Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Niththirai Kalaiththa Maayaval 27

கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைகிரதே

உன் செவியில் விழா வில்லையா உள்ளம் கொஞ்சம் வழிகிறதே

உன்னரகே naan இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை

கைகளிலே விரல் இறந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை



Advertisement

உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்

நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்

தினம் தினம் கனவில் வந்து விடு

Advertisement

நம் திருமண அழைபிதழ் தந்து விடு

Advertisement

 

“என்ன ஒரே புகை மூட்டம இருக்கு” என்ற படி கண் திறந்தவன்… 

 

Advertisement

“ஒ சொர்கத்துக்கே வந்துட்டோமா” என்ற படி கண்ணை திறந்தவன் கண் முன்னாள் வைஷு கைகளை கட்டி கொண்டு முறைத்து கொண்டு நின்று இருந்தாள் 

 

“வைஷு குட்டி… நீயும் இந்த சிந்துவை பிரிஞ்சி இருக்க முடியாதுனு, என் கூடயே வந்து இருக்க பாரு… உன்னோட இந்த பாசம் தான்டா இந்த சித்துக்கு ரொம்பவே பிடிச்சது” என்ற படி அவளை நெருங்க 

 

“அவளோ அவன் மண்டையில் தன்னால் முடிந்த வரை ஓங்கி கொட்டியவள்… லூசு சித்து.. நீ இன்னும் சாகல.. ஒழுங்கா எழுந்து உக்காரு… இதோட டென் டைம்ஸ் எழுந்து எழுந்து தூங்குற” என்ற படி அவள் கூற 

 

அதற்கு பின் தான் தான் சாகவில்லை…மயங்கி தான் கிடக்கிறோம் என்று புரிய… அக்கம் பக்கம் சுற்றி பார்த்தவன் கண்ணிற்கு கவலையுடன் அவனையே பார்த்து ஒண்டு இருந்த ஜானகியும்…. 

 

அவனை நக்கலாய் பார்த்து சிரித்த படி இருந்த அன்பும், விக்கியும் தெரிய… 

 

“அடிச்சா… இப்போ இவங்குங்க வேற கலைப்பங்களே… இதுக்கு பேசாம மயங்கியே இருந்து இருக்கலாம்” என்று மறுபடியும்  மயங்க போனவனை 

 

“டேய் டேய்… இப்டி கேவலமா நடிக்காத… பாக்க சகிகளை” என்றான் அன்பு அவனை நெருங்குயவனாய் 

 

“ஈஈஈ” என்று இளித்தவன்… சும்மா என்றான் குழந்தை தனமாய் 

 

அவனுக்கு அருந்த அதேயாவது எடுத்து வர வேண்டி ஜானகி அங்கிருந்து நகர 

 

இலக்கியன் அருகில் வந்தா வைஷு “சித்து நீ மயங்கி விழுந்துட்ட இல்ல… எல்லாரும் நீ செத்து போய்ட்டானு ரொம்பவே பயந்துட்டாக… அப்றம் நான் தான் சித்து ஸ்மால் பாய்… அவ்ளோ சீக்கிரம் எல்லாம் சாக மாட்டான்… நீங்க அழாதீங்கன்னு சொல்லி சமாதானம் சொன்னேன்” என்றாள் பெரிய மனிஷியாய் 

 

[the_ad id=”6605″]

 

 

 

“இவரு அப்டியே எங்க காதலை சேர்த்து வைக்குறாரு.. முஞ்சியை பாரு.. லாசு” என்ற படி இலக்கியனை நெருங்கிய அன்பை

 

“அப்பா… சித்துவ அடிக்காத… அது பாவம்” என்றாள் அப்பாவியாய் 

 

இத்தனை நாள் அன்பை எந்த முறை வைத்தும் அழைக்காமல் இருந்தாள் வைஷு என்பதே அவள் அவனிடம் அப்பா என்று அழைத்த பின்னர் தான் புரிந்தது 

 

“சரிங்க செல்லம்… குட்டி சொல்லிட அப்பா அடிக்க மாட்டேன்” என்ற அப்படி அவளை தூக்கி கொண்டான் அன்பு 

 

ஆனா குட்டி… இந்த ஒன் டைம் மட்டும் உன்னோட சிந்துவை அடிச்சுக்குறோம்… உன்னோட பாட்டி, அம்முவை எல்லாம் அழ வைத்தான்ல…அதுக்காக… என்றவனை யோசனையுடன் பார்த்து 

