Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிவி அம்மு - மன்னவன் மஞ்சத்தில்

நிவி அம்மு – மன்னவன் மஞ்சத்தில் 17

17.

மஞ்சம் – 17

வைதேகி தன் அண்ணன் சட்டையை பிடித்தவர், “அண்ணா பாப்பாங்களை பார்த்துக்கோங்க. விட்டுடுடாதீங்க. அவங்களுக்கு உங்களை விட்டா யாரும் கிடையாது அண்ணா. பெரியவளை எப்படியாவது கண்டு பிடிச்சிடுங்க.” என தன் அண்ணனிடம் இறுதி வார்த்தைகளை பேசிக் கொண்டிருக்க,

“வைதேகி உனக்கு ஒன்னும் இல்லை. எதுக்கு கண்டதை உளறிட்டு இருக்க? அமைதியா இரு. ஹாஸ்பிடல் போயிடலாம்.” என தங்கையை அதட்டினார்.



Advertisement

அவரோ கண் சிமிட்டி தன் அண்ணன் முகத்தைப் பார்த்தவர், “அண்ணா என்னை மன்னிச்சுடு. என்னால உன் வாழ்க்கையே போராட்டம் தான். சத்தியமா நான் நினைச்சு பார்க்கவே இல்லை. என்னை மன்னிச்சிடு.” என அவர் கை பிடித்து கேட்டவர்,

“லூசு மாதிரி உலராத.” என தங்கை கையை தட்டி கொடுக்க பிடிக்க போக அதற்குள் அவர் கை அவர் கையை விட்டு கீழே விழுந்தது.

அண்ணனை பார்த்தபடி அவர் மடியில் அவள் உயிர் அந்த உடலை விட்டு பிரிந்து சென்று விட்டது.

Advertisement

தங்கையின் நிலை குத்திய கண்களை கண்டு துடித்து போனவர், “வைதேகி, வைதேகி.” என அவர் கன்னத்தை தட்டி அவளை உலுக்கி பார்க்க, தங்கை உடல் அப்படியே கீழே சரிய போக, அவர் புரிந்து கொண்டார் தங்கை தன்னை விட்டு பிரிந்து விட்டாள் என்று.

Advertisement

“வைதேகி.” என தங்கை கையை பிடித்துக் கொண்டு கதறி அழுதார்.

நண்பன் அழுகை சத்தம் கேட்டு, ஆட்டோவை நிறுத்தியவர், “தென்பாண்டி.” என இறங்கி ஓடி வர,

“வைதேகி என்னை விட்டு போய்ட்டாள் டா. இப்போ நான் என்ன பண்றது? ஏன் இந்த கடவுள் என்னை இப்படி எல்லாம் சோதிக்கிராரோ?” என நெஞ்சில் குத்தி கதறி அழுதார்.

Advertisement

நண்பனை தேற்ற முடியாமல் திணறி நின்றார் அவர். தென்பாண்டி க்கு எப்போதும் சூடாமணியுடன் திருமணம் என்ற ஒன்று ஆனதோ அன்றில் இருந்து வாழ்வில் நிம்மதி என்பதே இல்லாமல் இருந்தார். உண்மையில் அவளை பிறந்த பிறகு தான் தென்பாண்டி ஒரு வேளை நிம்மதியாக சாப்பிட்டார் என்பது அவருக்கு நெருக்கமானவர்கள் மட்டும் தான் தெரியும்.

அவருக்கு மூன்று வேளையும் அண்ணமிட்ட உயிர் இன்று அடங்கி போனது.

“இவளுக்கு வந்த சாவு எனக்கு வந்திருக்க கூடாதா?” என கத்தி அழுத அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் கண்களில் கண்ணீர் படற ஆட்டோவை திருப்பினார் வீட்டை நோக்கி.

ஆதி அழுது கொண்டிருக்க அவளை சுற்றி பெண்கள் அவளுக்கு ஆறுதல் சொல்லியபடி அமர்ந்து இருந்தனர். வீட்டில் நிறைய ஆட்கள் நின்றிருந்தனர்.

போன ஆட்டோ அதே வேகத்தில் திரும்பி வரவும் ஆதிக்கு மனம் சுருக்கென்று வலித்தது. மற்றவர்களும் கேள்வியாக பார்த்தனர்.

நெஞ்சம் பதபதைக்க ஆட்டோவையே பார்க்க, அவளின் தாயை பிணமாக தூக்கிக் கொண்டு தென்பாண்டி இறங்கவும் “அம்மா…!!” என கூக்குரலிட்டு அவள் கதறியது வானமும் நடுங்கி போனதோ.

ஊரே துயரத்தில் ஆழ்ந்து போக, தென்பாண்டி தங்கையை தூக்கி வந்து திண்ணையில் போட்டார். மனதில் பெரும் வலி. வலியை வெளிக்காட்ட கூட முடியாமல் மறுத்து போனார்.

