Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Mullai Mullaal Edukkum Viththai Kaathal

Mullai Mullaal Edukkum Viththai Kaathal 5

அத்தியாயம் ஐந்து :

மதி, சுமி ஆகியோரை எதிர்பார்த்து ஏனைய மூன்று நண்பர்களும் காத்திருந்தார்கள். ஐவரும் ஒன்றாகவே வகுப்பறைக்குட் சென்றனர். வழமையாக ஒவ்வொரு வகுப்பறையிலும் நல்லவன், கெட்டவன், காமெடியன் என ஒவ்வொரு ரகமும் வந்து சேரும். ஒவ்வொரு நல்லவனுக்குள்ளேயும் ஒரு கெட்டவன் இருப்பான். பொதுவாகவே எல்லா ஸ்டோரில இருக்கிற மாதிரித்தான் ஒரு வில்லியும், ஒரு வில்லனும் இருப்பான்க. இங்க கொஞ்சம் வித்தியாசமா நல்லவன் வேஷம் போடும் கெட்டவனையும், இல்ல இல்ல கேடுகெட்டவனையும், ஹீரோயினோட ஹீரோவ எப்படியாச்சும் கைக்குள்ள போட்டுக் கொள்ளனும்டு துடிக்கிற ஒரு கேரக்டரையும் நம்ம கதைல எடுத்து இருக்கேன். ஸ்ரீயைப் பார்த்த முதல் நாளிலேயே, அவனது அழகு, பேசும் திறன், நடை உடை பாவனை, அதற்கு மேல அவனைப் பார்த்தாலே பணக்காரன் எனக் காட்டும் தோற்றங்கள் என எண்ணற்ற விடயங்களைக் கண்டு அவன் பார்வையில் விழுந்தவள் தான் காயத்ரி. காயத்ரி நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவள் பேராசைக்காரி, மதியுடன் தான் ஒன்றாக கற்கிறாள்.

இன்னொரு கேரக்டர பத்தி சொல்லியே ஆகணும், நம்ம கதைல சரவணன் னு ஒருத்தன். ரொம்ப நல்லவன், அவனப் போல யாருமே இல்லன்னு மாதிரித்தான் காட்டிக் கொள்ளுவான், ஆளென்னமோ தள தளன்டு தங்கக் கட்டி மாதிரித் தான் இருப்பான், நல்லா உரசிப் பார்த்தாத் தான் தெரியும் தங்கமா இல்ல தகரமா என்று. அவனைப் போல ஒரு சில தருதலைகளைச் சேர்த்துக் கொண்டு கொழும்பு நகரையே சுற்றித் திரிவான். சரவணனுடன் சேர்த்து 5 பேர். ஆனால் சரவணன் மட்டுமே கொழும்பு பல்கலைக் கழகத்தின் கலைப்பீடத்தில் கற்பவன், மற்றைய நால்வரில் ஒருவன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கற்கும் சுரேஸ’, மற்றைய மூவரும் கொழும்பில் பிழைப்புத் தேடி வந்தவர்கள்.

மது, மாது என்று எண்ணற்ற கெட்ட பழக்கங்கள் ஐவருக்கும் உண்டு. சரவணன் பிறப்பிலேயே பணக்காரன், அவன் கம்பஹாவில் தான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே. உயர்தரப் பரீட்சையில் ஒரு மாதிரியாகப் படித்து சித்தியடைந்து விட்டான். பெற்றோருக்கு உலகையே வென்றது போல ஒரு உணர்வு. படிக்கின்ற காலத்திலேயே பாடசாலையில் அவனைப் பற்றி நிறைய புகார்கள் வருவதுண்டு, சரவணனின் தந்தைக்கு சரவணனின் லீலைகள் பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தாலும் “என்ர பிள்ளையைப் பத்தி எனக்குத் தெரியும், இந்த ஸ்கூல மட்டும் நம்பி நாங்க இல்ல, எங்களுக்கு இருக்கிற வசதிக்கும், கௌரவத்துக்கும் ஆயிரம் இடத்தில் படிக்க வைப்போம், என்று வியாக்கியானம் கதைத்துவிட்டு தன் மகனில் தவறில்லையென்றே கூறிவிடுவாள். நாசமாகிப் போகும் இளைஞர்களின் தவறுக்கு துணையாக நிற்பவர்களே இந்த மாதிரியான பெற்றோர் தான் என்பது நிதர்சனமான உண்மையாகும். என்னவொன்று அதை விளங்கிக் கொள்வதற்குள் விளைவுகள் தான் பாரதூரமாகி விடுகின்றன.



