Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – Epilogue : 2

மகனும், மருமகளும் வாடிய முகத்துடன் செல்வதை பார்த்த சிவகாமிக்கு மனசு தாளவில்லை, “கோவிலுக்கு போலாம்னு தான் சொன்னேன்டா… வேறு எதுவும் தப்பா நான் சொல்லலையே.” என்று இளையவனிடம் முறையிட,

 

“நீ விடுமா. இன்னைக்கு வந்த அந்த கடைசி வீட்டு ஆன்ட்டி செய்த கூத்து அவனை இப்படியெல்லாம் பேச வச்சிடுச்சு.”

 



Advertisement

“இல்லைடா… அவன் தப்பா நினைச்சிட்டான். இனியா இல்லைனா இன்னைக்கு இதயன் நம்ம முன்னாடி பேசி, சிரிச்சி, நடமாடிட்டு இருக்க மாட்டான். அதனால் இனியா தப்பே செய்தாலும் அவளை என்னால தப்பா நினைக்க முடியாதுடா… ஆனா நீயும் பார்க்குற தானே. இனியா வீட்டில் கூட ரெண்டு பேரையும் அனுப்பி வையுங்க, நாங்க வைத்தியம் பார்த்துக்குறோம்னு நேரடியாக சொல்லாம சொல்லிட்டாங்க. குறை நம்ம பையன்கிட்ட இருக்கு அதான் நானும் கோவில் கோவிலா போய்ட்டு இருக்கேன்.”

 

“நீ போறது இப்போ பிரச்சனை இல்லை. இனியாவை மட்டும் கூப்பிட்டது தான் தப்பாகிடுச்சு… சரி விடு, அவங்க சரியாகிடுவாங்க…” இன்பன் சமாதானம் செய்ய, சிவகாமி அதை ஏற்பதாய் இல்லை.

Advertisement

 

Advertisement

“எனக்கு மனசே கேக்கல…” என்றவர் நிகிலை காண, அவனோ அனைவரும் மும்மரமாய் பேச்சில் இருக்க, அமைதியாய் யுக்தாவின் அலைபேசியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனை அழைத்தவர் அவனின் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை திணித்து, “இதை பெரியப்பாகிட்ட குடுத்துட்டு வா நிகில்.” என்க, அவனோ முடியாது என்று தலையசைத்து அலைபேசியில் மூழ்கிவிட, அதை வேகமாக பிடுங்கியவர், “நிகில் குட்டி பாட்டி செல்லம் தானே… இதை போய் கொடுத்துட்டு வந்து விளையாடுவீங்களாம்.”

 

“அத்தை என்ன செய்யறீங்க?” என்று யுக்தா பதற அதற்குள் அவள் மகன் அங்கிருந்து இதயன் அறை நோக்கி ஓடிவிட்டான். ஓடியவன் உள்ளே நுழையும் முன்னரே பாதி கதவு திறந்திருந்த இடைவெளியில் அவர்கள் இருக்கும் நிலையை கண்டுவிட்டு திரும்ப தன் அம்மாவிடம் ஓடி வந்து, “பெரிய பசங்க தானாவே சாப்பிட்டுப்பாங்கனு சொன்ன. ஆனா பெரியப்பா பெரிம்மாவை மடியில உட்கார வச்சி ஊட்டிவிடுறாங்க… நீ பொய் சொல்லி இருக்க… அதுக்கு பனிஷ்மெண்ட்டா எனக்கு ஊட்டிவிடு.” என்று அவள் மடியில் ஏறினானே பார்க்கலாம் அங்கிருந்தவர்களுக்கு முகத்தில் ஈ ஆடவில்லை. யுக்தா திருட்டு முழியுடன் இன்பனை காண, இன்பன் ஓரக்கண்ணால் தன் அன்னையை காண,

Advertisement

 

[the_ad id=”6605″]

 

 

“சாப்பாடு எடுத்துட்டு போனவன் தண்ணி எடுத்துட்டு போலையேன்னு…” என்று இழுத்தவர் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.

 

யுக்தாவின் முழி இன்னுமே அதிர்வில் விளிக்க, இன்பன் தொண்டையை செருமி, “அவன் தோசை கேக்குறான்ல இன்னைக்கு ஒருநாள் ஊட்டிவிடு.” என்று யுக்தாவிடம் உரைக்க, தன்னிலை உணர்ந்தவள், “நாளைக்கும் இதை நியாபகம் வச்சி ஊட்டிவிட சொல்லுவான். எல்லோர் முன்னாடியும் சொன்னா தர்மசங்கடமா ஆகிடும்.” என்றவளுக்கு கூட வேறு என்ன சொல்லி இவ்விஷயத்தை நிகில் மனதில் இருந்து அழிப்பது என்று தெரியவில்லை.

