Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 36

 

?இணை பிரியா
வரம் கேட்பேன்
உன்னை பிரிந்தால்
உயிர் தொறப்பேன்

விரல் பட்டு பூ வாசம்
பொய்யாகுமா….
உன் இதழ் பட்டால்
என் சுவாசம் மெய்யாகுமா?

சிவசங்கரன் கூறியதை கேட்ட மற்றவர்கள் அனைவரும் என்ன என்பது போல் பார்க்க உதயோ தன் மனைவியின் கடந்த காலத்தை அறிய வேண்டும் என்ற நோக்கில் ” என்ன சொல்ல வரீங்க பா எங்களுக்கு சுத்தமா புரியல ” என்று அவர் முன் மண்டியிட்டு கேட்க



Advertisement

அத நான் சொல்றேன் தம்பி என்றபடி கங்கா தானாகவே முன் வந்தார்.

” யாராவது ஒருத்தர் சொல்லுங்க அவளுக்குள்ள அப்படி என்ன தான் பிரச்சனை ” என்று உதய் கேட்க கங்கா அவளின் இந்த நிலைக்கு காரணமான அந்த நாளை பற்றி கூறத் தொடங்கினாள்.

” அது வந்து தம்பி நந்தினி வேற யாரும் இல்ல மஹாலிங்கம் அண்ணாவோட தங்கச்சி பொண்ணு தான் அவ ” என்று சொல்ல அங்கே இருந்த அனைவருக்கும் அதிர்ச்சியே ” என்ன சொல்றீங்க அப்புறம் எப்படி அவ உங்க கிட்ட வளர்ந்தா ” என்று உதயும் ” அப்போ சுமி விந்து அத்தையோட பொண்ணா அவ பிறந்ததுமே இறந்துட்டாலா ” என்று சுமியும் அதிர்ச்சியுடன் கேட்டனர்.

Advertisement

” சொல்றேன் ” என்று இந்த முறை சிவசங்கரன் சொல்லி நந்தினியின் பிறப்பின் இரகசியத்தை பற்றி ஒன்று விடாமல் கூற தொடங்கினார்.

Advertisement

” மஹாலிங்கமுமம் விந்தியதேவியும் சக்கரவர்த்தி ஐயாவோட பசங்க . மஹாலிங்கம் விந்து மேல உயிரே வச்சிருந்திந்தான் ஏன்னா விந்து மஹா பிறந்து ரொம்ப வருஷம் கழிச்சு பிறந்தவ .அதனால அவள ரொம்பவே பாசமா வளர்த்தான்.  எப்பவும் அவள பத்தி மட்டும் தான் பேசிக்கிட்டே இருப்பான். மஹா ப்ளஸ் டூ முடிச்சிட்டு மேல் படிப்புக்காக சென்னை வந்து சேர்ந்தான். விந்து பிறந்த கொஞ்ச நேரத்துலேயே அவனோட அம்மாக்கு ஜன்னி வந்து இறந்து பொயிட்டாங்க. அந்த மாதிரி யாருக்கும் இனி நடக்க கூடாதுன்னு நினைச்சி டாக்டர் படிக்க ஆசப்பட்டு அதுல சேரவும் செஞ்சான். அப்போ விந்துக்கு ஒரு பிதிமூன்னு வயசு இருக்கும் எட்டாவது படிச்சிட்டு இருந்தா. நானும் என்னோட படிப்புக்காக ஊட்டிய விட்டு சென்னை வந்துட்டேன். ரெண்டு பேரும் ஒரு ரூம் எடுத்து தங்கி படிச்சோம் .

