Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 30 2

 

 

 

தங்கையின் கூற்றும் சரியாகப் படவே , அவனது அப்பா அம்மாவுடன் இன்னும் சிலரும் சென்னைக்கு கிளம்புவும் , பாட்டித் தாத்தா , சித்தி சித்தப்பாவுடன் இன்னும் இரண்டு நாளில் கிளம்ப முடிவெடுத்து சீமந்த விழாவை சிறப்பாக செய்த சந்தோஷத்தில் உறவினர்களை வழியனுப்பி வைத்து , இரவு கவிழும் நேரம் வீட்டு முன் இருந்த தோட்டத்தில் தாத்தாவுடன் அமர்ந்திருந்த பாட்டியிடம் வந்த விக்ரம் , அவர் அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியின் அருகில் அமர்ந்துக் கொண்டு ,



Advertisement

 

“பாட்டி … உங்க பேத்திய நாமளே சென்னைக்கு அழைச்சிட்டுப் போகலாமா … ” எனவும் சிரித்தவர் ,

 

Advertisement

“அது சம்பிரதாயம் இல்லையேப்பா … அது மட்டுமில்ல வித்யாவும் பிள்ளைப் பெத்துட்டா … எப்படியும் இந்த வாரத்துலக் கூட நம்ம வாரிசும் வந்துருவாக … ஒரு வீட்ல ரெண்டு மூணு தொட்டில் போடக்கூடாது… ”

Advertisement

 

“பாட்டி அது எல்லாம் சைன்ஸ் குழந்தைப் பெத்த பொண்ணுங்க உடல் பலகீனமா இருக்கும் … குழந்தைங்க நிறைய இருந்தா ஒருத்தருக்கொருத்தர் இன்ஃபங்ஷன் ஆகும் இது தான் காரணம்…. அதனால அந்தக் காலத்துல அப்படி சொல்லியிருக்கலாம் ….” என்றவன் மனதில் ,

 

Advertisement

“சாஸ்திரம் , சடங்கு , பண்பாடு… கலாச்சாரம்னு …. ஒருத்திய நாலு வருஷமா பேச விடாம பண்ணியாச்சே பாட்டி ….” தலையை உலுக்கி கொண்டவன் ,

 

“இப்ப அப்படியில்லயே நம்ம வசதிக்கேத்தப் போல நம்மோட சூழ்நிலைகள அமைச்சிக்கலாமே …. ஒன்னா ஒரே இடத்துல இருக்கிறது  உங்க மனசுக்கு சரியாத்தோணலனா .. நாம பீச் ரோட்ல இருக்க நம்ம ஃபார்ம் ஹவுஸ்ல இருப்போமா பாட்டி ப்ளீஸ்….”

 

“அது… எப்படியா” எனப் பேச வந்தவரை , விக்ரமராஜா,

 

“சங்கரி … இரு பேரன் என்ன சொல்றான் கேளு… உனக்குத் தெரியுமா நான் இரண்டு மடங்கு எங்கப்பா சொத்த உயர்த்தினேன்னா என் பசங்க நாலு மடங்கு தான் … ஆனா என் பேரன் … தொழில பார்க்க ஆரம்பிச்சதும் அது எத்தனை மடங்கு உயர்ந்திருக்குத் தெரியுமா …

 

அவன் நம்மகிட்ட… எந்த விஷயத்தையும்

 

சொல்லணும்னோ கேட்டு செய்யணும்னோ அவசியமில்ல …. ஆனா இப்படி கேட்கிறான்னா அவன் நம்ம மேல வச்சுருக்கிற பாசமும் மரியாதையும் தான் … அப்பா அம்மா பேச்சையே கேட்காம போற பிள்ளைங்க இருக்கிற இந்தக் காலத்துல இப்பவும் தாத்தா பாட்டினு நம்மள மதிச்சுக் கேட்கும்போது… யோசி சங்கரி… உலகத்தையே சுத்தி வரான் என் பேரன் … பாத்தயில்ல குமரில எவ்வளவு பெரிய கட்டிடம் … நல்லது கெட்டது தெரியாத பிள்ளையில்ல… அதனால எதுவும் பேசாத… ”

 

