Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Kuviyamudan Oru Kaathal 31 2

“ஹே பப்ளிக் பப்ளிக்…. யாராவது பார்க்கப் போறாங்கடி!”

 

“போடா நம்ம கார் தான? அப்படியே பார்த்தாலும், என்னோட புருஷன் நான் கட்டிப்பேன்னு சொல்லுவேன்!”

 



Advertisement

“தேறிட்டடி கண்ணம்மா…. ஆமா என்ன இவ்வளோ ஹாப்பி?”

 

“இங்க பாரு.” என காசோலையை காட்டியவளிடம், “ஹே செம செம சூப்பர் போ.” என அவளை அணைத்துக் கொண்டு வாழ்த்தினான்.

Advertisement

 

Advertisement

“இந்த காசை என்ன பண்றது??”

 

“உனக்கு என்னென்ன தோணுதோ அதை பண்ணு. போன வாட்டி, ஃபிரஸ்ட் சேலரி கம்மியா போச்சுனு எல்லாருக்கும் சின்ன கிப்டா குடுத்தல. எல்லோருக்கும் பெரிய கிப்டா குடு இப்போ.”

Advertisement

 

ஆலோசனை கூறிக் கோண்டே அவளை வீட்டில் விட்டு விட்டு, அலுவகம் சென்றவன் திரும்புவதற்குள் மாமனாருடன் வேறு பல இடங்களுக்கு சென்று வந்தாள் மாயா. அதன் விடை இரண்டு நாட்களில் கார்த்திக்கும் தெரிய வந்த போது, திகைத்துப் போனான் அவன்.

 

அந்த வார இறுதியில் ஊரில் இருந்து அனைவரும் வந்திருக்க, விநாயகம் மதியம் அனைவரும் சாப்பிட்டு தூங்கியதும் வெளியே சத்தமில்லாமல் ஜூட் விட்டான். மாலை ஐந்து மணி போல, கீழே அனைவரையும் கூப்பிட்டு சென்றாள் மாயா. “என்னடி எதுக்கு கீழ போகனும்?” கார்த்திக் புருவ முடிச்சுடன் ஆராய்ச்சி பார்வை பார்க்க, “பசங்க விளையாடுவாங்கல? அதுக்கு தான்” என அழைத்துச் சென்றாள். ஆனால், விநாயகம்  புத்தம் புதிய டி.வி.எஸ். அபாச்சி வண்டியில் வந்து இறங்கவும் அனைவரும் பேந்த பேந்த முழித்தனர்.

 

[the_ad id=”6605″]

 

 

 

ஓட்டி வந்தவன் நேராக அவன் தங்கையிடம் சென்று சாவியை கொடுக்க, மாயா புன்னகை பூசிய முகத்துடன் அதை தன் கணவனின் முன் நீட்டினாள். “என்ன பார்க்குற கார்த்தி? உனக்கு தான். என்னோட முதல் சம்பளத்துல வாங்குன கிப்ட்! எப்புடி??”

 

மாயா கூறியதை கேட்டு கார்த்திக் ஒரு நிமிடம் முறைத்துவிட்டு, விடுவிடுவென்று வீடு நோக்கி சென்றான். அனைவரும் திகைத்து விழிக்க, மாயா கையில் பிடித்திருந்த அகிராவை, அபிராமியிடம் ஒப்படைத்து, “நான் கூட்டிட்டு வரேன் கார்த்திக்க. நீங்க எல்லாரும் இங்கயே இருங்க.” என்று அவன் பின் ஓடினாள்.

 

வீட்டில் தங்கள் அறையில், தலையை கைகளுக்கு முட்டுக் கொடுத்து குனிந்து அமர்ந்திருந்த கணவனை பார்த்து மனம் வருந்தினாலும், அதை திடப்படுத்திக் கொண்டு, அவனிடம் சென்று வாதிட்டாள்.

 

“ஏன் கார்த்தி கிளம்பி வந்துட்ட? உனக்கு கிப்ட் பிடிக்கலையா?”

