Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 41

 

?சுழற்றும்
சூறாவளியிலும்
நிலையாக
நிற்கும் நான்
உன் இதழ்
தீண்டலில்
தடுமாறிப்
போகின்றேன்?

நந்தினி அமைதியாக அனைத்தையும் கூறிவிட்டு உடை மாற்ற சென்றுவிட்டாள். ஆனால் அவளின் பேச்சில் ஸ்தம்பித்து நின்றிருந்தான்.

உடையை மாற்றி வந்த நந்தினி அவனை கண்டு நமட்டு சிரிப்பொன்றை கொடுத்து விட்டு ” உதய் சார் தூங்க வரலையா ” என்று கேட்டவாறு ட்ரெஸிங் டேபிளில் அமர்ந்து கொண்டு ” நான் உங்க கிட்ட டிவேர்ஸ் கேட்டேன்ல சார் அது இனி எனக்கு தேவ படாது சார் . என்னோட லைஃப்வ நான் மூவ் ஆன் பண்ணலாம்னு இருக்கேன். நான் மூவ் ஆன் பண்றதுக்கு முன்னாடி என்னோட பாஸ்ட்ட உங்க கிட்ட சொல்லிட்டா ஐ ஃபீல் பேட்டர் ” என்றாள் அதிலும் பாஸ்ட் என்பதை அழுத்தி சொன்னாள்.



Advertisement

பால்கனியில் இருந்து சோஃபாவில் அமர்ந்தவன் ” உன்னோட பாஸ்ட் தெரிஞ்சு எனக்கு என்ன ஆக போகுது சொல்லு அதெல்லாம் எனக்கு தேவையில்லை . உனக்காக கண்டிப்பா கிருஷ் காத்திக்கிட்டு இருப்பான் ” என்று தூங்க போக

பாவையவள் நமட்டு சிரிப்புடன் ” வேணாம் சார் அது கேரண்டி இல்லாத லைஃப் அதுக்காக நான் வெயிட் பண்ண போறது இல்லை. இனி என்ன இருந்தாலும் என்னோட லைஃப் உங்க கூட தான் . இப்ப வேணாம்னு சொல்ற நீங்க பீயூச்சர்ல ஏன் டி என்கிட்ட சொல்லலன்னு சண்டை போட கூடாது பாருங்க அதுக்காக இப்பவே சொல்றேன்  ” என்று அவன் பக்கத்தில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

” நான் ஏன் அந்த மாதிரி எல்லாம் கேக்க போறேன் ” என்று எழுந்தவனை அவனின் கை பிடித்து அமர வைத்தாள்.

Advertisement

இழுத்ததில் அவள் மேலே விழுகச் சென்றவனை அவனின் இதயத்தில் கை வைத்து நிறுத்தினாள்.

Advertisement

உதயின் இதயம் வேகமாக துடிக்க அவளுக்கு அது நிது நிது என்று துடிப்பது போலவே இருந்தது. அதை ஆழ்ந்து இரசித்தவள் அவனின் விழியை நோக்க அதில் ” இப்படி பண்ணாத நிதி ப்ளிஸ் ” என்று கெஞ்சுவது போல் இருந்தது. உடனே அவனை தள்ளி விட்டாள்.‌ உதய் அவளுக்கு எதிர் புறத்தில் அமர்ந்துக் கொண்டான்.

” ஒழுங்கா நான் சொல்றத கேளுங்க இல்லன்னா அவ்வுளவு பாத்துக்கோங்க ” என்று மிரட்ட உதய்க்கு தான் தலை சுற்றியது .

” இவளையா நாம தைரியசாலியா மாத்தனும்னு நினைச்சோம் . அதுவும் இல்லாம இவ என்ன எனக்கு கிருஷோட லவ் வேணாம்னு சொல்றா. உதயும் நான் தான் கிருஷூம் நான் தான் இதுல கிருஷ் வேணா உதய் தான் வேணும்னு சொல்றா இப்ப நான் என்ன பண்ணனும்னு கூட தெரியலையே ” என்று மனதினுள் புலம்பிக் கொண்டு இருந்தான்.

