Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 15 1

அத்தியாயம்….15

“பயப்படும் படி ஒன்னும் இல்ல. அதிர்ச்சியில தான் மயங்கி விழுந்து இருக்காங்க. “ என்று சொல்லி விட்டு அந்த மருத்துவர் சென்று விட்டார். அந்த மருத்துவர் சொன்னதை  கேட்ட பின்னும் வில்சன் விக்டரின்   பயம் போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

“டாட் அது தான் டாக்டர் ஜஸ்ட் அதிர்ச்சின்னு சொல்லிடாரே இன்னும் ஏன் டாட் டென்ஷனா இருக்கிங்க…ஒன்னும் இல்ல அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது.” என்று  தந்தைக்கு தைரியம் சொன்ன ஜான் விக்டர், அன்னை இருக்கும் அறைக்கு அழைத்து சென்றான்.

படுக்கையில் படுத்துக் கொண்டு இருந்த மலர்விழியை பார்த்ததும்  வில்சனுக்கு என்னவோ போல் ஆனது. திருமணம் முடிந்து இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட நோய் நொடி என்று அவள் படுத்து அவர் பார்த்தது கிடையாது.



Advertisement

வீட்டில் அத்தனை வேலையாள் இருந்தும் சமைப்பது, சாப்பாடு பரிமாறுவதை மலர்விழி தான் பார்த்துக் கொள்வார். எத்தனையோ முறை வில்சன் கேட்டு இருக்கிறார்…

“இதை எல்லாம் வேலையாள் பார்த்துக்க மாட்டாங்கலா..?நீ ஏன் உன்னை சிரமப்படுத்திக்கிற என்று…”

அவர்கள் எல்லாம் நீங்க கொடுக்கும்  பணத்திற்க்கு சமைக்கிறவங்க..அவங்க சமையல் நல்லா இருக்கனும் என்று எண்ணை அதிகமாக நெய் தூக்கலாக மசாலா..வாரி கொட்டியும் சமைப்பாங்க…

Advertisement

ஆனா நான் சமைக்கும் போது உங்க ஆரோக்கியமும், மகன் ஆரோக்கியமும் நினச்சி எது எவ்வளவு  போடனும்… என்று பார்த்து பார்த்து போடுவேன். அதே போல் தான் உங்களுக்கும் ஜானுக்கு  என்ன பிடிக்கும்…எது பிடிக்காதுன்னு எனக்கு தான் தெரியும்.

Advertisement

பிடிச்சது அதிகமாவும் பிடிக்காததை கம்மியாவும் வைப்பேன். இது எல்லாம் வேலையாள் பார்த்து செய்வாங்களா….?” என்ற மனைவியின் பேச்சில்…வாயை பொத்திய வில்சன் விக்டர்.

“சமையல் சாம்ராஜ்ஜியத்தை நீயே வெச்சிக்க மலர் அதை  யார் கிட்டேயும்  கொடுத்துடாதே…” என்று சரண்டர் ஆகிவிடுவார்.

அப்போதும் மலர் விழி விடாது… “கொடுப்பேன். என் மருமக கிட்ட கொடுப்பேன்.” என்று சொல்லும் மனைவியிடம்…

Advertisement

“இந்த காலத்து  பெண்ணுங்க கிட்ட நீ இதை எல்லாம் எதிர் பார்க்காதே மலர். அப்புறம் உனக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும்.” என்று அவர் தன் மனைவி பின் ஏமாந்து போக கூடாதே என்று நிதர்சனத்தை சொல்வார்.

 

[the_ad id=”6605″]

 

 

 

அதற்க்கும் மலர் விழி… “எனக்கு மருமகளா வரவ..எங்க ஊரு பொண்ணா இருந்தா நல்லா இருக்கும். அவங்க எல்லாம் எடுத்து செய்வாங்க.”

பாவம் காலம் மாற்றம் தெரியாது மலர் விழி பேசிக் கொண்டு இருக்க…வில்சன் விக்டர் நிதர்சனம் என்று வரும் போது புரியட்டும் என்று அப்போதைக்கு அந்த பேச்சை விட்டு விட்டார்.

இன்று அவள் ஆசைப்படி மகனின் திருமணம் அவள் ஊரை சேர்ந்த பெண்ணோடு நடைபெற உள்ள போது…இப்படி அதிர்ச்சியாகியது. அதுவும் மணிமேகலையின் பேசியை பார்த்து தான் ஏதோ அதிர்ச்சி. இதை மலர் விழியின் பக்கத்தில் வில்சன் நின்றுக் கொண்டு இருந்ததில் இருந்து அவர் அறிந்தது.