இப்படியே ஐஞ்சு வருசம் போனதே தெரியாம போச்சி மஹாலிங்கமும் அவனோட படிப்ப முடிச்சான். ஐயா அவனுக்கு சென்னையிலயே ஒரு ஹாஸ்பிடல் கட்டி கொடுத்தாரு அதனால அவன் ஊட்டிக்கு வரது கொஞ்சம் கொஞ்சமா கொரஞ்சது. விந்துவும் அவளோட பள்ளி படிப்ப முடிச்சா. மஹாலிங்கம் எவ்வளோ சொன்னான் சென்னை வந்து படிக்க சொல்லி ஆனா விந்து அத ஒரேடியா  மறுத்துட்டா அப்பா கூட தான் இருப்பேன்னு சொல்லி . அதுனாலயே மஹாலிங்கம் அவள குன்னூர்ல இருக்கிற ப்ராவிடன்ஸ்ல சேர்த்து விட்டுட்டு ஹாஸ்பிடல்ல பாக்க சென்னை பொயிட்டான்.

அப்போ தான் சென்னைல இருந்து பொலப்பு தேடி ஊட்டி வந்தான் ரத்தினம். சக்கரபாணி ஐயா கிட்ட வந்து ரொம்ப கெஞ்சுனான் வேல போட்டு தர சொல்லி அதுனால ஐயாவும் இரக்கப் பட்டு வேல போட்டு கொடுத்தாரு ரொம்ப விசுவாசமா இருந்தான். விந்துவ அவன் தான் வண்டில காலேஜ்க்கு கூட்டிட்டு பொய்ட்டு கூட்டிட்டு வருவான் . அந்த நேரத்துல தான் மஹாலிங்கத்துக்கு பொண்ணு பாத்தாங்க . அப்போ விந்து கடைசி ஆண்டு படிச்சிட்டு இருந்தா . பொண்ணு பாத்து செலக்ட் பண்ணதுக்கு கூட எங்க விந்து தான் .பனிமலருக்கும் மஹாலிங்கத்துக்கும் கல்யாணம் நடந்துச்சி.

Advertisement

கொஞ்ச நாளுல அவ கர்ப்பமா இருக்கான்னு மஹாலிங்கம் சொல்லவும் சக்கரவர்த்தி ஐயாவும் விந்துவும் ஊருக்கு கிளம்பி போக தயாரானாங்க கூடவே ரத்தினத்தை கூட்டி போனாங்க. போற வழியில திடிருன்னு அவருக்கு நெஞ்சு வலி வரவும் பக்கத்தில இருந்த மருத்துவமனையில அவுங்கள அனுமதிச்சாங்க. இதுக்கு முன்னாடியே அவருக்கு ரெண்டு அட்டாக் வந்துருக்கு இது மூணாவது அட்டாக்கின்றதுனால ரொம்பவே சீரியஸ் ஆயிடுச்சு . உடனே மஹாலிங்கத்து விஷியத்த தெரிவிச்சாங்க அவனும் உடனே கிளம்பினான் மனைவியை தனியா விட்டுட்டு. சக்கரவர்த்தி ஐயாவோட நிலமை ரொம்ப மோசாயிடுச்சி டாக்டர்ஸ் எல்லாம் கைவிட்டுடாங்க். விந்தியதேவி அவர் பக்கத்துல அமர்ந்து அழுதுக்கிட்டே இருந்தா.

அப்போ ஐயா கண்ணு முழிச்சு பாத்தது அழுதுகிட்டே இருந்த விந்துவை தான். தான் சாக போறோம்னு தெரிஞ்சு கிட்ட அவரு விந்துவோட கல்யாணத்த பாக்க ஆசப்பட்டாரு. அதுனாலயே அவளுக்கு உடனே கல்யாணம் பண்ணணும்னு நினைச்சி ஒரு முடிவோட வெளிய இருந்த ரத்தினத்த வர சொன்னாரு. அவன் வந்ததும் பக்கத்துல இருந்து எங்கேயாவது தாலி வாங்கிட்டு வா என்று கூறி அனுப்ப அவனும் வாங்கிட்டு வந்தான். அதை பார்த்த சக்கரவர்த்தி ஐயா விந்து கிட்ட திரும்பி ” நான் உனக்கு எப்போதும் நல்லது தான் பண்ணுவேன்னு நம்பிக்கை இருக்கா மா ” என்று ஐயா கேட்டதும் விந்து ” அப்பா ” என்று கத்தி ஒரே அழுகை

” சொல்லு மா உனக்கு நான் நல்லது பண்ணுவேன்னு தொனுச்சின்னா நீ ரத்தினத்த கல்யாணம் பண்ணிக்கனும்னு ” சொன்னாரு

இத கேட்ட ரெண்டு பேரும் அதிரிச்சியில அப்படியே சிலையா‌ நிக்க அதுக்குள்ள ஐயாவுக்கு மூச்சு வாங்க தொடங்கிருச்சி. அத பாத்த ரெண்டு பேரும் பயந்து போய் ” பண்ணிக்கிறோம் ” என்றனர்.

