Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 19

என்னவள்_19

 

 மோகனின் வீட்டில் “செவ்லிக்கும் உனக்கும் திருமணம் எப்போதும் இனி நடக்காது அவளுக்கு திருமணம் செய்ய பேசிவிட்டார்கள் என மோகனின் தந்தை தியாகு மோகனிடம் பேசியவர்”, அடுத்ததாக துரிதமாக வேலை  செய்ய ஆரம்பித்து இருந்தார். இவர்கள் ஃபுக் செய்வதாக இருந்த அந்த மிகப்பெரிய மண்டபத்தில்  திருமணத்தை நடத்த பேசுவதற்கு சென்று இருந்தார்..

 



Advertisement

இவர்கள் எதிர் பார்த்தது போல இவர்கள் குறிப்பிட்ட தேதியில் மண்டபம் காலியாக இல்லை எப்போது காலியாக கிடைக்கும் என பார்த்தால் அடுத்து வந்த இரண்டு மாதத்திற்கு கூட காலியாக கிடைப்பது  போல தெரியவில்லை ஆனால்  இதே மாதத்தில் அடுத்த பதினைந்தாவது நாளில்  காலியாக இருப்பதாக கூறினார்.  அதுவும் நல்ல சுபமுகூர்த்த நாளாய் இருக்க… ஏன் அன்றைக்கே முடித்தால் என்ன என்ற எண்ணம் தான் அவருக்கும்…இங்கே மோகனுக்கு எவ்வளவு விரைவாக திருமணம் முடிகிறதோ  அந்த அளவுக்கு நிம்மதி என நினைத்தார்…இதே நினைவில் சக்தியின் தந்தைக்கு போன் செய்து இருந்தார்.

 

“ஹலோ தான் மோகனோட அப்பா தியாகு பேசறேன் நாம சொன்ன அந்த மண்டபம் நாம முடிவு பண்ணின தேதியில் காலியாகஇல்லை.  என்ன பண்ணலாம் மண்டபத்தை மாற்றிடலாமா அடுத்தடுத்து முகூர்த்திலும் காலி இல்லை. இரண்டு மாதம் முடியவும் தான் காலி இருக்கு. “

Advertisement

 

Advertisement

“அப்படியா….சம்பந்தி நமக்கு அந்த மண்டபம் கிடைச்சா வசதியாக இருக்கும் இருப்பதிலேயே பெரிய மண்டபம் அது…ரெண்டு பக்கமும் கூட்டம் அதிகமாக வருவாங்க… கூட்டத்தை சமாளிக்க அது சரியாக இருக்கும்ன்னு நினைச்சேன் அப்புறம் ரெண்டு வீட்டாருக்கும் பாதி தூரத்தில் இருப்பது போல இருக்கிறது இந்த மண்டபம் தான் அது இல்லாமல் மார்கெட்டில் இருக்கறவங்க லோடு ஏத்தறவங்கன்னு நிறைய பேருக்கு சொல்லனும் எனக்கும் அந்த மண்டபத்தில் வைக்க ரொம்ப ஆசை…”கடைசியாக மனணை மறைக்காமல் இவரிடம் கூறி இருந்தான்.

 

தியாகுவுக்கும் சொல்வது புரிந்தது … இவர்கள் வைப்பதாக சொன்ன மண்டபம் பெரும்பாலூம் திருமணம் வைப்பது பெரிய பணக்காரர்கள் மட்டுமே…அங்கே வைப்பதே பெரிய கெளரவமாக பேசப்பட்டது…யாரிடம் கேட்டாலும் பெரிய மண்டபம்யா அது பெரிய இடமா பொண்ணும், மாப்பிள்ளைம்  என்ற கேள்வி தான் அடுத்துவரும்… இவருக்கும் அந்த மண்டபம் கிடைத்தால் மகிழ்ச்சி தானே…

Advertisement

 

“ஒ…ஆனால் சம்பந்தி…வந்து இது சரியா  வருமான்னு பாருங்க…அடுத்த பதினைந்தாவது நாளில் நல்ல முகூர்த்த நாள் இருக்கு கல்யாணத்தை வேணும்னா முன்னாடி வச்சிக்கலாமா அந்த நாளில் மண்டபம் ஃபிரி தான் உங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இருக்கா…”

 

“சம்பந்தி வீட்ல கேட்டுட்டு சொல்லவா” என கேட்டவர்…வீட்டில் கேட்டுவிட்டு முதலில் வந்த அந்த முகூர்த்த நாளில் திருமணம் முடிக்க முடிவு செய்து இருந்தார். அவரை பொருத்தவரைக்கும் இப்போது திருமணம் முடித்தால் என்ன  இல்லை இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து முடித்தால் என்ன இரண்டும் ஒன்று தானே…எப்படியும் திருமணம் நடப்பது உறுதி எனும் போது…நாட்கள் கடத்துவதினால் என்ன லாபம் என்ற எண்ணம் தான்.  அதனால் சரி என தலையாட்டியவர் அதற்கான வேலையை செய்ய துவங்கினார். 

