Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kandaenadi Un Kaathalai

Kandaenadi un Kaathalai – 12

மருத்துவமனையில்  பாட்டிக்கு ட்ரிப்ஸ் ஏத்தி முடித்ததும் காலை ஏழு மணிக்கு வீட்டுக்கு கிளம்பினர்.

“சூர்யா நான் சொன்னதால நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துகலயே?? உனக்கு மலர் மேலே விருப்பம் தான??!” எங்கே நாம் கட்டாயபடுத்தி ஒத்துக்கொண்டானோ என்று பாட்டியின் மனம் கவலை கொண்டது.

காரில் இருந்த அவனது அப்பாவும், நண்பனும் அவன் பதிலுக்காக காத்து இருக்க “எனக்கு பிடிக்கவில்லை என்றால் யார் என்ன சொன்னாலும் அதை செய்ய மாட்டேன் பாட்டி. ஸோ, யூ டோன்ட் வொரி” மலர்ந்த முகத்துடன் சொன்னான்.

மற்ற இருவருக்குமே சூர்யாவின் பதிலில் சந்தோக்ஷமே!!. ஆனால் மலர் இதை கேட்டதும் எப்படி எடுத்து கொள்வாள் என்று அவனுக்கு சற்று பயமாகவே இருந்தது.



Advertisement

அவள் வேண்டாம் என்று சொன்னால் கண்டிப்பாக கல்யாணம் நடக்காது என்பது அவனுக்கு நன்கு தெரியும். ‘மற்றவர்களாவது அவளை சமாதனம் படுத்த முயல்வர் ஆனால் என் அப்பா…! உஹும்… என மருமகளுக்கு பிடிக்கலைனா இது நடக்க வேண்டாம்னு உறுதியா சொல்லிருவாரு மனுசன்’ அவன் நினைத்து இருக்க,

“பாட்டி, மலருக்கு இதுல சம்மதம் இல்லைனா என்னால கல்யாணத்தை நடத்த முடியாது. எனக்கு இவனோட சம்மதத்த விட மலர் சம்மதம்தான் முக்கியம்” சூர்யா மனதில் நினைத்ததை அப்படியே சொன்னார்.

கார் ஓட்டிகொண்டு இருந்த நவீன் பக்கத்தில் இருந்த சூர்யாவிடம் மெதுவாக “மச்சான் உன் கதைக்கு வில்லன் யாரும் தேவையே இல்லை. உன் அப்பா மட்டும் போதும்” என்றவன் சிரிப்பை கட்டுபடுத்தி கார் ஓட்டினான்.

Advertisement

வீட்டிற்கு வந்ததும் “நானே இந்த விக்ஷயத்தை எல்லார்கிட்டயும் சொல்றேன்.” என்றவர் ஹாலில் அமர்ந்து விட்டார்.

Advertisement

அனைவரும் அவர் முன்பு குழுமி நிற்க சற்று கலைத்து போய் இருந்த மலரிடம் பாட்டியின் பார்வை சென்றது. “அம்மாடி மலரு இங்க வா” மெல்ல கையை நீட்டி அழைத்தார்.

பாட்டியின் அருகில் வந்து உட்கார்ந்தவள் “நெட்டு ரொம்ப பயமுறுத்திட்டிங்க பாட்டி….”

“ஹ்ம்ம் இந்த கிழவிக்கு இனி என்ன வேணும் தாயி…. சீக்கிரம் என் புள்ளை, புருக்ஷன் கிட்டயே போக வேண்டியதுதான். நான் போறதுக்குள்ள என் கொள்ளு பேத்தி,  கொள்ளு பேரன் கல்யாணத்தை பார்த்துடனும்னு மனசு துடிக்குது தாயி…. நீ உன் அத்தானை என் கண்ணு முன்னால கல்யாணம் செஞ்சிகிட்டா என் உசுரு சந்தோக்ஷமா போகும்” சிரமபட்டு சொல்லி முடித்தார்.

Advertisement

கங்காவுக்கு சந்தோக்ஷமே!? ஆனால், அவளுக்கும் மலரின் முடிவு முதன்மையாக பட்டது. “மலர் உனக்கு இதுல முழு சம்மதம் இருந்தா மட்டும் ஒத்துக்கொள் உன்னை யாரும் வற்புறுத்த மாட்டாங்க” கங்கா சொன்னாள்.

