Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Iangaathu Veesuthae

சமீராவின் இளங்காத்து வீசுதே – 6(1)

அத்தியாயம் – 6

தலை இன்னும் சுற்றுவது போலவே இருக்க ஒரு கையால் அதனை தாங்கி பிடித்தபடி கண்களை திறக்க முயன்றாள் சக்தி.

கண்கள் அதீத வெளிச்சத்தில் கூச மீண்டும் பட்டென்று மூடிக் கொண்டவள் சிமிட்டி சிமிட்டி அந்த வெளிச்சத்திற்கு கண்களை பழக்கி கொள்ள முகிலால் நிறைந்த வானம் தற்போது தெளிவாய் தெரிந்தது.

‘எங்கே இருக்கின்றோம்..’ என்று குழம்பியவள் தான் படுத்திருப்பதை உணர்ந்து மெல்ல எழுந்தமர அப்பொழுதும் அதே வானம் மட்டுமே தான் தெரிந்தது.ஏதோ பாலைவனம் போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் இல்லாமல் வெறுமனே இருக்க ‘எப்படி இங்கே வந்தோம்..’



Advertisement

தலையை இரண்டு கையாலும் தாங்கி யோசிக்க,

“தல ரொம்ப வலிக்குதா சக்தி…”

என்ற மென்மையாய் ஒரு பெண் குரல் கேட்டு சட்டென்று நிமிர்ந்தாள்.

Advertisement

கைகளை கட்டியபடி அவளெதிரே ஒரு இளம் பெண்.

Advertisement

‘யாரு இவ..எங்கேந்து தீடீர்னு வந்தா..இவ்வளவு நேரம் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை யாரும் தெரியலையே..’

என்று விழித்தவள்,

“இதென்ன இடம்.நான் எப்படி இங்க வந்தேன்..நீங்க யாரு..”

Advertisement

என்று பதட்டமாய் கேட்க,

“ஸ்ஸ்..டென்ஷன் ஆகாதே..”

என்றபடி அவள் அருகில் வந்தமர்ந்தவள்,

“இது என்ன இடமுன்னு சொன்னால் உனக்கு புரியாது…என்னை பார்த்து தான்..பயந்து மயங்கி விழுந்த..இப்போ தான் கண் விழித்த..”

என்று அவள் சொல்ல ஆய்வகத்தில் சந்தியா என்று நினைத்து தான் பேசியது,ஓர் உருவம் தோன்றியது,அது ஏதோ சொன்னது,தான் மயங்கி விழுந்தது என்று எல்லாம் படம்போல் அவள் கண்முன் தோன்றியது.

“அந்த உருவம்…நீங்களா..”

என்றாள் அதிர்ச்சியாய்..

ஏனெனில் கரிய நிறத்தில் இன்னதென்று விளங்காத துகள்களால் ஒரு பெண் தோற்றத்தில் பயங்கரமாய் அவ்வுருவம் இருந்ததற்கு நேர்மாறாய் அழகிய வண்ணம் தீட்டிய ஓவியம் போல் இருந்தாள் இப்பெண்.

அதுவும் அந்த சாதாரண சுடிதாரில் பேரழகியாய் இருந்தவளை அந்த உருவத்தோடு ஒப்பிடவே முடியவில்லை.

அவளது அதிர்ச்சியான பாவனையில் மென்னகை புரிந்தவள்,

“நிஜ உலகில் என் உருவம் அப்படி தான் இருக்கும்..ஆனால் என் உண்மையான உருவம் இது தான்..”

என்றதற்கு இன்னும் அதிர்ந்தவள்,

“அப்போ நீங்க பேய்யாஆஆ..நான் எப்படி உங்களோட வந்தேன் அப்போ நானும் செத்துட்டேனா..கடவுளே..”

