Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 28 2

தெய்வநாயகியோ சொத்தை துச்சமென மதித்து தன்னிடம் அனைத்தையும் கொடுத்து விட்டு சென்ற  வரலட்சுமியை நினைத்துக் கொண்டு வேலையாள் சமைத்து வைத்த சுவை இல்லாத உணவை விழுங்கி கொண்டு இருந்தவர்…

வரலட்சுமியின் பேச்சான வார்த்தைகள் நெஞ்சுக்குழியை விட்டு அகலாது அங்கயே நின்று இருந்ததால்…

இந்த ஒரு வாரமாக என்னவோ உணவு  தொண்டையை விட்டு போவேனா என்று அடம்பித்து நின்றது. அப்போது அங்கு வந்த சங்கரலிங்கம்…

சமையல் செய்யும் அம்மாவான… கல்யாணியிடம்..சாப்பிடும் மேசையில் அமர்ந்து… “ஆயிடுச்சாம்மா…எனக்கு நேரம் ஆகுது.” என்று குரல் கொடுத்து தட்டில் கை வைத்து பத்து நிமிடம் கழித்தே தோசையை எடுத்து வைத்த கல்யாணி கூடவே தேங்காய் சட்டினியையும் அந்த தட்டின் ஓரத்தில் வைத்து விட்டு, தன் கடமை முடிந்தது என்று மீண்டும் சமையல்கட்டில் தஞ்சம் புகுந்து கொண்டார் கல்யாணி.



Advertisement

ஏனோ அந்த உணவையின் சுவையையும் வைத்த முறையையும் பார்த்து சங்கரலிங்கத்திற்க்கு தன் மூத்த மருமகள் வரலட்சுமியின் நினைவு வந்தது.

இவ்வீட்டில் அடி எடுத்து வைத்த அன்றே….அன்றைய இரவே வரலட்சுமியின் உணவை தயாரித்து கொடுக்க ஆராம்பித்தவள்..

இதோ போன வாரம் இந்த வீட்டில் போகும் வரை…அந்த சமையல் கட்டு மட்டும் அல்லாது இந்த வீட்டின் ஆரோக்கியமும் அவள் வசம் இருந்தது.

Advertisement

உணவுக்கு சுவை எவ்வளவு முக்கியமோ…ஆரோக்கியம் அதை விட மிக மிக முக்கியமான ஒன்று…அதை தன் மருமகள் நன்கு தெரிந்து வைத்திருந்தாள்.

Advertisement

வாரத்திற்க்கு இரண்டு நாள் கீரை.  வாரத்திற்க்கு இரண்டு நாள் வாழை பூ…இப்படி பார்த்து பார்த்து சமைப்பது ஆகட்டும்.

எண்ணையை விட வேண்டிய பொருளுக்கு விட்டு, குறைக்க வேண்டிய  உணவில் குறைந்து, தங்கள் ஆரோக்கியத்தை தன் கையில் வைத்திருந்த தன் மூத்த மருமகளின் நினைவில் அவரால் அடுத்து அந்த தோசையை பிட்டு தன் வாயில் வைக்க முடியாது அப்படியே அமர்ந்து விட்டார்.

இதை அனைத்தும் எதிரில் அமர்ந்திருந்த தெய்வநாயகியும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். அவரால் இப்போது எதுவும் செய்ய முடியாது.

Advertisement

தன் கணவர் எதை நினைத்து இப்படி வருந்துகிறார் என்று இத்தனை வருட வாழ்க்கை அனுபத்தை கொண்டு தெரிந்துக் கொண்டவருக்கு,  அதற்க்கு ஆதரவாய் பேச முடியாத  ஊமையாய் அமர்ந்திருந்தார்.

ஆம்  ஊமையாக தான் இருக்க வேண்டி இருந்தது. தன் கணவர் பத்து வருடமாக ஒட்டும் ஒரசாது வாழ்ந்த வாழ்க்கை…கடந்த ஒரு வாரமாய் அதற்க்கும்  முடிவு கட்டுவது போல்…

“இனி நானும் நீயும் ஒரே வீட்டில் இருக்கோம். அவ்வளவு தான் நமக்கான உறவு…இதை மீறி என்னோட பழைய படி இருக்கலாம் என்று நினச்ச…நான் நம்ம  தோட்டத்து வீட்டுக்கு போயிடுவேன். அங்கு போனா ஊர் என்ன என்ன பேசுமுன்னு நான் உனக்கு சொல்ல தேவையில்லை.”

அது தான் சங்கரலிங்கம் தெய்வநாயகியிடம் பேசிய கடைசி பேச்சு.இதோ இன்று இப்போது வரை தன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காது அவர் சொன்னதை செய்துக் கொண்டு இருக்கிறார்.

ஆனால்  தெய்வநாயகியால் அப்படி இருக்க முடியாது..இதோ அவர் முகத்தை முகத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறார். பேச முயற்ச்சி செய்தாலே எங்கு வீட்டை விட்டே போய் விடுவாரே என்று அஞ்சியவராய், அவர் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தாரே ஒழிய…

“ஏன் சாப்பிடல. நான் பரிமாறட்டுமா…?” என்று கேட்காது கேட்க உரிமையும் இல்லாது இருந்தார்.

