Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடல் 42

 

உன் தீ கொண்டபார்வையால்
கருகி கொண்டிருக்கிறேன்
உன் மழலை கொண்ட பேச்சால்
துடித்து கொண்டிருக்கிறேன்
தினமும் எரிகிறேன் – உன்
கண் பட்ட காதல் தீயால் …!!!
இந்த புண்பட்ட இதயத்துக்கு
நீ சிரஞ்சீவி மருந்து ….!!!

கீர்த்தி அழுகையை கட்டு படுத்தியவள் எப்படி கல்யாணத்தை நிறுத்துவது ராஜிவ்க்கு எப்படி இங்கே நடப்பதை சொல்வது என்று யோசனை செய்தவள் அதற்கான விடை கிடைக்கவும் நிம்மதியாக அதற்கான வேலையை செய்து முடித்தாள்.

அது சரியாக முடிய வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்த‌படியே இருக்க சிறிது நேரத்திற்கு பிறகு அவளின் அழைப்பு மணி அடித்து அவளின் வேண்டுதல் கான நல்ல பதிலை கொடுத்து அவளின் முகத்தில் புன்னகையை பூச வைத்தது.



Advertisement

அறையினுளே அடைந்து இருந்தவள் வெளியே வந்து சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்த படியே ” அம்மா எனக்கொரு சூடா காஃபி போட்டு தாங்க மா அதுவும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா ” என்று சேனலை மாத்த

இவளின் செயலில் ஜெயந்தி மற்றும் விஷ்ணு அதிர்வுற்று ஏனோ ஏலியனை பார்ப்பது போல் பார்த்தனர்.

அவர்களின் பார்வையை அறிந்துக் கொண்ட கீர்த்தி ” என்ன பெத்து வளர்த்த உங்களுக்கு தெரியாதா எது நல்லது கெட்டதுன்னு யோச்சி பாத்தேன் என்ன வளர்த்து படிக்க வச்ச உங்களுக்கு இந்த கல்யாணத்துல தான் சந்தோஷம்னா அத ஏன் பண்ணிக்க கூடாதுன்னு தோணுச்சி . ராஜிவ் இப்போ தான் என் வாழ்க்கை குள்ள வந்தான் .ஆனா நீங்க என்னோட இருபத்து மூணு வருஷமா கூடவே இருக்கீங்க. ராஜிவா அப்பாவான்னு வரும்போது நான் எங்க அப்பா தான் முக்கியம்னு முடிவு எடுத்துட்டேன் மா அதான் இந்த மாற்றம் ” என்றாள் தோளை குழுக்கி கொண்டு…

Advertisement

அவர்களும் அவளின் காரணத்தை ஏற்றுக் கொண்டனர். ஜெயந்தி அவளுக்காக மணக்க மணக்க காப்பி எடுத்துட்டு வந்து கொடுத்தார்.

Advertisement

அவளும் அதை ருசித்து ருசித்து குடித்தவள் பின் அவள் அறைக்குள்ளே முடங்கிக் கொண்டாள்.

அவ்வபோது உதயும் நந்தினியும் சேர்ந்து சரவணனையும் ஸ்ருதிக்காவையும் பார்த்து விட்டு வந்தனர். சுமியின் மருத்துவமனையிலே வைத்திருந்ததால் சரவணன் இல்லை என்றாலும் யாரோ ஒருவர் அவளை கவனித்துக் கொண்டனர்.

நந்தினி அன்று உதயிடம் அவளது காதல் கதைகளை கூறியதோடு அவ்வளவு தான் அதன் பின் அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

Advertisement

ஆனால் இருவருக்குள் இருந்த பெருகிக்கொண்டே இருந்ததை தவிர குறைய வில்லை. உதய் தான் அவளின் இந்த மாற்றத்தில் குழம்பி போய் நின்றான்.

அடுத்தநாள் அதன் விடியலை தெரிவிக்க கதிரவன் மெதுவாக அதன் இமை திறந்து பூமியில் பதிக்க தன்னவனின் வருகை அறிந்து நாணத்தில் தன்னை மறைத்துக் கொண்டது மதி.

அந்த வேகமாக நகர தொடங்க அனைவரும் மண்டபத்திற்கு கிளம்ப தொடங்கினர். வெங்கட் எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தான் நடப்பது நடக்கட்டும் என்ற ரீதியில்…

இவர்களுக்கு எல்லாம் மாறாக கீர்த்தி மகிழ்ச்சியுடனும் புன்னகையுடனுமே காணப்பட்டாள்.