“தாத்தா…. தேங்க்யூ …. தேங்க்யூட் வரி மச்… பாட்டி நம்ம கீதுவுக்கு… இங்கயிருந்து நாம கொஞ்ச பேரு அங்க போய் வளைகாப்பு பண்ணிட்டு சித்திய மட்டும் தான விட்டு வந்தோம்…. அது போல நினைச்சிக்கோங்க…. உங்க கிட்ட கேட்டு முடிவு பண்ணனும்னு நான் இன்னும் மாமா கிட்ட கூட சொல்லல….. பாட்டி ரிதுவுக்கு அம்மா இல்லாதப்போ நாம தான அவளப் பார்த்துக்கணும் பாட்டி… அதுவும் நீங்க தானே அவளப் பொறுப்பா பார்த்துக்கிறீங்க… அம்மா வித்யா குழந்தையப் பார்த்துக்கட்டும்…  நீங்க உங்க பேரனோட பிள்ளைங்கள பார்த்துக்கங்க….”

 

அப்போதுதான் ஞாபகம் வந்தவராக … “ஆமாம் ஆமாம் உன் பிள்ளைங்கள நான் தான் பார்க்கணும் …. சரி போய் பேத்தியப் பார்த்துட்டு வா…. ராணிகிட்ட  எல்லாம் சொல்லியிருக்கேன்…” என்று அவனை அனுப்பினார்.

 

ஃபோனில் விஸ்வனாதனுக்கும் அரவிந்துக்கும் தகவல் அளித்தவன் , பிரதாப்பை ஆற்றங்கரை வரச் சொன்னான். அவனும் அங்கு கிளம்பி வர , மரத்தடி பிள்ளையார்  இருக்கும் திண்டில் கைகளை கட்டிக் கொண்டு பிள்ளையாரையேப் பார்த்து அமர்ந்திருந்தவனை கண்ட பிரதாப்,

 

” என்ன சகல இங்க வரச் சொன்ன … ”

 

“இல்ல லெட்சுமி … ” என்று ஆரம்பித்த விக்ரமன் அருகிலேயே அமர்ந்தவன் ,

 

“ஷ் …. இன்னார்க்கு இன்னார்னு அவர் போட்டத எப்படி மாத்த முடியும் … ” என்ற பிரதாப் மனதினுள் ,

 

” உன்னைய சுத்தி வந்த புள்ளைய தப்பா என்னைய தான் பார்க்கிறானு நினைச்சது என் தப்பாச்சே… “எண்ணமிட்டுக் கொண்டே ,

 

“அமுதலெட்சுமி தான் எனக்கு மனைவினு கடவுள் முடி போட்ட பிறகு…. எப்படிடா… நீ எதுவும் மனசில வச்சுருக்க மாட்ட… ஆனா நான் வச்சுருப்பேனோனு உனக்கு உறுத்த போய் தான் இப்ப கூப்பிட்டியா ….”

 

“ச ..ச… அப்படியில்லடா உன்னைய எனக்குத் தெரியாதா … நான் அதுக்கு கூப்பிடல… ”

 

” பின்ன எதுக்கு கூப்பிட்டியோ … ஒன்னே ஒன்னு சொல்றேன்…. நாம ரெண்டு பேரும் ஒரு வாரம் தான் முன்ன பின்ன தான் பொறந்தோம்னு கனிப் பாட்டி சொல்வாங்க , ஏன்னா தாத்தா வழியில என்னையப் பார்க்க வரதா,… இல்ல அவங்க அண்ணன் பேரன்னு உன்னையப் பார்க்க வரதான்னு ஒரு பெரிய சண்டையே அவங்களுக்குள்ள நடந்துச்சாம்….” எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே திலீபன் பைக்கில் வந்திறங்க … அவனைக் கண்ட பிரதாப் புன்னகையுடன் ,

 

“இது எதுக்குச் சொல்றேன்னா … அண்ணன் மனைவி அம்மா மாதிரினா ,தம்பி மனைவி தங்கச்சி மாதிரி….இனி அது பத்தியேப் பேச வேண்டாம்… அங்கப் பார்… நம்ம வீட்டுக்கு தேவதைங்கள அனுப்பி வச்சவனோட அண்ணன் … அவனுக்குத்தான் டா நாம தேங்க்ஸ் சொல்லணும்… ஏன்னா அவங்க சித்தப்பாமார்கிட்ட நமக்கு கியாரண்டி கொடுத்துருக்கான் டா.” எனச் சிரிக்க ,அதற்குள் அருகில் வந்த திலீபன்,