இப்படி அதிர்ச்சியாகி விழும் அளவுக்கு அந்த பேசியில் என்ன…? என்று வில்சன் விக்டர் யோசனையில் ஆழும் வேளயில்…

மலர் விழி மெல்ல கண் திறந்தார். கண் திறந்த மலர் விழி இருப்பக்கமும் தன் மகன், கணவன் நின்றுக் கொண்டு இருப்பதை பார்த்து இருகையையும் அவர்களை நோக்கி நீட்ட… இருவரும் அதை பற்றிக் கொண்டனர்.

ஜான் விக்டர்… “அம்மா ஒன்னும் இல்ல. பயப்படாதிங்க.” மலர்விழியின் கையில் உள்ள நடுக்கத்தை உணர்ந்தவனாய் சொன்னான். ஆனால் வில்சன் விக்டர் எதுவும் கூறாது தன் மனையின் முகத்தையே பார்த்திருந்தார்.

சிறு விசயத்திற்க்கு எல்லாம் தன் மனைவி விழும் அளவுக்கு அதிர்ச்சியாக மாட்டாள். அவரின் இத்தனை வருட  திருமணவாழ்க்கையில் இருந்தும்…அந்த வயதிலேயே ஒரு சிறு கிராமத்தில் பிறந்து, அந்த அளவுக்கு படிக்காத போதே…தன் குடும்ப சூழ்நிலைக்காக  நாடு விட்டு நாடு வந்தவள். அந்த அளவுக்கு தைரியமானவள் இப்படி அதிர்ச்சியாகி இருக்கிறாள் என்றால் ஏதோ இருக்கு…என்று நினைத்துக் கொண்டே எதுவும் பேசாது அமைதியாக..மனைவியின் கையை அழுத்தி பிடித்த வாறு நின்றுக் கொண்டு இருந்தார்.

அவர் நினைத்தது போல் தான் மலர் விழி  தன் மகனை பார்த்து… “ஜான் இந்த கல்யாணம் நடக்காது.” என்று சொல்லி விட்டு அவர் கண்ணை மூடிக் கொண்டார். மூடிய கண்ணோரத்தில்  வழிந்த கண்ணீர் அவரின் துக்கத்தை எடுத்துரைத்தது.

வில்சன் எதுவும் பேசாது தன் மனைவியின் கண்ணீரை திடைத்தார். ஆனால் ஜான் விக்டர்… “அம்மா நீங்க ராசிய பாக்குறிங்களா…? இந்த அதிர்ஷ்ட்டம் துரதிஷ்ட்டம்…இப்போவும் நீங்க நம்புறது எனக்கு ஆச்சரியமா இருக்கும்மா…அதுவும் இந்த நாட்டில் இருந்துக் கொண்டு.” என்று சொல்லிக் கொண்டு வந்த ஜான் விக்டர் அன்னை கண்ணை திறந்து தன்னை பார்த்த பார்வையில், அடுத்து பேசாது வாய் மூடிக் கொண்டாலும், பார்வையில் தன் எதிர்ப்பை  தன் அன்னையிடம் காட்டினான்.

“இந்த காலம்…எந்த காலம் ஆனாலும்…இந்த நாடு எந்த நாடு ஆனாலும்…தங்கையை கல்யாணம் செய்துக்க முடியாது ஜான்.” என்ற மலர்விழியின் பேச்சில்…தந்தை மகன் இருவரும் அதிர்ச்சியாகி ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

வில்சன் விக்டருக்காவது….ஏதோ இப்படி இருக்குமா…?என்ற சந்தேகத்துடன் தன் மனைவியை பார்த்தார்.ஆனால்  ஜான் விக்டருக்கோ எப்படி அவள் என் தங்கையாவள் என்று குழம்பி போனவனாய் தன் தந்தையை பார்த்தான்.

மகனின் பார்வையும்…அதில் தெரிந்த குழப்பத்தையும் பார்த்து…தந்தையிடம் ஏதாவது ஏடா கூடமாக பேசி விட போகிறான் என்று…

“மணி என் அக்காவோட மகள்.” என்று பேச்சை  நீடிக்காது சொல்ல வேண்டியதை சொல்லி விட்டார் மலர் விழி.