“மச்சான் உன்னை தவிட்டுக்கு துட்டு கொடுத்து வாங்குனாங்கலா என்ன??? உன் சம்மதம் பற்றி உன்னை பெத்தவுங்களுக்கு அக்கறை இருக்குற மாதிரி தெரியலேயே” என்றான் நவீன்.

“ம்ச்ச் அதை விடுடா….. பாட்டி கேட்டதுக்கு அந்த பூனை கண்ணுகாரி எப்படி முழுச்சிட்டு இருக்கா பாரு…. என்ன சொல்லுவாலோனு திக்திக்குனு இருக்குடா” இதயம் மேரத்தான்ல ஓடுற மாதிரி வேகமாக துடித்தது சூர்யாவிற்கு.

அனிக்கா, விக்கி இருவரும் அதிர்ச்சியில் இருந்து மீள சற்று நேரம் எடுத்தது. “டேய் இடியட்…. சூர்யாவுக்கும், மலருக்கும் கல்யாணம் நடக்கதான் இந்த ஐடியா போட்டியோ??! அவன் எனக்கு கிடைக்கலனா கூட பரவாயில்லை அந்த ஊமகள்ளிய போய் கல்யாணம் பண்ணா போறான்” விக்கியிடம் புலம்பி தீர்த்தாள்.

அவன் எந்த பதிலும் சொல்லும் நிலையில் இல்லை. இறுகி போய் நின்று இருந்தான். தன் திட்டம் இப்படி கடைசி நேரம் சொதப்புன் என்று அவன் நினைக்கவே இல்லை.

இப்பொழுது அவன் பயப்படும் ஒரே விக்ஷயம்…. தன்னுடைய இந்த கீழ் தரமான நடத்தை அவன் அப்பாவுக்கு தெரிந்தது அவனை அப்படியே தண்ணி தெளிச்சி விட்டுவிடுவார். அனிக்காவுக்கு எப்படி அவள் அம்மா மேல் பயமோ அதே மாதிரி இவனுக்கு அவன் அப்பா மேல் பயம்.

லண்டனில் பொறுப்பு இல்லாமல் சுற்றி திருந்தவனை அவன் அம்மா சொல்லியதால் இந்தியாவுக்கு அனுப்பினார். அவன் செய்த காரியம் மட்டும் தெரிந்தால் சொத்தில் பங்கு கூட கொடுக்க மாட்டார்.

“உனக்கு உன் அத்தானை கல்யாணம் செய்ய சம்மதம்தானே?” முகத்தில் ஏக்கத்துடன் கேட்டார் பாட்டி.

“எனக்கு சம்மதம் பாட்டி… நீங்க ஃபர்ஸ்ட் போய் ரெஸ்ட் எடுங்க. ஹாஸ்பிட்டலில் இருந்து வந்ததும் இதை கண்டிப்பா பேசனுமா என்ன?? வாங்க உங்களை ரூம்முக்கு கூட்டிட்டு போறேன்” கைதாங்கலாக அவரை ரூம்மில் கொண்டு விட்டு படுக்க வைத்துவிட்டு வந்தாள்.

தனது அறைக்கு வந்தவள் அப்படியே தரையில் சரிந்து கால் முட்டியில் தலை வைத்து அமர்ந்து விட்டாள். சிறிது நேரத்தில் முட்டி கால்கள் மறத்து போக தலை நிமிர்ந்தவளின் முன்பு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தான் அவளின் நாயகன்.

பதறி போய் எழுந்து நின்றவள் “உள்ளே வரும் பொழுது கதவை தட்டிட்டு வர பழக்கம் கூட அமெரிக்கா போய்ட்டு வந்ததுல இருந்து மறந்துட்டு போல” நக்கலாக கேட்டாள்.

அவனிடம் எந்த பதிலும் இல்லை. வலது கை கன்னத்து நாடிக்கு முட்டி கொடுத்து பார்வை சிறிதும் அவளை விட்டு அகலாது அங்கம் அங்கமாக கண்ணால் ஸ்கேன் செய்தான்.

இளம் பச்சை மற்றும் வெள்ளை கலந்த சுடிதார் அணிந்து இருந்தாள். நீண்ட தலை முடியை தூக்கி கொண்டை போட்டு ஒரு கிளிப்பில் அடக்கி இருந்தாள். கைகள் மொட்டையாக இருந்தது, காதின் ஓட்டை மேல் உள்ள துணைக்காதில் மட்டும் ஒரு சின்ன மொட்டு கம்மல் மின்னி கொண்டு இருந்தது, அப்புறம் அவனுடைய மயக்க வஸ்திரம் அந்த மூக்குத்தி பாந்தமாக டால் அடித்தது.

