Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 15 2

அதை வீடு என்று சொல்ல முடியாது. ஓட்டலின் அந்தஸ்த்து இங்கும் காணப்பட்டது. வீட்டின் வெளியில்  அணிவகுத்து நின்ற காரின் எண்ணிகைகளை பார்த்து அனைவரும் இருக்கிறார்கள் என்று நினைத்து தான் வீட்டின்னுள் சென்றனர்.

ஆனால்  தங்களை பார்த்ததும் வீட்டின்  வேலையாள் அரக்க பறக்க…ஒடி வந்து… “வீட்டில் யாரும் இல்லை.” என்று சொல்லிக் கொண்டே அவர் கண்கள் மேல் தளம் நோக்கி பாய்வதை பார்த்து…

“சரி அவங்க இல்ல தான். நீங்க சொன்னதை நான் நம்பிட்டேன்.” என்று சொன்ன மணிமேகலை…

தொடர்ந்து… “ அவங்க கிட்ட இனி அவங்க ஓடி ஒளிய வேண்டாம். நான் அடுத்த வாரம் இந்தியா போறேன் என்று மட்டும் உங்க முதலாளிங்க கிட்ட சொல்லிடுங்க.” என்று  தைரியமாக சொல்லி விட்டே சோனாலியின் கைய் பற்றி இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு போனாள்.



Advertisement

மணிமேகலைக்கு வீட்டுக்குள் இருந்த தைரியம் வெளியில் வந்ததும் ஆட்டம் கண்டு விட்டது…

“எனக்கு ரொம்ப  அவமானமா இருக்கு சோனா..இப்படி நான் போய் கல்யாணம் செய்துக்கலாமுன்னு கேட்டு அவங்க என்னை பாத்து ஓடி ஒளிவது…நான் என்ன மாதிரி பொண்ணுன்னு அவங்க நினச்சி இருப்பாங்க…

எங்க ஊரில் தான் அவமானப்பட்டு இருந்தேன். இங்கு வந்து படிச்சி வேலைக்கு போய் நல்லா  சம்பாதிக்கனும். எங்க  அப்பா அம்மாவை  என் கூட கூட்டிக்கனும். இனியாவது அவங்க மரியாதையோடு வாழனுமுன்னு நினச்சேன்.

Advertisement

ஆனா இப்போ நானே மரியாதை  கெட்டு இந்த நாட்டை விட்டு போக போறேன். நான் எதை நினச்சி  மேல் படிப்பு படிக்க ஆசைப்பட்டனோ…அது நிறைவேறாமலேயே போக போகுது.” என்று சொல்லிக் கொண்டு வந்தவளுக்கு… என்ன கட்டுப்படுத்தியும் அழுகையை அடக்கமுடியாது ,   தாங்கள் வெளியில்  இருக்கிறோம் என்பதை கூட  மறந்தவளாய் கதறி அழுது விட்டாள்.

Advertisement

சோனாலி பதறி போய்… “மணி இங்கு பாரு அழாதே… அழாதேடி.. நாம வெளியில் இருக்கோம் என்று சொல்லியும்…” மணியின் அழுகை நிற்க்காது போக..

அங்கு வந்த டேக்சியில் அவளை ஏற்றியவளாய் தங்கள் இருப்பிடத்திற்க்கு வந்த பிறகு தான், சோனாலிக்கு கொஞ்சம் நிம்மதி ஏற்ப்பட்டது.

அதே போல் அழுதுக் கொண்டு இருந்த மணிமேகலை ஒரு நிலைக்கு மேல் இனி ஒன்றும் இல்லை போய் அவள் உடல் சோர்வு ஏற்பட…கண்ணை மூடியவளுக்கு தூக்கம் தன்னால் வந்தது.

Advertisement

இங்கு ஜான் விக்டர் வீட்டில் மலர் விழி மணி சென்ற உடன் ஓடி கீழ் தளத்திற்க்கு வந்தவர், மணி சோர்ந்து போய் தங்கள் வீட்டில் இருந்து செல்வதை பார்த்து…

 

[the_ad id=”6605″]

 

 

 

‘கடவுளே…நான் என்ன பாவம் செய்தேன்…? காதல் மணம் புரிந்து என் வீட்டுக்கு போன போது அவர்கள் என்னை ஏற்காது விரட்டி விட்டனர்.  அதே காதலால் என் ரத்த சொந்தம் என்னை தேடி என் வீடு வந்த போதும் அவளை வெளியேற்றும் நிலையில் வைத்து விட்டாயே…நான் செய்த காதல் என்ன அவ்வளவு பெரிய பாவச்செயலா…?’

