Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Kaathal Kanaa

Aruna Kathirs En kaathal kanaa 19

என் காதல் கனா 19

“குட்… யு அண்டர்ஸ்டுட்.. ஈகோங்கற வார்தையை யூஸ் பண்ணாம புரியவைக்க இன்னும் எவளோ நேரம் கிளாஸ் எடுக்கணுமோன்னு நினைச்சேன்… சோ, இதுக்கு எதாவது சொல்யூஷன் இருக்கா? இந்த ஈகோ வியாதிக்கு? எனக்கு தெரிஞ்சு இல்லை..” என நகைத்தவள் சத்தீஷை ஸ்னேகமாகப் பார்த்தாள்.

“எனக்கும் தெரியலை சுஜி. உண்மையா ஃப்ரேங்கா ஐ லைக் டாக்கிங்க் அண்ட் பீயிங்க் வித் யு.. என்னோட கவலையெல்லாம் விவேக் பத்தி மட்டும் தான். அவனோட உயிர் நண்பனா அவனுக்கு துரோகம் பண்ணற மாதிரி நான் நடந்துக்க கூடாதுங்கறது மட்டும் தான் என்னைத் தடுக்குது.”

“என்ன சத்தீஷ் துரோகம்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லறீங்க.. விவேக்கும் நானும் லவ் பண்ணி, நீங்க நடுவுல வந்து ஆட்டைய கலைச்சா அது தப்பு.. துரோகம். எனக்கு விவேக் மேல அப்படி எந்த இண்டிரெஸ்டும் இல்லைன்னு தெளிவா சொல்லறேனே…”



Advertisement

“நம்ம பாண்யிட் ஆஃப் வியூ அது. ஆனா விவேக்கு அப்படி தோணாதுல்ல.. அவன் விரும்பற பொண்ணு கூட நான் பேசி, அவளை என் பக்கம் இழுக்க ட்ரை பண்ணற மாதிரி தானே இருக்கும். அவனோட கண்ணோட்டம் தப்பில்லையே…”

“அப்போ என்ன பண்ணலாம் அதையும் சொல்லுங்க..சத்தீஷ்”

“என்னால எல்லார் முன்னாடியும் உங்கிட்ட நார்மலா பேச முடியாது. கண்டிப்பா கொஞ்சம் விலகி தான் நடந்துக்குவேன்.. பட், வி வில் ஹேவ் அவர் மொமெண்ட்ஸ்… இதோ இன்னைக்கு மாதிரி.. உன் கூட தனியா இருக்கற டைம் கிடைக்கறப்போ வி வில் பி நார்மல்.. ஒ.கேவா?”

Advertisement

“தனியா எப்போ டைம் கிடைக்கும்?”

Advertisement

“சுஜி.. கிடைக்கும்.. தோ, இன்னைக்கு மாதிரி..”

“இல்ல.. இது சப்பைகட்டு… உங்க ஃப்ரெண்ட் கூட டைம் மேனேஜ் பண்ணற மாதிரி எனக்கும் ஒரு ஸ்பாட் வேணும்…”என்றாள் கால்களை தரையில் அழுந்த பதித்துக் கொண்டு. அவள் நின்ற தோரனைக் கண்டு சதீஷிற்கு அப்படி சிரிப்பாக இருந்தது.

தன்னுடம் பேச, பழக என இப்படி இவனிடம் யாரும் இதுவரையிலும் கேட்டதில்லை. ஒருபக்கம் பூரிப்பாக இருந்த போதும், சதீஷ் தன் மன உணர்ச்சியை சுஜியிடம் காட்டிக் கொள்ளவில்லை.

Advertisement

 

[the_ad id=”6605″]

 

 

 

“சரி.. உனக்கு எவ்ரி ஃப்ரைடே வீக்லி ஆஃப் இல்லையா.. சோ, எவ்ரி ஃப்ரைடே இதே மாதிரி என்னோட வர்க் முடிச்சுட்டு வந்ததும் மீட் பண்ணலாம். “

“சூப்பர் சத்தீஷ்… மெனி மெனி தேங்க்ஸ்….” என மொழிந்தவள், அவனுக்கு ஹை ஃபை காட்ட, சதீஷும் சிரிப்புடன் அவள் கைகளை ஓங்கி அடித்தான்.