Advertisement

 

[the_ad id=”6605″]

 

Advertisement

 

Advertisement

சரவணனுக்கு கேளிக்கை கூத்தென்றால் அவ்வளவு விருப்பம், அதற்கு கொழும்பில் பஞ்சமே இல்லை. இரவில் நேரம் கழித்து வீட்டுக்கு வந்தால் ஏன், எதற்கு என்று கேள்விகள் எழும். குறிப்பாக சரவணனின் அப்பா, அவனைக் கிண்டி ஒரு அகழ்வாராய்ச்சியையே நடாத்தி விடுவார். குரூப் ஸ’டடி என்று ஒற்றை வார்த்தையில் வீட்டில் உள்ளவர்களின் வாயை அடைத்து விடுவான், ஒரு வேளை அந்த ஒற்றை வார்த்தை போதவில்லையெனில் அந்த வார்த்தையை மெருகூட்டுவதற்கென்றே சரவணனின் தாயும் வந்து சேர்ந்து விடுவாள். இப்போது தான் அந்த மாதிரித் தடைகளே இல்லையே, சரவணன் நினைத்தது போலெல்லாம் ஆடினான்.

பெற்றோர் அனுப்பும் பணம் அவனது கேளிக்கை கூத்துகளுக்கே சரியாக இருந்தது. ஏனைய செலவுகளுக்கு வழியில்லை என்ற போதுதான் அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம் என்ற வியாக்கியானம் அவனது நண்பன் கோவிந்தனுக்கே பொருத்தம் என்றவாறு சரவணனை ஒரு போதைப் பொருள் விற்கும் கும்பலிடம் சேர்த்து விட்டான். போதை மாத்திரைகளை விற்றுக் கொடுத்தால் அதற்கு எக்கச்சக்கமாகப் பணம் கிடைக்கும். இந்த பட்டம் படிப்பெல்லாம் அவனது தவறுகளை மறைக்க ஒரு கேடயம் தான்.

அவனுடைய உண்மையான குணத்தை சொல்வதற்கு யாரும் இல்லாததால் பீடத்தைப் பொருத்தவரைக்கும் சரவணன் உதவும் குணம் கொண்டவன், அவனுக்கு சிங்களம் நன்றாகப் பேசத் தெரியும் என்பதால் தமிழ் பேசும் மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பிரதிநிதித்துவப் படுத்தும் பொறுப்பையும் அவனே எடுத்துக் கொண்டான். சரவணன் ஹிந்தி ஹீரோக்கள் போல பார்க்க அவ்வளவு இலட்சணமாக இருப்பான். பல பெண்கள் அவனைக் கண்டு மயங்குவதும் உண்டு, அவனது மோக வலையில் விழும் பெண்கள் சொற்பமானவர்களே, காதல் எனும் வலை விரிப்பான் அல்லது கலவி எனும் போதை ஊட்டுவான்.

Advertisement

அவன் தனது மோக வலையில் விழ வைக்கத் துடிக்கும் பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவள் தான் மதி. அங்கே இங்கே என்று சுற்றி கடைசியில் அவன் முற்றுப் புள்ளி என்னமோ மதியிடம் தான் வந்து நிற்கும். மதி வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பவள், சுமியோ சரவணனை ஒரு சந்தேகக் கண்கொண்டே பார்ப்பாள். மதிக்கும் சுமிக்கும் வாக்குவாதம் வருவதென்றால் அது சரவணன் பற்றிய பேச்சுக்களின் போது மட்டுமேயாகும்.
அன்று மதியம் 12 மணியாகியது. அனைவரும் சிற்றுண்டிச் சாலைக்குச் செல்ல தயாரானார்கள்.

