Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 26

வரம் வாங்கி வந்தவள் நான்

                சிறப்பு அத்தியாயம் –  26

 

பத்து வருடங்கள் கழித்து மாசி களரி திருவிழா…



Advertisement

 

ஊரே அந்த குலதெய்வ கோவிலில்தான் சுந்தரும் தன் குடும்பத்தோடும் தங்கைகள் குடும்பத்தோடும் வந்திருக்க  வரிசையாக ஆடுகள் பலி கொடுப்பதற்காக கட்டப்பட்டிருந்தது..  சுந்தரின் மகனும் மகளும் அவர்கள் அத்தைகளின் பிள்ளைகளோடு  நிற்க, தர்ஷினி பயந்து போய் கருப்பனை பார்த்தபடி நின்றிருந்தாள்..

 

Advertisement

தன் வாழ்க்கையில் மலை போல் வந்த துயரை எல்லாம் பனி போல விரட்டி தன்னை உயிருக்கு உயிராய் நேசிக்கும் கணவனை  கொடுத்ததில் அவருக்கு மனதார நன்றி சொன்னவள் கருப்பா உன்  காணிக்கையை நல்லபடியா ஏத்துக்கோ வேண்டிக் கொண்டிருக்க அவள் வாழ்க்கையே மாறி ஆஸ்திரேலியாவே மறந்து இங்கேயே பிறந்து வளர்ந்தவள் போல மாறிவிட்டாள்..

Advertisement

 

பூசாரி அரிவாளோடு சாமியாடி வர பெரிய அண்டாவில் மஞ்சள் நீர் கலக்கப்பட்டு இருந்தது.. கூடவே வந்தவர் வாளியில் மஞ்சள்நீர் எடுத்து ஆட்டின் மீது ஊற்றவும் சில ஆடுகள் உடனே சிலிர்க்க ஒரே வெட்டில் தலை துண்டானது.. சில அப்படியே அசையாமல் நிற்க  வாளி வாளியாய் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.. அவை எந்தவித  சிலிர்ப்பும் இல்லாமல் அப்படியே நிற்க அடுத்தடுத்து மஞ்சள் நீர் ஊற்றப்பட்டு பலி கொடுக்கப்பட சுந்தர் முறை வரும்போது தர்ஷினி நடுங்கி போய் நின்றிருந்தாள்..

 

Advertisement

அதை பார்க்கவும் பயம் ஆனாலும் ஆட்டையே கவனித்துக் கொண்டிருக்க அது தண்ணீர் மேலே லேசாக படும்போதே சிலிர்க்கவும் அனைவருக்கும் சந்தோசம் தாங்கவில்லை.. தர்ஷினி பிள்ளைகளோடு போய் நின்று திரும்பி கொள்ள இங்கு ஆட்டை பலி கொடுக்கவும் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டவர்கள் வீட்டுக்கு கிளம்ப தயாரானார்கள்..

 

தர்ஷினிக்கு தன் பிள்ளைகள் பின்னால் சுற்றுவதே பெரிய வேலையாக இருந்தது..வரிசையாக டியூப் லைட் கட்டி வெளிச்சம் இருந்தாலும் அந்த தாழம்பூ காட்டுக்குள் சென்று விடுவார்களோ அந்த பூவை பறித்து விடுவார்களோ அவர்களையே கண்காணித்துக் கொண்டிருந்தாள்..