Advertisement

” நான் கிருஷ ஒரே ஒரு தடவ தான் பாத்துருக்கேன் சார் அதுவும் சின்ன வயசுல அப்ப நான் நயந்த் தான் படிச்சிட்டு இருந்தேன் சார் ” என்று அவர்களின் முதல் நாள் சந்திப்பை பற்றி கூறினாள்.

” அதுக்கப்புறம் எங்க வீட்ல நிறைய பிரச்சினை .என்னால எதுவும் செய்ய முடியாத நிலமை. படிக்க வைக்க மாட்டேன்னு அத்த சொல்லிட்டாங்க அப்புறம் அப்புவால தான் திரும்பவும் ஸ்கூலுக்கு போனேன் .+2 முடிக்கும் போது XXX காலேஜ்ல இருந்து இப்படி +2 மாணவர்கள கூப்பிட்டு இருந்தாங்க அதுல தான் எனக்கு நர்ஸ் ஆகனும்னு ஆச வந்துச்சி. நான் நர்ஸ் படிகிறேன்னு சொன்னதும் கீர்த்தியும் என்கூட ஜாயின் பண்ணிக்கிட்டா ” என்றவள் அவனின் மேல் மையம் கொண்டத்தை பற்றி விவரிக்க தொடங்கினாள்.

உதயும் தனக்கு தெரிந்த விடயம் தான் என்று விடாமல் தன்னவளின் மூலமாகவே தன் காதல் கதையை கேட்க போகிறோம் என்ற ஆசையில் அதை கவணிக்க தொடங்கினான்.

கல்லூரி சேர்ந்து ஒரு மாதம் காலம் இருந்தது. அன்று கீர்த்தியும் நந்தினியும் பேசிய படி வகுப்பிற்கு வந்தனர். பேக் வைக்கும் இடத்தில் அவள் பேக் வைக்க போக அந்த இடத்தில் அவளுக்கு ஒரு லெட்டர் கிடைக்க அதை எடுத்தாள்.

அதனை கண்ட கீர்த்தி ” என்ன லெட்டர் டி அது ” என்று வினவ

” எனக்கு தெரியல என்னோட ப்ளேஸ்ல இருந்தது ” என்று கூறிய அடுத்த நொடியே கீர்த்தி அதை அவளிடம் இருந்து கைப்பற்றினாள்.

கீர்த்தி அந்த லெட்டரை எடுத்து பிடித்தவள் வாசிக்க தொடங்கினாள்.

” ஹாய் ஐம் கிருஷ் ” என்று படித்ததும் வேகமாக அவளிடமிருந்து அதை பறித்து விட்டாள்.

” ஏன் டி பிடுங்குன குடு நான் படிக்கிறேன்” என்று கேட்க

” அதெல்லாம் ஒன்னும் வேணாம் என்னோட ப்ளேஸ்ல தான இருந்துச்சி அதுனால நானே படிச்சிக்கிறேன் ” என்றவள் அந்த லெட்டரை பிரித்து படிக்க தொடங்கினாள்.

அதில்…

” ஹாய் ஐம் கிருஷ்..!! என்ன மறந்துருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். எப்படி இருக்க நிது மா.?? நீயும் என்னோட காலேஜ்ல தான் ஜாயின் பண்ணி இருக்க நீ பர்ஸ்ட் டே காலேஜ்க்கு வரும் போது பாத்தேன்.ஆனா உன்கிட்ட பேச வரல ஏன்னா கூட உன்னோட ஃபிரண்ட் இருந்தாங்க. அப்போ தான் தெரிஞ்சது நீ நர்ஸிங் எடுத்திருக்கிறன்னு. குட் செலக்ஷன் நிது. ஒரு உயிர காப்பத்துறதுக்கு துணை புரிய போற எனக்கு ரொம்ப ஹாப்பியா இருந்துச்சி . உனக்கு என்ன ஹெல்ப்னாலும் என்கிட்ட இந்த மாதிரி ஒரு லெட்டர் எழுதி உன்னோட ப்ளேஸ்க்கு கீழ வச்சிட்டு பொயிடு நான் அத எடுத்து பாத்துக்கிறேன். நீ வொரி பண்ணாம நல்லா படிக்கனும் சரியா. உன்னோட தைரியம் தான் உன்னோட லைஃப்வ்க்கு பலமே பீ ஸ்ட்ராங் நிது அண்ட் டேக் கேர் யுவர் செல்ஃப் ” என்று எழுதி இருந்தது.

