Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 29 2

வீரேந்திரன் சொன்னது போல் இப்போது எல்லாம் வரலட்சுமியும் கமலக்கண்ணனும் படு பிசியாகி விட்டனர். கமலக்கண்ணன் தன் மனைவிக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருந்தார். காய்கறி பறிக்கும் போது மேல்பார்வையிட்டு, எந்த சத்திரத்திற்க்கு எது எது எந்த எந்த அளவு கொண்டு செல்ல வேண்டுமோ அனைத்தையும் ஒழுங்காக அது அது சேர வேண்டிய இடத்திற்க்கு சேர்பித்து விடுவார்.

அதே போல் பலசரக்கை வாங்கும்  பொருப்பும் நம் கமலக்கண்ணன் வசம் தான்.  வருமானம் பெருகுவது போல் வரலட்சுமியின் கமலக்கண்ணன் அவர்களின் அந்நியோனியமும் பெருகலாயிற்று..

முதலில் எல்லாம் விரலட்சும்மிக்கு தன் கணவன் அவர் வீட்டிலேயே இருப்பது தான் பிடிக்காத ஒன்றாய் இருந்தது.ஏன் இது போல் இருப்பவர்கள் வசதி இல்லாத போதும் என்ன என்ன செய்கிறார்கள்.

இவர் இப்படி இருக்கிறாரே என்று நினைத்து தான் வரலட்சுமி வருந்தியது. இப்போது அதற்க்கு உண்டான காரண காரியம் தெய்வநாயகி வாய் மூலமே தெரிந்ததில் இருந்து அனைத்தும் மாறி போய்  ஒரு குழந்தைக்கு தாய் எப்படி முதலில் இருந்து ஆராம்பித்து கற்று கொடுப்பாரோ அது போல் கணவனுக்கு அனைத்தும் கற்று கொடுத்து இன்று…கமலக்கண்ணன் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்று அனைவருக்கும் நிரூபித்து விட்டார் நம் வரலட்சுமி.



Advertisement

வீரேந்திரன் வீட்டில் அன்று ஞாயிறு விடுமுறை என்பதால் அனைவரும் காலை உணவை  முடித்த பின் சாவுகாசமாய் பேசிக் கொண்டு இருக்கும் போது சங்கரி வீரேந்திரனிடம்..

“ஆனாலும் உனக்கும் உன் பாட்டனுக்கும் நெஞ்சு அழுத்தம் அதிகம் தான்டா…” என்று இந்த வார்த்தையை சங்கரி எத்தனை தடவை சொல்லி இருப்பார் என்று சொன்ன அவருக்கும் தெரியாது, கேட்கும் வீராவுக்கும் தெரியாது. எண்ணில் அடங்கா  அளவுக்கு சொல்லி விட்டார்.

அப்போது கூட வீரா வாய் திறக்காது ஒரு புன்னகை மட்டும் சிந்தியவனாய் தன் தாயை பார்க்க..அதை பார்த்து இன்னும் சங்கரிக்கு கோபம் ஏற…

Advertisement

“ஏன்டா என் அப்பா தான்  பத்து வருடம் முன்  உன் கிட்ட உன் அம்மத்தாவை யாரோ மிரட்டுறாங்கன்னு நினைக்கிறேன்.

Advertisement

அவள் அம்மா வீட்டு வேலையாளுன்னு யாரோ ஒருத்தான் மூன்று தடவை வந்தான். அந்த மூணு தடவையும் உன் அம்மத்தா முகம் ஒரு மாதிரி ஆயிடுச்சி…

அதே போல் அவன் வந்து போன உடனே பீரோவில் இருக்கும் பணம் லட்சக்கணக்கில் குறஞ்சி போயிடுது. அதுக்கு உன் அம்மத்தா கிட்ட இருந்து ஒழுங்கான பதில் இல்லேன்னு எங்க அப்பா சொன்னதும்…

நீயும் உன் அளவுக்கு ஆள வெச்சி விசாரித்ததில், வீட்டுக்கு வந்து போனவன் அம்மாவுக்கு பிரசவம் பார்த்தவங்களோட மகன்.

Advertisement

அம்மாவுக்கு குழந்தை இறந்து பிறந்ததால வேலைக்காரி குழந்தையை, இவங்க குழந்தைன்னு எடுத்துட்டு வந்தாங்கன்னு…அவன் அப்போவே எல்லாத்தையும் சொல்லி இருக்கான். நீயும் அவனை மிரட்டி இனி இந்த பக்கம் தலைய வெச்சி படுக்க கூடாதுன்னு நல்லா மிரட்டி அனுப்பின…

எல்லாம் சரி தான். ஆனா அதை யாரு கிட்ட இல்லேன்னாலும் என் கிட்டவாவது சொல்லனுமுன்னு உனக்கு தோனுச்சா…ஆனாலும் உனக்கு இந்த நெஞ்சழுத்தம் இருக்க கூடாதுடா…” என்று சங்கரி எத்தனை முறை சொன்னாலும், அத்தனை முறையும் எதுவும் பேசாது இது போலவே சிரித்துக் கொண்டே அமர்ந்து இருப்பான்.