 

சுந்தர்  தன் பிள்ளைகள் எங்கு சென்றாலும் வால்பிடித்து செல்லும் மனைவியை பார்க்க நல்ல ரத்த சிவப்பு நிற பட்டுச்சேலை அதற்கு பொருத்தமான நகைகள் தலைநிறைய மல்லிகைப் பூவென தான் முதல்முதலாக பார்த்த தோற்றத்திற்கு நேர்மாறாக அக்மார்க் தமிழ்நாட்டு மருமகளாக மாறியிருந்தாலும் குணம் எதுவும் மாறவில்லை…

 

அடுத்தவர் மேல் அதே அன்பு, தன்னிடம் இருப்பதை வாறி வழங்கும் குணம், தன் தங்கைகளிடம் காட்டும் அதே அனுசரிப்பு.. அன்பு தன் தந்தையை அவளுடைய தந்தையே போலவே ஏற்று அவரிடம் மரியாதையும் பாசமும் காட்டுவது தன் அன்னையிடம் மருமகளாக இல்லாமல் மகளாக இருப்பது என அவள் இன்னும் புடம் போட்ட பொன் போல மின்னினாள்..

 

தங்கள் குழந்தைகள் மீதே பார்வையை வைத்திருந்தவளை ரசித்தவனின் பார்வை தங்கள் குழந்தைகளை வருட அவர்கள் இவர்களின் பொக்கிஷங்கள்…

 

தாயை வைத்துறித்து பிறந்திருக்கும் மகள்.. தன்னை போலவே மகன் ஆனால் இருவரும் குணங்களில் மாறுபட்டிருந்தார்கள். தந்தை குணத்தை மகளும், தாயின் குணத்தை மகனும் பெற்றிருந்தார்கள்.. தன் மனைவியின் கையை எட்டி பிடித்தவன்

 

ஏ பச்ச மொளகா சும்மா இருடி..? அவங்க  எங்கயும் போய் எதுவும் செய்ய மாட்டாங்க வந்து உட்காரு.. எல்லாரும் சேர்ந்துதானே விளையாடுறாங்க.. அப்புறம் என்ன பயம்.. அதோட அம்முட்ட சொல்லிட்டேன் அவ பொறுப்பா அவன பார்த்துக்குவா… நீ உட்காரு நடந்துட்டே இருந்தா கால் வலிக்கும்..

 

மாமா நீங்க தானே சொன்னிங்க..?? இந்த பிளவர வீட்டுக்கு கொண்டு  போனா அங்க பாம்பு வரும்னு அதான்.. ஆனா இந்த ஸ்மெல் நல்லாயிருக்குல்ல… நமக்கே அதுக்கு பக்கத்துல போகனும் போலத்தான் இருக்கும்..அப்ப பசங்களும் அங்க போயிருவாங்க தானே..

 

உனக்கு ரொம்ப ஆசையா இருந்தா நான் வேணா பறிச்சு தரவா..??”

 

ஓஓஓஓஓ காட்….மாமா நோ.. அத செஞ்சுராதிங்க… அவனை தடுத்தவள் தன் மகன் ஏதோ விளையாட்டு போல அதன் அருகில் செல்ல அவன் பின்னால் இவள் ஓடிவிட்டாள்..

 

அதற்கு மேல் மனைவியை அலைய விடவேண்டாம் நினைத்தவன் அனைவரையும் காரில் ஏற்றியிருக்க தர்ஷினி மட்டும் ஏறாமல்  கருப்பனை மீண்டும் வேண்ட சென்றுவிட்டாள்..

 

பிள்ளைகள் இருவரும் தன் தந்தையிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவன் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.. இருவருக்கும் ராமையா என்றால் உயிர் அவரும் இவர்களின் கைப்பிடித்து எங்கு சென்றாலும் அழைத்துச் சென்று விரும்புவதை வாங்கித் தருவார்.. தன் பேரன் பேத்திகளோடு காலைவேளையில் வயலை சுற்றி அவருடைய அனுபவங்களை சொல்வதில் அவருக்கு அவ்வளவு ப்ரியம்..

