Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Alaiyil Pooththa Malar 7 1

அத்தியாயம் – 7

 

ஆதவன்    ஊருக்கு  வந்திருந்தான்.  இரண்டு  நாட்கள்  தன்  குடும்பத்தோடு  மட்டுமே  இருந்தான்.  சூர்யாவின்  நடவடிக்கையில்  நன்றாக  மாற்றம்  தெரிந்தது.  மூன்று  மாதங்களுக்கு  முன்னால்..    பிரசாத்  இறந்து  ஒரு  வருடம்  முடிந்திருக்க..  அவனின்  நினைவு  தினத்திற்காக  சூர்யா  பிரசாத்தின்  வீட்டிற்கு  வந்திருந்தான்.

அப்பொழுது    திலகவதி  அழுத  அழுகை  சூர்யாவின்  மனதை  வெகுவாக  பாதித்தது.  அந்த  சம்பவம்  முடிந்து  மூன்று  மாதம்  ஆகியிருந்தாலும்  சூர்யா  ஆதவனிடத்தில்  சொல்லும்போது..  நேற்று  நடந்ததைபோல்  மிகுந்த  வேதனையோடு  சொல்லவும்..   சூர்யாவோடு   சேர்த்து  ஆதவன்  கண்களும்  கலங்கின.  பிறகு  சூர்யாவிற்கு  ஆறுதல்  சொன்ன  ஆதவன்    முக்கியமாக  கவனித்தது..  சூர்யா  திலகவதியை  ஒருமையில்  பேசியதைத்தான்.  ஆனாலும்  எதையும்  வெளிப்படையாக  சொல்லவில்லை..   எனவே  ஆதவன்  கீர்த்தியிடம்  ஒரு  விசயத்தை  சொல்லி  அதுபோலவே  நடக்க  திட்டம்  போட்டான்.



Advertisement

சூர்யா   மருத்துவமணையிலிருந்து   வந்ததும்..  ‘சூர்யா..  இன்னைக்கு  நாங்க   எல்லாரும்  வெளில  போறோம்..  நீயும்  வரியா..?” என்றான்.

‘இல்ல  ஆதவா…  வெளில  வர  மூடுல  நான்  இல்ல..” என்றான்.

‘நீ  ஹாஸ்பிட்டல்  போனதுக்கப்புறம்   நான்  பிரசாத்  வீட்டுக்கு  போயிருந்தேன்..     பிரசாத்தோட  அம்மா..    திலகவதி  பக்கத்தில  இருக்கிற  கோவிலுக்கு  கூப்பிட்டாக்கூட  வரமாட்றா…   வீட்டுக்குள்ளயே  அடைஞ்சி  இருக்கிறா..  சரி  இங்க  லோக்கல்ல  வேணாம்..   வெளில  எங்கையாவது  டூர்  அதுமாதிரி  போலாம்னு  கூப்பிட்டாலும்   வரமாட்டுக்கிறா..  திலகவதி  வீட்டுக்குள்ளயே  இப்படி  அடைஞ்சியிருக்கிறது   எங்களுக்கு  என்னவோ  போலயிருக்குன்னு   சொல்லி  அழுதாங்க..  உன்னாலதான்   நாங்களும்  எங்கையும்  வெளில  போகாம  வீட்லயே  இருக்கோம்.. எங்க  சந்தோசத்துக்காவது   வரமாட்டியான்னு  அன்னபூரணியம்மா  கெஞ்சிகேட்டதால   கடைசியா  பிரசாத்தோட  அப்பாம்மாக்காகன்னு   திலகா  வெளிலவர  சம்மதிச்சிருக்காம்..    மூர்த்தியப்பா  போன்செய்து   நம்மளையும்   குடும்பத்தோட  வரசொன்னார்..   பிரசாத்   உயிரோட  இருக்கும்போது   நாம  எல்லாரும்  வழக்கமா  ஒரு  பார்க்குக்கு  போவோம்ல..?   அங்கதான்  போறதா  ப்ளான்  செய்திருக்கோம்..      அப்படியே  நம்ம  அம்மாவும்  கொஞ்சம்  வெளில  வந்தமாதிரி  இருக்கும்..  அதனாலதான்  உன்னையும்  கூப்பிட்டேன்..    நீ  வரலைன்னாலும்    நாங்க  போறதுன்னு  முடிவு  பண்ணிட்டேம்..     உனக்கு  வரமூடு   இல்லன்னா  விடு..  நாங்க  பார்த்துக்கிறோம்..”   என்று  சூர்யாவை  ஆழம்பார்ப்பதுபோல்   பார்த்தான் ஆதவன்.