அப்போதும் சங்கரி விடாது ஏதே பேசிக் கொண்டு தான் இருப்பார். சில சமயம் இந்த பேச்சில் தன் மருமகளையும் கூட்டு சேர்த்துக் கொள்வார்.

அப்போது மட்டும் சங்கரி சொல்லும் உன் வகையில் அவனை மிரட்டி என்னும் போது…

அதற்க்கு  மணிமேகலை … “அது என்ன நாசுக்கா உன் வகைன்னு அடியாளை வெச்சி…அதாவது உங்க மகன் அடியாளை வெச்சி அவங்க சொத்தை எல்லாம் எழுதி வாங்குறார்.” என்று தன் அத்தையிடம் முதல் முறை வீரேந்திரனை போட்டு கொடுக்கும் போது…

“என்னடா சிட்டு சொல்றா…?” என்று சங்கரி தன் மகனை மிரட்ட…

“அம்மா அவ சொல்றான்னு..அவ படிக்கும் போது என்னிடம் கடன்  வாங்குனவனை என் ஆளு…” என்று அவன் சொல்லிக்  கொண்டு வரும் போது இடையில் புகுந்து…

“அத்தை வெரும் ஆளு கிடையாது. இவருடைய அடியாள்.” என்று எடுத்து கொடுக்க…

“ஆமா அம்மா என்னுடைய அடியாள் இவள் சொல்ற அந்த நல்லவன் மிக மிக நல்லவனை அடிக்கும் போது பார்த்துட்டு…

அவன் என்னவோ அப்பாவீ போலவும்…நான் என்னமோ பாவீயோ பாவீ போலவும் நினச்சிட்டு இருக்கா…” என்று தன் அன்னையிடம் பேசிக் கொண்டு இருந்தவன்..

இப்போது மணிமேகலையை பார்த்து… “ஏன்டி அவன் என்ன செஞ்சான் தெரியுமா…வீடு கட்ட கடன் வாங்கினான். அதுவும் யார் பெயரில் அவன் மச்சினிச்சி பெயரில்…

மனைவி பிரசவத்துக்கு உதவிக்கு வந்த மச்சினிச்சிய…அவளுக்கே உதவி அதாவது பிரசவத்துக்கு உதவி தேவைப்படும் அளவுக்கு செஞ்சிட்டு…அவளை தனியா அதுவும் சொந்த வீட்டில் தான் வைக்கனும் என்று அவன் மனைவியோடு வாழும் வீட்டை என்னிடம் அடமானம்  வெச்சி… கடன் வாங்கி மச்சினிச்சிய மாடியில் குடிவெச்சி மனைவிய வீதிக்கு கொண்டு வந்துட்டான்.

என்னிடம் வாங்கின காசுக்கு வட்டியும் கட்டல .அசலையும் கொடுக்கல..அப்போ அவன் அடமானம் வெச்ச வீட்டை பார்க்கும் போது தான் அவன் போஷி எல்லாம் தெரிஞ்சது.

அது தான் அடிச்சி உதச்சி அவன் மச்சினிச்சிக்கு கட்டின வீட்டை எங்க பைனான்சுக்கு எடுத்துட்டு, அடமானத்தில் இருக்கும் அவன் மனைவி வீட்டை அவங்க கிட்ட கொடுத்தேன்.” என்று சொன்னவன்…

“ஏன்டி நான் உண்மையில் மனைவிக்கு மரியாதை செய்து இருக்கேன். இதுக்கு நீ என்னை…” என்று சொல்லிக் கொண்டு வந்தவன் தான் கேட்கும் விசயம் அனைவரின் முன்னும் கேட்க முடியாது என்று…ஜாடையில் அப்புறம் கொடு டீ என்பது போல் சைகை செய்தான்.

அன்றும் பேச்சு எங்கோ ஆராம்பித்து  அது எங்கே செல்லும் வேலையில் அந்த இடத்திற்க்கு வந்தனர்… வரலட்சுமியும் கமலக்கண்ணனும்…

அவர்களை பார்த்த வீரேந்திரன்…”என்ன அத்தை மாமா..உங்களுக்கு எங்களை எல்லாம் பார்க்க எல்லாம் நேரம் இருக்கா என்ன…?”