பின்னர், அவரோட முன்னிலையில கல்யாணம் நடந்து முடியவும் அவர் உயிர் பிரியவும் மஹாலிங்கம் உள்ள வரவும் சரியா இருந்துச்சி.

மஹாலிங்கத்துக்கு ஒரே அதிர்ச்சி ஒருபுறம் தன் ஆசை தங்கச்சி கல்யாணம் மறுபுறம் தந்தையின் இழப்பு என ஒரு மாதிரியான மன நிலமையில இருந்தான்.

சக்கரவர்த்தி ஐயாவுக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கு அனைத்தையும் செஞ்சி முடிச்சிட்டு சென்னைக்கே சென்று விட்டான் கோபத்தில்.

விந்து அவளோட கவலைகளை மறக்க காலேஜ் பொய்ட்டு வந்தா. ரத்தினம் எப்போதும் போல அவள விடுவதும் கூப்பிட்டு வருவதுமாக செய்து வந்தான்.

விந்துவும் அவளோட கல்லூரி வாழ்க்கைய முடிக்க ரத்தினம் கொஞ்சம் கொஞ்சமாக அவளோட பால் வண்ண அழகுல மயங்க ஆரம்பிச்சான். அவளோட ஒவ்வொரு செயலும் அவன ஈர்க்க ஆரம்பிச்சது. அவளோட உயிரோடும் உடலோடும் ஒன்றினைக்க எண்ணி அத பத்தி அவளிடம் பேசவும் செய்தான். விந்துவும் தன் கணவர் ஆசைபடுவதில் எந்த ஒரு தவறும் இல்லை என்று எண்ணி அவனுடன் இசைந்து போனால்.

அந்த நேரத்தில் மஹாலிங்கத்துக்கும் பனிமலருக்கும் குழந்தை ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கவும் விந்துவும் ரத்தினமும் பார்த்து விட்டு அவர்களுடனே தங்கி வந்தனர். சில நாட்களுக்கு தங்கிய இருவரும் ஊட்டி வந்து சேர்ந்தனர்.

சென்னையில் ஊட்டிக்கு வந்த பிறகு ரத்தினம் வேலை விடயம் என்று கூறி அடிக்கடி சென்னை சென்று வந்தான்.

நாட்கள் மாதங்களாக மாற மாதங்கள் வருடங்களாக மாறியது. பனிமலருக்கு இரண்டாவதாக சுமித்ராவும் பிறந்தாள். அவள் பிறந்த ஒரு வருடத்தில் விந்து கருவுற்றிருந்தாள். ரத்தினித்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நிலையிலும் அவன் சென்னை சென்று வந்தான். மஹாலிங்கத்திற்கு சிறிது சந்தேகம் வந்தது அவனின் செய்கையில் . அதனால் யாரும் அறியா வண்ணம் அவனை கண்காணிக்க சொல்லி இருந்தான். அதனால் அவர்களும் அவனை கண்காணித்து வந்தனர். இறுதியாக அவனின் திருட்டுத்தனம் மஹாலிங்கத்திற்கு தெரியவந்தது.‌‌ அது என்னவென்றால் அவனுக்கு இன்னொரு குடும்பம் இருப்பது . இதனை கேட்ட மஹாலிங்கம் உச்சகட்ட கோபத்தில் ஊட்டிக்கு சென்று அவனை அடித்து விட்டு உண்மையை சொல்ல சொல்லி கேட்க அவனும் உண்மையை ஒப்புக் கொண்டான் தனக்கு முன்பே திருமணமானதை. இதனை கேட்ட விந்து அங்கேயே மயங்கி சரிந்தாள். உடனே அவளை மருத்துவமனையில் சேர்த்தனர்.‌

அதே நேரத்தில் மஹாலிங்கம் அந்த பெண்ணின் மீதும் புகார் அளித்திருந்தான். அதனால் அந்த பெண்ணை சிறையில் அடைத்திருந்தனர். இதனை அறிந்துக் கொண்ட‌ ரத்தினம் கோபத்தின் எல்லைக்கே சென்றிருந்தான். ஏனெனில் அந்த பெண்ணும் கருவுற்றிருந்தாள்.

