Skip to content
Post Views: 657
யாசிக்கிறேன் உன் காதலை -1 (2)
Advertisement
“ஐயா அம்மா ரூம்ல பெட்டி வைச்சுட்டேன்”, என்றார் வேலையால் ஒருவர் வந்து. வேலையால் இன்னொருவர் அனைவருக்கும் வந்து ஜூசை குடித்து விட்டு சென்றார்.
Advertisement
“மீ”, என்றாள் பாவமாக.
Advertisement
“நா ரெஃபிரஷ் பண்ண போறேன் பேபிடால் நீ தமிழ்ல பேசுனா என்கிட்ட பேசலாம்”, என்று உள்ளே சென்றார்.
Advertisement
“டாட் யூவர் ஒய்ஃப் வெரி பேட் அண்ட் டூ ஸ்ட்ரீட் சேஞ்ச் யுவர் ஒய்ஃப் ஐ நீட் நியூ மாம்”, என்றாள் குறும்பாக.
“அகிமா பேபிடாலுக்கு ஏதோ!! டவுட் கேட்குற பாரு “, என்றார் கிண்டலாக. அனைவரும் சத்தமாக சிரித்தனர். பேபிடால் பாவமாக பார்த்தாள்.
“துருவா என்ன பண்ணிட்டு இருக்க??”, என்றார் பாசமாக அவன் தலை முடியை கோதி.
“நா ஆர்க்கிடெக்சர் மாமா டெல்லில சொந்தமா நானு, விரு, ரிஷி சந்தோஷ் நாலு பேரும் சேர்ந்து கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி வச்சு இருக்கோம்”, என்றான் சிரிப்புடன்.
“ரொம்ப சந்தோஷம் டா இந்த சின்ன வயசுல நாலுபேரும் ஒண்ணா கம்பெனி வச்சி நடத்துறீங்க”, என்று நான்கு பேரையும் மனதார பாராட்டினார்.
“ஐயா உங்கள பெரியய்யா வயலுக்கு வர சொன்னாரு”, என்றார் வேலையாள் ஒருவர் வந்து.
“சரி இருங்க வரேன், பேபிடால பாத்துக்கோங்க நா போயிட்டு வந்துடுறேன், பேபிடால்”,என்றார் அவளை பார்த்து.அவள் கண் மூடி திறந்தாள். அவள் கன்னத்தை தட்டி விட்டு சென்றார்.
“ஹாய்!! பேபிடால் நா விரு, நா ரிஷி”, என்று கோரசாக இருவரும் வேகமாக கைவிரித்தனர். பேபிடால் குழப்பமாக இருவரையும் பார்த்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர்.
“ஏய்!! மாம்ஸ் கைய கீழ இறங்குங்க”, என்றாள் சந்தியா எரிச்சலுடன்.
“என்ன மாம்ஸ் டைட்டானிக் மூவி டப்பிங் பண்ண போறீங்களா???”, என்றான் நந்து கிண்டலாக.
“ஹீரோ இங்கதான் இருக்கேன் டா ஹீரோயின் தான் வராம நிக்கிறா”, என்றான் விரு பேபிடாலை பார்த்து.
“ஏய்!! ரெண்டு பேரும் என்னைய ஹக் பண்ண தான் இப்படி நினைக்கிறீங்களா???”.
இருவரும் வேகமாக தலையை ஆட்டினர். மற்றவர்கள் சிரிப்புடன் தலையில் அடித்துக் கொண்டனர்.
“நோ.. நோ…”, என்று இங்கிலீஷில் பேச வந்தவள், அகிலா அந்த பக்கம் போவதை பார்த்ததும்,” எனக்கு தோணுனா தான் பண்ணுவேன் நீங்க ரெண்டு பேரும் வெரி பேட்”, என்றாள் சிரிப்புடன்.
“ஹேய்!! நீ பான் இன் அமெரிக்கா தானே!!”, என்றான் ரிஷி வேகமாக.
“ஆமா”.
“மித்ரா… சந்தியா…”, என்று மூன்று இளம் பெண்கள் வீட்டிற்குள் வந்தனர்.
“ஹாய்”, என்று இருவரும் வரவேற்றனர்.
“துருவா மாமா எப்ப வந்தீங்க??? எப்படி இருக்கீங்க??”, என்றாள் அதில் ஓர் பெண் சிரிப்புடன்.
“நல்லா இருக்கேன் நைட் தான் வந்தேன், நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க??”, என்றான் மூவரையும் பார்த்து.
“நல்லா இருக்கோம் மாமா”.
“எம்மா பாப்பா நாங்களும் இங்கதான் இருக்கோம் “, என்றான் விரு கிண்டலாக.
“ஹாய் மாம்ஸ்”, என்று இருவரையும் பார்த்து சொல்லி விட்டு,” ஆமா இந்த பொண்ணு யாரு??”, என்றனர்.
“இவ எங்க பெரிய மாமா பொண்ணு பேபிடால்”, என்றாள் மித்ரா வேகமாக.
“ஓ…”, என்றனர் அவளை அளவிட்டபடி.
“பான் இன் அமெரிக்கா”, என்றான் நந்து நக்கலாக மூவரையும் பார்த்து.
