Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Mullai Mullaal Edukkum Viththai Kaathal

Mullai Mullaal Edukkum Viththai Kaathal 3

முள்ளை முள்ளால் எடுக்கும் வித்தை
பாகம் – 3
பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு இணைய இணைப்புக்கள் இலவசமாக இருப்பதனால் அங்கு பாவனைக்குக் குறைவேயில்லை. பெரும்பாலான மாணவர்களின் பல்கலைக் கழக வருகைக்கு காரணமே இந்த இலவச இணைய இணைப்புத்தான். நாடகம், திரைப்படங்கள் என பதிவிறக்கம் செய்து ஒரே கொண்டாட்டம் தான். அன்று பாதி விரிவுரைகள் முடிவுற்றிருந்தன. நேரம் பிற்பகல் பன்னிரெண’டை அண்மித்தது. அவர்களது தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்திருந்தது. சிரேஷ்ட மாணவர்கள் கனிஷ்ட மாணவர்களை சந்திக்க இருப்பதனால் கலைப் பீடத்தின் சிற்றுண்டிசாலைக்கு பின்னால் இருக்கும் ஆல மரத்தின் கீழ் அனைத்து கனிஷ்ட மாணவர்களையும் வருமாறு இருந்தது அந்த குறுந்தகவல்.

கொழும்பு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்களின் அன்புக்குரிய இடம் இந்த ஆலமரம் தான். சில நேரங்களின் காதலர்கள் கணாக்காணும் கனவுப் பட்டறையாகவும் அந்த மரமே அமைகிறது. பொதுவாக சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாணவர்களுக்கிடையிலான சந்திப்பு, கனிஷ்ட மாணவர்களுக்கான சமூக ஒன்றுகூடல், போன்ற இன்னோரன்ன நிகழ்வுகள் அங்கு நடப்பதுண்டு. கொழுப்பு பல்கலைக் கழகத்தில் பகிடிவதை குறைவு, ஆனால் முற்றாக இல்லையென்று சொல்ல முடியாது. விரிவுரையாளர்கள் அறியாமல் பகிடிவதைகள் இடம்பெறுவது வழக்கம், ஆனால் அவை வார்த்தை ரீதியானதாக இருக்குமே தவிர, அவற்றை பகிடிவதை என்று விமர்சிக்கும் அளவுக்கு அமையாது. பொதுவாக கனிஷ்ட மாணவர்கள் சிரேஷ்ட மாணவர்களிடம் நிறைய விடயங்களில் தங்கியிருப்பதனால் அவ்வாறான பகிடிவதைகளை வெளியே சொல்ல மாட்டார்கள்.

 

[the_ad id=”6605″]



Advertisement

 

 

அந்த பகிடிவதை தான் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட மாணவர்களின் அன்னியோன்ய உறவுக்கான பாலம், அந்தப் பிணைப்பு வாழ்நாள் ”ராக நீண்டு நிலைக்கக் கூடிய ஒரு அழகிய நட்பை அள்ளித் தந்த வரலாறுகள் பல. சிரேஷ்ட மாணவர்களுடனான கனிஷ்ட மாணவர்களின் சந்திப்புக் கூட மொழி ரீதியானதே. பொதுவாக எந்த மொழியில் கல்வி கற்றாலும் பரவாயில்லை, தமிழ் பேசும் மாணவர்கள் என்ற அடிப்படையில் அனைத்துக் கனிஷ்ட மாணவர்களும் சிரேஷ்ட மாணவர்களுடனான சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பது வழக்காறு. அன்று தமிழ் பேசும் கனிஷ்ட மாணவர்கள் அனைவரும் வருகை தந்திருந்தார்கள். மதி உட்பட அவளது மூன்று நண்பர்களுக்கும் சற்று பீதியாகவே இருந்தது. என்னதான் பகிடிவதை இல்லையென்று கூறினாலும் சிரேஷ்ட மாணவர்களின் சந்திப்பு என்றாலே அது ஒரு வித அச்சத்தை மனதில் புகுத்துவதுண்டு.