விந்துவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதற்கு நந்தினி என்று பெயர் வைத்தனர்.

சிறையில் இருந்த பெண்ணின் அண்ணன் ராஜதுரைக்கு உண்மை தெரியவர தன் தங்கையை ஏமாற்றின குற்றத்திற்கு அவனின் மீது புகார் அளித்தான். காவல் துறை அவனை அரஸ்ட் செய்து காவல் நிலையத்தில் வைத்தது. இதற்கெல்லாம் காரணம் விந்து தான் என்று அவள் மீது பகைமையை வளர்த்துக் கொண்டான். அந்த நேரம் பார்த்து அவனுக்கு செய்தி வந்தது அந்த பெண் தூக்கு மாட்டி இறந்து விட்டதாகவும் . அதனால் அக்குழந்தையும் இறந்து விட்டதாகவும் செய்தி கூறப்பட்டது. அவன் அறியா ஒன்று  அக்குழந்தை ராஜரத்தினத்தின் மகளாக வளரப் போகிறது என்று…

சிறிது மாதங்களிலே வெளியே வந்த ரத்தினம் விந்துவையும் அவள் குழந்தையும் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டான். இதனை அறிந்த மஹாலிங்கம் யாரும் அறியா வண்ணம் அக்குழந்தை காப்பாற்றும் பொருட்டு நந்தினியை சிவசங்கரனிடம் ஒப்படைத்து குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள் என்று விட்டு சென்றான்.

சிவசங்கரன் குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையிலே அவளது தங்கையின் வாடின முகம் வந்து போக உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு அவனது தங்கையின் வீட்டிற்கு சென்றான்.

இங்கே குழந்தையை அப்புற படுத்திய மஹாலிங்கம் நிம்மதியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தான். ஆனால் அவன் அறியா ஒன்று தன் தங்கை வாழ்கின்ற வீட்டை ரத்தினம் நயவஞ்சகத்துடன் எரித்தது.

அடுத்தநாள் காலை விந்துவின் வீடு முழுவதுமாக எரிந்திருந்தது. இதனை அறிந்த மஹாலிங்கமும் பனிமலரும் ஓடோடி வந்தனர்.அவர் கண்டது என்னவோ கருகி போன சடலத்தையே . கோபம் கொண்ட மஹாலிங்கம் ரத்தினத்தின் மீது புகார் அளித்தான்.

காவல்துறை அதிகாரிகள் அவனை வலை வீசி தேடி அவனை பிடித்தனர்.

நந்தினி சிவசங்கரனின் தங்கை கண்ணகி – மாதவன் தம்பியனருக்கு மகளாக வளர்ந்து வந்தாள். அவள் வருகையின் பின்பே மாதவனின் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டது. பல காலங்களாக குழந்தை இல்லாமல் இருந்த கண்ணகி நந்தினி வந்த மூன்று வருடம் கழித்து கருவுற்றிருந்தாள் . மாதவனுக்கும் சிவசங்கரனுக்கும் அவ்வளவு சந்தோஷம். நாட்கள் விரைந்து ஓட அவர்களுக்கு கவிபாரதி சுஜித்ரா என இரட்டையர்கள் பிறந்தனர்.

நந்தினியே அவர்கள் இருவரையும் வளர்த்து வந்தாள். காலங்கள் செல்ல நந்தினி படிக்கும் பள்ளியிலே கவிபாரதியையும் சுஜித்ராவையும் சேர்ந்தனர்.

