Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir episode 14.2

“சரி சரி. உங்க பஞ்சாயத்தை அப்புறமா வச்சிக்கலாம்.” என்று கூறிய வெண்மதி கலைவாணியை விதவிதமாக புகைப்படம் எடுத்தாள் அதை கவிதா விடமும் கலைவாணி இடமும் காட்டினாள்.

அந்த புகைப்படத்தில் கலைவாணி மிக அழகாக இருந்தாள்.

“சரி ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க.” என்று இருவரையும் சேர்ந்து நிற்கவைத்து புகைப்படம் எடுத்தாள்.

பின்பு எல்லோரும் சேர்ந்து நின்று  செல்பி எடுத்துக்கொண்டனர். வெளியில் வந்த மாலினி “வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. நேத்து மாதிரி இருந்திருந்தா, நல்லா இருந்திருக்கும்.” என்று அலுத்துக் கொண்டார்.



Advertisement

“நாம நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கிறது கிடையாது. நாம ஒன்னு நினைச்சா வேற ஒன்னு நடக்குது.”  என்று அலுத்துக் கொண்டார் மாலினி. இதனை கேட்ட வெண்மதி மனம் எங்கோ சென்றது.

அவளுக்கும் அப்படித்தானே. விஜய்யை நம்பி உண்மையாக காதலித்தாள். ஆனால் அவன் அவளை வெகு சாதாரணமாக தூக்கியெறிந்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள தயாராகிவிட்டான்.

 

Advertisement

என்று அவனைப்பற்றி நினைத்தது மனது. மீண்டும் அவள் முகத்தில் சோகம் படர்ந்தது.

Advertisement

“சரிமா மாலினி. வெயில் தானே. அதுக்கு என்ன இப்போ? ஒரு இளநீர் குடிச்சா சரியா போயிடும் வாங்க. இளநீர் சாப்பிடலாம்.” என்று கூப்பிட்டுக் கொண்டு அருகிலிருந்த இளநீர் கடையில் இளநீர் வாங்கி எல்லோருக்கும் கொடுத்தார்.

அதனை வாங்கி அனைவரும் குடித்தனர்.

ஒரு மிடறு குடித்த மாலினி “இளநீர் ரொம்ப டேஸ்டா இருக்கு. இந்த வெயிலுக்கு இளநீர் ரொம்ப நல்லா இருக்கு.” என்று கூற

Advertisement

அருணாச்சலம் “பாத்தியா இந்த சூடான வெய்யிலில் அலைந்து திரிந்ததால் தான் குளிர்ச்சியான இந்த இளநீரை உன்னால் ரசித்து ருசித்து குடிக்க முடியுது. அது மாதிரிதான் வாழ்க்கையில் நமக்கு வர்ற கஷ்டமும் நஷ்டமும். அப்படி கஷ்டமும் நஷ்டமும் பட்டால்தான் நமக்கு அடுத்ததா கிடைக்கப் போகிற நல்ல  விஷயத்தின் அருமை நமக்கு புரியும்.” என்று எதார்த்தமாக அருணாச்சலம் கூற வெண்மதி  அதில் இருந்த  பெரிய உண்மையினை புரிந்துகொண்டாள் பாரமாக இருந்த மனம் லேசானது போல உணர்ந்தாள்.

 

அப்போது கலைவாணி வெயிலில் நின்று கொண்டிருந்ததை கவனித்த வெண்மதி

“கலை இங்க வந்து என் பக்கத்துல நில்லு. இங்க கொஞ்சம்  நிழல் இருக்கு.” என்று அழைத்தாள்.

“ஆமாம் மதி அக்கா. இந்த கொளுத்துற வெயிலில் நின்னா நான் கருத்துப் போயிடுவேன்.” என்று சாலை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு வெண்மதி பக்கத்தில் வந்து நின்றாள்.

 

கலைவாணி “இப்படி தான் அக்கா நான் பிறந்த போது எவ்வளவு கலரா இருந்தேன் தெரியுமா?”

“எவ்வளவு?” என்று வெண்மதி ஆவலாக கேட்பதுபோல பாவனையில் கேட்க

கலைவாணி “பாலையும் என்னையும் பக்கத்துல வச்சி பார்த்தா பால் கருப்பா தெரியும்.” என்று அளந்து விட்டாள்

இதனை கேட்ட வெண்மதி விழுந்து விழுந்து சிரித்தாள்.

நெடுநாட்களுக்கு பிறகு தன் தோழியின் இந்த சிரிப்பினை பார்த்த கவிதாவின் மனம் மகிழ்ந்தது.  இவளை இவ்வளவு தூரம் கூட்டி வந்த வேலை ஓரளவு முடிந்தது என்று நினைத்துக் கொண்டாள்.

“என்ன கவி நான் சொன்னது கரெக்ட் தானே?” என்று கவிதாவை

சீண்டினாள் கலைவாணி.

“ஆமாம் இந்த அம்மா, அமெரிக்கன் கலர்ல இருப்பாங்க. ஆமாம் நான் அமெரிக்கன் கலர் தான்.”