நினைக்க நினைக்க மனது ஆறவில்லை. ‘இனி நான் என் தாய் வீடோடு சேரவே முடியாதா…’ என்று மனது வெதும்பி இருக்க…தன் தோள் மீது விழுந்த கை பரிசத்தில் நிமிர்ந்து தன் கனவனை பார்த்த மலர் விழி..

“என்னால முடியலேங்க…முடியல…நான் என்ன பாவம் செய்தேன்.மணி இந்த வீட்டுக்கு மகளா உரிமையுடம் வர வேண்டிய பெண்…ஆனால் இப்படி ஆயிடுச்சே…?” என்று தன் கணவனின் மார்பில் சாய்ந்து கதறி அழுத்தாள்.

வில்சன் விக்டர்  மலர் விழியின் தலையை தடவி விட்டாரே தவிர … அழாதே என்று சொல்லவில்லை. சொன்னால் நிறுத்தும் கண்ணீரும் அல்ல மலர் விழியின் கண்ணீர்.

அப்போது அந்த இடத்திற்க்கு வந்த ஜான் விக்டர்… “சாரிம்மா…சாரி டாட் என்னாலே தானே இவ்வளவும். நான் மணியை பார்த்ததும், அம்மாவை பார்ப்பது போல இருக்குன்னு சொன்னேன். அவ அம்மாவோட ரத்தமுன்னு தெரியாம…நீங்களும் அம்மாவும் வாழும் வாழ்வை அவளை…க…”

மணியோடு கல்யாணம் என்ற வார்த்தையை கூட அவனால் சொல்ல முடியவில்லை. என் ரத்த சொந்தத்தை திருமணம் செய்ய நினைத்தேனே…நான் என்ன மாதிரியான ஜென்மம் அதை நினைக்க நினைக்க அவன் கண்கள் சிவந்து போனது.

அதை பார்த்த மலர் விழி தன் துக்கத்தை மறந்தவராய்… “ஜான் அதெல்லாம் ஒன்னும் இல்லேப்பா…உன் மேல எந்த தப்பும் இல்ல. நான் என்னுடைய உறவை சொல்லாம வளர்த்தது என் தப்பு தான்.

நீ எந்த தப்பும் செய்யல…நீ எந்த தப்பும் செய்யல…” என்று மலர் விழி மீண்டும்  மீண்டும் நீ தப்பு செய்யல என்ற வார்த்தையை ஜானின் மனதில் பதிய வைக்க முயன்றார்.

அன்று  மருத்துவமனையில்  ஜான் விக்டர் கத்தி கலாட்டா செய்த பின், தூக்கம் வர மருந்து ஏற்றி விட்ட பின் மீண்டும் கண் முழித்தவன் பிதற்றியது…

“நான் மோசமானவன். நான் எல்லாம் என்ன ஜென்மம்…? சொந்த தங்கையையே… “அடுத்து அந்த வார்த்தை சொல்ல கூட முடியாது அவன் கண்கள்  சிவந்து போவதை பார்த்து மீண்டும் அவன் மயங்க மருந்தை கொடுத்த மருத்துவர்…

வில்சன் விக்டரை பார்த்து… “இவர் என்ன பேசுறார் என்று தெரிஞ்சா தான் என்னால அவருக்கு ட்ரிட்மெண்ட் கொடுக்க முடியும். அவர் ஏதோ குற்றவுணர்ச்சியில் இருக்கிறார். அவர் அதே மன நிலையில் இருப்பது தவறு.

இந்த குற்றவுணர்ச்சி  அவர் மனதில் பதிந்து போனால், பின் அவரை நார்மல் ஆக்குவதில் பிரச்சனை ஏற்படும். இதை தவிர்க்க இந்த குற்றவுணர்ச்சி எதனால் வந்தது என்று எனக்கு தெரியனும். உங்க முகத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரியுமுன்னு தெரியுது. அதை சொன்னால் தான் என்னால் மருத்துவம் பார்க்க முடியும்.” என்று மருத்துவர் சொன்னதும்..