அதை படித்து முடித்தவள் ” எப்படி என்ன ஞாபகம் இருந்தது கிருஷ்க்கு ” என்று யோசனை செய்தவள் தனக்கும் அவனது ஞாபகம் இருந்தது என்பதை மறந்தாள்.

அதற்கு இவள் ஒரு லெட்டர் எழுதி வைத்தாள்.

” இப்படி லெட்டர் எழுதுறதுக்கு என்கிட்ட நேர்லேயே என்ன பாத்து பேசி இருக்கலாம்ல எதுக்கு இந்த மாதிரி ” என்று கேள்வி கேட்டிருந்தாள்.

அடுத்தநாள் அவனது பதில் என்னவாக இருக்கும்னு என்று யோசித்து யோசித்து நடு இரவில் உறங்கி போனாள்.

அடுத்தநாள் காலை சீக்கிரமாகவே கல்லூரிக்கு வந்து சேர்ந்தாள்.‌அவளுக்குள் ஏனோ ஆயிரம் படபடப்புகள் . அவளின் இதயம் தாறுமாறாக துடிக்க வேகமாக அவளது இடத்திற்கு வந்தவள் குமிந்து லெட்டர் இருக்கா என்று பார்க்க அவள் நினைத்தது போல் அங்கே இருந்தது.

உடனே அதை எடுத்தவள் பிரித்து படிக்க தொடங்கினாள்.

” நீ கேட்டது சரி தான் . நான் நேரிலேயே வந்து பாத்துருக்கலாம். ஆனா அது உன் ப்யூச்சருக்கு நல்லது இல்ல. உன்கிட்ட போன் இல்ல இருந்திருந்தா அதுல உனக்கு கால் பண்ணி பேசி இருப்பேன். உன்ன யாரும் தப்பா பேசிட கூடாது .அதுனால தான் இந்த லெட்டர் நிதி மா டேக் கேர் நிது ” என்றிருந்து இறுதியில் வித் லவ் கிருஷ் என்று இருந்த இடத்தை புன்னகையுடன் தொட்டு பார்த்தாள்.

ஏனோ அதை தொடும்போதே அவளுக்குள் ஒரு சிலிர்ப்பு . மெய் சிலிர்த்து போனாள் அவனின் எழுத்துக்களில். எப்படி ஒருவனால் மற்றவரின் வாழ்வை நினைத்து செயல் பட முடிகிறது என்று ஆச்சிரயபட்டால்.

அவர்களது நட்பு இப்படியே வளர்ந்து கொண்டு சென்றது. தினமும் அவர்கள் இருவரும் லெட்டர் மூலம் பேசிக் கொண்டனர்.

இதற்கிடையில் அவளது பிறந்தநாள் வரவே அன்று காலை அவளது இடத்தில் எந்த ஒரு லெட்டரும் இல்லாமல் போகவே அவளது முகம் சொகத்தை தத்து எடுத்துக் கொண்டது..

இதனை அனைத்தும் கண்ட கீர்த்திக்கு ஒன்னும் புரியவில்லை. அவளிடம் எதுவும் கேட்க தோன்றவில்லை. அதனால் அப்படியே விட்டு விட்டாள்.

