிப் பாரு, அவன் உன்கிட்ட நெருக்கமா பேசியிருக்கனா? நீ அவ்வளவு அழகா இருக்க, அப்படி இருக்க ஒரு நாளாவது உன்கிட்ட ஆசையா ரெண்டு வார்த்தை பேசி இருப்பானா? இருக்கவே இருக்காது. உன்கிட்ட பிரெண்ட்லியா பழகிருப்பான், பட் மனைவியா நெருங்கி வந்திருக்கவே மாட்டான். ஏன்னா அவன் விரும்புறது பிரீத்தியை,” என அழுத்தமான குரலில் கூறினாள். இந்த முறை ஏனோ அவளின் மனம் ஒரு நிலையில் இல்லாமல், ‘இவ சொல்றது உண்மையா இருக்குமா?’ என்ற எண்ணமும் எழுந்தது.

​”அஜய் என்னோட க்ளோஸ் ஃபிரெண்ட், அவனைப் பத்தி நான் தப்பா சொல்லணும்னு அவசியமே இல்லை. எனக்கும் மனசாட்சினு ஒன்னு இருக்கு. எனக்குத் தெரிந்த சில விஷயம் அவனோட மனைவிக்குத் தெரியணும்னு நினைச்சேன், அதான் உன்கிட்ட சொன்னேன். இதனால நீ என் மேல கோபப்பட்டாலும் பரவாயில்லை, அடுத்து என்ன பண்ணனும்னு நீயே முடிவெடு,” என அவளை நன்றாக குழப்பிவிட்டு சென்றாள் நிவிதா…

​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!