“இருந்துட்டு போகட்டும் அதுக்கு என்ன??”, என்றாள் அதில் ஒருவள் அவனை முறைத்துக் கொண்டே.
“ஆமா இவள ஏன் மூணு பேரும் முறைக்கிற மாதிரி பாக்குறீங்க???”, என்றான் சந்தோஷ் புரியாமல்.
“அது அண்ணா இந்த பொண்ணு செம்ம ஃபிகரா இருக்குல, பொம்ம மாதிரி அதான் உத்து பார்த்தோம்”, என்றாள் ஒருவள் வெகுளியாக.
“சந்தோஷ் கேன் யு ப்ளீஸ் கிவ் சம் சப்டைட்டீல்”, என்றாள் கண்களில் குறும்பு மின்ன.
“பெரியம்மா பேபிடால் இங்கிலீஷ்ல பேசுறா “, என்றான் நந்து சத்தமாக. அவனை முறைத்தாள். அனைவரும் சிரித்தனர் வந்த மூன்று பெண்களை தவிர.
“இவளுக்கு தமிழ் அவ்வளவா தெரியாது”, என்று அந்தப் பெண்களை பார்த்து சொல்லிவிட்டு,”பேபி நீ ரொம்ப பியூட்டிஃபுல்லா இருக்கியாம், அப்படியே!! டால் மாதிரி வெறி பிரிட்டி, தேவதை மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க”, என்றான் துருவா சிரிப்புடன் பொறுமையாக.
“ரியலி”, என்றாள் சந்தோசமாக அவனைப் பார்த்து.
“ஆமா ஏஞ்சல்”, என்றான் அவள் மூக்கை பிடித்து லேசாக ஆட்டி.
“தேங்க்யூ”, என்று மூவரையும் அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு விலகினாள்.
மூவரும் அதிர்ச்சியுடன் தன் கன்னத்தை தடவி பார்த்தனர். சந்தியா மற்றும் மித்ரா அதிர்ச்சியோடு பார்த்தனர்.
“ஹேய்!! பேபிடால் உன்னால இந்த ஊரு பொண்ணுங்க மூணு பேருக்கும் வேப்பில அடிக்கணும் போலயே!!”, என்றான் நந்து கிண்டலாக.
“டேய்!! கம்முனு இருடா, ஒன்னும் இல்ல டா பேபி”, என்றான் சந்தோஷ் சமாதானமாக.
“அட என்னமா இப்படி பண்ணுறீங்களே!! மா”, என்றான் விரு பேபிடாலை கிண்டலாக பார்த்து.
“என்ன பண்ணுனேன் விரு”, என்றாள் புரியாமல்.
“நல்லா கேட்ட போ, கேட்ட எங்களுக்கு தராமா கேக்காத அவங்களுக்கு குடுத்துட்டியே!! “, என்றான் ரிஷி பொய்யான சோகத்துடன்.
“நீ கிஸ் பண்ணுனதுல்ல அவங்க மூணு பேரும் பயந்துட்டாங்க, இங்க இதெல்லாம் புதுசு அமெரிக்கா மாதிரி இங்க கிடையாதுடா”, என்றான் துருவா பொறுமையாக.
“என்னால பயந்துட்டாங்களா?? நா சாரி கேக்குதா??”, என்றாள் பாவமாக.
“கிப்ட் கொடுத்ததுக்கு யாராச்சும் சாரி கேப்பாங்களா ?? ம்ம்”, என்றான் அவள் முகத்தில் இருந்த முடியை ஒதுக்கிவிட்டு.
“துருவா மாமா இதெல்லாம் ஓவரு முத்தம் கொடுத்தது எங்களுக்கு”, என்றாள் அதில் ஓர் பெண் கிண்டலாக.
“அவ குழந்தை மாதிரி அங்க இருக்குறதுக்கும் இங்க இருக்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு அதான் பொறுமையா சொல்றேன், சரி அத விடுங்க இந்த பெண்கள் பட்டாலம் எங்கே!! போகுது”, என்றான் கிண்டலாக.
“மாமா உங்களுக்கு விஷயமே!! தெரியாதா?? நம்ம தாத்தாவுக்கு பங்காளி வீட்ல இருக்க அண்ணாவுக்கு ரெண்டு நாள்ல மேரேஜ்”, என்றாள் சந்தியா.
“அதுக்குதான் நாங்க எல்லாரும் போறோம் அண்ணா”, என்றாள் மித்ரா.
“சந்தியா… மித்ரா… பேபிடால கூட அழைச்சுட்டு போங்க, எங்களுக்கு ஆபீஸ் ஒர்க் இருக்கு, வெளியில போற வேலையும் இருக்கு சோ நாங்க வீட்டுல இருக்க மாட்டோம்”, என்றான் சந்தோஷ்.
“சரி”, என்றவர்கள் அகிலாவிடம் அனுமதி வாங்கி அவளை அழைத்து சென்றனர்.
குணா எதற்காக செல்வியிடம் மன்னிப்பு கேட்டார்??? கல்யாணத்திற்கு போகும் இடத்தில் பேபிடாலுக்கு பிரச்சனை வருமா???? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…..
யாசிப்பு தொடரும்……
error: Content is protected !!