 

நெற்றியை சுருகியவன் பின் ஏதோ யோசித்து, “நிகில் அம்மா என்ன சொன்னாங்க? பெரிய பசங்க… மீன்ஸ் பாய்ஸ். பாய்ஸ் தனியாவே எல்லாம் செய்துப்பாங்கனு சொன்னாங்க… நீ தான் இந்த வீட்டிலேயே பாய் (boy) நாங்க எல்லாரும் மேன் அன்ட் வுமன்.” என்க, யுக்தா கழுத்தை நொடித்துக் கொண்டு எதுவோ முணுமுணுத்தாள். தன்னைத் தான் ஏதோ சாடுகிறாள் என்று அவனுக்கு தெரிந்தாலும், நிகிலை சமாளிக்க வேறெதுவும் தெரியவில்லை அவனுக்கு. 

 

“அப்போ நானும் மேன் ஆனவுடன் அம்மா மடியில் உட்கார்ந்து ஊட்டிக்கலாமா?” என்று மேலும் அவன் தொடர ‘ஐயோ’ என்று ஆனது அவ்வீட்டின் இளைய தம்பதியருக்கு.

 

இது எதுவும் தெரியாத மூத்த தம்பதியரோ உணவுப் பரிமாற்றம் முடித்து காதல் பார்வை பரிமாறிக் கொண்டிருந்தனர்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“என்ன அப்படி பார்க்கறீங்க?” இனியா தான் மெளன மொழியை உடைத்து வார்த்தைகளை உதிர்க்க, சற்றும் குறையாத மையல்  அவனிடத்தில்… 

 

“உனக்கு நான் என்ன செஞ்சேன்னு நீ என் மேல இப்படி பைத்தியமா இருக்க?”

 

“அதெல்லாம் அப்படித்தான்.”

 

“இல்லை… எனக்குக்கூட நீ என் மேல காட்டிய அக்கறையும், பாசமும், என்னை சரி செய்யணும்னு நீ துடிச்ச துடிப்பும் தான் உன்மேல ஒரு பிடிப்பை ஏற்படுத்துச்சு. ஆனால் நீ? நான் உனக்கு அப்படி எதுவுமே செய்யலையே. சொல்லப்போனால் உன்னை ஈர்க்குற மாதிரி, உன் மனதில் இடம் பிடிக்குற மாதிரி எதுவுமே என் வாழ்க்கையில் இல்லை நீ வந்தபோது.” என்று ஆழ்ந்து பேசியவனை குறுக்கிடும் விதமாய் இனியா வாய் திறக்க, தன் உள்ளங்கை கொண்டு அவள் இதழை மூடி, மேலும் தொடர்ந்தான், “எப்படி உன்னால முடிஞ்சிது? உன்னோட அன்புக்கு முன்னாடி என்னோடது ஒன்னுமே இல்லை இனியா. எந்த விதத்திலும் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு உன்னோடது. மாசற்றது.”

 

அவனின் கையை உதறியவள், “நீங்க என்னோட அன்பை திருப்பி என் மேல நூறு மடங்கா செலுத்தணும்னு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பு தான் உங்களை குணப்படுத்தணும் என்கிற என் எண்ணத்தின் உந்து சக்தி. அதனால் இனி என் அன்பு உசந்தது, உங்களோடது தாழ்ந்ததுனு பேசாதீங்க. அப்படி பேச ஆரம்பித்தால் நீயா  நானா போட்டிதான் வரும், அது எந்த உறவுக்கும் நல்லதில்லை . அதேமாதிரி என்னைக்குமே அன்புல உயர்ந்தது, தாழ்ந்தது அப்படினு எதுவும் இல்லை. ஒருத்தர் மீது நம் நம்பிக்கை முழுதும் கொட்டி நம் அன்பை வாரி இறைக்கும் போதே அதற்கான அளவீடு தோற்றுவிடுகிறது.”

 

“நீ பேசுவதை கேட்க நன்றாகத் தான் இருக்கு. ஆனால் நம் வாழ்க்கை நிறைவடையாததற்கு காரணம் நான் எனும் போது உள்ள குத்துது இனியா. குறை என்கிட்ட இருந்தாலும் ஊர் உன்னைத்தான் தூற்றுது.” என்க, இருவருக்குமே குழந்தையின்மை பற்றிய ஏக்கம் நிரம்பியே இருந்தது. 

 

நாம் இருவர், நமக்கு இருவர் என்பதை தாண்டி நாம் இருவர் நமக்கு ஒருவர் என்பதையும் தாண்டி நாம் இருவரே ஒருவருக்கு ஒருவர் குழந்தை என்ற நிலையும் கடந்து, குழந்தை இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்ற நிலைமை இன்றைய காலகட்டத்தில் இல்லை தான். ஆனால் இன்றளவும் குழந்தை இன்றி வாழ்க்கை நிறைவடைவது இல்லை. அது இருவருக்கும் தெரிந்தே இருந்தது.