விட்டால் மீண்டும் மயங்கிவிடுபவள் போல் அதிர அவள் தோளை ஆதரவாய் அணைத்தவள்,

“இங்க பாரு..நான் ஆன்மா தான்..என் ஆன்மா இங்கே தான் சிக்கியிருக்கு…ஆனால் நீ உயிரோட தான் இருக்க..உனக்கு ஒன்னும் ஆகலை..உன்னை பத்திரமாய் திருப்பி சேர்ப்பது என் பொறுப்பு..”

என்று ஆறுதல் சொல்ல,

“அப்போ உடனே என்னை அனுப்பிடுங்க…எதுக்கு என்னை இங்க வரவைச்சீங்க…”

என்றாள் கண்களில் கலக்கத்தோடு..

“ஏன்னா..எனக்கு உன் உதவி வேண்டும் சக்தி…”

என்று அமைதியாய் அவள் கூற சக்தியோ,

“என்னிடம் உதவியா..என்ன உதவி..ஹோ வெய்ட்..வெய்ட்..உங்களை யாரோ கொன்னுட்டாங்க..அவங்களை பழிவாங்க என் ஹெல்ப் கேட்கறீங்க..அப்படி தானே..அய்யோ மேடம் நீங்க தப்பானா ஆளை ச்சூஸ் பண்ணிருக்கீங்க..எனக்கு எக்ஸாமில் பிட்டுக்கூட அடிக்க தெரியாது…நான் ஒரு டம்மி பீஸூ..

பேசாமல் என்னை கொண்டுபோய் விட்டுவிட்டு வேறு யாரையாவது பிடிச்சுக்கோங்க..பேய் மேடம்..”

பயத்தில் படபடப்பில் ஏதேதோ உளற சத்தமாய் சிரித்தாள் அவள்.

“ஏன் இப்போ என்னை பார்த்து பயப்படுற..இப்ப உன்னை என்ன பண்ணிட்டேன்..”

“பின்னே பேய பார்த்து பயப்படாம..நின்னு செல்ஃபீயா எடுப்பாங்க..”

“ம்ச்..சும்மா பேய் பேய்ங்காத..எனக்கு ஒரு மாதிரி இருக்கு..என் பேரு அக்னிமித்ரா..”

என்றாள் அவள் முகம் சுனங்க..

‘பேய்யை பேய்யினு தானே சொல்ல முடியும்..ஆமா இந்த பேர எங்கேயோ கேட்டிருக்கேனே..’

என்று எண்ணினாலும் அவளது அழகான முகம் சுருங்கி இருப்பது சக்திக்கு ஒரு மாதிரியாக பதட்டத்தை விடுத்து தன்மையாய் பேசினாள்.

“சரி அக்னிமித்ரா.என்னால் என்ன உதவி செய்ய முடியுமுனு நினைக்கிறீங்க..எனக்கு நீங்க யாருனு கூட தெரியாது..”

“ஆனால் என்னால் எல்லார் முன்னாடியும் வரமுடியாது சக்தி.என்னோட குறிக்கோள் நிறைவேற வாய்ப்பை தேடி தான்..எனக்கான  இத்தனை வருஷத்திலும் காத்திட்டு இருந்தேன்..இப்போ அது முடியப்போற தருவாயில் அந்த வாய்ப்பு உன் உருவில் எனக்கு கிடைத்திருக்கும் போது அதை எப்படி நான் இழப்பேனு நினைக்குற..”

என்றவளின் கண்களில் அப்படி ஒரு தீவிரம்.நினைத்ததை முடிக்காமல் விடமாட்டேன் என்ற உறுதி கண்களில் தெரிய சக்தியின் இதழ்கள்,

“அப்படி என்ன உதவி..”

என்ற வார்த்தைகளை தானாய் உதிர்த்தது.

“சில உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும்..சிலரோட முகத்திரையை கிழிக்கனும்…நல்லவனாய் தன்னை காட்டிக்கும் அவனை எல்லாரும் காரீ துப்பனும்.”