 

தான் என்ன சொன்னாலும் தட்டாமல் கேட்டு அதன் படி நடக்கும் குழந்தைகளை பார்க்கையில் தன்னைப்போலவே தன் மகனும் கொடுத்து வைத்தவன் என்பதை புரிந்துகொண்டார்.. தன் மகன் மருமகள் மீது அவருக்கு எப்போதும் பெருமையே.. சுந்தரோ தனக்கு  அப்பத்தாவை போல தன் பிள்ளைகளுக்கு தந்தையிருப்பார்.. நல்வழிகாட்டுவார் என்பதில் மகிழ்ந்தவன் அவர்கள் கார் கண்ணை விட்டு மறையவும் மனைவியை தேடி வர தர்ஷினியோ கருப்பரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

 

மனைவியின் தோளில் கைப் போட்டு என்னடா லட்டு ரொம்ப நேரமா வேண்டுற…??”

 

நான் ஒன்னும் வேண்டல மாமா.. அவர்கே எல்லாம் தெரியும் எனக்கு என்ன தரனும்னு.. இல்ல முதல் முதலா இந்த கோவிலுக்கு வந்தத நினைச்சுப் பார்த்தேன்..” அவள் கண்கள் கலங்குவதை பார்த்தவன் கண் சிமிட்டி..   

 

ஆமாண்டி லட்டு முதல் முதலா இங்கதான்  உன்னை ஸாரில பார்த்தேன் செம ஹாட் பிகர்டி நீ..??”

 

வெட்கத்தில் முகம் சிவந்தவள் அவன் கையில் லேசாக கிள்ளி  மாமா கோவில்ல வைச்சு என்ன பேசுறிங்க.. வரவர ரொம்ப பேட் ஆகிட்டிங்க…

 

ஹா..ஹா..ஹா… ஹேய் லூசு அப்போ தண்ணியில இருந்து நான்தானே காப்பாத்தினேன்… அப்போ நமக்கு கல்யாணமே நடக்கல இந்த கருப்பன் முன்னாடிதான் உன்னை தூக்கினேன்.. இப்போ கல்யாணம் நடந்து ரெண்டு பிள்ளைகள் வேற இருக்கு.. இதுல என்னடி தப்பு..

 

போ மேன் உன்கிட்ட பேச முடியாது… வா..!!!” அவன் கையை பிடித்து இழுத்து வர..என்றும் போல அவள் மேல் அளவிலா காதல் பொங்கியது..

 

                கொஞ்சி பேசிட வேணாம்

                     உன் கண்ணே பேசுதடி

                கொஞ்சமாக பார்த்தால்

                      மழைச்சாரல் வீசுதடி

                 நா நின்னா நடந்தா கண்ணு

                      உன் முகமே கேட்குதடி

                அடி தொலைவில் இருந்தா தானே

                    பெருங்காதல் கூடுதடி

                 தூரமே தூரமாய் போகும் நேரம்..

 

மாமா கோவில்ல பாடுற பாட்டா இது..??” அவனை முறைக்க முயன்று தோற்றவள் அவன் கண்களில் வழிந்த காதலில் எப்போதும் போல கட்டுண்டு அமைதியாக அவன் கைப்பிடித்து நடக்கத் துவங்கினாள்..

 

வரும் வழியெல்லாம் அவனுக்கு தெரிந்தவர்கள் தான் நின்று நின்று பேசி வர இப்போது சுற்று வட்டாரத்தில் சுந்தரை தெரியாதவர்கள் யாரும் இல்லை.. ஒரு விவசாயியாய்.. தொழில் அதிபராய் அனைவருக்கும் தெரிந்திருக்க தர்ஷினியையும் தெரியும்.. அவள் நடத்தும் ஆசிரமம் அவள் மேல் மரியாதையும் மதிப்பையும் கொடுத்திருந்தது.. கணவன் மனைவி இருவரும் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாய் விளங்கினர்..

 

மனைவி ஏறுவதற்காக கார்கதவை திறந்து விட்டவன் காரை ஸ்டார்ட் செய்ய எல்லாரும் போய்ட்டாங்களா மாமா..??”

