Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 39

என்னவள்_39

 

பிருந்தா  அவளுக்கு தெரியாமலேயே பிரச்சனையில் சிக்கி இருந்தால் டிக்டாக்கில்  ஃபாலோ.. என ஆரம்பித்து இப்போது நம்பரை வாட்ஸ்சப்பில் தந்து பேசும் அளவிற்கு மாறி இருந்தாள்.இது எல்லாமே மெள்ள மெள்ள நடந்து கொண்டு இருந்தது.  இதை பற்றி யாருக்கும் தெரிந்து  இருக்கவில்லை ஆரம்பத்தில் வீட்டில் இருந்த குழப்பத்தில் இவளை சிறு பெண் என்று கவனிக்க தவறி இருந்தனர். 

அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது சாட்டிங்கில் இருந்தாள். 



Advertisement

 

காலேஜ் நண்பர்கள் சப்ஜட்  சம்பந்தமாக 

என அடிக்கடி ஏதாவது டவுட் கேட்க என்று இருக்க…வீட்டில் யாருக்கும் தவறாக தெரியவில்லை. பிரச்சினையில் அவளுக்கே தெரியாமல் சிக்கி இருந்தால்…அதனுடைய வீரியம் எதுவும் அப்போது அவளுக்கு தெரியவில்லை. 

Advertisement

வீடு அதைவிட்டால் காலேஜ் அதுதாண்டி அதிகம் வெளிப்பழக்கம் நிறைய தெரிந்து இருக்கவில்லை.மனிதர்களின் மற்றோரு முகம் அவளுக்கு சுத்தமாக தெரியவில்லை…காலேஜ் செல்வது கூட பெரும்பாலும் கார்த்திக் அல்லது இவளுடைய தந்தை யாராவது அழைத்து சென்று கொண்டு இருந்தனர்.

Advertisement

 

சின்ன சின்ன பேச்சு வார்த்தை என்று ஆரம்பித்து இவளுடைய தகவலை இவளுக்கே தெரியாமல் வாங்கிக்கொண்டு இருந்தான்  இவளது நண்பன் என்ற போர்வையில்…இருக்கும் இடம் வசதி வாய்ப்புகள் என பலவற்றையும். கேட்டுத் தெரிந்து கொண்டவன் இவளை வலையில் சிக்க வைக்க நேரம் பார்த்து கொண்டு இருந்தான். 

 

Advertisement

இது பற்றி எதுவுமே தெரியாமல் அண்ணா…என்று அழைத்து பேசிக்கொண்டு இருந்தாள் பிருந்தா…சமீபத்தில் எடுத்த புகைப்படம் வரைக்கும் வாட்ச்சப்பில் பகிர்ந்து இருந்தாள் பிருந்தா…

 

இங்கே காலையிலேயே சக்தியை அழைத்து வந்தவன் வீட்டில் இறக்கிவிட்டுட்டு வேலைக்கு புறப்பட்டு இருந்தான்.லட்சுமி தான் “என்ன ஆச்சு சக்தி ஒருவாரம் அங்கே தங்கப்போறேன்னு சொல்லிட்டு போன…அதென்ன ஒரே நாளில் ஒடி வந்தாச்சு என்று கேட்க…”

 

கொஞ்சம் திகைத்தபடி கார்த்திக்கை பார்க்க அருகில் வந்தவன் “ஸாரி நீ ஃபோன் பண்ணினதாதான் சொல்லிட்டு உன்னை கூப்பிட வந்தேன் ஏதாவது சொல்லி சமாளி “என்றபடி நிற்காமல் புறப்பட்டு இருத்தான்.

 

அன்று முழுவதுமே மகிழ்ச்சியோடு சுற்றி கொண்டு இருந்தாள் சக்தி.  மதியம் கூட சாப்பிட வந்தவன் இவளை மட்டுமே பார்வையால் தொடர்ந்து கொண்டு இருந்தான். சற்று நேரம் வரைக்கும் அவனது பார்வையை கவனித்தவள் அவன் எதிரில் அமர முடியாமல் வேந்தனை அழைத்து கொண்டு மாடிக்குசென்று இருந்தாள். 

