Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Idhaya thirudan Episode 9

Hi  friends, Posted next episode. Do read and comment. Your comments motivate me to write more and better. I am trying comedy too. Lemme know if you also find it as comedy. :).

 

நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு பூங்காவில் ஓரிடத்தில் உட்கார்ந்தாள் மதுமிதா.

 



Advertisement

“ ஹாய்” என்று குரல் கேட்க நிமிர்ந்து பார்த்தாள்.

 

அங்கு ஒரு இளம் ஆண்  நின்றுகொண்டிருந்தான்.

Advertisement

 

Advertisement

அயன் செய்த உடை, பவுடர் போட்ட முகம், படிய வாரிய கேசம் என சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாமல் ஏதோ நேர்முக தேர்விற்கு செல்வதுபோல தயாராகி வந்திருந்தான்.

 

அவன் ‘இவ்ளோ காலையில இப்படி டிரஸ் பண்ணிக்கிட்டு பார்க்குக்கு  வந்திருக்கான்!?’ என்று அவனை வினோதமாக பார்த்தபடி நினைத்துக்கொண்டாள் மதுமிதா.

Advertisement

 

எனினும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல்

 

“எஸ்” என்றாள்.

 

அப்பொழுது அவன் பின் ஒளித்துவைத்திருந்த கிரீட்டிங் கார்ட், மற்றும் சிகப்பு ரோஜாக்களை  அவளிடம் நீட்டினான்.

 

அவளுக்கு புரிந்து போயிற்று என்றாலும் அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தாள்.

 

அவன் தட்டுத்தடுமாறி

 

“ஐ ஐ ஐ நான் ஐ லவ் யூ.” என்று ஒருவழியாக கூறி முடித்தான் .

 

மதுமிதாவுக்கு  அவனது செய்கையை பார்த்து சிரிப்பு வந்தது. எனினும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு

 

“ஓ நீங்க என்னை லவ் பண்றீங்களா?

 

எதுக்காக என்னை லவ் பண்றீங்க? ஏதாவது காரணம் இருக்கா? என்கிட்ட உங்களுக்கு ஏதாவது பிடித்திருக்கும் இல்ல? அத சொல்லுங்க.”

 

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.”

 

“ஓ இதுதான் ரிஸனா? ரொம்ப ஸ்ட்ராங்  ரீசன் தான்.” என்று நக்கலாக கூறினாள்.

 

 

“என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? சொல்லுங்க.”என்று சாவகாசமாக அவனை கேட்டாள். மதுமிதா

 

“ நான் உங்கள. ரொம்ப நாளா ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்.  உங்கள பத்தி எனக்கு நிறைய தெரியும்.  உங்க வீடு இங்க பக்கத்துல தான் இருக்கு. நீங்க தினமும் இந்த நேரத்துல வாக்கிங் வருவீங்க.  லீவு நாள்ல ஃபேமிலியோட வருவீங்க.  உங்க  அப்பா அம்மா அண்ணன் எல்லோரையும் நான் பார்த்திருக்கிறேன்.  உங்களுக்கு  கீதான்னு  ஒரு பிரிண்ட் இருக்கிறாள்.” என்று ஆர்வமாக பதிலளித்தான் அவன்.

 

“என்னைப் பற்றி இவ்வளவு டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி இருக்கீங்க.  பெரிய விஷயம் தான்.  அப்போ ரொம்ப நாளா என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கீங்க.  சரி என்னை உங்களுக்கு பிடித்ததற்கு  ரீசன் என்னோட லுக். சரி நீங்களும் பார்க்கிறதுக்கு நல்லாதான் இருக்கிறீர்கள்.” என்று மதுமிதா சாதாரணமாக கூறவும்.

 

அவனது  வாயெல்லாம் பல்லாகி சிரித்தான்.

 

“இருங்க இருங்க.  இதுக்கு எதுக்கு இவ்வளவு எக்சைட் ஆகுறீங்க? நான் ஒன்னும் உங்கள லவ் பண்றேன்னு சொல்லலையே. கொஞ்சம் நார்மலா இருங்க.”  என்று தரையில் இருந்து  வானத்தில் பறந்து கொண்டிருந்த அவனை மீண்டும் தரையில் இறக்கினாள் மதுமிதா.

 

“உங்களுக்கு வரப் போற  வைப் இப்படியெல்லாம் இருக்கணும்னு உங்களுக்கு ஒரு ஐடியா இருந்திருக்கும். நான் கிட்டத்தட்ட அப்படி இருந்ததால உங்களுக்கு என் மேல ஆசை வந்திருக்கும்.  சரி அதை நீங்க ரொம்ப டீசண்டா தான் என்கிட்ட சொல்லி இருக்கீங்க.  அதனால நான் அதை தப்பு சொல்ல முடியாது.”