“என்னடி சொல்ற?”

“முன்னப்பின்ன அமெரிக்கன் யாரையாவது பார்த்து இருக்கியா?” “பார்த்து இருக்கிறேன்.  என்  பிரிண்ட் காவியா இருக்கா இல்ல?” “ஆமாம்.   காவியா அக்கா அமெரிக்காவில் ரெண்டு வருஷம் இருந்தாங்க அவங்களுக்கு அப்போ அங்க குழந்தை பிறந்தது. அப்புறம் குழந்தையோட அவங்க  இங்க வந்தாங்க. அந்த குழந்தை என்னோட கலர்ல தான் இருக்கு.” “ஆமாம் அம்மா அப்பா எந்த கலர்ல இருக்கிறார்களோ, அந்த கலர்ல தான் கொழந்தை பிறக்கும். இதுல என்னடி அதிசயம் இருக்கு?”

“அமெரிக்கால பிறந்ததால அந்த குழந்தை அமெரிக்கன். சோ அந்த அமெரிக்கன் குழந்தை பிரவுன் கலர். நானும் பிரவுன் கலர். சோ நானும் அமெரிக்கன் கலர். எப்பூடி” என்று தன் சல்வாரின் கழுத்துப்பகுதியை காலரை தூக்கி விடுவதுபோல தூக்கி விட்டுக்கொண்டாள்.

“கலக்கிட்ட கலைவாணி.” என்று கைதட்டி பாராட்டினாள் வெண்மதி.

“சரி தாயே நீ அமெரிக்கன் கலர்தான். ஒத்துக்கறேன் ஆளை விடு.” என்று கையெடுத்து கும்பிட்டாள் கவிதா.

“இது பத்தாது காலில் விழுந்து கும்பிடு.” என்று காலை அவள் முன்பு நீட்டினாள் கலைவாணி.

“உன்னை” என்று மீண்டும் அவள் தலையில்  கொட்டுவதற்காக அவள் அருகினில் செல்ல கலைவாணி வெண்மதி பின் ஒளிந்து கொண்டாள். வெண்மதி சிரித்துக்கொண்டே “ கவி விடு அவளை.” என்று கலைவாணியை கவிதாவிடம் இருந்து காப்பாற்றினாள்.

இதனை பக்கத்தில் இருந்து பார்த்து கேட்டுக்கொண்டிருந்த மாலினி அருணாச்சலம் இருவரும் சிரித்தனர்.

அருணாச்சலம் “சரி வாட் நெக்ஸ்ட்?” என்று கேட்க

“ஃபுல் மீல்ஸ்” என்று சுருக்கமாக பதில் கூறினாள் கலைவாணி.

கவிதா “ என்னால முடியல டி இவ கூட. பேசாம நீ உங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போயிடு  மதி.” என்று சோர்வாக கூறுவது போல கூறினாள் கவிதா.

“மதி அக்கா என்னை கூட்டிக்கொண்டு போயிடுங்க. என்னாலயும் இவ கூட குப்பை கொட்ட முடியல.” என்று பதிலுக்கு  அலுத்துக் கொண்டாள். இந்த அழகான சொர்க்கத்தை விட்டு உன்னை அந்த கூண்டுக்கு  எப்பவுமே கூட்டிக்கிட்டு போக மாட்டேன் என்று மனதில் நினைத்து கொண்டாள்  வெண்மதி.

அதேநேரம் அருணாச்சலம் “சரி வாங்க போய் சாப்பிடலாம்.” என்று அனைவரையும் கூட்டிக்கொண்டு ஒரு உணவு விடுதிக்கு சென்றனர். வாழை இலை போட்டு சாதம், சாம்பார், குழம்பு, ரசம், இரண்டு விதமான பொறியல், அப்பளம், வடை, பாயாசம் என்று சாப்பாடு அவர்களின்  மேஜைக்கு வந்தது. அனைவரும் சாப்பிட்டனர்.

“இன்னும் ட்ரெயினுக்கு டைம் இருக்கு. வேற எங்க போகலாம்? பார்க் ?” என்று கேட்டார் அருணாச்சலம்.

“அப்பா  ஒரு முக்கியமான இடத்தை மறந்துட்டீங்க. அந்த இடத்துக்கு போகலைனா நாம இந்த ஊருக்கு  வந்ததில் பிரயோஜனம் இருக்காது.” “அப்படி என்ன இடம் அது கலை? என்று அருணாச்சலம் ஆர்வமாக கேட்கவும் எல்லோரும் கலைவாணியை பார்த்தனர்.

கலைவாணி சப்புக் கொட்டிக் கொண்டே “அப்பா அந்த அல்வா கடை சூடா வாழையிலையில் போட்டு கொடுப்பார்களே! எவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்?” என்று கூற கவிதா கலைவாணியை கொலைவெறியோடு பார்த்தாள்.

“ஏண்டி அல்வா கடைக்கு இவ்வளவு பில்டப்பா? உன்னை” என்று அவள் தலை மீது கொட்டுவதற்கு கையை தூக்க..