 

[the_ad id=”6605″]

 

 

 

“அத்தை இவன் தூங்கற டைம்… கொஞ்சம் நேரம் இவனை  தூங்க வச்சிட்டு வரேன் என்று..நகர்ந்து இருந்தாள்.” புறப்படும் முன்பு இவளை பார்க்க என மாடியில் படி ஏறவும் ஃபோன் அழைக்கவும் சரியாக இருந்தது. சிவா தான் அழைத்து கொண்டு இருந்தான்.

 

“என்ன கார்த்திக் காலையிலேயே வந்து அழைச்சிட்டு போயிட்டயாம் திவ்யா சொன்னா ஒரு நாள் கூட பிரிஞ்சு இருக்க முடியலையா…என்றவன்… முன்னாடி சொன்னது தான் ஃரூம் புக் பண்ணவா ரெண்டு பேருக்கும் புறப்பட்டு வருகிறாயா…”

 

“டேய் இதெல்லாம் ஓவர் பார்த்துக்கோ  இப்பதான் பேசவே ஆரம்பித்து இருக்கிறோம் நீ சொல்லறது நடக்க இன்னும் நாள் ஆகும்…”

 

“அடப்பாவி டேய் ஒரு வருஷம் நெருங்கப்போகுதுடா…ரெண்டு பேரும் சரியில்லை போல இருக்கே…தனியா ரெண்டு பேருக்கும் டியூசன் எடுக்கணுமோ…”

 

ஒரு வெங்காயமும் தேவை இல்லை நாங்கள் பார்த்துப்போம்…இப்ப ஃபோனை வை என்று படியேறியவன் அங்கே சக்தியை பார்த்தவனுக்கு  சக்தியின் முகத்தை பார்க்க முடியவில்லை…அவள் அங்கே இருந்த தோற்றம் அப்படி…

வேந்தனை மடியில் வைத்து விளையாட்டு காட்டிக்கொண்டு இருக்க…அவள் அணிந்திருந்த உடை சற்று இறங்கி இருந்தது. கார்த்திக் அவளை பார்க்கவும் சட்டென திரும்பி கொண்டான். இவனை பார்க்கவும் அவளும் எழுந்தவள் “என்ன கார்த்திக் ஏதாவது வேண்டுமா” என்றபடி எழுந்து நிற்க…பதில் தான் இவனுக்கு சொல்ல தெரியவில்லை. 

 

“வந்து…வந்து” என்று ஆரம்பித்தவன் கடைசி நிமிடத்தில் “சாயங்காலம் வெளியே போகலாம் புறப்பட்டு இரு…”எனறு நகர…இவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை. 

 

“என்ன ஆச்சு ஏதோ உளர்ற மாதிரி இருக்கு …என்று நினைத்தவள் உடனே அவனை பின்தோடர அங்கே ஹாலில் தலையை கோதியபடி நின்றிருந்தான். 

 

“கார்த்திக்” என்று  அவனை நெருங்கி வந்தவள் “எங்க போறோம் எத்தனை மணிக்கு…ரெடியாக இருக்கணும் எதுவும் சொல்லலை…”

 

“ம்…ஐஸ்கிரீம் பார்லர்…அங்கே தான் போறோம்…”

 

“சரி… வீட்டில் எல்லோரும் போகலாமா…”

 

“அம்மா வரமாட்டாங்க…”

 

“சரி…பிருந்தாவையும் கூப்பிட்டுட்டு போகலாம் தானே ஃபோன் பண்ணிடுங்க என்றபடி நகர்ந்தாள்.”

 

அவள் நகரவும்  தான் கார்த்திக்க்கிற்கு மூச்சு விடவே முடிந்தது. ‘என்ன ஆச்சு எனக்கு ஏன் இப்படி இருக்கிறேன் இவள் கிட்ட வந்தாலே என்னவோ செய்யுது இவள்கிட்ட பேசவும் முடியவில்லை,நிறைய பேசணும்ன்னும் தோணுது…அவள்கிட்ட எந்த மாற்றமும் இல்லை எப்போதும் போல இருக்கறா ஆனால் எனக்கு …என்ன மாதிரி உணர்வு இது…இத்தனை நாள் வரைக்கும் பெரிதாக தெரியாமல் இருக்க…இந்த உணர்வு அவனை மிகவும் படுத்தி எடுத்தது.’

