Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

anbae nee puyalaa mazhaiyaa poonthendralaa

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?-37.2

 

அத்தியாயம் 37.2:

 

 



Advertisement

 

 

 

Advertisement

 

Advertisement

 

மனமக்களை மறுவீட்டிற்க்கு அழைத்துச்சொல்லும் போது கூடச் சக்தி கண்ணனை கட்டிக்கொண்டு மார்க்கின் வீட்டிற்குச் சென்றுவிட்டான். அவன் செல்வதை பார்த்த மற்றவர்களும் அடம்பிடிக்க மார்க் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான். 

 

Advertisement

 

 

 

அவர்கள் சென்ற பத்தாவது நிமிடத்திலேயே உமா அம்மு, மல்லி, அருண் மற்றும் விஷ்ணுவை அனுப்பிவைத்துவிட்டாள். 

 

 

 

 

 

 

உமாவிடம் நித்தியன் கூடக் கேட்டுவிட்டான், “ஏன் குட்டிமா குழந்தைங்க விஷயத்தில் இப்படி நடந்திருக்கிற? இந்த வயதில் தான் அவங்க என்ஜாய் பன்ன முடியும் இன்னும் கொஞ்சம் கலம் படிப்புபடிப்புனு வாழ்க்கை போய்டும்” என்றவனிடம், “நம்ம இடத்திலேயே குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாம இருந்ததைக் கண்ணால் பார்த்த பிறகு என்னால் சாதாரணமா இருக்கமுடியவில்லை அண்ணா” என்றவளின் கூற்றில் அவனின் நினைவுகளில் மின்னலாக வந்து சொன்றது. 

 

 

 

 

 

 

அம்மு மற்றும் மல்லியின் குழந்தைகளான அபிதா மற்றும் சவிதாவிற்கு உமா என்றால் கொள்ளைபிரியம். 

 

 

 

 

 

அவர்களை முதல்முறையாகப் பள்ளிக்கு அழைத்துச்செல்லும்போது தன் தாய்மார்களைவிட உமாவையே காலையிலிருந்து மதியம் வரை அவர்களின் வகுப்பறையின் அருகிலேயே அமர்ந்திருக்கச் சொல்லிய சிட்டுகள் அவளைத் திரும்பிதிரும்பி பார்த்தபடியே சென்றனர். 

 

 

 

 

 

 

 

அதில் அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தவள் அந்த ஒரு வாரமும் காலை முதல் மதியம் வரை அங்கேயே அமர்ந்திருந்து வீட்டிற்கு அழைத்துச்சொல்வாள். 

 

 

 

 

 

 

அப்படி ஒரு  இடத்திலேயே அமர்ந்திருந்தவள் ஏதோ தோன்ற பள்ளியை சுற்றி வரும்போது நாற்பது வதைதொட்ட ஆசிரியர் ஏழுவயது மாணவியிடம் அத்துமீறுவதைக் கண்டவள் வந்த ஆத்திரத்தில் அழைத்துக்கொண்டு அடித்துவிட்டாள். 

 

 

 

 

 

 

 

அதில் கோபம் கொண்டவன் உமாவை தாக்க முற்படும்போது தான்பயின்ற தற்காப்புகலையைப் பயன்படுத்தி அவனைத் தாக்கினால் காவல்துறையில் பிடித்துகொடுத்ததோடு மட்டுமல்லாமல் வேறு எந்த இடத்திலும் தனது ஆசிரியர் தொழில் செய்யமுடியாதபடி செய்துவிட்டாள். அன்றிலிருந்தே பள்ளியில் தற்காப்புகலைகள் பயிற்றுவிக்கும் ஆசிரியராகத் தனது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டாள் உமா. 

 

 

 

 

 

 

மல்லி அவளையும் தன்னுடன் சேர்ந்து நிர்வாகப் பொறுப்பை எடுத்துக்கொள்ள சொல்ல அவளே “தான் சாதாரண ஆசிரியராக இருந்தால் மட்டுமே மாணவர்களின் பிரச்சனை மற்றும் தவறான ஆசிரியர்களின் அத்துமீறல் போன்றவற்றைப் தடுக்கமுடியும் என்பதால் தன் கொள்கையைவிட்டுவிட்டுப் பள்ளியில் தற்காப்புகலைகள் ஆசிரியராகச் சேர்ந்தால்”… அதன் பின் மாணவர்களுக்குச் சாதகமாகப் பல திட்டங்களை மல்லியின் மூலம் செய்யவைத்தாள். 