 

ஒன்றும் தெரியாதவளை போல் கேட்டவளை முறைத்தவன், “என்ன நினைச்சுட்டு இருக்க நீ? எதுக்கு இப்போ நான் ஓட்ட மாட்டேன்னு சொன்ன அப்புறமும் பைக் வாங்குன??” என்று கத்தவும், அதற்கும் பொறுமையாக பதிலளித்தாள் மாயா.

 

“நீ ஓட்டனும்னு தான் வாங்கினேன். இங்கப்பாரு கதிர் மேல நீ ரொம்ப அன்பு வைச்சிருக்க அது புரியுது நால்லாவே. அதுக்காக நீயும் பைக் ஓட்டாம இருக்கனும்னு எதுவும் இல்ல. கதிரே கூட இத ஒத்துட்டு இருக்க மாட்டான். உனக்கு இப்போவும் பைக் பிடிக்கும் கார்த்தி, எனக்கு நல்லாவே தெரியும். நீ வெளிய போகும் போது மத்த பைக்க பார்க்கும் போது உன்னோட கண்ணுலயே தெரியும் அது…. ப்ளீஸ், எனக்காக ஓட்டுடா. புருஷன் பின்னாடி பைக்ல போகனும்னு எனக்கும் ஆசை இருக்காதா??”

 

“இப்படியிருக்கறது, அவன் உயிர் இதே பைக்கால போனதுக்காக நானே எனக்கு குடுத்துட்ட பனிஷ்மென்ட்! அதனால தான் ஓட்ட மாட்டேன்னு சொல்றேன்.”

 

“அவன் உன் கூட இல்லாததே பனிஷ்மென்ட் தான் புரிஞ்சிக்கோடா.”

 

சில நீண்ட விவாதங்களுக்கு பின், “எல்லாம் சரிடி. எத்தனை வருஷமாச்சு நான் வண்டி ஓட்டி? இப்போ மறுபடியும் எப்படி??” என்று தயங்கவும், மாயா பெரிதாக சிரித்தாள். “ஒரு காலத்துல பெட்டை விட்டு எழுந்துக்க கூட முடியாம இருந்தேன் நானு. சொன்னா யாராவது நம்புவாங்களா?? நீ இதுக்கு போய் பயப்படுற, வா போய் ஓட்டி பார்க்கலாம்.”

 

கார்த்திக்கின் கைகளை இழுத்துக் கொண்டு சென்று கீழே அனைவரிடமும் வர, விநாயகம் அதிசயமாக பார்த்து கேள்வி கேட்டான். “என்ன மாயு நேரா போய் கால்ல விழுந்திட்டியா??”

 

“அண்ணா சும்மா இருங்க, இப்போ கார்த்தி வண்டி ஓட்ட போறான்.”

 

பைக்கை முதலில் ஆசையாக கார்த்திக் தடவி பார்க்க, சாவியை கொடுத்து, “ஹ்ம்ம்ம் சீக்கிரம் ஓட்டு” என உற்சாகப்படுத்தினாள் மாயா. பைக்கின் மேல் அமர்ந்து, சாவியை சொருகி, ஸ்டார்ட் செய்தவன் முதலில் தடுமாறினான்.

 

விநாயகம் பைக்கை பிடித்து தாங்கிக் கொள்ள, பின் மெது மெதுவாக மிதமான வேகத்தில், அவர்களின் தெருவில் சீராக ஓட்டினான். அதற்கே றெக்கை கட்டி காற்றில் பறக்கும் உணர்வு வந்தது கார்த்திக்கிற்கு. எவ்வளவு வருடம் கழித்து ஓட்டுகிறான்??

 

இரண்டு முறை சுற்றியவன், தன் அடுக்குமாடி குடியிருப்பின் வாசலுக்கு வந்து மாயாவை பார்த்து பின் அமரும் படி கண்ணசைக்க, அவளும் ஓடி வந்து ஏறிக் கொண்டாள். “டேய் என்னடா லவ்வர்ஸ் மாதிரி சீன் போடுறீங்க? ரெண்டு குழந்தைங்க இருக்கு ஞாபகம் இருக்கட்டும்.”