 

மாலை சரியாக ஐந்து மணியை தான்டிய போது  சரியாக அழைத்து செல்ல வந்து இருந்தான். மாடிக்கு செல்ல அங்கே சக்தி புறப்பட்டு கொண்டு இருந்தாள் வழக்கம் போல சிறு பார்டரில் ஓரு காட்டன் சேலை நெற்றியில் சிறு புள்ளிமாய் ஒரு ஸ்டிக்கர் சந்தனம் குங்குமம் வைத்து இருக்க… ஜடையை நீளமாக பிண்ணி தொங்க விட்டிருந்தாள்.  இவனை பார்க்கவும் “புறப்படலாமா…ஒகே தானே என்று கேட்க… அவளுக்கு அருகில் வந்தவன் அவளை பார்த்தபடியே என்னவோ மிஸ் ஆகுதே என்று கேட்டான்.”

 

“சரி தானே வேற என்ன” ?என்றபடி  நகர்ந்து கண்ணாடியில் முகம் பார்க்க அவளுக்கு பின்புறமாக அருகில் வந்து நின்றவன் அவளை கண்ணாடியில் பார்த்தபடியே

“இங்கே குங்குமம் வைக்கலை  என்றபடி குங்குமத்தை கையில் எடுத்தவன் அவளது நெற்றி வகிட்டில்  வைத்து விட்டான். எனக்கு இங்கே குங்குமம் வச்சா ரொம்ப பிடிக்கும் சக்தி” என்ற பதிலோடு…ஒரு நிமிடம் நெற்றி வகிட்டில் கை படவும் வேகமாக ஒரு சிலிர்ப்பு சக்தியின் உடல் முழுக்க ஒடி மறைந்தது.

 

அந்த நிமிடத்தில் முகம் முழுக்க சிவந்து இருந்தது.  பின் புறத்தில் நின்றாலும் நெற்றியில் கைபட்டதோடு சரி அதிக நெருக்கம் இல்லை தான்.  ஆனாலும் ஏதோ ஓரு படபடப்பு ,ரயில் ஒடுவது போல தடதடவென இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.கார்த்திக்கிற்கு நகரும் எண்ணம் எதுவும் இல்லை  அப்படியே நின்று இருக்க இவள் தான் மெதுவாக…”போகலாம் கார்த்திக் பிருந்தா ரெடி ஆகி இருப்பாள் “என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றாள்.

 

இவள் முன்னாள் செல்ல அவளை பின் தொடர்ந்தான் அங்கே பிருந்தா ஒரு சுடிதாரோடு சிறு போனிடைல் என வெளிவந்தவள்” வாங்க அண்ணி போகலாம் என்றவள் இவளது முகம் பார்த்து அண்ணி முகத்திற்கு என்ன போட்டிங்க…ஏதோ அழகான க்ளோ தெரியுது என்று கேட்க…சக்தி வேகமாக கன்னத்தை தேய்த்து விட்டபடி அச்சோ நான் எதுவும் போடலை பிருந்தா நீ  எதையாவது கேட்டு வைக்காதே என்றபடி அத்தை நாங்கள் புறப்பட்டாச்சு என்றபடி லட்சுமியை தேடி நகர்ந்தாள்.”

 

[the_ad id=”6605″]

 

 

 

கார்த்திக்கின் தாயார் இவளை பார்க்கவும் சக்தியிடம் “நீங்கள் போயிட்டு வாங்க நான் வேந்தனை பார்த்துக்கறேன் இன்றைக்கு இவனை பார்க்க தாத்தா,பாட்டி ரெண்டு பேரும் வர்றேன்னு சொல்லி இருக்கறாங்க…”

 

“அம்மா அங்கிள் இன்றைக்கு வரேன்னு சொல்லி இருக்கறாங்களா…”

 

“ஆமாம் டா…”

 

“எத்தனை மணிக்கு மா…அவங்க புறப்படறதுக்குல்ல நாங்க வரப்பார்க்கிறோம் என்று கார்த்திக் சொல்ல சரிடா புறப்படுங்க என்று  இவர்களை  அனுப்பி வைத்து இருந்தார்.”

