Skip to content
Post Views: 1,574
?காட்டில் தொலைந்த
மழை துளி போல்
கண்ணே
நீயும் தொலைந்ததென்ன
நீாினை தேடும்
வோினை போல
பெண்ணே
உன்னை கண்டெடுப்பேன்?
வெயிலின் தாக்கம் அவனை உறுக்கெடுக்க போதையிலிருந்து மீண்டும் வந்தான்.
அப்போது அவனது அலைப்பேசி தன் இருப்பிடத்தை காட்ட அதை தேடி எடுத்தவன் தன் அன்னையிடம் அழைப்பு வந்திருக்கவும் வேகமாக உயிர்பித்து காதில் வைத்தான்.
Advertisement
” ஹலோ மா சொல்லுங்க ” என்று உதய் கேட்க
” எங்கடா போய் தொலைஞ்ச சீக்கிரமா வீட்டுக்கு வந்து சேரு ” என்று கோபத்தில் சத்தமிட்டவர் மொபைலை துண்டித்தார்.
மொபைலை வைத்தவன் வேகமாக எந்திரித்து வீட்டிற்கு சென்றான்.
Advertisement
இங்கோ வெங்கட் பயத்துடனே தேட அவனுக்கு கீர்த்தி நந்தினியை பற்றின கவலை அதிகரித்துக் கொண்டே இருந்தது…
Advertisement
வீட்டிற்கு வேகமாக வந்த உதய் வீட்டினுள் வர வீடே மையான அமைதியாக இருந்தது. உதய்க்கு ஏனோ இந்த அமைதி தவறாக பட ” அம்மா அம்மா ” என்று அழைத்த படி வந்தான்.
மரகதத்தை வீல் சேரில் தள்ளி வந்தாள் கவி. அவரை கண்ட உதய் வேகமாக அவரிடம் வந்து அவரின் காலடியில் அமர்ந்து ” அம்மா ” என்று அழைக்க
அவனை ஓங்கி ஒன்னு கண்ணத்தில் அறைந்தார். நொடி பொழுதில் நடந்தேறியது.
Advertisement
அவர் அடித்த அடியில் உதய் எழுந்து நிற்க ” நந்தினி நந்தினி ” என்று கத்தினான்.
மரகதம் அமைதியாகவே இருக்க
” வெங்கி “
” கீர்த்தி “
” அங்கில்”
” ஜீவா ஹரி”
” அப்பா “
” சூர்யா சுமி ” என மாறி மாறி ஒருவொருவரின் ஒருவர் பெயராய் அழைக்க
” யாரும் வீட்ல இல்ல ” என்றார் மரகதம் அழுகையுடன்
உதயின் குரல் கேட்டு தனியாக நின்று போன் பேசிக் கொண்டிருந்த சுஜி ஓடி வந்து தன் மாமாவை அனைத்துக் கொண்டு தேம்பி தேம்பி அழுகத் தொடங்கினாள்.
“சுஜி மா எதுக்காக இப்படி அழுகிற ” என்று அவளின் தலையை தடவியவாறே கேட்க
” மாமா மாமா அக்கா அக்கா ” என்று தேம்ப
” நந்தினிக்கு என்ன ஆச்சி ஆமா வீட்ல உள்ளவுங்க எல்லாம் எங்க ” என்க
“எல்லாரும் நந்தினியையும் கீர்த்தியையும் தேட பொயிருக்காங்க ” என்றார் மரகதம் அழுகையுடன்
” மாமா மாமா அக்காவ காப்பாத்துங்க மாமா காப்பாத்துங்க எனக்கு என்னோட அக்கா வேணும் ” என்று மடங்கி சரிந்து அழுக
இதை கேட்ட உதய்க்கு சர்வமும் ஒடிந்தது. நந்தினியின் சிரித்த முகமே கண்ணில் பட வேகமாக எழுந்து தன்னவளை காப்பாற்ற ஓடினான்.
போகும் போது சுஜி உதயை அழைத்து ” அக்காவ காப்பாத்திடுங்க மாமா நான் போறேன் அக்காவோட திரும்ப வாங்க ” என்றாள்.
அவனின் கவனம் அனைத்தும் நந்தினியே இருந்ததால் சுஜி கூறியது மனதில் பதிய வில்லை.
உதய் தனது வண்டியை எடுத்துக் கொண்டு தெரு தெருவாக அழைந்து தேடினான். பார்க்கும் அனைவரிடமும் நந்தினியின் புகை படத்தை காட்டி விசாரித்தான்.
ஒருவராவது நாங்க பார்த்தோம் என்று கூற மாட்டார்களா என்ற நப்பாசையில்…
நேரங்கள் தான் ஒடியதே தவிர யாருக்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை .
தெருத் தெருவாக அழைந்தவன் வீட்டிற்கு வந்திருப்பாலோ அவளை அழைத்து வந்திருப்பாங்களோ என்று நம்பிக்கையில் வீட்டிற்கு புறப்பட்டான்.
அப்போதே காலையில் தேட சென்ற அனைவரும் வீட்டிற்கு வந்திருந்தனர். வேகமாக உள்ளே வந்த உதய் நந்தினி நந்தினி என்று கத்திய படியே வர அவனை சமாதான படுத்த பெரிதும் சிரமப் பட்டனர்.
