Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Iangaathu Veesuthae

சமீராவின் இளங்காத்து வீசுதே – 7

அத்தியாயம் 7

 

 

தன்னை குறித்தே பலர் பரிதாபப்பட்டுவதை பற்றி அறியாமல் இங்கே அக்னிமித்ராவின் கதையை கேட்டு பரிதாபமாய் அவளை பார்த்தாள் சக்தி.சிறுவயதில் இருந்து அப்பெண் அனுபவித்த கஷ்டங்களை நினைக்கவே பாவமாய் இருந்தது.



Advertisement

தொடர்ந்து தன் மனதில் உள்ளதை கொட்டினாள் அக்னி மித்ரா.

“என்னோட ஃபர்ஸ்ட் இயரில் எனக்கு அதுவரை கிடைத்திராத ஒன்று கிடைத்தது.அது தான் அன்பு..நேசம்!!என்னை எல்லாருமே ஒதுக்கியபோது அவன் மட்டும் என்னையே சுற்றி வந்தான்.என்மேல உயிரே வைச்சிருந்தான்.என்னை அவ்வளவு ஸ்பெஷலாய் ட்ரீட் செய்வான்.உலகத்தில் யாருமே இப்படி ஒரு காதலை அனுபவிச்சு இருப்பாங்களா தெரியாது..ஆனால் என் அஸ்வதன் எனக்கு அதை காட்டினான்.நான் பிறந்ததே அவனுக்காக தான்னு நினைச்சேன்.அப்போ விஜயும் லாஸ்ட் இயர் அங்கே தான் படிச்சுட்டு இருந்தான்.அவனுக்கு தப்பிதவறிக்கூட என் காதல் விஷயம் தெரியாமல் பார்த்துக்கிட்டேன்.அஸ்வதனோட ஒவ்வொரு தருணத்தையும் இரசிச்சு வாழ்ந்தேன்..ஆனால் அதை நிலைக்க விடாமல் செய்யவே ஒருத்தி வந்தாள்.என் தோழி என்றரூபத்தில் ஒரு துரோகி…!!சக்தி..எஸ்..அவ பேரும் சக்தி தான்..”

“என்மேல ரொம்ப பாசம் இருப்பதுபோல் நடித்தாள்.என் உயிர் நட்பாக தன்னை பாவிச்சுக்கிட்டா. நானும் அவளை முழுதாக நம்பினேன்.என்னை பற்றி எல்லாமும் அவளிடம் சொன்னேன்.எனக்கு ஒரு ஆதரவா இருப்பாள்னு  நம்பினேன்.ஆனால்..ஆனால் அந்த துரோகி என்னை பத்தியும் என் அஸ்வதன் பத்தியும் விஜய்ட்ட தானாவே போய் சொல்லிட்டாள்.விஜயிக்கு தெரிஞ்சா எங்களை பிரிக்க எந்த எல்லைக்கும் போவான்னு தெரிஞ்சும் அவனுட்ட சொன்னாள்.

Advertisement

எனக்கு சந்தோஷத்தின் வாசத்தையே காட்டாமல் வைத்திருந்தவனுக்கு இந்த விஷயம் வெறியை கொடுத்தது.அஸ்வதனை மிரட்னதோட என்னையும் அன்னைக்கு அடிச்சு கொடுமை படுத்தினான்.ஈவு இரக்கம் இல்லாமல் அவன் கொடுத்த சித்ரவதையில் செத்துவிட்டால் பரவாயில்லைனு தோணுச்சு..அப்பா-அம்மா கூட அவனை தடுக்கல.ஆனா அது எல்லாதுக்கும் மேல இதெல்லாம் சொன்னதே சக்தி தான்னு தெரிய வந்தபோது என்னால் சத்தியமாய் முடியல.அவன் அடித்ததை விட அது தான் ரொம்ப வலியை கொடுத்துச்சு…”

Advertisement

கண்களில் கண்ணீர் வழிய வானை வெறித்தபடி சொன்ன அக்னிமித்ரா சற்று நேரம் எதுவும் பேசவில்லை.அன்றைய நாளிற்கே போய்விட்டவள் போல் முகம் வேதனையால் கசங்கியிருந்தது.

சக்திகோ மனமே தாளவில்லை.விஜய் மீதிருந்த மதிப்பும் மரியாதையும் தரமட்டமாக அவனை அடியோடு வெறுத்தார்.

மெல்ல அக்னிமித்ரா தோளில் கைவைத்த சக்தி,

Advertisement

“அந்த பொண்ணு ஏன் அப்படி செஞ்சா..”

