Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 9 2

அத்தியாயம்….9(2)

“அது அவ்வளவு ஈசியா…?” 

மணிமேகலை  மலர் விழியுடன் பேசிக் கொண்டு இருக்க…இடையில்   ஜான் விக்டர் கேட்ட… “அது அவ்வளவு ஈசியா…?”

‘எது ஈசியில்லேன்னு சொல்றாங்க…?’ என்று  மணிமேகலை  குழம்பி போய்  ஜான் விக்டரை பார்த்தாள்.



Advertisement

அவளின்  குழம்பிய முகத்தை மேலும் குழப்பும் வகையாக ஜான் விக்டர்… “என்ன புரியலையா மேகலை.” என்று அவள் பெயரை பின் பாதியை மட்டும் சுருக்கி அழைத்தவன்.

 தொடர்து… “அது தான் நீ அம்மா கிட்ட சொல்லிட்டு இருந்தியே….க்ரீன் கார்ட் அதை தான் சொல்றேன்.” என்று ஜான் விக்டர் சொன்னதும்…

அவன் தன்னை அழைத்த அந்த  பெயரின் சுருக்கம் கூட கருத்தில் கொள்ளாது… “ஏ…ன் சார்  எனக்கு வேலை. க்ரீன் கார்ட் எல்லாம்  கிடைக்காத…?” என்று அதிர்ச்சி பாதியும், ஆதாங்கம் மீதியுமான கலந்த குரலில் மணிமேகலை கேட்டாள்.

Advertisement

அதற்க்கு வில்சன் விக்டர் ஏதோ சொல்ல வர்ற… அவரை பார்த்து ஜான் விக்டர்… “டாட்  என் ஸ்டூடண் கிட்ட நான் தெளிவா பேசுறேன்.” என்று  அவரை பேச விடாது தடுத்த ஜான் விக்டர்…

Advertisement

மீண்டும் தன்  பார்வையை மணிமேகலையின் பக்கம் திருப்பிய ஜான் விக்டர்… “வேலை ஈசி…அதுக்கு நான் கூட ஏற்பாடு செய்துடுவேன்.” என்ற அவன் பேச்சில், மகிழ்ந்து போய் மணிமேகலையின் முகம் பிரகாசமாய் மின்ன, ஜான் விக்டர் முகத்தை பார்த்தாள்.

“ஆனா க்ரீன் கார்ட் கிடைப்பது என்பது நீ நினைப்பது போல் அவ்வளவு  ஈசி எல்லாம் கிடையாது. எனக்கு தெரிந்த தமிழர் ஒருத்தர் இங்கு வந்து படிச்சார்.

வேலை அவருக்கு உடனே கிடச்சது. ஆனா   பத்து வருஷத்துக்கு மேல ஆனா பின் கூட க்ரீன் கார்ட் கிடைக்கல.

Advertisement

அவரும் உன்ன போல தான். அவங்க பெற்றோருக்கு ஒரே பையன். அவரும் தன் அப்பா, அம்மாவை, இங்கே அழச்சிக்கனும் என்று ஆசை தான்.

ஆனால் க்ரீன் கார்ட் கிடைக்காது. ஆறு மாசம் இந்தியா …ஆறு மாசம் இங்கேன்னு, பாவம் அவர் பெற்றோர் இங்கேயும், அங்கேயும் அலஞ்சிட்டு இருந்தாங்க.” என்று  ஜான் விக்டர் சொல்ல சொல்ல…

மணிமேகலைக்கு… ‘அய்யோ…’ என்றானது.

அவளுக்கு தனிப்பட்டு இங்கு தங்க ஆசை எல்லாம் இல்லை. இன்னும் சொல்ல போனால் இந்த நாடு என்று கூட அவள் ஆசை படவில்லை.

அவள் ஆசைப்பட்டது…தன் தந்தையை அவர் குறை தெரியாது பார்க்க… பேச… நினைக்க…இது போல் ஒரு இடத்திற்க்கு செல்ல வேண்டும்.அது இந்தியாவில் இருந்தால் சரி வராது.

உறவு என்று அவர்கள் வருவார்கள். தாங்கள் செல்ல வேண்டும். அதே வெளிநாடு என்றால் வருவது செல்வது அவ்வளவு ஈசி கிடையாது.

அதை நினைத்து தான் சின்ன வயதில்  இருந்து…வெளிநாடு படிக்க வேண்டும். வேலை பார்க்க வேண்டும் என்ற, கனவை வளர்த்துக் கொண்டது. ‘இப்போ என்ன சார் இப்படி சொல்றார்…?’ என்று யோசனையுடன் ஜான் விக்டரை பார்த்து…

“அப்புறம் அவங்க என்ன செஞ்சாங்க…?” என்று ஆர்வமுடன் கேட்டாள்.