 

ஆமா நீ கருப்பனோட டீலிங் நடத்தினா.. அங்க சமைக்க வேணாமா.. அதான் எல்லாரையும் முன்னாடியே அனுப்பிட்டேன்.. அவன் காரை வேகப்படுத்த,

 

ஏற்கனவே சமையலுக்கு ஆள்விட்டிருந்ததால் வீட்டு ஆட்கள் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தனர்.. சுந்தரின் தங்கைகள் மாமனார் மாமியார்.. நாத்தனார் கொழுந்தனார் அவர்கள் கணவன் மனைவி என அனைவரோடும் வந்திருந்தனர்.. வீடே ஜே ஜேவென இருக்க சுந்தர் அப்பத்தாவை வற்புறுத்தி தன்னோடு அழைத்து வந்திருந்தான் ..

 

 இரண்டு வருடங்களுக்கு முன்பு கோமாவில் இருந்த பாலா இறந்திருக்க அதிலிருந்து அவர்கள் குலதெய்வ கோவிலுக்கு வருவதில்லை.. பார்வதி தன் ஒரே மகன் இறந்ததில் மனம் உடைந்து போயிருந்தார்.. அப்பத்தாவிற்கு பேரன் மேல் கோபம், வெறுப்பு இருந்தாலும் அவன் இறந்து போவான் என எதிர்பார்க்கவில்லை..தன் பெரிய மகனிற்கு வாரிசு இல்லாமல் போனதில் அவருக்கு அவ்வளவு வேதனை.. 

 

தர்ஷினியின் சின்ன மாமா குடும்பத்தையும் இங்கேயே அழைத்திருக்க இத்தனை வருடங்களில் ஆண் பிள்ளைகள் இல்லாத  அவருக்கு சுந்தர் ஒரு மகனாகவே மாறியிருந்தான்.. அவனது நடத்தை, பொறுமை, அடுத்தவரிடம் காட்டும் அனுசரிப்பு.. அவனுடைய இடைவிடாத உழைப்பு எதையும் ஆராய்ந்து சீர்தூக்கி பார்த்து செய்வது.. அதைவிட தன் தங்கை மகளை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்வது.. தன் அத்தான், தங்கை உயிரோடு இருந்திருந்தால் கூட தர்ஷினியை இப்படி உயிருக்கு உயிராய் பார்த்து கொள்ளும் கணவனை தேர்ந்தெடுத்திருக்க முடியாது..

 

தர்ஷினியின் சொத்தை இப்போது ஒன்றை மூன்றாக்கியிருந்தாலும்.. அதே எளிமைதான்.. எங்கும் எதிலும் யாரையும் விட்டுக் கொடுத்ததில்லை.. வீட்டிற்கு முன்னால் நீண்ட கொட்டகை போடப் பட்டு அனைவருக்கும் சாப்பாடுபந்தி நடந்து கொண்டிருக்க தர்ஷினி மருமகளாய் அனைவரையும் கவனித்துக் கொண்டாள்..

 

இப்போது அவள் நடத்தும் ஆசிரமத்தில் 100 பேருக்கு மேலிருக்க ஒரு வேன் பிடித்து அனைவரையும் அதிகாலையிலேயே அழைத்து வந்து புத்தாடைகள் கொடுத்திருந்தார்கள்.. ஊர் சுற்றிப்பார்க்க கோவிலுக்கு போகவென அவர்களும் மகிழ்ச்சியோடு இருந்தார்கள்.. அனைவரும் சாப்பிடவும் ராமையா அவர்களை ஆசிரமத்திற்கு அனுப்பும் வேலையில் இருக்க இப்போது முக்கால்வாசி பொறுப்பு அவருக்கு தான் விரும்பியே அதை செய்கிறார்..

 

சுந்தருக்கு நிமிடத்துக்கு ஒரு போன் வந்து கொண்டிருக்க அவன் அதனிலேயே மூழ்கிவிட்டான்.. அனைவரும் சாப்பிட்டு முடித்திருக்க சுந்தரும் தர்ஷினி மட்டும்தான்..