 

“இப்போது சொல்றது தான் நல்லா கேட்டுக்கோங்க… மற்றவர்கள் ஏதோ ஒருவகையில் நமக்கு குழந்தை இல்லாததை பற்றி மறைமுகமாய் சொல்லும்போது அந்த நேரம் வலிக்கத்தான் செய்யுது. ஆனால் அது எல்லாமே இன்னுமே என்னை திடப்படுத்துது, உங்க மேல பித்து பிடிக்க வைக்குது, நம்முடைய உறவை பலப்படுத்துயிருக்கு. உங்ககிட்ட குறை இருக்குனு இவ்வளவு கவலை படுறீங்களே அதற்கு காரணம் யாரு? இதே மற்றவர்கள் தான். சிலபல அலட்சியங்களால் உங்கள் வாழ்க்கையே வீணாகி இருக்கும். ஆனால் நீங்க அதிலிருந்து முக்கால்வாசி மீண்டுடீங்க. அதோடு மிச்சம் தான் இப்போ நமக்குனு ஒரு பாப்பா வரமாட்டீங்குது. அஜய் செய்துவைத்த  கோளாறு உங்களோட உடலை ரொம்பவே பாதித்திருக்கு. அதற்கு நீங்க எப்படி பொறுப்பாக முடியும்? அதோட இப்போ ட்ரீட்மெண்டும் எடுத்துட்டு இருக்கோம். இன்னும் ஆறு மாதம் பொறுத்து பார்ப்போம் இல்லையா… அப்பா அம்மா இல்லாத குழந்தைகள் நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கு நாம அப்பா, அம்மா ஆகிடுவோம்.” என்று தெள்ளத்தெளிவாய் பேச, அவளை இறுக்கி தன்னோடு அணைத்துக் கொள்வதைத் தவிர வேறெதுவும் சொல்ல நா எழவில்லை இதயனுக்கு. உணர்ச்சிகளின் பிடியில் நெகிழ்ந்திருந்த மனது அந்த நெகிழ்ச்சியை அவளுக்கு காட்ட முற்பட, எல்லைமீறும் அதரங்களையும், கரங்களையும் தடுத்து நிறுத்தி அணைப் போட்டவள், “கதவை சாத்தாம விட்டுருக்கீங்க?” என்று கேள்வியாய் பார்க்க,

 

“நீ கோபமா வந்தியா… உன்னை எப்படி சமாதானம் செய்றதுனு யோசிச்சிட்டே வந்தேன். அதில் மறந்துட்டேன் போலிருக்கு.” 

 

“நல்லா மறந்தீங்க. இப்போ யாராவது வந்தா மானம் காத்தில் பறந்துடும்.”

 

“அதெல்லாம் யாரும் வரமாட்டாங்க. நீ வளவளக்காம போய் சாத்திட்டு வா.” என்றவன் கட்டிலில் வாகாய் சாய்ந்து கொண்டு அவளையே கண் எடுக்காமல் பார்க்க, அவனின் எதிர்பார்ப்புக்கு மாறாய் தாங்கள் உண்ட தட்டை எடுத்துக் கொண்டு வெளியேறினாள் இனியா. அவனுடன் பேசிய பின்னான தெளிவு அவள் வதனத்தில் தெளிவாய் பிரதிபலித்தது. 

 

“கல்யாணத்துக்கு முன்னாடி இருந்ததைவிட இப்போ கொஞ்சம் சதை போட்டிருக்க பேபி. நானும் இவள் எப்போதும் போலத் தானே சாப்பிடுறா, பின்னே எப்படினு யோசிச்சிட்டு இருந்தேன்…” என்று யுக்தா நமட்டு சிரிப்புடன் சிங்க்கில் இருந்த பாத்திரங்களை தேய்த்துக்கொண்டே அங்கு தட்டோடு வந்தவளை கேலி பேச, இவள் என்ன சம்மந்தம் இல்லாமல் பேசுகிறாள் என்பது போல அவளை பார்த்து நின்றாள் இனியா.

 

“ஆனால் அதற்கான காரணம் இப்போது தான் தெரிகிறது. அத்தான் உன்னை நல்லா ஊட்டி வளக்குறாங்க.” என்று வார்த்தைக்கு அழுத்தம் கூட்டி இழுக்க, இனியாவிற்கு விஷயம் புரிந்துவிட்டது. முகத்தில் சிறு நாணம் எழத் துடித்தாலும் அதை அடக்கிக்கொண்டு யுக்தா பேசியதை காதில் வாங்காதது போல் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள். 