நிவேதிதா திருமணத்தில் ஆரம்பித்த அழுகையும் கண்ணீரும் இன்று வரை நிற்கவில்லை. இதன் பிறகும் நின்று விடுமா?

ஒரு புறம் நிவேதிதா வை காணவில்லை. மற்றொரு புறம் வைதேகி இறந்து விட்டார். தனி ஆண் மகன் எதை செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்து போனார்.

காணாமல் போன பெண்ணை தேடுவதா? இறந்த தங்கையை அவள் மகள் இல்லாமல் அடக்கம் செய்வதா?

மூத்த மகள் இல்லாமல் எப்படி இறுதி காரியங்கள் செய்வது?

“தென்பாண்டி நடக்க வேண்டியதை பார்ப்போம்.” என அந்த ஆட்டோகார நண்பன் கூற,

“பார்க்கணும் தான். நிவேதா இல்லையே?” கை பிரித்து உடைந்து அழுதவர் உடல் மட்டும் குலுங்கியது.

ஆதி ஒருபுறம் தாயை கட்டிக் கொண்டு கதறிக் கொண்டிருந்தாள்.

“நம்ம போலீஸ் ல சொல்லி தேட சொல்லுவோம். ஆக வேண்டியதை பார்ப்போம்.” என பங்காளிகள் வீட்டில் உள்ள வேலைகளை பார்க்க, தென்பாண்டி யை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றனர்.

அங்கிருந்த எஸ் ஐ கு அவர்களை தெரியும் என்பதால் அவர்கள் சொன்னதை கேட்டு உடனே தேட தொடங்கினார்.

“நீங்க போய் ஆக வேண்டியதை பாருங்க. நாங்க தேடி பாக்குறோம்.” என்றதும் அவர்களின் வீட்டிற்கு வந்து ஐஸ் பெட்டி கொண்டு வந்து வைதேகி உடலை பெட்டிக்குள் வைத்தனர்.

அக்னி எங்கு செல்வது என்று தெரியாமல் அவன் வாங்கிய நிலத்துக்கு சென்றான்.

அந்த மூன்று ஏக்கர் அவன் சொந்தமாக உழைத்து வாங்கியது. நல்லதோ கெட்டதோ அங்கு தான் அமர்ந்து கொள்வான்.

அந்த மூன்று ஏக்காரில் ஒரு மூலையில் மட்டும் கொஞ்சம் இடம் மட்டமாக நிறவப்பட்டு காலியாக கிடக்கும். அதில் மடங்கி அமர்ந்தான் அப்படியே மல்லாக்க படுத்து கிடந்தான்.

அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. இயல்பாகவே அனைத்தையும் தன் மனதுக்குள் போட்டு அழுத்தி கொள்பவன், அதனால் அவன் எப்போதும் அழ மாட்டான். இப்போது மனதளவில் செத்து மடிந்தவன் கண்களில் வெறுமை குடி கொள்ள மெல்ல எழுந்து உயர்ந்து நிற்கும் சூரியனை பார்த்தபடி கிடந்தான்.

தன் காதலி திருமணம் ஆகி சென்ற போது கூட அவள் இருந்த முகவரி தெரிந்தது. அதனால் அவளை தேடி அங்கு சென்றவன் அனைத்தையும் சாதித்து கொண்டான்.

இப்போது எங்கு இருக்கிறாள் என்று அவனுக்கு தெரியவில்லை. எங்கு சென்றாள் என்றும் கணிக்க முடியவில்லை. இவன் ஒன்னும் சூப்பர் ஹீரோ இல்லையே அவளை கண்டுபிடிக்க.

நண்பணையும் இழந்து மனைவியையும் இழந்து திக்கு தெரியாத குருடனாக கண்ணிருந்தும் புழுங்கினான்

ஊர் முழுவதும் தேடி விட்டான். அவளுக்கு நண்பர்களும் கிடையாது. இங்கேயே தங்கி தான் படித்தாள். அம்மா மாமா வை தவிர வேறு உறவும் கிடையாது. முதல் கணவனை தேடி செல்ல வாய்ப்பில்லை. உயிர் போனாலும் அவனை தேடி செல்ல மாட்டாள்.
யோசிக்க கூட திறன் இல்லாமல் ஜடமாக கிடந்தான்.

அவன் வாழ்வின் அர்த்தம் அவள். இவன் உயிரின் வேர் அவள். அவள் இல்லாமல் இவனால் இருக்க முடியாதே.

இவனை தேடி பாட்டி, மாமா, தம்பி, அம்மா என ஆளுக்கொரு பக்கம் சுற்றிக் கொண்டிருந்தனர்.

பாட்டி மகளிடம் பேசவே இல்ல. பேரனை தேடி கொண்டிருந்தார்.