 

சுந்தரி அத்தாச்சி மணி 11 ஆச்சு சாப்பிடுங்க..??”

 

அவங்க வரட்டும் சுந்தரி ராஜா சாப்பிட்டானா..??”

 

சாப்பிட்டாங்க.. அனைவரும் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க பிள்ளைகள் அனைவரும் மாடியில் ஒரே ஆட்டம்..

 

மணி ஆகவும் சுந்தரிடம் சென்றவள் மாமா வாங்க பசிக்கிது..??” அதுவரை போனிலேயே மூழ்கியிருந்தவன் மனைவியின் பசி என்ற வார்த்தையை கேட்கவும் வேகமாக வந்து அமர மனைவியையும் தன் கைப்பிடியில் அமர வைத்தான்..

 

தங்கைகள் அனைவரும் ஆளுக்கு ஒரு பாத்திரத்தோடு வர மச்சான்களும் அவர்களுக்கு உதவி.. ஏத்தா அதுதான் பரிமாற ஆள் விட்டிருக்கேன்ல,… நீங்க செத்தநேரம் உட்காருங்க…??”

 

இருக்கட்டும்ணே நாங்களே பரிமாறுறோம்..

 

என்னத்தா சாப்பாடு நல்லாயிருந்துச்சா.. நல்லா சமைச்சிருந்தாங்களா..?? உங்க வீட்டு ஆளுக எல்லாரும் சாப்பிட்டாங்களா..??”

 

ம்ம் சாப்பிட்டாகண்ணே.. சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்கு..

 

ம்ம் பெரியப்பா வந்தாரா… நான் பார்க்கவே இல்ல ..”

 

ம் சாப்பிட்டாருண்ணே நான்தான் கந்தப்பன் அண்ணே கிட்ட மத்தவங்க எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்துவிட்டேன்.. முன்னொரு நாள் ஒரு சேலைக்காக பெரியப்பாவிடமும் பெரியம்மாவிடமும் தன் அப்பத்தா பெற்ற திட்டுக்களை அவன் இன்னும் மறக்கவில்லை.. இப்போதெல்லாம் தீபாவளி பொங்கலுக்கு அவன்தான் அவர்களுக்கு துணிகள் எடுத்துக் கொடுக்கிறான்.. வேலு இன்னும் படுக்கையில்தான்.. மறுபடி சுந்தருக்கு போன் வந்திருக்க

 

என்னங்க ரொம்ப நேரமா போன்ல பேசுறிங்க..?”

 

ம்ம் நல்ல விசயம்தான்.. இந்த வருசம் சிறந்த விவசாயின்னு என்னை தேர்ந்தெடுந்திருக்காங்க..??”

 

சாப்பாட்டை வாயில் வைத்தபடி ஆவென்றகிருக்க..

 

மனைவியின் வாயை மூடி விட்டவனுக்கு சிரிப்பு தாளவில்லை.. ஹாஹா… பேபி சாப்பிடு புரையேற போகுது..

 

போங்க போங்க நான் கேட்டாத்தான் சொல்விங்களா..??”

 

அவள் முறுக்கி கொள்ள, அதற்குள் தங்கைகள் மச்சான்கள் அவனுக்கு வாழ்த்து சொல்ல வர, நேரம் அவர்களுடனேயே கடந்தது..  மணி பனிரெண்டை நெருங்க அனைவரும் அவர்களுக்கு உள்ள அறைகளில் படுத்துக் கொள்ள மற்றவர்கள் ஹாலில்… பிள்ளைகள் அனைவரும் மாடி ஹாலில் ஒன்றாக படுத்திருக்க தர்ஷினியும் சென்று அவர்களோடு படுத்துக் கொண்டாள்..

 

தன் தந்தையிடம் விசயத்தை சொன்னவன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மாடிக்கு வர, மனைவியை காணாமல் தேடியவன்,

 

 பச்சமொளகா ரொம்ப கோபமா இருக்காளோ..??”

