Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Idhaya thirudan Episode 15.2

 

“என்னப்பா கண்ணு இன்னும் சரியா ஆகலையா?”

 

“பரவாயில்லை.  இருந்தாலும் கொஞ்சம் உறுத்தல் இருக்கு.” என்றார் அண்ணாமலை.



Advertisement

 

“சரி அந்த பையன் தானே, நான் போய் கூட்டிட்டு வரேன்.” என்று கூறிய சிதம்பரம் அவனைத் தேடி அங்கு வந்தார்.

 

Advertisement

அவரை  திடீரென்று பார்த்ததும் என்ன பேசுவது என்று புரியாமல் அவரையே பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான் சிதம்பரம்.

Advertisement

 

“தம்பி தம்பி உங்களை தான்.” என்று மீண்டும் அவனை கூப்பிட “அவன் சொல்லுங்க.” என்று கேட்டான்.

 

Advertisement

“உங்க அப்பா உன்னை தேடிட்டு இருக்காரு.”

 

“அப்படியா? எங்க அப்பா எங்க இருக்காரு?” என்று கேட்டான் மாதவன்.

 

சிதம்பரம் கையை ஒரு திசை காட்ட அந்தப்பக்கம் பார்த்த மாதவன் கண்களுக்கு சுதா ராணியும் அண்ணாமலையும் தெரிந்தனர்.

 

“வாங்க தம்பி.” என்று சிதம்பரம் அவனை கூட்டிக்கொண்டு அண்ணாமலை இடம் சென்றார்.

 

இருவரையும் ஒன்றாக பார்த்த மாதவனுக்கு ‘இங்கு என்ன நடக்கிறது?” என்று  முதலில் புரியாமல் என்ன பேசுவது என்று விழித்துக் கொண்டிருந்தான்.

 

பிறகு அண்ணாமலையே தொடர்ந்தார்.

 

“இவன் தான் என் பையன் மாதவன் நான் சொன்னேன் இல்ல?” என்று அறிமுகப்படுத்த

சிதம்பரம் “ஹாய்” என்றார்.

 

மாதவனும் “ஹாய் “என்றான்.

 

“மாதவா இது யாருன்னு உனக்கு தெரியுதா? அந்த காலேஜ் குரூப் போட்டோவில் பார்த்தோம் இல்லையா? சிதம்பரம். நான் கூட என்னோட நெருங்கிய நண்பன்u சொன்னேனே.  அவன் தான்.” என்று அறிமுகப்படுத்தி வைத்தார் அண்ணாமலை.

 

“என்னடா சொல்ற?” என்று புரியாமல் கேட்டார் சிதம்பரம்.

 

“ஆமாண்டா ரெண்டு நாள் முன்னாடி தான் நாம காலேஜ்ல எடுத்த குரூப் போட்டோவை எங்க வீட்ல பார்த்துட்டு இருந்தோம்.

 

அதுல உன்னோட படத்தை காண்பித்து எல்லோருக்கும் இவன் என்னோட நெருங்கிய நண்பன் அப்படின்னு சொல்லிட்டு இருந்தேன்.”

 

“நிஜமாவா?” என்று ஆச்சரியமாக கேட்டார் சிதம்பரம்.

 

“ஆமாண்டா நிஜமா தான். அந்த போட்டோவை எடுத்து கொடுத்தது கூட இவன் தான்.  இவன் கிட்ட கேட்டு பாரேன்.” என்று மாதவனை காண்பித்தார்.

 

“எதேச்சையா நேத்து இவன் அந்த போட்டோவில் இருக்கிற எல்லோரையும் யாருன்னு விசாரிச்சுட்டு இருந்தான்.” என்று விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார் அண்ணாமலை.

 

“எதேச்சையாவா இதுக்காக என்னோட குட்டி மூளையை கசக்கி கஷ்டப்பட்டு பிளான் போட்டு உங்களுக்கு ஞாபகப்படுத்தினா, எதேச்சையானu சொல்றீங்க.” என்று நினைத்துக்கொண்டான் மாதவன்.

ஆனாலும் சிதம்பரத்தையும் அண்ணாமலையும் சந்திக்க வைத்து  இன்ப அதிர்ச்சி கொடுத்த முருகனுக்கு நன்றி சொல்ல மறக்கவில்லை.

