Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir 10.1

நண்பர்களுக்கு வணக்கம் . சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி.  இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அப்போதுதான் அந்த செய்தி அவள் காதை எட்டியது.  அதை சொன்னது கவிதா தான். நேரடியாக வெண்மதி, விஜய் உடனான காதலை பற்றி கவிதாவிடம் சொல்லவில்லை என்றாலும் கவிதா அதை ஓரளவுக்கு ஊகித்திருந்தாள். எனவேதான்  கேள்விப்பட்ட அந்த விஷயத்தை வெண்மதி இடம்  கூறினாள். அன்று கல்லூரியில் வகுப்பறையில் அந்த வகுப்பு முடிந்து.  அடுத்த வகுப்பு விரிவுரையாளர் வருவதற்காக காத்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் மெதுவாக ஆரம்பித்தாள்.

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா  மதி?”

“என்ன விஷயம் கவி. சொல்லு கேட்போம்.” என்று ஆர்வமாக கேட்டாள் “விஜய் இருக்கான் இல்ல?”



Advertisement

“ஆமாம்”  விஜய்யின் பெயரை கவிதா சொல்லவும் ‘இவள் திரும்பவும் அவனிடம் பழகாதே என்று கூற போகிறாள்’  என நினைத்தபடி கவிதாவைப் பார்த்தாள் வெண்மதி.

“அவனை செல்வா அக்காவின் நாத்தனாருக்கு  பார்த்ததும்  பிடிச்சு போயிடுச்சு. அதனாலே அவனை  அவளுக்கு கல்யாணம் பண்றதுக்காக பேச போறாங்களாம் என்னோட மாமா பொண்ணு செல்வாவின் அக்கா நாத்தனார் உடன் சென்னையில் ஒன்றாக படிக்கிறாள். அவள் சொல்லித்தான் எனக்கு இந்த விஷயம் தெரியும்.”

“அதுக்கு என்னடி  விஜய் பாக்குறதுக்கு நல்லா இருப்பான். அதனால இந்த பொண்ணு அவன் மேல ஆசைப்பட்டு இருக்கும். இது ஒரு பெரிய விஷயமே கிடையாது. நாம் இதைப்பற்றி இனிமேல் பேச வேண்டாம்.” என்று முடித்துவிட்டாள் வெண்மதி.

Advertisement

வெண்மதிக்கு விஜய் மீது முழு நம்பிக்கை இருந்தது. இவன் கண்டிப்பாக இந்த கல்யாணத்திற்கு  ஒத்துக்கொள்ள மாட்டான் என்று நம்பினாள் அந்த நம்பிக்கையில் அந்த விஷயத்தை அப்பொழுதே மறந்து விட்டாள்.

Advertisement

 

வழக்கம்போல அவன் விஜயின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினாள் வெண்மதி. அவனும் அவளிடம் சாதாரணமாகவே பேசினான்.

 

Advertisement

அப்புறம் “படிப்பு எல்லாம் எப்படி போகுது?” என்று விசாரித்தாள். “படிச்சிட்டு தான் இருக்கேன்.”

“அதான் நான் போன் பண்ணா போனை எடுக்க மாட்டேங்கறீங்களா?” “ஆமாம் படிக்கும்போது போனை சைலண்ட் மோடில் போட்டு விட்டு படிக்கச் சொல்லி நீதான சொன்ன. அப்புறம் எக்ஸாம் நெருங்கிவிட்டது. அதனால நாம ரெண்டு பேரும் எக்ஸாம் முடிகிற வரைக்கும்  இது மாதிரி தினமும் பேசிக்காம இருக்கிறது நல்லது. நீ பேசினா நான்  டைவர்ட் ஆகிறேன்.”

“ஓ அப்படியா? அப்ப எக்ஸாம் முடிகிற வரைக்கும் நான் உங்களுக்கு கால் பண்ண மாட்டேன். எப்பயாவது சின்ன மெசேஜ் மட்டும் பண்றேன். ஓகேவா?” என்று அவள் கேட்க அவனும் “சரி” என்றான்.

 

அன்று  காலை  விஜய் வீட்டு தொலைபேசி ஒலித்தது. அவன் சென்று  எடுத்து “ஹலோ” என்றான்.

மறுபக்கம் “ஹலோ நான் நடராஜன் பேசுறேன்.” என்று குரல் கேட்டது.  ‘நடராஜன் யாரு’ என்று மனதில் நினைத்துக்கொண்டே

“யார் வேணும் உங்களுக்கு?” என்று கேட்டான்.

“நீங்க யாரு?  விஜய் பேசறீங்களா?”

“ஆமாம். முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க.”

“நான் உங்க அப்பா சிதம்பரம் கிட்ட பேசணும்.”

“ஓ அப்படியா? ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க.” என்று அவரிடம் கூறிவிட்டு

“அப்பா உங்களுக்கு போன்.” என்று தந்தையை அழைத்தான்.