 

விநாயகத்தின் பொருமலை இருவருமே கண்டுக் கொள்ளவில்லை. அதுவரை எந்த பெண்ணையும் இரு சக்கர வாகனத்தில் உடன் அழைத்துச் செல்லாமல், முதல் முறையாக மனைவியை அமரச் செய்து விசையுந்தை இயக்கியதும், கார்த்திக் விண்ணிலேயே பறந்தான்! மாயாவிற்கு உலகத்தையே வென்ற ஓர் உணர்வு! தன்னவனின் இடுப்பை வளைத்துக் கொண்டு அவள் பயணிக்க, இப்படியே செல்ல மாட்டோமா என இருந்தது இருவருக்கும்.

 

வீடு திரும்பியதும் குழந்தைகள் தாவிக் கொண்டு வர, “ஹே குட்டீஸ் அப்பா ரெண்டு பேரையும் வைச்சுட்டு ஓட்ட கொஞ்ச நாள் ஆகும்டா. நாம அப்புறம் டூடூ போலாம் சரியா??” என்று அவர்களையும் சமாதானப்படுத்தினான் பொறுப்பான தந்தையாய்.

 

[the_ad id=”6605″]

 

 

 

அடுத்து வந்த நாட்களில், மாயாவை எங்கே அழைத்துச் செல்வதென்றாலும் பைக்கை தான் உபயோகித்தான் கார்த்திக். அவளும் அதையே விரும்பினாள் என்பதும் ஓர் காரணம். ஆனால், முன் ஓட்டியதற்கும் தற்போது விசையுந்தை ஓட்டுவதற்கும் கார்த்திக் பெரிய வித்தியாசத்தை உணர்ந்தான். முதலில், ஒரு வித மாயவிசை அவனை வேகப் பந்தாக செலுத்தியது என்றால், இப்போது பொறுப்பும் கடமையுணர்ச்சியும் அவனை நிதானமாக செலுத்தியது.

 

கணவனுக்கு பைக் வாங்கி பரிசளித்தவள், குடும்பத்தில் அனைவருக்கும் அவர்களுக்கு ஏத்தவாரு பரிசுகளை வாங்கி குவித்தாள். அபிராமிக்கும் ரித்தியாவிற்கும் தங்கத்தில் வளையல், சுப்பிரமணியமிற்கு ஐ-போன், விநாயகத்துக்கு மடிகணினி, மீனம்மாவிற்கு பட்டு சேலைகள் மற்றும் மைதிலியின் குடும்பத்திற்கும் பரிசுகள் வாங்கினாள். ரவீந்திரனுக்கு பரிசாக ஒரு விலையுர்ந்த கடிகாரத்தை வெளிநாட்டிலிருந்து வர வைத்தாள்.

 

மாயாவின் முதல் படமும் விரைவில் திரைக்கு வந்தது. அப்படத்திற்கு முதல் நாள் முதல் காட்சி பார்க்க குடும்பத்துடன் மாயா செல்ல, திரையில் ‘ஒளிப்பதிவு – மாயசித்ரா கார்த்திக்’ என இவள் பெயர் வந்தவுடன் கத்தி கூச்சல் போட்டு, கைத் தட்டல்கள் பறக்க விட்டு மற்ற எல்லோரையும் விசித்திரமாக பார்க்க வைத்தனர் அவள் கணவனும் சகோதரனும்!

 

“ஹே சும்மா உக்காருங்க! மானத்த வாங்காதீங்க ரெண்டு பேரும்.”

 

மாயா சொல்லியதை இருவரும் கேட்பார்களா என்ன?? இதில் படமும் மாபெரும் வெற்றி, இமாலய வெற்றி எனவும் இல்லாமல், தோல்வி எனவும் கூற இயலாமல் ‘ஹிட்’ என வரையருக்கப் பட, கார்த்திக்கையும் விநாயகத்தையும் கையில் பிடிக்க முயலவில்லை. எல்லாம் சில வாரங்கள் தான்! இவளின் ஒளிப்பதிவுக்கு நல்ல பின்னூட்டமும் விமர்சனமும் கிடைத்தும், எந்த வாய்ப்பும் வராமல் போகவே கார்த்திக் வருத்தப்பட, மாயா தான் அவனை தேற்றினாள்.