 

[the_ad id=”6605″]

 

 

இதை  மணிமேகலை கேட்டது, அவன் சொல்லி முடித்து சிறிது நேரம் கழித்து தான்.  ஜான் விக்டரும் தன் பேச்சை பாதியில் நிறுத்து விட்டு…

தாங்கள்  விரும்பிய உணவு வந்ததும், ஜான் விக்டரே…மணிமேகலையின் தட்டில்…தன் அன்னை தந்தை தட்டில் பரிமாறியவன், மணிமேகலையின் யோசனை படிந்த முகத்தை பார்த்த வாறே நிதானமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

 இதை பார்த்த மலர் விழி  குழம்பி போய் …’இவன் ஏன் இந்த பெண்ணை இப்படி பயப்பட வைக்கிறான் என்று நினைத்தாள் என்றால், வில்சன் விக்டருக்கு தன் மகன் செல்லும் பாதை தெரிந்தும், அதை தடுக்க முடியாது  ஆச்சரியத்துடன்  தன் தட்டில் உள்ளதை கூட சாப்பிடாது தன் மகனை பார்த்திருந்தார்.

இப்படி பேசி தன் வழிக்கு கொண்டு   வந்தாவது, அவளை திருமணம் செய்யும் அளவுக்கா… இப்பெண்ணை தன் மகனுக்கு பிடித்து இருக்கு… என்று நினைத்தவர் மனதில் எப்படியாவது இப்பெண் தன் மகனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

ஆனால்  அதே  சமயம்… ‘தன் மகனுக்கு பிடித்த அளவுக்கு  இப்பெண்ணுக்கும் தன் மகனை பிடித்தால் தானே  வாழும் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.’  என்று  யோசனையுடன் மணிமேகலையை பார்த்த வாறு அனுபவப்பட்ட வில்சன் விக்டரின்  மனம் நினைக்கவும் தவறவில்லை.

தன் தந்தை மணிமேகலயையே  பார்ப்பதை பார்த்த ஜான் விக்டர்… “டாட் சாப்பிடுங்க.” என்பது போல் சிரித்துக் கொண்டே தன் தந்தையையும் அவன் முன் இருக்கும் தட்டையையும் பார்த்து சொன்ன போது தான்…

முதலில் ஜான் விக்டர்  பேசிய பேச்சான க்ரீன் கார்ட்டை  பற்றி… “அப்புறம் அவங்க என்ன செஞ்சாங்க…” என்பதை பற்றி  பேசினாள்.

 “யாரு..?என்ன செஞ்சாங்க…?ஜான் விக்டருக்கு அவள் எதை கேட்கிறாள் என்று தெரிந்தே…அறியாது போல் கேட்டான்.

“அது தான் சார் உங்களுக்கு தெரிஞ்ச தமிழர் வேல கிடச்சது. ஆனால் க்ரீன் கார்ட் கிடைக்கலேன்னு சொன்னிங்களே…அப்புறம் அவருக்கு எப்போ கிடச்சது…?” என்று மணிமேகலை  ஆர்வமுடன் கேட்டாள்.

அதற்க்கு ஜான் விக்டர்… “ஓ…அதை கேட்குறியா…?” என்று கேட்டவன். அவள் கேட்டதற்க்கு உடனே பதில் சொல்லாது…தன் உதட்டில் படிந்து இருக்கும் உணவை, அங்கு இருக்கும் டிஷ்யூ பேப்பரை கொண்டு துடைத்து விட்டு, பின் தண்ணீரை தன் தாகம் தணியும் வரை குடித்து விட்டே…

“இங்கு இருக்கும் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். தட்ஸ் ஹால்…” என்று பிரச்சனை தீர்ந்தது  என்பது போல் சொன்னவனின் பேச்சில், மலைத்து  போய் நின்றாள்.

ஜான் விக்டர் சொன்னதில் மணிமேகலைக்கு பாதி புரிந்தும் மீது புரியாமலும் குழம்பி போய்….

“சார் நீங்க சொன்னது எனக்கு புரியல…” என்று ஜான் விக்டரின் முகத்தை குழப்பத்துடன் பார்த்து கேட்டாள்.