 

நாட்கள் நகர்கிறதோ இல்லையோ…திருமண நாள் வேகமாக நெருங்கி கொண்டு இருந்தது. பதினைந்து நாள் என்ன ஆரம்பித்து பத்து நாள்,எட்டு நாள் என்ன வேகமாக நகர்ந்தது. முடிவு செய்யவுமே திவ்யாவை முதலில் வீட்டிற்கு  அழைத்து இருந்தனர். அவள் வரவுமே இவளை கிண்டல் செய்ய ஆரம்பித்து இருந்தாள்.

 

“எப்படி சக்தி அத்தனை குழப்பமா பேசின…இப்ப பாரு எவ்வளவு சீக்கிரம் முடிவு பண்ணியாச்சுன்னு கிளம்பி வரும் போது அத்தை கூட சொன்னாங்க…கல்யாணம் முடிவு ஆகிறது எப்பவும் இப்படி தானாம். கல்யாண யோகம் வந்திட்டா யார் தடுத்தாலும் நிற்காதாம் அது உண்மை தான் போல இருக்கு…எல்லாமே மின்னல் வேகம் தான்  உன்னுடைய விஷயத்தில்….”

 

[the_ad id=”6605″]

 

 

 

 

“போக்கா நானும் இன்னும் மூன்று மாதம் இருக்கிறதுன்னு ஹேப்பியா இருந்தேன் எல்லாம் போச்சு இப்ப பாரு சட்டுன்னு பேசி முடிவே பண்ணிட்டாங்க…”

 

“அதுதான் சக்தி எனக்கும் ஆச்சரியம் அப்பா எப்படி உடனே அவங்க சொன்ன டேட்டிற்கு சரின்னு சொன்னாங்க…மண்டபம் அந்த மண்டபம் கிடைக்காட்டி வேற ஏதாவது பக்கத்தில் பார்த்து இருக்கலாம்.”

 

“அக்கா அப்பாவுக்கு உன்னோட கல்யாணத்துக்கு முதலில் அந்த மண்டபத்தை தான் எடுக்க ஆசைப்பட்டாங்க…அது முடியவில்லை என்னுடைய கல்யாணத்திற்கு அந்த மண்டபம்தான் வேணும்ன்னு முடிவோடு இருந்து இருக்கறாங்க… ஏன்பான்னு கேட்டா எப்படியும் அந்த பையணுக்கு தானே கட்டித்தர போறோம் அப்புறம் என்னமான்னு கேட்கறாங்க…”

 

“சரி…சரி…அதெல்லாம் விடு ஒரு தடவை ஃபேஷியல் பண்ணிக்கறையா முகம் இன்னும் ஃப்ரைட்டா இருக்கும் இன்றைக்கு போகலாமா…”

 

“அக்கா அலர்ஜி ஆகிவிடக்கூடாது  நான் இது வரைக்கும் எதுவும் பண்ணனது இல்லை திவ்யாவிடம் சக்தி பதில் கூறினாள்.”

 

“போ சக்தி  நானே அங்கே போய்  இதெல்லாம் பண்ண பழகிட்டேனாம் வா இங்கே பெஸ்ட் யாருன்னு கேட்டுட்டு  இன்றைக்கு போயிட்டு வரலாம். நான் உனக்கு நாலைந்து ஹேர்ஸ்டைல் யூடியூப்பில் எடுத்து வைத்து இருக்கிறேன் அதையும் நாம டிரை பண்ணிட்டு வரலாம். கல்யாணத்துக்கு முதல் நாள் ரெண்டு பேரும் ஓரே மாதிரி ஹேர்ஸ்டைல் பண்ணலாம் சரியா”…கேட்ட திவ்யாவிற்கும் இவளை போலவே நீளமான தலைமுடி முகம் மட்டுமே சக்தியை வைத்து பார்க்கும் போது குறைவாக தெரியும் அதுவும் அவளோடு நிற்கும் போது மட்டும் தான் அதே நேரம் தனியாக பார்த்தால் இவளும் நல்ல நிறம் மட்டும் அல்ல  நல்ல அழகியும் கூட தான். 