 

 

 

 

 

 

 

 

 

 

அதேபோல் வாரத்திற்கு ஒரு முறை தங்கள் கல்லூரிக்கு சென்று மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் தனித்தனியாகத் தற்காப்புகலைகளைக் கற்றுகொடுக்க ஆரம்பித்தால். 

 

 

 

 

 

 

அதன் விளைவு மாணவ, மாணவிகளுக்கு உமா என்றால் அத்தனை இஷ்டம். பணத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மத்தியில் இவர்களின் கல்லூரியும் பள்ளியும் தனித்துத் தெரிந்தது. 

 

 

 

 

 

 

பழைய நினைவுகளில் மூழ்கியவனைச் சுயத்திற்குக் கொண்டுவந்தவள் அவனையும் அழைத்துக்கொண்டு மற்றவர்களுடன் வீட்டிற்குச் சென்று மணமக்களை வரவேற்க வேண்டிய வேலையைச் செய்ய ஆரம்பித்தாள். 

 

 

 

 

குழந்தைகளோ அங்கிருந்து வந்ததும் உமாவை சூழ்ந்துகொண்டனர். எங்கே சென்றாலும் வீட்டிற்கு வந்ததும் அவர்கள் தேடுவது உமாவை தான். 

 

 

 

 

 

 

 

அப்பொழுதுகூடச் சக்தி கண்ணனைவிட்டு நகரவே இல்லை, அவர்கள் செய்யும் சடங்குகள் அனைத்தும் பிடித்துவிட கண்ணனுடனேயே ஒவ்வொரு சடங்கிலும் கலந்துகொண்டு தன் குறும்பில் அனைவரையும் மகிழ்வித்தான் அந்தக் குறும்புக்கார குழந்தை. 

 

 

 

 

 

 

அப்படியே நாள் ஓடிவிட இரவில் அனைவரையும் அமரவைத்து பரிமாறியவள் அவர்களை அனுப்பிவைத்துவிட்டு நான்ஸீயை கண்ணனின் அறையில் விட்டவள் தன்னுடைய அறையில் மன்னனின் நெஞ்சில் தஞ்சமடைந்தள், “மாமூ அந்தக் கவிதாவும் மகாலட்சுமியும் இப்ப என்ன ஆனாங்க? எந்த ஜெயிலில் இருக்காங்க? இனி அவர்களால் யாருக்கும் பிரச்சனை வராதில்ல?” என்றவனின் கூற்றில் வெற்றி, இந்த நல்ல நாளில் அதுங்களைப் பற்றி நமக்கென்ன பேச்சி என்றவன் பேச்சை திசைத்திருப்பினாள் மகனையும் மனைவியையும் தட்டிக்கொடுத்து தூங்க வைத்தவனின் நினைவானது அந்தப் பாவிகளின் தற்போதைய நிலையைப் பற்றி ஜெயிலர் கூறியதை ஓட்டி பார்த்தது. 

 

 

 

 

 

 

அந்தப் பாவிகள்இப்பொழுது சென்டர் ஜெயிலில் மாற்றப்பட்டு இருந்தனர். 

 

 

 

 

 

நம்பி ஜெயிலில் நடந்த கலவரத்தில் அடிபட்டு கைகால் வராமல் படுக்கையாகிவிட்டார். 

 

 

 

 

 

மகாலட்சுமியோ அதீத போதை பழக்கத்தில் மனநிலை பாதிக்கப்பட்டுக் காப்பகத்தில் நோயாழியாக அனுமதிக்கபட்டு ஆறு வருடங்கள் ஆகியும்விட்டது… இந்த விஷயம் நித்தியனுக்குத் தெரிந்தும் ஒரு முறை கூட அவரைச் சென்று பார்க்கவில்லை. 

 

 

 

 

 

 

கவிதாவோ தான் செய்த செயலை பற்றிக் கொஞ்சம் கூட வருந்தாமல் கொடுத்த வேலையைச் செய்துகொண்டு தப்பிக்கச் சந்தர்ப்பம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள். 