“யூ ஸ்டுபிட்… வலிக்குது” என அவள் உதறிக் கொண்ட போதிலும், நடையில் ஒரு துள்ளலுடன் உடன் வந்தாள். திரும்ப அவளது டார்மில் விட்டுவிட்டு விடைபெற்று தன் விடுதி நோக்கி கலவையான எண்ணங்களுடன் நடந்தான் சதீஷ்.

இதெல்லாம் எவ்வளவு தூரம் சொல்லுபடியாகும் என யோசனை மிகுதியாக எழுந்தது. சற்றே தள்ளி நின்று தன் எண்ணவோட்டத்தைக் கூர்ந்து கவனிக்கலானான். அவனுக்கும் சுஜியிடம் பேச சிரிக்க நடக்க, அவளது ஈகோவை சீண்டிப்பார்க்க என எல்லாமே பிடித்தம்.

இதோ இப்போது கூட ஒரு மணி நேரத்திற்கும் மேல் இருவரும் செலவிட்டிருந்தனர். ஆனால் நேரம் போனதே தெரியவில்லை எனலாம். இயல்பாகப் பேச முடிந்தது. “இவள் என்ன நினைப்பாளோ.. என்னை எப்படி மதிப்பிடுவாளோ” என்ற கவலை கொஞ்சமும் ஏற்படவில்லை.

அதே நேரம் சுஜினியையும், அவன் காதலித்த சுபாஷினியையும் மனம் ஒப்பிட்டுப் பார்த்தது. சுபாஷினியிடம் பேசம் நேரங்களில், பெரும்பாலும் அவளே பேசிக் கொண்டிருப்பாள், சதீஷ் தேவையான இடங்களில் ம்ம்ம் கொட்டிக் கொண்டு இருப்பான்.

சின்ன சின்ன விஷயங்களை பெரிதாக பாவித்து, அதற்காக கவலை கொண்டு, குழம்பி, இவனையும் குழப்பி என ஒரு மகிழ்வான மனநிலையில் இல்லாமல், எப்போதுமே அவளை சதீஷ் ஏதாவது ஒரு விஷயத்திற்காக சமானாதப்படுத்திக் கொண்டிருப்பான்.

சுஜியிடம் அதெல்லாம் எதுவும் இல்லை. அவள் எதிர்ப்பார்க்கவும் இல்லை. இயல்பாகவே இருந்தாள். இதோ வரும் வழியில் ஒரு ஐஸ்கிரீம் கடை தென்படவும், “ உனக்கு வேணுமா?” என்று கேள்வி கேட்காமல் ஓடிச் சென்று இருவருக்கும் ஆரஞ்ச் கேண்டி ஐஸ்கிரீம் வாங்கி வந்தாள்.

இருவரும் பேசிக் கொண்டே மெல்ல நடந்த வண்ணம் விடுதி திரும்பியது மகிழ்வாக இருந்தது. இதுவே சுபாவாக இருந்திருப்பின் அவள் நடவடிக்கையே வேறுவிதமாக இருந்திருக்கும்.

“ஏதாச்சும் சாப்பிடனும் போல இருக்கு சதீஷ்” என பூடகமாக ஆரம்பிப்பாள். இவனாக அக்கம் பக்கம் தேடி, “இது வேணுமா? அது வேணுமா?” என கேட்க வேண்டும். “ஐஸ்கிரீம் வேணும்” என்று கூட சொல்லமாட்டாள். இவனாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

அவளுக்கு வழக்கமாகப் பிடிக்கும் ஃப்லேவர் வாங்கிக் கொண்டு வந்து நீட்டிவிட்டால் எதற்கு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறோம் என்றே தெரியாமல் உம்மென இருப்பாள். அத்துடன் விஷயம் முடிந்தது என சதீஷ் நினைத்திருப்பான்.

ஆனால் பின்னொரு நாள் என்றேனும் வாக்குவாதம் வரும் சமயம், “அன்னைக்கு எனக்கு என்ன ஃப்லேவர் ஐஸ்கிரீம் வேணும்னு கூட நீ கேட்கலை. நீயா ஏதோ வாங்கிட்டு வந்து நீட்டின. அதையும் நான் பேசாம சாப்பிட்டேன்ல..” என வம்படியாக இழுத்து கொண்டு வருவாள்.

