Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Mazhaiyaagi Vaa

சமீராவின் மின்னல் மழையாகி வா – 6

அத்தியாயம் 6

 

அந்த கலந்தாய்வு அறையின் ப்ரொஜக்டர் திரை அருகில் நின்று க்ரியேட்டிவ் குழுவை சேர்ந்தவன் மிக தீவிரமாய் புதிதாய் வடிவமைக்க போகும் கேமின் திட்டத்தினை பற்றி விளக்கி கொண்டிருக்க நீண்ட மேஜையை சுற்றி இருந்த இருக்கைகளில் ஆர்.எக்ஸின் முக்கிய மேலாளர்கள்,

அந்தந்த குழு தலைவர்கள் என அமர்ந்திருந்தவர்களுள் ஒருவளாய் உட்கார்ந்திருந்தாள் ஜென்சி.



Advertisement

மேஜையில் கையூன்றி விரல் இடுக்கில் வைத்திருந்த பேனாவை  குறிதாளில் லேசாய் தட்டியபடி அவன் கொடுத்த விளக்கங்களை கவனமுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

மேலோட்டமாய் இந்த கேமின் அடிப்படையை இவர்கள் ஏற்கெனவே சொல்லி அதனை செலக்ட் செய்திருக்க இன்று அதன் செயலாக்கம் குறித்தும், கேமின் அடிப்படை கதையை குறித்தும்,ஆட்டத்தின் நாயகனின் வடிவம்,இயக்கம்,ஆற்றல்,செயல்பாடுகள் குறித்தும் அந்த இளைஞன் விவரிக்க,

‘வழக்கமான அக்‌ஷன்-அட்வென்சர் தான்..” புன்முறுவலோடு எண்ணிக் கொண்டாள் ஜென்சி.

Advertisement

வீடியோகேம் உலகில் எத்தனை வகையில் புதுவிதமான விளையாட்டுகள் வந்தாலும் பெரும்பாலான கேமர்ஸின் கவனமும் ஆர்வமும் குவிவது அக்‌ஷன்-அட்வெச்சர் விளையாட்டுகளில் தான். நாடுகளுக்குள் போர் செய்து பிற நாடுகளை வெல்வது,மாஃபியா போன்று கடத்தல்,அடிதடி,இராணுவ போர்கள் செய்து உலகை வெல்வது போன்ற ஒரே வகையான விளையாட்டுகள் எத்தனை வடிவம் பெற்று வந்தாலும் அதன்மீது அவர்களுக்கு இருக்கும் மயக்கம் தீர்ந்தது இல்லை. 

Advertisement

அதனை சரியாக பயன்படுத்த தெரிஞ்ச கேம் டெவலப்பர்களும் தோசையை பிஸாவாய் மாற்றுவது போல் கதைகளம்,இடங்கள்,உருவங்கள்,நிலைகள் மாற்றி அமைத்தாலும் அதே பந்தயம்,சுடுதல்,அடித்தல்,துரத்துதல்,கொல்லுதல் போன்றவற்றில் மாற்றம் இல்லாமல் ஓட்டுகிறார்கள்.

இன்றும் அதே கதை தான் என்று எண்ணி தனக்குள் அவள் புன்னகைத்தாலும் இந்த கேமில் அவன் வைத்திருக்கும் ஒவ்வொரு கட்டத்தின்(levels) குறிகோளும் அதனை வெல்லும் முறையும் புதுவிதமாய் வித்தியாசமாய் இருப்பதனையும் உணர்ந்தவள் அதனை பற்றிய தன் சந்தேகங்களை குறித்து கொண்டே வந்தாள்.

அவள் திரையில் கவனமாய் இருக்க திடீரென்று அவள் அலைபேசி நோட்டிஃபிகேஷன் டோன் படபடவென அடிக்கவும் திடுக்கிட அருகில் அமர்ந்திருந்தவர் அவளை திரும்பி பார்க்கவும்,

Advertisement

‘ஸாரி..’ என்று முணுமுணுத்தவள் சைலண்டில் போடாத தன் மடத்தனத்தை எண்ணி நொந்தபடி வேகமாய் ஸ்வைப் செய்து சைலண்டிற்கு மாத்தினாள். லிசாவிடம் இருந்து தான் குறுஞ்செய்திகள்..