நந்தினிக்கு சிறு வயதில் இருந்தே பாடுவதில் அப்படி ஒரு பிடித்தம் அவளுள் இருந்தது.‌ அவளது பதிமூன்றாவது வயதில் ஊட்டியில் பாட்டு போட்டி ஒன்று நடைபெற‌ இருந்தது. அதில் கலந்துக் கொள்ள துடித்த நந்தினியை அழைத்துச் சென்றனர் கண்ணகியும் மாதவனும். கவியையும் சுஜியையும் கங்காவிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர்.

போட்டியில் கலந்துக் கொண்ட பிறகு ஊருக்கு திரும்ப முடிவு செய்ய பட்டு கிளம்ப அந்த நேரம் நந்தினி அங்கே விற்றுக் கொண்டிருந்த பஞ்சுமிட்டாய்யை பார்த்து வண்டியை நிறுத்தச் சொல்ல மாதவனும் வண்டியை நிறுத்தி விட நந்தினி வேகமாக தன் தந்தையிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு பஞ்சு மிட்டாய்யை வாங்க சென்றாள்.

வாங்கி விட்டு திரும்பியவளின் கண்ணில் பட்டது காரை இடித்து தள்ளிவிட்டு சாலையில் பறந்த லாரியை தான் . அந்த பலத்தில் விழுந்து வெடித்து சிதறியது.

உடனே சிவசங்கரனை அழைத்து விடயத்தை சொல்ல உடனடியாக கிளம்பி வந்தார்.

இதனை கண்ட நந்தினியோ பித்து பிடித்தவள் போல் ” அம்மா அப்பா ” என்று கதறினாள்.

கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கு நந்தினி பித்து பிடித்தது போல் தான் நடனமாடினாள். அந்த ஆறு மாதங்கள் அவளை மாதத்திற்கு இருமுறை என மருத்துவமனை அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்தனர். இவளை பழைய நிலைக்கு கொண்டு வந்தது ஜீவா மட்டுமே.‌ அதனாலயே நந்தினிக்கு ஜீவா அப்புவாக மாறி போய் இருந்தான். ஜீவாக்கும் நந்தினி அம்முவாக மாறி இருந்தாள். இதனாலேயே கங்காவிற்கு நந்தினியை பிடிக்காம போனது . அவளை வெறுத்து ஒதுக்கினாள்  என அனைத்தையும் மூச்சு முட்ட கூறி முடித்தார் சிவசங்கரன்.

இதனை கேட்ட உதய் தன் மனையாளின் வாழ்வில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது. இதனை அறியாமல் தானும் அவளை வேதனை படுத்தி உள்ளோமே என்று நொந்து போனவன் அதற்கான காரணத்தையும் அறிய வேண்டும் என்று முடிவு செய்தான்.

சுமித்ராவோ மடிந்து சரிந்து அழுகத் தொடங்கினாள். அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்தான் சூர்யா.

உடனே உதய் நந்தினியை காண அவளது அறைக்கு செல்ல வேக நடை எடுத்து வைத்தான்.

######################

கார்த்திக் அவனது வீட்டில் மிகவும் சந்தோஷமாக காணப் பட்டான். அவன் இது நாள் வரை எதுக்காக காத்திருந்தானோ அது நிறைவேறிய மகிழ்ச்சி அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

இந்த மகிழ்வான விஷயத்தை பெக்ரைனில் இருக்கும் தன்னோட அத்தைக்கு அழைப்பு விடுத்து சொல்ல ஆசைப்பட்டான்.