 

தன் உடை மாற்றி மனைவியை கைகளில் ஏந்தியபடி பால்கனி ஊஞ்சலுக்கு சென்று தன் மடியில் அமர்த்திக் கொண்டவன் நறுக்கென மூடியிருந்த மனைவியின் கண்களில் முத்தமிட்டான்..

 

லட்டுமா.. செல்லம் .. அம்மு நீ தூங்கல தெரியும் கண்ண முழிச்சுப் பார்… வார்த்தைக்கு ஒரு முத்தமிட கண் விழித்தவள் அவன் தோளில் நறுக்கென ஒரு கடி வைத்திருந்தாள்..

 

ஸ்ஸ்ஸ்ஸ் அடிப்பாவி.. மாமா எவ்ளோ ஆசையா முத்தம் கொடுத்தா இப்படி கடிக்கிறியே உன்னை…!!!” அவளை இன்னும் தன் கைகளுக்குள் இறுக்கி கொண்டு வர,

 

அவனை உதறியவள் நீங்க என்கிட்ட பேசாதிங்க..??”

 

ம்ம்..” அவன் இன்னும் அவளுள் மூழ்க..

 

மாமா… மாமா..” அவனை சுயநினைவுக்கு கொண்டு வர முயன்றவள் தோற்று கொஞ்சம் கொஞ்சமாக அவன் கட்டுக்குள் சென்று கொண்டிருந்தாள்.. அவனுக்கு பிடித்த இடமான டாட்டூவில் தன் முகத்தை புதைத்திருக்க..

 

ஸ்ஸ்ஸ்ஸ் மாமா நாம எங்க உட்கார்ந்திருக்கோம்… கண்முழிச்சு பாருங்க..

 

தன் இதழால் அவளை பேசவிடாமல் செய்தவன் சட்டென தன் கைகளில் ஏந்தியிருந்தான்… பிள்ளைகளின் தூக்கம் கெடாமல் தங்கள் பெட்ரூமிற்கு கொண்டு வந்திருக்க என்றும் போல இன்றும் அவன் காதலில் மோகத்தில் திளைத்தாள்..நேரங்கள் கடந்து கடிகார முள்ளின் ஓசைக்கு போட்டியாக சுந்தரின் கொஞ்சல் மொழிகளும், முத்த சத்தமும் கேட்க

 

 அவன் மனசாட்சியோ இந்த சோன முத்தனோட இதுதான் பெரிய தொல்லை.. பெரிய ரொமான்ஸ் மன்னன்னு நினைப்பு..அவனை கேலி செய்ய அதை கண்டு கொள்ளாமல் தன் மனைவியிடம் மூழ்கியிருந்தான்..

 

வெகுநேரம் கழித்து லட்டுமா… மாமா மேல கோபமா உன்கிட்ட முதல்லயே சொல்லலைன்னு..??”

 

ம்ம்ம்ம்..

 

எல்லாரும் இருந்தாங்கடி அதான் சொல்ல முடியல.. என்னை பாரு உனக்கு என்னைப்பத்தி தெரியாதா..??”

 

அவன் வாயில் தன் கைவைத்து மூடியவள் மாமா சும்மா சொன்னேன்.. சும்மா விளையாட்டுக்கு..

 

தெரியும்டி அம்மு… உன்னைப்பத்தி எனக்கு தெரியாதா… அவன் அந்த விருதை பற்றி சொல்லிக் கொண்டிருக்க எப்போதும் போல கணவனின் முன்னேற்றத்தில் அவளுக்கு பெருமைதான்.. இத்தனை வருடங்களில் தன் மனைவியின் ஒத்துழைப்பும் அவள் காதலும் இல்லையென்றால் அவனால் இவ்வளவு முன்னேறியிருக்க முடியுமா..!!