 

“சகலங்க ரெண்டு பேரும் என்னடா பிளான் பண்றீங்க…. என் பொண்டாட்டி ஊருக்கு கிளம்பிட்டா …. பார்ட்டி எதுவும் இருக்குனா சொல்லு ….ஐ ம் ரெடி….” திலீபன் முதுகில் விளையாட்டாக தட்டிய விக்ரம் ,

 

” பிரதாப் நீ கிளம்பு… பார்ட்டி வேணுமாம் பார்ட்டி நான் பார்த்துகிறேன் இவன ….” என அவனை அனுப்பி விட , திலீபன் ,

 

“என்னடா அதிசயம் இது… வேட்டி மேல இவ்வளவு பிரியம் வந்துருச்சா … அஞ்சு நிமிஷத்துக்கு மேல கட்ட மாட்ட … சொல்றா வீட்டுக்கு வராம எதுக்கு இங்க வரச் சொன்ன ….”

 

“ம்…. தேங்க்ஸ் சொல்லத்தான்…. ”

 

“தேங்க்ஸ் .. புரியலடா”

 

“உனக்குப் புரியாது… வா நான் வரும் போது நடந்தே வந்தேன்… அதான் வரச் சொன்னேன் …” என்றவன் பைக்கில் வந்த திலீபனின் பின்புறம் ஏறிக் கொண்டான். மனதில் சொல்லெணா நிம்மதி … மறுபடியும் ஒரு ‘தேங்க்ஸ் மச்சானை’ திலீபனிடம் சத்தமாக உச்சரிக்க …

 

“போடா டேய்…. தங்கச்சி பிள்ளையப் பார்க்கணும்னு உன் தங்கச்சி கிளம்பிட்டா … நாளைக்கு தூத்துக்குடி ஹார்பர் ல வேலையிருக்கு அதை முடிச்சிட்டு நானும் சென்னைக் கிளம்பணும் .. நீ எப்படி ” என்று பேசிக் கொண்டே வந்த திலீபன் அவர்கள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான்.

 

கனிப் பாட்டி ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்தவர் ,

 

“பேரா ரொம்பவேகம் தான்….  உங்க தாத்தா அதான் எங்கண்ணன் பொண்டாட்டிய முதல் நாள் அனுப்பிட்டு அடுத்த நாள் கிளம்பி பார்க்கப் போய்ட்டாரு … நீங்க காலையில தாய் வீட்டுக்கு அனுப்பிட்டு , இராவுலயே இங்க வந்து நிக்கிறிகளே…. அவவுக எப்பவும் சொல்ற மாதிரி நீங்க பதினாறு அடிதான் பாயுறீக போல ” எனவும் மெல்லியப் புன்னகையோடு அந்தப் பேச்சை ரசித்தவனிடம் வந்த ராணி ,

 

“மருமகனே  அம்முவ இடுப்புக்கு சுடு தண்ணி ஊத்திட்டு படுக்கச் சொன்னேன்…இந்தாங்க இதையும் சாப்பிடச் சொல்லுங்க , இருந்தப் பரபரப்புல சரியாவே சாப்பிடல….” என சாப்பாடு தட்டையும் தந்து விட்டார்.

 

தட்டை வாங்கிக் கொண்டு அறைக்கு வர , அவன் மனைவி புடவையைக் கூட மாற்றாமல் ஜன்னல் வழியாக வெளியேப் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே வந்தது கணவன் எனத் தெரியாமல் ,

 

“இதோ குளிச்சிட்டு வாரேன் பெரியம்மா “என்றவாறே திரும்ப , நெருக்கத்தில் கைகளைக் கட்டிக் கொண்டு தன்னையேப் பார்த்துக் கொண்டிருந்த கணவனைக் கண்டவள் கண்கள் பளிச்சிட மிகவும் நெருங்கி வந்தவள் ,

 