“எங்கே, கம்மல், வளையல் எதுவும் காணும்… வீட்ல இருக்கும் பொழுது போட மாட்டியோ??” ரொம்ப முக்கியாமன கேள்வியாய் இதனை கேட்டான்.

“என்ன!!!… இதை கேட்கத்தான் வந்தீங்க?!” ஆச்சிரியமானாள் மலர்.

“ஏன் கேட்க கூடாத கேள்வியா கேட்டேன்… சும்மா கேட்கனும் தோனுச்சி அதான் கேட்டேன்” என்றவன் எழுந்து ஜன்னல் பக்கம் போய் நின்று “நான் வந்தது எதுக்குனு உனக்கு தெரியும். நீ என்னதான் உன்  முடிவை எல்லோர் முன்னாடி சொன்னாலும் எனக்கு தனியா கேட்டு தெரிஞ்சிக்கனும் …..” அவள் வார்த்தைக்காக காத்து நின்றான்.

“எனக்கு பிடிக்கவில்லை” அவன் முகத்தை பார்த்து சொன்னாள்.

உள்ளுக்குள் அதிர்ச்சி அடைந்தாலும் அதை அவன் வெளியே காட்டவில்லை. “ஏன்??”.

“மனசுல வேற ஒருத்தி மேலே காதல் வச்சிட்டு என்னை கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டா… எனக்கு எப்படி பிடிக்கும்” கோபத்துடன் சொன்னாள்.

‘இங்க வந்து இவளை பார்த்ததுல இருந்து பித்து பிடிச்சி போய் அலையிறேன்… என் பார்வை, பேச்சு எதுவும் இவளுக்கு என் விருப்பம் புரியலையா?’ என்று நினைத்தவன்…. அவளிடம்,

“இங்கு பார்…. நான் அனிக்காவை பற்றி எந்தவித வாக்கும் அவளிடமும், என் அப்பாவிடமும் கொடுக்கவில்லை. அது ஒரு அட்ரக்க்ஷன்னு எனக்கு தெரிந்ததும் அப்படியே ஒதுக்கிவிட்டு என்னோட படிப்பில கவனம் செல்லுத்தினேன். இங்கு வந்து நான் அனிக்காவிடம் பேசிய விதம் உனக்கு நல்லாவே தெரியும். அந்த ஏஜீல் எனக்கு இருந்து ஒரு மயக்கம் அவ்வளவுதான்…. அது எனக்குள்ள ஒரு மெச்சூரிட்டி வந்ததும் தெளிந்துவிட்டது. அனிக்காவுக்கு நான் காலேஜில் இருக்கும்பொழுதும் சரி, இப்போவும் சரி அந்த அளவுக்கு அட்டென்க்ஷன் கொடுத்தது இல்லை…”

“மாமாகிட்ட உங்க இரண்டு பேர் கல்யாணத்தை பற்றி அனிக்கா அப்பா பேசுனதும் நீங்க அமைதியாதான இருந்தீங்க??”

“ம்ச்ச் மலர் நல்லா  கேட்டுக்கோ…. அவளா வந்துதான் என்கிட்ட காதலை சொன்னாள். அப்போ அவள் மேல் உள்ள மயக்கத்தில் அவள் காதலை என்னால் மறுக்க முடியவில்லை. அதுவே கல்யாணம் என்று அவள் பேசும்பொழுது மனசு ஒருமாதிரி உறுத்தியது… அதான் அமெரிக்கா போயிட்டு இதை பற்றி பேசலாம் என்று ஒரு முற்றுபுள்ளி வைத்தேன். சப்போஸ் அனிக்காவா வந்து என்கிட்ட காதலை சொல்லவில்லை என்றாலும் அது என்னை எந்த விதத்திலும் பாதிச்சி இருக்காது… வெறும் அட்ரக்க்ஷனுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து இருக்கமாட்டேன்” தன்னால் முடிந்த அளவுக்கு அவளுக்கு சொல்லி புரிய வைக்க முயன்றான்.

அவன் என்னதான் பேசினாலும் அவள் மனம் ஒப்பவில்லை. ஆனால், இங்கு வந்ததில் இருந்து அவன் அனிக்காவிடம் அவ்வளவாக பேசவில்லை என்பதை கவனிக்கவே செய்தாள்.

“இன்னும் என்ன??” அவள் முகத்தில் ஒரு தெளிவு இல்லாததை கண்டு கேட்டான்.