வில்சன் விக்டர்… “உங்க அக்கா பேரு கயல் விழின்னு தானே சொல்வீங்க…” என்று தன் சந்தேகத்தை கேட்டார்.

“ஆமா எங்க அக்கா பேரு கயல் விழி தான்.” என்று மலர் விழி சொன்னதும்…

ஜான்  வில்சன் அவரசமா… “மணி அம்மா பேரு வரலட்சுமி…நீங்க யாரையோ நினச்சி பேசிட்டு இருக்கிங்கமா..கொஞ்ச நேரத்துல எனக்கு எப்படியோ ஆயிடுச்சி…மணியே நான் கல்யாணம் செய்துக்குறனோ இல்லையோ..

.ஆனா ஒரு தங்கை உறவு முறை உள்ள பெண்ணை கல்யாணம் செய்துக்க  பார்த்தேன் என்று நினைச்சாலே…சீ…சீ…போம்மா நான் ரொம்ப பயந்துட்டேன்.நீங்க  சொன்னதை பார்த்து.” என்று சொல்லிக் கொண்டே அங்கு இருந்த இருக்கையில் ஆசுவாசமாய் அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டான்.

 

[the_ad id=”6605″]

 

 

மலர் விழி சொன்ன கல்யாணம் நடக்காது என்ற வார்த்தையில்  ஜான் விக்டருக்கு கோபம் வந்தது தான். அந்த கோபம் கூட கல்யாண புடவை எடுக்க சென்ற இட்த்தில் இப்படி ஆகி விட்டதே என்று  மேகலையின் ராசியை நினைத்து கல்யாணம் செய்துக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று நினைத்து தான் தன் அன்னை மீது கோபம் கொண்டான்.

ஆனால் அடுத்து மலர் விழி சொன்ன அவள் உன் தங்கை என்ற வார்த்தையில் எந்த முறையில் அவள் எனக்கு தங்கையாகிறாள் என்று நினைத்தை விட…தங்கையை கல்யாணம் செய்ய நினைத்தது நினைத்து தான் அவன் வெட்கி போனான்.

ஆனால்  மேகலையின் அம்மா பெயரை அம்மா மாற்றி சொல்லவும் தான் ஜான் விக்டருக்கு அப்பாடி நான் உறவு முறை கெட்டு நடக்கவில்லை என்று  நினைத்து அவன் மனம் ஆசுவாசம் ஆனது.

ஆனால் அந்த ஆசுவாசம்  ஜான் விக்டருக்கு கொஞ்ச நேரம் கூட கிட்டவில்லை. “மன்னிச்சிக்க ஜான் உன்னுடைய இந்த நிம்மதியை கெடுப்பதற்க்கு.” என்று சொன்ன மலர் விழி…

தன் கணவனின் கையில்  அழுத்ததை கூட்டியவர் தன் மகனை பார்த்து… “மணி அம்மா என் அக்கா தான். உடன் பிறந்த சகோதரியின் முகம் எனக்கு மறக்காது ஜான். சரி முகம் சாயல்  ஒருவர் போல் ஒருவர் இருப்பர். ஆனால் அந்த  நெற்றி ஓரத்தில் ஒரு சிறு தழும்பு இருக்கும். அதே போல் அவர்கள் வலது கையில் ஆறுவிரல் இருக்கும்… இது இரண்டையும் மணியின் அம்மா புகைப்படத்தில் பார்த்தேன் ஜான்.”

அப்புகைப்படத்தை ஜான் கூட பார்த்து இருக்கிறான். அந்த புகைப்படத்தில்  மணிமேகலையின் அம்மா தன் முடியை ஒதுக்கி விடுவது போல் இருக்கும். அந்த புகைப்படத்தின்  அப்பட்ட தன்மையை பார்த்து தான் ஜான் விக்டர் மணிமேகலையிடம்..

“உங்க அம்மா ரொம்ப அழகா இருக்காங்க..” என்று சொல்லி விட்டு .அந்த ஆறுவிரலையும்  சுட்டிக் காட்டி கூட அப்போது ஏதோ ஜான் விக்டர் சொன்னதாக நியாபகம்.