 

“முருகா நீ கிரேட்  முருகா.  எப்படியோ இவங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண வச்சிட்ட. அப்போ வெளியில நின்னு நான்  பொலம்பிட்டு இருந்தப்போ இவங்க இங்கே ஜாலியா பேசிட்டு இருந்திருக்காங்க.  இது தெரியாம நான் லூசு மாதிரி வெளில நின்னுக்கிட்டே இருந்திருக்கேன். நல்ல காமெடி  தான்.

 

என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்  உன்னை உள்ளே வந்து பார்க்காமல் வெளியிலேயே நின்னுகிட்டு இருந்த இல்ல. எனக்கு  அந்த டென்ஷன் தேவைதான்.  ஆனால் ஒன்னு.  இவங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண வச்சு நீ என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் u நிரூபித்து விட்ட.  தேங்க்ஸ் முருகா என்று தன் நெருங்கிய நண்பரிடம் கூறுவதுபோல நன்றியை கூறினான் மாதவன்.

 

சிதம்பரத்தின் கைபேசி சிணுங்கியது. பேசியது மதுமிதா தான்.

 

“அப்பா நான் தான் முன்னாடியே உங்ககிட்ட சொன்னே இல்லையா? கோயில் முன்னாடி டிராபிக் ஜாம் ஆகப்போகுது.” என்று அவசரப்படுத்த சிதம்பரம்

 

“அண்ணாமலை எம் பொண்ணு வெளியில காரோட வெயிட் பண்ணிட்டு இருக்கா. நீயும் என்கூட எங்க வீட்டுக்கு வாயேன்.” என்று கூப்பிட்டார்.

 

அண்ணாமலை மாதவனை பார்த்தார்.  அவரது பார்வையை புரிந்து கொண்ட சிதம்பரம்

 

“தம்பிக்கு ஏதோ வேலை இருக்குன்னு சொன்ன இல்ல.” என்று அண்ணாமலையை பார்த்து கேட்டார்.

 

“ரொம்ப முக்கியமான வேலையா தம்பி?”. என்று கேட்டார்

 

மதுமிதா  வீடு வரைக்கும் போகிற சான்ஸ் கிடைச்சிருக்கு.  இந்த நேரத்தில் இந்த சட்டையை போட்டுட்டு  வந்துவிட்டேன். . என்று தன்னைத் தானே நொந்து கொண்டான் மாதவன்

 

“போகலாம்” என்று சொல்லத்  துடித்த உதடுகளை கட்டுப்படுத்திக்கொண்டு “ஆமாம் சார். எனக்கு முக்கியமான வேலை இருக்கு.” என்று சோகத்தை மறைத்துக் கொண்டு கூறினான்.

 

“சரி நீங்க மட்டுமாவது வாங்க. என் பொண்ணுக்கு உங்களை இன்டர்டயூஸ் பண்ணி வைக்கிறேன்.”. என்று கூப்பிட்டார்

 

‘ ஐயையோ வேற வினையே வேணாம் .’என்று நினைத்தவன் தன் பதட்டத்தை மறைத்துக் கொண்டு

“இல்லை சார். இன்னிக்கு வேண்டாம். நீங்க அவங்களுக்கு என்னை இன்டர்டயூஸ் பண்ற நேரத்துல டிராபிக் ஜாமில் மாட்டிக்க போறீங்க. இன்னொரு நாள் பார்க்கலாம்.” என்றான்.

 

“இன்னொரு நாளா? அண்ணாமலை உன் நம்பர் கொடு. வாங்கவே மறந்துட்டேன் பாரு.” என்று அவரது நம்பரை வாங்கி தன் கைபேசியில் ஏற்றுக்கொண்டார் சிதம்பரம்.

 

“நான் அப்புறம்  உன்னை போனில் கூப்பிடுறேன்.” என்று கூறியபடி வேக வேகமாக வள்ளியை கூப்பிட்டுக் கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்தார்.

“சரி. நான் போய் முருகனை பார்த்துட்டு வரேன்.” என்று  கூறிவிட்டு மாதவன் சென்றான்.

 

அப்போது அண்ணாமலை “அச்சச்சோ  ஒரு முக்கியமான விஷயம் நான் சொல்ல மறந்துட்டேன்.

 

நீ  இங்கயே வெயிட் பண்ணு. வந்துடுறேன்.””  என்று மகளிடம் கூறினார்.

 

நேரத்தை பயன்படுத்த விரும்பிய சுதாராணி

“அப்பா நீங்க போயிட்டு வாங்க.  நான் இங்க பக்கத்துல அஞ்சு நிமிஷத்துல ஒரு கடைக்கு போயிட்டு வந்துடறேன்.” என்று கூறிவிட்டு சென்றாள்.