 

தன் குடும்பத்தை அவள் குடும்பமாய் ஏற்றவள் இப்போது தன் தங்கைகள் தன்னைவிட தன் மனைவியிடம்தான் அதிக நெருக்கம்.. என்ன ஒரு சின்ன விசயமாயிருந்தாலும் அவளுக்கு தான் முதலில் போன் வரும்.. அவர்களின் திருமண நாள்.. குழந்தைகளின் பிறந்தநாள் என ஒவ்வொன்றும் தர்ஷினிக்கு தெரியும்..

 

மாமா பெரிய அண்ணி சொன்னாங்க நம்ம அம்மு இன்னும் ஒரு வருசத்துல பெரிய பொண்ணாயிருவாளாம்..

 

 பொண்ணா பிறந்தா பெரிய பொண்ணு ஆகத்தானே வேணும்..அவளுக்கும் 12 வயசாகப் போகுதுதானே..

 

அதுல்ல மாமா நாம ஒரு தரம் அங்க அம்மா வீட்டுக்கு போய் சாமி கும்பிட்டு வருவமோ..??”

 

ஏனோ இந்த இரண்டு மூன்று வருடங்களாக ஊருக்கு செல்ல முடிவதில்லை.. அவனுடைய வேலை, பிள்ளைகளின் படிப்பு என தடைப்பட்டிருக்க.. மனைவியை இன்னும் நெருங்கியவன் ஏன் அம்மு அவங்கள பார்க்கனும் போல இருக்கா..??”ஏனோ அவனுக்கும் அந்த வீட்டில் அவர்கள் வாழ்வது போல ஒரு பிரமை..

 

ஆமா மாமா.. ரெண்டு மூனு நாளா அவங்க நியாபகமாத்தான் இருக்கு..போவமா ப்ளிஸ்..” அவனை கெஞ்சுவது போல பார்க்க.. தனக்காக எல்லாம் மறந்து தன்னோடு இருப்பவளுக்கு இதை கூட செய்ய முடியாமல் போனதில் வருத்தம்தான்…

 

அவள் நெற்றியில் முட்டியவன் ஏய் லூசு இதுக்கு கெஞ்சனுமா … வாங்கன்னா வந்துட போறேன்.. நாளைக்கு சாயங்காலமே போவோம் அம்மு… அப்பத்தாகிட்ட பேசி எல்லா ஏற்பாடும் செஞ்சுறேன்..

 

கணவனுக்காக எல்லாம் விட்டுக் கொடுக்கும் மனைவி.. மனைவியின் சிறு முகவாடலை கூட பொறுத்து கொள்ளாத கணவன்.. இங்கு இருவருமே வரம் வாங்கி வந்தவர்கள் தான்.. இவர்கள் வாழ்வு என்றும் சிறப்பாக இருக்கும்..

 

ஐந்து அறிவு படைத்த மிருகங்கள் கூட கூட்டமாகத்தான் வாழ்கின்றன.. ஆனால் ஆறு அறிவு படைத்த நாம்தான் கூட்டு குடும்பமாக இருந்த வாழ்க்கையை விட்டு இப்போது தனித் தனி வாழ்க்கைக்கு சென்று கொண்டிருக்கிறோம்.. தான் மட்டும் சுயமாக முன்னேறிக் கொண்டே செல்லாமல் தன்னை சுற்றியுள்ளவர்களையும் அனுசரித்து விட்டுக் கொடுத்து அவர்களையும் முன்னேற்றி நாமும் முன்னேறினால் ஒற்றுமை என்னும் கூட்டுக்குடும்பம் உடையாமல் இருக்கும்… நமக்கு பலமே ஒற்றுமைதான்.. அதை சில சில வேற்றுமை கருத்தால் உடையாமல் பார்த்து சுந்தரை போல தர்ஷினி போல வாழ்க்கையில் முன்னேறுவோம்…

 

               ஒற்றுமையே பலம்…

 

             வாழ்க வளமுடன்… முற்றும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!