என்று கேட்க ஒரு கசந்த முறுவலை புரிந்தவள்,

“விஜய்மேல பைத்தியம் பிடித்து அலைஞ்ச பெண்களில் அவளும் ஒருத்தி.அவன்மேல காதலாம்..அவனிற்காக தான் என்னோடவே ஃப்ரென்ஸ்ஷிப் வைச்சுகிட்டாளாம்.அவன் கவனத்தை தன்புறம் திருப்பிக் கொள்ள என்னை பகடக்காயாய் பயன்படுத்திக்கிட்டா…என்னை பற்றி அப்போ அப்போ சொல்லும் சாக்கில் அவனோட பழக்கம் வைச்சுகிட்டா.அவள் நினைச்சது போல் அவனும் காதலிக்க ஆரபிச்சான்.ஆனா அதுக்கு என் காதலை பனையமாக வைச்சுட்டா.ஒரு டிஷூ பேப்பர் மாதிரி என்னை பயன்படுத்தி கசக்கி போட்டுட்டா.

ஆனால் யார் எப்படி இருந்தாலும் அஸ்வதன் என்மேல வைச்ச காதல் உண்மை.எந்த மிரட்டலிற்கும் அவன் பயப்படல.எந்த சூழலிலும் என்னை விடக்கூடாதுனு உறுதியா இருந்தான்.ஆனால் அந்த உண்மையான காதலிக்காக அவன் விலையாய் கொடுத்தது தன் உயிரை..!!

என்று அவள் கூறியதும் பகீரென்று ஆனது சக்திக்கு.. 

“அவன் மிரட்டலிற்கெல்லாம் அஞ்சாமல் எதிர்த்து நின்ற அஸ்வதனை இனி உயிரோட விடக்கூடாதுனு முடிவு பண்ணி அவனை கொல்ல திட்டமிட்டான் விஜய்.அஸ்வதன் வேற கேஸ்ட்..அவனை நான் காதலிப்பது வெளியே தெரிந்தால் தன் கௌரவத்திற்கு இழுக்குனு என் அப்பாவும் விஜய்யின் திட்டத்தை ஆதரிச்சார்.அதிர்ஷ்டமோ இல்லை துரதிர்ஷ்டமோ அவங்க போட்ட திட்டத்தை நான் கேட்டுட்டேன்..என் உயிரே நடுங்கி போய்டுச்சு.. எப்படியாவது என் அஸ்வதனை காப்பாற்ற வேண்டும் அது மட்டும் தான் என் மனசில இருந்தது.அன்னைக்கு கல்லூரி முடிஞ்சு அவன் போகும்போது கடத்தி கொல்லணும்னு அவங்க திட்டம்…!! எப்படியோ நானும் அவங்களுக்கு தெரியாம வீட்டில் இருந்து தப்பி காலேஜ் வந்துட்டேன்.அவனுக்கு முன்னால் நான் அஸ்வதனை பார்த்து அவனோடு சேர்ந்து எங்கேயாவது கண்காணாத இடத்திற்கு போயிடுவோம்னு நினைப்போட கல்லூரியில் அவனை தேடி அலைந்தான்.ஆனால் வீட்டில் தப்பித்த நான் கல்லூரியில் விஜயின் பார்வையில் சிக்கிட்டேன்..என்னை கண்ட உடனே யாருமில்லாத c ப்ளாக்கில் உள்ள லேப்பில் இழுத்து போய் கை கால் வாயெல்லாம் கட்டிப்போட்டு அடைச்சுட்டுட்டா.அஸ்வதனை முடித்துவிட்டு உன்னை கவனிச்சிக்கிறேன்டினு என்று கத்திட்டு போய்டான்..என்னால எதுவுமே முடியல.கத்தி அழக்கூட முடியல.எல்லாம் முடிஞ்சுருச்சு.. இனி நான் இருந்து என்ன பண்ண போறேன்னு தோணுச்சு..அஸ்வதன் கிட்டையே போயிடணும்னு தோணுச்சு..என் கைக்கு பக்கத்தில் இருந்த க்ளாஸ் டெஸ்ட் டியூப்பை ரெண்டு கையால் தட்டியே உடைச்சு அதிலே என் கை நரம்பை வைச்சு அழுத்தினேன்…”

“ஆனால் பாரு..என் சாவுக்கூட எனக்கு உடனே கிடைக்கல…ரொம்ப நேரம் அரை மயக்கத்திலே இருந்தேன்..ப்ளார்னு கன்னத்தில் விழுந்த அரையில் சுற்றுபுறம் புரிந்தது.விஜய் ரொம்ப கத்தினான்.நான் தற்கொலை பண்ணியது வெளியே தெரிந்தால் அசிங்கமாம்.. கண்டபடி கத்தினான்.அதெல்லாம் பெருசா தெரியலை.ஆனால் அப்பா..என்னை பெத்தவரு..