“என்ன மதி நீங்க சாப்பிடயில்லையா? என்றது ஒரு குரல். சுமியோ “ அவளுக்கு வாயிருக்கு அவள் சாப்பிடுவா, எப்போ சாப்பிடனும் என்று எங்களுக்குத் தெரியும் என்றாள். “சும்மா இரேன்டீ கொஞ்சம், ஐயோ சரவணன் சாப்பிடத்தான் போறோம், சோரி இவ பேசுனத மனசில வச்சுக்காதீங்க.. என்றாள் மதி. நிறைய விடயங்களில் சுமி சரவணனிடம் எரிந்தே விழுவாள். சுமியைப் பார்க்கும் போதெல்லாம் சரவணனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். அதுவும் அவள் தனது கனவுக் கன்னியின் விடயங்களில் முட்டுக்கட்டையாக இருப்பது சரவணனுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை.

மதியின் பணிவான வார்த்தைகளைக் கேட்டு தன்னை ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் “இட்ஸ் ஓமே மதி.. சுமி எப்பவும் அப்படித்தானே.. என்று சரவணன் கூற “மிஸ்டர் என்னோட நேம் அஹ் சோட் ஆஹ் கூப்பிடுற ரைட்ஸ் அஹ் உங்களுக்கு யாரு தந்தது? மைன்ட் யுவர் வேட்ஸ் ஓகே? ஏன்றாள் சுமி.

இவனும் பொறுமையை இழந்து “ஹலோ என்ன ரொம்ப ஓவரா போறீங்க, நேம் இருக்கிறதே கூப்பிடுறதுக்கு தானே? நீங்க ஒன்னும் பிரிட்டிஷ் இளவரசி இல்லையே, உங்க நேம் அஹ் மரியாதையாக் கூப்பிடுறதுக்கு? வி ஆர் பிரன்ஸ் என்று பதிலடி கொடுத்தான். “ஏய’ நேம் அஹ் கூப்பிடு ஓகே, அத சோர்ட் ஆக்கி கூப்பிடுற அளவுக்கு நீ ஒன்னும் எனக்கு நெருக்கமாகிப் போகல. உன்னோட நெளிப்பு வளைப்பையெல்லாம் மதி மாதிரி அப்பாவி யார்கிட்டயாச்சும் வச்சுக்கொள் என்று பதிலடி கொடுத்தாள்.

சரவணனுக்கோ அவமானமாகப் போய் விட்டது. அங்கு மதியும் சுமியும் மட்டும் இருந்ததாலும் மதியின் முகபாவனையே மதி தனக்காக இரங்குகிறாள் என்று காட்டியதாலும் தனது வாயை மூடுவதே சிறந்தது என்று சரவணன் “சோரி சுமித்ரா என்ற வார்த்தையுடன் விடைபெற்றான். புலி பதுங்குவதே பாய்வதற்கு என்று தெரியாமல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

[the_ad id=”6605″]

 

 

சுமி ஏன் சரவணனிடம் எரிந்து விழுகிறாள் என்று மதிக்கு தெரியவி;ல்லை காரணம் கேட்டாளும் அவனை எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறுவபாள். அதற்கு ஆதாரம் கேட்டாள் நீ என்ன அவனுக்கு வாழ்க்கைக் கொடுக்கப் போறியா? என்ற ஒற்றைக் கேள்வியில் மதியின் வாயை அடைத்து விடுவாள் சுமி. “ரொம்ப நல்லவ தாண்டீ நீ, பட் கோவம் வரும் போது மாத்திரம் பத்திரகாளியா மாறிடுற என்றாள் மதி. பத்திரகாளி எந்த விஷயத்துக்காக கடவுளா போனா என்று உனக்கு தெரியும் தானே?