Advertisement

சிரேஷ்ட மாணவர்களைச் சுற்றி கனிஷ்ட மாணவர்கள் நின்றிருந்தனர். அனைவரும் முதலில் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும் அதுவும் என்னைப் பற்றி(அல ளநடக) என்ற தலைப்பின் கீழ். அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் போதுதான் அங்கு ஸ்ரீ வந்து சேர்ந்தான். மதி அப்படியே அதிர்ந்து போனாள், ஏனெனில் அவன் நின்றது சிரேஷ்ட மாணவர்கள் பக்கமல்ல, கனிஷ்ட மாணவர்களில் ஆங்கில மொழியில் கற்கும் தன் சக மாணவர்களுடன், மதியின் ஊகம் பிழைத்துவிட்டது. அந்த சிரேஷ்ட மாணவர் கூட்டத்தில் 3ம் தர மாணவன் தான் அகிலனுக்;கு, ஸ்ரீயின் காலம் கடந்த வருகை மற்றும், அவனது ஆடை ஒழுங்குகள் அனைத்தும் அகிலனுக்கு ஒரு வித எரிச்சலைத் தந்தது. “நான் உன்ன வர சொன்னது, 12 மணிக்கு, இப்போ டைம் 12.30 ஆகுது, ஏன் இவ்வளவு லேட் என்றான் ஸ்ரீயை நோக்கி. அவன் “சாப்பிட்டு வந்தேன் அண்ணா, அதுதான் லேட் ஆகிட்டுது” என்று சாதாரணமாகச் சொன்னான். அங்குள்ள சிலருக்கு அவனது பேச்சு வியப்பாகவே இருந்துத, Nஎனனில் யாருமே சிரேஷ்ட மாணவர்களிடம் அவ்வாறு பேசுவது கிடையாது.

Advertisement

“ஓகே, நீங்க பெர்ஸ்ட் இயர் ஸ்டுடன்ட் தானே? ஏன் ரெஸ் கோட் எல்லாம் டிபரண்டா இருக்கு, பரவாயில்ல அது பற்றி உங்களுக்கு தெரியாம இருக்கலாம், நாளைல இருந்து நீங்க இவங்கள மாதிரி தான் ரெஸ் பண்ணிட்டு வரணும் ஓகேவா? என்றான் மிதுன். “ ஏன் அண்ணா? இந்த ரெஸ் நல்லா இல்லையா? அதோட பெர்ஸ்ட் டேய் என்கிறதால எனக்கு பிடிச்ச ரெஸ’ஸயே வெயார் பண்ணியிருக்கேன் (தன்னை ஒரு முறை மேலும் கீழும் ஆராய்ந்து விட்டு) இந்த ரெஸ் நல்லா தானே இருக்கு” என்று மீண்டும் கூறினான். “தம்பி நீங்க ரொம்ப ஓவரா பேசுறிங்க, நாங்க சீனியர்ஸ் அத மனசுல வச்சிட்டுப் பேசுங்க, எங்களப் பார்த்தா உங்களுக்கு நக்கலா இருக்கா? என்றாள் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி வசுந்தரா.

“ஐயோ அக்கா அப்பிடியெல்லாம் இல்ல, நான் எப்போதும் இப்பிடிதான், நீங்க வேற செம்ம கி!ட் ஆஹ் இருக்கீங்க உங்கள யாரும் நக்கலாப் பார்ப்பாங்களா? என்று இலேசாக கண்சிமிட்டினான். வசுந்தராவுக்கோ சந்தோஷம் தாங்கவில்லை. தன்னை அழகென்று சொல்லிவிட்டான், அதுவும் ஒரு ஆணழகன் ஸ்ரீ. தனது அடர்த்தியற்ற கூந்தலை ஒருமுறை சரிசெய்துவிட்டு “ஐயோ அதுதானே உங்களப் பார்த்தா அப்பிடி தெரியயில்லையே தம்பி” என்று கூற பக்கத்தில் நின்ற அகிலனோ “ஏய் உனக்கு இவன முன்னாடியே தெரியுமா?” அதற்கு வசுந்தரா “இல்லை, ஏன் கேக்குறிங்க என்றாள். இல்ல உன்னோட வீக்னெஸ் அஹ் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கான், ரொம்ப நெருக்கமோ என்று நினச்சேன்” என்று கூறியதும் தான் தாமதம் சிரேஷ்ட கனிஷ்ட மாணவர்கள் என்று ஒருவர் விடாமல் அனைவரும் சிரித்து விட்டார்கள்.