 

இவள் பேசுவதை கேட்டபடி வந்த கோமதியும் “ஆமாம் சக்தி அவகூட போயிட்டு வாயேன். இதெல்லாம் செஞ்சா இன்னும் அழகாக இருப்பே”…கோமதிக்கு தனது இரண்டு மகள்களும் அழகாக இருக்க வேண்டும் என்பது எப்போதுமே  மனதில் தோன்றும் ஒன்று. 

 

அதே நேரம் முருகேசன் அங்கு வந்தவர் “கோமதி நாளைக்கு ஜவுளி எடுக்க டவுன்ஹால் வரைக்கும் போகணும் மாப்பிள்ளை வீட்டில் எல்லோரையும் வரச்சொல்லி இருக்கிறேன்.  நம்ம பக்கத்து ஆளுங்க யார் யாரை வரச்சொல்லனும்ன்னு பார்த்து அழைச்சிடு…”

 

“நாளைக்கு காலையில் புறப்படணும் காலையில் லேட் பண்ணக்கூடாது இந்தா இந்த பணத்தை எடுத்து பிரோவில் வை..என்று இவரது கையில் தந்தவர்…திவ்யாவை பார்த்து உங்கள் மாமனார், மாமியாருக்கு ஃபோன் பண்ணினேன் திவ்யா அவங்க வேலை நடந்திட்டு இருக்கு சட்டுன்னு வரமுடியாதுன்னு சொன்னாங்க…அதுதான் திவ்யா இருக்கறாலே பார்த்துக்கோங்க சொல்லிட்டாங்க…மாப்பிள்ளையும் நாளைக்கு வர்ற மாதிரி சொல்லலை..நீ தான் அவங்களுக்கு ஏற்றது மாதிரி டிரைஸ் எடுக்கனும் என்று சொல்ல…”

 

“சரிங்கபா…நான் ஃபோன் பண்ணி கேட்டுக்கறேன். அப்பா சாயங்காலம் பியூட்டி பார்லர் போய் விசாரிக்க போறேன்பா…மேக்கப் சொல்லணும்பா..”

 

“சரிடா…பணம் வேணும்னா அம்மா கிட்ட வாங்கிக்கோ… மேக்கப் எல்லாம் நீயே பார்த்து பேசிடு…தோட்டத்து வரைக்கும் பார்த்துவிட்டு வரேன் என நகர்ந்து சென்றார். “

 

அதே நேரம் அங்கே செல்வியின் வீட்டில் இவளுக்கு மாப்பிள்ளை பார்த்து இருந்தவர்களுக்கு செல்வியை மிகவும் பிடித்து விட திருமணத்திற்கு நாள் குறிக்கும் முடிவு செய்து இருந்தனர். என்றைக்கு இவர்கள் மோகனுக்கு திருமணம் முடிக்க  தேர்வு செய்து இருந்தார்களோ அதே நாளில் தனது மகளுக்கு நிச்சயம் செய்ய முடிவு செய்து இருந்தார். 

 

மோகனின் திருமணம் எந்த நாளோ அதே நாளில் ஊரையே அழைத்து இருந்தார் மாலை நான்கு மணிக்கு தனது மகளுக்கு நிச்சயம் என்று…ஊரில் இருப்பவர்கள் கூட “பரவாயில்லை பொன்னி…பொண்ணுக்கும் பிடிவாதமாக இருந்து பையனை பார்த்துட்ட..”என கூறியிருந்தனர்.

 

செல்வி தான் திருமணம் வேண்டாம் என்று ஆட்பாட்டம் செய்வாள் தன்னோடு சண்டை போடுவாள் இப்படி பலவாராக யோசிக்க அவளோ யாருக்கு வந்த விருந்தோ என்பது போல அமைதியாகவே காணப்பட்டாள். தாயிடம் மட்டும் அல்ல யாரிடமும் பேசுவது இல்லை.  எதிர்ப்பு என்பது சுத்தமாக இல்லை  இவளை பார்க்கும் போது பொன்னிக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது.  பேசுகிற மகளை சத்தமிட்டு அடக்கலாம்  எதுவும் பேசாமல் இருப்பவளை என்ன செய்வது…சீக்கிரமாகவே திருமணத்தை முடித்து விட்டால் சற்று நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்து கொண்டார்.