 

 

 

 

 

 

ராமனோ அங்குகிடைத்த லோக்கல் ரெளடியின் சகவாசத்தில் தனக்கென ஒரு குழு உருவாக்கிக்கொண்டு அங்கிருந்தவர்களைச் சீண்டிக்கொண்டு தனியாகச் சிக்கும் இடத்தில் தாறுமாறாக அடிகளை வாங்கிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தான். 

 

 

மாயாவோ வெளிநாட்டு சென்றவல் சக்தி பிறந்ததும் அவனை பார்க்கதான் இந்தியா வந்தாள். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கல்லூரிகாலத்தில் தன்னை ஒரு தலையாக காதலித்த சமர் என்றவனை வெற்றி மற்றும் ஜெயாவின் வற்புறுத்தலில் திருமணம் செய்து கொண்டவள் தங்கள் தொழிலைவிற்று அதில் வந்த பணத்தை எடுத்து லண்டனில் கணவனின் குடும்பத்துடன் குடியேறிவிட்டாள். தற்போது அவளின் வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இன்றி சமரின் காதலுடன் அருமையாகவே செல்கிறது.

 

 

 

தன் மகனின் அசைவில் நினைவுக்கு வந்தவன் அவனைத் தட்டிக்கொடுத்து தூங்க வைத்தவன் தானும் தூங்கிவிட்டான். 

 

 

 

 

அங்கு அருணோ அம்முவிடம், “ஏண்டி நீ காலையிலிருந்து அண்ணிகிட்ட சரியா பேசவில்லை? மறுபடியும் அடி வாங்கீட்டையாடீ?”. 

 

 

 

 

“அதெல்லாம் ஒன்றும் இல்ல அத்தூ… அக்காகிட்ட போமா ஒரு இடத்தில் உட்காராம எதாவது பன்ன ஆரம்பித்துவிடுவாங்க அதனால் தான் அவர்களைவிட்டு விலகி இருந்தேன் அது அவங்களுக்கும் தெரியும், அதோடு நான் ஒன்றும் அடியெல்லாம் வாங்கல”. 

 

 

 

 

“ஆனாலும் அன்னைக்கு நீ வாங்கின அடி இன்னும் எனக்கு நியாபகம் இருக்குடீ” என்றவனின் நினைவானது சம்பவம் நடந்த நாளை நோக்கி சென்றது. 

 

 

 

 

 

 

‘திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் ஆகியும் உமாவிற்குக் குழந்தையில்லாததால் அம்முவும் மல்லியும் வீட்டினருடன் பேசி அவர்களைத் தேனிலவுக்கு அனுப்பி வைத்தார்கள். 

 

 

 

 

 

 

 

 

அவர்கள் சென்றதிலிருந்து அழுத அம்முவின் மகள் சவிதாவிற்கு உடல்நிலை முடியாமல் ஜன்னிவந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சையிலிருக்க குட்டி சவிதாவின் நிலையைக் கண்டு பயந்து உமாவிற்கு விஷயத்தைச் சொல்லிவிட உமாவும் வெற்றியும் அன்று இரவு கிளம்பி விடியலிலேயே மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்’. 

 

 

 

 

 

 

வந்த வேகத்தில் உமா அம்முவை விட்ட அறையில் அம்மு மட்டுமல்ல அனைவரும் சம்பித்துபோய்விட்டனர். 

 

 

 

 

 

 

 

‘சாவிக்கு உடம்பு முடியாம மருத்துவனையில் கொண்டாந்து வச்சியிருக்கீங்க அதைக்கூட உன்னால் போன்பண்ணி சொல்லமுடியவில்லை? சொல்லு அம்மு?’ கோபத்தில் கத்தியவளிடம் அருண், ‘நீங்க தேனிலவுக்குப் போனதால் கூப்பிடவேண்டாம்னு தான்அண்ணி கூப்பிடவில்லை’ என்றவனிடம்… 

 

 

 

 

 

 

வெற்றி, ‘தேனிலவுக்குப் போனா என்னடா? குழந்தைகளைவிட இது அவ்வளவு முக்கியமா?’ எனக்கூறியவன் அவனை மட்டுமல்ல அனைவரையும் வார்த்தையால் விலாசிவிட்டான். 

 

 

 

 

 

அம்முவிற்குப் பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலில் அறுவைச்சிகிச்சை செய்ததால் அம்முவின் பொறுப்பு மட்டுமல்லாமல் குழந்தையின் முழுப் பொறுப்பும் உமாவையே சார்ந்திருந்தது… அதில் குழந்தை அம்முவிடம் அதிகமாக இருந்ததைவிட உமாவிடம் தான் இருந்தால். 