வசுந்தராவுக்கோ ஒரு மாதிரிhகி விட்டது. பொதுவாகவே சில பெண்கள், ஆண்கள் என யாராக இருந்தாலும் தன்னை ஒருவர் அழகென்று சொல்லி விட்டால் ஆயிரம் முறை கண்ணாடி பார்ப்பதும், “உண்மையிலேயே நான் அழகா” என்று அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்ச்சியடைவதும் இயல்பான விடயங்களே. அவ்வாறான குணவியல்பு நிறைய பேரிடம் இருக்கும் என்ன ஒன்று அந்த விடயத்தில் வசுந்தரா வெளிப்படையானவள். அங்கிருக்கும் சிரேஷ்ட மாணவர்களில் பெரும்பாலானவர்களுக்கும், சில கனிஷ்ட மாணவர்களுக்கும் ஸ்ரீயின் நடவடிக்கைகள், அவனுடைய திமிறான சேச்சு என எதுவும் பிடிக்கவில்லை. ஆனால் மதியுடைய நண்பர்களில் மதியைத் தவிர ஏனைய மூவருக்கும் ஸ்ரீயின் நடவடிக்கைகள் சச்சின் படத்தில் வரும் விஜயாகவே அவனை சித்தரித்திருந்தது. “ஏண்டி மதி இவன் மட்டும் நம்ம தமிழ் மீடியத்தில இருந்தா எப்பிடி இருக்கும், கிலாஸே செம்ம ஜொலியா போர் அடிக்காதில்லையாடீ? என்று தாட்சாயினி கூற காவ்யா, மோனிஷா ஆகிய இருவரும் ஆமாம் சாமி போட்டார்கள். மதியோ அதை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் மெல்லிய புன்னகையை உதி;ர்த்துவிட்டாள். ஆனால் அவளுடைய ஒவ்வொரு புன்னகைக்கும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அதை யாரும் அறிய மாட்டார்கள். மதியும் அந்த தைரியத்தில் தான் இருந்தாள், தன்னுடைய ஒவ்வொரு பார்வைக்கும், கண் அசைவுக்கும், புன்னகைக்கும் மொழிபெயர்ப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்பதை அறியாமல்.

Advertisement

 

[the_ad id=”6605″]

 

 