“அடிப்பாவி எது கேட்டாலும் அதுக்கு ஒரு பதிலடி வச்சுத் தான் இருப்பியா? உன்கிட்ட வாய் கொடுத்து தப்பவே முடியாது, “தெரியும் தானேடீ அப்போ வாயை மூடிக்கிட்டு வா என்று மதியை எச்சரித்து விட்டு இருவரும் சாப்பிடக் கிளம்பினார்கள்.

சிற்றுண்டிசாலையில் அனைவரும் வரிசையில் நின்றே தமது உணவுக்கான அட்டைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வரிசைப்படி சுமி முன்னும் மதி பின்னுமாக நின்றனர். மதிக்கு பின் வந்து நின்றார் நம்ம ஹீரோ. “ஹாய் உன்ன அன்னைக்குப் பார்த்தது தான்? அதக்குப் பிறது இப்போதான் பாக்கிறேன், எங்க போன நீ? பெகல்டி பக்கமே உன்ன காண்றதில்ல என்ற ஸ்ரீயின் கேள்வியில் சுமியின் தோளின் மீது பிடித்துக் கொண்டிருந்த மதியின் பிடி இருகியது.

சுமி அவளுடைய தடுமாற்றத்தைக் கண்டு திரும்பியவளாக ஸ்ரீயிடம் “ஹாய் நீங்க யாரு இந்த பெகல்டியா? என்றாள். மதியோ அதிர்ந்து போனாள். சரவணனிடம் சீறிப்பாய்பவள் இவனிடம் இப்படி வழிந்து போகிறாளே. “ஹாய், நான் ஸ்ரீ.. இங்க தான் படிக்கிறேன். அன்னைக்கு மதி .. ஐ திங் கிறீன் கலர் ரெஸ்ல வந்திருந்திங்க கரெக்டா? அப்போ பேசினேன் செம்மயா இருந்தாங்க, இன்னைக்கும் செம்மயா இருக்க மதி, உன்னோட ரெஸ்ஸிங் சென்ஸ் வெரி நைஸ் என்று சுமி கேட்ட வேள்விக்கு மதியியை வர்ணித்தான்.

“ ஓ நீங்கதான் அந்த சச்சின் ஆஹ்? உங்களப் பத்தி தான் பெகல்டியே பேசுதே… அத விடுங்க, நான் சுமித்ரா இவ என்னோட பிரண்டு தான் ரொம்ப சைலன்ட், பட் ஏன்கிட்ட மட்டும் தான் வைலன்ட் ஆஹ் பிஹேவ் பண்ணுவா என மதியின் கன்னத்தை கிள்ளி விட்டாள். “ போடீ என்று கையை தட்டிவிட்ட மதி தனது பார்வையை நிலத்தை நோக்கிப் புதைத்தாள். சுமியின் கைத்தடங்கள் கிள்ளிய அவளது கன்னத்தில் பதிந்து சிவந்திருந்தன. அதை கவனித்த ஸ்ரீ ஒரு நிமிடம் அவளது கன்னச் சிவப்பில் தன்னைத் தொலைத்து நின்றான். அன்றிலிருந்து சுமியும் ஸ்ரீயும் நல்ல நண்பர்களாகினர்.

மதிக்கோ ஸ்ரீயைப் பற்றி நினைத்தாலே பற்றிக் கொண்டு வரும். ஏண்டீ அவனோடல்லாம் பேசுற? அவனப்பார்த்தாலே கோவம் கோவமா வருது? என்ற மதியிடம் ஏன் என்ற கேள்வியைக் கேட்டு வைத்தாள் சுமி. எனக்குத் தெரியாதுடீ பார்த்த முதல் நாளிலேயே என்னப் பார்த்து பேபீன்டு சொன்னான், அதோட நீயே பார்த்தா தானே? உனக்கு முன்னால என்னப் பத்தி எப்பிடி வர்ணிக்கிறான். ச்சீ ஒரு பொண்ணப் பார்த்து, அவள் என்ன நினைப்பாள் என்று கூட நினைக்காம சும்மா வர்ணிச்சுக்கிட்டு இருக்கான், என்று கொட்டித் தீர்த்தாள் மதி.