ஆனால்  தன் அன்னை சொன்ன அடையாளங்கள்..உருவம் ஒத்து போகும் ஆனால்  அம்மா சொன்னது போல்…அந்த நெற்றி தழும்பு கூட ஏதோ என்று விட்டு விடலாம்.  ஆனால் அந்த ஆறுவிரல்…

தன் இரு கையையும் தலை மேல் தாங்கி அப்படியே சோர்ந்து போய் விட்டான். என்ன இது..?எப்படி…?என்று ஜான் யோசிக்க யோசிக்க அவன் தலையில் யாரோ அடிப்பது போல் விண் விண் என்று வலி எடுக்க ஆராம்பித்ததும்…

அதன் பாரம் தாளாது… “ஆ…ஆ…” என்று கத்தியவன் அங்கு இருக்கும் பொருட்களை தூக்கி போட்டுக் கொண்டு இருந்தான்.

மலர் விழியும், வில்சன் விக்டரும்,  தன் மகனின் செய்கையில் ஆடி போய் அதிர்ச்சியில்  அப்படியே நின்று விட்டனர்.

அறையில் கேட்ட சத்தத்தில்  செவிலியர்கள் இருவர் ஓடி வந்து பார்த்து,

அங்கு இருந்த எச்சரிக்கை மணியை அடித்து துணைக்கு இருவரையும் அழைத்து ஜானை ஒரு நிலையில் அமர வைக்க அங்கு இருந்தவர்களுக்கு போதும் போதும் என்று  ஆகி விட்டது.

பின் டாக்டர் வந்து ஜான் விக்டருக்கு  தூக்கம் வர ஒரு ஊசியை போட்டவர்…  வில்சன் விக்டரிடம்.. “தூங்கி எழுந்ததும் அடுத்து என்னன்னு பாக்கலாம். ஆனா இது போல எமோஷனல் அவர் உடம்புக்கு நல்லது இல்லை.” என்ற அவர் பேச்சில் அடுத்து என்ன என்பது போல் கணவன் மனைவி இருவரும்  ஜான் விக்டர் எழுவதற்க்காக காத்திருந்தனர்.

அதே போல் தான் கல்லூரி விடுதியில் இருக்கும் மணிமேகலையும் மாலில் ஆன்ட்டி விழுந்ததும் அங்கிள்  சொன்ன… “நேரம் ஆயிடுச்சி நீங்க உங்க  விடுதிக்கு போங்கமா.” என்ற  வில்சன் பேச்சில்…

“இல்ல அங்கிள் நானும் வர்றேன்னே…” காரை பார்க்கிங்கில் இருந்து எடுத்து வந்த ஜான் விக்டரை பார்த்துக் கொண்டே மணிமேகலை வில்சன் விக்டரிடம் சொன்னாள்.

அதற்க்கு ஜான் விக்டர்… “மேகலை டைமாயிடுச்சி..நீ போ நாங்க  அம்மாவை கூடிட்டு போகனும். நீ நேரம்  ஆக்காதே…” என்று  அவன் பட பட பேச்சில்…

அப்போது தான் தன்னால் ஆன்ட்டியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நேரம் ஆகிறது  என்று உணர்ந்தவளாய்…

“சரி.” என்று தலையாட்டினாள்.

மணிமேகலையின் கவலை படர்ந்த முகத்தை பார்த்து… “நான் எதுன்னாலும் உனக்கு கால் பண்றேன்மா…” என்று சொன்னவர்கள் இன்னும் அழைக்காததை பார்த்து…

“ஏன் இன்னும் கூப்பிடல…ஆன்ட்டிக்கு ஏதாவது பெரிய பிரச்சனையா…?” என்று பயந்தவள். அவர்கள் நேரம் சென்று  கூட அழைக்காததை பார்த்து,   சரி நாமே அழைக்கலாம் என்று முதலில் ஜான் விக்டருக்கு அழைத்தவள்…அந்த அழைப்பு ஏற்காமல் போக…பின் வில்சன் விக்டருக்கு அழைத்தாள்.

அந்த அழைப்பும் ஏற்காமல் இருக்க…அவளின் பயம் அதிகமாக… சோனாலியிடம்… “எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஆன்ட்டிக்கு ஏதாவது பெரிய பிரச்சனையோ…?” என்று பயந்த படி கேட்டாள்.

சோனாலியும் இருவரும் அழைப்பை ஏற்காததை பார்த்து மனதில் பயம் எழுந்தாலும் அதை மணியிடம் காட்டாது…

“சேச்சே சும்மா சும்மா பயப்படாதே மணி. பயப்படும் படி எல்லாம் ஒன்னும் இல்ல.” என்று மணிமேகலைக்கு ஆறுதல் கூரும் போதே, இருவரும் அழைக்காதது ஏன் என்று அவளுக்கு புரியவில்லை.

