Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Iangaathu Veesuthae

சமீராவின் இளங்காத்து விசுதே – 4

அத்தியாயம் 4

 

“தென் ஓகே”

கையிலிருந்த காஃபி கோப்பையை மேசையின்மீது வைத்த விஜய் மீண்டும் ஒருமுறை அந்த கோப்புகளை பார்வைவிட்டபடி கூறினான்.



Advertisement

கல்லூரியின் பழைய கட்டிடங்களின் சீரமைப்பு பற்றியும்

இன்னும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும் அன்று ஃபோர்ட் ஆஃப் ட்ரஸ்டீவுடன் கலந்தாலோசனை நடத்திய விஜய் சில திட்டங்கள் வகுத்தப்பின் நிருவாகசபை கூட்டத்தினை கலைத்தான்.

“வெல் டன் மை பாய்..”

Advertisement

என்று விஜயின் தோளை பாராட்டுதலாய் தட்டினார் ராம்பிரசாத்.அந்நிறுவனத்தின் சீனியர் அட்வைசர்.

Advertisement

“சின்ன வயசுலேந்து உன்னை பார்க்கிறேன்..உன்னோட டேலேன்ட் அப்போலேந்து இப்பவரையும் என்னை வியக்க வைக்குது..உங்க அப்பா உன்னை நினைச்சு பெருமை பேசுவதில் தப்பே இல்லை..”

என்று சிரிப்போடு அவர் மனமார பாராட்ட அதனை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றவன் அவரோடு பேசியபடி அறையை விட்டு வெளியேவர அவர் விடைபெற்று சென்றபின் அந்த தாழ்வாரத்திலே நின்றபடி வெளியே பார்த்தான்.

மெய்ன் பில்டிங்கின் நான்காம் தளத்தில் அமைந்திருக்கும் அவ்விடத்தில் இருந்து பார்த்தால் மொத்த வளாகமும் தெரியும்.

Advertisement

அவன் மனதில் ஏதேதோ நினைவுகள் நெஞ்சத்தில் அலைமோதியது.

‘இந்த கல்லூரியில் தான் எத்தனை எத்தனை நினைவுகள்..என் வாழ்க்கையே புரட்டிப்போட்ட சம்பவங்கள்..எல்லாருக்கும் இனிமையாய் தோன்றும் நினைவுகள் எனக்கு மட்டும் ஏன் நினைக்கவே பிடிக்காத கெட்ட கனவாய் ஆனது.என்ன திறமையிருந்து என்ன பயன்.மறைத்த உண்மையெல்லாம் மீண்டும் வெளிவந்தால் இன்று பாராட்டும் இவர்களிடம் இருக்கும் மதிப்பு தான் இருக்குமா…?மனம் சந்தோஷம் என்ற உணர்வே மறந்தது போல் மரத்துப்போனதே..!இது தானா எனக்கான வாழ்க்கை..?!’

நினைக்க நினைக்க முகம் இன்னும் பாறையென இறுக இலக்கின்றி வெறித்தபடி நின்றான்.

அந்த அமைதி சூழலலை கெடுப்பதுப்போல் தடதடவென யாரோ மாடியெறிவரும் சத்தம் கேட்க எரிச்சலோடு அத்திசையில் பார்த்தான்.

அந்த பிரகஸ்பதி வேறு யாரும் இல்லை நம் சக்தி தான்.

வேகமாக ஓடி வந்தவள் விஜயை பார்த்தும் சடென் பிரேக் போட்டது போல் நின்றுவிட்டாள்.

எதிர்பாராத சந்திப்பில் உள்ளம் குதூகலித்தாலும் அவன் ருதரமூர்த்தியாய் தன்னை முறைப்பதை கண்டு பயமும் எழும்ப,

“குட் மார்னிங்..”

என்றாள் படபடப்பாய்..

உன் குட் மார்னிங் யாருக்கு வேண்டும் என்பதுபோல் அதை அலட்சியப்படுத்தியவன்,

“எதுக்கு இப்படி ஓடி வர..இதென்ன ப்ளே க்ரௌன்டா..? க்ளாஸ் ஹார்ஸில் இங்கென்ன உனக்கு வேலை..?”