குறுஞ்செய்தி அனுப்புபவர்கள் இரண்டு வகை தான். ஒன்று ஒரே மெசேஜில் சொல்ல வந்த அனைத்தையும் டைப் செய்து அனுப்புவர்..!!!! மற்றொன்று ஒரு வாக்கியத்திற்கு ஒரு மெசேஜ் என்று ஒரு விஷயத்தையே பத்து மெசேஜாய் அனுப்புவர்…!!!!  இதில் லிசா இரண்டாம் வகை..!!!

‘ஒரே நேரத்துல படபடன்னு இத்தனை மெசேஜ் செய்யாதன்னு சொன்னா கேட்கவே மாட்டாளே..’ என்று எண்ணியவளாய் அதனை திறக்க,

‘ஹாய் திதீ…!!!!’

‘கெஸ் வாட்..’

‘அஃப்டர் லாங் டைம்… ஜோசஃப் ப்ரோ நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க….!!!!!’

‘செம ஃபன்… நீ எப்ப வருவ… வீ ஆர் வெய்டிங்..’

‘செல்ஃபீ வித் ஜோசஃப் ப்ரோ..’

என்ற செய்திகளை தொடர்ந்து அவனோடு எடுத்துக் கொண்ட செல்ஃபீகளை அனுப்பி வைத்திருக்க,

“ஜோ வரேன்னு சொல்லவே இல்லையே….”

என்று ஆச்சரியமாய் எண்ணியபடி அலைபேசியை அணைத்து வைத்தவளுக்கு திடீரென்று எதோ தோன்ற மீண்டும் அந்த புகைப்படத்தை எடுத்து பார்த்தாள்.

பார்வை அனிச்சையாய் அவன் இடது மேல் கையில் செல்ல, நினைத்தது போலவே அங்கே அதே டாட்டூ.. அன்றுபோலவே பாதி ஷர்டில் மறைந்து கொஞ்சமே வெளியே தெரிந்தது.

‘என்ன தைரியம் இவனுக்கு…’ கோபம் சுள்ளென்று ஏற உடனே எழுந்து செல்ல முடியாமல் கடுப்புடன் அமர்ந்திருந்தாள்.

அன்று அவன் தொடர்ந்து வந்தது,ஏறுக்குமாறாய் பேசியது எல்லாமே அவளுள் கேள்விகனைகளை தொடுத்தது என்றே கூறலாம்.

நிச்சயம் அவனை நல்லவிதமாக யோசிக்க முடியவில்லை… எனவே அவன் நோக்கம் என்ன..?? எதற்காக தன்னை சுற்றி வருகிறான்..? தன்னை வைத்து ஜோசஃபிடம் எதாவது செய்ய நினைக்கிறானா..?? என்று பலவிதமாய் சிந்தித்தும் புரியவில்லை.

இதில் தந்திரமாய் அவளது எண்ணை வாங்கி சென்றதில் அவன் அழைத்தாலோ இல்லை குறுஞ்செய்தி அனுப்பினாலோ அவனை உண்டு இல்லை என்று ஆக்குவதற்காக அவள் காத்திருக்க ஆனால் ஜோஷ் அழைக்கவே இல்லை. அன்று மட்டும் இல்ல.. அதனை தொடர்ந்து வந்த நாட்களிலும்…!!!

இதுவும் சேர்ந்துக் கொள்ள மொத்ததில் அவனால் மிகுந்த குழப்பத்திற்கு ஆளானாள். இதனிடையில் தான் ‘நியூட்ரியல்..’ சர்ச்சை குறித்த செய்தி வந்தது. ஆக இதன் பொருட்டு தன்னை தொல்லை செய்யவில்லை போல என்று எண்ணி நிம்மதி கொண்டாள். அதே சமயம் நியூட்ரியல் சர்ச்சை சம்மந்தமான செய்திகளையும் கட்டுரைகளையும் தேடி வாசித்தாள் அவளை அறியாமலே..!!!

உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ‘நியூட்ரியல்’லில் புளூ பூத்தற்கு காரணம் சுகாதரமில்லாத உற்பத்தி சூழலும் பையகப்படுத்துவதில் ஒழுங்கின்மையும் தான் என்று அறிக்கைவிட்டதனை திட்டவட்டமாய் மறுத்த ஃபீனிக்ஸ் நிறுவனம்,

“சில்லறை வியாபாரிகளின் சரக்கு சேமித்து வைத்தலில் கவனமின்மை தான் காரணம்…”

என்று உறுதியாய் நிற்க இரு தரப்பினருக்கும் மிகவும் சர்ச்சையோடே இரண்டு வாரங்கள் சென்றது.

தவறு யார் மீதோ ஆனால் நியூட்ரியல் பாதுகாப்பானது அல்ல என்ற கருத்து மக்களிடம் பதிந்துபோக அதனை வாங்காமல் புறகணித்தனர். ஆகையால் தாயாரித்து வைத்த அத்தனை டன் பெட்டிகளும் விலைக்கு செல்லாமல் வீணாய் போக கடும் நஷ்டம் தான் என்பது ஜென்சிக்கே புரிந்தது.

இவனுக்கு தக்க பதிலடி தான் என்று எண்ணினாலும் ஜோஷ் லேசுப்பட்ட ஆள் இல்லை என்பது இரண்டு சந்திப்புகளிலே புரிந்த ஒன்று… எனவே இதில் இவன் அடுத்து என்ன செய்வான்..? அவன் கையால போகும் யுக்தி என்ன..? எப்படி மீள்வான்..?? என்று தெரிந்துக் கொள்ளவும் அவளையும் மீறி ஆர்வம் துளிர்த்தது.

பாதிக்க பட்டவர்களுக்கு அபராதம் வழங்கியபின் ஒரு மாதம் அப்படியே ஆராப்போட்டவன் பின்பு,

“பூச்சு மொய்பு உற்பத்தி நிலையில் ஏற்பட வாய்ப்பு இல்லை.. அது கடைகளில் சரக்குகளை சரியாக சேமித்து வைக்காததால் வரும் விளைவு என்றும் இது நியூட்ரியல் மட்டுமல்ல.. இதுபோன்ற பிற நிறுவனத்தின் பொருட்களிலும் ஏற்படலாம்… நுகர்வோர் நிச்சயம் இதுபோல் உணவு பொருட்கள் வாங்கும் போது கவனம் வைக்க வேண்டும் என்றும் மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற்றுவிடுவோம்.. அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாய் பாதுகாப்பான சேமிக்கும் முறை குறித்து சில்லறை வியாபார இடங்களில் பயிற்சி அளிக்க ஃபினிக்ஸ் முன்வந்துள்ளது..”

போன்ற ஃபீனிக்ஸ் தரப்பின் கருத்துகள் ஊடகங்கள் வாயிலாய் பரவலாக மக்களிடம் சென்றடைய இதனை ஜென்சி படித்தபோது,

‘அடப்பாவி… குழந்தையும் கிள்ளிவிட்டு நல்லவனாட்டும் தொட்டிலும் ஆட்டிவிடுவானாம்..’ என்று தான் தோன்றியது. சொன்னது போல் அதனை செயல்படுத்தினான். அதுதான் அவனை பற்றி கடைசியாய் அவள் சிந்தித்தது. அதன்பின் அவனை மறந்தவளாய் தன் வேலைகளில் மூழ்கிவிட இத்தனை நாள் சென்று இன்று திடுதிப்பென்று தன் வீட்டில் போய் அவன் நிற்பது முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்று தான்.

‘என்ன நினைச்சு இதெல்லாம் செய்றான்..’

என்று எண்ணியவள் சுற்றி உள்ள அனைவரும் எழும்பவும் தான் மீட்டிங் முடிந்துவிட்டதை உணர்ந்தாள்.

தன் சிந்தனையிலே எழுந்து அவள் வெளியே வர ப்ரசெண்ட் செய்த அந்த இளைஞன் வேகமாய் அவள் அருகில் வந்தான்.