 

அறை நோக்கி செல்லச் செல்ல நாணம் பின்சென்று கதவை சாற்றாதவன் மீது லேசாக கோபம் எட்டிப்பார்த்தது. அவனை ஒருபிடி பிடித்துவிட வேண்டும் என்று உள்ளே நுழைந்தவளுக்கு சற்றும் அவகாசம் தராது அவளது இடையிலும், தோளிலும் கை கொடுத்து அவன் தூக்கியிருக்க இவள் தான் பயத்தில் அவனின் கழுத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டியாதாகிவிட்டது.

 

“என்னங்க தூக்கிட்டீங்க?” அப்பட்டமான ஆச்சரியம் அவள் உடல் மொழியிலும், விழி மொழியிலும். இவளே தூக்கச் சொல்லி அடம் பிடித்தாலும் இன்றுவரை அதை ஒருபோதும் செய்தது இல்லை அவன்.

 

“என் பொண்டாட்டி பாப்பா இல்லைனு கவலைப்பட்டா அதான் எனக்கு இந்த பாப்பாவே போதும்னு தூக்கிகிட்டேன்.” என்றவனை விளங்கா பார்வை பார்க்க, அவன் அதெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

 

நேரே அவளை கட்டிலில் கிடத்தியவன், தண்ணீர் பாட்டிலை பிடுங்கி மேசையில் வைத்துவிட்டு தன் இணையை எதிர்பார்த்து ஆவலாய் துடித்துக் கொண்டிருந்த அவள் அதரங்களை விடுத்து அவள் நாசியில் நச்சென்று ஒரு முத்தம் வைக்க, கடுப்பானவள் அவன் கன்னத்தை கடித்து வைத்தாள். செல்லமாய் முறைத்துவிட்டு அவளது காது மடல்களை இவன் திரும்ப கடிக்க, இவர்கள் விளையாட்டு எல்லை மீறி காதல் யுத்தமாய் மாற, இவ்விருவரையுமே கடிக்கவென அவ்விரவில் உதயமானார்கள் அவர்களை காக்க வைத்த மழலைச் செல்வங்கள்… 

 

[the_ad id=”6605″]

 

 

 

அதுபற்றிய அறிதல் இன்றி, தன் மனதை களவாடியவளிடம் காதல் மீட்டிக் கொண்டிருந்தான் அவளை களவாடிய அவளின் கள்வன்… 

 

“எனக்கு அந்த பாட்டை கேக்கணும் போல இருக்கு.” காதல் போதை தலைக்கேறி அவள் காதுகளில் அவன் கிசுகிசுக்க, இமைகளை சிரமப்பட்டு பிரித்தவள் இடக்கரத்தை நீட்டி தன் அலைபேசியை எடுத்து தங்களுக்காகவே இயற்றப்பட்டது போல அவர்கள் உணர்ந்த அந்த ஒரே பாட்டை தட்டிவிட்டு அவனை தன்னோடு இறுக அணைத்துக் கொண்டாள் இனியா.

 

கள்வரே கள்வரே

கள்வரே கள்வரே கண்புகும்

கள்வரே கை கொண்டு

பாரீரோ கண் கொண்டு

சேரீரோ கலை சொல்லி

தாரீரோ

 

உம்மை எண்ணி

உம்மை எண்ணி ஊமைக்

கண்கள் தூங்காது தலைவா

என் தலைவா அகம் அறிவீரோ

அருள் புரிவீரோ வாரந்தோறும்

அழகின் பாரம் கூடும் கூடும்

குறையாது உறவே என் உறவே

உடை களைவீரோ உடல் அணிவீரோ

 

என் ஆசை

என் ஆசை நானா

சொல்வேன் என்

ஆசை நானா சொல்வேன்

என் ஆசை நீயே சொன்னால்

கண்ணாலே ஆமாம் என்பேனே

 

எங்கெங்கே

உதடு போகும் அங்கெங்கே

உயிரும் போகும் அன்பாலே

ஆளச் சொல்வேனே வலிமிகும்

இடங்கள் வலிமிகா இடங்கள்

தமிழுக்குத் தெரிகின்றதே

வலிமிகும் இடங்கள் வலிமிகா

இடங்கள் தங்களுக்குத் தெரிகின்றதா… 

 

என்ற அவர்களின் பிரத்யேக பாடல் பின்னணியில் ஒலிக்க, உடை களைந்து உடல்களே உடைகளாகி அணிகலன்களுமாகிவிட, உதடு போகும் இடமெல்லாம் உயிரும் உரைந்து பின் கரைந்து, வலிமிகும் இடங்களையும், வலிமிகா இடங்களையும் உணர்த்திக் கொண்டும், உணர்ந்துக் கொண்டுமிருக்க, காதல் வெட்கி தன்னை ஒளித்துக் கொள்ள… நாணமும் தூரச் சென்றுவிட… அகம் முழுதும் அந்தக் கள்வனும், கள்வியும் தான்… 

 

*^*^*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!