“நிஜமாகவே என்னை கட்டிக்க உங்களுக்கு சம்மதமா” தயங்கியபடி கேட்டாள்.

“ம்ம்ம் சம்மதம்” என்று தலை ஆட்டினான்.

“சப்போஸ்…. என் மேலேயும் ஜஸ்ட் அட்ரக்க்ஷனுக்காக கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லலையே??” மெதுவாக கேட்டாள்.

ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவன் வேகமாக அவள் அருகில் வந்து அவள் துப்பட்டாவ்வை பிடித்து இழுத்தான். பின் மாட்டாமல் இருந்ததால் அவன் கையோடு வந்துவிட்டது துப்பட்டா.

“ஐயோ அத்தான்…” பதறி போய் மார்புக்கு குறுக்காக கையை வைத்து மறைத்தாள்.

துப்பட்டாவை அவள் இடுப்போடு சுற்றி அவன் அருகில் இழுத்தான்… அவனது ஆணமையின் வாசனையை அவள் நாசி உணர, தொண்டையில் எச்சிலை சிரமபட்டு உள்ளே அனுப்பினாள்.

“அது ஜஸ்ட் அட்ராக்க்ஷனா இல்ல அதுக்கு மேலையா அப்படினு என் கூட வாழ்ந்து பார்த்து தெரிஞ்சுக்கோ” அவள் கண்களை பார்த்தவாறு சொன்னவன் இன்னும் சற்று நெருக்கமாக அவளை இழுத்தான்.

இருவருக்கும் இடையில் இடைவெளி சிறிதும் இல்லை. மெல்ல முகத்தை அவள் முகம் அருகில் கொண்டு சென்றான். அடிவயிற்றில் ஏதோ செய்ய இறுக்கமாக கண்களை மூடிவிட்டாள் மலர்.

இதழ் ஓரத்தில் புன்னகை எட்டி பார்க்க…. பார்வை தானாக அவள் மூக்குத்தி மீதி பதிந்தது. ‘தம்மாதூண்டு இருந்துட்டு என்னை என்ன பாடு படுத்தி எடுக்கு இந்த மூக்குத்தி… என்னை மயக்கி வைக்கதுக்கே இதை மாட்டி இருக்கா…. ராட்சசி’ ….

அதில் முத்தமிட மனம் தூண்ட “மலர் வித் யூவர் பெர்மிஸன்” என்று மெதுவாக சொன்னவன் தன் உதட்டை அதில் லேசாக பதித்தான்.

அவனது முத்தத்தில் இன்னும் இறுக்கமாக கண்களை மூட… அந்த முத்தத்தின் ஆழத்தை இருவரும் உணருவதுக்குள்ள கதவு தட்டும் ஓசை கேட்டது.

அவள் பட்டென கண்களை திறக்க…. எதிரில் இருந்தவன் எந்த வித பதட்டமும் இல்லாமல் நின்றான். கதவு தட்டும் ஓசையோடு “மலர் கதவை திறடா” கங்காவின் குரலும் கேட்க பதட்டத்துடன் அவனிடம் இருந்து விடுபட முயன்றாள்.

ஆனால், அவன் துப்பட்டாவை இறுக்கமாக பிடிச்சி இருந்ததால் அவளால் சுலபமாக வெளி வர முடியவில்லை. “ஐயோ அத்தை வெளியே நிக்காங்க… விடுங்க அத்தான்” துப்பாட்டாவை விலக்க முயன்றாள்.

“நீ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் இன்னும் சொல்லவில்லை” வெகு அசால்டாக சொன்னான்.

“சரி நான் சம்மதிக்கிறேன். எனக்கு முழு சம்மதம் போதுமா. இப்போ விடுங்க” அவள் சொல்லி முடிக்கையும் அவனது பிடி லேசாக… உடனே துப்பட்டாவை வாங்கி மார்போடு போட்டுவிட்டு கதவை பாதியாக திறந்தாள்.

“என்னடா பண்ணிட்டு இருந்த …. எவ்வளவு நேரம் கதவு தட்டுறது???”

“சாரி அத்தை கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் அதான்…..” மென்று விழுங்கினாள்.

பார்வை அடிக்கடி கதவுக்கு அடுத்த சுவற்றில் சாய்ந்து நின்று அவளையே பார்த்து கொண்டு இருந்த சூர்யாவிடம் சென்றது. “சரி நாளைக்கு காலையிலே கோவில்ல வச்சி உனக்கும், சூர்யாவுக்கும் கல்யாணம். அதனால இன்னைக்கு எங்கயும் போக வேண்டாம் சரியா…   நைட்டு நல்லா தூங்கி.” என்றார்.