“மேகலை இதுல புரியாம போறதுக்கு என்ன இருக்கு…? அதுவும் படிப்புல டாப் ஸ்டூடண்ட் நீ…இந்த சின்ன விசயம் உனக்கு புரியலேன்னு சொல்றது. எனக்கு ஆச்சரியமா இருக்கு.

இங்கு இருக்கும் பெண்ணை. அதாவது அமெரிக்க குடியுரிமை பெற்ற பெண்ணை திருமணம் செய்தா…அவனுக்கும்,  அமெரிக்கன் குடியுரிமை கிடச்சிடும். இது உனக்கு தெரியாதா…?” என்று  ஜான் விக்டர்  கொடுத்த விளக்கத்தில்…

“புரியும்…” என்பது போல் மணிமேகலை எல்லா பக்கமும் தலையாட்டினாலும், அவள் முகம் இன்னும் தெளிவு பெறாது தான் இருந்தது.

அதை பார்த்த ஜான் விக்டர்…“இன்னும் உனக்கு என்ன சந்தேகம்…” என்று கேட்டதற்க்கு…

“சார் இதுக்கெல்லாமா கல்யாண செய்துப்பாங்க…”

 

[the_ad id=”6605″]

 

 

மணிமேகலையை பொறுத்தவரை   இரண்டு வகையான திருமணம். ஒன்று வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம். இன்னொன்று…காதல் திருமணம். அக்காதல் திருமணம் வீட்டில் மறுத்தும் ஓடிப் போய் திருமணம் செய்தவர்களை எத்தனையோ  பேரை அவள் ஊரில் பார்த்து இருக்கிறாள்.

இவள் விருப்பம் காதல் திருமணம் தான். அவள் வெளிநாட்டில் தான் தன் வாழ்க்கை என்று அவள் முடிவு செய்த பின்…

வெறும் பார்ப்பது மட்டும் உள்நாட்டில் வைத்துக் கொண்டவள்…இந்த காதலை படித்து முடித்து ஒரு வேலை கிடைத்த பின்…அங்கு க்ரீன் கார்ட் கிடைத்த்தும்…தன் பெற்றோரை தான் இருக்கும் இடத்திற்க்கு, அழைத்து வந்த பின்…

தனக்கு பிடித்த ஒருவனை திகட்ட திகட்ட காதலித்து, திருமணம் செய்த பின்…தன் பெற்றோர் வாழாத காதல் வாழ்க்கையை தான் வாழ வேண்டும் என்பதே….அவள் ஆசை.

ஒரு வயதுக்கு பின்…தன் பெற்றோரின் வாழ்க்கையை பார்த்து…இருவரும் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தில் தான் சேர்ந்து இருக்கிறார்களோ…என்ற சந்தேகம் அவளுக்குள் இருக்கிறது.

பெற்றோர்களை பற்றி அதற்க்கும் மேல், ஆராயவும் முடியவில்லை. அதை பற்றி கேட்கவும் முடியாது…ஏதோ ஒன்று என்ற வரையில் அவள் மனதில் பதிந்து போனது.

ஆனால் தன் வாழ்க்கை அப்படி இருக்க கூடாது.  எனக்காக அவன் என்ன வேண்டுமானலும் செய்ய தயாராய் இருக்க வேண்டும். செய்யவும் வேண்டும். அதே போல் தான் தனக்கும், அவனுக்காக என்ன வேண்டுமானலும் இழக்க தயாராய் இருக்க வேண்டும். அப்படி பட்ட ஒரு காதல் வாழ்க்கை வாழ அவள் கனவு கண்டுக் கொண்டு இருக்க…

ஜான் விக்டர் சொன்ன…அமெரிக்க குடியுரிமைக்காக திருமணமா…? அது அவளுக்கு ஆச்சரியத்தோடு…அதிர்ச்சியாகவும் தான் இருந்தது.

ஆனால் நம் ஜான் விக்டரோ… “இதில் என்ன இருக்கு…?” என்று சாதரணமாக கேட்க..

அவ்வளவு பேசி பழகி இராத ஜான் விக்டரிடம் மணிமேகலை என்ன சொல்வாள். அதுவும் அவள் கனவு கொண்டு இருக்கும் காதல் வாழ்க்கை பற்றி  நெருங்கியவர்களிடமே அவள் சொன்னது கிடையாது.

அப்படி இருக்கும் போது… அவ்வளவாக தெரியாதவனிடம் இது பற்றி பேச முடியாது அமைதியாக இருந்தாள்.

ஆனால்  இன்று வரை தன் மனைவியை காதலித்துக் கொண்டு இருக்கும் வில்சன் விக்டரால் அமைதி காக்க முடியாது…

“என்ன பேச்சு ஜான் இது…? “ என்று கேட்டவர்..