“இப்படிபட்ட ஒருத்தியை எப்படி நான் காதலித்தேன் என்று 100வது முறையாக மனம் அதே கேள்வியைக் கேட்டுக் கொண்டது.

சற்றும் ஒத்து வராமல், அரியாத வயதில் வாழ்க்கையைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல், அவள் பார்க்கிறாள் அது பிடித்திருக்கிறது, நட்புகள் கேலி செய்வதனால் பிடித்தம் என காதலித்தோம் என்ற ஒரே காரணத்திற்காக வாழ்வு முழுக்க வீணடித்திருப்பேனோ என மனம் லேசாக கவலையும் கொண்டது.

நல்லவேளை சுபா தானாக விலகிச் சென்றாள் என்ற எண்ணமும் அதனூடே தோன்ற, சதீஷ் அவன் விடுதிக்குள் சென்று கட்டிலில் கிடந்தான். சதீஷ் விடை பெற்றுச் சென்றுவிட ஒரு வித துள்ளும் மனநிலையுடன் தன் அறையை அடைந்த சுஜினிக்கு அவளது தோழிகள் இன்னமும் உறங்காமல் இவளுக்காகக் காத்திருந்தது பிடித்தமில்லை.

“சே… இவளுக ஏன் இன்னமும் தூங்கலை.. அட்லிஈஸ்ட் அவங்க ரூமுக்காவது போயிருப்பாங்கன்னு நினைச்சேனே” என முனுமுனுத்தவள் தன் கட்டிலில் தொப்பென அமர்ந்தாள்.

காத்திருந்தது போல் எம்மாவும், வித்யாவும் “என்னாச்சு சுஜி.. என்ன சொன்னான் சதீஷ்… உன்னை லவ் பண்ணறானா? ப்ரபோஸ் பண்ணானா?” என சரமாரியாக கேள்விகளைத் தொடுக்க, சுஜி வேகமாக அடித்துக் கொண்ட தன் மனதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள சிரமப்பட்டாள்.

அப்போதைக்கு சுஜினிக்கு சற்றே தனிமை தேவைப்பட்டது. தான் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறோம் என்பதை மனதிற்குள் ஓட்டிப் பார்க்க, அது சரியா தவறா என ஆராய அவளுக்கு நேரம் தேவைப்பட்டது. அதனால் ஒன்றிரண்டாக மட்டுமே தோழிகளுக்கு பதிலளித்தாள்.

“இல்ல.. பெருசா இம்பார்டெண்டா ஒன்னும் இல்லை. நான் கொஞ்சம் அப்சட்டா இருந்தது சதீஷ்க்கு கில்டியா இருந்ததாம். அதனால சமாதானம்படுத்த நினைச்சு வந்திருக்கான்… நத்திங் மோர்” என பட்டும் படாமல் பதில் சொன்னவளிடம் அதற்கு மேல் தோழிகள் எதுவும் சொல்லவில்லை.

சுஜி வேறு ஏதேனும் சொல்வாளோ என கொஞ்சம் அமைதி காத்தனர். சுஜினி வாய்திறவாமல் உட்கார்ந்திருக்க, எம்மாவும் வித்யாவும் “குட் நைட்” சொல்லிவிட்டு அவர்களது அறைக்குச் சென்றுவிட்டனர். தோழிகள் சென்று விட, இரவு விளக்கினை மட்டும் எரியவிட்ட சுஜினி, அவள் அறையில் இருந்த ஜன்னலின் தடுப்பில் சென்று அமர்ந்தாள்.

வெளிப்புறமாக திறந்து கொள்ளும் படிக்கு அமைக்கப்பட்டிருந்த ஜன்னலின் திடுக்கில் கால்களை மடக்கி அமர்ந்து ஒரு ஜன்னலை மட்டுமே லேசாக திறந்து வைத்தாள். ஊசிப்பனிக்காற்று முகத்தில் மெல்லப் பரவி, உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தியது.