அவர் வந்து தொலைபேசியை எடுத்து காதில் வைத்து

“ஹலோ” என்றதும்

“நான் நடராஜன்.  செல்வா  அக்காவின் மாமனார்.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“சொல்லுங்க நல்லா இருக்கீங்களா?” என்று சம்பிரதாயமாக விசாரித்தார். “நாங்க நல்லா  இருக்கிறோம். நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நீங்க எப்ப  ஃப்ரீயா இருப்பீங்கன்னு சொல்லுங்க. நான்  உங்களை நேரில் பார்த்து பேசவேண்டும்.” என்று  கேட்டார்.

‘இவர் என்னிடம் என்ன முக்கியமான விஷயம் பேசப் போகிறார்’ என்று மனதில் நினைத்துக் கொண்டாலும்  அவரிடம் காட்டிக் கொள்ளாமல் “இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை.  நான் ப்ரீயா தான் இருப்பேன். சாயந்திரம் வந்தீங்கன்னா நாம பேசலாம்.”

“ஓகே. நான் இன்னைக்கு சாயந்திரம் ஐந்து மணிக்கு  உங்க வீட்டுக்கு வரேன்.”

“சரி வாங்க.” என்று சிதம்பரம் கூற

“ஓகே.  அப்ப நாம  சாயந்திரம் உங்க வீட்டுல மீட் பண்ணலாம்.”என்று கூறி போனை வைத்தார்.

இந்த விவரத்தை மனைவி சரிதாவிடம் கூறிய சிதம்பரம்

“இவர் என்னடி என்கிட்ட பேச போறாரு?” என்று தன் மனைவியிடம் கேட்டார் சிதம்பரம்.

“அதை என்கிட்ட கேட்டீங்கன்னா எனக்கு எப்படி தெரியும் ?  நானும் உங்கள மாதிரிதான் யோசிச்சிட்டு இருக்கேன்.”

“சரி வெயிட் பண்ணி பாப்போம்.” என்றார் சிதம்பரம்.

“நான் பக்கத்து வீட்டு பங்ஷனுக்கு போகணும். இப்ப என்ன பண்றது?”

“அவர் என் கிட்ட தானே பேசணும்னு சொல்றாரு. நீ போயிட்டு  வா. நாங்களும் ப்ரியா பேசுவோம்.”  என்று மனைவியின் சந்தோஷத்தை கெடுக்க விரும்பாத சிதம்பரம் அவரை பங்ஷனுக்கு போகச் சொன்னார்.

அப்போது விஜய் தாயிடம்

“அம்மா நான் கொஞ்சம் பிரண்ட்ஸோட வெளிய போயிட்டு வந்துடறேன்.” என்று கூறிவிட்டு வெளியே சென்றான்.

 

சொன்னபடியே அன்று சாயந்திரம் ஐந்து மணிக்கெல்லாம் நடராஜன், சிதம்பரம் வீட்டிற்கு வந்தார்.

வந்தவரை “வாங்க சார் வாங்க. உட்காருங்க. சரிதா ரெண்டு காபி போட்டு எடுத்துட்டு வா மா.” என்று உள்நோக்கி குரல் கொடுத்தார்.

“சரிங்க” என்றுவிட்டு காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்து இருவரிடமும்  நீட்டினார் சரிதா.

“வாங்க சார் வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” (கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?) என்று சம்பிரதாயமாக விசாரித்தார். நாங்க எல்லோரும் நல்லபடியாக இருக்கும் எல்லாம் நல்லபடியா போய்ட்டு இருக்கு என்று புன்னகைத்தவாறே கூறினார் நடராஜன்.

“சரிதா” என வாசலிலிருந்து குரல் வர

“இதோ வந்துடறேன்.” என்று வாசலைப் பார்த்து கூறினார் சரிதா.

“என்ன உன்னோட ஃப்ரெண்டு வந்துட்டாங்களா? சரி போயிட்டு வா.” என்று மனைவியை பார்த்து கூறினார் சிதம்பரம்.

பின் நடராசன் பக்கம் திரும்பி “அது ஒண்ணும் இல்லை சார். இன்னைக்கு  மேடம் பக்கத்து வீட்டு பங்ஷனுக்கு அவங்க பிரென்ட் கூட போறாங்க.”

“ஓ அப்படியா?”

“ஆமாம். நான் போயிட்டு கொஞ்ச நேரத்துல வந்து விடுகிறேன். நீங்க பேசிக்கிட்டு இருங்க.” என்று நடராஜனிடம் கூறி விட்டு கிளம்பி சென்றார் சரிதா.

“சரிம்மா நீங்க போயிட்டு வாங்க. ஒண்ணும் அவசரம் இல்லை.” என்று பதில் கூறினார் நடராஜன்.

