Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadai 32 2

 

அவள் வயதுக்கு வந்த போதும் , ஒரு மருத்துவராக அது ஓர் உடலியல் மாற்றம் என்று விளக்கம் தந்து வட இந்திய வேலை செய்யும் பெண்ணை வைத்து சத்துள்ள உணவுகளை கொடுக்கச் சொன்னார் .எனவே மகளின் இந்தக் கோலம் பெற்றத் தகப்பனாக அவருக்கு பலக் கடமைகளையும் ஞாபகப்படுத்த பார்த்தது பார்த்தபடி நின்றார்.

 

அவரது அமையான நிலையைக் கண்டதும் கனிப் பாட்டி ,



Advertisement

 

“என்னய்யா உன் பொண்டாட்டி நியாபகத்துக்கு வாறாளா … அவளையும் இப்படி சீலைக் கட்டி முதன் முதல்லப் பார்த்திருந்தா எனக்கும் கொஞ்சமாவது மனசு ஒட்டியிருக்கும் … அவள உங்கப்பாரு , “உன் மவன் பின்னாடி சுத்துற பொண்ணப் பாருனு காட்டினப்ப ,ஆம்பள புள்ள கணக்கா குழாயும் சட்டையுமில்ல போட்டிருந்தா…..”

 

Advertisement

வேறு பேச்சுக்கள் வந்து பிரச்சினையாகி விடுமோ என்று பயந்த சிவனாதன் ,

Advertisement

 

“ம்மா பொண்ணழைக்கப் போகணும் … நீ மண்டபத்துக்கு வந்துரு….” என ,புரிந்துக் கொண்ட கனி ,

 

Advertisement

“ஏலே உன் தம்பிய ஒன்னும் சொல்லிறமாட்டேன் … பொட்டப் புள்ளைய பெத்துக் கொடுத்துருக்கான்…எம்பேத்தி அழகப்பார்த்து இந்த ஊரே கண்ணுப் போடுது … அவளப் பெத்ததுக்காக சும்மா விடுறேன்…. ” எனவும் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

 

வருவுக்கு புன்னகை வந்தாலும் , “ஓ…. பாட்டி ட்ரஸ்க்கு இவ்வளவு இம்பார்டன்ஸ் தரப் போய் தான் அம்மா  அப்ராட் போனாக்கூட சேலையிலயே இருந்தாங்களா… என்ன நடக்க தான் கஷ்டமாயிருக்கு ….” என எண்ணியவள் , ஒரு கையில் கிஃப்ட் பார்சலைப் பிடித்துக் கொண்டே ,

 

“அம்மு என் பக்கத்துலயே இரு … கீழ விழாம பிடிச்சிக்கோ … ” எனப் பேசிக் கொண்டே பெண்ணழைக்கச் சென்றார்கள்.

 

வருதான் சங்கீதாகையைப் பிடித்துக் கொண்டு அழைத்து வந்தாள். பார்த்த விக்ரம் அசந்து தான் விட்டான் , இன்றும் அவள் பச்சையிலயே வரவும் அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

 

” பச்சக் கலரு ஜிங்குச்சா…” எனச் சொல்லிக் கொண்டான். மண்டம் வந்து பிரதாப்பைக் காண , அவன் வருவை ஒரு புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவன் மட்டும் பார்க்கவில்லை , அருகிருந்த ஆற்றினுள்ளேயே  சரி செய்த லாரியை நிறுத்தி கழுவிக் கொண்டிருந்த அந்த நால்வரும் கூடப் பார்த்திருந்தனர்.

 

இப்போது மாப்பிள்ளையை விக்ரம் கைப் பிடித்து அழைத்து வர , மணப்பெண்ணின் அக்கா தங்கைள் மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்கும் வைபவம் .

 

வித்யா அழகாக வந்து ஆரத்தி எடுக்க … ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பரிசு கொடுக்க வேண்டும். அருகிலிருந்த அரவிந்த் ஒரு பார்சலை எடுத்து திலீபன் கையில் தர , அதை வித்யாவின் கையில் தந்தான் திலீபன். மீதம் இருந்த நால்வருக்கும் தந்து முடித்து மாப்பிள்ளை உள்ளே சென்று விட , அரவிந்த் வித்யாவிடம் கண்ணசைவில் ‘பார்’என்பதாகச் சொல்லவும் , வேகமாக பிரித்தாள்.பிரித்தவள் மகிழ்ச்சியோடு அரவிந்தை நோக்க , அருகில் இருந்த லதா ,

 

“உங்கத்தான் உனக்கு ஃபோன் வாங்கி தந்துட்டாரா …. எல்லாம் ப்ரீக் குட்டி வேலையா தான் இருக்கும்… காலேஜ் போகும் போது உபயோகிச்சுக்கோ…. ” என்றவர் நகர்ந்து விட்டார்.

 

அழகாக கன்னக்குழி விழ சிரித்தவன் , கண்களை மூடித் திறந்து , சத்தமில்லாமல் … “ஐ லவ் யூ” என வாயசைத்து விட்டுச் சென்றான்.