 

சிறு யோசனைக்கு பிறகு.. “சரி அப்பா… நீங்க அடிங்க… நான் அம்முவை கூட்டுகிட்டு வரேன்” என்ற படி அவள் ஓடி விட… இலக்கியனுக்கு ஆதரவாக இருந்த அந்த ஒரு ஜீவனும் போய் விட… விக்கியிடமும், அன்பிடமும் மாட்டி கொண்டான் இலக்கியன் 

 

இலக்கியன் உண்மையில் அன்பிற்காக உயிரை கொடுக்கவும் தயங்க மாட்டான் தான்.. அது அன்பிற்கும் தெரியும் 

 

ஆனால் இம்முறை அடி பட்டது அன்பிற்கு… அதில் கசிந்த ரத்தத்தை பார்த்து பயத்தில் மயங்கி விட்டு 

 

இதில் உங்கள் காதலுக்காக என் உயிர் போனதாக இருக்கட்டும் என்று டயலாக் வேறு… அதற்கு தான் அடித்து கொண்டு இருந்தனர் விக்கியும், அன்பும் ஒன்று சேர்ந்து இலக்கியனை 

 

“போதும் போதும்…விடுங்க அவனை.. இப்போதான் முழிச்ச பிள்ளையை எழுந்த உடனே போட்டு அடிக்கணுமா? ” என்ற படி உள்ளே வந்தாள் இனியா 

 

வந்தவளை “ஆஆஆ” என்று கிட்டத்தட்ட அதிர்ச்சியில் தான் பார்த்து கொண்டு இருந்தான் இலக்கியன் 

 

“என்ன இலக்கியா அப்டி பாக்குறே” என்ற இனியவை 

 

“இல்லை இந்த தாலி, நெத்தில குங்குமம் இதோட பார்க்க ரொம்பவே வித்தியாசமா தெரியுற இனியா நீ”

 

கோவிலில் யாரும் எதிர் பாராத நேரத்தில் அன்பு தாலியை கட்டி இருக்க.. அதற்கு பிறகு நடந்த கலவரத்தில் இலக்கியன் ஒரு முறை கூட இனியாவை அந்த தலையில் பார்க்க வில்லை… அதன் பிறகு அவன் மயங்கி விழுதுவேறு விட்டான் 

 

வீட்டிற்கு வந்த உடன்… செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை எல்லாம் காயூவிற்கும், இனியாவிற்கும் சேர்த்து தான் செய்தனர் வீட்டினர் 

 

அதன் காரணமாக புது புடவையில், நெத்தி முழுதும் குங்குமத்துடன்…கழுத்துத்தில் தாலி ஒன்றுடன்…தலை நிறைய மல்லிப்பூ வைத்து கொண்டு வருபவளை பார்க்க… எதோ பட்டத்து ராணி போலவே இருந்தது இலக்கியன் கண்ணிற்கு 

 

“உண்மையாவே ராணி மாதிரி இருக்க இனியா” என்று வாய் விட்டே கூறினான் இலக்கியன் 

 

“இனிமேல் பேர் சொல்லி எல்லாம் கூப்பிட்டே.. வாயை ஒடச்சிடுவேன்.. அண்ணின்னு கூப்பிடுடா” என்ற படி கையில் ஜூஸ்ஸுடன் வந்தார் செல்லம்மாள் 

 

“அதெல்லாம் கூப்பிட முடுயாது… அன்பு கல்யாணம் பண்ணிக்கிட்டா.. அண்ணின்னு கூப்பிடணுமா” அலட்சியமாய் பேசியவனின் மண்டையில் அவர் ஒரு கொட்டு வைக்க 

 

“அம்மா” என்று கத்தியவன்…”என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க… பாட்டியும் பேத்தியும்… கேக்க ஆள் இல்லாத பையன்னா எல்லாரும் வந்து அடிப்பீர்களா” என்றான் இலக்கியன் 

 

அதற்கு மேல் பேசினால் அடி விழும் என்பதை புரிந்து கொண்டு ஜூஸ்ஸை வாங்கி குடித்தவன்… 

 

எதோ நினைத்தவனாய்.. “ஆமாம், அந்த தடி மாடு எங்கடா… அவுங்க எப்படி விட்டாங்க இனியாவை” என்றான் அன்பை பார்த்து 

 

“விடாம என்ன பண்ண முடியும்” என்றவன் மேலே பார்க்க 

 