மாலை நேரம் வர இருவருக்குமான நிச்சயம் நல்ல நேரத்தில் நடந்தேறியது. புன்னகையுடன் மோதிரத்தை அவள் கை அவனிடம் இருந்து அனிந்து கொண்டாள். ஆனால் வெங்கடேஷ் தான் சிறிது தயங்கி நின்றான் மோதிரம் மாத்திக் கொள்வதில்…

உதய்க்கு ஏனோ கீர்த்தியின் நடவடிக்கை தப்பாக இருப்பது போல் தோன்றியது. அதை அவன் நந்தினியிடம் கூற ” அதெல்லாம் ஒன்னும் இல்ல உதய். அவ எப்பொழுதுமே இப்படி தான் இருப்பா ” என்றாள்.

அதன் பின் அவனும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இரவு நேரமாகவும் அனைவரும் உறங்க சென்றனர்.கீர்த்தி அமைதியாக உறங்கிப் போனால். அவளுடன் கவி சுஜி விஷ்ணு இருந்தனர்.

அடுத்தநாள் விடியல் அனைவருக்கும் மகிழ்ச்சியை உண்டு பண்ண எல்லா வேலைகளுயும் பரபரப்பாக நடந்தது.

கீர்த்தி நேற்று இருந்த சந்தோஷம் இல்லாமல் சிறிது பதற்றத்துடன் காணப் பட்டால். நந்தினியும் சுமியும் கீர்த்தியை அலங்காரம் பண்ணி கொண்டு இருந்தனர்.

கவி சுஜி விஷ்ணு அங்கும் இங்கும் நடந்துக் கொண்டே வேலை செய்வது போல் பாவனை செய்தனர்.

ஜீவாவும் ஹரியும் ஐயருக்கு தேவையானவற்றை எடுத்துக் கொடுத்தனர்.

கீர்த்தி நந்தினி சுமிக்கு தெரியாமல் ராஜிவ்க்கு அழைக்க அதுவோ ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது.

பதற்றமடைங்கள் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். அங்கிருந்த பெண்கள் அவள் வெட்கத்தில் தலை கவிழ்கிறாள் என்றெண்ணி கீர்த்தியை கலாய்த்தனர்.

மணமேடையில் ஐயர் மாப்பிள்ளையை அழைத்து வர சொல்ல உதயும் சூர்யாவும் அவனை அழைத்து வந்தனர்.

சிறு நாழியில் பெண்ணை அழைத்து வர சொல்ல பாவையவள் தோழிகளின் நடுவில் பயத்திலே நடந்து வந்தாள். அவளின் பார்வை என்னவோ வாசலையே பார்த்திருந்ததது.

அனைவருக்கும் வணக்கத்தை வைத்தவள் வெங்கட் பக்கத்தில் பயத்துடனே அமர்ந்தாள். இதனை கண்ட ஜெயந்திக்கும் ராஜதுரைக்கும் சந்தோஷமாக இருந்தது.

செய்ய வேண்டி சடங்குகள் என இருவரும் சேர்ந்தே செய்ய சுமியை அழைத்த ஐயர் தாலியை அவர் கையில் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி வர சொன்னார்.

அவளும் அதை வாங்கிக் கொண்டு அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்தவளை கண்ட சூர்யாவிற்கு சுமித்ரா புதுவிதமாக தெரிந்தாள்.

தாலியை ஐயர் கையில் கொடுத்தவள் சூர்யாவின் பக்கத்தில் நின்றுக் கொண்டாள்.

தாலியை அனைவரின் பார்வையில் காட்டிய ஐயர் வெங்கடேஷ் கையில் கொடுத்து கெட்டிமேளம் கெட்டிமேளம் என்க அவனின் பார்வையோ கீர்த்தி மீதே நிறைந்திருந்தது.

மெதுவாக அவள் காதில் ” ராஜிவ் வந்துடுவான்ல ” என்று கேட்க

அவனை நேரிட்டவளின் கண்ணில் கண்ணீர் துளிகள் தேங்கி இருந்தது. அதனை கண்ட வெங்கட்டிற்கு இதயத்தில் ஈட்டியை வைத்து குத்துவது போல் இருந்தது.