 

விக்ரமராஜாவும் சங்கரியும் மங்கல நாண் எடுத்துக் கொடுக்க , திலீப் குமார் , சங்கீதப் பிரியாவின் கழுத்தில் இரண்டு முடிச்சுப் போட , ராணியும் பரணியும் சொல்லிக் கொடுத்ததுப் போல் அண்ணன் மனைவிக்கு மூன்றாம் முடிச்சை அமிர்தவர்ஷினி மகிழ்ச்சியோடு போட்டு விட்டாள்.

 

அதன் பிறகு மற்றவர்கள் அவரவர் வேலைகளைப் பார்க்க ,விக்ரமைத் தேட ஆரம்பித்து விட்டாள். ராணிக்கூட புடவையை மாற்றிக் கொள் என ,விக்ரமை பார்த்துப் பேசி , அவனிடம் இந்தப் புடவை நீ தேர்ந்தெடுத்தது என்று சொல்ல ஆசைப்பட்டு மறுத்து விட்டாள்.

 

இவள் விக்ரமைத் தேடிப் போகும் போதெல்லாம் பிரதாப் குறுக்கே குறுக்கே வர … “இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை” என்ற எண்ணத்திற்கு வந்தவள் கடுப்பாகி … அவன் உடனிருந்தாலும் பரவாயில்லை என மண்டபம் வெளியே யாரையோ வழியனுப்பி வைத்தவன் அருகில் பூனை நடைப் போட்டு வந்தாள்.

 

“இந்தச் சேலைக் கட்டிட்டு எல்லாரும் எப்படி நடக்கிறாங்க …. நான் அங்கப் போறதுக்குள்ள விக்கி போயிறக்கூடாதே …. அதுக்கு மேல நான் விழுந்துரக்கூடாதே … ”

 

அதே நேரம் பிரதாப்பின் அப்பா அவனிடம் ஏதோ சொல்லவும் கிளம்பப் போனவன் வரு வருவதைக் கண்டு நின்று விட்டான்.

 

விக்ரம் அருகில் வந்தவளுக்கு வாய்பூட்டுப் போட்டுக் கொண்டது … என்ன முயன்றும் அவன் கண்களைப் பார்க்க முடியவில்லை … கோடைக்காலம் வேறு …சும்மாவே வியர்க்கும் … இப்போது பட்டுப்புடவை மகிமையால் கூடக் கொஞ்சம் வியர்க்க … தயக்கத்தில் இதயம் படபடப்பாக உணர , விழிகளை தாழ்த்தியவள் ,

 

“கொஞ்சம் தனியாப் பேசணும் …” எனும் போது விக்ரம் நகர முயல … அந்த கணபதிக்கிட்ட போய் பேசலாம் … ” எனப் பார்வையை உயர்த்தாமலேயே நாணத்தோடு சொல்லியவள்.. மெதுவாக அந்தப் பக்கமாக நடக்க ஆரம்பித்தாள்.

 

பிரதாப் விக்ரமைப்பார்க்க , அவன் சிரித்துக் கொண்டே ,

 

“சகல … கலக்குறப் போ…” என நகரப் போக , பிரதாப்பின் தந்தை மறுபடி அவனருகில் வந்து ,

 

“சீக்கிரம் வண்டி எடுப்பா … நான் மூணு மணிக்கெல்லாம் வாரேன்னு சொல்லியிருக்கேன்…” இப்போது பிரதாப்புக்கு மிகவும் தர்மசங்கடமான நிலை ,விக்ரமைப் பார்க்க… அவனும் யோசிப்பது புரிய , ஏதோ சொல்ல வருவதற்குள் பிரதாப்பை அழைத்துக் கொண்டு சென்றார்.

 

விக்ரமிற்கும் வேலைகள் இருக்க மண்டபத்தினுள் சென்று விட்டான். அவனது நினைப்பு அவன் காதலி அவனிடம் பேசியிருக்கிறாள் பிரதாப் பார்த்துக் கொள்வான் என்பதாக தான் இருந்தது.

 

மரத்தடி திண்டில் பிள்ளையாரைப் பார்த்த வண்ணம் ,அந்த பரிசுப் பெட்டியை தன் அருகிலேயே வைத்திருந்தவள் விக்ரமிற்காக காத்திருந்தாள்.

 

“சீக்கிரம் வா விக்கி … தேட ஆரம்பிச்சிருவாங்க… கணபதி பப்பா … ” என விநாயகரைப் பார்த்து

 

வருவையேப் பார்த்துக் கொண்டிருந்த அந்த வேற்று மொழி நபர்களில் ஒருவன் அவள் தனியாக இருப்பதைப் பார்த்து அருகில் வந்து ,

 

“பெஹன்ஜி… ஆப்…” என இந்தியில் பேச ஆரம்பித்தான்.

 

வருவும் , “ஜி…. பையா ” என பேச ஆரம்பித்தாள். அவளுக்கு அவர்களோடு அன்று பேசியது எல்லாம் நியாபகம் இல்லை. அன்றும் விக்ரமின் நினைவு தான் , இன்றும் அவனது நினைவே.

