Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

முதிர்ந்த காதல்

உன் கையை நானும்
என் கையை நீயும்
பிடித்து நடக்கத்தொடங்கி
இன்றோடு நாற்பது ஆண்டுகள்!!

அன்று பயந்த முகத்துடன்
மருண்ட விழியுடன்
நீ இதே போல் கை பிடித்து
என் வீட்டினுள் அடி எடுத்து
வைத்த தருணம் இன்றும்
என் கண்ணோடு!!

அன்று எப்படி என்னவள்
என்ற உரிமையில் இந்த
பட்டு கையையும் பூ
விரலையும் கோர்த்து
நடந்து இத்தனை ஆண்டுகள்
ஆன பிறகும் இன்றும்
என் கை கோர்த்து நீ
நடக்கும் போது
என்னுள் அதே பூரிப்பு!!



Advertisement

அன்று வழி தெரியாது நீ
உன் உடம்பில் நிற்கா
புடவையை ஒரு கையில்
கெட்டியாய் பிடித்து
தத்தி தத்தி நடந்து
வந்தவள் இன்று
தளர்ந்த நடையுடன்
இருவரும் கைக்கோர்த்து
இன்று உலகின்
வெளிச்சம் காண புறப்படுகிறோம்!!

உன்னை என்னையன்றி
வேறு யாரும் இந்த
அளவு காதலிக்க முடியாது
என்னை உன்னையன்றி
வேறு யாரும் இந்த அளவு
காதலிக்க முடியாது
இன்று போல் நம் இளமை காதல்
என்றும் பூத்திருக்கும்!!

உலகை விட்டு இருவரும்
ஒன்றாய் மேலுலகை
அடைந்ததை எண்ணி
சுற்றமும் அழுக
அதற்கு காரணமானவர்களோ
உதட்டில் புனகையுடன்
கண்களில் காதலுடன்
பூவுலகை போல்
மேல் உலகிலும் தங்கள்
காதல் பயணத்தை
தொடங்க!!

Advertisement

 

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!