“ம்ம் சரி அத்தை” தலை ஆட்டினாள்.

“ரொம்ப அசந்து தூங்கிட்டியோ?” சந்தேகமாக கேட்டார்.

“ஏ..ன் அத்தை…” திக்கி தினறினால்.

“இல்லை முகம் சிவந்து போய் இருக்கு அதான் கேட்டேன். சரி மதியம் சாப்ட வரும் பொழுது உன் ஜாக்கெட் ஒன்னு கொண்டு வா.. கல்யாண புடவை ஜாக்கெட்டுக்கு அளவு கொடுக்கனும்” என்றவர் சென்று விட்டார்.

“அதான் சம்மதம் சொல்லிட்டேன்ல வெளியே போங்க” அவனை தள்ளாத குறையாக வெளியே போக சொன்னாள்.

“ஆமா எதுக்கு உன் முகம் சிவந்து இருக்கு” சிரிப்புடன் கேட்டான்.

“ஹ்ம்ம் சொல்ல முடியாது. வெளியே போங்க” என்றவள் அவனை பிடித்து வெளியே தள்ளிவிட்டு கதவை சாத்திவிட்டாள்.

ஓடு சென்று கண்ணாடியை பார்க்க முகம் சிவப்பு ரோஜா இதழ் போல் சிவந்து இருந்தது. ‘சை அத்தை முன்னாடி என் மானமே போச்சு…. எல்லாம் இவனால’.

சூர்யா என்னதான் காரணங்கள் சொன்னாலும் இன்னும் அவள் மனம் தெளிவு அடையவில்லை. ஆனால், அதை மேற்கொண்டு அலசி ஆராய அவள் மனம் தயாராக இல்லை. காலம் போகிற போக்கில் நாமும் போவோம் என்ற முடிவுடன் இருந்து விட்டாள்.

மறுநாள் காலையில் இருவரும் சாமி சன்னதியில் நிற்க அம்மனுக்கு பூஜை நடந்தது. அடர்ந்து சிகப்பு வண்ணத்தில் பட்டு புடவையில் அவளை பார்க்க சூர்யாவால் அவளிடம் இருந்து பார்வையை திருப்ப முடியவில்லை.

அப்படியே விழுங்கி விடுவது போல் பார்த்தான். அவனும் அவளுக்கு சரிசமமாக ஆண் அழகனாக பட்டு வேக்ஷ்டி சட்டையில்  இருந்தான். அம்மன் சன்னதியில் எல்லார் ஆசிர்வாதத்துடன் மலர் கழுத்தில் மங்கல நாண் பூட்டினான் சூர்யா.  

அன்று மாலையே எல்லோரும் ஊருக்கு கிளம்ப தயாராக மலரை தனியாக அழைத்து கொண்டு பாட்டி அறைக்கு சென்றான் சூர்யா. அங்கு அவர் கையில் அவருடைய கணவன் படத்தை வைத்து பார்த்து கொண்டு இருந்தார்.

கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தவர்கள், பாட்டியின் முன் நின்றனர். கண்களில் வலிந்த கண்ணீரை துடைத்தவர். “என்ன தங்கங்களா” குரல் தழுக்க கேட்டார்.

மலருக்கு அவரை பார்த்ததும் அழுகை வர… அவர் அருகில் உட்கார்ந்தவள் “பாட்டி நீங்களும் எங்ககூட மதுரைக்கு வந்துருங்க” அவரது கை பிடித்து சொன்னாள்.

“இல்லை கண்ணு…. இது என் புருக்ஷன் இருந்த இடம் இதை விட்டு என்னால வர முடியாதுமா. உங்க கல்யாணத்தை பார்த்த திருப்தியிலே இந்த கிழவி இன்னும் பத்து வருசம் இருப்பேன். நீ என்னை பற்றி கவலைபடமா உன் புருக்ஷன நல்லா பார்த்துக்கோ” அவள் கண்ணம் வழித்து முத்தமிட்டார்.

“பாட்டி, நான் மலர் ரூம்ல இருந்ததால தான்…. எங்க மேலே சந்தேகபட்டு எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிங்களோ??” சூர்யா சுற்றி வளைக்காமல்  நேரடியாக கேட்டான்.