“ஹாஸ்பிடல் எல்லாம் தூக்கிட்டு போனால் வெளிய விசயம் தெரிந்திஞ்சிடும்.அந்த அஸ்வதனை கொன்னு மறைச்சாச்சு..இப்போ இவளுக்கும் ஆக்ஸிடென்டில் இறந்தா மாதிரி ஒரு பிம்பத்தை க்ரீயேட் பண்ணிடுடா…சனியன் செத்தொழியட்டும்…”அப்படி…அப்படி அவர் சொன்னது தான் நான் கடைசியா கேட்டது.. அத்தோடு கண்மூடி விட்டேன்.கடைசியா என் காதுல விழுந்த வார்த்தைகள் எனக்குள் ஒரு ஆங்காரத்தை கொடுத்துச்சு..அவங்கள  எதாவாது செய்ய வேண்டும் என்ற வெறி வந்தது.அந்த வெறி தான் என் உயிர் பிரிந்தும் ஆன்மாவை இன்னும் போகாமல் பிடிச்சு வைச்சுருக்கு..”

என்று அவள் சொல்லி முடிக்க இமைக்காமல் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சக்தி.

சக்தியின் பூஞ்சையான உள்ளம் அவள் கூறுவதை கிரகிக்க முடியாமல் தள்ளாடியது.

“இப்பவும் நினைக்கிறியா..உங்க சர் விஜய் நல்லவருனு..”

என்று அவள் விழியுர்த்தி கேட்டதில் சக்தியின் தலை மறுப்பாக அசைய,

“அதான்..அவனை கொன்றால் மட்டும் எனக்கு பத்தாது..அவன் உயிரைவிட மேலாக நினைக்கும் அவன் குடும்ப கௌரவம் குலைந்து போகனும்..என்னை எவ்வளவு கஷ்டப்பட்டுத்தினானோ அதுக்கு எல்லாம்  சேர்த்து அவமானப்பட்டு  நான் இழந்தது எல்லாம் அவனும் இழக்கனும்…அது தான் எனக்கு மோட்சம் கொடுக்கும்…”

என்று அழுத்தமாய் செய்தே தீருவேன் என்பதுபோல் சொல்ல தன் தலையை பிடித்துக்கொண்ட சக்தி,

“இதெல்லாம்..இதெல்லாம் ஏத்துக்க என்னால முடியல அக்னிமித்ரா..எனக்கு என்னமோ உறுத்தலா இருக்கு..”

என்று கூற அவளை கூர்ந்து பார்த்தவள்,

“அப்போ நான் சொல்வது போல் செய்..உனக்கே உண்மை புரியும். ”

என்று சில விஷயங்களை சொல்ல, கேட்க கேட்க சக்தியின் விழிகள் விரிந்தது.

“நான்..நான்…என்னால அதெல்லாம் முடியாது அக்னி..கேட்கவே பயமாக இருக்கு..நோ…நீ சொல்வதையே நம்புறேன்… எந்த சோதனையும் வேண்டாம்..”

என்று படபடப்பாய் சொன்னவளின் கன்னத்தை கையில் ஏந்திய அக்னி மித்ரா,

“உன்னால எதுவும் முடியும் சக்தி..நீ இதை செய்வ..எனக்கு நம்பிக்கை இருக்கு..உனக்கு தெரியுமா இந்த 5 வருஷத்துல என் மனசுல உள்ளத பகிர, எனக்கு உதவனு கடவுள் அனுப்பிய ஒரே ச்சாய்ஸ் நீ தான்..அது எப்பவும் தப்பாகாது..”

“நான் எப்படி அந்த ச்சாய்ஸானேன்…?”

“என்னால நிஜ உலகத்தில் நான் இறந்த அந்த ப்ளாக் தவிர வேறு எங்கும் இன்னோர் உயிரோட உதவி இல்லாமல் போக முடியாது.. அந்த இடத்தில் நின்னு யாராவது மனசில் விஜயை நினைச்சால் மட்டும் தான் என்னால் அங்கே உருவம் பெற முடியும்..நீ நினைச்சதால நான் உருவமானேன்.. விந்தையை பார்த்தியா சக்தி யாரால் அழிஞ்சேனோ அவனாலயே இப்ப எனக்கு ஆக்கமும் உண்டாச்சு..”

என்று தோளை குலுக்கி சிரிக்க

மாலை சந்தியா போனதும் விஜய்யை சந்தித்ததை நினைத்து பார்த்தது தற்போது நியாபகம் வந்தது.