Advertisement

‘ரெண்டு  குழந்தைங்க..  அம்மா..  இவங்க  மூனுபேரையும்  நீ  எப்படி   ஒருத்தனா  சமாளிப்ப..?  சரி  விடு..  நானும்  வரேன்..”  என்றான்   அவசரமாக.

Advertisement

‘நீதான வர மூடுல  இல்லன்னு  சொன்ன..?”  என்று  லேசாய்  சிரித்தான்  ஆதவன்.

‘அதான்  இப்ப  வரேன்னு  சொல்லிட்டேன்ல..” என்று  சிறு கோபமாய்  சொல்லி  உள்ளே  போனதும்..   மிகவும்  சந்தோசமாய்  உணர்ந்தான்  சூர்யா.  நல்லவேளை.. இப்போவாச்சம்    அந்த  கூண்டைவிட்டு  வெளில  வர  ஒத்துக்கிட்டாளே..  என்று  நினைத்தவன்..

அட..‚ நான்  எப்போ திலகாவை  அவ   இவன்னு  நினைக்க  ஆரம்பித்தேன்..?  என்று  நினைத்து..    பெட்டில்  அமர்ந்து  தானாய்  சிரித்துக்கொண்டான்.  சரி.. சரி..  இப்ப  அவ  இவன்னு  சொன்னாதான்  என்ன..? நாம  என்ன  நேர்லையா  சொல்லிட்டோம்..?  அப்படியேன்னாலும்.. தம்மாதுண்டு  பிள்ளைக்கு  மரியாதை  கொடுக்காதது   அப்படியொன்னும்  பெரிய  கொல  குத்தமாகாது..  என்று  மீண்டும்  மீண்டும்  அவளையே  நினைத்திருந்தான்.

Advertisement

சிறிது   நேரம்  கழித்து..  ஹாஸ்பிட்டலுக்கு  கால்செய்து  மாலை  வரமாட்டேன்  என்று  தகவலளித்துவிட்டு..  சந்தோசத்தோடே  மீண்டும்  ஒரு  முறை  குளிக்கப்போனான். குளித்து  வெளியே  வந்த  சூர்யாவைப்  பார்த்த  ஆதவனுக்கு  அப்படியொரு  சந்தோசம்.

ஏனென்றால்  சூர்யா  எப்பொழுதும்  தன்  தோற்றத்திற்காக  சிறப்பாக  எதையும்  செய்து  கொள்ளமாட்டான்.  ஆனால்  இன்று  வழக்கத்திற்கு  மாறாக..  கல்லூரி  மாணவனைப்போல்   தன்  தாடி.. மீசையை  டிரிம்செய்து..  அடர்நீல  ஜுன்சும்..  ஆகாய  வண்ண  டீசர்ட்டும்  அணிந்திருந்தான்.

‘என்ன  ஆதவா  அப்படி  பார்க்கிற..?”என்றான்  சூர்யா.

‘யூ  லுக்  வெரி  ஹேண்ட்சம்..”என்றான்  ஆதவன்.

‘தேங்க்ஸ்..  ஆனா  உன்  இங்லீசை  கொஞ்சம்  மூட்டைகட்டி  வச்சிடு..” என்றான்.

‘ஏன்..?” என்றான்  ஆதவன்.

‘திலகவதிக்கு  இங்கிலீஸ்  தெரியாது…”  என்று  இயல்பாய்  சொன்னான்  சூர்யா.

நான்  என்ன  திலகவதிகிட்டயா  பேசினேன்..?  என  எள்ளலாய்  நினைத்தாலும்..

‘தம்பி  சொல்  மிக்க  மந்திரமில்லை..” என்று  சரண்டர்  ஆவதுபோல்  பாவனை  செய்து  சிரித்தான்  ஆதவன்.

‘சரி..  கிளம்பலாமா..?” என்றான்  சூர்யா.

‘நீ  இன்னும்  சாப்பிடலைடா..  முதல்ல  வந்து  சாப்பிடு..” என்றார்  கமலம்.

‘ஆமாமில்ல..   நான்  இன்னும்  சாப்பிடல..” என்று   சாப்பிட அமர்ந்தவன்.. ‘நீங்க  சாப்பிட்டிங்களாம்மா..?” என்று    தன்  அம்மாவையும்    வெகுநாட்களுக்கு  பிறகு  அக்கறையாய்  கேட்டான்  சூர்யா.