கடுமையான குரலில் அவன் கேட்பது சக்தியின் காதில் ஹைடெஸிபலில் ஒலிப்பதுபோல் தோன்ற இதயம் வேகமாய் அடித்துக் கொண்டது.

“சாரி சார்.க்ளாஸிற்கு தான்  போறேன்..லைப்ரரில புக் எடுக்க போயிருந்தேன் சார்..இப்போ லேட் ஆகிடுச்சுனு தான் ஓடி வந்தேன் சார்..”

படுபவ்யமாய் பதிலளித்தவளின் முகத்தில் இருந்த பயத்தை கண்டு அவன் முகம் சற்று இளகியது.

“எந்த டிபார்ட்மெண்ட் நீ..”

“என் பேரு ஸ்ரீசக்தி சார்..பயோ கெமிஸ்ட்ரி..செகென்ட் இயர்..”

அவள் பெயரை கேட்டதும் இறுக்கம் மொத்தமும் தளர முகத்தில் பல்வேறு உணர்ச்சிகள் வந்துப் போனது.

“எந்த ஊரும்மா நீ..”

என்றவன் குரலில் கனிவு வந்திருக்க சக்திக்கே ஆச்சரியமானது.

“ஆரியனல்லூர் சார்..இங்கே ஹாஸ்டலில் இருக்கேன்..”

என்று அவள் கூற உதட்டில் சிநேகமான புன்னகையோடு “ஹோ சரி..கீழ விழுந்த  என்னாவது..இனிமே இப்படி ஓடாத சரியா..க்ளாஸிற்கு போ..” என்றான்.

அவன் புன்னகையில்  தலைக்கால் புரியாமல் குத்தாட்டம் போட துடித்த இதயத்தை கட்டுப்பட்டுத்திக் கொண்டு கனவில் மிதப்பவள் போல் நடந்து வகுப்பரையை அடைந்தவள் தாமதமாக வந்ததற்கு விரிவுரையாளர் திட்டியதை இளிப்போடு பெற்றுக் கொண்டு தன் இடத்தில் சென்று அமர்ந்தாள்.

“ஏன்டி.. இப்படி இளிக்கிற..”

என்று கேட்ட  ஏஞ்சலினை

பார்த்து “ஈஈஈ..” என்று பல்லை காட்ட விநோதமாய் நோக்கியவள் அவளுக்கு மறுபுறம் அமர்ந்திருந்த சந்தியாவிடம் ‘என்னவென்று..’ கேட்க அவளும் தெரியவில்லை என்று தோளை உலுக்கினாள்.

சக்தியோ இவர்களை கவனிக்காமல் கன்னத்தை கையில் தாங்கியபடி புரோஃபஸர் சொற்பொழிவை ஏ.ஆர் ரஹ்மான் இசையை இரசிப்பது போல் லயிப்புடன் கேட்க இவள் சக்தி தானா என்ற சந்தேகமே வந்துவிட்டது சந்தியாவிற்கும் ஏஞ்ஜலினிற்கும்..

அவள் நெற்றியிலும் கழுத்திலும் கைவைத்து பார்த்த சந்தியா,

“நல்லா தானே இருக்க..இல்லை..காத்துக்கருப்பு ஏதும் அடிச்சிருச்சா..”

என்றாள் அக்கறையாய்.. 

“நோ..நோ..இன்னைக்கு நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்..”

அவள் தோளை சுற்றி கைப்போட்டுக் கொண்டவள்,

“ஏன் தெரியுமா..” என்று புருவம் உயர்த்தி கேட்டவள் ஏஞ்ஜலினாவிடம்,

“உனக்கு..??”

என்று கேட்க

“சொல்லித்தொலைடி எருமை..”,

என்று கடிந்தாலும் இருவருக்குமே என்னவென்று அறிய ஆர்வமாய் இருந்தது.

“வரும் போது நான் விஜய் சாரை பார்த்தேனே..”