 

[the_ad id=”6605″]

 

 

 

“அதுல என்னடீ இருக்கு உன் ரெஸ் தானே அழகாயிருக்கென்டு சொன்னான், உன்ன சொல்லலியே? ஓகே அவன் உன்னப் பார்த்து ரெஸ் அழகாயிருக்கென்டு சொன்னால், நீ அவனப் பார்த்த உன் ரெஸ் அழகாயில்லை என்டு சொல்லு என்றாள் சுமி. அது எப்பிடி சொல்லுறது வெளிப்படையா? அப்போ வெளிப்டையா இருக்கிறவன் எல்லாம் கெட்டவனா என்று சக்கைப் போடு போட்டாள் சுமி.

சிறிது நேரம் யோசித்து விட்டு “ ஸ்ரீயைப் பார்த்தா மட்டும் நல்லவன் என்டு சொல்ற? அவனை விடயும் எவ்வளோ மரியாதையான பையன் சரவணன், அவன மட்டும் ஏன் உனக்கு பிடிக்கையில்ல? ஒரு நாள் கூட என்னைப் பார்த்து மரியாதை குறைவா பேசுனதே இல்ல, அதோட நீ கூட எவ்வளோ அவமானப்படுத்தி பேசியிருப்ப ஒரு வார்த்தை பேசியிருப்பானா? என்று கேட்க சுமி கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாள்.

மதி ஒரு விஷயத்த நல்லா தெரிஞ்சு கொள், வெளிப்படையா இருக்கிறவன் எல்லாம் மோசமானவனும் இல்ல, அமைதியா இருக்கிறவன் எல்லாம் நல்லனும் இல்ல, ஒரு ஆண் பார்க்கிற பார்வைய வச்சே அவன் எந்த நோக்கத்தோட பேசுறாங்கிறத கண்டு பிடிச்சிரலாம். உனக்கே நல்லா தெரியும் நான் யாரையும் உன்கிட்ட இதுவரைக்கும் தப்பா சொன்னதில்ல. பட் ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன், சரவனனோட பார்வையில தப்பான நோக்கமிருக்குடீ என்றாள் சுமி. அதற்கு மேலும் கதையை நீளவிடாமல் இருவரும் அமைதியாhர்கள். விடுதிக்குத் திடும்பியவுடன் தத்தமது வேளைகளையெல’லாம் முடித்து விட்டு மதி உறங்கச் செல்லும் போது அவளுடைய நினைவெல்லாம் சுமி, சரவணன், ஸ்ரீயைப் பற்றியே இருந்தது.

இந்த சுமி ஏன் இப்படி இருக்கிறா? அவளுக்கு ரொம்ப டீசென்ட் ஆஹ் இருக்கிற சரவணன ஆஹ் பிடிக்கயில்லையாம், ஆனா அந்த ஸ்ரீ அஹ் மட்டும் பிடிச்சிருக்காம். சரவணன் இதுவரைக்கும் எந்தப் பெண்களுடனும் வழிந்து பேசி கண்டதில்லை. ஓடி ஓடி தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான வேலைகளையெல்லாம் அவனே செய்கிறான். சுமி எவ்வளவு அவமானப்படுத்தியிருப்பாள் அப்போதெல்லாம் எதிர்த்து ஒரு வார்த்தை பேசியிருக்க மாட்டான். அவனுக்கு நண்பர்களும் அதிகம், ஆனால் ஸ்ரீக்கோ தனித்துவமான ஒரு திமிறு எப்போதும் குடிகொண்டிருப்பதால் அது மதிக்கு அவனைக் கெட்டவனாகவே காட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!