‘நாங்க  எல்லாருமே  சாப்பிட்டுட்டோம்..” என்று   கமலம்  சந்தோசமாக  சொல்ல.. அதன்பின்  ஐந்தே  நிமிடத்தில்  சாப்பிட்டு  முடித்தவன்.. ‘பொண்ணும்மா..  சித்தாகிட்ட  வாங்க..” என்று  தியாவை  சூர்யா  தூக்கிக்கொள்ள..

‘சூர்யா..  அம்மாவோட  வீல்சேரையும்  எடுத்துகிட்டு  எல்லாரும்  ஒரே  கார்ல  போகமுடியாது..  அதனால  நீ அம்மா  குழந்தைங்க  மட்டும்   போங்க..  நானும்  கீர்த்தியும்  பிரசாத்தோட  அப்பாம்மாவோட  வந்திடறோம்..” என்று  சொல்லி  சூர்யாவின்  பதிலை  எதிர்பார்க்காமல்   பிரசாத்வீட்டிற்கு  கீர்த்தியோடு  பைக்கில்  போனான்  ஆதவன்.

‘அம்மா..  நான் வரலை..  நீங்க    நாம மட்டும்தான  போறோம்னு  சொன்னிங்க..  அதனாலதான்  நான் வரதுக்கு  ஒத்துக்கிட்டேன்..  இப்ப  அந்த  டாக்டர்வீட்ல  இருந்து  எல்லாரும்  வராங்கன்னு  சொல்றிங்க..  நீங்க  போய்ட்டு  வாங்க..  நான்  வீட்லயே  இருக்கிறேன்..” என்று  பிடிவாதமாய்  சொன்னாள்  திலகவதி.

‘எனக்கு  பிரசாத்  போன  வேதனையைவிட..  உன்னை  பார்த்தாத்தான்மா   ரொம்ப  வேதனையா  இருக்கு..  இப்படியே  எத்தனை  நாளைக்கு  வீட்டுக்குள்ள  இருப்ப..?  உனக்காக  இல்லன்னாலும்..  எங்களுக்காக  வா  திலகவதி..” என்றார்  மூர்த்தி.

இவர்கள்  பேசுவதை  வெளியில் இருந்து  கேட்டுக்கொண்டிருந்த  ஆதவனும்..  கீர்த்தியும்..  ‘அம்மா..” என்று  அழைத்தபடி  உள்ளே  வந்தார்கள்.

‘வா  ஆதவா..  வா  கண்ணு..” என்றார்  மூர்த்தி.

‘என்ன  திலகவதி..?  இன்னும்  ரெடியாகலையா..?  சீக்கிரம்  ரெடியாகு..” என்றாள்  கீர்த்தி.

‘அக்கா..  எனக்கு  தலைவலி  நான்  வரலை..” என்றாள்  திலகவதி.

‘உனக்கு  தலைவலிக்கு  நான்  மாத்திரை  தரேன்  சீக்கிரம்  கிளம்பு..  உன்னை  நம்பித்தான்  நான்  தியாவை  கூட்டிட்டு  வரேன்..” என்று  கெஞ்சலாய்  சொன்னாள் கீர்த்தி.

திலகவதி  மீண்டும்  அமைதியாகவே  இருக்கவும்.. ‘சரி  ஆதவா..  நாங்க  வரலை..  இப்படி  ஒரு  வாழ்க்கைய  இந்த  புள்ளைக்கு  குடுத்துட்டமேங்கிற  கவலையிலயே  நாங்களும்  சீக்கிரம்  போய்  சேர்ந்திடுவமாட்டங்குது..” என்று  அன்னபூர்ணி  கண்ணீர்  வடிக்கவும்..

‘அழாதிங்கம்மா..    நான்  வரேன்..” என்று   அரைமனதாய்  கிளம்பினாள்.

முழுமையாக ஒருவருடம்  இரண்டு  மாதம்  கழித்து..  வீட்டை  விட்டு  வெளியுலகத்திற்கு  வந்தாள்  திலகவதி.  பிரசாத்தின்   ஸ்கார்ப்பியோவில்  அனைவரும்  கிளம்பினார்கள்.

முதலில்  கோவிலுக்கு  செல்வது  என்று  முடிவெடுத்ததால்..  சூர்யா தன் அம்மாவோடும்..  சோனா..  தியாவோடு  சிவன்  கோவிலில்  இருந்தார்கள்.  சூர்யா  திலகவதியை  ஆவலோடு  எதிர்பார்த்திருந்தான்.