“என்ன பண்ணிட்டு வந்திருக்க தெரியுமா சுஜி… லிட்ரலா எங்கிட்ட பேசு, பழகுன்னு சதீஷ்கிட்ட உன் ஈகோவ தூக்கி அப்படியே குடுத்துட்டு வந்திருக்க.. என்னாச்சு சுஜி உனக்கு.. அவனை அவளோ பிடிச்சிருக்கா என்ன?”

“அவனை விட விவேக் எந்த விதத்தில கெட்டவன் சுஜி.. அன்னைக்கு ஏற்போர்டில அம்மாட்ட எப்படி ரெண்டு பேரும் நடந்துகிட்டாங்கற ஒரு இன்சிடெண்ட் போறாதா?”

“அவங்க மேனரிசமும் கேரக்டரும் புரிய.. அப்படி இருக்கறச்சே… எப்படிடீ சதீஷை உனக்கு இவளோ பிடிக்குது.. விவேக்கை பிடிக்காம போகுது…” என அதுவரையிலும் எங்கோ மூலையில் அமர்ந்து தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த மனசாட்சி இப்போது துள்ளிக் கொண்டு வாதாட வந்திருந்தது.

அம்மாவைப் பற்றியும், அன்று அவன் நடந்து கொண்ட முறைமை பற்றியும் நினைக்கையில் கண்கள் தானாக குளம் கட்டின. சுஜினிக்குமே குழப்பம் தான்.

“என்னவோ பேசப்போய்.. வேற என்னவோ பேசிட்டு வந்திருக்கோமே… நான் கோவிச்சுட்டு வந்துட்டேன்னு அவன் சமாதப்படுத்த வந்திருக்கான். அதை விட்டுட்டு என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணு..என் கூட பேசிப் பழகுன்னு அல்பைத் தனமா கேட்டிருக்கேனே… ஐய்யோ…”என தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டாள்.

“அவன் ஏதோ பெரிய மன்மதன் மாதிரியும்..பெரிய கொடை வள்ளல்.. ப்ரெண்டுக்காக அவளோ தூரம் மெனக்கெடற மாதிரியும், போனாப் போகட்டும்னு சரி…உங்கூட வாரத்தில ஒரு நாள் ஒரு மணி நேரம் ஸ்பெண்ட் பண்ணறேன்னு பெருந்தன்மையா ஒத்துகிட்டான்.

“ஆனா, இப்படி வலியப்போய் விழுந்து விழுந்து பேசினா அப்படித்தான் இருப்பான். எவளோ முட்டாள் தனமா நடந்துகிட்டிருக்கேன்… என்னாச்சு சுஜி உனக்கு.. எதுக்கு யு.எஸ் வந்தோம்கறதே மறந்துட்டடீ நீ..”

“படிச்சு வேலை தேடி,அம்மாவை இங்க கூட்டி வந்துன்னு இவளோ கடமை இருக்கு உனக்கு.. இதெல்லாம் என்ன சிறுபிள்ளை மாதிரி விளையாட்டு உனக்கு… நல்லாயில்ல சுஜி… இந்த மாதிரிப்பட்டவ நீ இல்லவே இல்லை சுஜினி..””என தீர்க்கமாக மனசாட்சி எடுத்துக்காட்ட,

சுஜினிக்கு தன்மேல் அவ்வளவு கோபம் வந்தது.சுஜினி தன் வாழ் நாளில் கடந்து வந்த காதல், பின்னால் சுற்றிய வாலிபர்கள் என ஒன்றொன்றாக எண்ணிப்பார்த்தாள்.

“ஸ்கூல்ல அந்த பிரபு, அப்பறம் டியூஷன் செண்டர்ல ..அந்த பையன் பேர் கூட எனக்குத் தெரியாது.. அப்பறம் காலேஜ்ல ஈ.சி.ஈ பையன் ரகு, என்கூட படிச்ச ஆல்வின், ப்ளேஸ்மெண்ட் டைம்ல மீட் பண்ண அந்த எஸ்.ஆர்.எம் காலேஜ் வசந்த், ஏன் ராமனாதன் மாமா பையன் ஸ்ரீராம் கூட அப்போ அப்போ வழிவான் தானே.. அவன் அம்மா அப்பா இல்லாத நேரமா பார்த்து.. “சுஜி.. இந்த டிரெஸ் உனக்கு நல்லா இருக்கு..”ன்னு உளறியிருக்கான்.”