“என்னடா… பிளாஷ் பாசக்கா… சரி பாரு நானும் பார்த்து தொலைக்குறேன்” என்ற படி அவனும் மேலே பார்க்க 

 

இலக்கியன் மயங்கி விழுந்த அடுத்த நொடி… அனைவரும் அவன் இருந்து விட்டான் என்று நினைத்து… கவலை கொள்ள… 

 

இதற்கு காரணமான மோஹனை கொலை வெறியுடன் ஊரார் நெருங்கி வர… அவர்களின் ஆக்ரோஷம் அவ்ர்களின் கண்ணிலேயே பார்த்தவன்… கத்தியை போட்டு விட்டு… இரண்டடி பின்னால் வைக்க 

 

[the_ad id=”6605″]

 

 

 

“அடிச்சி கொள்ளுங்கடா இவனை.. நம்ப வீட்டு பையனையே கொலை பண்ணிட்டான்” கூட்டத்தில் ஒருவன் கத்தி கொண்டு மோஹனை கூட்டம் நெருங்கும் நேரம் 

 

“ஒரு நிமிஷம்… எல்லாரும் விலகுங்க… காத்து வர வழி விடுங்க” என்ற படி இலக்கியனை நெருங்கிய இனிய 

 

அவனின் மணிக்கட்டில் நாடியை மற்றும் கழுத்தில் இருக்கும் நாடியையும் தொட்டு பார்க்க..  பின் அவனின் கண் விழிகளை திறந்து பரிசோதித்தவள்… அன்பை பார்த்து “இலக்கியனுக்கு ஒன்னும் இல்ல… பயத்துல தான் தயங்கி இருக்கான்” என்ற படி அவன் கையையும், வயிற்றையும் பரிசோதிக்க 

 

அதில் காயங்கள் ஏதும் தெரிய வில்லை… அப்போ அந்த ரத்தம் எங்க இருந்து வந்துது என்ற படி யோசித்தவள்… பின் எதோ புரிந்தவளாய் அன்பின் கைகளை ஆராய 

 

அவனின் கை இரண்டிலும் உள்ளம் கையில் கத்தியால் ஏற்பட்ட காயம் இருந்தது… அதில் இருந்து ரத்தம் வேறு ஒழுகி கொண்டு இருக்க… 

 

அந்த காயத்தை மேலும் ஆராய… அது கொஞ்சம் ஆழம் அதிகமாவே இருந்தது அவளுக்கு புரிய 

 

சீக்கிரம் யாராவது ஈர துணி கொண்டு வாங்க… என்று கட்டளை இட… கூட்டத்தில் யாரோ ஒருவர் கொண்டு வந்து நீட்ட… அதை அன்பின் இரு கைகளுக்கும் கட்டி விட்டவள்… 

 

“காயம் ரொம்பவே பெருசா இருக்குங்க… இதுக்கு தையல் தான் போடணும்” என்ற படி அன்பை பார்க்க 

 

நேற்று வரை தன் காதலியாக இருந்தவள், இன்று சில நிமிடத்திற்கு முன்னாள் தன் மனைவியாக மாறி இருக்க… இப்போது அவன் கண் முன்னாள் டாக்டராய் அமர்ந்து இருப்பவளை ஆசையாய் கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தான் அன்பு 

 

அதற்குள் இலக்கியன் முதல் முறை முழித்து… அன்பின் கை ரத்தத்தை பார்த்தவன் மறுபடியும் மயங்கி விட… இவன் சாக வில்லை.. இனியா சொன்னது போல மயங்கி தான் கிடக்கிறாள் என்பது புரிய தான் அங்கு இருக்கும் அனைவர்க்கும் நிம்மதியே வந்தது 

 

அதற்குள் சந்துரு மோஹனை கொலை முயற்சி செய்ததற்காக கைது செய்து காவல் நிலையம் கொண்டு செல்ல… லோகநாதனோ 

 

“நாம எதுக்கு வந்தோம்… இங்க என்ன நடக்குது… நாம வராம இருந்து இருந்தா கூட இவளுக்கு கல்யாணம் நடந்து இருக்காது… இதோ புள்ளைன்னு ஒரு தடி மட்டை பெத்து வெச்சி இருக்கேனே… அதுவும் ஒரு காரியத்துக்கும் பிரோயோஜனம் இல்லை” என்ற படி மோஹனுடன் அவரும் காவல் நிலையம் செல்ல 

 