 

இந்தியில் பெஹன் என்பது சகோதரியை குறிக்கும் .ஜி என்பது ஒரு மரியாதையான சொல் (இந்தி கிளாஸ் எடுக்கிறோனோ …) .ஒருவர் ஒரு பெண்ணிடம் இப்படி மரியாதையாக ஆரம்பித்துப் பேசினாலே யாரும் பதில் பேசுவோம் … வருவோ சொல்லவே வேண்டாம் அனைவரோடும் சகஜமாகப் பேசக் கூடியவள், அதுவும் அவளுக்கு நன்குத் தெரிந்த ஒரு மொழியில் பேசவும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

அதற்குள் அமுதா அவளைத் தேட ஆரம்பித்து வெளியே வந்துக் கொண்டிருக்க , விக்ரமும் மண்டபம் விட்டு வெளியே வந்தவன் வருவிடம் ஒருவன் பேசிக் கொண்டிருப்பதும்… மற்ற மூவரும் அவளைப் பார்த்துக் கொண்டே அருகில் வருவதும் தெரிந்தது.

 

ஆண்களின் பார்வை அறிந்தவனாதலால் அவன் அவர்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான்.

 

” அவன் பார்க்கிற பார்வையே சரியில்ல … சகல வெளியப் போறத சொன்னானா இல்லையா…..” அவன் அருகில் வந்ததைக் கவனித்த வரு முகம் மலர திரும்ப , விக்ரமைக் கண்டதும் அவர்கள் பின் வாங்க ஆரம்பித்தார்கள்.

 

“விக்கி அவங்க ஹிந்தில சாப்பிட ஹோட்டல் விசாரிச்சுட்டு இருந்தாங்க … நான் தான் எங்கண்ணன் கல்யாணத்துக்கு கோவில்ல அன்னதானம் போடுறோம் போய் சாப்பிடுங்க சொல்லிட்டு இருந்தேன் …” என வரு கூறவும், அவர்கள் பக்கம் திரும்பியவன் , அவனும் இந்தியிலயே பதிலளித்து அவர்களை அனுப்பி வைத்தான். அவள் பக்கம் திரும்பியவன் ,

 

“பம்கின்…சாரி சாரி லெட்சுமி … அவனுங்க பார்வையே சரியில்ல அவங்ககிட்டப் போய் பேசிட்டு இருக்க… ”

 

“அப்படியா விக்கி… ஆமா நீயும் அழகா இந்திப் பேசுற … ”

 

“ம்… மும்பய்லதான் என்னோட ஹையர் ஸ்டடிஸ் … இப்ப என் வொர்க்கும் அங்க தான்…”

 

” என்ன அப்படியா விக்கி… இனி பேரெல்லாம் சொல்லாத …அத்தான்னு  சொல்லு … ஆமா இது என்ன லவ்வர்க்கு பிடிக்கும்னா பூக் கூட பச்சைல தான் வைப்பியா … நானும் வந்ததுலருந்து பார்க்கிறேன் … ஒரே பச்சைக் கலரு ஜிங்குச்சா வா இருக்கு … ” என சிரித்தவன்,

 

” ரொம்ப மெதுவா வேற நடக்கிற…கால்ல எதுவும் அடிபட்டுருக்கா ….அவன் டவுன் வரைக்கும் போயிருக்கான் சொல்லலயா உன்கிட்ட… “என்றான்.

 

அவனது கேலியில் நாணமுற்றவள், தரையைப் பார்த்துக் கொண்டே ,

 

“அது … அது.. க்ரீன் கலர்ல பூ கிடைக்கல … அது தான் துளசி வச்சுக் கட்டினாங்க பெரியம்மா… சேலைக் கட்டிப் பழக்கமில்ல ….. ஆமா யார் டவுனுக்கு  போயிருக்கா … சரி அதை விடு ….விக்கி … நான்….” எனச் சொல்ல ஆரம்பிக்க ,

 

அதற்குள் அமுதா அருகில் வந்துக் கைப்பிடித்து , ” இங்க என்னடிப் பண்ற அங்க குரூப் போட்டோ எடுக்க உன்னைத் தேடிட்டு இருக்கோம் … வா” என இழுத்துச் சென்றவளை,

 

“அம்மு …” எனச் சொல்ல, அந்த அம்முவாகப்பட்டவளோ ,

 

“ஆதி அத்தான் … உங்களையும் வித்யா தேடிட்டு இருக்கா…. குரூப் போட்டோ எடுக்க … ” எனவும் ,விக்ரமும் ,

 

“ஓ தேங்க்ஸ் … ” என வேகநடை போட்டு முன்னால் சென்று விட்டான்.

 

அதன் பிறகு அவனைச் சந்திக்க அவளுக்கு வாய்ப்பு அன்றிரவு தான் கிடைத்தது. அந்த இரவு அவர்கள் இருவருடைய வாழ்வின் மறக்க இயலா இரவாகிப் போனது.

 

விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்

பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே

இளம் கன்னி உன்னுடன் கூட வா வா…..

தூவும் …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!