மொபைலை எடுத்தவன் அத்தையின் நம்பரை எடுத்து அழைப்பு விடுத்தான்.சில ரிங்கிலே எடுத்த அவனது அத்தை ” ஹலோ ” என்க

” அத்தை எப்படி இருக்கீங்க ” என்று மகிழ்ச்சியுடன் கேட்க அந்த மகிழ்ச்சி அவரையும் தொற்றிக் கொள்ள ” நான் நல்லா இருக்கேன் டா நீ எப்படி இருக்க என்ன கொஞ்சம் சந்தோஷமா இருக்க போல ” என்று கேட்க

” ஆமா அத்தை நான் ரொம்பவே ஹாப்பியா இருக்கேன் . அத நீங்களும் கேட்டீங்கன்னா ரொம்பவே சந்தோஷபடுவீங்க அத்தை ” என்றான் புதிராக

” என்னடா புதிரு வச்செல்லாம் பேசுரு. என்னோட சந்தோஷத்த சிரிப்ப தொலைச்சே பல வருஷம் ஆச்சி எப்ப என்னோட பொண்ண பாக்குறேன்னோ அவளோட வாழ்க்கையில இருக்கிற கெட்டதெல்லாம் விலகி நல்லது நடக்குதோ அப்ப தான் டா எனக்கு சந்தோஷமே ” என்றார் அவர் வருத்ததின் மிகுதியில்

” அப்போ என்ன பாத்தா உங்களுக்கு சந்தோஷம் வராதா அத்த ” என்று சிறு பிள்ளை போல் கேட்டு சினுங்க

” அடேய் படவா நீ எனக்கு கடவுள் மாதிரி டா .உன்னால தான் நான் உயிரோடவே இருக்கேன் . நீ மட்டும் இல்லன்னா அன்னைக்கு ஃபையர் ஆக்சிடன்ட்ல நான் செத்தே பொயிருப்பேன் டா. அப்ப நீ ரொம்ப சின்ன பையன் அப்பவே உன் உயிர பணயம் வச்சி காப்புனவன் டா நீ . எனக்கு உயிர் பிச்சை தந்து என்ன வாழ வைக்கிற தெய்வம் நீ உன்ன பாத்தா நான் எப்படி சந்தோஷ படாம இருப்பேன் சொல்லு ” என்று பாச மிகுதியில் பேச இதை கேட்ட அவனுக்கு எதற்கு இப்படி கேட்டோம் என்று தோன்றியது.

” ஏன் எப்ப பாரு இப்படி பேசுறீங்க .இப்படி பேசுன்னா அப்புறம் இனி உங்க கிட்ட பேசவே மாட்டேன் பாத்துக்கோங்க ” என்று போனில் சினுங்க

” சரி சரி இனி அப்படி பேசல எதோ ஒரு சந்தோஷமான விஷயம் சொல்றேன்னு சொன்னியே அத சொல்லு ” என்று அவனின் எண்ணத்தை மாற்றும் பொருட்டு கேட்க

” ஹான் அத்த உங்க பொண்ணுக்கு நாம ஆசப் பட்டது மாதிரியே அவளுக்கு கல்யாணம் நடந்துடுச்சி அத்த. இனி அவள பத்தி நாம கவல பட வேண்டியது இல்ல . அவளுக்கு எதுவா இருந்தாலும் அவளோட ஹஸ்பண்டே அவள பாத்துக்குவான் ” என்று சொல்லி ” நீங்க சீக்கிரமாவே திரும்ப இந்தியாக்கு வர போறீங்க அத்த அதுக்கான்னா நாள் நெருங்கிருச்சி ” என்றான்.

கார்த்திகின் அத்தை விந்தியதேவிக்கு ஒரே மகிழ்ச்சி தன் பெண்ணிற்கு ஒரு நல்வாழ்வு அடைந்ததை எண்ணி.

_____________________________

வேகமாக அறைக்கு வந்த உதய் அங்கே கட்டிலில் அமர்ந்து கண்ணகி மாதவன் ஃபோட்டோவையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த நந்தினியையே கண்டான்.

உடனே அவள் பக்கத்தில் சென்றவன் அவளின் தோல் பட்டையை அழுத்தி ” நிதி” என்று அழைக்க

” கிருஷ் ” என்றவாறு அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள் அவனின் நிதி.

” கிருஷ் கிருஷ் அந்த பொண்ண கொல பண்ண பாத்தாங்க கிருஷ் எனக்கு ரொம்ப பயமா இருக்கு அவ மேல லாரி வேகமா வந்து  மோதிருச்சி ” என்று கதறுபவளை பார்த்து அவன் கண்ணீர் சிந்தினான்.