வில்சன் விக்டர் தன் மகனை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும்  அனைத்தையும்  சொன்னதும்…

அனைத்தையும் பொறுமையாக கேட்ட மருத்துவர்… “இது  அவருக்கு ரொம்ப ரொம்ப இக்கட்டான சூழ்நிலை. தான் ஆசைப்பட்ட  பெண் தன் தங்கை முறை. இது எந்த ஒரு ஆண் மகனுக்கும் வரக்கூடாது. ஆனால் வந்துடுச்சி..இப்போ நீங்க அதுல இருந்து வெளியே வரப் பாக்கனும். அதுவும் உங்க மகன் மனது பாதிக்காது. அது தான் ரொம்ப ரொம்ப முக்கியம்.” என்று சொன்னவர்.

பின்… “ நீங்க சொன்னதை வெச்சி பார்த்தா உங்க மனைவி அவங்க பிறந்த வீட்டோட தொடர்பு இல்லைன்னு தெரியுது. இனியும் அப்படியே இருப்பது தான் உங்க மகனின் மன நிலைக்கு நல்லது. ஏன்னா அவங்க உறவு  முறை தொடர்வது உங்க மகன் மனநிலைக்கு ஆபத்தாய் முடியும்.” என்று ஜானின் மனநிலையை தெள்ளி தெளிவாக விளக்கி விட்டு அந்த மருத்துவர் சென்று விட்டார்.

ஆனால்  ஜான் விக்டர் கண் விழித்து மலர் விழியை பார்த்து   கேட்ட முதல் கேள்வி…  “உங்க அம்மா வீட்டை பத்தி சொல்லுங்க.” என்பதே…

மலர் விழி என்ன சொல்வது…? இப்போது தான் தன் தாய் வீட்டின் தொடர்பு இவனின் மனநிலையை பாதிக்கும் என்று  சொல்லி விட்டு சென்றார். இப்போது இவன் கேட்பதற்க்கு என்ன பதில் சொல்வது என்று மலர் விழி யோசிக்கும் வேளயில்…

ஜான் விக்டர் கண் விழித்ததும் சொல் என்று சொன்ன செவிலியரின் அழைப்பில் அங்கு வந்த அந்த மருத்துவர்…ஜான் விக்டரின் கேள்விக்கு பதில் சொல்லுங்க..

சொல்லாமல் போனால் என்ன என்று அவர்  மனது அதிலேயே நிலைத்து விடும். அதுவும் அவன் மனநிலையை பாதிக்கும். அதனால் சொல்லுங்க..ஆனால் அதை அவனுக்கு திரும்ப திரும்ப சொல்லும்படி இல்லாமல்…அனைத்தையும் தெளிவா சொல்லிடுங்க…ஆனா எந்த காரணத்திற்க்காகவும் அந்த பெண்ணை ஜான் பார்க்க கூடாது.” என்று சொல்லி விட்டு ஜான் விக்டரின் உடல் நிலையை   திரும்பவும் பரிசோதித்து விட்டு…

“நீங்க வீட்டுக்கு போகலாம். அவர் உடல் நிலைக்கு எந்த பிரச்சனையும் இல்ல. மனநிலையை  கெடாது பார்த்துக்க வேண்டியது உங்க கையில தான் இருக்கு.”  என்று சொல்லி விட்டு அவர் கடமை முடிந்து விட்டது என்பது போல் கிளம்பி விட்டார்.

இனி தங்கள்  நடத்தையில் தான் தன் மகனின் எதிர் காலம் என்பது போல்  வில்சன் விக்டர் மலர் விழி இருவரும் ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

அதன் முதல் படி தான் மணிமேகலையின் அழைப்பை ஏற்காது இருந்தனர். அடுத்து மணிமேகலையை தாங்கள் பார்க்க கூடாது. தங்களை  அவள் முழுவதும் மறந்து விடுவதோடு தங்களை நினைத்தும் பார்க்க கூடாது.

அது மணிமேகலையின் வாழ்க்கையை பாதிக்கும் என்று நினைத்து தான் வில்சன் விக்டர் அவரின் செல்வாக்கை பயன் படுத்தி  அவள் பயிற்ச்சி பெற்ற   நிறுவனத்தில் அவள் பயிற்ச்சில் தேர்வு பெறவில்லை என்று சான்றிதழ் வழங்கியதோடு…

மணிமேகலைக்கு  அங்கு வேலை கிடைக்காது இருக்க என்ன என்ன செய்ய  வேண்டுமோ அனைத்தும் செய்து முடித்திருந்தார்.   இதை வில்சன் விக்டர் செய்து முடிக்க காரணம் தன் மகனின் மனநிலை மட்டும் கருத்தில் கொள்ளாது மணிமேகலையின்  வாழ்க்கையையும் மனதில் கொண்டே இதை அனைத்தையும் செய்தார்.