“சரி. இப்போ சொல்லுங்க. என்ன முக்கியமான விஷயம்?” என்று கேட்டார் சிதம்பரம்.

“உங்களுக்கே தெரியும். என்னோட பையனுக்கு செல்வாவின் அக்காவை கல்யாணம்  பேசி, இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணம் நடக்கப் போகுது. எனக்கு ஒரு பெண் இருக்கிறாள். பெயர் ப்ரியா. எங்க எல்லோருக்கும் செல்லமான பெண் அவள். பி. ஈ பைனல் இயர் படிக்கிறா.”

“ஆமாம். நான் கேள்விப்பட்டேன். பங்ஷனில் பார்த்திருக்கிறேன். அவளுக்கு தான் கல்யாணம் முதலில் பண்ணனும்னு நினைச்சுகிட்டு இருந்தோம். ஆனா அதற்குள் என் பையன் செல்வாவின் அக்காவை லவ்  பண்றேன்னு வந்து  நின்னா. செல்வா  வீட்டில  கல்யாணத்துக்கு அவசரப்பட்டதனால அவங்களுக்கு முதல்ல கல்யாணத்தை முடிச்சிடலாம் என முடிவு செஞ்சுட்டோம். அடுத்த வருஷமே பிரியாவுக்கும் கல்யாணம் பண்ணலாம்னு நிறைய இடத்தில  மாப்பிள்ளை பார்த்தோம். ஆனா பிரியாவுக்கு யாரையுமே பிடிக்கல. ஆனா பங்க்ஷன்ல உங்க பையனை பார்த்த பிரியா அவரை பிடித்ததாக எங்க கிட்ட சொன்னா. அதனாலதான் உங்க கிட்ட இதைப்பற்றி பேசலாம்னு வந்தேன்.”

“அவன் சின்ன பையன். இப்பதான் பைனல் இயர் பண்றான். அதுக்குள்ள கல்யாணமா? அவன் டிகிரி முடிக்கணும். முடிச்சதுக்கு அப்புறம் வேலைக்கு போகணும். அதுக்கு அப்புறம் தான் அவனோட கல்யாணத்தை பத்தி யோசிக்கணும்.”

 

“தெரியும். சார். இப்பவே கல்யாணம் பண்ணனும்னு நாங்க சொல்லலை. நிச்சயம் மட்டும் இப்போ பண்ணிக்கலாம். ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் கல்யாணம் வச்சுக்கலாம். என்னோட வசதியை பத்தி உங்களுக்கே நல்லா தெரியும். இருக்கிற  சொத்து எல்லாமே என்னோட இரண்டு குழந்தைகளுக்கு தான். எங்க கார்மெண்ட்ஸ்  பிஸினஸை என்னோட பையன் பாத்துக்கிறான். உங்க பையனுக்கு நான் ஒரு சாப்ட்வேர் கம்பெனி வைத்து தருகிறேன். அவர் அதைப்  பாத்துக்கலாம். நீங்க என்ன சொல்றீங்க?”

“நான் வீட்டில இதைப் பத்தி பேசணும். எனக்கு டைம் வேணும். வீட்ல இதை பத்தி பேசி முடிவெடுத்து எனக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சொல்லுங்க. நாங்க உங்க பையனை பற்றி விசாரிச்சு பார்த்தோம். எங்களுக்கு திருப்தியா இருந்துச்சு. அதனால தான் உங்ககிட்ட மாப்பிள்ளை கேட்டு வந்திருக்கிறேன் நாங்க உங்களுடைய நல்ல முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். யோசிச்சு நல்ல முடிவா எடுங்க. சரி நான் கிளம்பட்டுமா? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.” என்று எழுந்தார்.

“சாப்டுட்டு போகலாமே. சரிதா இப்போ வந்துடுவா.”

“இல்லை பரவாயில்லை. இன்னொரு நாள் கண்டிப்பா  சாப்பிடறேன்.” என்று கூறியவர் எழுந்து சென்றார்.

வீட்டிற்கு வந்த மனைவி, மகனிடம் விபரத்தைக் கூறினார் சிதம்பரம். மகனுடைய  காதலை பற்றி பெற்றவர்களுக்கு தெரியாது. சரிதாவுக்கு மிகவும் சந்தோஷம்.

“இப்படி ஒரு சம்பந்தம் நமக்கெல்லாம் கிடைக்குமா? டேய் நீ அதிர்ஷ்டக்காரன்டா.” என்று மகனை புகழ்ந்தார்.

மகன் எதுவும் பேசவில்லை. சிதம்பரம் மகனை உற்றுப் பார்த்தார். “என்னப்பா நீ எதுவுமே சொல்ல மாட்டேங்குற. அப்பா இப்போ என்னால கல்யாணத்தை பத்தி யோசிச்சு முடிவு பண்ண முடியல. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.” என்று கூறினான்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!