” இங்க பாரு நிதி மா ஸ்ருதிக்கு ஒன்னும் ஆகல அது ஜஸ்ட் ஆக்சிடன்ட் தான் . நீ பயப்புட கூடாது சரியா ” என்று அவளை சமாதான படுத்த முயல

நந்தினி பித்து பிடித்தவள் போல் சொன்னதையே திரும்ப சொல்ல ” நிதி மா நீ ஸ்ட்ராங் கேர்ல் தான அப்புறம் எதுக்கு இந்த விஷயத்துக்கு போய் இப்படி பிஹேவ் பண்ணிட்டு இருக்க நிதி  ” என்று அவளை விலக்கி நிதியின் கண்ணத்தை தாங்கி அவளின் கண்ணை தன் கண்களுடன் கலக்க விட்டவாறு கேட்க

அவனின் கண்களையே பார்த்தவள் பீறிட்டு அழுகத் தொடங்கினாள். அவளை சிறிது நேரம் அழுக விட்டவன் மேலும்  அழுதுக் கொண்டே போக அவளின் அழுகையை நிறுத்த வழி தெரியாதவன் அவளின் செவ்விதழை கவ்வி அவளுக்கு தான் இருக்கேன் எதற்கும் கவலை படாதே என்று இதழ் முத்தத்தினால் அவளுக்கு உணர்த்தினான்..

அந்த இதழ் முத்தத்தில் காதல் இல்லை காமம் இல்லை பரிச்சுதமான ஒரு தாய் அன்பு மட்டுமே நிறைந்திருந்தது.

அவளின் கேவல் மெதுவாக குறைய அவளின் இதழை மெதுவாக விடுவித்தான்.

பின் அவளை தன் மடியில் படுக்க வைத்தவன் அவளை தட்டிக் கொடுத்து தூங்க வைத்து விட்டு கீழே வந்தான். வந்தனின் மனதில் நந்தினி கூறியதே மனதில் பந்தயமாக ஓடிக் கொண்டிருந்தது.

இதில் உதய் அவளை நிதி என்று கூறியதை நந்தினியும் உணர வில்லை. அவள் அவனை கிருஷ் என்று அழைத்ததும் அவர்களுக்கு அறிய வில்லை.

ஆள்மனதின் உள்ள காதல் தானாக வெளிப்படும் எவ்வளவு தான் உள்ளுக்குள்ளே மறைத்து வைத்திருந்தாலும் .

#################

வேகமாக மருத்துவமனைக்கு வந்த கீர்த்தி வெங்கட்டின் அறைக்கு கோபமாக வந்தாள்.

அவன் அங்கே ஏதோ ஒரு பேஷன்டின் தீசிஸ் படித்துக் கொண்டிருக்க அனுமதி இல்லாமல் உள்ளே வர கீர்த்தி வருவதை அறிந்துக் கொண்ட வெங்கட் எழுந்து நின்றான்.

வேகத்துடன் வந்தவள் பளார் என்று அவனின் கண்ணத்தில் அறைந்தாள்.

அறை வாங்கிய வெங்கட் கண்ணத்தில் கை வைத்த படி பாவமாக பார்த்தான்.

” எதுக்கு இப்போ என்ன அடிச்ச ” என்று வெங்கட் தன்மையாய் கேட்க

” நான் அடிச்சேன்னு உனக்கு தெரியாதுல போ போய் உன் ஃபிரண்ட் உதய் கிட்ட கேளு நான் எதுக்கு அடிச்சேன்னு அவன் சொல்லுவான் உன்கிட்ட ” என்றவள் வந்த வேகத்திலே வெளியே சென்றுவிட்டாள்.

” இவ பாட்டுக்கு வந்தா அடிச்சா ஏன் அடிச்சன்னு கேட்டா உதய்கிட்ட கேக்க சொல்றா அவனுக்கு எப்படி தெரியும் இவ எதுக்கு அடிச்சான்னு ” என்று புலம்பிக் கொண்டே இருக்கையில் அமர்ந்தான்.

தேடல் தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!