பேரனை தேடி வந்தபோது தான் தென்பாண்டி வீட்டின் முன்பு பந்தல் போட்டிருப்பதை கண்டார்.

‘இங்க எதுக்கு பந்தல் போட்டிருக்கு? ஒருவேளை நிவேதிதா எதாவது பண்ணிகிட்டாளா?’ என அதிர்ந்து விழித்தார்.

அந்த வீட்டுக்குள் செல்ல விரும்பாமல், கொஞ்சம் தள்ளி சென்றார்.

அந்த வீட்டை பெண்ணிடம் விசாரிக்க,

“வைதேகி இறந்து போயிட்டா. பெரிய பொண்ணையும் காணும். எங்க போனான்னு தெரியல. ஊர் முழுக்க தேடியாச்சு. போலீஸ்ல புகார் கொடுத்து இருக்காங்க. உன் பொண்ணு மாதிரி ஒரு மோசமான ஜென்மத்தை பாக்கவே முடியாது மா. என்ன ஜென்மமோ. கடவுள் அவளுக்கு ரெண்டையும் ஆண் பிள்ளையா கொடுத்துட்டான். அதான் இப்படி ஆடுறாள். ஒரு பெண்ணை பெத்திருந்தா தெரிஞ்சு இருக்கும். என்ன தான் நீ பிள்ளை பெத்து வளத்தியோ? வாழ வந்த இடத்தில் நல்லா வாழ்ந்து இருந்தா எதுக்கு வைதேகி அண்ணனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க போறா? உன் பொண்ணுக்கு எல்லாம் நல்ல சாவே வராது.

எல்லாம் இந்த வைதேகியை சொல்லணும். அறிவு கெட்டவள் ஊருக்குள் மாப்பிள்ளையே இல்லன்னு உன் பேரனுக்கு கொடுத்தாள். அக்னி ரொம்ப நல்லவன், நல்லா பார்த்துபான்னு நாங்களும் நம்பி தலை அசைத்தோம். கடைசியில் அவன் புத்தியம் மாறுமா? அப்படியே ஆத்தா புத்தி. அழுத்தக்காரன். தயவுசெய்து இங்கிருந்து போ. உங்களை எல்லாம் இந்த வீட்டு வாசலில் சேர்ப்பதே பாவம்.” என வைதேகி இறந்த கோபம், நிவேதிதா காணாமல் போன வேதனை அனைத்தையும் அந்த பாட்டி மீது தீர்த்துக் கொண்டார்.

என்னதான் வாய் வலிக்க திட்டினாலும் அழியாத வலி அல்லவா இது.

பாட்டி சுக்கு நூறாக உடைந்து போனார். அங்கு நிற்கவே முடியாமல் சரசரவென ஓடினார்.

‘வைதேகி இறந்து விட்டாளா? நிவேதிதா காணுமா?’ நினைக்க நினைக்க நெஞ்சமே வெடித்து போனது.

‘பிள்ளை தாச்சி பொண்ணு எங்க போனாள்? அவள் அம்மா இறந்தது கூட தெரியாமல் இருக்காளே! ஐயோ ஆண்டவா! என் பேரன் நிலமை?’ என நினைக்க நினைக்க நெஞ்சம் அழுத்தியது.

அவள் உடலே அவருக்கு பாரமாக சாலையின் ஓரத்தில் அமர்ந்து விட்டார்.

சாவு வீட்டின் வைதேகி உடல் ஐஸ் பெட்டிக்குள் வைக்கப்பட்டு வாசலில் வைக்கப்பட்டது. ஆதி தாயின் தலை மாட்டில் அமர்ந்து பெட்டி மீது சாய்த்து அவர் முகத்தையே பார்த்து அழுது கொண்டிருந்தாள்.

“அம்மா பிளீஸ் மா கண்ணை திற. எங்களுக்கு உன்னை விட்டா யாரு இருக்கா? நான் பேசுனது தப்பு தான் மா. இனி வாயை கூட திறக்க மாட்டேன். எழுந்திடு மா. அக்காவை வேற தேடனும்.” திரும்ப திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

அருகில் இருந்து கேட்பவர்கள் மனம் தாளாமல் அழுது கொண்டிருந்தனர்.

“வயசு பொண்ணை இப்படி விட்டுட்டு போட்டியே வைதேகி. இதெல்லாம் நியாயமா?”
அவருடைய தோழிகள் சொல்லி சொல்லி அழுதனர்.

பாட்டி பொறுமையாக நடந்து வீடு சென்றார்.

சூடாமணி மகனை தேடி எங்கேயும் கிடைக்காமல் படிகட்டில் மூச்சு வாங்க அமர்ந்து இருக்க, தன் தாய் வருவது கண்டு “அம்மா அக்னி எங்க?” என உலுக்க,

“தெரியாது.” என பொறுமையாக கூறியவர் மகள் கையை தட்டி விட்டார்.

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!