“தேங்க்ஸ் ஜென்…”

என்று சொன்னவனை புரியாமல் பார்த்து,

“எதுக்கு…” என்று கேட்க,

“எதுக்கா..??? மீட்டிங்ல எல்லாரையும்விட நீங்க என்ன சொல்வீங்களோன்னு தான் நர்வஸ்ஸா இருந்தேன்.. இதுக்கு முன்னாடி மடக்கி மடக்கி கேள்வி கேட்டு பதில் இல்லாம நீங்க முழிக்க வைச்சத்தை நானே கண்ணால பார்த்திருக்கேனே.. இன்னைக்கு என் டர்ன்.. என்ன சொல்வீங்களோன்னு நினைச்சேன்.. பட் உங்க மௌனமே உங்களுக்கும் என் கான்செப்ட் பிடிச்சு இருக்குனு சொல்லுது… அது எனக்கு கிடைச்ச க்ரெடிட் தானே.. அதான்.. தேங்க்ஸ்..”

அவன் உற்சாகமாய் பேசி அவளை கடந்து செல்ல தலையிலே அடித்துக் கொள்ள தோன்றியது அவளுக்கு.. இதுபோல் வேலை கவனம் சிதறியதே இல்லை.இதுவே முதல்முறை..!!! 

‘எல்லாம் இவனால..’ என்ற முணுமுணுப்போடு தன் உடமைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

அரைமணி நேரத்தில் வீடு வந்திருந்தவள் வண்டியை  பார்க்கிங்கில் விட்டு மின் தூக்கியின் அருகில் செல்லவும் அதே சமயம் அதன் கதவுகள் திறக்கபட உள்ளிருந்து எதிர்பட்டான் ஜோஷ்வா.

இவளை கண்டதும் விழிகள் மலர சிரிப்போடு,

“எங்க உன்னை பார்க்காமலே போயிடுவேனோன்னு நினைச்சேன்..”

அவன் ஆர்பாட்டமாய் சொல்ல,

“என்ன நினைச்சுட்டு இருக்க ஜோஷ்வா..? நீ என்னை தொந்தரவு செய்றேன்னு போலீஸை கூப்பிட எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்னு நினைக்கிற… சொசைட்டில மரியாதைக்கு உரிய இடத்துல இருக்க.. அதை நீயே கெடுத்துக்காத…”

அவள் கடினமான குரலில் பேசினாள். அவள் கத்தி பேசவில்லை என்றாலும் கண்கள் அவளின் கோபத்தின் அளவை பிரதிபலித்தது.

“ஹே.. நான் ஜோஷ்வான்னு எப்படி பார்த்ததும் சொல்ற..”

என்று ஆச்சரியமாய் கேட்டவன் தன் முகத்தை தொட்டுபார்த்து,

“ஃபேஸ்ல டிஃரென்ஸ் தெரியுதா என்ன..”

என்று கேட்க,

“பேச்சை மாத்தாத… அன்னைக்கு என் பர்மிஷன் இல்லாம என் நம்பரை வாங்குன.. இப்ப என் அனுமதி இல்லாம என் வீடு வரைக்கும் வந்திருக்க.. அதுவும் ஜோ நேமை சொல்லி…!!!! இதெல்லாம் நீ ஏன் செய்யுற..வாட்ஸ் யூவர் மோட்டோ..”

என்றாள் எரிச்சலாய்..

இவர்கள் மின் தூக்கியின் வாயிலில் நின்று பேசிக் கொண்டிருக்க இவர்களை தாண்டி உள்ளே செல்ல வந்த  இரண்டு பெண்மணிகள் என்னவோ என்று இருவரையும் குறுகுறுவென பார்க்க அதனை கவனித்த ஜென்சி,

“என்ன.. எதாவது வேணுமா..”

என்று முறைப்போடு ஹிந்தியில் கேட்க அவர்கள் இல்லை என்று தலையசைக்கவும்,

“அப்புறம் என்ன இங்க பார்வை.. போங்க வேலையை பார்த்துட்டு..”

என்று பட்டென்று அவள் சொல்லிவிட அதற்கும்மேல் அங்கே நிற்பார்களா என்ன..?? 

அவர்கள் லிஃப்டில் நுழைந்துக் கொள்ள அவள் தோரணையை கண்டு அவனுக்கு புன்னகை அரும்பியது.

“முதல்ல இந்த மாதிரி சிரிக்கிறதை நிறுத்துறீயா.. இட்ஸ் ரியலீ இரிட்டேட்டிங்.. இங்க எதுக்கு வந்த அதை மட்டும் சொல்லு..”