ஆதவனும்  பிரசாத்தின்  பெற்றோரும்  வந்திறங்க..    திலகவதியை  பார்த்த  சூர்யாவிற்கு  அப்படியொரு  கோபம்  வந்தது.  எப்பொழுதும்போல்  சேலையை கட்டியிருப்பாள்  என்றுதான்  நினைத்திருந்தான்.  ஆனால்  இம்முறை  தன்  முந்தானையால் அந்தகால  செய்திவாசிப்பவர்போல்..   வலப்பக்கத்தையும் சேர்த்து  தன்தோளோடு  மறைத்து சுற்றியிருந்தாள்.  கொண்டையை  காணவில்லை..   ஜடையும்  காணவில்லை..   திலகவதியின்  பின்னே  சற்று  உற்றுநோக்க..   தன்  பின்னலையும்  சேர்த்து  சேலையால்   சுற்றியிருக்கிறாள்  எனப்புரிய..  இவளையெல்லாம்  என்ன  பண்றது..  என  கோபமாக  நினைத்தான்  சூர்யா.

சுவாமி  தரிசனம்  முடிந்து..  அடுத்ததாக  ஒரு  பார்க்கிற்கு  சென்றார்கள்.   அங்கு   ஆங்காங்கே   காதலர்கள்..  திருமணமான  இளம்  தம்பதியர்கள்   என்று  நிறையபேர்   மிக  நெருக்கமாக  உக்கார்ந்து  பேசிக்கொண்டிருந்தார்கள்.  திலகவதி  அதை  பார்த்து    தலைகுனிந்தவள்தான்    பிறகு  நிமிரவே  இல்லை.   திலகவதியையே  கவனித்திருந்த  சூர்யா  வெகுவாய்  தவித்தாலும்..   இன்னும்  கொஞ்ச  நாள்ல  எல்லாம்  சரிசெய்திடறேன்..  என  மனதிற்க்குள்  நினைத்துக்கொண்டான்.

அங்கிருந்த  பெரிய  இராட்டிணத்தில்  உக்காரவேண்டும்  என்று  சோனா  அடம்பிடிக்க..  தியாவும்  அங்கேயே  கையை  நீட்டினாள்.

‘அண்ணி..  நீங்களும்  ஆதவனும்..  குழந்தைங்களோட  ஒரு  ரவுண்ட்  போய்ட்டு  வாங்க..”  என்று  தியாவை  கீர்த்தியிடம்  கொடுத்தான்  சூர்யா.

‘எனக்கு  இராட்டிணம்னாலே  பயம்  சூர்யா..” என்றவள் ஆதவனைப்  பார்த்து   திலகவதியை  கண்ஜாடை  காட்டினாள்  கீர்த்தி.

‘எனக்கும்  வாமிட்  வரமாதிரியிருக்கும்  சூர்யா.. பேசாம  நீயும்  சோனாவும்  போய்ட்டுவாங்க..” என்று  ஆதவன்  சொல்ல..  ‘தியாவும்  கேக்கிறாளே  ஆதவா..” என்றான்  சூர்யா.

‘திலகா..  தியாவை  நீ  மடியில  வச்சிகிட்டு  உக்கார்ந்துக்கோ..” என்று  கீர்த்தி  தியாவை  திலகவதியிடம்  கொடுத்தாள்.

‘அச்சோ..  நானா..?  நான்  போகலை..”   என  அவசரமாய்  மறுத்தாள்  திலகவதி.    திலகவதியின்   மறுப்பிற்க்கு    சூர்யா  திலகவதியை  முறைத்துக்கொண்டிருக்கும்போதே..

‘நீ  சந்தோசமா  இருக்கத்தான்  வெளில  வந்ததே..  போய்  ஒரு  சுத்து  மட்டும்  சுத்திட்டு  வந்திடு  கண்ணு..” என்று  மூர்த்தி  சொன்னார்.

‘போ  திலகா..” என்று  அன்னபூர்ணியும்  சொன்னார்.

தியாவும்  இராட்டிணத்தையே  காண்பித்து  அழவும்..    குழந்தைகளுக்காக   சரி என்பதாய்  தலையசைத்து   தியாவோடு  இராட்டிணத்தில்  ஏறி  உக்கார்ந்தாள்.  அவளுக்கு  நேர் எதிரே  சோனாவோடு  சூர்யா  உக்கார்ந்தான்.  பிறகு  ஏறிய  ஒரு  தம்பதியினர்..