” தம்பி தாலி கட்டுங்கோ ” என்று சொல்ல அனைவரும் ” கட்டு டா தாலிய” என்று அவசர படுத்த வேறு வழியின்றி அவளின் கழுத்தில் முதல் முடிச்சினை போட மீதி இரண்டு முடிச்சை நாத்தனார் ரீதியில் சுமி கட்டி விட்டாள்.

கீர்த்திக்கு கண்ணில் நிற்காமல் கண்ணீர் வடிந்தது. அடுத்தடுத்த சடங்குகள் முடிவுபெற மண மக்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று சம்பிரதாயத்தை செய்து முடித்தனர்.

இரவு நேரம் வரவும் கீர்த்தியை தயார் படுத்திய நந்தினி மற்றும் சுமி அவளை கலாய்த்த படியே வெங்கட் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அறைக்குள் வந்த கீர்த்திக்கு மூச்சே முட்டுவது போல் இருந்தது. சுற்றிலும் யாரும் இல்லாமல் போக மெதுவாக கட்டிலில் அமர்ந்து கால்லை மடக்கி தலை கவிழ்ந்தவாறு அழுகத் தொடங்கினாள்.

சிறிது நேரத்தில் உள்ளே வந்த வெங்கட் எதுவும் பேசாமல் அமைதியாக இரவு உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்றுவிட்டான்.

உடை மாற்றி வந்தவன் அமைதியாக சோஃபாவில் உறங்க செல்ல அதுவரை அமைதியாக இருந்த கீர்த்தி அவன் பக்கத்தில் எழுந்து வந்து ” என்னோட தூக்கத்த கெடுத்துட்டு எப்படி நீ நிம்மதியா தூங்கலாம் சொல்லு ” என்று அடங்காத கோபத்தில் கேட்க

” நான் என்ன பண்ணேன் கடைசி நிமிஷத்துல கூட நான் உன்கிட்ட கேட்டேன் ராஜிவ் வந்துருவான்னான்னு அவன் வராம போனதுக்கு நான் என்ன பண்ணுவேன் சொல்லு ” என்றான் வெங்கடேஷ்.

அவனின் இந்த சாதாரணமான பேச்சு அவளுக்கு மேலும் எரியும் தீயில் நெய் ஊற்றுவது போல் கோபத்தை ஏத்த ” இதெல்லாம் நீ ப்லான் பண்ண மாதிரி தான நடக்குது. அன்னைக்கு உன்னால என்ன அடைய முடியலன்னு நல்லவன் மாதிரி வேஷம் போட்டு என்ன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் வீட்டுக்கே கொண்டு வந்து விட்ட இது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா ஒரு டாக்டரா இருந்துக் கிட்டு இவ்வளவு கீழ்தரமா நடந்துக்குற உனக்கு வெக்கமா இல்லையா . நீ இப்படி இருக்க போய் தான் உன் தங்கச்சியும் அப்படி ஒரு காரியம் பண்ணாலா ” என்று வார்த்தைகளை அள்ளி விட இந்த முறை கோபம் வந்தது வெங்கட்க்கு அவள் கண்ணம் பழுக்கும் மாறு ஒரு அறை அறைந்தான்.

அவன் அறைந்த அறையில் கீழே சுருண்டு விழுந்தாள் கீர்த்தி.

” யாரா பாத்து என்ன பேச்சு பேசுற உனக்கு என்னோட தங்கச்சிய பத்தி பேச உனக்கு எந்த உரிமையும் இல்லை. என்ன சொன்ன எனக்கு உன்ன அடையனும்னு ஆசையா .அடி போடி உன்ன காதலிக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்து என்னோட பார்வை உன்னோட கண்ண தாண்டி போனது இல்ல டி. நானும் மனிஷன் தான் சரியா அதுக்காக ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்கிற அளவுக்கு நான் ஒன்னும் மோசமான ஆளு இல்ல . உன்ன போய் லவ் பண்ணதுக்கு நான் இப்ப அசிங்கம் படுறேன். யாரு நல்லவுங்க கெட்டவுங்கன்னு கூட தெரியுறது இல்ல ” என்றவன் அறையை விட்டு வெளியேறினான்.

அவன் வெளியே சென்றவன் தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள். அழுது அழுது ஓய்ந்தவள் நித்திராவின் அழைப்பில் அப்படியே தூங்கி போனாள்.