நீ சொன்ன பையன்  இப்போவும் அந்த பெண் கூட தான் இருக்காரா…?” என்று கேட்டதற்க்கு…

“இதில் என்ன சந்தேகம் டாட்…இப்போ அவங்களுக்கு  ஒரு அழகான பெண் குழந்தையும் இருக்கு.” என்று ஜான் விக்டர் சொல்ல…

அதற்க்கு வில்சன் விக்டர்…“அந்த பெண்ணை நீ சொன்னது போல் அந்த பையன் திருமணம் செய்திருந்தாலும்…பின் காதல் வந்து இருக்கலாம்.  அதனால் அந்த உறவு அவங்க  தொடர்ந்து இருக்கலாம்.” என்று அனுபவ பட்டவராய் தன் கருத்து சொன்னார்.

“நீங்க சரியா தான் சொல்றிங்க டாட். நான் அதை இல்லேன்னு சொல்லலையே. அந்த பெண்ணுக்கு அந்த பையன் மீது காதல். அவன் நிலமை தெரிஞ்சி அவனிடம் ப்ரபோஸ் பண்ணி இருக்கா …

இவனுக்கு வயதான தன் அம்மா…அப்பாவை அங்கும் இங்கும் அலைக்கழைக்கிறோமே என்று இருந்தது.

அந்த பெண் பாக்க நல்லா இருந்தா….அவள ரிஜக்ட் செய்யும் அளவுக்கு அந்த பெண்ணிடம் எந்த குறையும் இல்லை. பையன் யோசிச்சான்…ஒகே சொன்னான். கல்யாணமும் செய்துக்கிட்டான்..

இதோ இன்னை வரை  அவனுடைய லைப் ஸ்மூத்தா  தான் போயிட்டு இருக்கு…” என்று  ஜான் விக்டர் சொல்ல சொல்ல…வில்சன் விக்டர் அவனை ஆழந்து ஒரு பார்வை பார்த்தார்.

தந்தையின் பார்வையில் கண் சிமிட்டிய மகன் அழகாக புன்னகை செய்ய… ‘இவனை என்ன செய்யலாம்’ என்பது போல் தான்  வில்சன் விக்டர் பார்த்திருந்தார்.

இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த மணிமேகலை… தயக்கமாய் இருந்தாலும்… “சார் அவருக்கு அவங்க மேல  லவ் இல்லேன்னாலும், அந்த பெண்ணுக்கு அவர் மேல லவ் இருந்ததுலே சார். அதான் அவங்க சந்தோஷமா இருக்காங்க.” என்று சொன்னாள்.

அவள் பேச்சில் ஜான் விக்டர் கண்டு கொண்டது இது தான்…மனம் விரும்பாது அவர்களின் வாழ்க்கை  நிறையாது என்பதே…

மணிமேகலை சொன்னதை வைத்தே… “அது தான் மேகல சொல்றேன். ஒருத்தர் லவ் இருந்தா போதும். திருமணம் வாழ்க்கை நல்ல படியாக கொண்டு செல்லவும் முடியும். அந்த மற்றும் ஒருவரை காதலில் விழ வைக்கவும் முடியும்.” என்று சொன்ன ஜான் விக்டர்…

“என்ன மேகல முடியும் தானே…?” என்று  மணிமேகலையையே திருப்பி கேட்க…

அவள் என்ன சொல்வாள். அவள் சொன்ன கருத்தை தானே அவன் சொன்னான்.

அதனால்… “முடியும்… முடியும்..” என்பது போல் மணிமேகலை தலையாட்டி வைத்தாள்.

ஜான் விக்டருக்கே இன்று இது போதும் என்பது போல் நேரத்தை பார்த்தவன்… மணிமேகலையிடம்.. “உனக்கு டைம் ஆயிடுசி பார். வா நான் உன்னை ட்ராப் செய்யறேன்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…

மலர் விழி… “நான் உன் கூட வர்றேன் ஜான். நான் மணி கிட்ட  சரியா பேசவே இல்ல. நீயும் உன் டாடியும் தான் பேசிட்டே இருந்திங்க…கார்ல போகும் போது மணி கிட்ட பேசனும். அதனால் நான் உன் கூட வர்றேன்.” என்று சொன்னவர் மகனின் முகத்தை பாராது….

கார் ட்ரைவருக்கு போனின்  மூலம்… “நீ காரை எடுத்துட்டு போ…” என்று சொல்லி விட்டு மகனிடம்..