“சரி..நான் சொன்னதுபோல் செய் சக்தி..அப்போ நான் சொல்வது உண்மைனு புரியும்.. அப்புறம் நீயே முடிவு செஞ்சுக்கோ..எனக்கு உதவலாமா..வேண்டாமா..”

என்று கூற தயங்கினாலும் சரி என்று ஒப்புக் கொண்டாள்.

“இப்போ..நான் எப்படி திருப்பி போவேன்..”

என்று குழப்பமாய் கேட்க,

“அதை பத்தி உனக்கென்ன கவலை..கண்ணை மூடி..ஒரு பத்து எண்ணு..போதும்..”

என்று புன்னகைத்தாள் அக்னிமித்ரா.

அவள் சொன்னதுபோல் கண்களை மூடி எண்ணியவள் பத்து வந்ததும் கண்களை திறக்க தலை கிர்ரென்று சுற்றியது.

ஒருவாறு தன்னை சமாளித்து சுற்றும் முற்றும் பார்த்தவள் தான் ஹாஸ்பிடலில் இருப்பதை உணர்ந்து,

‘இங்கே எப்படி..’

என்று யோசித்தபடி எழுந்துக் கொள்ள முயன்றாள்.நடந்தவை எல்லாம் எதோ கனவு போல் இருந்தது.

இவளிடம் அசைவை உணர்ந்த அங்கிருந்து நடுத்தரவயது நர்ஸ்,

“பார்த்தும்மா..இப்போ எப்படி இருக்கு..”

என்று கேட்டபடி அவள் சாய்ந்தமர உதவ தலையை பிடித்தபடி,

“தலை சுத்துது..எனக்கு என்னாச்சு..நான் எப்படி இங்கே வந்தேன்..”

“நல்லா கேட்டப்போ..நேத்து மயங்கி விழுந்த பொண்ணு..இப்போ தான் முழிக்கிற..இரு..டாக்டரை அழைச்சுட்டு வரேன்..”

என்று அவரும் வெளியே செல்ல அமைதியாய் நடந்த அனைத்தையும் அசைப்போட்டவள் அதன்பின் வாயே திறக்கவில்லை.

டாக்டர் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு மீண்டும் அமைதியை கடைப்பிடித்தாள்.

அவள் நன்றாக இருக்கிறாள் என்பது உறுதியானதும் மாலை அவளை டிஸ்சார்ஜ் செய்தனர்.நினைவு திரும்பி விட்டது என்ற செய்தியை மட்டும் கேட்டுக்கொண்ட விஜய் அவளை காண வரவில்லை.அனைத்தை பார்மாலிட்டிசையும் ஹாஸ்டல் வார்டனும் உடன் சந்தியாவும் பார்த்துக் கொண்டனர்.

ஹாஸ்டல் திரும்பிய பின்னும் அசதியால் தூக்கத்தில் ஆழ்ந்தாள் சக்தி.

சக்தி டிஸ்சார்ஜ் ஆன விஷயம் நண்பர்கள் மூலம் ஆரியனை சென்றடைய,

“இன்னைக்கே அவளுக்கு நாலு காட்டு காட்டல நான் ஆரியனே இல்லை.ஒன்னும் செய்யாத போதே என்னை இப்படி சஸ்பென்டாகி உட்கார வைச்சுட்டா..உண்மையான ரேகிங்னா என்னானு அவளுக்கு இன்னைக்கு காட்டுகிறேன்..”

ஆத்திரத்தில் நண்பர்களிடம் வார்த்தைகளை கடித்து துப்ப,

“டேய் மச்சான்..உளறாத.. மறுபடியும் எதாவது பிரச்சனையானா உன்னை டிஸ்மிஸ் பண்ணக்கூட டீன் தயங்கமாட்டார்…ஆரப்போடு..பின்னால அவளை கவனிச்சுக்கலாம்..”

என்று அனித் சொன்னதற்கு மறுத்தவன்,

“என்னால் எல்லாம் பொறுத்து போக முடியாதுடா…இன்னைக்கே நான் அவளை போய் பார்க்க தான் போறேன்..”

என்க, “சரிடா..அப்போ நாங்களும் 

கூட வரோம்..”

“இல்ல..வேணாம்…நானே பாத்துக்குறேன்..நீங்க யாரும் இதில் வரக்கூடாது..”

என்று அழுத்தமாய் கட்டளையிட்டவன் இன்று இரவு அவளை விடுதியில் சந்திப்பதற்கு திட்டத்தை வகுத்தான்.சக்தியின் பிரச்சனையில் தானே சென்று தலையை கொடுக்கப்போவதை அறியாமல்..!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!