‘சார்..  நீங்க  அங்க  உக்கார்ந்துக்கிறிங்களா..?  என்  பக்கத்தில  உக்கார்ந்தாதான்  தைரியமா  வருவா..”  என்று  தன்  மனைவியை  காண்பிக்க..

‘ஓ.. ஸ்யூர்..” என்று  வெகு  இயல்பாக  திலகவதிக்கு  பக்கத்தில்  போய்  உக்கார்ந்தான்  சூர்யா.  அதில்  வெகுவாய்  தடுமாறிப்போனாள்  திலகவதி.    சூர்யா  திலகவதியை  கவனித்தாலும்..   அவளின்  தடுமாற்றத்தை  ஒரு  பொருட்டாகவே  கருதவில்லை.

இராட்டிணம்  சுற்ற  ஆரம்பிக்கவும்..  தியா  பயத்தில்  அழ  ஆரம்பித்தாள்.   திலகவதி  என்ன  சமாதானப்படுத்தியும்  தியா  அழுவதை  நிறுத்தவில்லை.

‘இங்க  கொடு..”என்று  ஒருகையால்  சோனாவை  பிடித்துக்கொண்டு..  மறுகையால்  தியாவை  அவளிடம்  இருந்து  தூக்கிக்கொண்டான்.  ‘பார்த்து..”  என்று  சூர்யாவின்  முகம்  பார்த்தாள்.

தம்மிடம்  திலகவதி  இயல்பாய்  பேசியதில்  ஆச்சரியப்பட்டவன்..  ‘நீ  முதல்ல  சரியா  பிடிச்சிக்கோ.. இவங்களை  நான்  பார்த்துக்குவேன்..” என்று  சொல்லி  சந்தோசமாய்  குழந்தைகளை  அணைத்துக்கொண்டான்.   இராட்டிணம்  சுற்றிமுடித்து  இறங்கி  வந்தார்கள்.

சோனா  ‘சித்தா.. சித்தா..  என்று  சூர்யாவை  சுற்றியே  வரவும்..

அதைபார்த்த  தியா..  ‘தித்தா..”  என்று  திலகாவிடம்  போனாள்.

‘அவங்க  சித்தா  இல்ல  பொண்ணுமா..  சித்தி..” என்று  சொல்லிகொடுக்கவும்..  திலகவதி  அதிர்ச்சியாய்  சூர்யாவைப் பார்த்தாள். அவளின்  அதிர்ச்சியை  பார்த்த  சூர்யாவும்   இப்படி  வெளிப்டையா  சொல்லிட்டோமே என  லேசாய்  அதிர்ந்தான்தான்.  ஆனால் வெளிகாட்டிகொள்ளாமல்

‘குழந்தைதான..?  எப்படியோ  ஒன்னு  கூப்பிட்டு  போகட்டுமே..” என்று  திலகவதியிடம்  சாதாரணமாக  சொல்லி   தன்  குடும்பத்தார்  உக்கார்ந்திருந்த  இடத்தைநோக்கி  போனான்.

திலகவதி   அங்கேயே  நிற்கவும்..  ‘வா..” என்றான்.

‘தித்தா..” என்று   திலகவதியை  நோக்கி  தியா  கையை  காட்டி  அழைக்கவும் வேறு  வழியின்றி..   திலகவதியும்  அவர்களிடம்  வந்தாள்.

‘எங்க  காலம்  முடிஞ்சதுக்கப்புறம்  இந்த  புள்ளை  வாழ்க்கை  என்னாகுமோன்னு  திலகவதியை  நினைச்சாத்தான்  ரொம்ப  கவலையா  இருக்கு..”  என்று  மூர்த்தி  கண்கலங்கவும்..  ‘விடுங்க..  கடவுள்  எதாவது  நல்லவழி  காட்டுவாரு..” என்று  கமலம்  சொன்னார்.

‘என்ன  நல்லவழி  காட்டுவாரு..?  இவளுக்கு   இப்பத்தான்  பத்தொன்பது  வயசு..  அதுக்குள்ள  புருசனை  பறிகொடுத்திட்டு  உக்கார்ந்திட்டிருக்கா..  என் பையன்  ரொம்ப  சின்ன  பொண்ணா  இருக்கிறாம்மா..  இந்த  கல்யாணம்  வேணாம்னு  அப்பவே  சொன்னான்..  நான்தான்  அவனை  சமாதானப்படுத்தி  கல்யாணம்  பண்ணிவச்சேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!