மருத்துவமனை சென்று கைக்கு வைத்தியம் பார்த்தவன்… பின் இனியாவுடன் காவல் நிலையம் செல்ல 

 

மறு புறம்..இலக்கியன், விக்கி, காயுவை அழைத்து கொண்டு மற்றவர்கள் வீடு சென்று விட 

 

ஊர் மக்கள் சிலர்… பாதுகாபிர்களாக அன்புடன் காவல் நிலையம் சென்றான் 

 

அன்பு காவல் நிலையம் நுழையும் போது 

“உங்க பையனும் நீங்களும் பண்ணி வெச்சு இருக்க வேலைக்கு… கடத்தல், கொலை முயற்சி, பெண்ணிடம் அத்துமீறல்ன்னு வழக்கு பதிவு பண்ண வேண்டி வரும்… அப்டி பண்ண ஜெய்ல தான் இனி சோறு உங்களுக்கு… பரவாஇல்லையா” கிட்ட தட்ட மிரட்டி கொண்டு இருந்தான் சந்துரு 

 

உள்ளே நுழைந்த அன்பை பார்த்த லோகநாதன்…” இவன் வந்து என்ன என்ன சொல்ல போறானோ” என்ற படி அவனை பார்க்க… 

 

[the_ad id=”6605″]

 

 

 

அவனோ… “இவங்க விசயத்துல அதிகமா பாதிச்சி ஊரை விட்டு… வீட்டை விட்டு ஓடி வந்து ஒரு கை குழந்தையோட அவஸ்தை பட்டத்து இனியா தான்… அதனால அவ என்ன முடிவெடுத்தாலும்  அதுக்கு நான் வழி மொழியுறேன்” என்றான் திடமாய் 

 

“போச்சுடா… இவனே தண்டனை சொல்லி இருந்தா கூட பரவா இல்லை.. அந்த பொண்ணை நாம எவ்வளவு கொடுமை படுத்தி இருக்கோம்… அவளோட அக்கா மாமாவை வேற கொன்னுட்டோம்… இதை வேற சொன்ன இன்னும் தண்டனை அதிகம் ஆகுமே” என்று லோகநாதன் யோசிக்க 

 

இவங்களை விடுதலை பண்ணிடுங்க..  எனக்கு இவங்க மேல எந்த கேஸ்ஸும் குடுக்க வேணாம்… என்னோட வாழ்க்கைல எனக்குன்னு இருந்த மிக பெரிய சொந்தம் சொத்து எல்லாமே எங்க அக்கா மாமா தான்… அவுங்களையே இவங்க தான் கொன்னுட்டாங்க” என்று அவள் கூறும் போதே குரல் கனக்க… அன்னை ஆதரவாய் பற்றி கொண்டவள் 

 

“ஆனால் இவங்க பண்ண வில்லத்தனதுனால தான் எனக்கும் வைஷுக்கும் இப்டி பட்ட நல்லா குடும்பம் கெடச்சி இருக்கு… எனக்கும் அன்பு போல மனம் விரும்பியவர் புருஷனா அமைந்து இருக்காரு.. இப்போ என்னோட அக்கா மாமா இருந்த கூட..  என்னோட இந்த வாழ்க்கையை பார்த்து சந்தோசம் தான் பட்டு இருப்பாக… அதனால இவங்களை விட்டிடுங்க… ஆனால் ஒரு கண்டிஷன்”

 

என்றாள் இறுதியாய் மர்மத்துடன் 

 

“இவங்க ரெண்டு பேரும்.. இனி எங்களை தொந்தரவு  பண்ண மாட்டேன்… சொத்துக்காக எங்களை எதுவும் பண்ண மாட்டேன்…அப்டி மீரி எங்களுக்கு எதாவது நடந்தால் அதற்கு லோகநாதனும், மோகனும் தான் காரணம்ன்னு எழுதி… கையெழுத்து போட்டால்… நான் மாணிக்க தயார்”என்றாள் அதிகாரமாய் 

 

விட்டாள் போதும்… தப்பித்தால் போதும்… என இனியா கூறிய படியே அவர்கள் எழுதி கொடுத்து விட்டு நகர்ந்தாலும்… மோகனின் கொடூர பார்வை இனியாவை பார்த்து தான் சென்றது 

 

நடந்த அனைத்தும் கேட்ட பிறகு… இத்தனை நாள் இனிய…

 