 

பார்த்து இருக்கும் மாப்பிள்ளை இவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.  பேச்சில்,குணத்தில்  எந்த குறையும் சொல்ல முடியாது பிக்கல் பிடுங்கல் இல்லாத வாழ்க்கை…அதுவும் நல்ல மரியாதை பையன் பேசும் போது தெரிந்தது. மகளின் மெளனம் தான் கொஞ்சம் பயம் கொள்ள செய்தது ஒருவேளை இலள் நிச்சயத்தன்று எனக்கு இந்த பையனை பிடிக்கவில்லை என்று வந்தவர்கள் முன்பு சொல்லி விடுவாலோ…ஒரு வேளை அதனால் தான் இத்தனை அமைதியா…

 

ஒவ்வொன்று செய்யும் போதும் ஒவ்வொன்று வாங்கும் யோசனை முழுக்க செல்வியை மட்டுமே சுற்றி வந்தது. வரமாட்டேன் என்றவளை பிடிவாதமாக அழைத்து கொண்டு புது சேலை எடுத்து வந்து இருந்தாள். கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூயாய்யில்…அதற்கு ஏற்றாற்போல் பிளவுஸ் டிசைன் செய்து வாங்கி வந்து இருந்தாள். மாப்பிள்ளை வீட்டில் வரும் போது இவள் போடுவதற்காக என… சாதரனமாக என்றால் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து இருப்பாள். செல்வி அதிகமாக விரும்புவது புது உடை வாங்க, அதை அழகாக அடிக்கடி உடுத்த ஆனால் இதற்கும் அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை  அவளது முகத்தில்…

 

இரண்டு முறை கவனித்து விட்டு அவளிடம் கோபமாக சத்தமிட்டும் இருந்தார்.” ஏன் இப்படி அமைதியாக இருந்து என்னுடைய உயிரை எடுக்கற… வர்றவங்க முன்னாடி என்னை அசிங்கப்படுத்த முடிவு  செஞ்சு இருந்தேன்னா அதற்கு பிறகு என்ன உயிரோடு பார்க்க முடியாது என்று கூறியிருந்தார்.எதற்கும் அவளிடம் பதில் இல்லை.  தூரமாக வெறித்து பார்த்ததோடு சரி…”

 

[the_ad id=”6605″]

 

 

 

மோகனுக்கு தன் மேலேயே வெறுப்பாக இருந்தது  என்ன இருந்து என்ன எதுவும் அவனது விருப்பத்திற்கு நடக்கவில்லையே…அன்று செல்வியை பார்த்து விட்டு வந்ததோடு சரி அதன் பிறகு அவளை பார்க்கவே முடிய வில்லை.  சில நாட்களிலேயே அவளுக்கும் திருமணத்திற்கு பேசி விட்டார்கள் என்று இவனது தந்தை கூறி இருக்க…பித்து பிடித்தது போல சுற்றிக்கொண்டு இருந்தான். எங்கே போகிறான் எங்கு வருகிறான் எதுவுமே அவனது மூளைக்கு எட்டவில்லை நாட்கள் மட்டும் வேகமாக நகர்ந்து கொண்டு இருந்தது. 

 

“இரவு தியாகு வீட்டிற்கு வந்தவர் மோகன் நாளைக்கு பொண்ணுக்கு கல்யாணப்பட்டு எடுக்க போகணும் காலையில் லீவு போட்டுவிட்டு வந்துவிடு என்று கூற…”

 

“முடியாது பா என்னால வர முடியாது.  யாரோ போங்க என்னவோ செய்ங்க என்னை இதில் இழுக்காதிங்க என்ன நகர்ந்து இருந்தான்.”

 

“பையனை பொண்ணு வீட்டில் எதிர் பார்ப்பாங்களே”…பழைய முறையாக இருந்தால் இது போல சம்பிரதாயம் கிடையாது மாப்பிள்ளை வீட்டில் எடுப்பது தான் பெண்ணிற்கு  எடுத்த உடையை  அங்கே காட்டுவது கூட கிடையாது இவர்கள் முகூர்த்தத்திற்கு முன்பு எடுத்து செல்வது இப்போது அப்படி இல்லையே…எல்லாமே மாறி இருந்தது.  வாங்குவது பெண்ணிற்கு தானே அவளுக்கு பிடித்ததாக இருக்க வேண்டும் என்ற நிலைக்கு எப்போதோ வந்து இருந்தனர்.