உதயும் நந்தினியும் ஓர் அளவிற்கு நெருக்கமானார்கள்.

அடுத்த நாளே கீர்த்தியும் வெங்கட்டும் மறு வீட்டிற்கு சென்று வந்தனர்.

சுஜி கவி விஷ்ணுவிற்கு பண்ணி ரெண்டாம் வகுப்பு தேர்வு தொடங்க இருப்பதால் நந்தினி அவர்கள் கூடவே இருந்தாள்.

வெங்கட் கீர்த்தி உதய் மரகதம் வெங்கட் வீட்டில் இருந்தனர்.

தேர்வுகள் தொடங்கவும் நந்தினியும் கீர்த்தியும் அவர்களை கவனத்துடன் படிக்க வைத்தனர். ஒரு மாதம் கழித்து பண்ணி ரெண்டாம் வகுப்புகள் தேர்வு முடிந்தது. அதனால் நந்தினி மீண்டும் வெங்கட் வீட்டிற்கே வந்து சேர்ந்தாள்.

உதய் நந்தினியின் வாழ்வில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் போக அதற்குள் கவி சுஜி விஷ்ணுவிற்கு தேர்வுகளின் முடிவுகள் ஒரு நாளில் வர இருந்தது.

நந்தினிக்கு அந்த காலையில் இருந்து மனம் ஏதோ பாரமாக இருப்பது போல் உணர உதயிடம் அனைத்தையும் கூறி தன் காதலை தெரிவித்து விடலாம் என்ற முடிவில் இருந்தாள்.

மாலை நேரம் போல் உதய் அறைக்குள் வரவும் ” உதய் சார் நான் கொஞ்சம் உங்க கிட்ட பேசணும் ” என்க

” சொல்லு தினு மா ” என்று அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

” எனக்கு ஏதோ ஒரு மாதிரி இருக்கு சார் இன்னைக்கே உங்க கிட்ட என்னோட பாஸ்ட் லைஃப்வ பத்தி சொல்லிறேன் . நான் ஏன் அவன இப்படி வெறுக்கிறேன்னு ” என்றாள்.

” இப்ப எதுக்கு மா அது ” என்று சொல்ல

” இல்ல சார் இத முடிச்சிட்டு உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும் .அதுனால நீங்க எதுவும் பேசாதீங்க நம்ம பிரிஞ்சதுக்கான ரீசன் கண்டிப்பா உங்களுக்கு தெரிஞ்சாகணும் ” என்றவள் அவள் அவனை வெறுக்க காரணமான நாளை பற்றி கூறத் தொடங்கினாள்.

” அன்னைக்கு கிருஷ பாக்க ஆசை ஆசையா போனேன் சார். அப்போ அவுங்க ஃப்ரண்டு ஒருத்தவுங்க என்கிட்ட வந்து ஒரு பூங்கா நேம் சொல்லி அங்க போக சொன்னாங்க ” என்று தொடங்கினாள்..

கிருஷை பார்க்க வேண்டிய ஆவலில் மாலை நேரத்தில் வேகமாக அந்த பூங்காவிற்கு சென்றாள். கீர்த்தியை கூட அழைத்து வர வில்லை..

அவனை காணும் போது அவளின் காதலை கூறிட வேண்டும் என்ற ஆசையில் அவனுக்காக காத்திருக்க தொடங்கினாள்.

வானம் கொஞ்ச கொஞ்சமாக இருட்டத் தொடங்க அவளுக்குள் பயம் வரத் தொடங்கியது. ஆனால் கிருஷ் வருவான் என்ற நம்பிக்கையில் இருந்தாள்.

ஆனால் மணி ஒன்பது ஆகியும் வராமல் போகவும் அவள் பயத்தின் உச்சத்தில் இருந்தாள்.‌அவன் வரவில்லை என்றதும் எழுந்து செல்ல பார்க்க அப்போது சில பெண்கள் வரவும் அவர்களுடன் அய்க்கியமானவள் மெதுவாக நடக்கத் தொடங்கினாள்.