சங்கரலிங்கம் இது வரை சமையல்காரி கையால் சாப்பிட்டது கிடையாது. கல்யாணத்திற்க்கு முன் அம்மா கையில்…கல்யாணம் ஆன பின் மனைவி …பின் எப்போது வரலட்சுமி இவ்வீட்டில் காலடி எடுத்து வைத்தாளோ…

அன்றில் இருந்து சமைப்பது பரிமாறுவது அனைவருக்கும் அவளே…இன்று ஏனோ தானோ என்று சமைத்த உணவை அதே போல் பரிமாற…சாப்பிட பிடிக்காது அதுவும் வரலட்சுமியின் மங்கலகரமான  முகம் நினைவுக்கு வர…

கைய் உதறி எழுந்தவரை தெய்வநாயகி … “என்…”  என்னங்க என்று கூட முடிக்க விடாது  சங்கரலிங்கம் பார்த்த பார்வையில்  வாயை  மூடிக் கொண்டு விட்டார்.

சங்கரலிங்கத்திற்க்கு பின்… அவரின் இரு மகன்கள் மருமகள்கள்  சாப்பிட வந்து அமர்ந்தனர்கள். அவர்களும் கல்யாணி பரிமாறிய சமையலை ஏனோ தானோ என்று சாப்பிட்டுக் கொண்டு இருக்க…

அப்போது தெய்வநாயகியின் வயிற்றில் பிறந்த முதல் குழந்தை தில்லை… ஆனாலும் உங்களுக்கு இந்த தைரியம் வந்து இருக்க கூடாதும்மா…?” என்று சொன்னான்.

தெய்வநாயகி அது என்ன தைரியம் என்று கேட்கவில்லை. கடந்த வாரம் முழுவதும் வீட்டில் இது தானே பேச்சாய் இருக்கிறது.

“ஆமா ஆமா…யப்பா என்ன தைரியம் என்ன தைரியம்.” என்று தில்லையின் பேச்சை அவன் மனைவி முடித்து வைத்தாள்.

கடைசி மகனோ… “சரி செஞ்சது தான் செஞ்சிங்க. அவங்கல நல்ல முறையில் வளர்த்து இருக்கலாம்ல…பாருங்க நீங்க செஞ்ச அட்டகாசத்தை தாங்க முடியாது  மணி அவங்கல அவங்க  வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டா…” என்று பேச்சை…

அவனின் மனைவி… “இன்னைக்கு வீரா அவங்க அவன் வாங்கிய தோப்பு வீட்டில் தனியா வைக்கிறான்.” என்று தனக்கு தெரிந்த தகவலை சொன்னாள்.

அதற்க்கு வாசுதேவன்… “ஏன்மா வீரா வீட்டிலேயே இருக்கலாம்ல…மணி மீது இருக்கும் காதலுக்காக நம் வீரா தான் எதுன்னாலும் செய்வானே…” என்று சொன்னதற்க்கு…

வசீகரன்… “செய்வான் செய்வான் தான். ஆனா என்ன பெரியம்மா தனியா போகனுமுன்னு சொல்லி இருப்பாங்க. பார்த்தோமே அவங்க சுயமரியாதையை… எவ்வளவு சொத்து…அவ்வளவு சொத்தையும் சும்மா கொடுத்துட்டு…

அவங்க பேசிய பேச்சான… “இவரை ஒன்னும் தெரியாம ஆக்குன சொத்து எனக்கு வேண்டாம். நீங்கல வெச்சிக்கோங்க. ஆனா நீங்க அவரை அவங்க அம்மா கிட்டவே விட்டு இருந்தா…கொஞ்சம் நல்லா வந்து இருப்பார்.

ஏன்னா அம்மா வளர்ப்பு அம்மா வளர்ப்பு தானே…அவங்கலால மட்டும் தான் மத்த  குழந்தைகளை காட்டிலும், இவங்க மேல கூடுதல் கவனம் செலுத்தி வளர்க்க முடியும்.

அவர் அறியாமையா இருக்கவும், அவங்க அம்மாவை நேரில் பார்த்தும் இவங்க தான் அம்மா என்று தெரியாம யாரோ போல் கடந்து.. தெரிஞ்ச அப்போ அவங்க இல்லேன்னு…ஆனா நிலைக்கு கொண்டு சென்ற இந்த பணம் எங்களுக்கு வேண்டாம்.”

இத்தனை நாள் வாய் திறக்காது, மகளையும் வாய் திறக்க விடாது, இருந்த  வரலட்சுமி அன்று அனைவருக்கும் முன் தெய்வநாயகியிடம்.. “உன் சொத்தெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை.” என்பது போல் அனைத்தையும் இவ்வீட்டில் வீசி எரிந்து விட்டு, தன் கணவனின் கைய் பற்றி இவ்வீட்டை விட்டு போன  அந்நாளை யாராலும் மறக்க முடியாது.