 

“இப்போது என்ன அவனுக்கு ஆபீஸ்ல வேலை அதிகம் லீவ் இல்லைன்னு சொல்லிக்கலாம். இப்போது லீவ்  எடுத்தா அந்த டைம்ல லீவ் அதிகமாக கிடையாதுன்னு சொல்லு…என நகர்ந்து இருந்தார். “

 

அடுத்த நாள் இவர்கள் பக்கத்தில் பத்து பேரோடு காலையிலேயே புறப்பட்டு இருந்தனர் அதே போல சக்தி வீட்டிலும் அதே போல் அழைத்து வந்து இருந்தனர். துணிக்கடை வாசலிலேயே ஒருவரை ஒருவர் வரவேற்றவர்கள் மொத்தமாக கடைக்குள் சென்றனர்.

 

ஏற்கனவே முருகேசன் சொல்லி அழைத்து வந்து இருந்தார்.” சேலை சக்திக்கு பிடிச்சு மாதிரி இருக்கணும் அது எத்தனை ரூபாய்யாக இருந்தாலும் சரி…அது மட்டும் அல்ல இவர்கள் தரப்பில் எத்தனை பேருக்கு உடை எடுத்து தரவேண்டும் என்று தனியாக லிஸ்ட் போட்டு எடுத்து வந்து இருந்தனர். அதன் பொருப்பை திவ்யாவிடம் தந்து இருந்தார். பட்ஜெட் இவ்வளவு, இப்படி இருக்க வேண்டும் என்று…யாரும் குறை சொல்லாத அளவிற்கு அழகானதாக தேர்வு செய்ய வேண்டும் வரும் போதே பேசிக்கொண்டு வந்து இருந்தனர்.”

 

இங்கே மாப்பிள்ளை வரவில்லை எனவுமே முதலில் கேட்டது திவ்யா தான். ” ஏன் மாப்பிள்ளை வரலை இன்றைக்கு பொண்ணுக்கு அவர் தான் சேலை செலக்ட் பண்ணுவார்ன்னு நினைச்சேன். “

 

“அது வந்து….வேலைமா லீவ் கிடைக்கலை…மோகனின் தாயார் தான் பதில் சொன்னார். “

 

“என்ன வேலையோ போங்க அத்தை இதெல்லாம் நல்ல மெமரி தெரியுங்களா…பத்து வருஷம் கழித்து கூட ஞாபகத்தில் இருக்கும் என்று திவ்யா சொன்னவள் சக்தியிடம் வந்து நிற்று கொண்டாள்.”

 

மாப்பிள்ளை பொண்ணுக்கு அதே போல மாப்பிள்ளை தாய், தகப்பனார்  பெண்ணின் தாய், தகப்பனார்  இவர்களுக்கு டிரஸ் எடுக்க ஆகும் செலவை இருவரும் பிரித்து கொள்வதாக பேசி இருக்க…சக்திக்கு பிடித்த கலரில் உடையை தேர்வு செய்ய அமர்ந்தனர்.

 

[the_ad id=”6605″]

 

 

 

 

அதே நேரம் சக்தியின் மனநிலை வேறாக இருந்தது.  இது வரையிலும்ஒரு ஃபோன் கூட மோகன் செய்ய வில்லை.  அவனே அழைக்காமல் எப்படி இவள் அழைத்து பேசுவது என்ற தயக்கத்தில் இந்த நிமிடம் வரைக்கும் அவனை கூப்பிடவில்லை…இங்கே இன்று வருவான் என்று நினைத்து இருக்க அதுவும் வரவில்லை.  என்ன நினைக்கிறான் அதுவும் தெரியவில்லை சற்று கண்களை மூடி யோசித்தால் சுத்தமாக அவனது முகம் இவளுக்கு புலப்படவில்லை.  அந்த அளவிற்கு முகம் ரிஜிஸ்டர் ஆகவில்லை.  இவனுக்கும் எனக்குமான வாழ்வு எப்படி இருக்கும் இந்த பயமே மனதில் இருந்து கொண்டு…இவளை  ஆட்டம் காண வைத்தது. 

 

நிகழ்காலத்தை விடவும் எதிர் காலம் இவளை பயமுறுத்தியது சக்திக்கு.

 

தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!