என்று அவள் சொல்ல,

“சிரிச்சது குத்தமா..” என்றுவிட்டு, “பெருசா எந்த நோக்கமும் இல்ல.. சீ… ஹியூமன் சைக்காலஜி தெரியும்ல… ஒரு விஷயம் தெரியவே இல்லைன்னா பிரச்சனை இல்ல… முழுசா தெரிஞ்சிட்டாலும் பிரச்சனை இல்ல.. பட் அரைகுறையா தெரிஞ்சுதுனு வையேன்.. அதையே நினைச்சு மண்ட காயும்.. அதனால எனக்கு உன்னோட லவ் ஸ்டோரி தெரியணும்.. அவ்வளவு தான்..”

என்றான் தோளை குலுக்கி..

அவனை நம்பாமல் பார்த்தவள்,

“ஹோ ரியலீ…! ஃபினிக்ஸோட எம்.டி..! ஸ்டாக் மார்கெட்டோட ஹாட் டாபிக்கா இருக்கிற மோஸ்ட் பிஸியெஸ்ட் மேன்..! ஆங்… அப்புறம் ‘நியூட்ரியல்’ கன்ரவர்ஸி.. இதுக்கு இடைல உனக்கு என் கதை தான் பெரிய கவலையா இருந்துச்சு…”

என்று நக்கலாய் கூறி,

“ஆமா.. இவ்வளவு பிரச்சனை வந்தும் எப்படி கொஞ்சம் கூட குற்றவுணர்வே இல்லாம உன்னால சிரிக்க முடியுது.. அதுவும் குழந்தைங்களுக்கான ஃபுட்ல போய்..!! பணம் கொடுத்து தானே வாங்குறாங்க.. அதை தரமானதா தர்றதுக்கு என்ன..???”

என்க அமைதியாய் அவளை ஏறிட்டான்.

“நாங்க தப்பு பண்ணல ஜென்சி.. அப்படி இருக்கும்போது நான் ஏன் கில்ட்டா ஃபீல் பண்ணனும்.. இது நடக்க காரணம் உன் ஸோ கால்ட் நண்பன் ஜோசஃப் தான்.. பதிலுக்கு இந்த மாதிரி செஞ்சா நான் துவண்டு போயிடுவேன்.. அவங்க அவமானப்பட்டா மாதிரியே நானும் படுவேன்.. சமாளிக்க முடியாம திணறுவேன்னு அவன் எதிர்பார்த்தான்.. ம்ச்.. ஐ பிட்டி ஃபார் ஹிம்.. பிகாஸ் அவன் நினைச்சது நடக்கவே இல்ல..”

“ஸோ.. இவ்வளவு பெரிய விஷயம் உன்னை அஃப்க்ட் பண்ணவே இல்லைனு நீ சொன்னால் நான் நம்பணும்..”

“இது பாதிக்கும் தான்.. பணத்தை முக்கியமா நினைக்கிறவங்களுக்கு… தொழிலில் ஏற்படுற நஷ்டத்தை பொறுக்க முடியாதவங்களுக்கு.. மத்தவங்க சொல்ற அவபெயரையும் கெட்டபேரையும் தாங்க முடியாதவங்களுக்கு இது மிக பெரிய அடி தான்.. பட் எனக்கு இல்ல.. இந்த ஜோஷ்வா இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன்…”

“அப்போ.. ஏன் ‘நாங்க காரணமே இல்ல.. எல்லாம் ரிடைலர்ஸ் தப்பு தான்னு பழிய அவங்க மேல போட்டுட்டு.. இழந்த நம்பிக்கையை மீண்டும் பெருவோம்னு சவால் எல்லாம் விடணும்..”

இன்னமும் அவன் வார்த்தையில் அவளுக்கு நம்பிக்கை வரவில்லை. பூசி மொழுகிறான் என்றே தோன்றியது.

“அது என்னை நம்பி எனக்காக உழைக்கிறவங்களுக்கு…!!! ஃபினிக்ஸ் என் ஒருத்தனை மட்டும் சார்ந்தது இல்லையே.. அதை நம்பி பல குடும்பம் இருக்கு… அத்தோட நலனுக்கு இதை செய்றேன்.. அவ்வளவு தான்..”