 

[the_ad id=”6605″]

 

 

 

 

“இவனுகளை எல்லாம் திரும்பி பார்க்கணும்னு கூட தோணினதில்லை இவளோ நாள். என்ன இவனுக, இப்படி வழியறானுகன்னு ஒரு விதமா கேஷுவலா தட்டிகழிச்சுட்டு போய்டே இருப்பேனே.. என்னாச்சு எனக்கு? அப்படி என்ன இந்த  சதீஷ் அவளோ நல்லவன்?”

“ஸ்கூல்ல கிரேஸ் அக்கா மேல பைத்தியமா இருந்தான்.. அப்பறம் காலேஜில ஒரு பொண்ணை லவ் பண்ணி அது பெயில்யர் ஆகியிருக்குன்னு அன்னைக்கு விவேக் சொன்னான்.

இன்னும் எத்தனை பொண்ணுக இருக்கோ இவன் லைஃப்ல. இதுல எங்கிட்ட பேசு சதீஷ்ன்னு அப்படி போய் மேல விழுந்து இளிச்சிருக்கேன் நான். அவன் என்னைப் பத்தி என்ன நினைப்பான்.. என்ன மாதிரி பொண்ணு நான்னு நினைப்பான் இல்லையா?

உன்னை என் ஃப்ரெண்ட் லவ் பண்ணறாண்டீன்னு தெளிவா சொல்லிட்டப்பறமும் “இல்ல பரவாயில்லை.. நீ எங்கூட பேசுன்னு” சொல்லற பொண்ணு எப்படிபட்டவளா இருப்பான்னு அவன் யோசிக்கமாட்டான்.!!

சே…முட்டாள்…முட்டாள்.. செய்யறதை செஞ்சு முடிச்சுட்டு இப்போ யோசிச்சு என்னாகப் போறது… சரி… இனியாவது கொஞ்சம் டாமேஜ் கன்ட்ரோல் பண்ணலாம்.”

“ரொம்ப அவன்கிட்ட ஈஷ வேண்டாம். அடுத்த வாரம் மீட் பண்ணற வரைக்கும் ஒரு மெசேஜ் ஒரு கால்கூட இருக்க கூடாது. இதை கூலா கேஷுவலா ஹேண்டில் பண்ணனும்.. நீ ஒண்ணும் அவளோ இம்பார்டெண்ட் இல்லை…”

“எனக்கு உங்கிட்ட பேச பிடிச்சிருந்ததாலே, எனக்காகத் தான் அப்படி பேசினேன்னு கெத்தாவே மெயிண்டெயின் பண்ணனும்.. மொத தடுவ ஈகோவை அவங்கிட்ட தாரவார்த்து கொடுத்தாச்சு… அதை கொஞ்ச கொஞ்சமா மீட்டுக்கணும்…” என தன் தலையில் பலமாக தட்டிக் கொண்டாள்.

ஜன்னலின் வழியே குளிர் பலமாக ஊடுருவியிருக்க, ஜன்னலைச் சாத்தினாள். காட்டிலில் வந்து படுத்து தன் குவில்டை காது வரையிலும் போர்த்திக் கொண்டவளுக்கு உறக்கம் வந்த பாடில்லை. கண்டதையும் நினைத்து மனதில் புழுங்கி ஒருவழியாக சுஜினி உறங்கிப் போக நெடு நேரமாகிவிட்டிருந்தது.

அடுத்த வாரம் சுஜி வேலை முடித்து திரும்பும் வேளைகளில்,  விவேக்குடன் வழக்கமான மெளனத்தைக் கடைபிடிக்காமல், அவனை தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையான அக்கரைக் காட்டினாள்.

கல்லூரி காலத்திலிருந்தே சதீஷ் வீட்டினரின் இயல்பான வாழ்க்கை முறை விவேக்கிற்கு மிகவும் பிடித்தம். அதையே இன்று சுஜினி பேசும்பொழுது விவேக்கிற்கு ஏக்கமாக இருந்தது.

எங்கே சதீஷின் வீட்டையும் தன் வீட்டையும் ஒப்பு நோக்குவாளோ என நினைத்தான். ஆனால் விவேக் பயந்தது போல் சுஜி அவனது வீட்டினரை பற்றி எந்த வகையிலும் தாழ்வாக நினைத்து விடவில்லை.