“அண்ணா பொதுவா சினிமால பார்த்திருக்கேன், நான் என்ன பத்தி இன்ரோ கொடுக்கணும், அதோட தரைல நீந்த சொல்லுவிங்க என்ட் சீனியர்ஸோட புக்ஸ் எல்லாத்தையும் கிலாஸ்ல கொண்டு வைக்க சொல்லுவிங்க இல்லையா? என்றான் ஸ்ரீ. அகிலனோ கோபத்தில் “தம்பி என்ன கலாய்க்கிறிங்களா? லிமிட் அஹ் தாண’ர மாதிரி இருக்கு, இன்னும் நாலு வருஷம் இங்கதான் குப்ப கொட்டப் போறீங்க, சீனியர்ஸ்ட ஹெல்ப் இல்லாம இங்க வாழுறது ரொம்ப கஷ்டம், அத ஞாபகத்தில வச்சுக் கொள்ளுங்க என்று கூற அனைத்து சீனியர்ஸ்வும் அவனை பற்றி ஏதேதோ சொல்லி முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் கதைப்பதற்கு மறுபதில் சொல்லாமல் இருந்தான் ஸ்ரீ, ஆனால் தான் அவர்களுக்கு பிடிக்காத ஒரு விடயத்தை செய்து விட்டதை மாத்திரம் உணர்ந்தான். அந்த நேரத்தில் மௌனம் காப்பதே சிறந்தது என்று நினைத்திருந்ததால் மாத்திரமே ஸ்ரீ அமைதி காத்தான். ஏனெனில் தனது மனசாட்சிக்கு தான் செய்வது பிழை என்பதை ஸ்ரீ உணராத வரையில் உலகமே திரண்டு எதிர்த்து நின்றாலும் குறித்த விடயத்தில் பணிந்து போகவோ அல்லது அதைப் பின்வாங்கவோ மாட்டான். சிரேஷ்ட மாணவர்களுடனான சந்திப்பு முடிவுற்றதும், அனைவரும் நேராக வகுப்பறைக்கே சென்று விட்டார்கள், ஏனெனில் அவர்களுக்கு சாப்பிடுவதற்கான நேரம் போதாமல் இருந்தது.
ஸ்ரீயுடன் ஆங்கில மொழியில் கலைப்பிரிவைக் கற்கும் மாணவி தான் கலா. ஸ்ரீயின் மாமா மகள், அவள் கொழும்பிலேயே வளர்ந்ததால் அவளது ஆடை அலங்காரங்கள் எல்லாம் நகரத்தில் வளர்ந்தவர்களைப் போல, தமிழ்க் கலாச்சாரப் பாணியிலிருந்து சற்று வித்தியாசமாகவே இருக்கும். நெற்றியில் பொட்டுக் கூட வைக்கமாட்டாள், அவளுடன் பழகினாலேயன்றி அவளை யாரும் ஒரு தமிழ்ப் பெண் என்று அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள். அவளது தோற்றம் அவளை பணக்காரியாகக் காட்டினாலும் மனதென்னமோ ஏழையைப் போன்று தான். மிகவும் அன்பானவள், பல்கலைக்கழக மாணவர்கள் கூட சக மனிதர்களைப் போல தான், ஒருவருடைய தோற்றத்தை வைத்து அவரை பற்றி அபிப்பிராயத்தை வளர்த்து அதிலேயே தொங்கிக் கொண்டிருப்பார்கள். அவள் ஸ்ரீயுடன் தான் சிறுவயதில் இருந்தே பழகி வருகிறாள். ஸ்ரீ ஒரு புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்து அந்தப் புத்தகத்தைப் பற்றி கருத்து சொல்பவனல்ல என்பதை அறிந்தவள் அவள். இந்த ஒரு குணமே அவனுடனான கலாவின் நட்புக்கு முக்கிய காரணம்.

ஸ்ரீ எதையும் எதிர்மறையாக எடுத்துக் கொள்ள மாட்டான். ஏதாவது பிரச்சினை என்று வந்து ஸ்ரீயிடம் நின்றால் “பீ பொஸிடிவ்” என்று சாதாரணமாக சொல்லி விடுவான். கலாக்கு தான் அதில் பெரிதும் உடன்பாடு இருப்பதில்லை. ஏனெனில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதனுடைய நாளைய விளைவைப் பற்றி யோசித்தே கலா இன்றைய பொழுதை நிம்மதியில்லாமல் கழிப்பது தொடர்பாக ஸ்ரீயிடமிருந்து எதிரான கருத்துக்களே வரும். கொஞ்ச நாட்கள் சென்ற பிறகு அந்தப் பிரச்சினை எதுவுமே இல்லையென்பது போல கலா ஸ்ரீயிடம் சொல்லும் போது ஸ்ரீ “நானும் அதைத் தான் சொன்னேன், பட் நீ கவலப் பட்ட நாட்கள் எல்லாம் வேர்ஸ்ட் ஆகிட்டுது பார்த்தியா?, அதை திரும்ப எடுக்கக் கூட இயலாது, சோ எந்த பிரொப்லமா இருந்தாலும் அதை தாங்கிக் கொள்ளுற அளவுக்கு இறைவன் சக்திய நமக்கு தந்து தான் இருப்பான், என்ன ஒன்னு நம்ம நான் அத லேட் ஆஹ் விளங்கிக் கொள்ளுறோம்” என்று கூறிவிடுவான். அதுவும் சரிதான் என்பது போல தலையாட்டுவாள் கலா, ஏனெனில் இதுவரையும் ஸ்ரீ எந்தவொரு பிரச்சினைக்கும் கலங்கியோ அல்லது தன்னிலை இழந்தோ அவள் பார்த்ததில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!