என்று கண்சிமிட்டி உற்சாகமாய் கூற மற்ற இருவருக்கும் சப்பென்று ஆனது.

“இவ்வளவு தானா..”

“அதுதான் நீ டெய்லியும் சைட் அடிக்கிறியே..இது ஒரு விஷயம்னு பில்ட் அப் கொடுக்குற..”

“ம்ச்…இன்னைக்கு அவரும் என்னை பார்த்தாரே..அப்போ ஸ்பெஷல் தானே…பார்த்து பேசி சிரிக்க கூட செஞ்சாரு தெரியுமா..”

என்று பெருமையாய் சக்தி கூறியதை சந்தேகமாய் பார்த்த சந்தியா,

“அவர்..உன்னை..பார்த்து சிரிச்சாரு..இதை நான் நம்பனும்..”

நம்பாமல் கூற, “அதானே…எப்பவுமே உர்ருனு தான் இருப்பார்..சிரித்தாலே அது அப்பூர்வம்.. அதிலும் உன்னை பார்த்து சிரித்தாரா..நம்புகிறா மாதிரி எதாவது சொல்லுடி…”

என்று ஏஞ்சலினும் அதனை ஆதரித்தாள்.

“ப்ராஸ்மிஸ்டி…என்ன நடந்ததுனா..”

என்று கொசுவத்தி சுருளை சுழலவிட்டு சக்தி சற்று முன் நடந்ததை விவரித்தாள்.

“எல்லாம் ஓகே..பட் கடைசியாக உன்னை பார்த்து பாசமாய் பேசி ஸ்மைல் பண்ணினார்னு சொன்ன பார்த்தியா அது மட்டும்..அது பேரு என்ன..நம்ம ஜூலி சேச்சி கூட சொல்லுமே…”

என்று ஏஞ்சலின் யோசிக்கும்போது,

“ஹாலோஷினேஷன்..”  

என்று சந்தியா எடுத்துக் கொடுக்க,

“ஆங்..அதே தான்..உன் ஹாலோசினேஷன் ஆ இருக்கும்னு தோனுது..”

குறும்பாய் சொன்ன ஏஞ்சலினிற்கு சந்தியா ஹை.ஃபை கொடுக்க இருவரையும் முறைத்தாள் சக்தி.

“அப்போ நம்ப மாட்டீங்க..”

என்றதற்கு “நோ..நெவர்..”

அலட்சியமாய் திரும்பிக் கொள்ள, “நம்புனீங்கனா..இன்னைக்கு என் ட்ரீட்…எப்படி வசதி..”

என்றதும் “உன்னை நம்பாமல் வேற யாரை நம்ப போறோம்..நீ அரிச்சந்திரனின் அஸிஸ்டென்ட் ஆச்சே..”

அந்தர் பல்டி அடித்த நட்புகளின் காதை திருகினாலும் சொன்னது போல் உணவு இடைவேளையில் ட்ரீட் கொடுத்தாள்.

தங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டு புட் கோர்ட்டில்  வந்தமர்ந்ததும் பஃப்ஸை சாப்பிட முற்பட்ட சக்தியின் கையை தட்டிவிட்ட சந்தியா அனைத்தையும் பரப்பி வைத்து தன் அலைபேசியில் க்ளிக் செய்ய ஆங்கில் பார்க்க,

“ஆரம்பிச்சிட்டாடா..”

என்று அலுத்துக் கொண்டாள் ஏஞ்சலின்.

“இதென்னடி பொழப்பு…நிம்மதியா சாப்பிடவிடாமல் இம்ச பண்றா..?!”

“சும்மா இருடி..நாம சாப்பிடுறதை விட அதை ஸ்டேட்டஸில் போட்டு மத்தவங்களை வெறுப்பேற்றுவதே தனி ஜாலி..”

என்றபடி க்ளிக் செய்தவள் அதை அப்லோர்ட் ஆனபின்பே தட்டில் கைவைக்கவிட்டாள்.