 

“கண்டிப்பா சான்ஸ் வரும். என்ன லேட் ஆகும்… பரவாயில்லை பசங்களோட கொஞ்ச நாள் இருந்துட்டு போறேன்.” அகிராவுக்கு சாப்பாடு ஊட்டியபடியே மாயா சொல்ல, கார்த்திக்கும் தலையசைத்தான். அடுத்த மாதமே, போன முறை இவள் சம்பளம் வாங்கிய தயாரிப்பாளரிடம் இருந்து அழைப்பு வந்தது. இம்முறை சற்றே பெரிய படம்.

 

சந்தோஷமாக மாயா படப்பிடிப்பிற்கு ஒவ்வொரு நாளும் கிளம்ப, ஒரு நாள் கார்த்திக்கும் விநாயகமும் இவளிடம் ஒரு கோரிக்கையை வைத்தனர். “நாங்க ஷூட்டிங் பார்க்க ஒரு நாள் வரோம்.” இதையே திரும்ப திரும்ப அவர்கள் சொல்லவும், “என்ன விஷயம்னு உண்மையை சொன்னா தான் நான் கூட்டிட்டு போவேன்.” என மாயா பிடிவாதம் பிடித்தாள்.

 

சுப்பிரமணியமும், “என்னவோ இருக்குமா. விட்றாத கேளு.” என எடுத்துக் கொடுக்க, நண்பர்கள் இருவரும் ஒரு சேர அவரை முறைத்தனர். இறுதியில், விநாயகமே கூறினான் காரணத்தை. “கேரளத்து பைங்கிளி, சொப்பன சுந்தரி!! சுந்தரிய பார்க்கத் தான் நாங்க ரெண்டு பேரும் வரோம் போதுமா??”

 

சுந்தரி என்பவள் அச்சமயம் தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுக் கண்ணியாக திகழ்பவள். மாயாவின் படத்திலும் அவள் தான் கதாநாயகி. அவளையே காரணம் காட்டவும், மாயா விநாயகத்தை பார்த்து சிரிக்கத் துவங்கினாள். “ஐய்யோ அந்த பொண்ண பார்க்கத் தான் வரீங்களா? அவ என்னை எப்போவும் சேச்சி சேச்சினு தான் கூப்பிடுவா. நான் சேச்சினா நீங்க அவளுக்கு சேட்டா…”

 

[the_ad id=”6605″]

 

 

 

தற்போது கார்த்திக்கும் அவன் நிலையை கண்டு சிரிக்க, விநாயகம் எரிச்சல் கொண்டான். “நீ ஏன்டா சிரிக்கற??”

 

“உனக்கு தான்டா தங்கச்சி. எனக்கு என்ன முறைனு நீயே பார்த்துக்கோ.”

 

கார்த்திக் வாக்கியத்தின் கடைசி பகுதியை மாயாவை பார்த்துக் கொண்டே கூற, மாயா கையில் வைத்திருந்த அகிலனுடன் அவனை அடிக்கத் துறத்தினாள். “ஹோ முறை பார்க்குறியா? பாருடா அப்பாவ அடிக்கலாமா?? ஆமாவா??” பையனை துணைக்கு அழைத்துக் கொள்ள, அவனும் மழலை மொழியில் தனக்கு பிடித்த வார்த்தையான, ‘ஆமா’ என சொல்ல, மேலும் துறத்தினர் அன்னையும் மகனும்! தனக்கான துணையாக மகளை அவன் தந்தையிடமிருந்து தூக்கிக் கொண்டு ஓடினான் கார்த்திக்.

 

அவர்கள் சுற்றுவதை கண்டு சுப்பிரமணியமும் விநாயகமும் சிரிக்க, மகிழ்ச்சியும் நிம்மதியும் அவர்களிடம் குடி புகுந்தது நிரந்தரமாக!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!