” வந்துட்டீங்களா … கார் சத்தமே கேட்கல…” என அவன் கட்டியிருந்த கைகளுக்குள் தன் கையை கோர்த்து தோளில் சாய்ந்து கொள்ள , அவளை விலக்கியவன் , தன் சட்டைப் பையிலிருந்து ஒரு பெரிய டெய்ரி மில்க் சாக்லேட்டை எடுத்துப் பிரிக்க , அதைப் பார்த்த வரு ,

 

“விக்…கி… ” என புன்னகைத்தவள், அது உருகிய நிலையில் இருக்கவும் ,

 

“நீயும் ஃபிரிட்ஜ்ல வைக்கலயா.. பாரு மெல்ட் … ” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே , அதை அந்த அழகு கன்னங்களில் பூசியவன் , அதைத் தன் நாவால் சுவைக்க ஆரம்பித்தான்.

 

கன்னத்தில் சாக்லேட் இருந்த சுவடு இல்லாமல் போக , உதட்டில் இருந்ததை இவன் உண்டானா , அவள் உண்டாளாத் தெரியாது…

 

‘வான் வழங்கும் அமுத கலசம் வாய் வழியே ததும்பி ததும்பி வழியிதோ ‘

 

….மெல்ல நிமிர்ந்தவன் , அவளைக் டிரஸ்ஸிங் டேபிள் நிறுத்தியவன் , பின்னிருந்து அணைத்து , அவளது சிவத்த கன்னங்களை தொட்டுக் காட்டியவன் ,

 

“இந்த புஸ் புஸ்னு இருக்கிற சாஃப்ட்டான பன் கன்னத்த தொட்டப்ப அன்னைக்கும் இப்படித்தான் சாப்பிடத் தோணுச்சு … ஆனா அப்படி நினைக்கிறதே தப்புனு என்னை நானே திட்டிக்கிட்டேன் …”

 

‘ என்ன சொல்கிறான்…’இவன் எனக் கண்ணாடியிலயே அவன் முகம் பார்க்க ,

 

” எப்பனு யோசிக்கிறியா … மை டியர் பம்கின்…” எனவும் ஒளிர்ந்த அவள் கண்கள் , மறுநொடி தன்னுடைய இன்றைய உடல் பருமனைக் கிண்டல் செய்கிறானோ … என எண்ணும் போதே …. அவன் கைககள் புடவை இடைவெளியில் கைவிட்டு  வயிற்றின் மீது தடவிக் கொண்டே ,

 

“நான் சொன்னது போல ஒருத்தர் இல்ல என் பிள்ளைங்க ரெண்டு பேர வயித்துக்குள்ள வச்சிட்டு என் கிட்ட மறைச்சிட்ட இல்ல…..”

 

கண்ணீர் குளம் கட்ட , எதிர்பார்ப்புகளோடு

 

“யா…. யார் .. சொன்னா விக்கி ….”

 

“யார் சொல்லணும் , பச்சைக் கலரு ஜிங்குச்சா…. உன் கண் சொல்லுதே….. இந்தக் கண் எத்தனை நாள் சொல்லுச்சு … நான் தான் புரிஞ்சுக்காம இருந்துட்டேன்… அப்படித்தானே பம்கின்….. ”

 

“விக்… கீ ….” என அவனது ‘ பச்சைக் கலரு ஜிங்குச்சாவிலயே… ‘விக்ரமை உணர்ந்துக் கொண்டவள் முகம் மலர திரும்ப ….”

 

“ம்ஹூம் விக்கி இல்ல… உன்னோட விக்ஸ்டப்பா …..” எனப் புன்னகைக்க , அப்படியே அவன் பின்புறம் சென்று , அவன் முதுகோடு சாய்ந்துக் கொண்டவள் , அவன் முதுகில் முத்தங்களைப் பதிக்க , தாயோடு சேர்ந்து அவள் இரட்டைக் குழந்தைகளும் தந்தையை உதைத்து தங்கள் இருப்பை ஆதிக்கு உணர்த்தினர்.

 

நீயும் நானும் சேர்ந்ததற்கு

 

காதல் தானே காரணம்..

 

காதல் இங்கு இல்லை என்றால்

வாழ்வில் ஏது தோரணம்…

தூவும் …..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!