அவனுக்கு இதில் பாட்டி மீது சந்தேகம் இல்லை. தன் மனம் அறிந்து தான் அவர் இதை செய்தார் என்று தெரியும். ஆனால், மலருக்கும் இது புரிய வேண்டும் என்பதால் தான் அவன் கேட்டான்.

“போடா கிறுக்கா… என் பேரன் மனசு எனக்கு தெரியாதா என்ன??? இல்லை உன் பார்வைதான் இந்த வாழ்ந்து கெட்ட கிழவிக்கு புரியாம போகுமா என்ன. நீ நேற்று கார்ல வைச்சி சம்மதம் சொல்லும்போதே எனக்கு தெரிஞ்சிட்டு… அப்புறம் அன்னைக்கு மலர் ரூம்ல என்ன நடந்ததுனு எனக்கு நல்லா தெரியும். இவளை உன் கையில பிடிச்சி கொடுத்துட்டா…. நாளைக்கு எவனும் இவகிட்ட வாலாட்ட முடியாது அதான் உங்க கல்யாணத்தை சீக்கிரமா நடத்த சொன்னேன்”.

“தேங்க்ஸ் பாட்டி” என்றவன் அவரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தான்.

மலர் புறம் திரும்பியவர் “மலர் இது நம்ம் குடும்பத்து காப்பு… இனி இது உன் கையில தான் இருக்கனும்” என்றவர் அவள் கையில் இரண்டு காப்பை போட்டு விட்டார்.

“சொல்லு உனக்கு கல்யாண பரிசா என்ன வேணும்” சூர்யாவிடம் கேட்டார்.

சற்று தயங்கியவன் “பாட்டி இது என் விருப்பம்… நான் சொல்றேன் பட் நீங்க கட்டாயமா இதை செய்யனும் கிடையாது” என்றவன் அவர் காலடியில் போய் அமர்ந்தான்.

“பாட்டி நம்மகிட்ட ஏக்கர் கணக்குள நிலம் இருக்கு அதை எல்லாத்தையும் பாதியா…. அதாவது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு நிலமா இந்த ஊர் ஜனங்களுக்கு எழுதி கொடுத்திங்கனா அடுத்த தலைமுறை பிள்ளைங்க அடிமையா இல்லாம வளருவாங்க”

“ நீ கேட்ட கல்யாண பரிசு இது…. இதை கண்டிப்பா நான் செய்வேன். ஆனால், நானும் சரி, உன்  கொள்ளு தாத்தாவும் சரி ஜனங்களை எப்பவும் அடிமையா நடத்தினது இல்லை ராசா”

“நீங்க நடத்தல் பாட்டி…. ஆனால், உங்க மேலே உள்ள விஸ்வாசத்துல தாம் புள்ளைங்களுக்கு பெத்தவுங்களே  இவங்க நமக்கு சம்பளம் கொடுக்குறவுங்க நமக்கு சாமி மாதிரி சொல்லி வளர்க்காங்க.. இதுவே அவங்க கையில ஒரு நிலமோ, தொழிலோ இருந்துச்சுன்னா இந்த எண்ணம் வராது”

“சரி ராசா நீ சொல்றதும் எனக்கு புரியுது. ஆனால் நிலத்தை முதல குத்தகைக்கு தான் கொடுப்பேன். யாரு நல்லா விவசாயம் பார்த்து, பணம் ஈட்டுறாங்களோ அப்புறம் அவங்களுக்கு நிலத்த எழுதி கொடுக்கிறேன்” என்றார். இருவரையும் இமை கொட்டாது பார்த்து இருந்தாள் மலர்.

“ரொம்ப தேங்க்ஸ் பாட்டி” என்றவன் இன்னொரு முத்தத்தை பதித்து விட்டு அங்கு இருந்து விடை பெற்றான்.

“மலர் உன் அத்தான்…. உன் மேலே உசுரா இருக்கான்.. உனக்கு இப்போ தெரியாது. அவன் கூட பழகினா எல்லாம் தெரிந்துவிடும். இரண்டு பேரும் சந்தோக்ஷமா வாழ்க்கையை ஆரமிங்க” ஆசியோடு அனுப்பி வைத்தார்.

நவீன் குடும்பத்தினர் ஒரு காரில் சென்றுவிட. கங்காவும், சங்கரும் ஒரு காரில் செல்ல, மலரும், சூர்யாவும் ஒரு காரில் மதுரை நோக்கி பயணமானார்கள்.

மலரும்……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!