அதை விடவும் “உண்மையிலேயே உங்க அம்மா ரொம்ப கிரேட் விவேக். உங்க அப்பா ஏமாத்தினது தெரிஞ்சும் எவ்வளவு தைரியமா இன்னொரு குடும்பத்தையும் சேர்த்து தாங்கி இருக்காங்க.. இந்த மாதிரி எல்லாம் நிறைய பேரு பார்க்க முடியாது விவேக்” என தன் அன்னையைப் பற்றி சுஜி பெருமையாக பேசும்பொழுது விவேக்கிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அன்றைக்கு மட்டுமல்லாமல் அடுத்து வந்த இரு நாட்களுமே சுஜி வெகு இயல்பாக விவேக்கிடம் பேசினாள். விவேக்கின் மனநிலை இப்படியாக இருக்க, சுஜியின் மனமோ வேறுவிதமாக நினைத்தது.

“சதீஷ்கிட்ட எப்படி ஈஸியா ஜாலியா பேச முடியுதோ அதே மாதிரி விவேகிட்டயும் ஃபரேங்கா பேச முடிஞ்சா நல்லா இருக்கும். ஆனா என்ன இதுவரை என்னை பிடிச்சு இருங்கற மாதிரி ஒரு தடவை கூட காட்டிக்கிட்டதில்லை.”

“ஐ மீன் ஆக்டிவிட்டீஸ் அப்படி தெரிஞ்சாலும், சதீஷ் மாதிரி நேரடியா கேட்ட மாதிரி விவேக்கிட்ட கேட்க முடியாது. அப்படியே கேட்டாலும்..இல்ல அப்படி எல்லாம் எந்த எண்ணமும் இல்லைன்னு சொல்ல நிறைய வாய்ப்பிருக்கு. விவேக், சதீஷ் மாதிரி கிடையாது.”

“மனசுல ஒன்னு நினைச்சுகிட்டு வெளியில தன்னுடைய இமேஜ் ஸ்பாயில் ஆகாம இருக்க இல்லைன்னு தான் சொல்லுவான்.சோ, சதீஷ்கிட்ட பேசின மாதிரி விவேக் கிட்ட பேசினா எடுபடாது” என சுஜி நினைத்தாள்.

மனதில் இவ்வாறான எண்ணங்களுடன் அடுத்த வாரம் கழிந்தது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை. சதீஷை அன்றுமாலை சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணம் சுஜிக்கு மகிழ்ச்சியை அளித்தது. காலையில் எழுந்ததிலிருந்து பரபரப்பான மனநிலையுடன் காணப்பட்டாள்.

கல்லூரியிலும் சற்றே துள்ளலுடன் ஆர்வமாக பாடத்தை கவனித்து வந்தாள். மாலை விடுதி திரும்பியதும் குளித்துமுடித்து என்ன உடை அணியலாம் என தீவிரமாக சிந்தித்து தன்னை அழகு படுத்திக் கொள்ள நிறைய கவனம் காட்டினாள்.

“இப்போ எதுக்கு இவ்வளவு அளப்பறை? சாதாரண ஒரு மீட்தானே?” என மனசாட்சி சற்றே மண்டையில் தட்டிய போதும், “மீட்டா இருந்தாலும் டேட்டா இருந்தாலும் கொஞ்சம் நீட்டா போக வேண்டாமா? இப்ப என்ன? ஒரு நல்ல ஜீன்ஸ், ஒரு நல்ல டாப்ஸ்… இவ்வளவுதானே தேடுறேன்” என தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டாள்.

இதற்குள் மண்டையில் அடுத்த கேள்வி வேறு குடைய தொடங்கியது. “வித்யாகிட்டயும் எம்மாகிட்டயும் அன்னைக்கு சதீஷ் பேசினதை பத்தி எதுவுமே சொல்லல. அப்படி இருக்கறப்போ எதுவுமே சொல்லாம இன்னைக்கும் மீட் பண்ண போறது சரியா வருமா? இல்ல உண்மைய சொல்லிட்டே போயிரலாமா?” என அடுக்கடுக்காக சுஜினியின் மனம் சென்றிருந்தது.