 

“ஆனால் எனக்கு ஹஸ்பெண்ட்டா வர போறவனுக்கு சில  குவாலிட்டி இருக்கணும்னு எனக்கும் என் ஃபேமிலிக்கும் சில ஆசைகள் இருக்கு .

அதுல ரொம்ப முக்கியமானது என்னன்னா

 

நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எங்க அப்பா சொல்ற பையனை தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன். அதனால நீங்க எவ்வளவு ட்ரை பண்ணினாலும் நான் உங்களை லவ் பண்ண மாட்டேன்.  ஏனோ எனக்கு அப்படி ஒரு  மைண்ட் செட்.  நீங்க பாக்குறதுக்கு டீசண்டா  தெரிகிறீர்கள்.  நான் சொல்றது உங்களுக்கு புரியும்னு  நினைக்கிறேன்.

 

நான் இவ்வளவு தூரம் சொன்னதுக்கு அப்புறமும் நீங்க என்னை நான் போற இடத்துல எல்லாம் வந்து தொந்தரவு  செய்ய மாட்டீங்கன்னு  நம்புகிறேன்.  இதையும் தாண்டி நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ணினாலும் உங்க டைம் தான் வேஸ்ட் ஆகுமே தவிர என்னோட  முடிவில் எந்த மாற்றமும் இருக்காது. . அப்புறம் உங்க இஷ்டம்.”

 

“என்ன மேடம் இப்படி சொல்றீங்க? அப்போ நீங்க என்னை லவ் பண்ண மாட்டீங்களா?” என்று சோகமாக கேட்டான் அவன்.

 

‘நான் இவ்வளவு நேரம் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருந்தேன்’ என்று மனதில் நினைத்தாலும் அவனிடம் அதை சொல்லாமல்

 

“ஆமாம் அதை தான் இவ்வளவு நேரம் சொன்னேன்.” என்றாள்.

 

 

“நான் இதுவரைக்கும் எந்த ஒரு பொண்ணையும் நிமிர்ந்து பார்த்தது கிடையாது.  ஆனால் உங்களை பார்த்ததும்  தான் எனக்கு லவ் வந்தது.  நான் உங்கள ரொம்ப சின்சியரா லவ் பண்றேன்.  உங்களைத் தவிர வேறு யாரையும் என்னால லவ் பண்ணவும் முடியாது.  கல்யாணம் பண்ணவும் முடியாது.  ப்ளீஸ் மேடம்.” என்று அவளிடம் கெஞ்சும் குரலில் கேட்டான் .

 

“ஹலோ. இங்க பாருங்க.  நீங்க ப்ளீஸ்-ன்னு கெஞ்சி கேட்டீங்கன்னா உங்க மேல எனக்கு இரக்கம் தான் வரும்.  லவ் வராது.  புரிஞ்சுக்கோங்க.  நான் சொன்னதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது.  வேணா உங்களுக்கு ஒரு  ஆப்ஷன் கொடுக்கிறேன்.  எங்க அப்பாவை நீங்க பார்த்து இருக்கன்னு சொன்னீங்க.  அதனால நீங்க பேசாம எங்க அப்பா கிட்ட போய் பேசிப் பாருங்க.  ஒருவேளை எங்க அப்பாவுக்கு உங்களை பிடித்திருந்தால் எங்க அப்பா என்கிட்ட வந்து சொல்வார்.  அதுக்கப்புறம் நாம மற்றதை பற்றி யோசிக்கலாம்.  இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கிற ஐடியா.  முடிஞ்சா நீங்க இதை செய்யுங்க.  அதை விட்டுட்டு அங்கேயும் இங்கேயும் என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்காதீர்கள். இதையும் மீறி நீங்க என்னை ஃபாலோ பண்ற மாதிரி தெரிஞ்சா நான் போலீஸ்க்கு போக  வேண்டி இருக்கும்.” என்று அவனை எச்சரித்தாள் மதுமிதா.

 

“வேணும்னா நீங்க இப்போ என்கூட வாங்க.  நானே எங்க வீட்டுக்கு உங்களை கூட்டிட்டு போறேன். போய் எங்க வீட்ல இருக்குற எல்லார்கிட்டயும் உங்கள பத்தி சொல்லி இன்றோடுயூஸ் பண்ணி வைக்கிறேன்.  அப்புறம் எல்லாரும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.  என்ன சொல்றீங்க? வரிங்களா?” என்று அவனை பார்த்து கேட்டாள் மதுமிதா.

 

“இல்லை இல்லை.” என்று பதறினான்.

 

அவன் “இன்னிக்கு நான் ரெடியா  இல்ல.  இன்னொரு நாள் வரேன்.  நானும் என்னோட பேரன்ட்ஸ் கிட்ட இதைப் பத்தி பேச வேண்டி இருக்கு.  அப்படி பேசிட்டு அதுக்கப்புறம் அவங்கள கூட்டிட்டு வந்து உங்க பேரன்ட்ஸ் கிட்ட பேசுறேன்.” என்றான் தட்டுத்தடுமாறி.