ஏதேதோ பேசியபடி உணவை காலி செய்ய பேச்சின் ஊடே தனக்கு ரொம்ப நாளாய் தோன்றும் ஒன்றை கேட்டாள் ஏஞ்சலின்.

“ஏன் சக்தி..விஜய் சார் மேல ரொம்ப க்ரேஸியா இருக்கியே..லவ் பண்றீயா என்ன…?”

என்று கேட்டது தான் தாமதம்,

“என்ன வார்த்தை சொல்லிட்ட..தப்பு..தப்பு..வாய்ல போடு..”

என்று சொன்னபடி தானே அவள் வாய்மேல் ஒன்னு வைக்க,

“ஸ்ஸ்..ஆ..சாத்தானே..ஏன் அடிக்கிற..”

என்றாள் வாயில் கை வைத்தபடி..

“பின்ன விஜய் சார் யாரு..நம்ம காலேஜ் டீன்.. நாமெல்லாம் அவருக்கு கீழே படிக்கும் ஸ்டூடென்ட்ஸ்..அந்த எண்ணம் இல்லாமல் லவ்..கிவ்வுனு..வாட் இஸ் திஸ்ரா…”

என்று ஏகத்திற்கு அலட்டியவளை,

“இந்த நொல்லாட்டை எல்லாம்..அவரை சைட் அடிக்கும் போது தெரியலையோ..”

என்று சந்தியா சரியாக தாக்க அதற்கு அசட்டு வழிந்தாள்.

“ஹிஹிஹி..அது வந்து மச்சி..ம்ம்.. எப்படி சொல்றது..ஆங்..எனக்கு விஜய் சேதுபதினா ரொம்ப ரொம்ப பிடிக்கும்..அவரோடு ஆக்டிங்..ஹார்ட்வொர்க்..ஸ்பீச்.. அசால்ட்டாக கெத்து காட்றதுனு எல்லாமே அவருட்ட பிடிக்கும்..அவர் படமெல்லாம் விசில் அடிச்சு ஆர்பாட்டமா இரசிப்பேன்..ஃபோட்டோஸ்கூட நிறையா கலெக்ட் பண்ணி வச்சிருக்கேன்..அதுக்குன்னு அவரை கல்யாணம் பண்ணிக்க ஆசைபட முடியுமா..

அதே மாதிரி தான்..விஜய் சாரோட ஸ்டைல்,பேச்சு,ஆட்டிடியூட் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்…ஹி இஸ் மை இன்ஸ்பிரேஷன்..இட்ஸ் லைக்க ஹீரோ வொர்ஷிப்..அதை லவ்வுனு ஒரு வட்டத்திற்குள் அடைக்கப்படாது..”

கண்கள் மின்ன சக்தி கூற,

“உன்னை பேக்குனு நினைச்சேன்..நீ நல்லா தெளிவா தான்டி இருக்க..”

என்று சிரித்தாள் ஏஞ்சலின்.

“நினைப்படி..நினைப்ப..”

என்று அவளை அடிக்க எழுந்தவள் திடீரென,

“ஐயோ..இவனா..”

என்று அதிர்ந்து குனிந்துக் கொள்ள ‘யாருடி..’

என்று இருவருமே திரும்பி பார்த்தனர்.

சற்று தள்ளி ஆரியன் தன் நண்பர்களோடு அமர்ந்திருந்தான்.

சந்தியா அவனை கண்டு கொள்ள ஏஞ்சலின் அன்று விடுப்பு எடுத்திருந்ததால் அவளுக்கு தெரியவில்லை.

“ஹோ..இவனா..நீ பார்த்து ஏன்டி பயப்படுற.. அன்னைக்கு அவன் போனு சொன்னதும் தானே போனோம்… அப்புறம் என்ன..”

“அதில்லடி..முகத்துக்கு நேராக தான் திட்ட முடியலைனு கொஞ்சம் தூரம் தள்ளி வந்து திட்டினேனா அவன் பார்த்துட்டான்..அன்னைக்கு ஏதோ எஸ்கேப் ஆகிட்டேன்.. மறுபடியும் சிக்கினேனா கண்டிப்பாக செத்தேன்..”