அவள் பிறந்தநாள் என்றிருந்தும் அவள் முகம் சோகமாகவே இருந்தது. மதிய உணவை நண்பர்களுடன் சேர்ந்து கேண்டினில் முடித்த நந்தினி முகத்தை தொங்க போட்டுக்கொண்டே அவளது வகுப்பிற்கு வந்து தஞ்சமடைந்தாள்.

மாலை நேரமாகவும் வகுப்பு விட்டது. அவளது பையை எடுத்தவளுக்கு ஆச்சிரியமே நிறைந்திருந்தது. அவளது பேக்கிற்கு மேல் ஒரு க்ரீடிங்க் கார்ட் ஒன்று இருந்தது.

அதில் H மட்டுமே எழுதி இருந்ததும். அவள் பையை எடுத்துக்கொண்டு வெளியே வரவும் ஒருவள் அவள் முன்பு ” இந்தாங்க சிஸ்டர் ” என்று அடுத்த க்ரீடிங்கை நீட்ட புன்னகையுடன் வாங்கியவள் தொறந்து பார்க்க A இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு எழுத்துக்களை கொண்ட க்ரீடிங் கார்டை அவளுக்கு நீட்டினர்.

அவளும் அதை இன் முகத்துடன் பெற்றுக் கொண்டாள். இறுதியாக ஒரு குழந்தை மலர் கொத்துடன் இறுதியான க்ரீடிங் கார்டை தந்து ” ஹாப்பி பேர்த்டே நிது பேபி ” என்று வாழ்த்தினாள் மழலை மொழியில்.

அவளுக்கு நன்றி கூறிவிட்டு அதை திறந்து பார்த்தாள். அதில் ” Happy Birthday nidhuஎன்று எழுதி இருந்தது. அதற்கு கீழே உனக்கான பரிசு கோவிலில் உள்ளே இருக்கிறது என்று எழுதி இருந்தது.

அதை படித்தவள் ஓட்டமும் நடையுமாக கல்லூரியின் வாயிலில் இருக்கும் கோவிலுக்கு சென்றாள். அங்கே அவளுக்கான கிஃப்ட் பாஸ் இருந்தது. அதை திறந்து பார்த்தாள் .

அதில் இதயத்தை டாலராக கொண்ட செயின் இருந்தது. அதை எடுத்தவள் ஆசையாக அந்த இதயம் போல் உருவக பட்ட டாலரை தொட்டு பார்த்தாள். அவள் கைப்பட்டதும் அந்த இதயம் திறந்து கொண்டு அதில் ஒரு இதயத்தை காட்டியது.

ஏனோ அவளுக்கு அந்த செயின் மிகவும் பிடித்திருந்தது. சாமி சன்னதி முன்பு அதை அனிந்து கொண்டாள். கிருஷே அவளுடன் இருக்கிற மாதிரியான ஒரு உணர்வு அவளுள்.

இதை தூரத்தில் நின்று காதலுடன் அவள் செய்யும் செயல்களை இரசித்து பார்த்தான். அவனது உதடுகள் அனிச்சையாக நிது என்று உரைக்க கிருஷ்  தன்னை அழைத்தது போல் இருக்க அவளது விழிகளை அவனை தேட தொடங்கியது. அதனை உணர்ந்து கொண்ட கிருஷ் அவள் பார்க்கா வண்ணம் மறைந்துக் கொண்டான்.

அதன்பின் நாட்கள் வேகமாக சென்றது. நந்தினிக்குள் காதல் என்றோ நுழைந்திருந்தது. அதனை அறிந்து கொண்டது அவள் பிறந்தநாள் அன்றே. அதனை அவளால் தைரியமாக அவனிடம் சொல்ல முடியவில்லை.‌ ஆனால் அவளுக்கும் தெரிந்திருந்தது கிருஷூம் தன்னை காதலிக்கிறான் என்று…

இவர்கள் இருவரின் காதலும் சொல்லப்படாமல் சென்றிருக்க இதுவரை அவனை ஒருமுறை கூட பார்த்திடும் ஆவல் அவளுக்கு எல வில்லை. அதற்கு காரணமும் அவனே தான் .