சிறிது நேரம் யோசித்த உதய் அனைவரையும் கண்டு” சரி காலையில நான் வீட்ல இல்லாதப்ப என்ன நடந்துச்சி எதாவது வித்தியாசமா நடந்துச்சா ” என்று கேட்டு அனைவரையும் பார்க்க
” இல்ல டா அந்த மாதிரி எதுவும் வித்தியாசமா நடக்கல ” என்றான் வெங்கி உடைந்த குரலில்…
“எப்படி இது நடந்துச்சி ” என்று கேட்க சுமி நடந்ததை உதயிடம் கூறினாள் .
” எல்லாரும் கொஞ்சம் நல்லா யோசிங்க எதாவது க்ளு கிடைக்கும் ” என்ற போதே அங்கே கார்த்திக் வர
அவனை கண்டதும் ஜீவாவிற்கு காலையில் கார்த்திக் நந்தினிக்கு கால் செய்தது ஞாபகம் வர ” உள்ள வரலாமா ” என்று கேட்டவனை ஓடிச் சென்று தரதரவென இழுத்து வந்தான்.
அனைவரும் அவனை தடுக்க முயல ” எங்க டா என்னோட அம்மு அவள எங்க அடச்சி வச்சிருக்க ” என்று அவனின் சட்டை காலரை பிடித்து கோபமாக கத்த
” என்ன சொல்ற ஜீவா நந்தினி எங்கன்னு என்ன கேட்டா எனக்கு எப்படி தெரியும் ” என்று அவனின் சட்டையை ஜீவாவின் கையில் இருந்து உருவ முற்பட
” என்ன பண்ணுற ஜீவா அவனோட சட்டையில இருந்து கைய எடு ” என்று உதய் சொல்ல
” இல்ல அண்ணா காலைல இவன் அம்முக்கு கால் பண்ணி உனக்கு ஒரு கிஃப்ட் இருக்கு அத பாத்தா உங்க குடும்பமே ஷாக் ஆயிடும்ன்னு சொன்னா அண்ணா இவன் ” என்று ஜீவா சொல்லி முடிக்க
” உனக்கு அப்பவே நந்தினி மேல ஒரு கண்ணு இருந்துச்சின்னு எனக்கு தெரியும் அதையும் நீயே என்க்கிட்ட ஒரு தடவ சொல்லி இருக்க எதுக்காக இப்படி பண்ண” என்ற வெங்கி அவனை அடிக்க அதனை தடுத்து நிறுத்தினான் உதய்.
” அடிக்கிறத நிறுத்துங்க ” என்று உதய் கத்த
” எதுக்கு டா இவுங்க நிறுத்தனும் இவன் தான் கடத்துனான்னு தெரிஞ்சிடுச்சி அப்ப இவன அடிச்சி தான் உண்மைய வாங்கனும் ” என்றாள் சுமி…
” இல்ல கார்த்திக் அவளுக்காக தன்னோட உயிர கூட கொடுப்பானே தவிர நந்தினி காணாம போனதுக்கு இவன் காரணமா இருக்க மாட்டான் ” என்றான் உதய் உறுதியாக..
” நீ என்ன பேசிட்டு இருக்கனு தெரியுதா இவனால தான் நீ நந்தினிய ஊருக்கு கூட்டிட்டு போன அத மறந்து பொய்ட்டியா “என்று வெங்கி சொல்ல உதய் பேச வாய் திறப்பதற்கு முன் ” இத பத்தி பேச இப்ப டைம் இல்ல உதய் நாம இப்ப நந்தினியையும் கீர்த்தியையும் காப்பாத்தனும் ” என்று துரித படுத்த
காப்பாத்தனும் என்ற வார்த்தையை கேட்ட உதய் அவனது மனதை ரீவைண்ட் பண்ணி பார்க்க நந்தினியை தேட செல்லும் போது சுஜி கூறியது ஞாபகத்திற்கு வந்தது.
” அக்காவ காப்பாத்திடுங்க மாமா நான் போறேன் அக்காவோட திரும்ப வாங்க ” என்று குரல் அவனது மனதில் ஒழிக்க ” சுஜி எங்க ” என்று கேள்வி எழுப்பினான்.
அவனது இந்த கேள்வியில் குழப்பமடைந்த அனைவரும் ” அவ ரூம்ல தான் இருப்பா ” என்று சுமி சொல்ல
” இல்ல சுஜி இப்போ வீட்ல இல்ல ” என்று அவள் கூறியதை சிந்தித்து உதய் சொல்ல
” அவ எங்க வெளிய போனா வீட்ல தான் இருக்கா அதுவும் அவளோட ரூம்ல ” என்று மரகதம் சொல்ல
” சுமி போய் சுஜியை கூட்டிட்டு வா .எனக்கு என்னவோ தப்பா படுது ” என்று புதிர் போட
” இரு போய் கூட்டிட்டு வரேன் ” என்று சுமி உள்ளே சென்றாள்.
போன அடுத்த நொடியே ” உதய் ” என்று சுமி கத்த அனைவரும் அந்த அறைக்கு சென்றனர்.
” என்னாச்சி சுமி ” என்ற படி உதய் அறையினுள் வர அவன் பின்னே அனைவரும் வந்தனர்.
சுமியின் கையில் ஒரு கடிதம் இருக்க அதை வாங்கிய உதய் படிக்க ஆரம்பித்தான்.
error: Content is protected !!