ஏற்கனவே மணிமேகலையின் வீட்டில் அவள் திருமணத்திற்க்கு ஏற்பாடு செய்திருப்பது அவருக்கு தெரியும். அந்த திருமணம் நடப்பது  தான் மணிமேகலைகு நல்லது என்று அவர் கருதினார்.

இந்த ஊரிலேயே அவள் தொடர்ந்து இருந்தால், தன்  மகன் எதை மறக்க வேண்டுமோ அதை மறக்க விடாது, அவளை   நியாகப்படுத்தும் படி ஆகிவிடும்.

 

[the_ad id=”6605″]

 

 

 

அதே போல்  மணிமேகலை இங்கு இருந்தால், ஜானோடான உறவு முறை அவளுக்கு தெரிய நேர்ந்தால்  ஜானோட நிலை தான் அவளுக்கும். ஜானுக்காவது அவனின்  இந்த குற்றவுணர்வில் இருந்து வெளியில் கொண்டு வர  நாங்கள் இருக்கிறோம்.

ஆனால் மணிமேகலைக்கு வீட்டில் இவர்களை பற்றி தெரியாத போது.. வெளிநாட்டில்  உறவுகள் கூட இல்லாத போது…யாரின் ஆதாரவும் இல்லாது இங்கு இருந்தால் அவளின் மனநிலை என்ன ஆகும்.

அதை நினைத்து தான் வில்சன்  விக்டர் அனைத்தையும் செய்து முடித்தார். கூடவே அவளை தாங்கள் தவிர்த்தால்…தங்கள் மீது அவளுக்கு கோபம்  ஏற்படும். தங்கள் மீது இருக்கும் கோபத்திலும், தொடர்ந்து  வேலை இல்லாது இங்கு இருக்க முடியாத காரணத்தால் மணிமேகலை இந்தியாவுக்கு சென்று  தான் ஆக வேண்டும்.

அங்கு சென்றால் அவள் திருமணம் அவளின் பெற்றோர்களின் எண்ணப்படி நல்ல முறையில் நடைப்பெறலாம். மனிமேகலைக்கு அந்த புதுவாழ்வு அவளின் மனநிலையை  மாற்றலாம் என்று நினைத்து தான் அனைத்தும் செய்தார்.

வில்சன் விக்டர்  எண்ணப்படி தான் அனைத்தும் நடந்து முடிந்தது.  ஆனால் அவர் நினைத்து பார்க்காதது,   மணிமேகலை  ஏற்கும் அந்த வாழ்க்கையே அவளை குற்றவுணர்ச்சியில் தள்ள காத்திருப்பது, அவருக்கு  தெரியாது போய் விட்டது.

வில்சன் விக்டர் மகனிடமும் மருத்துவர் ஆலோசனைப்படி அனைத்தையும் சொல்ல நினைத்தவர் மகனிடம்…

“முப்பது வருடம் முன் என் மனைவி இந்தியாவில் இருந்து இரண்டு வருட ஒப்பந்தத்தில் என் ஓட்டலுக்கு சமையல் வேலைக்கு வரவழைக்க பட்டாள்.

எனக்கு பார்த்ததும் பிடிச்சிடுச்சி…கல்யாணமும் செய்து கொண்டோம். திருமணம் முடிஞ்சி ஆறு மாசம் கழித்து என் மனைவியை அவள் அம்மா  வீட்டுக்கு அழச்சிட்டு போனேன்.

மலர் விழிக்கு கூட பிறந்தவங்க இவளோட சேர்த்து  ஐந்து  பெண்கள். இவ இரண்டாவது இவளுக்கு மூத்தவ அக்கா பேர் கயல் விழி…அடுத்து இது போல் விழின்னு பெயர் வெச்சி தான் பேர் இருக்கும்.

எங்க கல்யாணம் அவங்களுக்கு முன்னவே தெரிஞ்சி தான் இருந்தது. எங்கல பார்த்தும் அவங்க அப்பா ரொம்ப சத்தம் போட்டு எங்கல வீட்டிக்குள்ள சேர்த்துக்கவே இல்ல.