 

மதுமிதாவிற்கு சிரிப்பு வந்தது.  ஆனால் அவன் முன்பு சிரித்தால் அவன் ஏதாவது தப்பாக  எடுத்துக் கொள்ளக் கூடும் என்று தன் சிரிப்பை மறைத்தாள்.

 

“சரி நீங்க சொல்ற ஐடியாவும் நல்ல ஐடியாவா தான் தெரியுது.  அதனால நீங்க அப்படியே  செய்யுங்க.  ஒருவேளை  நான் இப்படி பேசுவதால் என்னை உங்களுக்கு பிடிக்காமல்   போயிருந்தாலும் இட்ஸ் ஓகே.  உங்களுக்கு என்னை விட நல்ல பொண்ணாவே கிடைப்பா. ஆனால் நான் உங்களை மட்டும் இல்லை வேற யாரையும் லவ் பண்ண மாட்டேன்.” என்று உறுதியாக கூறினாள்.

 

அலுவலகம் முடிந்து சோர்வாக வீட்டுக்குள் நுழைந்தார் சிதம்பரம்.

 

“மது கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா.”  என்றார் சோபாவில் பொத்தென்று உட்கார்ந்தபடி.

 

மதுமிதா ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி எடுத்து வந்து தந்தையிடம் கொடுத்தாள்.

 

“என்னப்பா? இன்னிக்கு ரொம்ப டயர்டா இருக்கீங்க போலிருக்கு.” என்று மதுமிதா அக்கறையாக விசாரித்தாள்.

 

“ஆமா மா இன்னிக்கு ஆபிஸ்ல ரொம்ப வேலை.

ரொம்ப டயர்டா தான் இருக்கு.” என்றார் சிதம்பரம்.

 

“சரி இருங்க அப்பா. நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்.” என்று எழுந்திருக்க முயன்றாள் மதுமிதா.

 

“ஐயையோ மது வேண்டாம்.” என்று பதறியபடி அவளது கையைப் பிடித்து மீண்டும் உட்கார வைத்தார் சிதம்பரம்.

 

“வள்ளி”. என்று உள்நோக்கி குரல் கொடுத்தார்

 

வள்ளி  தோட்டத்தில் இருந்த செம்பருத்தி செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்.

 

“என்ன கூப்பிட்டீங்களா?” என்று கேட்டபடி உள்ளே வந்தார் .

 

“ரொம்ப டயர்டா இருக்கு  வள்ளி. உன் கையால எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா.”

 

 

மதுமிதா “அப்பா” என்று அர்த்தமாக பார்த்து முறைத்தாள்.

 

“அப்போ என் கையால உங்களுக்கு காபி வேண்டாம். அப்படித்தானே?” என்று அவர் மனதை படித்தது போல கேட்டாள்.

 

“இல்லம்மா.  உனக்கு எதுக்கு கஷ்டம்னு  தான் வேணாம்னு சொன்னேன். “ என்று சமாளித்தார்.

 

“இதை நான் நம்பணும். உங்களைப் பற்றி எனக்கு தெரியாது ” என்று மீண்டும் அவரைப் பார்த்து முறைத்தாள் மதுமிதா.

 

 

 

“எதுக்குடி  அப்பாவை முறைக்கிற நீ ஒழுங்கா காபி போட்டா அவர் உன் காபியை கேட்டு வாங்கி குடிக்க போறாரு. உனக்கு தான் காபி மட்டும் இல்ல எந்த சமையலும் செய்ய தெரியாதே.  அப்புறம் மத்தவங்களை குறை சொல்லி என்ன பிரயோஜனம்?” என்று கணவனுக்காக பேசினார் வள்ளி.

 

“மிஸ்டர் சிதம்பரத்தை பற்றி பேசினால் மிஸ்ஸஸ் சிதம்பரத்துக்கு கோபத்தைப் பாரு.” என்று நக்கலாக கூறினாள் மதுமிதா.

 

“அப்புறம் என் புருஷனை முறைத்தால் எனக்கு கோபம் வராமல்  பக்கத்து வீட்டுக்காரிக்கா கோபம் வரும்.”

 

என்று கூறிக் கொண்டே சமையலறை சென்றார்  வள்ளி.

 

“வரலாமே பக்கத்து  வீட்டுக்காரிக்கு என்னை பிடித்திருந்தால் வரலாமே.” என்று சிதம்பரம் விளையாட்டாக கூற

 

“என்ன சொன்னீங்க? என்று  கரண்டியை  ஒரு கையில் தூக்கி காட்டி சமையல் அறையில் இருந்து வந்தபடி கேட்டார் வள்ளி

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!