தீடிரென்று போலிஸ் வரவும் அந்த பெண்கள் அனைவரும் ஓடத் தொடங்கினர். இவர்கள் எதுக்கு இப்படி ஓடுகிறார்கள் என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த நந்தினியை போலிஸ் பிடிக்க

அவளை ஏற இறங்க பார்த்த அந்த பெண் போலிஸ் ” நல்லா தான இருக்க உழைச்சி சாப்ட்டா தான் என்ன எதுக்கு இந்த கேவலமான தொழில் உனக்கு ” என்று கோபத்தில் அவர் கேட்க

” மேம் நீங்க என்ன சொல்ல வரீங்க எனக்கு ஒன்னும் புரியல ” என்று அவர்கள் பேசியது நந்தினி கேட்டாள்.

” இந்த தொழில் பண்ணா இப்படி தான் எல்லாம் பேசுவீங்க ச்சி நட ஸ்டேஷனுக்கு ” என்று அவள் முடியை பிடித்து இழுத்து சென்றார் அந்த அதிகாரி.

” மேம் என்ன விடுங்க நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல மேம் ப்ளிஸ் என்ன விடுங்க நான் வீட்டுக்கு போகனும் ” என்று நந்தினி கதறி அழுக

” எதுக்கு இந்த நாடகம் ” என்று அவளை வண்டியில் ஏற்றி அவளை போலிஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.

அப்போது அந்த வழியே தன் நண்பனை காண வந்த ஜீவா நந்தினியை பார்த்து விட வேகமாக அந்த வண்டியை பின் தொடர்ந்தான்.

வேகமாக வந்த ஜீவா உள்ளே வந்து ” அம்மு அம்மு ” என்று அழைக்க

” அப்பு ” என்று கதறியவாறு செல்லில் இருந்து கத்தினாள்.

” மேடம் எதுக்கு நீங்க நந்தினிய இப்படி சிறையில அடச்சி வச்சிருக்கீங்க ” என்று கோபத்தில் கர்ஜிக்க

” நீ யாரு அவளுக்கு ” என்று சோதனையிடும் பார்வையில் அவர் கேட்க

” அவ என்னோட அத்த பொண்ணு மேடம் .நான் தான் அவள அங்க வெயிட் பண்ண சொன்னேன் .அவள கூப்பிட வரதுக்குள்ள நீங்க கூட்டிட்டு வந்துட்டிங்க ” என்று சொல்ல

” என்ன டா இதெல்லாம் நான் நம்பனுமாக்கும் .என்ன இன்னைக்கு உன்கிட்ட தான் காசு வாங்குனால” என்று திமிராகவே பேச நந்தினி உடைந்து போனால்.

”  மேடம் ” என்று கத்தியவன் சூழ்நிலை அறிந்து அவனது மொபைலில் குடும்பமாக சேர்ந்து எடுத்த புகை படத்தை காட்டினான்.

அதை கண்ட பின்னரே நம்பிய அந்த அதிகாரி அவளை மட்டும் திறந்து விட சொல்ல அவரும் திறந்து விட நந்தினி கூசி போய் நின்றிருந்தாள் அவரின் முன்பு..

” இனி அந்த மாதிரி இடத்துலலாம் நிக்காத இது உன்ன மட்டும் இல்ல குடும்பத்தையே பாதிச்சிடும் ” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்த இருவரும் அமைதியாக இருக்க சிவசங்கரன் என்னவென்று கேட்க அவரிடம் பொயுரைத்த ஜீவா அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

அடுத்த இரண்டு நாளிலேயே சுமியின் அன்னை இறந்து விட அங்கே அவளை அழைத்து சென்று வந்தனர் .

ஜீவா அவளுக்கு துணை நின்றாலும் அவளிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டான். ஜீவாவின் ஒதுக்கமும் அவளின் இந்த நிலைக்கு காரணமான கிருஷின் மேல் வெறுப்பு வந்தது.

இதனை எல்லாம் கேட்ட உதய் வேகமாக அவள் பக்கத்தில் இருந்து எழுந்து தன்னவளை திரும்பி பாராமல் கூட விருட்டென சென்றுவிட்டான்.

இரவு முழுவதும் அவனுக்காக காத்திருந்த நந்தினி எப்போது உறங்கினால் என்றே தெரியாது…

காலை விடிந்ததும் உதயை தேட அவன் வரவில்லை என்று தெரிந்ததும் முகம் சோசகமாக மாறியது. குளித்து விட்டு வந்தவள் கவி சுஜிக்கு இன்று  தேர்வு முடிவுகள் என்றிருந்ததால் அவர்களை காண கீழே சென்றாள்.