 

 

 

 

அதில் தான் சவிக்கு அம்முவைவிட உமாவே எல்லா விஷயத்திற்குத் தேவை அதன் விழைவுதான் மருத்துவமனை வாசம். 

 

 

 

 

 

உடம்பு தேறி குழந்தை குணமாகி வரவே ஒரு வாரம் கடந்துவிட்டது. 

 

 

 

 

 

 

இந்த நிகழ்வுக்குப் பிறகு உமா குழந்தைகளைவிட்டுவிட்டு வெளியிடங்களில் தங்குவதில்லை என்பது தனிக்கதை. 

 

 

 

 

 

அம்முவின் அழைப்பிலிருந்து வெளியே வந்தவன் மகளையும் ஒரு வயது மகனையும் கதைசொல்லி தூங்கவைக்கும் வேலையை ஆரம்பித்தான். 

 

 

 

 

 

 

 

பக்கத்து அறையில் விஷ்ணுவோ மல்லியிடம் அதே கேள்வியைத் தான் கேட்டான் அதற்கு அவளே, “போனதடவை பிரசவத்தில் அவளுக்கு எவ்வளவு சிக்கல் மாமா இந்த முறையும் அப்படி ஆகாம இருக்கனும்னா அவளுக்கான வேலையைக் குறைக்கனும்னு நாம வேலைசெய்யும் போது அவகிட்ட பேசினா அவளும் வேலைசெய்ய ஆரம்பித்துவிடுவா அதனால் தான் மாமா அவகிட்ட காலையில் பேசவில்லை என்றவள், வெட்டி பேச்சு பேசினது போதும் அண்ணியையும் உங்க மகனையும் கதைசொல்லி தூங்கவைங்க என்றவள் அவனின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் படுத்துவிட்டாள்”. 

 

 

 

 

 

 

 

 

விஷ்ணுவோ அவளின் செயலை நினைத்து சிரித்துக்கொண்டே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைத் தூக்க வைத்தான். 

 

 

 

 

 

 

 

மற்றவர்களோ நாச்சியார் அறையில் இதைபற்றி ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருக்கச் சாரதாவோ “எல்லா உமாவின் நன்மைக்காகத் தான்” என்றவர் முதல் பிரசாரத்தில் பட்டபாடு சொல்ல அதில் இருந்த உண்மை புரிய பெரிய பாரம் நீங்கிய நிம்மதியில்லாம அவர்அவர் அறைக்குச் சென்றுவிட்டனர். 

 

 

 

 

 

 

 

 

கண்ணனோ அறைக்கு வந்த மனைவிடம் தன் வாழ்க்கையில் உமாவின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூற நான்ஸீயின் மனதில் உமாவிற்கான இடம் மேலும்மேலும் உயர்ந்துகொண்டேதான் சென்றது. 

 

 

 

 

 

 

 

நான்ஸு, “உங்களுக்கு உமா அண்ணி எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி எனக்கு என் அண்ணன் முக்கியம்”, எந்தச் சூழ்நிலையிலும் என்னால் உங்களுக்குள்ள பிரிவே வராதுங்க என்றவளின் சிரிப்பில் மெய்மறந்தவன் மனம்முழுவதும் காதலுடன் இல்லறவாழ்க்கையில் முதல் அடியை எடுத்துவைத்தான். 

 

 

 

 

 

 

 

 

 

 

இனி வரும் நாட்களிலும் இவர்களின் வாழ்க்கையில் இதே மகிழ்ச்சியும் அன்பும் மட்டுமே இருக்கும் வாழ்த்தி விடைபெறுவோம் நண்பர்களே. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த வாண்டுகளும் எதுக்கெடுத்தாலும் அவங்க ரெண்டுபேரையும் தான் தேடுதுங்க என அங்களாய்த்தவர். 

 

 

 

 

 

 

 

 

 

 

பேராசை முடிகின்ற இடத்தில் 

மகிழ்ச்சி தொடங்குகிறது 

புன்னகை தொடங்கும் இடத்தில் 

வாழ்க்கை தொடர்கிறது 

அன்பு இருக்கும் இடத்தில் 

அனைத்தும் கிடைக்கிறது 

( ——) 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!