 

பிருந்தா நீண்ட நாட்களுக்கு பிறகு தன் அண்ணாவோடு செல்வதால் நிறைய பேசிக்கொண்டே வந்து கொண்டு இருந்தாள். இரண்டு பேருமே பின் இருக்கையில் அமர்ந்து இருக்க…சக்தியிடம் நிறைய பேசிக்க்கொண்டு வந்திருந்தாள். கார்த்திக் இரண்டு பேரும் பேசுவதை கேட்ட்க  மட்டுமே செய்தான்.

 

“அண்ணி அங்கே போகவும் ஐஸ்கிரீம் வந்ததும் உடனே சாப்பிட ஆரம்பித்து விடனும் லேட் பண்ண கூடாது சரியா. “

 

“ஏன்  அப்படி பிருந்தா என்று கேட்க..”.கார்த்திக் தான் இதற்கு பதில் சொன்னான் “நோ…பிருந்தா நீ சொல்லக்கூடாது.  அங்கே போய் தெரிஞ்சிக்கட்டும்.”

 

“ஏய் பிருந்தா என்ன சிக்ரெட எனக்கு சொல்லு…உங்களை நம்பி வரலாம் தானே…சக்தி பிருந்தாவிடம் கேட்க…”

 

“சத்தியமாக ஐஸ்கிரீம் வாங்கி தருவேன் என்ன நம்பலாம் என்று சொல்ல பிருந்தா சிரிக்க மட்டுமே செய்தாள்.”

 

இவர்கள் அடிக்கடி செல்லும் ஐஸ்கிரீம் பார்லர் என்பதால் இவர்களை பார்க்கவுமே” வாங்க கார்த்திக் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு…அந்த கடைசி சேரில் உட்காருங்கள் என்று இவர்கள் அமர வைத்து விட்டு தேவையானதை ஆர்டர் எடுக்க வந்து நின்றான். “

 

ஆளுக்கு ஒன்று என்று முதலில் ஆரம்பிக்க சக்தியிடம் பிடிச்சு ஃபிலேவர் சொல்லு என்றபடி பிருந்தாவிற்கு தேவையானதை ஆர்டர் செய்தான். வந்தது தான் தெரியும் முதலில் அவனுடையதை சாப்பிட்டு முடிக்கவும் யோசிக்காமல் பிருந்தாவுடையதை பிடிங்கி இருந்தான்.

 

“அண்ணா நோ பிடிங்கி சாப்பிடக்கூடாது” என்று சொன்னது எதுவும் காதில் விழவில்லை அவனுக்கு…இதை வேடிக்கை பார்த்த சக்திக்கு அடக்கமுடியாத அளவுக்கு சிரிப்பு வந்து இருந்தது.  இவள் சிரித்து கொண்டு இருக்கும் போதே. ..சிரிச்சா விட எல்லாம் மாட்டோம் அங்கேயும் பிடிங்கி சாப்பிடுவேன் என்று கையில் வைத்து இருந்த கோன் ஐஸ்கிரீம்மை அவளது கையோடு பிடித்து சாப்பிட ஆரம்பித்தான். 

 

“கார்த்திக் டூ மச் இது சீட்டிங் பிருந்தா நீயும் ஏமாற்றிட்ட இது போங்கு…என்று சொன்னபோதே  முழுதும் சாப்பிட்டு முடித்து இருந்தான்.”

 

“மிஷன் கம்ளிட்டட்  பிருந்தா போ அடுத்த ரவுண்டு சாப்பிடலாம் “என்று கார்த்திக் அமர…ஒருவழியாக சிரித்தபடியே வீட்டிற்கு புறப்பட்டனர். அதே சிரிப்போடு உள்ளே நுழைய அங்கே மாயாவின் தந்தை அவரது மனைவியோடு பேரனை கொஞ்சிக்கொண்டு இருந்தார்…

 

“வாங்க அங்கிள் என்றபடி கார்த்திக் முதலில் செல்ல…பின்னே வந்த சக்தியும் வாங்கபா…என்றபடி சமையல் அறைக்குள் நுழைந்தாள். அங்கே லட்சுமி காபி போட்டு எடுத்து வர அதை வாங்கிக்கொண்டவள் ஹாலை நோக்கி எடுத்து சென்ளாள் இருவருக்கும் கொடுக்க…”.