ஒரு முறை அவனே அந்த லெட்டரில் ” நாம கண்டிப்பா என்னோட காலேஜ் ஃபேர்வல் டே அன்னைக்கு மீட் பண்ணலாம். சோ நானும் காலேஜ் முடிச்சிருப்பேன் . உனக்கும் எந்த பிரச்சனையும் வராது ” என்றிருந்தான். அந்த நாளுக்காக காத்திருந்தாள்.

” அந்த நாளும் சீக்கிரமே வந்துச்சி உதய் சார். ஆனா ஏன் டா அந்த நாள் வந்ததுன்னு நான் இப்போ வரைக்கும் ஃபீல் பண்றேன். ஒவ்வொன்னும் பாத்து பாத்து  எனக்காக செஞ்ச கிருஷ் என்ன பாதுக்காக வேண்டிய நேரத்துல பாதுக்காக்காம பொயிட்டான் சார். அதுனால நான் அனுபவிச்ச கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்ல சார். அந்த ஒரு நாள் வராம இருந்திருந்தா நான் அவன என்னோட உயிருக்கு மேல காதலிச்ச கிருஷ வெறுத்திருக்க மாட்டேன் சார் ” என்றாள்.

நந்தினி தன் காதல் கதையை கூறிக் கொண்டு இருந்த போது அலாரம் அடிச்சு அவளின் பேச்சிற்கு தடைப் போட்டது.

கடிகாரத்தை எடுத்து பார்க்க அது ஆறு என காட்டியது.

” அச்சச்சோ அடுத்த நாளே ஆயிடுச்சி சார். நான் உங்க தூக்கத்தையே கெடுத்துட்டேனே ” என்று ஃபீல் செய்ய

” பரவால்ல தினு மா ” என்றான் வருத்தத்தின் உச்சியில்

” சரிங்க சார் நான் கொஞ்ச நேரம் போய் தூங்குறேன் நைட்டு வேற சென்னைக்கு போகனும் இன்னும் ரெண்டு நாள்ல என்னோட பெஸ்டி நிச்சயதார்த்தம் வேற இருக்கு ” என்று புலம்பிய படி கட்டிலில் படுத்து உறங்கி போனாள் அவனின் தூக்கத்தை கெடுத்த நிம்மதியில்…

அந்த காரணத்தை யோசித்து யோசித்து உதய்க்கு மண்டையே வெடிச்சிடும் போல் இருந்தது.

சோஃபாவிலிருந்து எழுந்தவன் தன்னவள் அருகில் சென்று ” எனக்கு உண்மையா தெரியல நிது நான் உனக்கு அப்படி என்ன கஷ்டத்த கொடுத்தேன்னு . ஆனா ஏதோ பெருசா நடந்துருக்கு அது என்னன்னு தான் தெரியல . ஐம் சாரி நிது மா ரியலி சாரி இனி உனக்கு ஒரு கஷ்டமும் வர விடாம பாத்துக்கிறேன் ” என்றவன் ” லவ் யூ சோ மச் நிது ” என்று நெற்றியில் இதழ் பதிக்க வர அவள் சரியாக அவனின் புறம் திரும்பவும் அவனது இதழ்கள் அதனின் இடத்தில் சேர்ந்தது. அறிந்தும் அறியாமலும் அவனின் இதழ் முத்தத்திற்கு இசைந்து போனால் பாவையவள்.

சிறிது நொடியிலே அவளை விடுவித்தவன் எழுந்து நடக்க முயல அவனின் கையை பற்றியவள் ” லவ் யூ டூ ” என்றாள் தூக்க கலக்கத்தில். இதனை கேட்ட உதயின் இதழ்கள் விரிந்தது. அவளின் கையை எடுத்து விட்டவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்..