ரொம்ப சத்தம் போட்டு என்னை  பொறுத்தவரை நீ செத்துட்ட..அப்படி இப்படின்னு ரொம்ப பேசினார். நான் அது வரை அது போல பேச்சை எல்லாம்  கேட்டது கூட இல்லேன்னு சொல்லலாம். நான் அவ்வளவு பொறுமையா இருக்க காரணம் என் மனைவி.

அவ என்னை கல்யாணம் பண்ண அவ்வளவு யோசிச்சா..எனக்கு முன்ன அக்கா இருக்கா…எங்க அப்பாவுக்கு ஐந்து பெண்ணுங்க. வீட்டு கஷ்டத்துக்காக தான் நான் இங்கு வேலைக்கே வந்தேன்.

அக்கா இருக்க நான் கல்யாணம் செய்துக்க முடியாது. அதோட வீட்டு கஷ்ட நிலையில் இருக்கும் போது, நான் என்னை மட்டும் பார்த்துட்டு  சுயநலமா இருக்க முடியாதுன்னு எவ்வளவோ சொல்லி மறுத்தா…

நான் தான்  என்னை கல்யாணம் செய்தா உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இன்னும் கேட்டா நல்லது தான் நடக்கும். உங்க அக்கா தங்கையின் எதிர் காலத்தை நான் பாத்துக்குறேன் என்று வாக்கு கொடுத்து தான் உங்க அம்மாவை நான் கல்யாணம் செய்தேன்.

ஆனா நான் கொடுத்த வாக்கை என்னால காப்பத்த முடியல. அந்த ஆறுமாசத்துல மலரோட அப்பா  நான்கு பெண்களையும்  கல்யாணம் கொடுத்து இருப்பாருன்னு நான் நினச்சி கூட பாக்கல.

உங்க அம்மா சொல்வா எங்க வீட்டிலே நான் தான் சுமாரா இருப்பேன் மத்த நான்கு பேரும் அவ்வளவு அழகுன்னு. அழகா இருக்க உங்க அம்மாவ அவ  வீட்டில் சுமாருன்னா அப்போ அந்த நான்கு பெண்களின் அழகு எப்படின்னு  நீயே  நினச்சி பார்.

அப்படி பட்ட பெண்களுக்கு…  மலரோட அக்காவுக்கு வாய் பேச முடியாதவரை கல்யாணம் செய்து கொடுத்து விட்டார்  மலரோட அப்பா..

மத்த பெண்களுக்கு கூட அப்படி தான். ஒருவருக்கு இரண்டாம் தாரம். இப்படி அந்த ஆறுமாசத்துல அவசர அவசரமா கட்டி கொடுத்துட்டார். காரணம் உங்க அம்மா போல மத்த பெண்களும் அவங்க விருப்பத்துக்கு கல்யாணம் செய்து போயிட போறாங்கன்னு…இது எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம்…

 

[the_ad id=”6605″]

 

 

 

என்னால தான் எங்க சகோதரி வாழ்க்கை இப்படி ஆயிடுச்சின்னு இங்கு வந்த பிறகும் பேசிட்டே இருந்தா…அதில் இருந்து அவளை வெளியில் கொண்டு வரத்தான் நான் எப்போவும் வேறு எதை பத்தியும் யோசிக்க விடாது…என்னை பத்தி மட்டும் யோசிக்க பழக்க படுத்தினேன். இது சுயநலம் தான். ஆனால் எனக்கு  வேறு வழி  தெரியல.

முதல்ல மணிமேகலை அவ ஊரு பத்தி சொன்னது அவ அப்பா பத்தி சொன்னத  கேட்டு உடனே அவ அம்மா  பெயரை உங்க அம்மா கேட்டா…ஆனா அவ சொன்ன வரலட்சுமி  பேரை கேட்டு தான் அவளுக்கு கொஞ்சம் ஆசுவாசம் ஆச்சி…ஆனா அவங்க பெயரை மாத்திட்டு இருப்பாங்கன்னு நாங்க நினச்சிகூட  பாக்கல.” என்று அனைத்தையும் சொல்லி முடித்த வில்சன் விக்டர்.

“இது தான் கடைசி இனி மணியோட சம்மந்த பட்டது எதுவும் உன் வாயில் இருந்து வரக்கூடாது. புரியுதா..இனி அதை பத்தி பேசக்கூடாது.” என்று ஜான் விக்டரிடம் வாக்குறுதியும் வாங்கிக் கொண்டார்.

வில்சன் விக்டரின் திட்டப்படி இந்தியா வந்த மணிமேகலையின்  திருமணம் நடக்குமா…?

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!