“ஹாஹா..உனக்கு ஏன் இந்த வேலை..”

“அவன் திடீர்னு பார்ப்பான்னு எனக்கு ஜோசியமா தெரியும்..”

“என்னடி பேசிக்கிறீங்க..”

என்று ஏஞ்சலின் குழம்பவும்,

“அது அன்னைக்கு சொன்னேன ஃப்ரஸ்ஸர்ஸ்டேல ஒரு சீனியர் இவளிடம் கலாட்டா பண்ணானு அது இவன் தான்..”

என்று சந்தியா ஆரியனை சுட்டி காட்ட,

“ஹேய்..இவனா..”

என்றாள் ஆச்சரியமாக..

“உனக்கு தெரியுமா..?”

“ம்ம் தெரியுமே..ஆரியன்….நம்ம காலேஜில முக்கிய தலைகள்ல ஒருத்தர்..அந்த மலமாடு தர்ஷன் மண்டைய பொலந்தது யாரு..யாருனு கேடீங்கல்ல..அது இவர் தான்..”

“அந்த நல்ல காரியத்தை பண்ணது இவன் தானா..”

“ம்ம்..யெஸ்..பட் ஏனோ தெரியலை.. ஆரம்பத்தில் இருந்தே மனோஜ் அண்ணாக்கும் இவருக்கும் ஆகவே ஆகாதாம்..”

“மனோஜ் அண்ணா..ஜெனியூன் கேரக்டர்…அவர்மேல் தப்பு இருக்காது…இவன் தான் எதாவது அவருட்ட வம்பு வளர்ந்திருப்பான்…”

“நீ சொல்லற ஜெனியூன்னு..ஒருத்திக்கு புரிய மாட்டேங்குதே..”

மனோஜ் பெயர் அடிப்படவும் அந்த பேச்சே காதில் விழாதது போல் சாப்பாட்டில் அதீத கவனமானது போல் இருந்தாள் சந்தியா.

மனோஜ் ஒருதலையாய் சந்தியாவை காதலிக்கிறான்.அது இவர்களுக்கும் தெரியும்.இவள் பக்கம் தான் அவன் காதலுக்கு எந்த எதிரொலியும் இல்லை.இருப்பினும் விடா முயற்சியாய் பலமுறை பேச முயற்சிக்க அதன் பலனாய் அவனுக்கு சக்தி,ஏஞ்சலினின் நட்பு கிடைத்தது.

“ஆமாம்..உனக்கெப்படி இந்த டீடெயில்ஸ் எல்லாம் தெரியும்..”

என்று சக்தி கேட்டபடி ‘அவன் போய்விட்டானா..’ என்பதை தெரிந்துக்கொள்ள அவன்புறம் பார்வையை திருப்ப இம்முறை  அவனும் பார்த்துவிட்டான்.

“அய்யையோ பார்த்துட்டான்..”

என்று சட்டென்று குனிந்தாள்.

“ஏய்…சக்தி…”

ஆரியன் அங்கிருந்தே கத்தி அழைக்க கவனிக்காதது போல் இன்னும் குனிந்தாள்.

“ரொம்ப குனியாத..பார்த்துடேன் வா..”

அதட்டலாய் வந்த ஆரியன் குரலில் ‘போச்சு..’ நெற்றியை தடவியபடி மெல்ல எழுந்தாள்.

“என்னாடி..கேங்கா இருக்கானுங்க..பயமா இருக்கு..”

நடுக்கமாய் முணுமுணுக்க,

“பயப்படாம போ சக்தி..அவங்க ஒன்னும் மோசமான கேரக்டர் இல்ல..சும்மா தான் பேசுவாங்க..அப்படி ரொம்ப வம்பு பண்ணினால் மனோஜ் அண்ணாவிடம் சொல்லிக்கலாம்..”

என்று ஏஞ்சலின் சொல்ல சரியென தலையை உருட்டியவள் தயங்கியபடி அவனை நோக்கி சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!