எப்போதும் பிசியாக இருக்கும் தன் அத்தை மாமாவை பார்த்து வீரேந்திரன் கேட்க… அதற்க்கு சங்கரி… “இது ஆடி மாசம் வீரா…அது தான் அண்ணன் அண்ணி காத்து இங்கு வீசுது.” என்று கலட்டா செய்த படி அவர்களை உபசரித்துக் கொண்டும் இருந்தார்.

அப்போது வீரேந்திரனின் தந்தை  வரலட்சுமியின் யோசனை படிந்த முகத்தை பார்த்து… “என்னம்மா தங்கச்சி என்ன யோசனை…? இந்த அண்ணன் கிட்ட சொல்ல கூடிய விசயமா இருந்தா சொல்லும்மா…” என்று சொல்ல..

“அய்யோ அண்ணா ..உங்க எல்லோர் கிட்டயும் ஆலோசனை கேட்க தான் வந்தேன்னே…அது வசீகரனுக்கு அடுத்த மாசம் கல்யாணம் லே அதுக்கு நீங்க தான் சாப்படு செய்யனுமுன்னு அவங்க வீட்டில் இருந்து ஒருத்தரை தவிர எல்லோரும் வந்து கேட்டாங்க…நான் உங்க கிட்ட கேட்டு சொல்றதா சொல்லி இருக்கேன்.” என்று வரலட்சுமி சொல்லி முடித்த அடுத்த  நொடி…

வீரேந்திரன்… உங்க நளபாகத்தை பார்த்து  வந்ததை எப்போதும் தவர விட கூடாது அத்தை. அதுவும் இப்போ வந்த இடத்தில் தான் நீங்க உங்க திறமைய நிரூபிக்கனும்.”  என்ற வீரேந்திரனின் பேச்சை அனைவரும் அமோதித்தனர்.

வரலட்சுமி தன் கணவன் முகம் பார்க்க, அவர் கண் அசைவில் சரி என்ற சொல்லிக்கு கட்டுப்பட்டவளாய்… “சரி வீரா நான் ஒத்துக்குறேன்.” என்று சொன்ன பின் பேச்சு அப்படி இப்படி என்று திசை மாறி கடைசியாக… தெய்வநாயகி வசுவிடம் வந்து நின்றது.

“வசுவும் வாசுவும் காதலிச்சி தானே கல்யாணம் செய்துக்கிட்டாங்க. அப்புறம் என்ன அவங்க எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுட்டே இருக்காங்க.” என்று கேட்ட சங்கரி.

தன் மருமகளிடம்… “வசு உன் பிரண்ட் தானே சிட்டு நீயாவது ஏதாவது அவ கிட்ட சொல்லலாம்ல..என் இரண்டு அண்ணிகளுக்கும் இதுவே பெரிய கவலையா போச்சு.” என்று  சொன்ன சங்கரிக்கு தெரியாது வசு மணிமேகலையிடம் செய்த செயல்.

மணிமேகலை யாரும் சொல்லாது யாருக்கும் தெரியப்படுத்தும் வகையிலும் நடந்துக் கொள்ளாது.. வசு வந்து பேசினால் என்ன…என்பது போல்  பேச்சை முடித்துக் கொள்வாள்.

“என்ன தான் வசு என் பிரண்டா இருந்தாலும், ஒரு சில விசயத்தில் நாம் தலையிட  முடியாது அத்தை.” என்று நாசுக்காய் தன் மறுப்பை தெரிவித்து விட்டாள்.

சங்கரியும்… “ஆமாம்…ஆமாம்.” என்று சொன்னவர் தொடர்ந்து…

தன் அன்னை தெய்வநாயகியை பற்றி பேசினார். “ஆனா அப்பா அம்மா கிட்ட இன்ன வரை பேசாது இருப்பாருன்னு நான் நினச்சி கூட பாக்கல.” என்று ஆதாங்கத்துடன் சொல்ல…

அதற்க்கு வீரா…. “நீங்க பேசுறிங்கலா உங்க அம்மா கிட்ட…”

“ஆ நான் எப்படி பேசுவேன். என் வரா அண்ணிக்கும் கமலா அண்ணனுக்கு செய்தது கொஞ்சமா…? நஞ்சமா…?” என்று  சங்கரி கேள்வி எழுப்ப…

“அதே தான் தாத்தாவுக்கும்.” என்று அவர்களின் உரையாடல்களும் சரி வாழ்க்கையும் சரி எண்ணை விட்ட மிஷின் போல, சத்தம் போடாது மிக ஸ்மூத்தாக சென்றது.

நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும் என்று தெரிவித்துக் கொண்டு உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்….

இக்கதையில் இருந்து மட்டுமே …விஜயலட்சுமி ஜெகன்

கூடிய விரைவில் அடுத்த கதையில் சந்திக்கிறேன்…வாசகர்களே…

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!