வெறித்தப் பார்வையோடு அவள் சொன்ன விதம் சக்திக்கு கிலியை கிளம்ப,

“யாரை சொல்றீங்க..”

“விஜய்…விஜய் வரதன்..”

என்று அவள் சொன்னதும் சக்தியின் முகம் மாறியது.

“விஜய் சரை தப்பா பேசாதீங்க அக்னிமித்ரா..ஹி இஸ் அ ஜெம்..அவரை தப்பா பேசுற..உங்களுக்கு என்னால எந்த உதவியும் செய்ய முடியாது.. ”

“அவனை பத்தி உனக்கு என்ன தெரியும்..”

“ம்ச்..அவன் இவன்னு பேசினீங்கனா கெட்ட கோபம் வந்திடும் எனக்கு..அவரை மாதிரி யாராலும் இந்த கல்லூரியை நிர்வாகம் பண்ண முடியாது..அவர் வந்த இந்த ஆறு மாசத்தில் ஸ்டூடென்ஸ் தேவையை எல்லாம் சரியா கணித்து செஞ்சிருக்கார் தெரியுமா…யாரையும் அவர் இதுவரை மிஸ்ட்ரீட் பண்ணதில்லை..அதே சமயம் தன் இடத்தில் இருந்து இறங்கினதும் இல்லை..அ மேன் ஆஃப் பர்ஃபெக்சன்..”

என்று அடுக்கிக் கொண்டே போக அவளை சலனமின்றி நோக்கிய அக்னிமித்ரா,

“ஏன் சக்தி..திறமைசாலி எல்லாரும் நல்லவங்க ஆகிடுவாங்களா..??சரி..உனக்கு அவனை ஒரு ஆறு மாசமாக தெரியுமா…ஆனா எனக்கு..”

என்று நிறுத்தியவள்

“என் கூட பிறந்த அண்ணன்..அவனை பற்றி எனக்கு தெரியாததா..உனக்கு தெரிந்திருக்கும்..”

என்று சொன்னவளை அதிர்ந்து நோக்கினாள்.அவள் மூலையில்,

புதிதாய் கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்திற்கு விஜயின் இறந்த தங்கை அக்னிமித்ரா நினைவில் அப்பெயரை வைக்க போவதாய் யாரோ சொன்னது தற்போது பளீச் சென்று நியாபகம் வந்தது.

அங்கே சில நிமிடங்கள் கனத்த மௌனம் நிலவியது.

“நீங்க எதாவது தப்பா புரிந்திருக்கலாம்.. இப்ப புதுசா கட்டுற ப்ளாக்கிற்கு கூட உங்க பேரு தான் வைக்க போறாங்க தெரியுமா..உங்க மேல பாசமில்லாமலா..”

என்றதற்கு ஒரு விரக்தி புன்னகை புரிந்தவள்,

“அதெல்லாம் ஊருக்காக..இதோ இப்போ நீ சொல்றீயே..அந்த மாதிரி எல்லாரும் சொல்லனும் நினைக்கனும்னு..ஆனால் அவன் மனசு முழுக்க என் மேலே வெறுப்பு..வெறுப்பு மட்டும் தான்..”

என்றவள் முகமும் பாறையென இறுகியது.

சக்தியின் உள்ளம் பரிதவிக்க,

“அப்போ..அப்போ…உங்களை அவர்தான் கொ…கொன்னு..”

அதற்குமேல் கேட்க முடியவில்லை.விஜயை பற்றி உண்மையை நம்பவே அவள் மனம் மறுத்தது.அவனது ஹிரோயிக் பிம்பம் கலைவதை அவளால் ஏற்க முடியவில்லை.

திரும்பி அவள் முகம் நோக்கி அக்னிமித்ரா,

“என்னை நானே தான் அழிச்சிக்கிட்டேன்..”

என்று கூற வாயடைத்து போனாள்.