அவளது வீட்டில் அனைவரும் இருக்க அவள் பார்வை என்னவோ வெளியவே இருந்தது.

பத்து மணிப் போல் ரிசல்ட் வர சுஜியும் கவியும் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தனர்.

கீர்த்தி விஷ்ணுவிற்கு அழைத்து அவளது மதிப்பெண்ணை கேட்டு தெரிந்துக் கொண்டாள்..

அனைவரும் ஒரிங்கே இருக்க அவ்வப்போது கார்த்திக் நந்தினிக்கு அழைத்திருந்தான்.

அவள் அழைப்பை எடுக்காமல் இருந்ததை கவனித்த கீர்த்தி  ” யாரு டி லைன்ல ” என்க

” கார்த்திக் டி ” என்றாள் நந்தினி.

” சரி எடுத்து என்னென்னு பேசு ” என்று கீர்த்தி சொல்ல சரி என்று போனை உயிர் பித்தாள்.

” சொல்லுங்க கார்த்திக் சார் ” என்று சொல்ல

” உங்க மேரேஜ் அண்ட் பேர்த்டேக்கு என்னால வர முடியல அதுக்கு தான் விஷ் பண்ணலாம்னு கால் பண்ணேன் ” என்றான்.

” தேங்க் யூ சார் ” என்றாள் அமைதியாக

” உங்க மேரேஜ் கிஃப்ட் ஒன்னு வச்சிருக்கேன்.அது ரொம்பவே ஸ்பெஷல் அந்த கிஃப்ட் மட்டும் என்னென்னு உங்க குடும்பத்துக்கு தெரிஞ்சதுன்னா எல்லாரும் ஷாக் ஆகிடுவீங்க . நான் அந்த கிஃப்டோட உங்கள பாக்க வரேன் ” என்று விட்டு மொபைலை வைத்தான்.

கீர்த்தி என்னவென்று கேட்க ” தெரியல டி ஏதோ கிஃப்ட் கொண்டு வாங்கலாம் அத பாத்தா நம்ம பேமிலியே ஷாக் ஆகிடுவோம்ன்னு சொன்னாங்க டி ” என்றாள் ‌நந்தினி.

இதை எல்லாம் நந்தினிக்கு பக்கத்தில் இருந்த ஜீவா கேட்டுக் கொண்டு இருந்தான்.

கவி அவளின் மார்க்கை எண்ணி சந்தோஷத்தில் இருந்தாள். ஆனால் சுஜியோ எதையோ பறிகொடுத்த மாதிரியே இருந்தாள்.

சிறிது நேரத்தில் நந்தினியின் வீட்டு காலிங் பெல் அடிக்க நந்தினி சென்று கதவை திறந்து பார்த்தாள். யாரும் இல்லாமல் போகவே வெளியே சென்று தேடி பார்க்க சென்றாள்.

போன நந்தினி வராமல் போகவே கீர்த்தி அவளை தேடிக் கொண்டு போனாள். அங்கிருந்த மகிழ்ச்சியில் இருவரும் வெளியே போனவர்கள் வரவில்லை என்று ஞாபகத்தில் இல்லை…

சுஜிக்கு தான் வெகு நேரமாக தன் அக்காவும் கீர்த்தியும் தென்படாமல் போகவே ” நந்தினி அக்காவும் கீர்த்தி அக்காவும் எங்க ” என்று கேட்டாள்.

அப்போதே அனைவரும் இருவரையும் காணோம் என்றே தேட தொடங்கினர்.

வீட்டில் இருந்த எல்லா இடத்திலையும் தேடி பார்க்க அவர்கள் இருவரும் இல்லை என்றதும் அங்கே பதற்றம் நிலவியது.

மரகதம் கவி சுஜி என மூவரையும் வீட்டில் பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு நந்தினி கீர்த்தியை தேட சென்றனர் .

சூர்யாவும் சுமியும் ஒரு புறம் தேட வெங்கட் ஒருபுறம் ஜீவா ஹரி ஒருபுறம் மற்றும் மஹாலிங்கமும் சிவசங்கரனும் ஒருபுறத்தில் தேட சென்றனர்.

அங்கே உதயோ அவனது பழைய வீட்டின் மொட்ட மாடியில் வெறித்த படி பாதி குடித்த பாட்டிலுடன் அமர்ந்திருந்தான்…

தேடல் தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!