“போகலாமா…?” என்று சொல்ல.. அந்த மகனோ பாவமாய் தன் தந்தையை பார்த்தான்.  

நான் இதுல உனக்கு எதுவும் செய்ய முடியாது மகனே என்பது போல் அவனை பார்த்து விட்டு தன் மனைவியிடம்… “ வீட்டுக்கு போன உடன் கால்  பண்ணு மலர்.” என்று ஒரு காதல் கணவனாய் தன் மனைவியின்  பாதுகாப்புக்காக சொன்னார்.

மணிமேகலை வில்சன் விக்டரிடம்… “நீங்க  ஆன்டிய ரொம்ப லவ் பண்றிங்க…அது உங்க ஒவ்வொரு பார்வையிலும், ஒவ்வொரு செயலிலுமே தெரியுது அங்கிள்.” என்று சொன்னவளுக்கு… ஒரு சிரிப்பே பதிலாய்  தந்தவர்…

பின்… “எங்கல பார்த்து வளர்ந்த என் மகனும், அவன் மனைவியை  அவ்வளவு நேசிப்பான்மா…”

மகனின் பேச்சில் இருந்தே… தன் மகன் இப்பெண்ணை எந்த அளவுக்கு விரும்புக்கிறான் என்று தெரிந்து கொண்டவராய்… ஏதோ நம்மால் முடிந்தது என்பது போல் மணிமேகலையிடம் இவ்வாறு கூறினார். 

 

[the_ad id=”6605″]

 

 

தன் மகனுக்காக தான் இந்த பேச்சு என்றாலும், நான் சொல்வது பொய் இல்லையே..தன் மகன் இப்பெண்ணை திருமணம் முடித்தால் காதலாய் தானே பார்த்துக் கொள்வான். அதையும் நினைத்து தான் சொன்னார்.

ஆனால் அதற்க்கு பதிலாய் மணிமேகலை… “பெற்றோர் காதல் வாழ்க்கை பார்த்து மட்டும் இல்ல அங்கிள்…அது போல் காதல் வாழ்க்கை வாழாத பெற்றோரின் பிள்ளைகள் கூட…தங்கள் துணைவரிடம் காதலை கொடுப்பர். காதலை பெற நினைப்பர்.” என்று மணிமேகலை சொன்னதும்..

அந்த இடமே சிறிது நேரம் அமைதியாகி விட..அப்போது தான் மணிமேகலைக்கு உரைத்தது.நாம் என்ன பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று நினைத்து, அவள் முகத்தில்  தெரிந்த அசுகரியத்தில்…

மலர் விழி… தன் கணவனிடம்… “சரிங்க நாங்க கிளம்புறோம்.” என்று சொல்லி மேலும் அவளை அதை பற்றி யோசிக்க விடாது அழைத்து சென்றார்.

மணிமேகலை எதற்க்காக இங்கு வந்தாளோ..அதை பற்றி பேச என்ன நினைக்க கூட செய்யாத அளவுக்கு அங்கு பேச்சு மட்டும் இல்லை…அவளின் ஏதோ ஒரு உணர்வு…தடுக்க…

அதுவும் மட்டும் இல்லாது ஜான் விக்டர் தன்னிடம் ஏதும் சொல்லாத போது…தான் என்ன மறுப்பு சொல்ல முடியும்…அதுவும் அவன் பெற்றோர்கள் முன்நிலையில்… அதனால் அன்று மணிமேகலை ஜான் விக்டருடன்  சென்றது…பயன் இல்லாது போனது.

ஆனால் நம் ஜான் விக்டருக்கு, இந்த சந்திப்பு மிக பயனுடையதாய் தான் அமைந்து விட்டது. அதுவும் அவன் திட்டமிட்ட படிக்கு மேலேயே…

ஆம்  மணிமேகலை தான் அழைத்ததும் சட்டென்று… “சரி.” என்றதிலேயே…

அவள் தன்னிடம் தனக்கு சாதகமான பதிலை சொல்லாது மட்டும் அல்லாது இதற்க்கு ஏதோ முடிவு கட்டவும் பார்க்கிறாள் என்று நினைத்து தான் தன் பெற்றோரை அழைத்து…

ஏதோ ஒரு குடும்பமாய் சந்திப்பது போல் அமைத்தான். ஆனால் அவன் எதிர் பாராதது.தன் பெற்றோர்களிடம் மணிமேகலை பேசிய இணக்கமான  பேச்சு…

இனி வீரா என்ன செய்வான்…?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!