 “பயந்த சுபாகம்…அடக்க ஒடுக்கமான பெண் என்று இலக்கியன் நினைத்து இருக்க… கதையின் முக்கிய வில்லனையே கதற விட்டு ஓட விட்டு இருக்கிறாளே” என்று நினைக்கும் போது அவனுக்கு இனியா மேல் பெருமிதம் வந்தது என்பது தான் உண்மை 

 

“அப்றம் என்னப்பா… அதான் எல்லாரும் குடும்பமா செட்டில் ஆகிடீக… நான் மட்டும் தான் ஒண்டி கட்டையா இருக்கேன்… இந்த ரைட்டரை ஒதைச்ச சரியா போய்டும்… இருபத்தி எட்டு எபிசோட்  ஆகிடுச்சு… இன்னும் எனக்கு ஆள் கொடுக்கல பாரு” என்று அவன் புலம்ப 

 

“யார் சித்து அது” என்று புரியாமல் வைஷு குட்டி கேட்க… “அந்த கடவுள தான்.. அந்த கடவுள தான்”என்றான் சலித்து கொண்டு 

 

“அதுக்குள்ள எங்க முடிஞ்சுது… இன்னும் கதை இருக்கு கண்ணா” என்ற படி செல்லம்மாள் அனைவரையும் அழைத்து கொண்டு முற்றத்திற்கு போக 

 

அதற்குள்.. மீதம் இருக்கும் குடும்பமும் அங்கு கூடி இருக்க 

 

“உங்க எல்லாரையும் எதுக்கு வர சொன்னேன்ணா… அன்போட கல்யாணம் இனியாவோட நடந்துல இங்க யாருக்கும் கவலை இல்லை… சொல்ல போனால்… எங்க எல்லாருக்கும்… சந்தோசம் தான்… நாங்களும் இதை எதிர் பார்த்தோம் தான்… ஆனால் அது நடந்து முடிந்த விதம் தான் சரி இல்லை” 

 

என்று வேலுச்சாமி கூற… புரியாமல் பார்த்த அனைவரின் குழப்பத்தையும் போக்க மேலும் தொடர்ந்தவர் 

 

“ஒழுங்கான விதி முறைகளையோட… எல்லா சம்பர்தாயத்தோட இந்த கல்யாணம் நடக்கலை… அதனால… இந்த கல்யாணம் எல்லா சடங்குகளோட நம்ப வீட்டுலயே நடக்கும்” என்றார் அவர்… 

 

அதில் வீட்டில் இருந்த அனைவர்க்கும் மகிழ்ச்சி தான்… ஆனால் இலக்கியன் மட்டும் 

 

“இப்போவே கண்ணா கட்டுதே… அவனவனுக்கு ஒரு கல்யாணமே குதிரை கொம்பா இருக்கு.. இவனுக்கு மட்டும் எப்படிடா லவ் பண்ணும் போதும் டூ லவ்வெர்ஸ்… இப்போ கல்யாணமும் ரெண்டு தடையாட… நீ எல்லாம் முருகன் கூட பொறந்தவனாடா” என்று அன்பை பார்த்து கேட்க 

 

அன்போ எதயும் காதில் வாங்காமல்.. இனியாவை பார்த்து கொண்டு இருக்க..  சரி விக்கியிடம் புலம்புவோம் என்று அவன் புறம் திரும்ப 

 

“மயங்கி விழுந்து, உடம்பு சரி இல்லாத பிள்ளையை பக்கத்துல வெச்சி இருக்கோம்ன்ற நெனப்பு கொஞ்சமாச்சு இருக்கா பாரு… ரெண்டு பேரும் ரொமப்ஸ் பண்றதுலயே குறியா இருக்காங்களே” என்று தலையில் அடித்து கொண்டு அமைதியாய் அமர்ந்து இருக்க 

 

“கல்யாணம் மறுபடியும் செய்யுறது எல்லாம் சரி தான்… பொண்ணு வீட்டு தரப்புல இருந்து யாருமே இல்லையே… யார் அந்த சடங்கை எல்லாம் செய்யுறது” என்றார் சகுந்தலா 

 

அவருக்கு பதில் சொல்ல ஜானகி வாய் திறக்கும் போது 

 

“நாங்க பொண்ணு வீட்டு தரப்பில இருந்து சடங்கு எல்லாம் செய்தாள் பரவாஇல்லையா? ” என்று கேட்ட படி வாசலில் நால்வர் நிற்க… 

 

புரியாத பார்வை தான் அனைவரிடத்திலும்.. 

 

               மயக்கம் தொடரும்….. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!