ஏன் நம் தெய்வநாயகியே… வரலட்சுமியின் பேச்சை கேட்டு அறண்டு தான் போய் விட்டார். அதுவும் உன் சொத்து வேண்டாம் என்று சொன்ன அந்த வார்த்தையில் தெய்வநாயகி மனதில் பலமாக அடிவாங்கி தான் போனார்.

அதோடு தன் மகள் சங்கரியும்… “இப்படி பட்ட  அம்மாவே எனக்கு தேவையில்லை. அதோடு நீங்க எனக்கு கொடுக்க நினச்ச  சொத்தும் தேவையில்லை.” என்று சொன்னதற்க்கு…

தெய்வநாயகி பதறி போய்… “இது எல்லாம் உனக்கு சேர வேண்டியது. உனக்கு  உரிமை பட்டது.” என்ற பேச்சுக்கும்.

அன்று தன் மகள் பேசிய… “எனக்கு உரிமை பட்டவர் என் கணவர். உரிமையானவன் என் மகன். என் வீட்டு லட்சுமி என் மருமகள் சிட்டு…

நீங்க   கொடுத்த இந்த சொத்தை நான் ஏத்துக்கிட்டா…இந்த உரிமைகள் எல்லாம் என்னை  விட்டு போயிடும். உங்கல போல உயிர் இல்லா சொத்துக்காக..உயிர் உள்ள சொந்தத்தை இழக்க  நான் தாயாராய் இல்லை.”  என்று  சொல்லி சங்கரி தாய் மகள் உறவையே வெட்டிக் கொண்டு போய் விட்டார். ஆம் என் மகள் சொன்னதும் ஒருவகை சரி தானே…

எதை காப்பாத்திக்க நான் இவ்வளவு செய்தேனோ… அது எதுவும் இப்போது என்னிடம் இல்லையே…தன் கணவன் தன்னை விட்டு  இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ள போகிறாரோ என்று நினைத்து தான்,  வேலைக்காரி குழந்தையை தன் குழந்தை என்று சொன்னாள்.

அதே போல் வேலைக்காரி குழந்தைக்கு சொத்து சேரக்கூடாது என்று நினைத்து தான், அவனின் குறையை காரணம் காட்டி…ஏதும் தெரியாதவனாய் வளர்த்து…அதே போல்  ஏன் என்று கேட்க வசதி இல்லாத வீட்டில் பெண் எடுத்து அவளையும் தன் வீட்டு வேலைக்காரி ஆக்கி… இத்தனையும் செய்தது எதற்ககாக…?

அனைத்தையும் எதற்க்காக செய்தாரோ இப்பது எதுவும் அவரிடம் இல்லை. கணவரின் பாசம் இல்லாது பிள்ளைகளின் இளக்காரம் பேச்சை கேட்டுக் கொண்டும்… மகள் உறவு அறுந்தும்…இப்படி நிர்கதியாக அவர் இருக்க..

அங்கு வரலட்சுமி தன் மருமகன் வாங்கி கொடுத்த பண்ணை வீட்டில்…ஒரு பக்கம் பூக்களும்…மறுபக்கம் காய்கறி செடிகளும்…என்று ஒரு பக்கம் தங்கள் வருமானத்திற்க்கு வழி வகுத்த வரலட்சுமி…

இன்னொறு பக்கம்… தன் அம்மா வீட்டு குடும்ப தொழில் சமையலை கையில் எடுத்தவர்… தங்களுக்கு சொந்தமாக வர வேண்டிய கல்யாண மண்டபத்தில் சொந்தம் கொண்டாடவில்லை என்றாலும், அங்கு நடைப்பெறும் அனைத்து திருமணத்திற்க்கும்…உணவை தயாரிப்பது நம் வரலட்சுமி தான்.

கமலக்கண்ணன்…முதலில் காய்கறி வெட்ட சிரம பட்டாலும் போக போக….சர சர என்று வெட்டி தள்ளியதோடு…இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் தன் மனைவியிடம் சமையலை கற்றுக் கொண்டு இருக்கிறார்.

கூடிய விரைவில் அவரும் ஒரு நளபாகன் ஆகி விடுவார் என்பதில்  உங்களுக்கு அதில் சந்தேகமா  வேண்டாம்.

 

வாசகர்களே…இந்த கதையில் ஜானையும் அவன் குடும்பத்தையும் சேர்க்க முடியாது. ஜான் வேறு ஒரு கதையில் கதாநாயகனாய் கொண்டு வருவேன். அது நிச்சயம். இதில் கொண்டு வந்தால் திரும்பவும் வீராவுக்கு தன் சிட்டுவை…அவள் குற்றவுணர்ச்சியில் இருந்து மீட்கவே சரியாக இருக்கும். அப்புறம் எப்படி பிள்ளை குட்டிகளை படிக்க வைக்கும் வேலையை பார்ப்பான்…?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!