குளித்து முடித்து வெளியே வந்தவன் வேகமாக ரெடியாகி கீழே சென்று ஜானுவுடன் விளையாடியவன் இரவு கிளம்புவதற்கான ஏற்பாடினை செய்து முடித்தான்.

பின்னர் சூர்யாவை அழைத்துக் கொண்டு எஸ்டேட் வரை சென்றான்.

பத்து மணி போல் எழுந்து நந்தினி குளித்து முடித்து கீழே வர அங்கே ஹாலில் ஜான்வியுடன் விளையாடிய சுமியை கண்டவள் ” குட் மார்னிங் ” என்றாள்.

” குட் மார்னிங் நந்து ” என்று சுமி சொல்ல ” அம்மா அம்மா ” என்று துள்ளியது குழந்தை .

” வா சீக்கிரமா சாப்பிடு ” என்று சுமி நந்துவை அழைக்க

” இல்ல அக்கா எனக்கு வேணாம் ஓரேடியா மதியம் சாப்பிட்டுக்கிறேன் ” என்று சொன்னது தான் அவளின் கையை பிடித்து இழுத்து வந்து டைனிங் டேபிளில் அமர வைத்தாள்.

” ஒழுங்கா சாப்பிடு இல்லன்னா உன் புருஷன் அதான் என்னோட பேஸ்டி என்ன சமாதி கட்டிடுவான் நீ சாப்பிடலன்னா ” என்று சொன்ன படியே காலை உணவினை பரிமாறினாள்.

” என்ன அக்கா சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல ” என்று மனதினுள் கிருஷை நினைத்த படி கேட்க

” நீ எழுந்து வந்ததும் சாப்பிட வைக்கிற அவ  வேணாம்னு சொன்னாலும் விட்றாத .நீ விட்டன்னு மட்டும் தெரிஞ்சது என்கிட்ட அப்புறம் நீ கைமா தான்னு மிரட்டிட்டு பொயிருக்கான் ” என்றாள்.

” அச்சோ ” என்று பரிதாபம் படுவது போல் முகத்தை வைத்துக் கொண்டாலும் உள்ளுக்குள் தன் கணவனை மெய்ப்பித்து கொண்டாள்.

சாப்பிட்டு முடித்தவள் இரவு கிளம்புவதற்கான உடையை எடுத்து வைத்தாள்.

மாலை நேரம் போலவே சூர்யாவும் உதயும் வீடு வந்து சேர்ந்தனர்.

இரவு எட்டு மணி போல் ஃப்ளைட் என்பதால் இவர்கள் ஐவரும் ஊட்டியை விட்டு ஆறு மணி போல் கிளம்பினர்.

ஏர்போர்ட் சென்றவர்கள் இரவு உணவை முடித்து விட்டு ஃப்ளைட் ஏறி ஒன்பது போல் சென்னை வந்து சேர்ந்தனர்.

உதயும் நந்தினியும் வெங்கட் வீட்டிற்கு சென்றனர்.சுமியும் சூர்யாவும் எவ்வளவு கெஞ்சி கேட்டும் இருவரும் வர மறுத்து விட்டனர். ஜான்வியையும் அவர்களுடன் அழைத்து செல்ல சொல்லி கூறி விட்டனர்.

அதன் பின் இரண்டு நாட்கள் போனதே தெரியாமல் போனது. கல்யாண புடவை வாங்குவது தாலி வாங்குவது நலங்கு வைப்பது பந்தக்கால் நடுவது என்ன நாட்கள் வேகமாக சென்றது.

அடுத்தநாள் நிச்சயம் என்றிருந்த நிலையில் கீர்த்தி என்ன செய்வது என்று தெரியாமல் இருட்டு அறையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தவளுக்கு ஒரு யோசனை வரவே அதனை செயல் படுத்தினாள்.

இந்த செயலில் தான் மூன்று பேரின் வாழ்க்கை தலைகீழாக மாற போவது அறியாமல் இருந்தாள் பாவையவள்….

தேடல் தொடரும்…

Stay tuned….✌️✌️✌️✌️✌️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!