“அம்மா” என்று அவள் கொட்டுவதற்கு முன்பே கத்தி விட்டாள் கலைவாணி.

“நான் இன்னும் உன்னை கொட்டவே இல்லை. அதுக்குள்ள ஏண்டி கத்தற? நான் கத்திட்டா நீ  கொட்ட மாட்ட. அதனால தான்.”

“நீ கத்தினாலும் நான் கொட்டுவ.” என்று கூறியபடி அவள் தலையில் இரண்டு கொட்டு கொட்டினாள்.

“அம்மா” என்று மீண்டும் ஆரம்பித்தாள் கலைவாணி.

சிரிப்பை அடக்கிக்கொண்டு மாலினி “சரி தங்கம். உனக்கு நான் ரெண்டு பார்சல் அல்வா வாங்கி தரேன்” என்று சமாதானம் கூறினார்.

“அப்ப ஓகே.”  என்று உற்சாகமானாள் கலைவாணி.

அனைவரும் அல்வா கடைக்கு சென்று அல்வா சாப்பிட்டுவிட்டு தங்கும் விடுதிக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர்.

பிறகு இரவு ரயில்  பிடித்து ஊர் வந்து சேர்ந்தனர். வெண்மதியை அவள் வீட்டில் விட்டுவிட்டு கவிதா குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர்.

 

நாட்கள் விரைந்து ஓடியது. விஜய் அவளை  ஏமாற்றியதால் அவள் மனதில் ஏற்பட்ட ரணம் மெதுமெதுவாக ஆறி கொண்டிருந்தது.  எப்பொழுதாவது விஜயின் ஞாபகம் வரும் பொழுது தன் மனதை மற்ற விஷயங்களில் செலுத்தி  தன்னைத் தானே அவன்  நினைவுகளிலிருந்து மீட்டெடுத்தாள். வெண்மதி. தோட்டத்தில் செடிகள் வளர்ப்பதில் கவனம் செலுத்தினாள். அந்த செடிகளில் பூக்கும் பூக்களை பார்க்கும் பொழுது அவள் மனதிற்கு நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.  பல வண்ண  பூக்களை  வாங்கி வந்து வீட்டில் நட்டுவைத்து வளர்த்து  அவை பூத்துக் குலுங்குவதை பார்த்து ரசித்தாள்.  இப்படி வெண்மதி ஓரளவு தன் இயல்பான வாழ்விற்கு திரும்பி இருந்தாள்.

 

லட்சுமி பறித்த ரோஜா, சாமந்தி பூக்களை சேர்த்து  அழகான மாலையாக கட்டி பக்கத்தில் இருந்த கோவிலுக்கு  கொடுப்பாள்.

 

அன்று மாலை சுகமான தென்றல்  காற்றை அனுபவித்தபடி

பச்சை   புடவையில் வெண்ணிற முத்துக்கள் பதித்தது

போல செழிப்பாக பூத்து நறுமணத்தை பரப்பிக் கொண்டிருந்த குண்டு மல்லிகளை  ரசித்தபடியே பரித்து ஒரு அழகான மூங்கில் கூடையில் போட்டுக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த லட்சுமி “குண்டுமல்லி ரொம்ப அழகா பூத்திருக்கு. வாசனையும் ரொம்ப நல்லா இருக்கு.”  என்று தோட்டக்காரனிடம் சொல்லிக்கொண்டிருந்தார் .

“பூச்செடிகள் எல்லாம் கொஞ்ச நாளா உங்க பொண்ணுதான் அம்மா பார்த்துகிட்டு இருக்குது.  அரிசி கழுவிய தண்ணீர்  தினமும் கொண்டுவந்து  ஊத்தி  செடிகள் எல்லாம் நிறைய  மொட்டு விட்டு செழிப்பா நிறைய பூ பூக்குது பாருங்க.”

“ஓ அப்படியா? சரி சோமு.” என்று லட்சுமி கூற தோட்டக்காரன் சோமு அங்கிருந்து சென்றான்.

பூ பறித்துக் கொண்டு இருந்த மகளிடம் வந்தார் லட்சுமி

“என்னம்மா மதி. தோட்டக்கலையில் இறங்கிட்ட போல இருக்கு. பூவெல்லாம் நல்லா பூத்திருக்கு” என்று கேட்டார்.

“சும்மா இருக்க போர் அடிக்குது. அதனால தோட்டத்தில்  ரெண்டு செடி வைக்கலாம்னு ஆரம்பிச்சு இப்போ நிறைய செடி வச்சு பாத்துக்க ஆரம்பிச்சுட்டேன்.  எனக்கு நல்லா பொழுது போகுது.  இந்த பூவை பார்க்கும்போது எனக்கு கிடைக்கிற சந்தோஷத்தை என்னால வாயால சொல்ல முடியாது.  அவ்வளவு ஹாப்பி. ஹாலிடே ஹாப்பியா போகுது.”” என்று முகமலர்ச்சியுடன் கூறினாள் வெண்மதி.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!