 

அண்ணாமலை சிதம்பரத்திடம் சென்றார்.

 

அண்ணாமலையை பார்த்த சிதம்பரம் அவரிடம் பேசிவிட்டு மகளிடம் சென்றார்.

 

 

“என்னப்பா இவ்வளவு பொறுமையா  வர்றீங்க? சீக்கிரம் வாங்க.” என்று மதுமிதா அவசரப் படுத்த இருவரும் வேகவேகமாக வந்து வண்டியில் ஏறினர்.

 

 

மாதவன்  முருகனை தரிசித்து விட்டு ஆஞ்சநேயர் சன்னதிக்கு வந்தபோது அண்ணாமலை, சுதாராணி இருவரும் தயாராக இருந்தனர்.

 

“கொஞ்ச நேரம் உக்காந்து போகலாம்.” என்று அவன் சாவகாசமாகப் கூற இருவரும் ஆச்சர்யமாக அவனை பார்த்தனர்.

 

“என்னடா இவ்வளவு நேரமா? காலில்  சுட தண்ணியை கொட்டிக்கிட்ட மாதிரி பறந்து கிட்டு இருந்த.  இப்ப என்னடான்னா? உக்காந்துட்ட.” என்று நம்ப முடியாமல் அவனைப் பார்த்தபடி கேட்டார் அண்ணாமலை.

 

“அதுவா என்னோட பிரண்டு இன்னிக்கு வரலைன்னு சொல்லிட்டான்.  அதனால நாம நேரா வீட்டுக்கு தான் போறோம்.” என்று தட்டுத்தடுமாறி சமாளித்தான்.

 

“இது எப்ப நடந்துச்சு?” என்று நம்பமுடியாமல் கேட்டாள் சுதா ராணி.

 

“இப்போ முருகனை தரிசிக்க போனேன் இல்லையா அப்போதான்.”  என்று சமாளித்தான்.

“சரி நல்லதா போச்சு.  கொஞ்ச நேரம் இங்கே நிம்மதியாக உட்கார்ந்துட்டு போகலாம்.” என்று மூவரும் அமர்ந்தனர்.

 

“இங்க தியான அறை இருக்கு. அங்க போகலாமா?” என்று தயங்கியபடி கேட்டார் அண்ணாமலை.

 

“சரிப்பா போகலாம்.” என்று மாதவன் கூற மூவரும் அந்த தியான அறை சென்று சிறிது நேரம் தியானம் செய்து விட்டு கோயிலை விட்டு வெளியே வந்தனர்.

 

“சரி நீங்க வெயிட் பண்ணுங்க. நான் போய் காரை எடுத்துட்டு வரேன்.” என்று கூறி மாதவன் காரை எடுத்துக் கொண்டு இருவரையும் அழைத்துக் கொண்டு ஊரை நோக்கி காரை செலுத்தினான்.

 

பாதி வழி வந்த பிறகு

காரை ஓட்டிக்கொண்டே அன்று அவன் எதிர்பாராமல் நடந்த இன்ப நிகழ்வுகளை ஒருமுறை நினைத்து பார்த்தான்.  மதுமிதாவை அழகான கரு நீல புடவையில் எதிர்பாராமல் பார்த்தது.  சிதம்பரமும் அண்ணாமலையும் எதிர்பாராமல்  சந்தித்தது என்று நினைத்துக்கொண்டே போனவனுக்கு

ஒரு முக்கியமான விஷயம் ஞாபகம் வந்ததும் காரை பிரேக் போட்டு நிறுத்தினான்.

 

“என்னடா என்ன ஆச்சு? மாதவா” என்று பதட்டத்துடன் கேட்டார்.

 

“குறுக்க ஏதாவது இல்லை யாராவது வந்துட்டாங்களா?” என்று சுதாராணி சாலையை பார்த்தபடி கேட்டாள்.

 

ஆனால் அங்கு யாரும் அப்படி வந்ததாக தெரியவில்லை.

 

எனவே மாதவனை பார்த்தாள்.

 

“அவன் ஒன்னும் இல்லை.” என்று சமாளித்து விட்டு மீண்டும் காரை எடுத்தான்.

 

அவன்  நினைத்தது இதுதான்.

 

‘இன்னிக்கு நம்ம பிளான் படி என் வருங்கால மாமனாருக்கு பத்திரிக்கை வச்சு நம்ம ஊருக்கு வர வைக்கணும்னு நினைச்சேன். அதை பண்ணவே இல்லையே’ என்று நினைத்தான்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!