இப்படியே அந்த இரவு கழிந்தது. காலையில் சோனாலியே பயந்து போய் … “வா நாம ஆன்ட்டியை பார்த்துட்டு  வரலாம்.” என்று மணிமேகலையை அழைத்தாள்.

“எங்கே போய் பார்ப்பது…?” என்ற மணிமேகலையின் கேள்வியில்…அப்போது தான் சோனாலி ஆம் அவர்கள் எந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள் என்று  கூட என்று தெரியதே…என்று யோசித்தவள்..

பின்… “ வீட்டுக்கு போன் போடுடி…” என்று சொல்ல…

மணிமேகலை.. “ஆமாம்லே…” என்று தன்  கைய் பேசியில் பதித்து வைத்திருந்த ஜான் வீட்டில் அலைபேசிக்கு அழைத்தாள்.

அந்த பக்கம் அழைப்பு எடுக்கப்பட்டதும்.. . தான் என்ன  என்று கேட்கும் முன்னவே… “சாரும்  மேடமும் இன்னும் ஹாஸ்பிட்டலில் இருந்து வரல.” என்று ஏதோ சொல்லிக் கொடுத்தவன் ஒப்பிப்பது போல பேசினான் அந்த வேலையாள்.

“எந்த ஹாஸ்பிட்டலில் சேர்த்து இருக்காங்க…?” என்ற மணிமேகலையின் கேள்விக்கு, கொஞ்ச நேரம் அந்த பக்கத்தில் இருந்து பதில் இல்லை.

 

[the_ad id=”6605″]

 

 

பின்… “எனக்கு தெரியாது மேடம்…” என்ற சொல்லோடு அந்த பக்கம் அழைப்பு அணைத்து வைக்கப்பட்டு விட்டது.

இது மணிமேகலைக்கு ஏதோ ஒரு முரன்பாடாய் தோன்றியது. எப்போதும் தான் அவர்களிடம் ஒதுக்கம் காமிக்க…அவர்கள் தான் ஆசையோடு தன்னிடம் பேசுவர். ஜான் சார் அல்லாது அவர்கள் குடும்பமே தன்னிடம் பாசம் காண்பிக்க தான்..

தன் வீட்டில் தன்னை கேட்காது நடைபெறும் இந்த திருமணத்தை  நிறுத்தவும்…தான் இங்கு குடியேறவும் தான் ஜான் விக்டரை திருமணம் செய்ய சம்மதித்தது..

அதோடு ஜான் விக்டர் குடும்பத்திற்க்கும் தன்னை பிடித்து இருப்பதால். திருமணம் முடிந்து கொஞ்ச நாள் கழித்து தன் பெற்றோரையும் இங்கு அழைத்துக் கொள்ளலாம்…என்ற திட்டத்தோடும் தான் இந்த திருமண பேச்சையே இவளே ஆராம்பித்தது.

இப்போது அவர்களின் ஒதுக்கம்…ஏன்…? ஒரு சமயம் தன்னை தவறாய் நினைத்து விட்டார்களா…தானே வலிய சென்று திருமணம் செய்ய கேட்டதை நினைத்து தன் ஒழுக்கத்தை பற்றி….ஏதாவது…? என்று இப்படி அவளுக்குள்ளே யோசித்தவளுக்கு பதில் தான் கிடைத்த பாடில்லை.

இப்படியே ஒரு வாரம் சென்று விட்ட நிலையில் கூட ஜான் விக்டர்  வீட்டில் இருந்து அழைப்பு அவர்களுக்கு வராது போனது. திருமணத்திற்க்கு இன்னும் மூன்றே நாள் இருக்கும் வேளயில்…இன்னும் இத்திருமணம் நடக்கும் என்று  மணிமேகலை எதிர் பார்க்கவில்லை.

ஆனால் கரணம் தெரிய வேண்டும். அவர்களே வலிய வந்தவர்கள்,  தான்  செல்ல இப்படி ஒன்றும் சொல்லாது இருப்பது அவளை அவமானப்படுத்துவது போல் உணர்ந்தாள்.

அவள் தன் அவமானம் உணர்ந்த நொடி…சோனாலியோடு ஜான் விடர் வீட்டுக்கு சென்று விட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!