என்று சொல்லும் அவன் புரியாத புதிராக தான் அவளுக்கு தெரிந்தான்.

முதலில் சொத்துக்காக தன் குடும்பத்தை படுத்தி எடுத்தான். இன்று தனக்கு பணத்தை பற்றி கவலை இல்லை. ஊரார் குடும்பத்திற்காக என்று கதை சொல்கிறான். இவனை எந்த லிஸ்டல சேர்கிறதுனே தெரியலையே..

என்று அவள் யோசனையோடு நிற்க,

“ரொம்ப யோசிக்காத.. உன்னோட ப்ரோக்ரேம் லங்வேஜைவிட குழப்பமா இருக்கும்…”

என்று சிரித்தவன், “ம்ஹூம்.. நியூட்ரியல் பத்தி நிறைய நியூஸ் படிச்சு இருப்ப போல.. அப்போ நாளைக்கு காலைல பத்து மணிக்கு கண்டிப்பா நியூஸ் பார்..”

என்று கண்சிமிட்டி சொல்லி செல்ல முனைந்தவன் மீண்டும் அவள் முகம் பார்த்து,

“இன்னைக்கு இல்லைனாலும் நிச்சயம் உன் லவ் ஸ்டோரி ஒருநாள் நீயே என்னுட்ட சொல்ல தான் போற ஜென்சி..”

என்று கூறி சென்றுவிட அவன் பேசியவையை அசைப்போட்டபடி தன் வீட்டை அடைந்தாள்.

“தீதி.. உனக்காக இவ்வளவு நேரம் வெய்ட் பண்ணி இப்ப தான் ஜோ ப்ரோ போனாங்க.. ம்ச்.. கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாம்..”

என்று அவள் உள்ளே நுழைந்ததுமே லிசா பிடித்துக் கொள்ள,

“ஜோசஃப் கல்யாணத்துக்கு அப்புறம் நிறைய மாறி இருக்கு ஜென்சி.. முந்தி அளந்து தானே பேசும்.. இன்னைக்கு லிசாவோட சேர்ந்து ஒரே சிரிப்பா பேசுச்சு.. நேரம் போனதே தெரியல.. உன்னை பார்க்க முடியலனு தான் வருத்தம்..”

என்று எஸ்தரும் சேர்ந்துக் கொண்டார்.

“ஆமா… அதைவிட ஃப்ரோ நல்லா சமைப்பாங்கன்னு சொல்லவே இல்லையே திதீ… நமக்காக ஹோம்-மேட் ஷவர்மா கொண்டு வந்தாங்க.. அதுவும் ஃப்ரோவே செஞ்சதுவாம்… டேஸ்ட் அட்டகாசமா இருந்த்துச்சு தெரியுமா…?? உனக்கும் எடுத்து வைச்சு இருக்கேன்.. இரு எடுத்துட்டு வரேன்..”

என்று அவள் உள்ளே ஓட,

அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது,

“யார் வந்தாலும் வீட்ல விட்டுடுவீங்களா… அவன் ஜோ இல்லை.. அவன் தம்பி ஜோஷ்வா..” என்று எச்சரிக்கும் எண்ணத்தோடு வந்தவளுக்கு இவர்கள் உற்சாகத்தை கண்டு அதனை சொல்ல தோன்றவில்லை. அப்படியே இருந்துவிட்டு போகட்டும் என்பதுபோல் அமைதியாக இருந்து விட்டாள்.

அவனை பற்றிய சிந்தனையோடே ஜென்சி அமர்ந்திருக்க அதற்குள் பட்டர் பேப்பரில் சுத்தபட்ட ரோல் போல் இருந்த ஷவர்மாவை எடுத்து வந்த லிசா அதனை தானே ஊட்டியும்விட லேசாய் கடித்து மென்றவளுக்கு க்ரில் செய்த சிக்கன் ஸ்லைஸோடு மயோனைஸ்,காரில்க் சாஸின் சுவை, குப்பூஸோடு சேர்ந்து உள்ளே இறங்க அதன் அலாதி சுவையில் அவள் கண்கள் ஆச்சரியமாய் விரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!