‘தற்கொலையா..??உயிர் வாழவே வெறுக்கும் அளவுக்கு இந்த பெண்ணிற்கு என்ன தான் நடந்திருக்கும்..’

என்று எண்ணியவள் அதை அவளிடமே கேட்க,

“ஒன்னு ரெண்டு இல்லை..நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் வாழ்க்கை நரகம் தான்..என்னை சுற்றி அத்தனை பேர் இருந்தாலும் என்னை நேசிக்க ஒரு ஜீவன் இல்லை..அத்தனை சொத்து இருந்தாலும் அதை தொட எனக்கு உரிமை இருந்ததில்லை.. அதற்கெல்லாம் ஒரே காரணம் விஜய்..”

“விஜய் மாதிரி ஒரு கர்வம்,ஆணவம் புடிச்சவனை எங்கும் பார்க்க முடியாது.அது அவனோடே சேர்ந்து பிறந்தது.அவனுடையதுனு ஒன்னு இருந்தால் அது அவனுக்கு மட்டும் தான் சொந்தம்..வேறு யாரோடும் பங்கு போடுவது அவன் அகராதியிலே கிடையாது..அப்படி பட்டவனுக்கு தங்கையா பிறந்தது என் சாபமோ..!?”

“நான் பிறந்ததே அவனுக்கு பிடிக்காது..அப்பா,அம்மா என் மேல் பிரியம் வைப்பது பிடிக்காது..யாரும் என்னை இன்னார் பிள்ளைனு மரியாதையும் அன்பும் காட்டினால் பிடிக்காது..எல்லாம் அவனுக்கு மட்டுமே சொந்தம்..நான் அதற்கெல்லாம் தகதியில்லைனு நினைப்பு..அதை யாருமே பெருசா எடுக்கலை..அவனை கண்டிக்கவும் இல்லை..

விளைவு…ஒவ்வொன்னையும் என்னிடமிருந்து சத்தமில்லாமல் பிரிக்க ஆரம்பித்தான்.நான் நார்மல் இல்லை..எனக்கு ஏதோ ப்ராப்ளம் மனநிலை சரியில்லைன்னு என் அப்பா-அம்மாவையே நம்ப வைச்சான்…அவன் நினைச்சா மாதிரியே என்னை மறைக்க அரம்பிச்சாங்க..வெளியே தெரிந்தால் அவங்க கௌரவம் பாதிக்கப்படுமுனு எங்கேயும் என்னை அழைச்சுட்டு போக மாட்டாங்க.வீட்டை விட்டால் ஸ்கூல்..இதை தவிர வேறு எங்கேயும் என்னை அழைத்து போக மாட்டாங்க….வரதசாமி வாரிசுனால் பாதி பேருக்கு விஜயை மட்டும் தான் தெரியும்..அத்தோடும் என்னை நிம்மதியா விட்டுவிடலை..என் பொறுப்பு எல்லாத்தையும் அவன் கையில் எடுத்துக்கிட்டான்.நான் என்ன பண்ணனும் என்ன சாப்பிடனும் யாருட்ட பேசனும் ஒன்னு ஒன்னையும் அவன் தான் டிசைட் பண்ணுவான்..ஒரு கைபொம்மை மாதிரி ஆக்கிட்டான்..ஆனால் எல்லாருக்கும் அவன் ஒரு பாசக்கார அண்ணன்..அவன் பண்ண கொடுமையை எல்லாம் வெளியே சொன்னால் என்னை தான் பைத்தியம்னு சொன்னாங்க..வாழ்க்கையே வெறுத்து போயிடுச்சு.

ஆனால் இதெல்லாம் ஒன்னுமில்லை..இதைவிட எவ்வளவு பெரிய வஞ்சகன் அவன்னு என் காலேஜ் ஃபஸ்ட் இயரில் தான் தெரிய வந்தது…”

என்று நிறுத்தியவளின் கண்கள் தீபிழம்பென இரத்தநிறத்தில் தகதகவென ஜெலித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!