நல்லவேளையாக சுஜிக்கு நிறைய கஷ்டம் கொடுக்காமல் அவளது தோழிகள் வித்யாவும் எம்மாவும் ஏதோ வாங்க வேணும் என்று விடுதி வந்ததுமே கிளம்பி விட்டிருந்தனர். சுஜினியையும் உடன் அழைத்தனர் தான். ஆனால் தன் ஒரே நாள் விடுமுறையை சாக்கிட்டுக் தான் வர இயலாது எனச் சொல்லி சுஜி அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டாள்.

ஒருவழியாக மாலை 6 மணி வாக்கில் சதீஷிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. அவன் சொன்னது போலவே அந்தப் பார்க்கின் அருகில் சுஜினிக்காக காத்திருந்தான். இன்னதுதான் பேசுகிறோம் என்று இல்லாமல் அன்றைய ஒருவாரத்தின் நிகழ்வுகளை இருவரும் பகிர்ந்து கொண்டனர். சதீஷுடன் பேசுவது வழக்கம் போல் சுஜிக்கு இயல்பாகவே இருந்தது.

சதீஷ் எதார்த்தமாக, “என்ன இப்பல்லாம் விவேக்கிட்ட ரொம்ப ஹாப்பியா பேசுற போல. அவன் ரொம்ப சந்தோஷப்பட்டான். இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் தெரிஞ்சுக்கலாமா?” என விளையாட்டாக வினவினான்.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

அவன் வார்த்தையில் நக்கல் கலந்திருந்தாலும் அவனது செவிகள் சுஜியின் பதிலுக்காக மிகவும் ஆர்வமாக காத்திருந்தன. “அப்படியெல்லாம் எதுவுமில்லை.. சும்மா உர்ர்ர்னு மூஞ்சி வச்சிருக்க ஒராங்குட்டான் உன்கிட்டே இவ்வளவு நல்லா பேசுற நான்,.”

“அவ்வளவு ஜென்டில்மேனாக நடந்துக்கற விவேக் கிட்ட கொஞ்சமாச்சும் பேசணுமே அப்படிங்கற ஒரு நல்ல எண்ணம் மட்டும்தான்” எனது தோளை குலுக்கி கொண்டு பதிலளித்தாள். “வேற என்ன சொன்னான் உன் ஃப்ரெண்ட்” என சுஜி இம்முறை ஆர்வமாக வினவினாள்.

“அதுவா.. நீ வந்து அவன் அம்மாவை பத்தி பெருமையா சொன்னயாம். அவங்க ரொம்ப கிரேட் லேடி அப்படின்னு சொன்னியாம். அவனுக்கு அது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சுன்னு சொன்னான்.” என்றான் சதீஷ்.

சதீஷின் குரலில் சற்றே அலட்சியம் எட்டிப் பார்த்திருந்தது. உடன் நடந்து கொண்டிருந்த சுஜினிக்கு சதீஷின் குரல் மாற்றம் புரிய, சதீஷை மேலும் சீண்ட வேண்டும் என்று தோன்றியது.

“அவளோ மட்டும் தான் சொன்னானா?” என்றாள் கண்களை அகலவிரித்த வண்ணம். “வேற என்ன சொல்லணும்.. அவளோ தான் சொன்னான்.”

“ஓ” என்று சற்றே முகத்தில் வாட்டம் காட்டியவள், “இல்ல இப்ப எப்படி நானும் நீயும் ஒரு டர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் சொல்லி…நான் உன்ன லவ் பண்ணல.. நீயும் என்னை லவ் பண்ணல… எந்த கமிட்மெண்ட்ஸ் உம் இல்லாம நாம கேஷுவலா பழகுகிறோம்னு பேசிகிட்டோம்..”

“ஆமா அதுக்கென்ன இப்போ?” என்றான் சற்றே காட்டமாக சதீஷ்.

“இதே மாதிரி விவேக்கிட்டையும் பேசலாமான்னு ஒரு நிமிஷம் யோசிச்சேன்..” என தலையை சற்றே சாய்த்தவாக்கில் சுஜி மொழிய சதீஷிற்கு திக்கென்று ஆகிப்போனது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!