 

உள்ளே வரும் போதே முகம்  சிரித்து சிவந்திருக்க உள்ளே வரவும் பார்த்தது சக்தியின் அந்த முகத்தை தான்.  எப்படி சமாதானம் செய்தாலும் மகள் வாழவேண்டிய வாழ்க்கை என்பது மனதில் ஒரத்தில் வராமலும் இல்லை.  கார்த்திக்கின் முகம் கூட நீண்ட நாட்களுக்கு  பிறகு மகிழ்ச்சியாக இருக்க… சற்று நேரம் எல்லாம் இரண்டு பேரும் புறப்பட்டு இருந்தனர்.

 

மாயாவின் தந்தை தான்… “இரண்டு தாள் குழந்தையை அழைச்சிட்டு போயிட்டு வரவா “என்று கேட்டார்.  கார்த்திக் சக்தி முகத்தை பார்க்க சக்தி லட்சுமியின் முகத்தை பார்த்தாள்.

 

“அழுவான்ணா இன்னும் கொஞ்சம் பெரியவன் ஆகட்டும்…இப்போது கூப்பிட்டுட்டு போய் அழுதான்னா உடனே ஓடி வரணும் என்று சொல்லும் போதே அவரிடம் இருந்து சக்தியிடம் ம்மா..என்று மழலையோடு இவளிடம் தாவி இருந்தான் வேந்தன்.  அவளிடம் வந்த அந்த நிமிடத்தில் உடனே கார்த்திக்கின் மேல் அப்படியே சாய்ந்து விழுந்தான். சிரித்தபடியே அவனும் கையில் வாங்கிக்கொள்ள…அதற்கு மேல் அங்கே இருக்காமல் இரண்டு பேரும் புறப்பட்டு சென்றனர்.”

 

வெளியேறியதும்  மாயாவின் தாயார் முதலில் சொன்னது “மாயா வாழ  வேண்டிய வாழ்க்கைங்க…என்று கண்களில் கண்ணீர் சேர சொன்னது தான்.”

 

“முடிஞ்சு  போனதை பேச்க்கூடாது. அவனாவது இனி நிம்மதியாக இருக்கட்டும் இனி இங்கே அடிக்கடி வர வேண்டாம்.  எப்படி இருந்தாலும் மனதில் ஒரு ஓரத்தில் கஷ்டமாகதான் இருக்கு…நமக்கு இனி அங்கே எந்த உறவும்  கிடையாது அதை புரிஞ்சிக்கணும். பேரன் இருக்கறான் தான் அது கூட இப்போதைக்கு அவன்கிட்ட போறது கூட சரியில்லை அங்கே அவனுக்கு  அன்பு  தேவையான அளவு கிடைக்கிறது…அது கிடைக்காட்டி பையனை கேட்கலாம்…இப்ப மட்டும் அல்ல எப்பவும் கார்த்திக் பையனை விட மாட்டான்  அந்த பொண்ணும் விட்டுத்தராது…என்று மனைவிக்கு மட்டும் அல்ல தனக்கும் சொல்லி கொண்டார்.”

 

 

[the_ad id=”6605″]

 

 

 

இரவு கூட தூங்காமல் அன்று நடந்ததை அசை போட்டபடி  புரண்டு புரண்டு கார்த்திக் படுத்து கொண்டு இருக்க… அவன் புறம் திரும்பிய சக்தி அவனிடம்” என்ன ஆச்சு தூக்கம் வரலையா…என்று கேட்க..” சொல்ல இவனிடம் தான் பதில் எதுவும் இல்லை. 

 

“கண்ணை மூடுங்க கார்த்திக் தூக்கம் வரும் ” என்றபடி அவனது முகத்தை பார்த்தபடியே ஆழ்ந்த தூக்கத்திற்கு சக்தி சென்று இருந்தாள். இவளை பார்த்தவனுக்கு தான் தூக்கம் எங்கோ சென்று ஒழிந்து இருந்தது. நீண்ட நேரம் வரைக்கும் அசையாமல் அவளது முகத்தை பார்த்தவனுக்கு  தூக்கம் வந்த மோது விடிய தொடங்கி இருந்தது. “இன்னும் எத்தனை நாள் கார்த்திக் என்று கேட்பது போல சூரியனின் கதிர்கள் ஐன்னல் வழியே இவனை சுட்டது”

 

தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!